சோபியா
லெபனான் மீதான அமெரிக்கா – இஸ்ரேலின் இன அழிப்புப் போர்
டிரம்பின் போர் நிறுத்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே இஸ்ரேல் லெபனான் முழுவதிலும் பத்து நிமிடங்களுக்குத் தொடர் தாக்குதலை நடத்தி 300-க்கும் மேற்பட்ட மக்களைப் படுகொலை செய்துள்ளது. இத்தாக்குதலில் 1,150 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
கர்நாடகாவை உலுக்கிய கர்ப்பிணிப் பெண் மான்யா ஆணவப் படுகொலை
மான்யா ஆணவப் படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கர்நாடகாவில் தலித் அமைப்புகளும் லிங்காயத்து அமைப்புகளும் மிகப்பெரும் போராட்டங்களில் ஈடுபட்டனர். மான்யா சட்டம் என்ற பெயரில் ஆணவப் படுகொலை தடுப்புச் சிறப்புச் சட்டம் கொண்டுவர வேண்டும் என்று ஜனநாயக சக்திகள் கோரிக்கை விடுத்தனர். இதனைத் தொடர்ந்துதான் கர்நாடக காங்கிரசு அரசு இச்சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.
செயற்பாட்டாளர்களை கடத்தி வன்கொடுமைக்கு உள்ளாக்கிய டெல்லி போலீசு
கடந்த மார்ச் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் இருந்து பத்து சமூக செயற்பாட்டாளர்களை டெல்லி சிறப்பு போலீசு கடத்தி சட்டவிரோதமாக அடைத்து வைத்து கொடூரமாகத் தாக்கியுள்ளது. அவர்களை பாலியல் ரீதியாகவும் சாதி ரீதியாகவும் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளது.
சுங்கக் கட்டண உயர்வல்ல, மோடி அரசின் வழிப்பறிக் கொள்ளை!
ஏற்கெனவே மக்கள் விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், எரிபொருள் தட்டுப்பாட்டால் விலைவாசி மேலும் உயரும் அபாயம் உள்ளது. இவ்வாறு மக்கள் கடும் பொருளாதாரச் சுமையில் திணறிக் கொண்டிருக்கின்ற சூழலில், துளியும் அது குறித்து அக்கறையின்றிச் சுங்கக் கட்டணத்தை உயர்த்தித் தனது பாசிச முகத்தை வெளிக்காட்டியுள்ளது மோடி அரசு.
பறிக்கப்படும் பெண் கல்வியும் சாவித்ரிபாய் பூலேவின் இன்றைய தேவையும்
சாவித்ரிபாய் பூலே இந்தியாவில் பெண்களுக்கான முதல் பள்ளியைத் தொடங்கி ஏறக்குறைய 200 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும், ஒடுக்கப்பட்ட, ஏழை-எளிய மாணவர்கள், கல்வியை, குறிப்பாக உயர்கல்வியை அணுக முடியாத பிரச்சினை என்பது இப்போதும் தொடர்கிறது. குறிப்பாக, பாசிச பா.ஜ.க-வின் ஆட்சியில் இந்த அவலநிலை உச்சத்தைத் தொட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் சாதியற்ற கிராமம்: தீர்மானம் நிறைவேற்றிய மக்கள்
ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத அமைப்பு தொடங்கப்பட்ட மகாராஷ்டிரா மாவட்டத்திலேயே ஒரு கிராமம் தன்னை சாதியற்றதாக அறிவித்துக் கொண்டிருப்பது, பாசிச கும்பலுக்கு விடுக்கப்பட்ட நேரடி சவாலாகும்.
மணிப்பூரில் மீண்டும் குக்கி-விரோத அரசு: குக்கி எம்.எல்.ஏ-க்களின் துரோகத்தை கண்டித்து போராட்டம்
அனைத்து மக்களுக்கும் பொதுவான அரசு என்பது போன்ற பொய் தோற்றத்தை ஏற்படுத்துவதற்காக குக்கி மற்றும் நாகா இனத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களை துணை முதல்வர்களாக நியமித்துள்ளது. இந்த போலி தோற்றத்திற்குப் பின்னே மணிப்பூர் இனக்கலவரத்தையும் குக்கி மக்கள் மீதான ஒடுக்குமுறையையும் மறைக்க முயல்கிறது பாசிச பா.ஜக. கும்பல்.
ஐ.ஐ.எம். உதய்பூரில் இஸ்லாமிய மாணவன் மர்ம மரணம்
“அந்த அறையின் உயரத்தைப் பார்த்தால், ஒரு குழந்தை கூட தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொள்ள முடியாது. என் சகோதரர் உயரமாகவும் பெரியவராகவும் இருப்பார். அந்த மின்விசிறியில் அவர் தொங்குவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை” என்று ஐ.ஐ.எம். உதய்பூர் நிர்வாகத்தின் முகத்திரையைக் கிழித்தார்.
நாடுதழுவிய பொது வேலைநிறுத்தம் வெல்லட்டும்!
தமிழ்நாட்டில், வேலைநிறுத்தத்தில் பங்கெடுக்கும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது சம்பளம் பிடித்தம், துறைரீதியான நடவடிக்கை உள்ளிட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுமென தலைமை செயலாளர் வெளிப்படையாகவே எச்சரித்துள்ளார்.
பீகார்: லட்சக்கணக்கானோரின் வாக்குரிமை-குடியுரிமை பறிக்கப்படும் பேரபாயம்!
பா.ஜ.க. கும்பல் பீகாரில் சட்டவிரோதக் குடியேறிகள் இருப்பதாக இஸ்லாமியர்களை குறிவைத்து பிரச்சாரத்தை கட்டியமைத்து அதன் மூலம் தேர்தலில் வெற்றிபெறத் துடிக்கிறது. அந்தவகையில் வாக்காளர் பட்டியல் மறு ஆய்வு என்ற பெயரில் இஸ்லாமிய வெறுப்புக்கு அடித்தளமிடப்பட்டுள்ளது.










