முகப்புகலைகவிதைஉங்கள் பொன்னான வாக்கை குப்பைத் தொட்டியில் போடுங்கள் !

உங்கள் பொன்னான வாக்கை குப்பைத் தொட்டியில் போடுங்கள் !

-

இந்திய அரசியலின் இழிநிலை: ஆ.விகடனில் தோழர் மருதையன் !

“தேர்தல் பாதை திருடர் பாதை” –
என்றவுடன்,
அப்படியானால் ஓட்டுப்போடும் நானுமா?
என உள்ளர்த்தம் புரிந்து கொண்டு
கோபப்படும் நண்பா,

உள்ளபடியே சொல்!

“இனி எவன் வந்தாலும்
ஏறுன விலைவாசி இறங்கப் போவதில்லை,
எல்லா பயலும் திருடனுங்க” என
எல்லாமும் நீயே சொல்லிவிட்டு,
சரி… எவனுக்காவது ஓட்டுப்போடுவோம்
என நீ கிளம்பிப்போவது யோக்கியமா?

• கட்டை விரலில் வேப்பெண்ணை தடவினால்
கை சூப்பும் பழக்கம்
அத்தோடு நின்றுவிடும்,
இது என்ன கெட்ட பழக்கமோ?
எத்தனை முறை உன் முகத்தில்
கரி பூசினாலும்
மத்தவனுக்கும் ஒரு வாய்ப்பளிப்போம்
என மாறி, மாறி ஓட்டுப் போடுவது
மனநோயன்றி வேறென்ன?

• கண்டதையும் மிதிக்கக் கூடாது,
கால்தேயக் கூடாதென
செருப்பு போடுவதற்கும்
ஒரு காரணமிருக்கிறது,

கண்டவனும் உன்னை மிதித்தும் கூட
கால் கடுக்கப் போய்
இன்னும் நீ ஓட்டுப் போடுவதில்
என்ன நியாயமிருக்கிறது!

• ஓட்டுப் போடுவது
மிகப்பெரிய ஜனநாயகக் கடமையெனும்
அப்துல்கலாமின் பிரச்சாரம் கேட்டு
அவர் குடியிருக்கும் தெரு நாயே தலைசுற்றி ஓடும்போது..
அதில் ஒன்றிப் போக
நீ என்ன மூளையில்லாத முண்டமா?

ஓட்டுரிமைதான்
மிகப்பெரிய உரிமையென
உனக்கு கிர்ரு… ஏற்றும் சூர்யாவுக்கு
அடுத்த படத்துக்கு … முதலாளியிடமிருந்து
பல கோடியில் ‘அட்வான்ஸ் ரெடி’.

ஓட்டுப் போட்டு ஓட்டுப் போட்டு
உழைப்புக் கேற்ற கூலி கேட்டு
உன் உரிமைக்காக போராடும் பொழுது
ஆறடி அதிவிரைவுப் படையோடு
உனக்கு பல ரவுண்டு தடியடி!

• கல்வி உனக்கு உரிமையில்லை…
வேலை உனக்கு உரிமையில்லை…
விவசாயிக்கு விலைநிர்ணய உரிமையில்லை…
நெசவாளிக்கு கைத்தறி நூல் உரிமையில்லை…
தொழிலாளர்க்கோ சம்பளவிகிதம், பணிப்பாதுகாப்பு,
தொழிற்சங்க உரிமையில்லை…

வாழ்வுரிமை இல்லாத வாக்குரிமை எதற்கு?

• உனது “ஓட்டுரிமையை’ கரைசேர்க்க
அரசாங்கம் இரண்டு வாகனம் வைத்திருக்கிறது.
சித்திரவதைகளைப் பொறுத்துக் கொண்டு செத்துப்போனால்
உனக்கு நூற்றி எட்டு ஆம்புலன்சு
சினங்கொண்டு உரிமைக்காக போராடினால்
உனக்கு நூறு வண்டி போலீசு…
சரியாகச் சொன்னால் உனது சின்னம் ஆம்புலன்சு!

நூறா?  நூற்றி எட்டா?
வாழ்வுரிமையா… ஓட்டுரிமையா?
மானத்தோடு பொங்கியெழுவதா…
இல்லை ஒரு ரூபாய் அரிசியிலேயே தங்கி விடுவதா?
இந்தத் தேர்தலில்
உன்னைத் தெரிவு செய்ய வேண்டிய ஓட்டு இது!

• “எங்கள் விவசாயத்துக்கு தண்ணீர் வேண்டும்…
எங்கள் பிள்ளைகளுக்கு பள்ளிக்கூடம் வேண்டும்…
எங்கள் ஊருக்கு மருத்துவமனை வேண்டும்…’’
இப்படி உரிமையாய் நீ கேட்டதனைத்தையும் கொடுக்காமல்
ஓசியிலே மிக்சி,கிரைண்டர் என்றால் உள்ளர்த்தம் என்ன?

பிச்சையாய் எதையாவது வாங்கிக் கொண்டு
ஓட்டுப் போடு!
உரிமையெனக் கேட்பவனை உள்ளே போடு!
இந்தத் தேர்தல் ஜனநாயகத்தால் உனக்கு ஆவதென்ன?

நம் தேவைகளைப் புறக்கணிக்கும்
இந்தத் தேர்தலையே புறக்கணி…
இதைத் தெரிந்து கொள்ளாமல்
கிரைண்டர்.. பிரிட்ஜ் என இண்டு இடுக்கில் புகுந்து கொண்டு வாழும்
என்ன ஜந்து நீ?…

• தட்டைக் காட்டி
போட்டதை வாங்கிக் கொள்ளும் பிச்சைக் காரனுக்கும்
ஓட்டைக் காட்டி
தருவதை வாங்கிக் கொள்ளும் வாக்காளனுக்கும்
வாழ்வு ஒன்றுதான்!

