19.01.2025

நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அபார் அடையாள அட்டை கட்டாயம் என தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

புதிய கல்விக் கொள்கையை மாற்று வழியில் அமல்படுத்தும் பாசிச கும்பல்!

கண்டன அறிக்கை

தேசிய தேர்வு முகமை, நீட் தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் அபார் அடையாள அட்டை வழங்கும் என்று அறிவித்துள்ளது. நீட் தேர்வுக்குப் பதிவு செய்வதில் துவங்கி, கலந்தாய்வு செல்லும் வரை இந்த அடையாள அட்டை பயன்படும் என்றும் அறிவித்துள்ளது.

அபார் அடையாள அட்டை என்பது, ஒரே நாடு – ஒரே மொழி – ஒரே மதம் என்ற அடிப்படையில், கல்வி கற்கும் மாணவர்களுக்காக கொண்டுவரப்படும் ஒரே அடையாள அட்டை. புதிய கல்விக் கொள்கையுடன் இணைந்த இந்த அடையாள அட்டை திட்டத்தை இப்போது நீட் தேர்விலும் திணிக்கின்றனர். புதிய கல்விக் கொள்கைக்கு எதிரான எதிர்ப்புக் குரல்களை மடைமாற்றவே இது போன்ற மாற்று வழிகளில் புதிய கல்விக் கொள்கையின் பல்வேறு அம்சங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது மோடி அரசு. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

ஏற்கெனவே அனைத்து கல்லூரி மேற்படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு கட்டாயம் என யுஜிசி அறிவித்துள்ளது. இதன்படி பார்த்தால் அபார் அடையாள அட்டை கல்லூரி மேற்படிப்புகளுக்குச் செல்லும் அனைத்து மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்படுமென எதிர்பார்க்கலாம்.

ஆதார் அட்டையுடன் இதை ஒப்பிட்டு சரிபார்க்கப்படும் என அறிவித்துள்ளதன் மூலம், ஆதார் தகவல்களும் இதனுடன் முழுமையாக இணைக்கப்படும் என்பது உறுதியாகிறது.

இந்த அபார் அடையாள அட்டை கொண்டுவரப்பட்டதன் நோக்கம் மாணவர்களின் கல்வி இடைநிற்றலை குறைப்பதற்காக என்கிறது ஒன்றிய அரசு. கல்வி இடைநிற்றலை குறைக்க இது போன்ற அடையாள அட்டைகள் உதவாது என கல்வியாளர்கள் பலரும் ஏற்கெனவே அம்பலப்படுத்தி உள்ளனர். இப்போது நீட் தேர்வில் இதை கொண்டு வந்து எந்த இடைநிற்றலை இவர்கள் குறைக்கப் போகிறார்கள்? கட்டாய நுழைவுத் தேர்வு கல்வி ஆர்வமிக்க பல மாணவர்களை ஓரங்கட்டி வரும்போது, மாணவர்களின் இடைநிற்றலைக் குறைக்க அடையாள அட்டைகளா உதவும்?

இதைக் கொண்டுவருவதன் அடிப்படையான நோக்கம், மாணவர்களைத் தொடர்ந்து கண்காணித்து அவர்களின் மீது ஒடுக்குமுறையைத் தீவிரப்படுத்தவும், கார்ப்பரேட் கும்பல் தொடர்ந்து மாணவர்களின் நிலையைக் கவனத்தில் கொண்டு சுரண்டலைத் தீவிரப்படுத்தவும் மட்டுமே.  ஒட்டுமொத்த மக்களுக்கும் அவர்கள் இத்தகைய ஒடுக்குமுறையை விரிவுப்படுத்த இருப்பதன் தொடக்கமே இது. ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் பாசிசச் சிறைச்சாலையில் அடைத்து கொடுமையான சுரண்டலை நடத்துவதற்கே இது வழிவகுக்கும்.

எனவே அனைத்து ஜனநாயக சக்திகளும், மாணவர்களும், மக்களும் ஒன்றுபட்டு நின்று இத்தகைய ஒடுக்குமுறைத் திட்டங்களை முறியடிக்க, போராட்டக் களம் காண அழைக்கிறோம்.

தோழர். ரவி,
மாநில ஒருங்கிணைப்புக் குழு,

புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு.
9444836642.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க