Tuesday, June 25, 2024

கோட்டா பயிற்சி மைய மரணங்கள்: தனிப்பட்ட மனநல பிரச்சனையா?

ஒரு மாணவனின் தனித்திறனை இங்கே யாரும் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. நமது கல்விமுறை சுதந்திர சிந்தனையை வளர்ப்பதில்லை. சமூக விழுமியங்கள் மற்றும் பொறுப்புகள் பற்றி எதையும் சொல்லிக் கொடுப்பதில்லை. கல்வி என்பது வேலை, ஊதியம், சமூக அந்தஸ்து, கட்டற்ற நுகர்வு என்ற திசையில் தான் இந்தியாவில் இருக்கிறது.

தமிழ்நாடு அரசின் பொது பாடத்திட்டம்: புதிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதியே!

ஏற்கெனவே பள்ளிக்கல்வித்துறையில் புதிய கல்விக் கொள்கையின் திட்டங்களை எண்ணும் எழுத்தும் திட்டம், இல்லம் தேடி கல்வி திட்டம் என்று வெவ்வேறு பெயர்களில் நுழைத்த திமுக அரசு, தற்போது பொது பாடத்திட்டம் என்ற பெயரில் புதிய கல்விக் கொள்கையின் அம்சத்தை பல்கலைக்கழகங்களில் கொண்டு வந்து அவற்றின் பன்முகத் தன்மையை அழிக்கத் துடிதுடிக்கிறது திமுக.

அனிதா நினைவு நாள்: நீட் தேர்வைத் தடைசெய்ய உறுதியேற்போம்!

0
பணம் படைத்த பிரபஞ்சன்கள் நீட் தேர்வில் தேர்ச்சியடைந்து மருத்துவம் படிக்கிறார்கள். பணம் இல்லாத ஜெகதீசன்கள் மருத்துவராக முடியாமல் கொல்லப்படுகிறார்கள். இதுதான் நீட் தேர்வின் கார்ப்பரேட் அரசியல்.

கல்வியை காவிமயமாக்கும் நடவடிக்கை!

கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழ் மொழி மேம்பாட்டுக்கு ரூ.22.94 கோடி மட்டுமே செலவிடப்பட்டுள்ளது. இதுவே சமஸ்கிருதத்தை மேம்படுத்த 3 ஆண்டுகளில் மட்டும் ரூ.643 கோடி செலவு செய்யப்பட்டிருக்கிறது.

நீட் மருத்துவ மாணவர்களுக்கான பலிபீடம்!

இனியும் சட்டப்போராட்ட மாயைகளுக்குள் நாம் ஒளிந்து கொண்டு இருந்தால் நீட் தேர்வால்  மாணவர்கள் பலியாவதை நம்மால் ஒருபோதும் தடுக்க முடியாது.

எங்களை மன்னித்துவிடு ஜெகதீஸ்வரன்! நாங்கள் சுரணையற்றவர்களாக இருக்கிறோம்!

அனிதா முதல் ஜெகதீசன் வரை நம்மிடம் இரங்கல் அஞ்சலியைக் கோரவில்லை. அவர்கள் கேட்பதெல்லாம் அநீதிக்கு எதிராக, நம் மீது நீட்டை திணித்துவரும் பாசிச பா.ஜ.க. கும்பலுக்கு எதிராக, கொஞ்சமாவது சுரணை கொள்ளுங்கள் என்பதைதான்!

ஜனநாயகத்தை மறுக்கும் தெற்காசிய பல்கலைக்கழகம்!

0
“பேராசிரியர்கள் தெற்காசியப் பல்கலைக்கழக மாணவர்களால் நடத்தப்படும் மார்க்சிய படிப்பு வட்டமான அய்ஜாஸ் அகமது படிப்பு வட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கிறார்களா?” என்று பல்கலைக்கழகம் விளக்கம் கேட்கிறது. பல்கலைக்கழக வளாகங்களில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்கும் படிப்பு வட்டங்கள் செயல்படுவதென்பது ஒரு இயல்பான நிகழ்வாகும்.

