LOVE ALL NO CASTE | பிரச்சார பயணம் | பு.மா.இ.மு | துண்டறிக்கை

கவிதை, கட்டுரை, பேச்சு, பாடல் போட்டிகள் மற்றும் மாணவர்களின் திறமைகளை அரங்கேற்றுதல் | இயக்கத்தின் இறுதி நாள் மார்ச் 23 அரங்கக் கூட்டம்.

0

பிரச்சார பயணம்: பிப்ரவரி 1 – மார்ச் 23

LOVE ALL NO CASTE

அனைவரையும் நேசிப்போம்! சாதியை மறுப்போம்!
ஆணவப் படுகொலைகளைத் தடுப்போம்!
பாலின சமத்துவம் படைப்போம் !

பிப்ரவரி 14 காதலர் தினம்

மார்ச் 8 மகளிர் தினம்

மார்ச் 23 பகத்சிங் சுகதேவ் ராஜகுரு தூக்கிலிடப்பட்ட தினம்

கவிதை, கட்டுரை, பேச்சு, பாடல் போட்டிகள் மற்றும் மாணவர்களின் திறமைகளை அரங்கேற்றுதல்

இயக்கத்தின் இறுதி நாள் மார்ச் 23 அரங்கக் கூட்டம்.

இடம்: சென்னை

மக்களில் சரிபாதியான பெண்கள் மீது பாலியல் அடக்குமுறைகள், கும்பல் வன்புணர்வுகள்!

உழைக்கும் மக்களான தலித் மக்கள் மீது சாதி ஆதிக்கத் தாக்குதல்கள்.

சாதி மாறி தலித் ஆணைக் கரம்பிடித்தால், ஆணவப் படுகொலைகள்!

இக்கொடூரங்கள் அரங்கேறும் சமூகத்தை, ஜனநாயகமான சமூகம் என்று ஏற்றுக்கொள்வதா?

சிந்திப்போம்!

“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்கிறது நமது தொல் தமிழ் குடி! சமூக வளர்ச்சி-தொழில் முன்னேற்றத்தின் விளைவாக, சாதி, மதம் கடந்து ஒன்றிணைகிறது இளந்தலைமுறை.

ஆனால், அதனை மீண்டும் மீண்டும் பிளவுபடுத்துகிறது ஆதிக்கச் சாதி வெறியும் ஆணாதிக்கமும்.  இவை பார்ப்பனியம் என்ற விஷம் பரவியிருப்பதன் விளைவாகும்.

லாபவெறி ஒன்றையே இலக்காகக் கொண்ட கார்ப்பரேட் முதலாளித்துவம் பரப்பும் நுகர்வுவெறி, போதை கலாச்சாரம், ஆபாச இணையதளம், சீரழிவு சினிமா போன்றவை இந்த பார்ப்பனிய நஞ்சை நாளும் தீவிரப்படுத்துகிறது.

சமத்துவ சமநீதி எங்கும்  தழைக்க வேண்டுமெனில், இந்த இழிவுகளை மண்ணில் இருந்து அகற்ற வேண்டும். அதற்கு மாணவர் சமுதாயம் முன்கை எடுக்க வேண்டும்.

சாதி, மதம், இனம், மொழி  கடந்து ஒன்றிணைவோம்!

காதலர் தினம், மகளிர் தினம், பகத்சிங்-அவரது தோழர்கள் தூக்கிலிடப்பட்ட தினம் இதற்கான தொடக்கமாகட்டும்!

வாருங்கள், எம்முடன் கைகோருங்கள்!


மாநில ஒருங்கிணைப்புக் குழு,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு.
9444836642.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க