தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சிவகிரி தாலுகா, விஸ்வநாதபேரி கிராமத்தில் அருந்ததியர் சமூகத்தைச் சார்ந்த முதல் வழக்கறிஞர் மாரிமுத்து ஏப்ரல் 15 இரவு 7.00 மணி அளவில் அதே ஊரைச் சார்ந்த பள்ளர் சாதி இளைஞர்கள் அருந்ததியர் குடியிருப்பு வழியே இருசக்கர வாகனத்தில் வேகமாகச் சென்றுள்ளதைப் பார்த்துள்ளார். அவர்களை மெதுவாகச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
இதைப் பொறுத்துக்கொள்ள முடியாத பள்ளர் சாதியைச் சார்ந்த கிஷோர், சக்கரவர்த்தி, திலீபன் ஆகிய மூன்று சாதிவெறியர்களும் தெருவிற்குள் நுழைந்து “சக்கிலிய பயலெல்லாம் எங்கள பாத்து போக சொல்லுவியா” என்று வழக்கறிஞர் மாரிமுத்து மீது கொலை வெறி தாக்குதல் நடத்திவிட்டு “அடுத்த மாசம் உன்தெருவுல எப்படி திருவிழா நடக்கும்னு பார்ப்போம்” என்று மிரட்டிவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டனர். பின்னர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வழக்கறிஞர் மாரிமுத்து அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அருந்ததியர் சாதியைச் சேர்ந்த வழக்கறிஞர் மாரிமுத்து மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய ஆண்ட பரம்பரை பெருமை பேசும் பள்ளர் சாதி வெறியர்கள் மீது வழக்குப்பதிவு செய்! கைது செய்து சிறையில் அடை!
கழக வழக்கறிஞர் அணி,
மக்கள் அதிகாரக் கழகம்.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











