Wednesday, July 24, 2024
முகப்புகட்சிகள்அ.தி.மு.கபுரட்சிக்கு 'சே'குவேராவும் பொறுக்கி தின்ன 'ஜெ'யலலிதாவும் !

புரட்சிக்கு ‘சே’குவேராவும் பொறுக்கி தின்ன ‘ஜெ’யலலிதாவும் !

-

போலி-கம்யூனிஸ்டுகள்


நாங்கசேகுவேராவைச் சொன்னாலும்
ஜெயலலிதா பின்னால் நின்னாலும்
இலக்கு ஒண்ணுதான் தோழர்.

முதலாளித்துவப் போதையில்
மூழ்கிக் கிடக்கும் மக்களை
அந்தப் பாதையிலேயே போய்தான்
அப்படியே புடிக்கணும் !

தோழர் …. மக்கள் இன்னும் தயாராய் இல்லை
அப்புறம் பாருங்க….. நேரா புரட்சிதான் !

அது வரைக்கும் ?

போயசு தோட்டம்தான் !

கேட்டவர் அதிர்ச்சியடைய
‘டோட்டலாய்’ விளக்கினார் தோழர் :

யாருடைய காலில் விழுந்தாலும் – சி.பி.எம்.
தன் கொள்கையை மட்டும் இழக்காது.

மக்கள் விரோதிகள் எவரும் இனி
மார்க்சிஸ்டுகளை விலக்கி விட்டு
அரசியல் நடத்த முடியாது !

அந்தப் புரட்சித் தலைவியே தடுத்தாலும்
‘அம்மா’ சபதம் முடிக்காமல் ‘பொலிட்பீரோ’ அடங்காது.

அப்புறம் எப்போது புரட்சி?

அது இருக்கட்டும் தோழரே,
சி.பி.எம். வரலாற்று ஸ்டேட்டஜியே வேற:

அன்று நேருவை அடையாளம் கண்டோம்
அவரிடம் சோசலிச வாடையை வளர்த்தோம்.

காங்கிரசுக்கு உள்ளே இருந்தே
முற்போக்கு சக்திகளை மோப்பம் பிடித்தோம்.
அப்படியே படிப்படியாய்
தனிக்கடையை விரிச்சோம்.

அப்புறமா … கேரளா, திரிபுரா, மேற்கு வங்கம்னு
ஆட்சியைப் பிடிச்சோம்.

அடுத்தது புரட்சி ?

பின்னே ஆயுதம், வன்முறை இல்லாமல்
அனைவருமே சமமாகி சோசலிசம் படைக்க
நம்ம நம்பூதிரிபாடு ஆட்சியிலதான்
நாட்டிலேயே முதன்முதலா
லாட்டரி சீட்டு அடிச்சோம் !

அல்லாவை வென்றெடுத்து
மத நல்லிணக்கம் நிலைநாட்ட
முசுலீம் லீக் கூட்டணி முடிச்சோம்

இந்துக்களிடமும் வர்க்கத்தீயை மூட்டிவிட
சபரிமலையில் மகரஜோதி பிடிச்சோம் !

காசு சேர்த்து நிலத்தை வாங்கி
பண்ணையார்கள் ஆதிக்கம் ஒழிச்சோம்

போர்க்குணத்துடன் போலீசை பயிற்றுவித்து
போய்…. நக்சல்பாரிகளைக் கடிச்சோம் …

இப்படி …. கச்சிதமா கம்யூனிசத்தை முடிச்சோம் !

சரி புரட்சி எப்போது ?

அட ! டாடாவையே வென்றெடுத்தோம்
நந்திகிராமத்தில் நம்ம கட்டுப்பாட்டில் நுழைச்சோம் !

பாட்டாளிவர்க்க ஒற்றுமையைக் காக்க
விவசாயிகள் மண்டையை உடைச்சோம்.

பெண்களென்னும் பேதம் பார்க்காமல்
புடவையை பிடித்து கிழிச்சோம்.

வர்க்கப் பகைமையை ஒழிக்கத்தான்
சிங்கூர் நந்திகிராமில்
விவசாயி, தொழிலாளி வர்க்கத்தையே ஒழிச்சோம் !

இதுவா புரட்சி !

