நாங்குநேரி சின்னதுரையை நினைவூட்டும்
மாணவி சத்யா மீதான சாதிவெறி தாக்குதல்!
சூலூர் ஒன்றியம் பட்டணம் கிராமம் இந்திராநகர் மேற்கு பகுதியில் வசிக்கும் அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த சத்யா பீடம்பள்ளியில் உள்ள அரசு பள்ளியில் 11-ஆம் வகுப்பில் தேர்வுகளில் முதல் மதிப்பெண் பெற்று படித்து வருகிறார். சிறப்பு வகுப்பு தேர்வில் ஆதிக்கச் சாதியை (கோனார்) சேர்ந்த மாணவன் தருண் காப்பியடித்ததை தன் ஆசிரியரிடம் சொல்லியதற்கும், இத்தேர்வில் சத்யா பெற்ற மதிப்பெண்களைக் கூறி வகுப்பாசிரியர் பாராட்டியதையும் பொறுத்துக்கொள்ள முடியாத தருண் தன் தாயிடம் இதனை கூறியுள்ளான்.
தருணின் தாய் பொதுவெளியில் மாணவி சத்யாவை சாதியை சொல்லி இழிவுபடுத்தி தொடர்ந்து பேசி வந்துள்ளார். இந்நிலையில் மார்ச்-16 அன்று தருணும் அவரது குடும்பத்தினரும் சத்யாவின் மீது சாதிவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் படுகாயமடைந்த மாணவி கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தமிழக அரசே!
மாணவி சத்யா மீது சாதிவெறி தாக்குதல் நடத்திய குடும்பத்தினரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்!
மக்கள் அதிகாரக் கழகம்,
கோவை மாவட்டம்.
9488902202

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads





