புமாஇமு
பள்ளிகளில் சாதிய வன்முறையைத் தூண்டும் த.வெ.க. அரசின் புதிய அடையாள அட்டை: பு.மா.இ.மு கண்டனம்!
ஒரு மாணவர் எந்தச் சாதியைச் சேர்ந்தவர் என்பதை வண்ணக் கயிறுகள் மூலமே கண்டறிந்து, தீண்டாமைக் கொடுமைகள் நிகழ்த்தப்படும் சூழலில், மாணவர்களின் சாதியை அடையாள அட்டையில் சேர்ப்பது, அவர்கள் எந்தச் சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதை எளிதில் அறியவும், பாஜக, ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட மதவாத சக்திகளும், ஆதிக்க சாதி வெறி சங்கங்களும் தங்களின் நோக்கத்தை நிறைவேற்றவும் ஏதுவாக அமையும் நடவடிக்கையாகும்.
தூய்மைப் பணியாளர் மாரியம்மாள் மீதான தாக்குதல்: காண்ட்ராக்ட்மயத்தை ஒழிக்காமல் தீர்வில்லை
தொழிலாளர்களை மிகக் கடுமையான முறையில் சுரண்டும் காண்ட்ராக்ட்மயத்தை - தனியார்மயத்தை ஒழிப்பதே இதற்கான தீர்வாகும். மாணவர்கள், இளைஞர்கள், மக்கள், ஜனநாயக சக்திகள் அனைவரும் இதற்கான போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டும்.
தவறான சிகிச்சையால் மாணவி பலி: மருத்துவர்களின் உரிமத்தை இரத்து செய்! | பு.மா.இ.மு.
மாணவி சீதா உயிரிழந்ததற்கு அரசு மருத்துவக் கல்லூரி தான் முழுக்காரணம். மேலும் மாணவியின் இறப்பினை போலீசு மற்றும் மருத்துவத்துறை நிர்வாகம் திட்டமிட்டு மூடி மறைப்பதுடன் அங்கு போராடக்கூடிய மாணவிகள் மிரட்டப்படுகின்றனர். இதனை புரட்சிகர மாணவர் - இளைஞர் முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது.
பரோடா பல்கலையில் மோடி, ஆர்.எஸ்.எஸ் குறித்த பாடத்திட்டம் | பு.மா.இ.மு. கண்டனம்
மக்கள் விரோத பாசிச மோடி மற்றும் இந்து மதவெறி ஆர்.எஸ்.எஸ் பற்றிய பாடத்திட்டங்களை மாணவர்களுக்குப் பயிற்றுவிப்பது, நாட்டின் ஆரோக்கியமான எதிர்காலத்திற்கு விடப்படும் சவாலாகும். நாட்டு மக்களை, குறிப்பாக படித்த இளைஞர்களை, இந்து மதவெறிக்கு பலியாக்கும், அந்நிய நாட்டு மற்றும் அம்பானி-அதானி போன்ற இந்திய தரகு கார்ப்பரேட் முதலாளிகளுக்கு அடிமையாக்கும் நடவடிக்கையாகும்.
மாணவர் சங்கங்களை முடக்க நினைத்த நேபாள அரசு: மாணவர் போராட்டத்தால் தற்காலிகத் தடை!
மாணவர் சங்கங்களைக் கலைக்கும் நேபாள அரசின் முடிவுக்கு முக்கிய அரசியல் கட்சிகளின் மாணவர் அமைப்புகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளன. இத்தடையை எதிர்த்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து, மாணவர் அமைப்புகளைக் கலைக்கும் திட்டத்திற்குத் தற்காலிகத் தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கன்னியாகுமரி முகில் சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் வெல்லட்டும்!
78 மாணவர்களின் வாழ்க்கையில் ஓராண்டை அழித்துவிட எத்தனிக்கிறது நிர்வாகம். பல்கலைக்கழகத்திடம் மாணவர்கள் முறையிடவே, அவர்கள் ஏதோ தங்களுக்கு தொடர்பே இல்லை என்பது போலவும், நீங்கள் கல்லூரியிடம்தான் கேட்கவேண்டும் என்றும் பதிலளித்து தனது தார்மீக பொறுப்பை கைகழுவியுள்ளனர்.
பாசிச பா.ஜ.க அரசே! ஒடிசாவில் நடத்திவரும் நரவேட்டையை உடனே நிறுத்து!
பல தலைமுறைகளாக வாழ்ந்து வரும் பழங்குடி மக்களை கொன்றொழித்து விட்டு தமிழ்நாட்டில் 13 பேரின் உயிரைக் குடித்த வேதாந்தா நிறுவனத்திற்காக நாடு முழுவதும் மலைகளையும் காடுகளையும் தாரைவார்க்கத் துடிக்கும் பாசிச பா.ஜ.க-விற்கு எதிராகக் களத்தில் ஒன்றிணைவோம்.
பாதுகாப்பற்ற நிலையில் அம்பேத்கர் சட்டப் பல்கலை.: மாணவர்களிடம் வசூலித்த கட்டணம் எங்கே?