இது மட்டுமா ! சாதி ஆதிக்கத்தை ஒழிக்க
உத்தபுரம் சுவரை நாங்கதான் இடிச்சோம்.
சிறுதாவூர் தலித் நில பிரச்சனைக்கும்
நாங்கதான் கொடி பிடிச்சோம்
இப்ப, செயல்தந்திர அரசியல்படி
அம்மா தோட்டத்திலேயே அந்தப் பிரச்சனையை புதைச்சோம்.

போர் என்றால் நாலுபேர்
சாகத்தான் செய்வார்கள் என்று
இழவெடுத்த புரட்சித்தலைவி – இப்போது
போர்நிறுத்தம் வேண்டுமென்று
உண்ணாவிரதம் இருந்தது கண்டு
உண்டியலுக்கு வெளியே காணிக்கையாய் கிடந்தோம் !

”ஊரை அடித்து உலையில் போட்ட பானையோ ! – இன்னும்
யாரை மிதிக்கக் காத்திருக்கும் யானையோ” என்று

அம்பிகையைப் பார்த்தவுடன் அந்தக்கால நினைவு வந்தபோதும்,
பாதம் பணிந்த ஓ. பன்னீரும், பஜனை குழுவோரும்
பசியெடுத்த அம்மாவின் பக்கத்தில் நில்லாமல்
ஒரு காதம் விலகி வேண்டி நின்ற போதும்.

ஈழத்தமிழருக்காய் ஈரம் கசிந்து
ஓதம் காத்த அந்தச் சுவரோரம்
அஞ்சாமல் ஒதுங்கிய எங்கள் போர்த்தந்திரம் சும்மாவா ?

இதிலென்ன புரட்சி ?

சமரச சுத்த சன்மார்க்க சபை கலைந்து – எங்கள்
சமரச சித்தாந்த சன்னதியின் தீக்கதிரில் நாக்குழறி
எச்சு ஊறி எங்கள் எச்சூரி பின்னால் திரளுகையில்
என்ன ஒரு கேள்வி இது !
எத்தனை முறைதான் ஓதுவது !

சவுக்கடியும், சாணிப்பாலும் கொடுத்து
கீழத்தஞ்சையில் கம்யூனிஸ்டு கட்சியை
ஒழிக்கப் பார்த்தான் காங்கிரசு ! கடைசியில் என்னாச்சு ?
நம்ம துணையில்லாமல்
அவனால் நாடாள முடிந்ததா ?

நள்ளிரவில் எழுப்பி விட்டு
நம் அரசு ஊழியர் வர்க்கத்தை
சிறையில் தள்ளினாளே ஜெயலலிதா
இப்போது என்ன ஆச்சு ?

வலது, இடதாக தா. பாண்டியனையும், வரதராசனையும்
ஜெயலலிதா வளைத்துப் பிடிப்பதைப் பார்த்து
தோட்டத்து சசிகலாவே வாட்டத்தில் பொருமுகிறாள்.

நாம இல்லாமல்
யாராவது இனி அரசியல் நடத்த முடியுமா ?

போதும் … எப்போதுதான் புரட்சி ?

வந்தது கோபம் தோழருக்கு :

அட ! என்னங்க
இவ்வளவு தூரம் விவரம் சொல்கிறேன்
இன்னும் விளங்காமல்
எங்களிடம் வந்து புரட்சி, புரட்சின்னா…. ?
சுத்த புரியாத ஆளா நீங்கள் !?

________________________________________

– துரை. சண்முகம்

 1. கவிதையும் கருத்துப்படமும் அருமை.

  கவிதையில் புரட்சி என கவிஞர் தான் கவலைப்படுகிறார். அவர்கள் கவனமாக வாயே திறப்பதில்லை. நீங்கள் தான் அவர்கள் புரட்சியை திட்டத்தில் வைத்திருக்கிற கட்சி என நினைவுபடுத்தி, நினைவுபடுத்தி சாத்துகிறீர்கள்.

  இது எப்படி இருக்குன்னா! அவ்வை சண்முகி படத்தில், மணிவண்ணன் டெல்லிகணேஷ் மயக்கம் தெளிய வைச்சு இது எத்தனை என கேட்டு அடிப்பாரே! அந்த சீன் தான் நினைவுக்கு வருகிறது.