மூன்று அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான அங்கீகாரம் ரத்து! | பு.மா.இ.மு கண்டனம்

0
கல்வியை மாநில பட்டியலுக்குக் கொண்டு வருவதற்கான போராட்டத்தையும் தனியார்மயத்தை ஒழித்துக் கட்டுவதற்கான போராட்டத்தைத் தீவிரப் படுத்தும்போது தான் மருத்துவம் என்பது தரமாகவும் சேவை அடிப்படையிலும் கிடைக்கப் பெறும்.

தனியார் பள்ளி ஆசிரியரின் அவலநிலை

குறைந்த சம்பளத்திற்கு அதிக உழைப்பை செலுத்தக்கூடிய பணிநிரந்திரம் பற்றி வாய்திறக்காத ஆசிரியர்களே முதலாளிகளின் தேவையாக இருக்கிறது.

சாதிய படிநிலையை அமல்படுத்தும் ஹைதராபாத் பல்கலைக்கழகம்!

0
பட்டியல் சாதி விண்ணப்பதாரர்களின் சராசரி நுழைவுத் தேர்வு மதிப்பெண் 30.2 ஆக இருந்தது. ஆனால், அவர்களின் நேர்காணல் மதிப்பெண்களின் சராசரியோ வெறும் 12 மட்டுமே.

பாலியல் குற்றவாளிகளை பாதுகாத்து வந்த கலாஷேத்ரா நிர்வாகம்!

பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பாலியல் துன்புறுத்தல்கள் கலாஷேத்ராவில் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. அதனை அம்பலப்படுத்தி நூற்றுக்கணக்கான நபர்கள் போராடுகிறார்கள். 90-க்கு அதிகமான எழுத்து பூர்வ புகார்கள் வந்துள்ளன.‌  அந்த ஒற்றை நபர் மீது வழக்கு பதியவும் கைது செய்யுமே இவ்வளவு போராட வேண்டியிருக்கிறது.

தேர்வுக்கு செல்லாத மாணவர்கள்: கார்ப்பரேட் திட்டங்களால் கற்றல்திறன் உயரவில்லையா? || புமாஇமு

1
எப்போதெல்லாம் பிரச்சினைகள் வருகிறதோ அப்போதெல்லாம் மாணவர்கள் மீதும் பெற்றோர்கள் மீதும் பழியை போட்டுவிட்டு நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம் என தப்பித்துக் கொள்வதையே வாடிக்கையாக வைத்துள்ளார்கள் இவர்கள்.

கோட்டா – நவீன வதைமுகாம்!

எந்த விளையாட்டு வசதிகளும், பொழுதுபோக்கு அம்சங்களும் இல்லாமல் மாணவர்கள், வதைமுகாமைப் போல தினந்தோறும் கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர். இக்கொடுமைகளுக்கு ஈடுகொடுக்க முடியாதவர்கள், இந்நகரத்தில் வாழ்வதை விட சாவதே மேல் என முடிவெடுத்து தங்கள் உயிரை மாய்த்துக்கொள்கின்றனர்.

ஏழை மாணவர்களை அச்சுறுத்தும் ஐ.ஐ.டி தொடர் மரணங்கள்!

அனுதினமும் தற்கொலைகள் தொடர்கிறது. இதை சாதாரண செயலாக எண்ணி கடந்து செல்வது என்பது இனி நம் பிள்ளைகள் உயர்கல்வி படிப்பதற்கு அல்ல அதை நினைப்பதற்கே பயம் கொள்ளும் நிலைமையே நோக்கி செல்லும்.

மருத்துவ துறையில் வேத மரபுகளைத் திணிக்கும் மோடி அரசு!

இந்தியா முழுவதையும் ஒற்றை பண்பாட்டில் அடக்க முயலும் ஒன்றிய பாசிச மோடி கும்பல் இந்தியா முழுமைக்குமான ஒற்றை மருத்துவமாக ஆயுர்வேதத்தைத் திணித்து வருகிறது. ஒரே இந்தியா! ஒரே பாரம்பரிய மருத்துவம்! என்கிற ரீதியில் "ஆயூர்வேதத்தை தான் ஆதரிப்போம்" என்று முழங்கி வருகிறது.

அண்மை பதிவுகள்