நீயாக எதையும் கேட்க முடியாது…
“அம்மா அந்த பிரிட்ஜில் இருக்கும்
கெட்டித்தயிரை எடுத்துப் போடுங்கள்!’’ என்று
பிச்சைக்காரன் உரிமையுடன் கேட்கவா முடியும்?

தருவதை அனுபவித்து
நிறைவுறும் திருவோட்டை
பிச்சைக்காரன் கூட ரசிப்பதில்லை…
நீயோ, அதை சிந்தனையாய் ருசிக்கிறாய்…
உண்மையில் பெறுவதாக நினைத்துக் கொண்டு
அனைத்தையும் இழப்பவன் நீ…

விவசாய நிலங்களை எடுத்து
முதலாளிகளுக்கு போட்டுவிட்டு
ஒரு ரூபாய் அரிசியை வாங்கிக் கொள்ளும் முட்டாள்
உன்னைப் போல் உலகில் உண்டா?

பன்னாட்டு கம்பெனிகளிடம்
உன் சிறு தொழில் உரிமைகளை இழந்துவிட்டு
அவன் வண்ணத் தொலைக்காட்சியை வாங்குவதற்கு
வரிசையில் நிற்கும் உயிரினம் உண்டா?

குடிநீரும், இயற்கை வளங்களும்
குடிமக்களின் உழைப்பும்
தனியார்மயத்துக்கு தூக்கிக் கொடுத்துவிட்டு
ஐய்! மடி கணிணி கிடைக்கப்போகிறதென்று
ஓட்டுப்போட்டு ஏமாறும்
உன்னைப் போல் ஒரு நாயுண்டா? புழு உண்டா?

ஏழைகளுக்கு நல்லது செய்வதாகச் சொல்லி
அம்பானிக்கும், டாடாவுக்கும் நாட்டை
அள்ளிக் கொடுக்கும் ஏற்பாடுதான் இந்த தேர்தல்…
இதற்கு ஆள்பிடிக்கும் களவாணிகள்தான் ஓட்டுக்கட்சிகள்…
நரிகளின் ஊளையை நம்பாதே…
பின்பு கிட்னியும் போய்விட்டதே என்று வெம்பாதே!

ஈழத் தமிழரை போட்டுத் தள்ளிய காங்கிரசும்
இங்கிருக்கும் தமிழரை டாஸ்மாக்கில் ஊற்றித் தள்ளும் கலைஞரும் கூட்டணி…
“குடிகாரன்’ என விஜயகாந்தை “கொஞ்சிய’ அம்மாவும்
நீதான் ஊற்றி கொடுத்தாயா என ஆசைப்பட்ட விஜயகாந்தும் கூட்டணி…

திருடர்களுக்குள் கூச்சமில்லாமல் கூட்டணி
தேர்தலுக்கு முதல்போட்டு திரைமறைவில் காத்திருக்கிறான்
டாடா… பிர்லா… அம்பானி…

ஓட்டுப்போடும் உழைக்கும் வர்க்கமே! நீ மட்டும்
நெசவாளி, விவசாயி, மாணவன், மீனவன் எனத் தனித்.. தனி…
எதிரிகளின் கூட்டணியை அலசி ஆராய்ந்து
எவன் ஜெயிப்பான் என்பதா… நம் பணி
எதிரிகளுக்கெதிராக உழைக்கும் வர்க்கத்தை ஒரே கூட்டணியாய்
எழுந்து போராட வைப்பதுதான் அறிவு இனி…

என்ன இருந்தாலும்
ஓட்டுப்போடாவிட்டால் என்ன ஆகும்?
நம்மை யார்தான் ஆள்வது? என்ற
அடிமைத்தனத்தின் அதிர்ச்சி வினா தேவையில்லை,

நீ ஓட்டுப்போடாவிட்டால்… ஒன்றும் ஆகிவிடப்போவதில்லை,
தேர்தல் ஜனநாயகம் தீர்ந்து போனதனால்,
கருணாநிதி சொத்தை நாட்டுக்கு எழுதிவைத்து விட்டு
திருவாரூர் திண்ணையில் போய் படுத்துக் கொள்ளப் போவதில்லை…
ஜெயலலிதா முடியை அவிழ்த்துப் போட்டுக் கொண்டு
தெருவில் அலையப் போவதில்லை…
கேப்டன் சுய நினைவுக்கு வரப் போவதுமில்லை…

மாறாக, நாட்டை ஆள்வது
ஐ.ஏ.எஸ்., போலீசு, இராணுவம் போன்ற அதிகாரவர்க்கமும்
ஆளும் வர்க்கமும் என்ற உண்மை தெரிய வரும்.
நீ ஓட்டே போடாவிட்டாலும்
எப்பொழுதும் போல் முதலாளிகள் நாட்டைச் சுரண்டும்
உண்மை தெரிந்துவிடும்.

