நாங்க சேகுவேராவைச் சொன்னாலும், ஜெயலலிதா பின்னால் நின்னாலும், இலக்கு ஒண்ணுதான் தோழர்.
அவினாசி திருமலைக் கவுண்டன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு இடம்மாற்றம் செய்யப்பட்ட அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த சமையல் பணியாளர் பாப்பம்மாள் சமைத்த உணவை சாப்பிடுவதா? - கவுண்டர் சாதிவெறியர்களின் அட்டூழியம்.
ஜெயலலிதா சட்டையைக் கழட்டச் சொன்னால் வேட்டியையும் சேர்த்துக் கழட்ட தயாராயிருக்கும் சரத்குமார் வாழும் நாட்டில், ஜெயிலரின் உத்திரவை சட்டை செய்யாத மாணவர்களின் உறுதியான தன்மானத்தைப் பார்த்து வியந்து நின்றார்கள் வேடிக்கைப் பார்த்த விசாரணைக் கைதிகள்.
தேர்தலென்று, ஓட்டென்று திரும்பவும் நீ போய்விழுந்தால் இனி தேடினாலும் கிடைக்காது உன் 'பாடி'.
சட்லெஜ் நதியில் கரைந்த சாம்பல் முல்லைப் பெரியாறில் முழங்கும்போது, லாகூர் சிறையில் முழங்கிய குரல்கள் இடிந்தகரையில் எதிரொலிக்கும்போது, அவர்கள் இல்லையென்று எப்படிச் சொல்வது?
கையில் பதாகையுடன் நின்றிருந்தஒரு இளம்பெண்ணை
ஒரு போலீஸ்காரன் தலைமுடியையைப் பிடித்து கீழே தள்ளுகிறான் பிறகு அவள் நக்சலைட் என்று அழைக்கப்படுகிறாள்
சிலைகளை சிதைக்கலாம், சிதைக்க சிதைக்க சிவப்பே பெருகும்.. மறைக்க மறைக்க மார்க்சிய - லெனினியம் பரவும்... வெட்டிப் பிளந்துள்ளம் தொட்டுப் பார்ப்பினும் அங்கே எட்டிப் பார்ப்பது எங்கள் லெனினே!
நெற்கதிர்களை நேர்த்தியாக அறுப்பதில் அப்பா லாவகமானவர் ஏதோ ஒரு சிந்தனையில் கதிர்களை இழுத்து அறுத்தபோது விரல்களையும் சேர்த்து அறுத்துக்கொண்டார் அன்று - அறுவடை நிலத்தில் சிந்திய அந்த குருதித்துளிகள் மண்ணுக்கு உரமாகிப்போனது.
பைரவருக்கு படுகோபம், "இந்து மதத்தெய்வம் நான் இருக்கையில் எச்சு ராஜா எப்படி குலைக்கலாம்
என் மதிப்பை!"
டாட்டாவுக்கும், தீட்சிதனுக்கும் போராடும் நந்தன்களை வழக்கம்போல வாசல் மறிக்கவும் 'ஜோதியில்' எரிக்கவும் காத்திருக்கிறார்கள் உச்சநீதிமன்ற தீட்சிதர்கள் !
காத்திருந்த காற்றின் சுகம் சொல் ஒன்றால் விளங்கிடுமா? கூட்டுழைப்பின் விளைசுகம்தான்-பிறர் கூறக்கேட்டு உணர்ந்திடுமா! தானே ஒருவன் அனுபவிக்காமல் மனம் புரட்சியைத்தான் துய்த்திடுமா!
தட்டைக் காட்டி போட்டதை வாங்கிக் கொள்ளும் பிச்சைக் காரனுக்கும் ஓட்டைக் காட்டி தருவதை வாங்கிக் கொள்ளும் வாக்காளனுக்கும் வாழ்வு ஒன்றுதான்! நீயாக எதையும் கேட்க முடியாது...
பூணூல் அறிக்கைக்கு பல கோடி, படித்த பையன் கேட்கிறான் வானிலை மையம், வானிலை அறிக்கை நாட்டுக்கு எதுக்கு டாடி?
கோடான கோடி தாய்களுக்கு மகனாய், சகோதரர்களுக்கு சகோதரனாய், மாணவர் படையின் தலைவனாய், இளைஞர்களின் இதயம் நிறைந்த வீரனாய்.. நீ வாழ்ந்து கொண்டிருக்கிறாய் தோழனே!!
உலகின் செவிகளுக்கு நாங்கள் உணர்த்த விரும்புவது எங்கள் மரண ஓலத்தை அல்ல.. விடுதலை முழக்கத்தை!