  கேரளாவில் இரண்டு நாளைக்கு முன்பு செய்தி படித்தேன். சிபிஐ, சிபிஎம் வேட்பாளர்கள் தேர்தல் பிரச்சாரம் துவங்கியதே ஐயப்பனுக்கும், இன்னொரு சாமிக்கும் பூஜை போட்டுத்தான் துவங்கினாங்களாமே!

  சிபிஐ-யையும், சிபிஎம்யும் இந்த வாரு வாரு வாங்குவது நான் கவனித்தவரையில் நீங்கள் மட்டும் தான்.

  காதில் நிறைய புகை வரப்போகிறது அவர்களுக்கு!

 2. பொருக்கி கம்யூனிச்டுகளுக்கு சவுக்கடி !

  போன வாரத்தில் வரதராஜனுக்கு நோட்டு’ மாலை போட்டு வரவேற்பு கொடுத்தது பத்திரிக்கைகளில் ‘வெளி’ வந்தது .

  இந்த போலிகளா புரட்சி செய்வார்கள் ?
  டாஸ்மாக்கிலும், கழிவரையிலும் புர்ர்ர்ர்ச்சி செய்வார்கள்

  கம்யூனிசத்தின் பெயரை கெடுத்து கம்யூனிசம் என்றாலே மக்களுக்கு ‘குப்பை. என்ற
  தோற்றத்தை உருவாக்கியவர்கள் .

  கம்யூனிசத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை இருக்கிறது என்றால் அது நக்சல்பாரிகளால்தான் இந்த போலி எச்சிலை நாய்களால் இல்லை.

 3. சிபிஎம் பற்றி ஒரு அரசியல் செய்தி.

  பெண்களையும், தங்களுடைய வீட்டு பெண்களை கட்சி அரசியல் படுத்துவதில் சுணக்கம் இருக்கிறது என மாநாடு விவாதத்தில், ஒரு கவன ஈர்ப்பு கொண்டு வந்தார்களாம்.

  பிறகு, செயற்குழுவில் தெரிவு செய்யப்பட்டவர்கள் 67 பேரில், 4 பேர் மட்டும் தான் பெண்கள்.

  இதற்காக பிருந்தாகாரத் கோவித்து கொண்டு, என்னை இதில் சேர்த்துகொள்ள வேண்டாம் என்றதும், 3 பெண்கள் என்று முடிவெடுத்து அறிவித்துவிட்டார்களும்.

  பின்னாளில், மாநாட்டுக்கு பிறகு, மேலே உள்ள வரியையும் எடுத்துவிட்டார்களாம்.

 4. சவுக்கடியும், சாணிப்பாலும் கொடுத்து

  கீழத்தஞ்சையில் கம்யூனிஸ்டு கட்சியை

  ஒழிக்கப் பார்த்தான் காங்கிரசு.

  அப்போது தஞ்சையில்தமிழர்கள் இல்லையா?

  ஈழப் தமிழர்கள் பத்துப்பேர் இருந்திருந்தால்

  காங்கிரசு கடைசிவரை வாலை ஆட்டி

  இருக்கமாட்டினம். கவலைப்படுகின்றேன்.

  புரட்சி வேட்பாளர்கள் பூஜை போட்டுத்தான்

  தேர்தல் பிரச்சாரம் துவங்கினாங்களாமே!

  ஜாதியை மறுப்பவர்கள் சாமிக்கும் பூஜை

  போட்டுத்தான் துவங்கினார்களாமே!

  அப்படியானால் இவங்கடசாமி

  என்ன சாதி சாமி??????

  பண்ணிக்கு பிறந்ததுகள்தான் இதுகள்…

  • ஆஹா… என்ன நிதானமான வார்த்தைகள்… நாகரீகம்னா என்னன்னு உங்ககிட்டதான் கேட்டு தெரிஞ்சுக்கணும்…

 5. இந்தச் சேர்க்கையிலாவது அம்மாவுக்கு ஒரு குழந்தை பிறக்குமா? பிறக்கும் குழந்தை எப்படி தமிழனைத் தின்னும். இதற்கொரு கவிதை எழுதுவீர்களா? துரை. சண்முகம்.