மன்மோகன்சிங் பழையபடி
உலகவங்கி வேலைக்குப் போய்விடுவார்,
சோனியா இத்தாலிக்குப் போய்
பத்துப்பாத்திரமா தேய்க்கப் போகிறார்?
சுவிஸ் வங்கியில் கிடக்கும் சிறுவாட்டுக் காசில்
சிக்கனமாய் குடும்பம் நடத்துவார்.
ராகுல்காந்தி இந்தியாகேட்டில் பானிபூரியா விக்கப் போகிறார்,
பழையபடி டாடா, வேதாந்தாவோடு சேர்ந்து தேசத்தையே விற்கப் போகிறார்…

மோடி என்ன இராமன் கோயில் வாசலிலே
குரங்கை வைத்து பிச்சை எடுக்கப் போகிறாரா?
அத்வானிதான் அனுமார் வேசம்போட்டு
தெருத்தெருவாய் கையை நீட்டப் போகிறாரா?
வழக்கம்போல முதலாளிகளின் பங்குச் சந்தையில்
இராமஜெயம் கல்லா கட்டும்…

ஆதலால், நீ ஓட்டுப் போடாததால் ஒன்றும் ஆகிவிடப்போவதில்லை..
இந்த நாட்டில்,
எய்ட்ஸ் வந்து செத்தவரை விட
எலக்ஷன் வந்து செத்தவரே அதிகம்…

தொடர்ந்து ஓட்டுப்போடுவது உடல்நலத்திற்குக் கேடு…
சந்தேகம் இருந்தால்
ஓட்டுப்போட்டு ஓட்டுப்போட்டு உள்ள சத்தும்போய்
தேசமே மருத்துவமனையில் நிரம்பி வழிவதைப் பாரு…

என்ன இருந்தாலும்,
போட்டுப் போட்டு பழகிடுச்சு
என்னால் போடாமல் இருக்க முடியாது…
கையில் இருக்கிற ஓட்டை எங்காவது போட்டே ஆகவேண்டும்…
என்று தவிக்கிறாயா?
நல்லது நண்பா,
உன் பொன்னான வாக்கை
யாருக்கும் போட்டு வீணாக்காதே…
நாட்பட்டு போன அந்த நஞ்சை
பாம்பு, பல்லி, பன்றிகள் வாய்வைக்க முடியாத
கண்காணாமல் ஊருக்கு வெளியே உள்ள
ஏதாவது ஒரு குப்பைத் தொட்டியில் கொண்டு போடு…

இழிவாய் இருப்பது
போராடுவதை விட எளிதாய் இருக்கலாம்…
ஆனால், மனித உணர்வுக்கு சரியாய் இருக்குமா?

உன் கண்ணுக்கு முன்னே
இந்த போலி ஜனநாயக அரசமைப்புக்கெதிராக
போராடும் மக்களிடம் போய்..
என்னையும் உழைக்கும் வர்க்கமாய் இணைத்துக் கொள்கிறேன்…
என்று நீ வாக்களிப்பதே அழகினும் அழகானது.

___________________________________________________

-துரை. சண்முகம்
___________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

தேர்தல் 2011

 1. உங்கள் பொன்னான வாக்கை குப்பைத் தொட்டியில் போடுங்கள் ! | வினவு!…

  தட்டைக் காட்டி போட்டதை வாங்கிக் கொள்ளும் பிச்சைக் காரனுக்கும் ஓட்டைக் காட்டி தருவதை வாங்கிக் கொள்ளும் வாக்காளனுக்கும் வாழ்வு ஒன்றுதான்! நீயாக எதையும் கேட்க முடியாது……

 2. சாட்டையடி வரிகளால்
  சந்திப்பிழை இல்லாமல்
  சகட்டுமேனிக்கு அடித்து நொருக்கி இருக்கிறார்
  தோழர். துரை சண்முகம்!
  ஒட்டுபொர்ரிக்கி அரசியலை கவிதை வரிகளில்
  இதை விட நுணுக்கமாக விவரிக்க இயலாது.
  குறிப்பாக..

  ##எத்தனை முறை உன் முகத்தில்
  கரி பூசினாலும்
  மத்தவனுக்கும் ஒரு வாய்ப்பளிப்போம்
  என மாறி, மாறி ஓட்டுப் போடுவது
  மனநோயன்றி வேறென்ன?##

  ##நூறா? நூற்றி எட்டா?
  வாழ்வுரிமையா… ஓட்டுரிமையா?
  மானத்தோடு பொங்கியெழுவதா…
  இல்லை ஒரு ரூபாய் அரிசியிலேயே தங்கி விடுவதா?##

  ##தருவதை அனுபவித்து
  நிறைவுறும் திருவோட்டை
  பிச்சைக்காரன் கூட ரசிப்பதில்லை…
  நீயோ, அதை சிந்தனையாய் ருசிக்கிறாய்…
  உண்மையில் பெறுவதாக நினைத்துக் கொண்டு
  அனைத்தையும் இழப்பவன் நீ…
  இந்தத் தேர்தலில்
  உன்னைத் தெரிவு செய்ய வேண்டிய ஓட்டு இது!##

  ##திருடர்களுக்குள் கூச்சமில்லாமல் கூட்டணி
  தேர்தலுக்கு முதல்போட்டு திரைமறைவில் காத்திருக்கிறான்
  டாடா… பிர்லா… அம்பானி…##

  ##மோடி என்ன இராமன் கோயில் வாசலிலே
  குரங்கை வைத்து பிச்சை எடுக்கப் போகிறாரா?
  அத்வானிதான் அனுமார் வேசம்போட்டு
  தெருத்தெருவாய் கையை நீட்டப் போகிறாரா?
  வழக்கம்போல முதலாளிகளின் பங்குச் சந்தையில்
  இராமஜெயம் கல்லா கட்டும்…##

  ##இழிவாய் இருப்பது
  போராடுவதை விட எளிதாய் இருக்கலாம்…
  ஆனால், மனித உணர்வுக்கு சரியாய் இருக்குமா?##

  ஒரு புரட்சிகர வாழ்க்கையை
  சொந்த நடைமுறையில் வாழும் கவிஞர்களால் மட்டுமே கையாளக்கூடிய ஒரு எழுத்து நடை,
  அதை தோழர் திறம்பட செய்திருக்கிறார்!

