Thursday, July 16, 2026
முகப்பு ஆசிரியர்கள் Posts by இன்குலாப்

இன்குலாப்

இன்குலாப்
104 பதிவுகள் 0 மறுமொழிகள்

மேற்குவங்கம்: கிறிஸ்தவர்கள் மீது தீவிரமடையும் பாசிச தாக்குதல்!

கிறிஸ்தவர்கள் - இஸ்லாமியர்களை இரண்டாம்தர குடிமக்களாக மாற்றும் நோக்கத்தில் அம்மக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்ற பாசிச கும்பலுக்கு எதிராக மேற்குவங்க மக்கள் வீதிகளில் இறங்கி மாபெரும் போராட்டங்கள கட்டியமைக்க வேண்டும். மனித குலத்திற்கு எதிரான ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பல் இம்மண்ணிலிருந்து அகற்றப்படும் போதுதான் அனைத்து மக்களுக்குமான வாழ்வை உறுதி செய்ய முடியும்.

பஞ்சாப்: அமெரிக்க அடிமை ஒப்பந்தத்தை இரத்து செய்யக்கோரி விவசாயிகள் போராட்டம்!

பாசிச மோடி அரசின் கொள்கைகள் விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் எதிரானது என்று தெரிவித்த விவசாயிகள், ஒன்றிய மோடி அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இந்தியப் பிரதமர் பாசிஸ்ட் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் பாசிஸ்ட் டிரம்பின் உருவ பொம்மைகளை எரித்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

உ. பி: ஆதிக்க சாதிவெறியர்களால் அடித்துக் கொல்லப்பட்ட தலித் இளைஞர்!

0
மது போதையிலிருந்த மூன்று பேர் ராஜ்குமாரை தங்களது கால்களை மசாஜ் செய்ய வற்புறுத்தியுள்ளனர். அதனை ராஜ்குமார் மறுக்கவே சாதிவெறி தலைக்கேறி மூன்று பேரும் பெல்ட் மற்றும் இரும்புக் கம்பியால் ராஜ்குமாரைக் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இக்கொடூரத் தாக்குதலில் சம்பவ இடத்திலேயே ராஜ்குமார் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

அரசு பள்ளிகளில் இந்து மதச் சடங்குகள்: கல்வியைக் காவிமயமாக்கும் ​சத்தீஸ்கர் பா.ஜ.க. அரசு!

0
கல்வியைக் காவிமயமாக்கி, அரசு பள்ளிகளை ஆர்.எஸ்.எஸ். பள்ளிகளாக மாற்ற வேண்டும், மாணவர்களின் மூளையில் இந்துத்துவச் சித்தாந்தத்தைத் திணிக்க வேண்டும் என்ற திட்டத்தின்படியே ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

கோவை: நீட் தேர்விற்கு மீண்டும் ஒரு மாணவி பலி!

0
தேர்வு இரத்து செய்யப்படுவதாக அறிவித்ததிலிருந்து, மறு தேர்வு அச்சத்தால் இந்தியா முழுவதும் குறைந்தது 11 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் ஆல்வாரை சேர்ந்த ரேணு மீனா, டேராடூனைச் சேர்ந்த ரியா குமாரி தாபா, சீகார் பகுதியை சேர்ன்ஹ பிரதீப் மஹிச் மற்றும் தமிழ்நாட்டின் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த அனுகீர்த்தனா என கடந்த நான்கு நாட்களில் நான்கு மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

தென் மாவட்டங்களில் தொடரும் ஆணவப்படுகொலைகள்!

0
கடந்த 2017 முதல் 2025 வரை தமிழ்நாட்டில் 59 சாதிய ஆணவப் படுகொலைகள் நடந்துள்ளன. இந்த ஆண்டில், கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் தென்காசி மாவட்டம் செங்கோட்டையைச் சேர்ந்த சுபாஷ், தூத்துக்குடி மாவட்டம் கரடிகுளத்தைச் சேர்ந்த சஞ்சய், நெல்லை மாவட்டம் சுத்தமல்லியைச் சேர்ந்த ராமலட்சுமி, தூத்துக்குடி கயத்தாறைச் சேர்ந்த அபிசெல்வி என நான்கு ஆணவப் படுகொலைகள் நடந்துள்ளன.

பருத்தி இறக்குமதி வரி ரத்து: விவசாயிகளைப் பலிகொடுக்கும் அமெரிக்க அடிமை மோடி அரசு!

2,000 ஏக்கர் பரப்பளவில் அதிக மானியம் பெற்று விவசாயம் செய்யும் அமெரிக்க கார்ப்பரேட் விவசாயிகளுடன் கடன் வாங்கி விவசாயம் செய்கின்ற இந்திய விவசாயிகளால் போட்டியிட முடியாது. இதன் மூலம் இந்தியப் பொருளாதாரத்தைத் தனது விவசாயப் பணப்பயிர் பொருளாதாரத்தின் கணிசமான பங்கை இழக்கும் நிலைக்குத் தள்ளியுள்ளது பாசிச மோடி அரசு.

