Monday, January 17, 2022
முகப்பு கலை கவிதை மானங்கெட்டவர்க்கு சுப்பிரமணிய சாமி, மானம் உள்ளவர்க்கு ஆறுமுகச்சாமி !

மானங்கெட்டவர்க்கு சுப்பிரமணிய சாமி, மானம் உள்ளவர்க்கு ஆறுமுகச்சாமி !

-

மக்கள் மன்றத்தில் தொடர்வோம்!

உலகம் கடவுளுக்குள் அடக்கம்
கடவுள் மந்திரங்களுக்குள் அடக்கம்
மந்திரம் பார்ப்பானுக்குள் அடக்கம்

இப்படியான நாட்டில்,
நீதிமன்றமும் வாதப்படியா நடக்கும்
வேதப்படியே நடக்கும்
!

பீனல் கோடுகள்
பூணூல் கோடுகளுக்குள் அடக்கம்
,

உச்சநீதிமன்றம்
தீட்சிதன் முன்குடுமிக்குள் அடக்கம்
,

சுப்பிரமணியசாமி பிரிக்கும் காற்றின்
எடைக்கு எடை
தீர்ப்புகள் கிடைக்கும்
!
தீட்சித கழிப்பறைகள்
தில்லி வரைக்கும்
!

தில்லைவாழ் அந்தணரும்
தில்லிவாழ் அந்தணரும்
ஸ்தலத்தில் வேறு
சிதம்பர ரகசியத்தில் ஒன்று
!

சுப்பிரமணியசாமியும், ஜெயலலிதாவும்
கோத்திரத்தில் வேறு
,
ஆத்திரத்தில் ஒன்று
அதுதான் தமிழினப் பகை
!

தமிழாண்டு தை மீது
ஆரியச் சித்திரை திணிப்பு
,
தமிழக தொடக்கப் பள்ளிகளில்
ஆங்கில வழி நுழைப்பு
,
செம்மொழி நூலகம் அழிப்பு
மெல்ல மெல்ல கோயிலில
அரசு அறநிலையை
பார்ப்பனக் குருக்களின்
பொருள் நிலையாக்க அரிப்பு
,
எனும் ஆர்
.எஸ்.எஸ் பாம்பின்
கொழுப்பு
!

அவாளும் அம்மாவும்
சேர்ந்து வாங்கிய
சிதம்பரம்
(கோயில்) தீர்ப்பு!

பொதுச்சொத்து
வழக்கம் போல்
பிரம்மதேயமாகிறது
டாட்டாவுக்கும், தீட்சிதனுக்கும்
போராடும் நந்தன்களை
வழக்கம்போல வாசல் மறிக்கவும்
ஜோதியில்எரிக்கவும்
காத்திருக்கிறார்கள்
உச்சநீதிமன்ற தீட்சிதர்கள்
!

வழி மறிக்கும்
நந்திக்கும், பார்ப்பன தொந்திக்கும்
பணிவதில்லை நந்தன்
!

வழக்கம்போல்
தன்னுடல் திரியாக்கி
தன்மானம் ஒளியாக்கி
உரிமைக்காக
மக்கள் மனதில்
தணலாகிறார்கள் நந்தன்கள்
!

இடக்கால் தூக்கிக் காட்டி
களவு போன கொலுசை
இடக்கையால் குறிப்பு காட்டி
,
எழுவகை தாண்டவம் ஆடிய
இறைவா
,
இனி தீட்சிதத் தாண்டவம்
கண்டு நடுங்கிடாய்

திருவடியின் கணக்குகாட்டி
மீண்டும்
நிவேதனங்கள்
சுவாகாஆகலாம்
சிவகாமி அம்மையின்
சேலை கணக்கு
தீட்சிதன் குவார்ட்டரில் கரையலாம்

அர்த்தயாம பூஜைக்கு பின்
அவாள் அடிக்கும் கூத்தில்
ஆடல் வல்லானே
அஞ்சி நடுங்கலாம்

..எஸ், .பி.எஸ்,
அமைச்சர், நீதிபதிகள் என
அவரவரின் வசூலுக்கும்
வரவேற்புக்கும் ஏற்றபடி
எந்நேரமும் உன்மேல்
பாவத்தின்
பாரமிறங்கலாம்

உனக்கான உண்டியலை
தனக்கான தட்டாக்கும்
தீட்சித அபிஷேகத்தில்
நீ மூச்சு திணறலாம்

அனைத்தினும்,
உழைக்கும் மக்களின்
உதடுகள் தழுவிய தமிழை
தடுக்கும் தீட்சித கொடுங்கரந்தன்னில்
அகப்பட்டுக் கொண்டதாய்
கலங்கிட வேண்டாம் நடராச

மானங்கெட்டவர்க்கு
சுப்பிரமணிய சாமி

மானம் உள்ளவர்க்கு
ஆறுமுகச்சாமி

தமிழும், தமிழக மக்களின் உரிமையும்
நின் தில்லையம்பலத்திலே
காட்சி தரும் வாய்ப்பை
கண்ணுறுவாய் நீயும்

எரித்து சாம்பலாக்க
இனி நந்தனின் வாரிசுகள்
நாயன்மார்கள் அல்ல
,
நக்சல்பாரிகள்!
எதிர்த்துப் போராடி
இயற்பகை முடிப்பார்கள்
!

துரை.சண்முகம்

 1. நன்றி! தோழர் துரை. சண்முகம் அவர்களுக்கு நன்றி!