 3. ஜன நாயக அமைப்பில் நாம் வாக்களிக்க வேண்டி அம்பானி, டாட்டா மற்றும் பிர்லாவிடம் காசு வாங்கிய கோமான்கள் எல்லாம் பேருந்து நிலையத்தில் கூட காலில் விழுந்து எழுகிறார்கள். கம்யுனிசத்தில் லெனின்களும் ஸ்டாலின்களும் மாசெக்களும் கொலை செய்த மக்களை பற்றி பேச கூட முடியாது. தியாநேன்மேன் சதுக்கத்தில் ஆயிரக்கணக்கில் கவச வாகனகளை ஏற்றி கொன்று விட்டு செங்கொடி பறக்க விட்டு சென்று விடுவார்கள். மக்களே இந்த காட்டு மிராண்டிகளிடம் பாதுகாப்பாய் இருங்கள். எ.வ. வேலு சென்ற தேர்தலில் இருந்து எந்த தேர்தலுக்குள் சேர்த்த சொத்தை தெரியும் வாய்ப்பு தேர்தலில் உள்ளது. ஆனால் ப்ரேழ்நெவ்களும், ஸூ என் லாய் களும், ஹு ஜிண்டோ களும் சேர்த்துள்ள சொத்துகளும் வளர்த்து விட்ட வாலிபர்களை பற்றியும் யாரவது அறிவாரோ? வடக்கு கொரியாவின் மக்களின் நிலை என்ன தெரியுமா? முடவனோ, குருடனோ, தலை நகரில் வாழ உரிமை கிடையாது.

  • ஆம். ஆனால் இந்தியாவில் ஜனனாயக முறை சீரழிந்துவிட்டதால், இம்முறையே தூக்கி எறியப்பட வேண்டும் என்பது சர்வாதிகாரத்திற்க்கும், மேலும் சீர்கேடுகளுக்கும் தான் வழி வகுக்கும். சரி, லிபரல் ஜனனாயக பாணி முதலாளித்துவம், லிபர்ட்டேரியனிசம் என்றால் உண்மையில் எதை அடிப்படையாக கொண்டது என்பதை பற்றி விளக்க : (this is my ‘bible’)

   http://www.un.org/en/documents/udhr/index.shtml

   The universal Declaration of Human Rights – UNO – 1948

   Article 1.

   All human beings are born free and equal in dignity and rights.They are endowed with reason and conscience and should act towards one another in a spirit of brotherhood.

   Article 2.

   Everyone is entitled to all the rights and freedoms set forth in this Declaration, without distinction of any kind, such as race, colour, sex, language, religion, political or other opinion, national or social origin, property, birth or other status. Furthermore, no distinction shall be made on the basis of the political, jurisdictional or international status of the country or territory to which a person belongs, whether it be independent, trust, non-self-governing or under any other limitation of sovereignty.

   Article 3.

   Everyone has the right to life, liberty and security of person.

   Article 4.

   No one shall be held in slavery or servitude; slavery and the slave trade shall be prohibited in all their forms.

   Article 5.

   No one shall be subjected to torture or to cruel, inhuman or degrading treatment or punishment.

   Article 6.

   Everyone has the right to recognition everywhere as a person before the law.

   Article 7.

   All are equal before the law and are entitled without any discrimination to equal protection of the law. All are entitled to equal protection against any discrimination in violation of this Declaration and against any incitement to such discrimination.

   Article 8.

   Everyone has the right to an effective remedy by the competent national tribunals for acts violating the fundamental rights granted him by the constitution or by law.

   Article 9.

   No one shall be subjected to arbitrary arrest, detention or exile.

   Article 10.

   Everyone is entitled in full equality to a fair and public hearing by an independent and impartial tribunal, in the determination of his rights and obligations and of any criminal charge against him.

   Article 11.

   (1) Everyone charged with a penal offence has the right to be presumed innocent until proved guilty according to law in a public trial at which he has had all the guarantees necessary for his defence.
   (2) No one shall be held guilty of any penal offence on account of any act or omission which did not constitute a penal offence, under national or international law, at the time when it was committed. Nor shall a heavier penalty be imposed than the one that was applicable at the time the penal offence was committed.

   Article 12.

   No one shall be subjected to arbitrary interference with his privacy, family, home or correspondence, nor to attacks upon his honour and reputation. Everyone has the right to the protection of the law against such interference or attacks.

   Article 13.

   (1) Everyone has the right to freedom of movement and residence within the borders of each state.
   (2) Everyone has the right to leave any country, including his own, and to return to his country.

   Article 14.

   (1) Everyone has the right to seek and to enjoy in other countries asylum from persecution.
   (2) This right may not be invoked in the case of prosecutions genuinely arising from non-political crimes or from acts contrary to the purposes and principles of the United Nations.

   Article 15.

   (1) Everyone has the right to a nationality.
   (2) No one shall be arbitrarily deprived of his nationality nor denied the right to change his nationality.

   Article 16.

   (1) Men and women of full age, without any limitation due to race, nationality or religion, have the right to marry and to found a family. They are entitled to equal rights as to marriage, during marriage and at its dissolution.
   (2) Marriage shall be entered into only with the free and full consent of the intending spouses.
   (3) The family is the natural and fundamental group unit of society and is entitled to protection by society and the State.