 6. இங்கு நக்சல்பாரிகள் தான் பூசாரிகள்

  யார் சொன்னது
  போலிகள் புரட்சி பண்ணவில்லையென்று
  “பன்னினார்கள்” எத்தனையோ
  சொல்ல சொல்ல வாய்
  வலிக்கும் வருதுவின்
  கருணையிருந்தால் கை கூடும்….

  சிபிஎம் சிபிஐ
  பேரை கேட்டதால் தான்
  என்னவோ புடலங்காய்க்கும்
  புரட்சி வந்து முறுக்கிகொண்டதுவோ…..

  ஆரம்பித்தது வரலாறு நாப்பத்தேழிலிருந்து
  கூடவே துரோகத்தனத்துக்கும்
  தெலுங்கானாவை காட்டிக்கொடுத்து
  நக்சல்பாரியை அடக்கி ஒடுக்கி
  இன்னமும் அடங்க மறுக்கிறது
  குறுதியின் வெப்பம்……

  கண்காட்டும் தலைவருக்கு
  தாசனாகி உழைக்கும் மக்களுக்கு நீசனாகி
  மாமா வேலை செய்து செய்து
  பாசிஸ்டாக பல்லிளித்து
  செயாவின் காலுக்கு பாத பூசை
  ஆண்டுக்கு ஒருமுறை ஆயுதபூசை
  தேர்தல் தொடங்கியவுடன் சாமிக்கு பூசை….

  ஆயிரம் தரகு வேலை
  ஆயிரம் பூசைகள் செய்து களைத்து
  போயிருக்கும் நல்லோரே வல்லோரே
  உங்களுக்கு மொத்தமாய் பூசை
  செய்கிறோம் கூடவே நிரந்தர ஓய்வையும்

  இங்கு நக்சல்பாரிகள் தான் பூசாரிகள்
  நாங்கள் ஓட்டுகிற ஓட்டில்
  ஓட்டுப்பெட்டியும் உங்களின்
  புர்ர்ட்சிதலைவர்களும் காணாமல் போவார்கள் …….

 7. தெரியாமல்தான் கேட்கிறேன்,வேரு எந்த மானிலத்தில் நடிகர்கள் குப்பை கொட்டமுடியும்?
  பம்பரம் விட தொப்புள் கேட்கிற ஆசாமி…..

 8. ///புரட்சி வேட்பாளர்கள் பூஜை போட்டுத்தான்

  தேர்தல் பிரச்சாரம் துவங்கினாங்களாமே!///

  வெட்கம் கேட்ட நாய்கள்..
  நேற்று நண்பனொருவன் கேட்டதால், கருத்து முதல்வாதம், பொருள் முதல்வாதம் போன்றவற்றை அறிமுக விளக்கம் தந்தேன்!
  அவன் கேட்டானே ஒரு கேள்வி….. !!!!!!!!!
  நண்பா அப்ப கம்யுனிஸ்ட்டுன்னா கடவுள் நம்பிக்கை இல்லாதவங்களா? இப்பதான் இது தெரியுது… இதகேட்டு பக்கத்துல நடந்து போன இன்னொரு நண்பன் அதிர்ச்சியாகி பக்கத்துல வந்து கேட்டுட்டு போனான் “என்னது கம்யுனிஸ்ட்டுன்னா கடவுள் நம்பிக்கை இல்லாதவங்களா?”

  போலி கம்யுனிஸ்ட்டு விளைவு…

  • தப்பான தகவலைத் தந்து அதற்கு இவ்வளவு தரக்குறைவாக விமர்சனம் செய்வது பொருத்தமானதாகக் தெரியவில்லை…

 9. நம்ம போலி கம்யுனிஸ்டுகள் புரட்சியை பல வருடங்கள தேடி, அலைந்து, எதை தின்றால் பித்தம் தெளியும் என்று இருந்த வேளையில்… திடீரன வந்த தேர்தல் சாணத்தில் ச்சீ ஞானத்தில் நம்ம “அம்மாவை” புரட்சி தலைவி, புரட்சி தலைவின்னு மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்றாங்களே… அவங்க காலடில விழுந்து ஆசி வாங்கின ஒருவேளை நமக்கும் புரட்சி வரும்னு நெனச்சுதான்… போயஸ் தோட்டத்துக்கு போயிருக்காங்க.. இப்போ அவங்க தேர்தலில் வெற்றி பெற, தேர்தல் அலுவகத்தை எப்படி வாஸ்து படி அமைப்பது என்பது பற்றியும், அம்மாவின் 9ம் நம்பர் நமக்கும் ராசியா என்பன போன்ற பல கேள்விகளுக்கு “கேரள நம்பூதிரியிடம்” அருள்வாக்கு கேட்க போயிருக்காங்க…
  பாத்துகிட்டே இருங்க , உங்களுக்கெல்லாம் கூடிய விரைவில் பதில் சொல்வாங்க…. 🙂 😉

