78வது சுதந்திரத்தை கொண்டாடுங்கள் !
வீடுதோறும் தேசியக் கொடியை ஏற்றுங்கள் என்கிறார்கள்!
எதற்காக?
ஜனநாயகம் பூத்துக் குலுங்குகிறது என்பதற்காகவா?
யாருக்கு சுதந்திரம்?
நாசகார ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டும் என போராடிய தூத்துக்குடி மக்களை சுட்டுக் கொன்ற போலிஸ் மற்றும் அதிகாரிகள் மீது ஒரு குற்றவழக்கு கூட பதிவு செய்யப்படாமல் சுதந்திரமாக இருக்கிறார்கள் ?
மீன் கழிவு ஆலையால் பாதித்த பொட்டலூரணி கிராம மக்கள் நல்ல சுவாசத்திற்காக 3 வருடமாக போராட்டம் நடத்திக் கொண்டு இருக்கிறார்கள் ?
பரந்தூர் மக்களின் கழுத்துக்கு மேலே கத்தியை தொங்கவிட்டிருக்கிறாரக்ள் கார்ப்பரேட்டுகள்!
படிக்க : ஆகஸ்ட் 17 | கலந்தாய்வரங்கம் – நூல் வெளியீடு | மாணவர்களிடையே பிரச்சாரம் | புமாஇமு
மனதில் மட்டுமல்ல, இதோ 21ஆம் நூற்றாண்டிலும் தீண்டாமைச் சுவர் இம்மண்ணில் நீடிக்கத்தான் செய்கிறது. இதற்கு எதிராகவும், சாதியின் பெயராலும் அரசு நிலத்தை ஆக்கரமித்த ஆதிக்க சாதியினரினடமிருந்து நிலத்தை மீட்கவும் போராடி கொண்டு இருக்கும் சங்கரலிங்கம்புரம் விளாத்திகுளம் மக்கள்!
கண் தெரியாவர்கள், நடக்க முடியாதவர்களுக்கு அரசு கொடுத்த நிலத்தை தனிநபர்கள் ஆக்கிரமித்து அவர்களின் எதிர்காலத்தை இருட்டில் தள்ளுகிறார்கள்!
தலைநகர் டெல்லியில் ஷோ காட்டும்
போர்க்கப்பலும், ராணுவப் படைகளும், ராக்கெட்டுகளும் இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் போது இங்கே திரும்ப மறுப்பது ஏன் ?
தன் மருத்துவ அறிவினால் மக்கள் பணி செய்ய வந்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார். மருத்துவ சமுதாயம் வீதியில் இறங்குகிறது.
படிக்க : 78 வது ‘சுதந்திர’ தினம்: இந்தியா சுதந்திரத்திற்காக அழுகிறது!
பதக்கம் வாங்கித் தந்து பெருமை சேர்த்த வீரமங்கைகள் பாலியல் சீண்டல்களுக்கு உள்ளாகிறார்கள். களத்தில் மட்டுமல்ல, போராட்டக் களத்திலும் உறுதியாய் நின்றார்கள். எதிர்த்து நிற்கும் துணிவின்றி முதுகில் குத்தி வெளியே ஊள்ளுகிறது பாசிசத்தின் அதிகாரம்!
குடிக்கும் தணணீரில் மலத்தை கலக்கிறது சாதியம்! ஈராயிரம் ஆண்டுகாலமாக கொக்கரிக்கிறது பார்ப்பனியம்!
இதில் எங்கே வருகிறது சுதந்திரம்.. கொடி ஏற்றிக் கொண்டாட..
உண்மையான சுதந்திரத்திற்காக
மக்களுக்கு அதிகாரம் வழங்க கூடிய
பாசிச எதிர்ப்பு ஜனநாயக குடியரசு நோக்கி பயணிப்போம் !
பதிவு
மக்கள் அதிகாரம்
நெல்லை மண்டலம்
9385353605