LOVE ALL NO CASTE | அனைவரையும் நேசிப்போம்! சாதியை மறுப்போம்! | அரங்கக் கூட்டம்

இடம்: சென்னை | நாள்: மார்ச் 21 (வெள்ளிக்கிழமை) | நேரம்: மதியம் 3.00 மணி | அனைவரும் வாரீர்!

0

LOVE ALL NO CASTE

அனைவரையும் நேசிப்போம்! சாதியை மறுப்போம்!
ஆணவப் படுகொலைகளைத் தடுப்போம்!
பாலின சமத்துவம் படைப்போம் !

முழக்கங்கள்:

  • காதலைப் பற்றி
    பல்லாயிரம் மெட்டுப்போட்டு பாட்டெழுதி
    சீன்போட்டு நடனமாடி
    காசுபார்க்கும் சினிமாக்காரர்கள்,
    ஆணவக்கொலைகள் அரங்கேறும்போது வாய்திறப்பதில்லை.
    சாதி கொலையாளிகளின் கொலைவெறியும்
    காதல் கலையாளிகளின் கள்ளமௌனமும்
    கைக்குலுக்குமிடம் சாதிவெறியல்லவா?
  • தலித்துகளை காதலிப்பதை தடுக்க
    நாடகக் காதல்!
    இஸ்லாமியர்களை காதலிப்பதை தடுக்க
    லவ் ஜிகாத்!
    இது, இணையை தேர்ந்தெடுக்கும்
    பெண்களின் உரிமையை மறுக்கும்
    சாதிவெறியர்களும் சங்கிகளும்
    சங்கமிக்கும் இடமல்லவா?
  • ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே உணவு
    என்று கொக்கறிக்கும் சங்கி கும்பலே
    ஒரே காதல் என்று முழங்குவோம் வாரியா?
  • பெண்களுக்கு கல்வியில்லை,
    சொத்தில் பங்குமில்லை
    இது பார்ப்பனிய மனுநீதி!
    அதன் புதிய வடிவம்தான்
    நாடகக் காதலும், லவ் ஜிகாத்தும்!
  • யாதும் ஊரே யாவரும் கேளிர்
    இது தமிழின் மூத்தமொழி!
    யாரை காதலிப்பதென்று
    நான்தான் சொல்வேன்
    இது சாதிவெறியர்களின் மொழி!
    ஆதித்தமிழையும் மீறிடும்
    ஆதிக்கச் சாதிவெறியன் தமிழனா?
  • வேடன் முருகன், குறத்தி வள்ளியை
    மணந்த கதை தமிழ் தெய்வத்தின் கதை!
    முருகனை தெய்வமாக வணங்கும் தமிழனே!
    சாதி மறுத்து திருமணம் செய்தால்
    சாவை விலையாக கொடுப்பது ஏன்?
  • வேங்கைவயல் குடிநீர் தொட்டியில்
    ஆதிக்கச் சாதிவெறி மலம்!
    அங்கு, குற்றவாளிக்கு பாதுகாப்பு!
    பாதிக்கப்பட்டவர்கள் மீது அபாண்டபழி!
    ‘திராவிட மாடல்’ ஆட்சியாக இருந்தாலும்
    அடிமை அ.தி.மு.க. ஆட்சியாக இருந்தாலும்
    போராடாமல் தலித்துகளுக்கு நீதியில்லை!
    ஓட்டுக்கட்சி அரசியலில் தீர்வுமில்லை!
  • தலித்துகளை பாதுகாக்க
    வன்கொடுமை தடுப்பு சட்டம்!
    பாலியல் வன்முறைகளில் இருந்து
    பெண்களை பாதுகாக்க
    இன்னும் பல சட்டங்கள்!
    இத்துணை சட்டங்கள் இருந்தும்
    வன்முறைகள் அதிகரிக்கின்றனவே ஏன்?
  • நீதியை நிலைநாட்டும் வழி
    சட்டமும், சட்டமன்றங்களும் அல்ல,
    களப்போராட்டங்களே!
  • அம்பேத்கரும் பெரியாரும் பகத்சிங்கும் பூலேவும்
    சாதியற்ற சமத்துவ சமூகம் படைக்க
    போராடினர்! உயிர்நீத்தனர்!
    அவர்கள் வழியில் ஒன்றிணைவோம்!
  • சாதி,
    படித்து வாங்கிய பட்டமா?
    உழைத்துச் சம்பாதித்த சொத்தா?
    மனிதனாய் உணர்வோம்!
    சாதியை மறுப்போம்!
  • ஆதலால் காதல் செய்வோம்!
    சாதி-மதங்களை மாய்க்க
    சாதி-மதங்கள் மீறி
    காதல் செய்வோம்!
    பாலின சமத்துவம் படைப்போம்!
  • விடுதலைக்காக போராடிய
    பகத்சிங், ராஜகுரு, சுகதேவும்
    மாணவர்களே, இளைஞர்களே…!
    இந்திதிணிப்பை தடுத்துநிறுத்தியதும்
    மாணவச் சமுதாயமே!
    எல்லா நாடுகளிலும்
    சமூக மாற்றத்தின் தொடக்கம்
    மாணவர் எழுச்சியே!
    சாதி ஒழிப்பு,
    பெண் விடுதலைக்கான போராட்டமும்
    தொடங்கட்டும்..
    நம்மிடமிருந்து!

மார்ச் 23 பகத்சிங், இராஜகுரு, சுகதேவ் தூக்கிலிடப்பட்ட நாள்!

அரங்கக் கூட்டம்

மார்ச் 21 – சென்னை

வெள்ளிக்கிழமை மதியம் 3.00 மணி

கல்வியாளர்கள், சமூகசெயல்பாட்டாளர்கள் சிறப்புரையாற்றுகிறார்கள்

கவிதை, கட்டுரை, பேச்சு, பாடல் வடிவங்களில் மாணவர்களின் திறமைகளை அரங்கேற்றுதல்…

உங்களது படைப்புகளை எமக்கு அனுப்புங்கள். | 94448 36642


மாநில ஒருங்கிணைப்புக் குழு,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு.
9444836642.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க