   Article 17.

   (1) Everyone has the right to own property alone as well as in association with others.
   (2) No one shall be arbitrarily deprived of his property.

   Article 18.

   Everyone has the right to freedom of thought, conscience and religion; this right includes freedom to change his religion or belief, and freedom, either alone or in community with others and in public or private, to manifest his religion or belief in teaching, practice, worship and observance.

   Article 19.

   Everyone has the right to freedom of opinion and expression; this right includes freedom to hold opinions without interference and to seek, receive and impart information and ideas through any media and regardless of frontiers.

   Article 20.

   (1) Everyone has the right to freedom of peaceful assembly and association.
   (2) No one may be compelled to belong to an association.

   Article 21.

   (1) Everyone has the right to take part in the government of his country, directly or through freely chosen representatives.
   (2) Everyone has the right of equal access to public service in his country.
   (3) The will of the people shall be the basis of the authority of government; this will shall be expressed in periodic and genuine elections which shall be by universal and equal suffrage and shall be held by secret vote or by equivalent free voting procedures.

   Article 22.

   Everyone, as a member of society, has the right to social security and is entitled to realization, through national effort and international co-operation and in accordance with the organization and resources of each State, of the economic, social and cultural rights indispensable for his dignity and the free development of his personality.

   Article 23.

   (1) Everyone has the right to work, to free choice of employment, to just and favourable conditions of work and to protection against unemployment.
   (2) Everyone, without any discrimination, has the right to equal pay for equal work.
   (3) Everyone who works has the right to just and favourable remuneration ensuring for himself and his family an existence worthy of human dignity, and supplemented, if necessary, by other means of social protection.
   (4) Everyone has the right to form and to join trade unions for the protection of his interests.

   Article 24.

   Everyone has the right to rest and leisure, including reasonable limitation of working hours and periodic holidays with pay.

   Article 25.

   (1) Everyone has the right to a standard of living adequate for the health and well-being of himself and of his family, including food, clothing, housing and medical care and necessary social services, and the right to security in the event of unemployment, sickness, disability, widowhood, old age or other lack of livelihood in circumstances beyond his control.
   (2) Motherhood and childhood are entitled to special care and assistance. All children, whether born in or out of wedlock, shall enjoy the same social protection.

   Article 26.

   (1) Everyone has the right to education. Education shall be free, at least in the elementary and fundamental stages. Elementary education shall be compulsory. Technical and professional education shall be made generally available and higher education shall be equally accessible to all on the basis of merit.
   (2) Education shall be directed to the full development of the human personality and to the strengthening of respect for human rights and fundamental freedoms. It shall promote understanding, tolerance and friendship among all nations, racial or religious groups, and shall further the activities of the United Nations for the maintenance of peace.
   (3) Parents have a prior right to choose the kind of education that shall be given to their children.

   Article 27.

   (1) Everyone has the right freely to participate in the cultural life of the community, to enjoy the arts and to share in scientific advancement and its benefits.
   (2) Everyone has the right to the protection of the moral and material interests resulting from any scientific, literary or artistic production of which he is the author.

   Article 28.

   Everyone is entitled to a social and international order in which the rights and freedoms set forth in this Declaration can be fully realized.

   Article 29.

   (1) Everyone has duties to the community in which alone the free and full development of his personality is possible.
   (2) In the exercise of his rights and freedoms, everyone shall be subject only to such limitations as are determined by law solely for the purpose of securing due recognition and respect for the rights and freedoms of others and of meeting the just requirements of morality, public order and the general welfare in a democratic society.
   (3) These rights and freedoms may in no case be exercised contrary to the purposes and principles of the United Nations.

   Article 30.

   Nothing in this Declaration may be interpreted as implying for any State, group or person any right to engage in any activity or to perform any act aimed at the destruction of any of the rights and freedoms set forth herein.

   • இதில் மிக முக்கியமான ஆர்டிக்கள் :

    Article 17.
    (1) Everyone has the right to own property alone as well as in association with others.
    (2) No one shall be arbitrarily deprived of his property.

    இதுதான் முதலாளித்துவத்தின் அச்சாணி. கம்யூனிசத்தை நடைமுறை படுத்த இந்த உரிமையை நசுக்க வேண்டி இருக்கும். ஆனால் சொத்துக்களின் சொந்தக்காரகள் அதை பாதுக்காக்க, அதை நசுக்க முயலும் சக்திகளை எதிர்ப்பார்கள். எதிர்ப்பை ஒடுக்க, மேலே உள்ள பிற உரிமைகளை அனைத்தையும் நசுக்கியே ஆக வேண்டிய கட்டாயம் கம்யூனிசத்திற்க்கு உருவாகும். அதுதான் வரலாறு தரும் பாடம்.