  //எரித்து சாம்பலாக்க இனி நந்தனின் வாரிசுகள்
  நாயன்மார்கள் அல்ல, நக்சல்பாரிகள்!
  எதிர்த்துப் போராடி இயற்பகை முடிப்பார்கள்!//

 2. எரித்து சாம்பலாக்க
  இனி நந்தனின் வாரிசுகள்
  நாயன்மார்கள் அல்ல,
  நக்சல்பாரிகள்!
  எதிர்த்துப் போராடி
  இயற்பகை முடிப்பார்கள்!

 3. தனியார்மயம்,தாராலமயம்,உலகமயம்…

  1.விவசாயிகளை நடுத்தெருவில் நிறுத்தும் திட்டத்துடன் அரிசி,பருப்பு,புளி, மற்றும் காய்கரிகள்,பழங்கள் ரிலையன்ஸ்நிறுவனம் போன்ற பன்னாட்டுநிறுவனங்கள் களமிறங்கிருக்கறது,

  இதனால் இந்தியாவிவசாயிகள் வறுமைகோட்டிற்க்குகீழே தள்ளபட்டுவிட்டார்கள், பல லட்சம் விவசாயிகள் நிலங்களை இழந்து,எந்த ஒரு தொழிலும் தெரியாத அவர்கள் நாட்கூலிகளாக நசிந்து கொண்டிருக்கிறார்கள்….

  2.இந்தியாவிற்க்குள் வால்மார்ட்நிறுவனம் கொல்லைபுரமாகநுழைகிறது,இந்தியநிறுவனங்களோடு கூட்டுச்சேர்ந்து அதன் தோள்கலில் v

  • ……..தொற்றிக்கொண்டு வால்மார்ட்நுழைவதற்க்கான சடங்குகளைநிதியமச்சகம் செய்து வருகிறது,

   3.அந்நியநிறுவனங்களும் ஏகபோக முதலாளிகளும் சேவைபுரிவதாக இங்கே வரவில்லை , 117 கோடி மக்களயும் எப்படியாவது சுரண்டவேண்டும் என்ற முடிவுடன்தான் வருகிறார்கள், இந்த தனியார்மய தாராலமயமாக்கள் கொள்கையை உலகமயமாக்கலே ஏகபோக முதலாளிகளின் விருப்பம் இதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்..

 4. தோழர் துரைசண்முகம் ,,
  தனியார்மயம்,தாராலமயம்,உலகமயமயமாதல் கொள்கை சாதரணமக்களும் புரியும்படி கவிதை எழுதலாமே….!

 5. தோழர் துரைசண்முகம் அவர்களுக்கும் வாழ்த்துக்கள். இந்த கவிதை மூலம் பூணூல் கம்பெனி முதல் நாட்டை கொள்ளையிடும் அம்பானி டாடா கம்பெனிவரை அனைத்தையும் ஒரு வரியில் சொல்லி உள்ளீர்கள்.நாடு எதிர்கொண்டிருக்கும் இரண்டு அபாயம் பார்ப்பனியம்,முதலாளித்துவம் இவைகளை எரித்து சாம்பலாக்க இனி நந்தனின் வாரிசுகள் நாயன்மார்கள் அல்ல,நக்சல்பாரிகள்! எதிர்த்துப் போராடி இயற்பகை முடிப்பார்கள்!

 6. சூத்திரன் என்றால் பார்ப்பானின் வைப்பாட்டி மகன் என்பது அர்த்தம்.தில்லை கோவில் விவகாரத்தில் உச்சிக்குடுமிகளின் மாமன்றம் சொல்லாமல் சொல்லி இருப்பதும் இதைத்தான்.சூத்திரன் என்ற பட்டத்தை மகிழ்வுடன் சுமப்பவர்கள் தீட்சிதன் பின்னால் நில்லுங்கள்,ஆத்திரம் கொண்டவர்கள் தாயை இழித்த அந்தநாக்கை அறுப்போம் வாருங்கள்.

 7. கருத்தில் உடன்பாடு இல்லை.(அறிவார்ந்த விவாதத்தை வளர்க்காது உணர்ச்சித் தூண்டல்களை வளர்க்கும் – இவர்கள் தங்களை பகுத்தறிவாளர்கள் என்று வேறு கூறிக்கொள்வார்கள் – எந்த எழுத்திலும் எனக்கு உடன்பாடு கிடையாது)

  என்றாலும் விஷயங்களைக் கோர்த்தவிதம் நன்றாக இருக்கிறது. சுவாரசியமான எழுத்து.

 8. அண்ணா தி.மு.க.விலுள்ள ”அண்ணா” என்பது பார்ப்பனர்களைக் குறிக்கும் என்பது எப்போதாவது அதில் இருக்கும் தமிழர்களுக்குப் புரியுமா?தமிழனை பார்ப்பன அடிமையாக மாற்றி அவனது ஓட்டைப் பறித்து அதிகாரத்தைக் கைப்பற்றுகிற வித்தையில் யார் கெட்டிக்காரர் என்கிற போட்டி கேடி ஜெயலலிதாவுக்கும் கில்லாடி மோடிக்கும் இடையே நடைபெறுகிறது.காட்சி முடிவில் இரண்டு பேரும் கட்டித் தழுவி நிற்க பார்ப்பனத் திரை விழுந்து பல்லிளிக்கும்.அதையும் பார்ப்பான் இளித்த வாயோடு நாம் தமிழன்.போ..

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க