 10. தொடர்ச்சியாக வினவு தளம் சிபிஐ, சிபிஎம் கட்சிகளை அரசியல் ரீதியாக விமர்சனம் செய்து வருகிறது. இதுகுறித்து, சிபிஐ, சிபிஎம் அணிகள் சிலர் பதிவர்களாக, அனுதாபிகளாக (சிபிஎம் – ஆதராளவர்களை இப்படித்தான் அழைக்கும்) இருப்பவர்கள் இது குறித்து நேர்மையாக பேச மறுக்கிறார்கள்.

  இதற்கெல்லாம் அடிப்படை – சிபிஐ, சிபிஎம் – ல் தனது அணிகளுக்கு சித்தாந்த பயிற்சி எடுப்பதில் மிகப்பெரிய தேக்கம் இருக்கிறது.
  தலைமை இப்படி கூட முடிவெடுத்திருக்கலாம். சித்தாந்த பயிற்சி எடுத்துவிட்டால், ஜெயலலிதாவோடு தேர்தல் கூட்டு வைத்து கொண்டால், கொந்தளித்துவிடுவார்கள் என்ற பயம் இருக்கலாம்.

  ஆனால், வேலை செய்யும் நேர்மையான அணிகள் தங்களது தலைமையிடம் சித்தாந்த பயிற்சி எடுக்க கோரவேண்டும்.

  அவர்கள் சித்தாந்த பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்பதற்கு, ஆதாரம் கேட்பார்களோ இல்லையொ கொடுக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.

  1978ல் சிபிஎம் கட்சி சால்க்கியா நகரில் நடந்த மத்திய குழுக்கூட்டம் நிறைவேற்றிய தீர்மானம்…

  “கட்சியின் இளம் ஊழியர்களுக்கு முறையான சித்தாந்த பயிற்சி அளிக்கப்படுவதில்லை. இதனால், அவர்கள் எப்படியாவது வேலையை பார்த்துவிட்டு போவோம் என்கிற என்ணம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். அல்லது எஜமானவர்களைப் போல நடந்து கொள்பவர்களாக ஆகிறார்கள்… ”

  1992-ல் சிபிஎம் கட்சியின் அனைத்திந்திய மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்

  “சித்தாந்த போராட்டம், மார்க்சிய கல்வி, பிரச்சாரம் ஆகியவை சிறப்பான முக்கியத்துவம் கொண்டவை ஆகும்…. இந்த பணியை புறக்கணிப்பது என்பது வெறும் பொருளாதார வாதத்தில் வீழ்வதாகும்”

  1998ல் கட்சியின் அனைத்திந்திய மாநாட்டில்..

  “எவ்வளவோ இயக்கங்களையும், போராட்டங்களையும் நாம் நடத்துகிறோம். இருப்பினும் கட்சியின் அரசியல் செல்வாக்கும், தளமும் விரிவடையாமல் இருக்கின்றனவே, அது ஏன்? என்று அடிக்கடி கேட்கப்படுகிறது. இதற்கான பெரும் காரணங்களில் ஒன்று, அரசியல் படுத்தும் பணி, சித்தாந்தப்பணி ஆகியவற்றை வளப்பதில் நாம் தோல்வி அடைந்திருக்கிறோம்”

  2000ல் கட்சியின் விசேச மாநாட்டில், பொதுச்செயலாளர் சுர்ஜித்

  “கட்சியை வளர்ப்பதற்கு வேறு எதையும் விட மிக மிக முக்கியமான, தலையாய பணி என்பது, கட்சியின் இளம் ஊழியர்களுக்கு சித்தாந்தப் பயிற்சி அளிப்பது தான்”

  2002 ல் அனைத்திந்திய 17வது மாநாட்டில்

  “மக்கள் மத்தியில் சித்தாந்தப் பிரச்சாரம் செய்வது மிகவும் முக்கியமான பணி ஆகும். ஆனல், இந்தப் பணி முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளது (!)”