மே 20: ஆன்லைன் மருந்து விற்பனையை எதிர்த்து மருந்தகங்கள் முழு அடைப்பு போராட்டம்!

வெளிநாட்டு நிதியுதவி மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஆன்லைன் மருந்தகங்கள், அதிகப்படியான தள்ளுபடிகளை (Deep Discounting) வழங்குகின்றன. இதனால் இந்தியாவில் உள்ள சுமார் 12.4 லட்சம் சிறு மற்றும் உரிமம் பெற்ற சில்லறை மருந்து வணிகர்கள், ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் என 40 லட்சம் பேரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.

எஸ்.எஸ்.சி தேர்வில் முறைகேடு: வலுக்கும் மாணவர் போராட்டங்கள்!

மோசடி கும்பல் தேர்வு மையத்திற்குள் ப்ராக்ஸி சர்வர்களை நிறுவி, திரை பகிர்வு மென்பொருள் மூலம் பணம் கொடுத்த மாணவர்களின் கணினித் திரைகளைத் தொலைதூரத்தில் இருக்கும் நபர்களுக்குப் பகிர்ந்துள்ளது. அவர்கள் கணினியை இயக்கி கேள்விகளுக்குப் பதில் அளித்துள்ளனர். இதன் மூலமே முறைகேடாக தேர்வெழுதியவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

ஒழித்துக்கட்டப்பட்ட நூறு நாள் வேலைத் திட்டம்: நாடு முழுவதும் விவசாயிகள் – தொழிலாளர்கள் போராட்டம்!

பழைய சட்டத்தை ரத்து செய்ததைக் கண்டித்தும், புதிய சட்டத்திற்கு எதிராகவும், நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான விவசாய மற்றும் கிராமப்புற தொழிலாளர்கள் மே 15 அன்று வீதிகளில் இறங்கி வேலைநிறுத்தப் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

உ.பி.: பொதுக் குழாயில் நீர் அருந்தியதற்காக தலித் சிறுவன் மீது கொலைவெறித் தாக்குதல்

சிறுவன் குழாயில் தண்ணீர் குடித்ததையும், அருகிலிருந்த வாளியைத் தொட்டதையும் கண்டு சாதிவெறித் தலைக்கேறிய சஞ்சய் ராஜ்புத், அவனது சகோதரன் தீபக் மற்றும் கூட்டாளிகளான சாகர் குமார், பாட்டியா குமார் ஆகியோருடன் இணைந்து, சிறுவனின் ஆடைகளைக் களைந்து கொடூரமாகத் தாக்கியுள்ளான்.

உ.பி: 111 உயிர்களைக் காவு வாங்கிய கனமழை, சூறைக்காற்று

இக்கோரப் பேரிடரால் 26 மாவட்டங்களில் மின்னல் தாக்கியும், வீட்டின் சுவர் இடிந்து விழுந்து உடல் நசுங்கியும் 111 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்; 72 பேர் காயமடைந்துள்ளனர்; 227க்கு மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன; 179 கால்நடைகள் உயிரிழந்துள்ளன.

டெல்லியில் மீண்டும் ஒரு “நிர்பயா”: ஓடும் பேருந்தில் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை!

டெல்லியில் சமீபகாலமாகப் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இந்தியாவின் பெருநகரங்களிலேயே பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் நடைபெறும் நகரமாக டெல்லி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. குறிப்பாக, பாசிச பா.ஜ.க கும்பல் ஆட்சியைக் கைப்பற்றும் மாநிலங்கள் அனைத்திலும், பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் தீவிரமடைவது ஒரு தொடர் போக்காகவே உள்ளது.

லடாக் மாவட்ட மறுசீரமைப்பு: இஸ்லாமியர்களை இரண்டாந்தர குடிமக்களாக்கும் பாசிச நடவடிக்கை!

“மாவட்ட பிரிப்பு என்பது நிதி மற்றும் அரசியல் அதிகாரத்தைப் பரவலாக்கும் நோக்கம் கொண்டது என்று சொல்லப்பட்டாலும், யூனியன் பிரதேச அமைப்பில் நிதி மற்றும் வளங்கள் அனைத்தும் மத்திய அரசின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும். இதனால் அதிகாரம் டெல்லியில்தான் குவியுமே தவிர, பரவலாக்கப்படாது.”

தென்கொரியா: சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் வெல்லட்டும்!

ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும், போனஸ்க்கான 50 சதவீத உச்சவரம்பை நீக்க வேண்டும், லாபத்தில் 15 சதவீத பங்கு அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தி தொழிலாளர்கள் முழக்கங்களை எழுப்பியுள்ளனர்.