    இந்தியாவில், தனிநபர் சொத்து உரிமை இன்னும் அடிப்படை உரிமை பட்டியலில் சேர்க்கப்பட வில்லை. (இந்திரா காந்தி காலத்தில் நீக்கப்பட்டது). அதனால் அரசு யாருடைய நிலத்தையும், சட்டப்படி கையகப்படுத அதிகாரம் கொண்டுள்ளது. (வளர்ந்த நாடுகளில் இப்படி இஸ்டத்துக்கு எடுக்க முடியாது). கனிம வளங்கள் அதிகம் உள்ள மத்திய இந்திய பகுதிகளில், ஆதிவாசிகள் மற்றும் சிறு விவசாயிகளுக்கு சொந்தமான நிலங்களை அரசு சுலபமாக, சொற்ப நஸ்ட ஈடுகளுடன் கையக்ப்படுத்தவதும், இந்த அடிப்படை உரிமை இங்கு இல்லாததால் தான் சாத்தியம். சிறு நிலமானாலும், அதை அரசோ அல்லது வேறு தனியார்களோ அபகரிக்க முயன்றால், அந்த நில உரிமையாளர் எதிர்க்கவே செய்வார். அது மாவோயிசமாக இங்கு வெளிப்படுகிறது. எனவே இந்த சொத்துரிமை என்பதை உண்மையில் நடைமுறையில் ஏற்றுக்கொண்டால் தான் உண்மையான முதலாளித்துவ பாணி உருவாக முடியும்.

    • லிபர்டேரியன், கேப்பிடலிசம்.ஓஆர்ஜி,மனித உரிமைகள் இப்படி பல முகமூடி போட்டுவரும் நண்பர் அதியமான் எல்லாவற்றையும் நுனிப்புல் மேய்ந்துவிட்டு அதிகமான ஆங்கில புலமையோடு கருத்தை அவிழ்த்துவிட்டு சென்றுவிடுவார் என்பதற்கு மனித உரிமை சாசனத்தின் மொத்தத்தையும் சொல்லிவிட்டு, சரத்து 17ஐ அவர் புரிந்து கொண்ட விதத்தில் தெரிவித்திருப்பதும் சிரிப்பைத்தான் வரவழைக்கிறது.

     கடந்த வருடத்திற்கு முந்தைய வருடம் தான் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகம் அறிமுகப்படுத்திய புதிய course முதுகலை (மனித உரிமைகள்) முதல் பாட்சில் கடந்த வருடம் தேர்ச்சிபெற்ற நான் படித்து புரிந்து கொண்ட மனித உரிமை இப்படி சொல்லவில்லையே என சந்தேகம் வந்தது.

     17(1) ஒவ்வொருவருக்கும் தனியாகவும் கூட்டாகவும் சொத்து வைத்துக் கொள்ளும் உரிமை உண்டு (வாங்கும் சொத்தை உரிமை கொண்டாடுவது தொடர்பாக ownership of particular property சொல்லப்பட்டது)
     (2) யாரிடமிருந்தும் தன்னிச்சையாக அவர் சொத்துக்களை பறிக்க முடியாது

     முன்னதாக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் சரத்து 14 சட்டத்தின் முன் அனைவரும் சமம்- என்பதற்கும், சரத்து 39ல் அரசிற்கு பொது நலனுக்காக கையகப்படுத்துதல், சமமாக பகிர்ந்தளித்தல் என்று சொல்லப்பட்ட உரிமைக்கும் பல்வேறு சந்தர்ப்பங்களில் சர்ச்சை எழுந்த போதெல்லாம் உச்சநீதிமன்றம், பொது நலனுக்காக கையகப்படுத்துதலை நியாயப்படுத்தியிருக்கிறது.

     உடனே நண்பர் “human rights” பழங்குடி மக்களின் சொத்தைப் புடுங்கி வேதாந்தா கையில் சினா தானா கொடுக்கலாம் என்றோ, சிங்கூர் விளை நிலங்களை புத்ததேவ் பட்டாச்சார்யா புடுங்கி டாடா கையில் கொடுக்கலாம் என்றோ அனர்த்தம் கொள்ளக் கூடாது.

     நண்பர் சொல்வது போல் மனித உரிமை சாசனத்தை புரிந்து கொண்டால் பொதுவான சாலைகள், தண்டவாளங்கள், பள்ளிக் கூடங்கள், பேருந்து நிலையங்கள் போன்ற எதற்குமே அரசு நிலங்களை கையகப்படுத்துதலே முடியாமல் போயிருக்கும்.

     ரஷ்யாவில் கம்யூனிச தோல்விக்கு காரணம் பற்றியும், அமெரிக்க பொருளாதார வீழ்ச்சிக்கு தனியார் மயம் காரணமல்ல என்ற பொருள்படவும் இரண்டு நீண்ட ஆங்கில கட்டுரைகளின் லிங்க் capitalism.org கொடுத்ததோடு “நண்பர் சித்ரகுப்தனை இதற்கு தமிழ்ப்படுத்த சொல்லலாமே என நக்கலடித்திருந்தார்” அந்த கட்டுரைகளில் சுட்டிகளாக குறிப்பிட்டிருந்த புத்தகங்களை கட்டுரையாளரே முழுமையாக படிக்காமல் நுனிப்புல் மேய்ந்திருக்கிறார் என்பதையும் தனியாக வெளுக்கிறேன்

    • //நண்பர் சொல்வது போல் மனித உரிமை சாசனத்தை புரிந்து கொண்டால் பொதுவான சாலைகள், தண்டவாளங்கள், பள்ளிக் கூடங்கள், பேருந்து நிலையங்கள் போன்ற எதற்குமே அரசு நிலங்களை கையகப்படுத்துதலே முடியாமல் போயிருக்கும்.///