 11. சி.பி.எம் கட்சியின் வரலாற்றை சுருக்கி கவிதையாக கொடுத்தமைக்கு நன்றி. இதே போல நக்சல்பாரிகள் வரலாற்றையும் அவசியம் எழுதுங்கள்…துரோகிகளுக்கே நல்ல படைப்புகள் போனால் எப்படி?

 12. கம்யூனிஸ்ட் கட்சிகள் எம்.எல்.ஏ., எம்.பி. சீட்டுக்காக தங்கள் கொள்கைகளை காம்ப்ரமைஸ் செய்து கொள்கிறார்கள் என்பது சரிதான். ஆனால் உங்கள் மாற்று தீர்வு என்ன? உங்களுக்கு இந்த ஓட்டு, ஜனநாயகம், எம்.எல்.ஏ., எம்.பி., சட்ட மன்றம் இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை, தேர்தலை புறக்கணிக்க சொல்கிறீர்கள். நாளை உங்களுக்கு தமிழகத்தில் 5% சதவிகிதம் ஓட்டு கிடைக்குமென்றால் ம.க.I.க.வினர் என்ன செய்வீர்கள்? அப்போதும் தேர்தலை புறக்கணிப்பீர்களா? 50% ஓட்டு என்றால்? ம.க.I.க.வினர் எதை விரும்புகிறீர்கள்? ஆயுதப் புரட்சியையா? ஜனநாயக ஆட்சி மாற்றத்தையா? ஒரு கட்சி ஆட்சியையா? உங்கள் செயல் திட்டம்தான் என்ன?

 13. கருணாநிதியும், பொறுக்கி தின்ன வினவும் என்று எழுத ஆரம்பியுங்களேன்?

 14. உங்கள் எழுத்துகளில் பெரும்பாலும் தேசிய நீரோட்டத்தில் உள்ள இடதுசாரிக்கட்சிகள் என்று கருதப்படும் சிபிஎம் மற்றும் சிபிஐ எதிர்ப்புக் கருத்துகளே பெரிதும் உள்ளன. நானும் ஒரு சிபிஎம்காரன்தான். எங்களைப் போன்றவர்கள் மனம் புண்பட வேண்டும்.., ஆத்திரப்பட வேண்டும்.., நாங்கள் தையாதக்கா என்று குதிக்க வேண்டும்…, என்ற அம்சங்கள்தான் வினவு எழுத்துகளில் தெரிகிறது. உங்கள் வாசகர்களும் நீங்கள் போட்ட கோட்டில் ரோடு போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

  நிச்சயமாக மக்கள் ஏமாளிகள் அல்ல. காலத்திற்கு ஏற்றபடிதான் அவர்கள் முடிவெடுக்கிறார்கள். அடுத்தவரைத் திட்டிதான் பெயர் எடுக்க வேண்டுமென்ற உங்கள் அணுகுமுறை நீண்டகாலத்திற்கு நிற்காது.

  சோசலிசம் என்பது ஒரு மாநிலத்தில் உருவாக்குவதென்பது சாத்தியமில்லை. இந்திய அரசியல் சட்டமும் அதற்கு அனுமதிப்பதில்லை. அப்படி சோசலிசத்தைக் கொண்டு வரவேண்டுமென்றால் அரசியல் சட்டத்தை மாற்ற வேண்டியது அவசியம். உங்கள் ம.க.இ.க இதற்காக என்ன வேலையை செய்து கொண்டிருக்கிறது….?

  இந்த நாட்டைப் பிடித்துள்ள வறுமை, வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட பிரதானப் பிரச்சனைகளுக்கு ம.க.இ.க என்ன செய்துள்ளது…? ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு சிபிஎம்மின் ஆதரவில் இருந்ததால்தான் கிராமப்புற ஏழைகளுக்கு 100 நாள் வேலைக்கான உத்தரவாதம் தரும் திட்டத்தை கொண்டு வர முடிந்தது. அந்தத்திட்டத்தை செயல்படுத்துவதில் முதலிடத்தில் இருப்பது திரிபுராவில் உள்ள இடது முன்னணி அரசுததான்.

  ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மக்களுக்காக செய்யாதது ஏராளம்… ஆனால் சிபிஎம் ஆதரவு அளிக்காமல் இருந்தாலும்தான் அவையெல்லாம் வந்திருக்காதே… உலகம் முழுவதும் நிதி நிறுவனங்கள் தலை குப்புறக் கவிழ்ந்து கிடக்கும்போது, இந்திய வங்கிகள் மட்டும் கம்பீரமாக நிமிர்ந்து நிற்பதேன்… மக்களின் பணம் பாதுகாக்கப்பட்டது எவ்வாறு… நாலரை ஆண்டுகளில் இந்த நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்று திவால் நிலைக்கு கொண்டு செல்லாமல் சிபிஎம் தடுத்ததால்தானே…??

  இதோ தடை நீங்கி விட்டது என்று கிளம்பி விட்டார்களே…

  நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்…??

  • //இடதுசாரிக்கட்சிகள் என்று கருதப்படும் சிபிஎம் மற்றும் சிபிஐ//

   அப்பாடா கனேசு இப்பவாவது ஒத்துகிட்டயே… கருதப்படும் என்பது சரி ஏனென்றால் அவர்கள் கம்மூனிஸ்டுகளே இல்லை

   // பெரும்பாலும் தேசிய நீரோட்டத்தில் உள்ள//

   ஓட்டு பொறுக்குவதர்கு பெயர் தேசிய நீரோட்டமா?? பலே பலே அது சரி நீரோட்டம் இந்த தபா வரண்டு போச்சே!

   //அந்தத்திட்டத்தை செயல்படுத்துவதில் முதலிடத்தில் இருப்பது திரிபுராவில் உள்ள இடது முன்னணி அரசுததான்.//

   ஜெயிச்ச எடத்துலதான் இவங்க வேல செஞ்சாங்களாம்… சரி அப்ப பெங்கால், கேரளாவுல ஒன்னுமே பண்ணலயா?

   // சோசலிசத்தைக் கொண்டு வரவேண்டுமென்றால் அரசியல் சட்டத்தை மாற்ற வேண்டியது அவசியம். உங்கள் ம.க.இ.க இதற்காக என்ன வேலையை செய்து கொண்டிருக்கிறது….?//

   அய்யோ அய்யோ என்ன கொடுமை சரவணன் இது…? இப்ப உங்க கட்சியில சட்டப்படி புரட்சி பண்ண கத்துக்கொடுக்கறாங்களா? அப்ப அந்த சட்டம் எத்தனாம் தேதி வரும்

   கனேசு நீங்க உங்க சக பாடிகளான போலி விடுதலை, சந்திப்பு, ரமேசு பாப்பு, மாதவராசு, இன்னபிற பார்ட்டிகளிட்ம சென்று ‘அறியாமையை/துரோகத்தை/பொறுக்கி தின்பதை அலங்கார வார்த்தைகளுக்குள் ஆர்பாட்டமாக மறைப்பது எப்படி’ என தெரிந்து கொண்டு வாருங்கள். இங்கே கடை 24 அவர்ஸ் ஓப்பன்… எனி டைம் விவாதம் பண்ணலாம்

   பி.கு : மக்கள் வச்ச ஆப்ப சந்திப்பு, விடுதலையெல்லாம் இன்னமும் எடுக்கலையா? ஆளையே காணோம்….

   • ஒரு திரைப்படத்தில் பேருந்து நின்று விடும். நடத்துனராக இருக்கும் வடிவேலு அனைவரையும் இறங்கித் தள்ளச் சொல்வார். அனைவரும் இறங்கித் தள்ளிக் கொண்டிருப்பார்கள். ஒரே ஒருவர் மட்டும் கொஞ்சம் தள்ளி நின்று கொண்டு “தள்ளு… தள்ளு…” என்று கத்திக் கொண்டிருப்பார். அதைப்போலத்தான் இருக்கிறது இந்த அர டிக்கெட்டு. நீங்க என்ன செஞ்சீங்கப்பா என்றால், கிய்யா…மிய்யான்னு கத்துதே…