பராமரிப்பு கட்டணம் என்ற பெயரில் பகல் கொள்ளையடிக்கும் பல்கலைக்கழகம், ஒவ்வொரு மாணவரிடமிருந்தும் ஆண்டுக்கு ₹20,000 வசூலிக்கிறது. அந்தப் பணம் யாருடைய பைக்குச் செல்கிறது? கழிப்பறைகள் பயன்படுத்த முடியாத அளவிற்குச் சுகாதாரமற்ற நிலையில் இருக்கிறது. எவ்வித அடிப்படை கட்டமைப்பும் முறையாக இல்லை.
சென்னைப் பல்கலைக்கழகம்: கல்விக் கட்டணத்தை அதிகரிக்கும் முடிவைக் கைவிடு!
ஒன்றிய மாநில அரசுகளிடம் நிதியைக் கோரி பெறாமல் மாணவர்களிடம் அதிக கல்விக் கட்டணத்தை வசூல் செய்து நெருக்கடியினை தீர்க்க முயல்வது என்பது ஏழை எளிய மாணவர்கள் மீது தொடுக்கப்படுகின்ற தாக்குதலாகும். இது அவர்களை கல்வியிலிருந்து அப்புறப்படுத்தும் நடவடிக்கையாகும்.
உற்சாகத்துடன் நடைபெற்ற பு.மா.இ.மு உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி!
அன்பார்ந்த உழைக்கும் மக்களே 26.02.2026 அன்று புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் உறுப்பினர் சேர்க்கை பெரும் உற்சாகத்துடன் நடைபெற்றது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்திய வானில் செங்கொடிகளை ஏந்தி இளம் சூறாவளிகள் புறப்பட்டு...
JNU: Liberty on paper; Jail in reality
If protest itself becomes grounds for suspension, arrest, and imprisonment, then the conflict is no longer merely administrative. It becomes constitutional. Because when students asking for justice are met with jail, the issue is no longer about one Vice-Chancellor, one regulation, or one protest. It is about the health of democracy itself.
அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம்: வஞ்சிக்கப்படும் தலித் மாணவர்கள்!
மாணவர்களின் சாதியை அடையாளப்படுத்தி பாகுபாட்டோடு நடத்தும் வகையில், வகுப்பறைகளில் வருகைப் பதிவேட்டில் பெயர் இல்லாத தலித் மாணவர்களை எழுந்து நிற்க வைப்பது, தினமும் பல்கலைக்கழக நிர்வாக அலுவலகத்திற்குச் சென்று முறையிட வைப்பது என பார்ப்பனிய கொழுப்புடனும், சாதிய வன்மத்துடனும் பல்கலைக்கழக நிர்வாகம் மாணவர்களை நடத்தி வருகிறது.
சமத்துவக் கல்விக்காக வாழ்நாளை அர்ப்பணித்த தோழர் ச.சீ.ராஜகோபாலனுக்கு அஞ்சலி!
தோழர் ச.சீ.ராஜகோபாலன் எமது அமைப்பின் போராட்டக்களங்களோடு மிக நெருக்கமான பிணைப்பைக் கொண்டிருந்தவர். 2010-களில் மனித உரிமைப் பாதுகாப்பு மையம் (HRPC) மற்றும் பு.மா.இ.மு நடத்திய பல்வேறு அரங்கக் கூட்டங்களில் பங்கேற்று கல்வி தனியார்மயத்திற்கு எதிராகக் குரல் கொடுத்துள்ளார்.
சென்னைப் பல்கலை நிதி நெருக்கடியை அம்பலப்படுத்திய தோழருக்கு போலீசு மிரட்டல்
சென்னை அண்ணா சதுக்கம் டி-6 போலீசு நிலையத்திலிருந்து அழைத்த போலீசு அதிகாரி, “பல்கலைக்கழக நிதி நெருக்கடி தொடர்பாக எந்த விதமான போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடத்தினாலும், போலீசிடம் முறையாக அனுமதி பெற்றே நடத்துவோம் என்று போலீசு நிலையத்திற்கு வந்து கடிதம் எழுதி கொடுங்கள்” என்று மிரட்டல் விடுத்தார்.
ஆர்.எஸ்.எஸ் கூடாரமாக்கப்படும் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம்! போராடும் மாணவர்களுக்குத் துணை நிற்போம்!
மாணவர்களின் உரிமைகளுக்காகவும், பறிக்கப்படும் பல்கலைக்கழக ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும், நிர்வாக அடக்குமுறைக்கு எதிராகவும் தொடர் போராட்டத்தில் இருக்கும் ஒன்பது மாணவர்களையும் இறுதியாக தேர்வு எழுத விடாமல் முடக்கும் பல்கலைக்கழகத்தின் சதியை எதிர்த்துத்தான், சட்ட ரீதியாகவும், களத்தில் உண்ணாநிலை போராட்டத்தையும் தற்போது மாணவர்கள் முன்னெடுத்துள்ளனர்