     Eminent domain என்று ஒன்று உண்டு. விதிவிலக்காக அவை இது போன்ற பொது விசியங்களுக்காக நிலங்களை கையகப்படுத்த வழி எங்கும் உண்டு. ஆனால் தனியார் கம்பெனிகளுக்கு, அல்லது அரசு நிறுவனங்களுக்கு நிலங்களை அளிக்க இப்படி செய்ய முடியாது. இன்றும் கனடா, அய்ரோப்பிய நாடுகளில் கனிம வள சுரங்கங்கள் புதிதாக உருவாகுகின்றன. இந்தியா போல் அரசு நிலங்களை கையகபடுத்துவதில்லை. வாங்குபவர்களும், விற்பவர்களும் நேரடியாக பேரம் பேசி முடிவு செய்து கொள்ள வேண்டியது தான். சமீபத்தில் மே.வங்க முதல்வரும் இதை தான் இனி செய்யப்போவதாக பேசியிருக்க்கிறார். உச்ச நீதி மன்றம் தடையாக, பிற்போக்காக இருக்கிறது என்று நேரு ஒரு கட்டத்தில் குறிப்பிட்டார் : நில உச்ச வரம்பு சட்டம் இயற்றப்படும் போது. அதற்க்காக ஒரு புதிய அட்டவணை வெளியிட்டு உச்ச நீதி மன்றத்தை bye bass செய்தனர்.
     சொத்துரிமை பற்றி முதலீட்டியத்தின் அடிப்படைகள் என்ற தலைப்பில் விரிவாக எழுதியுள்ளே. யார் நுனிப்புல் மேய்கிறவர் என்று நீங்களே சொல்ல வேண்டாமே !

     ///ரஷ்யாவில் கம்யூனிச தோல்விக்கு காரணம் பற்றியும், அமெரிக்க பொருளாதார வீழ்ச்சிக்கு தனியார் மயம் காரணமல்ல என்ற பொருள்படவும் இரண்டு நீண்ட ஆங்கில கட்டுரைகளின் லிங்க் capitalism.org கொடுத்ததோடு “நண்பர் சித்ரகுப்தனை இதற்கு தமிழ்ப்படுத்த சொல்லலாமே என நக்கலடித்திருந்தார்” அந்த கட்டுரைகளில் சுட்டிகளாக குறிப்பிட்டிருந்த புத்தகங்களை கட்டுரையாளரே முழுமையாக படிக்காமல் நுனிப்புல் மேய்ந்திருக்கிறார் என்பதையும் தனியாக வெளுக்கிறேன்//

     வெளுங்க வெளுங்க. ஆவலோடு காத்திருக்கிறேன். பிறகு தெரியும் யார் நுனிப்புல் மேய்திருக்கிறார் என்று !!!

     சென்னையில் டவுன் பஸ்களின் பற்றாக்குறை நாளுக்கு நாள் அதிகமாகிறது. பயணிகளின் நிலை கொடுமை. இதற்க்கு இதுவரை உங்களால் தீர்வு சொல்ல முடியவில்லை. தனியார்களை அனுமதிக்க வேண்டும் என்ற கட்டாயம் எல்லாம் எமக்கு இல்லை. அரசே போதுமான பஸ்களை இயக்கினாலும் சம்மதமே. ஆனால் போதுமான பஸ்கள் உடனே வேண்டும். வழி சொல்லுங்கள். மதுரையில் நீங்க ஏன் பஸ்களில் செல்லாமல், பைக்கில் செல்கிறீர்கள் என்றும் கேட்டிருந்தென் ? பைக் இல்லாதவர்கள் நிலை அங்கு எப்படி ? ஒரு மாதம், பைக்கை நிறுத்திவிட்டு, பஸ்களில் மட்டும் பயணம் செய்து பாருங்க. பிறகு இந்த விவாதத்தை தொடரலாம்.

    • டூ வீலர் என்பது எனது சில அவசர தேவைகளுக்காக வைத்திருப்பது. மற்றபடி தினமும் நான் அலுவலகத்திற்கு பேருந்தில்தான் சென்று வருகிறேன். மக்களின் தேவையை நிறைவு செய்ய அதிகாரிகள் திட்டமிட முடியும், ஆனால் மாறுகின்ற அரசியல் சூழலுக்கேற்ப அரசியல் தலையீடுகளினால் அரசுத்துறை செயல்பாடுகளில் சில தடங்கல் என்பது உள்ளதுதான். அதேசமயம் காலை, மாலை பீக் ஹவர்களில் உள்ள கூட்டத்தை மட்டும் வைத்து முழுநாளின் பேருந்து தேவையை முடிவு செய்ய இயலாது. புதிய தடங்கள் அவ்வப்போது விரிவாக்கம் செய்யப்பட்டுக் கொண்டுதான் உள்ளது. மற்ற விபரங்கள் விரைவில்…

 4. “”எங்கள் விவசாயத்துக்கு தண்ணீர் வேண்டும்…
  எங்கள் பிள்ளைகளுக்கு பள்ளிக்கூடம் வேண்டும்…
  எங்கள் ஊருக்கு மருத்துவமனை வேண்டும்…’’
  இப்படி உரிமையாய் நீ கேட்டதனைத்தையும் கொடுக்காமல்
  ஓசியிலே மிக்சி,கிரைண்டர் என்றால் உள்ளர்த்தம் என்ன?

  பிச்சையாய் எதையாவது வாங்கிக் கொண்டு
  ஓட்டுப் போடு!
  உரிமையெனக் கேட்பவனை உள்ளே போடு! “”

  சாட்டையடி … குப்பை தொட்டிக்கு பதிலாக 49 O – வில் போடலாமே ….
  பலருக்கும் சொல்ல முகபுத்தகத்தில் இடுகிறேன் ..

