அரசு பல்கலைகளை விட மும்மடங்கு வேகமாக முளைத்தெழும் தனியார் பல்கலைகள்!

அகில இந்திய உயர்கல்வி கணக்கெடுப்பு 2026 (AISHE) மூலம் கல்வி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின்படி, 2013 – 2014 முதல் 2023 – 2024 வரையிலான கல்வியாண்டில் தனியார் பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை சுமார் 219-லிருந்து 546 ஆக அதிகரித்துள்ளது.

கில இந்திய உயர்கல்வி கணக்கெடுப்பு – 2026 (All India Survey on Higher Education – AISHE) அறிக்கையின்படி கடந்த பத்தாண்டுகளில் அரசு பல்கலைக்கழகங்களைக் காட்டிலும் தனியார் பல்கலைக்கழகங்கள் அதிக எண்ணிக்கையில் நிறுவப்படுவது மட்டுமின்றி, அவை மூன்று மடங்கிற்கும் மேல் அதிவேகமாக உருவெடுத்துள்ளன.

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா 550-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களை உயர் கல்வித்துறையின் கீழ் இணைத்துள்ளது. ஒட்டுமொத்தமாக, நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களின் மொத்த எண்ணிக்கை 76.9 சதவீதம் அதிகரித்து, 723-லிருந்து 1,279-ஆக உயர்ந்துள்ளது. அவற்றில் பெரும்பாலானவை தனியார் நிர்வாகத்தின் (Deemed Universities) கீழ் இயங்குபவை.

அகில இந்திய உயர்கல்வி கணக்கெடுப்பு 2026 (AISHE) மூலம் கல்வி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின்படி, 2013 – 2014 முதல் 2023 – 2024 வரையிலான கல்வியாண்டில் தனியார் பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை சுமார் 219-லிருந்து 546 ஆக அதிகரித்துள்ளது.

அதன்படி, தனியார் கல்வி நிறுவனங்கள் ஒப்பீட்டளவில் 149.3 சதவீதம் மூன்று மடங்கிற்கும் மேல் விரிவடைந்துள்ளன. தனியார் பல்கலைக்கழகங்களை ஒப்பிடுகையில் அரசுப் பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை 504-லிருந்து 733 ஆக உயர்ந்து, ஒப்பீட்டளவில் 45.4 சதவீதம் மிகவும் குறைந்த அளவில் வளர்ச்சியடைந்துள்ளது.

மாநில அளவில், குஜராத் மாநிலத்தில் தனியார் பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை மிக அதிகமாக விரிவடைந்துள்ளது. தற்போது 57 பல்கலைக்கழகங்களைக் கொண்டுள்ள ராஜஸ்தானை விட, குஜராத் 2023-24 ஆம் ஆண்டில் 51 பல்கலைக்கழகங்களைச் சேர்த்து, மொத்த தனியார் பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கையை 67 ஆக அதிகரித்துள்ளது.

மத்தியப் பிரதேசம் 52 தனியார் பல்கலைக்கழகங்களுடன் இரண்டாம் இடத்திலும், உத்தரப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா 45 மற்றும் 42 தனியார் பல்கலைக்கழகங்களுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன. அதில் மேற்கு வங்கம் மற்றும் ஆந்திரப் பிரதேசம் முதல் ஐந்து இடத்திற்குள் உள்ளன.

இருப்பினும், அரசு பல்கலைக்கழகங்களே பெரும்பான்மையான மாணவர்களுக்கு முறையான கல்வி அளித்து வருகின்றன. ஆனால், அரசு பல்கலைக்கழகத்தின் மொத்த மாணவர்களின் சேர்க்கை விகிதம் ஐந்தில் நான்கு பங்கிலிருந்து மூன்றில் இரண்டு பங்கு என்ற விகிதத்தில் (81.3% லிருந்து 68.1% வரை) மிகவும் குறைந்துள்ளது. அதையே தனியார் பல்கலைக்கழகங்களுடன் ஒப்பிடுகையில் மொத்த மாணவர்களின் சேர்க்கை விகிதம் ஐந்தில் ஒரு பங்கிலிருந்து மூன்றில் ஒரு பங்கு என்ற விகிதத்தில் (18.6% லிருந்து 31.9 வரை) பூதாகரமாக அதிகரித்துள்ளது.

மொத்தமாக, அரசு பல்கலைக்கழகங்களின் வளர்ச்சி விகிதம் 42.5% ஆகவும், தனியார் பல்கலைக்கழகத்தின் வளர்ச்சி விகிதம் 191.8% மூன்று மடங்காகவும் உயர்ந்துள்ளது.

இந்தியாவின் மொத்த சேர்க்கை விகிதம் (Gross Enrollment Ratio – GER), 2013 – 2014-ல் 23.0 ஆக இருந்ததிலிருந்து 2023 -2024-ல் 30.0 ஆக விரிவடைந்துள்ளது. மாணவர்களின் சேர்க்கை விகிதம் மாணவர்களை விட மாணவிகளுடையது அதிகமாக உள்ளது. மாணவர்களின் GER – 28.9 ஆக இருக்கும்போது, மாணவிகளின் GER – 31.2 உயர்ந்துள்ளது. இத்தரவுகள், தொடர்ந்து ஏழாவது ஆண்டாக மாணவிகள் அதிக சேர்க்கை விகிதத்தைப் பதிவு செய்துள்ளதைக் குறிப்பிடுகிறது.

ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. காவி கும்பல் மறுகாலனியாக்க கொள்கைகளான தனியார்மயம் – தாராளமயம் – உலகமயத்தைத் தீவிரமாக அமல்படுத்தி வருகிறது. இதனால், ஒட்டுமொத்த கல்வி கட்டமைப்பையும் மாற்றி கார்ப்பரேட்மயமாக்கி வருகிறது.

இதற்கு எதிராக மாணவர்கள், இளைஞர்கள், மக்கள் என அனைவரும் போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டும்.


அசோக்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க