Friday, November 15, 2019
முகப்பு கட்சிகள் அ.தி.மு.க தேர்தல் குறவஞ்சி !

தேர்தல் குறவஞ்சி !

-

வானரங்கள் கனி கொடுத்து
மோடியோடு கொஞ்சும்
மோடிசிந்தும் கனிகளுக்கு
தமிழ் நரிகள் கெஞ்சும்.

தேர்தல் குறவஞ்சி‘தமிழருவி’ திரையெழும்பி
தினமணியில் ஒழுகும்
தறு ‘தலைகள்’ பரிக்காலும்
நரிக்காலும் வழுகும்.

காவிகளோ விழியெறிந்து
ராஜ்நாத்தை அழைப்பர்
வடகுரங்கு வந்து வந்து
ராமதாஸ், விஜயகாந்தை வளைப்பர்!

சுக்ரீவனுக்கு தம்பியாகி
கேப்டன் குரங்கு நடக்கும்
காவிபோதை தலைக்கு ஏறி
கண்டபடி கடிக்கும்.

பார்ப்பனிய பேனெடுத்து
கொங்கு குரங்கு சாயும்
மோடிமுதுகை சொறிந்தபடி
பாரி குரங்கு பாயும்.

சாதிவெறி குரங்கெல்லாம்
பா.ஜ.க.வில் அலையும்
சனம் கூட்டி ஒதுக்கிய
குப்பைக்கெல்லாம்
ஆர்.எஸ்.எஸ் மலர் வளையம்.

விபீடணன் வேலை காட்டி
தாவும் மேடைதோறும்
வை.கோ. வாயைத் திறந்தாலே
திரிகூட மலைதாண்டி நாறும்.

அந்தர்பல்டி, தாண்டி குதிப்பு
ராமதாசின் பந்தடிப்பு
அனுமாரையே மிஞ்சும்
சேலத்து மாம்பழத்தை
செழுங்குரங்கு பிய்த்தெடுக்க
ஓலமிட்ட அன்புமணி
சிறுநரியின் பிச்சையிலே
அடங்கும்!

போயசிலே தாவி நின்று
அம்மாவே சரணமென்று
ஆடிநின்ற
செங்குரங்கு ரெண்டு,
போட்ட அடியில் தாவி வந்து
எவ்வளவு அடித்தாலும் தாங்கிக்கொண்டு
இஞ்சி தின்ன குரங்காக இன்று!

இமயமலை என்னுடைய
தமயன் மலை என்று எண்ணி
காத்திருக்கும் பெண் குரங்கு இரண்டு,
எலக்சன் முடிந்தபின்பு கலெக்சனென்றால்
மம்தாவும், ஜெயாவும் சேர்ந்திடும்
பூணூல் கண்டு!

வேடுவர்கள் வினை விதைத்து
தேடுவார்கள் தெருக் கோடி…
தேர்தலென்று, ஓட்டென்று
திரும்பவும் நீ போய்விழுந்தால்
இனி தேடினாலும் கிடைக்காது
உன் ‘பாடி’.

– துரை.சண்முகம்

 1. கவிராயர் கானகத்தில்
  கண்டதை சொல்லவில்லை-தேர்தல்
  களத்தில் கண்டதையல்லவா சொல்லியுள்ளார்

 2. இந்த வானரப்படைகள் ஆண்டு சீரழிந்தப்பின்னாவது புரட்சிப்பாதை மக்கள் தேர்ந்தெடுக்கட்டும் .

 3. சோழராஜ்: புரட்சிப்பாதை பற்றி எளிய முறையில் பாமரனுக்கும் புரியும் வகையில் கொஞ்சம் எங்களுக்கு விளக்கிச்சொல்லுங்களேன். தற்போதைய தேர்தல் முறை படி ஒரு அரசியல்வாதி தவறு செய்தால் அவரை 5 ஆண்டுகள் கழித்து ஆட்சியிலிருந்து வெளியேற்ற மக்களிடம் அதிகாரம் உள்ளது. புரட்சி செய்து ஆட்சியை பிடிப்பவர்கள் தவறு செய்தால், கொடுங்கோல் ஆட்சி புரிந்தால், சர்வாதிகாரம் செய்தால், இல்லை திறனற்ற ஆட்சி புரிந்தால் அவர்களை தூக்கியடிக்க மக்களிடம் என்ன ஆயுதம் இருக்கும்?

  ஜனநாயகம், சர்வாதிகாரம், மன்னராட்சி, புரட்சி ஆட்சி, என்ன ஆட்சி ஆனாலும், ஆள்பவர் நேர்மையானவராக, நல்லவராக, திறமையுள்ளவராக இருந்தால் மக்களுக்கு நன்மையே கிடைக்கும். ஆனால் ஆள்பவர் சரியில்லை என்றால் ஜனநாயக ஆட்சியில் ஆள்பவரை வீழ்த்த மக்களிடம் ஒட்டு சக்தி உள்ளது. மற்ற முறை ஆட்சிகளில் மக்களிடம் ஆட்சியை தூக்கியடிக்கும் சக்தி இல்லை. இதிலிருந்தே மக்களாட்சி முறை தான் சிறந்தது என்பது என் வாதம்.

  நீங்கள் சொல்லும் புரட்சி வெடித்து ஒரு புதிய ஆட்சி மலர்ந்து, ஆள்பவர் மோடி போலவோ, சதாம் உசேன் போலவோ, இடி அமீன் போலவோ, கிம் ஜாங் உன் போலவோ, அப்துல்லா அப்துல் அசிஸ் போலவோ இல்லை மன்மோகன் போலவோ, ஜெயலலிதா போலவோ, கருணாநிதி போலவோ ஆட்சி புரிந்தால் என்ன செய்வது? தற்போதைய தேர்தல் முறையின் படி அவர்களை ஆட்சியிலிருந்து நீக்க முடியும். புரட்சி மூலம் ஆட்சி என்றால் அதில் மக்களால் ஆட்சியில் அமர்ந்திருப்பவரை என்ன செய்ய முடியும்?

 4. அற்புதம்.

  ஆனால் ஒரு சிலர் மட்டும் ஓட்டு போடாமல் இருந்தால் மட்டும் புரட்சி வெடித்து விடுமா?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க