தத்தின் பேரால் கலவரங்களில்
மரித்து போனவர்களின்
சாம்பல்கள் சொல்லும்.,
காற்றில் கரைந்த
இந்திய சுதந்திரத்தை…!

பாலியல் சீண்டல்களால்
பாதிப்புக்கு உள்ளான
மல்யுத்த வீரர்களின்
கனவுகள் சொல்லும்.,
ஒலிம்பிக்கில் பறிபோன
இந்திய சுதந்திரத்தை…!

தகுதித் தேர்வுகளால்
கனவுகள் பறிபோன
மாணவர்களின் கடைசி மூச்சு
சொல்லும்.,
கல்வி கார்ப்பரேட்மயமான
இந்திய சுதந்திரத்தை…!

420 எல்லாம் இணைந்து
370-யை நீக்கிய போது
காஷ்மீரிகளின் உரிமைகள்
சொல்லும்.,
அம்பானிகளிடம் தாரைவார்க்கப்பட்ட
இந்திய சுதந்திரத்தை…!

பட்ஜெட்டில் அதிக நிதி
ஒதுக்கப்பெற்ற இராணுவத்தின்
துப்பாக்கி முனை சொல்லும்.,
காடுகளிலிருந்து விரட்டப்படும்
பழங்குடிகளின்
இந்திய சுதந்திரத்தை…!

மருத்துவமனையில் உறங்கும் வேளையில்
பலாத்காரம் செய்து
சிதைக்கப்பட்ட
மருத்துவரின் உடல் சொல்லும்.,
ஆணாதிக்க வெறியின்
இந்திய சுதந்திரத்தை…!

இத்தனை சுதந்திரத்தை
உலகுக்குச் சொல்லாமல்
எப்படி கடப்பது இந்த தினத்தை…

நினைவில் கொள்ளுங்கள்,
பாசிச சக்திகளே…
நீங்கள் கொடிமரத்தில் ஏற்றுவது என்னவோ
தேசியக் கொடியைத்தான்…
ஆனால் அதன் சுருக்கில் தொங்குவது
எங்களின் இன்னல்பட்ட
உரிமைகள்…


திருச்செங்கோடு காயத்ரி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க