    உலகம் முழுவதும் வங்கிகள் திவாலாகின. அமெரிக்கா போன்ற நாடுகளில் மக்களின் சேமிப்புகள் ஏப்பம் விடப்பட்டன. இத்தகைய நிலை இந்தியாவில் வராமல் இருந்ததற்கு அது பொதுத்துறையாக இருந்ததுதான். அத்தகைய பொதுத்துறை என்ற நிலையைக் காலி செய்யாமல் இருக்க ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு கடிவாளம் போட்டது சிபிஎம்தான். இல்லையென்றால் எத்தனையெத்தனை நடுத்தர, ஏழை மக்களின் வாழ்நாள் சேமிப்புகளே பறிபோயிருக்கும்…

    மீண்டும் கேள்வியை எழுப்பாமல் இருக்க முடியவில்லை…??

    இந்த விஷயத்தில் நீங்கள் என்ன செய்தீர்கள்…???

    பி.கு. : பொதுவாக அப்படிப் சொல்லப்படுவதால்தான் “கருதப்படும்” என்ற வார்த்தையைப் போட்டேன்… இவை இரண்டும் மட்டுமல்ல என்பதுதான் எனது கருத்து. நக்சல்பாதையே சரி என்று சொல்லிய பல அமைப்புகள் மீண்டும் மக்களோடு இணைந்து இயங்க வந்துள்ளன. அவற்றையெல்லாம் தேசிய நீரோட்டத்தில் இல்லை என்று கூறி விட முடியாது. அத்தகைய அமைப்புகளில் ஒன்றான சிபிஎம்(எம்.எல்.)லிபரேசன், இம்முறை சிபிஎம் மற்றும் சிபிஐ கட்சிகளுடன் இணைந்து பீகாரில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

 15. மாதவராஜ் என்ற சிபிஎம் நபர் தனது தளத்தில் பிரசூரிக்க மறுத்த பின்னூட்டம். லீனாவுக்கே மட்டுமே கருத்துரிமை உண்டு என்று சொல்கிறார் இந்த நல்லவர்.

  நீறுபூத்த நெருப்பு

  http://mathavaraj.blogspot.com/2009/08/blog-post_03.html

  @@@
  //“குண்டுகளினால் இறப்பது என்றாலும் பரவாயில்லை, இண்டிகோ விதைகளை இந்த மண்ணில் தூவ விட மாட்டோம்” என ஒரு விவசாயி சொன்னார்.//

  நந்திகிராம், லால்கர் வரலாறுகளும் இவ்வாறுதான் பிற்காலத்தில் பெருமையுடன் படிக்கப்படும். அப்பொழுது மாதவராஜின் ‘முதலாளித்துவ கொழுப்பு’ வரலாற்று கசடுகளாக காணமல் போயிருக்கும்.

  மாதவராஜின் ‘முதலாளித்துவ கொழுப்புகள்’ – மதவராஜின் பதிவு ஒன்றில் அவர் சிபிஎம் லால்கரில் செய்தது போன்ற நடவடிக்கைகளை காங்கிரசு செய்கிற பொழுது விமர்சிக்கப் பயன்படுத்திய வார்த்தை இது.

  //உலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடேமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்…வாருங்கள்.///

  இது தனது அறிமுகப் பகுதியில் மாதவராஜ் எழுதியுள்ளது. இதை மேற்கு வங்கத்தில் மட்டும் சிறிது மாற்றி எழுதுவார் திரு. மாதவராஜ் அவர்கள்.

  மேற்கு வங்கத்தை புரட்டும் நெம்புகோல் டாடா மற்றும் டௌ கெமிக்கல்ஸிடமே உள்ளது என்று நம்புகிற – வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளை மக்களுக்கு சுமக்கக் கொடுக்கிற – ஒரு ‘மனிதனின்’ பக்கங்கள் இவை. புரட்டலாம்…வாருங்கள்.
  @@@

  இந்தப் பின்னூட்டங்களை தின்று செரித்து விட்டீர்களா கருத்துரிமை காவலாளி மாதவராஜ்?

  லீனாவுக்கு மட்டும்தான் கருத்துரிமை கொடுப்பீர்களோ?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க