 5. • உனது “ஓட்டுரிமையை’ கரைசேர்க்க
  அரசாங்கம் இரண்டு வாகனம் வைத்திருக்கிறது.
  சித்திரவதைகளைப் பொறுத்துக் கொண்டு செத்துப்போனால்
  உனக்கு நூற்றி எட்டு ஆம்புலன்சு
  சினங்கொண்டு உரிமைக்காக போராடினால்
  உனக்கு நூறு வண்டி போலீசு…
  சரியாகச் சொன்னால் உனது சின்னம் ஆம்புலன்சு!
  **********super! super!super!super***********

 6. மிகவும் அருமையான கவிதை…உரிமைகளை தொலைத்த
  மக்களுக்கு உணர்வூட்டும் வரிகள்.

 7. இந்தியாவில் ஜனநாயகம் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது என்றாலும் அதற்கு மாற்றாக என்ன வைத்து இருக்கிறோம்?. இப்பதிவில்(கவிதையில்) சொல்லப்பட்ட பல் விஷயங்கள் உண்மை என்றாலும் உண்மையான ஜனநாயக்த்தை அமல் படுத்த அரசியலமைப்பு சட்டத்தில்,தேர்தல் முறையில் பல சீர் திருத்தங்கள் செய்தாக வேண்டும்.
  தேர்தல் புறக்கணிப்பு என்பது தேவையற்றது.மக்கள் ஏன் போட்டியிடும் வேட்பாளரில் நல்லவர் என்று அறிந்த ஒருவருக்கு வாக்களிக்க கூடாது?.ஒரு சில தொகுத்களில் தேர்ந்தெடுத்தால் பல தொகுதிகளில் அடுத்த தேர்தலில் மாற்ரம் ஏற்படும்.தேர்ந்த்டுக்கப்பட்ட வேட்பாளரின் ஐந்து வருட பணி விவரங்க்ள்,திட்டங்களின் செயல் பாடுகள் வெளிப்ப்டையாக இருக்கௌம் படியும்,அதனை யாரும் கண்காணிக்கும் படியும் செய்தாலே ஊழல் குறைந்து விடும்.

 8. நம் தேவைகளைப் புறக்கணிக்கும்
  இந்தத் தேர்தலையே புறக்கணி…
  புறக்கணிப்போம .புறக்கணிப்போம.
  திருடர்களின.தேர்தலை புறக்கணிப்போம்

 9. ஒரேடியா அவ நம்பிக்கை கொள்ள தேவையில்லை. தேர்தலை புறக்கணித்தால், வில்லன்கள் தான் மீண்டும் ஆட்சிக்கு வருவர். நல்லவர்கள் யாரேனும் வர வாய்ப்பையும் தவறவிடுவோம். உதாரணமாக திண்டுக்கலில் சி.பி.எம் அய் சேர்ந்த தோழர் பாலபாரதி அவர்கள். need to loose hope.

  சரி, இருக்கட்டும். ’நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி… ’
  நான் எம் இரட்டை பசஙக்ளோடு பாடும் விருப்ப பாடல். அப்பா பாட்டு என்பாங்க பசங்க. 2.75 வயதுதான். பார்த்து ரசிக்க, inspireஆக் : http://video.yahoo.com/watch/4607283/12320276

 10. “It is worst/poor to sell your vote rights to someone else. It is even worst/poor not to cast your vote than that”. If you do not like it, use 49O. Do not say all these rubbish reasons for your laziness/long queue/frustration. Show your frustration, gut feeling by casting your vote (use 49O in case). Can’t you spend 15 mins for your next 5 years life (Its yours/Ours)?

 11. நாட்டின் மீது உண்மையான அக்கறை கொண்ட அனைத்து பெரியோர்களும், சான்றோர்களும், சிந்தனையாளர்களும், சமூக ஆர்வலர்களும். PUCL போன்ற அமைப்புகளும் தேர்தலை புறக்கணிக்க சொல்லவில்லை. எனக்கு தெரிந்து நீங்க மட்டும் தான் இப்படி சொல்கிறீர்கள். மற்றவர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை தான் வலியுறுத்திகிறார்கள். முக்கியமாக படித்த நடுத்தர வர்கம், வாக்களிக்காமல் வெறும் வாய் பேச்சு மட்டும் செய்வதை பற்றி பேசுகிறார்கள். அனைவரும் தவறாது வாக்களிக்க வேண்டும் என்று தான் வலியிருத்துகிறார்கள். அவர்கள் அனைவரும் தவற, நீங்க சொல்வது மட்டும் தான் சரி என்று நாங்கள் எப்படி ஏற்றுக்கொள்வது.

  சிக்கல்களை தீர்க்க தேர்தல்களை புறக்கணப்பது வழியல்ல என்பதே விவேகம்.

 12. “எத்தனை முறை உன் முகத்தில்
  கரி பூசினாலும்
  மத்தவனுக்கும் ஒரு வாய்ப்பளிப்போம்
  என மாறி, மாறி ஓட்டுப் போடுவது
  மனநோயன்றி வேறென்ன?”

  எல்லா வரிகளும் சாட்டையால் அடிப்பது போலுள்ளது. மக்களுக்குத் தேவையான வரிகள்தான். இதையும் படித்து விட்டு ஒருவர் வாக்களிக்கச் சென்றால் வாக்குச் சாவடியிலிருந்து அவரை நேராக ‘மென்டல் ஆஸ்பிட்டலுக்குத்தான்’ கொண்டு செல்ல வேண்டும். என்ன… அங்கேயும் கலைஞர் காப்பீட்டுத்திட்டம் இருக்கிறதே என மகிழ்ந்தால் வேறு வழியில்லை… நேரே சுடுகாடுதான்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க