ஆகஸ்ட் 17 | கலந்தாய்வரங்கம் – நூல் வெளியீடு | மாணவர்களிடையே பிரச்சாரம் | புமாஇமு

கல்வித் தளங்களில் மாணவர்களின் பிரச்சினைகள் – தீர்வுகள்
மாநில அளவிலான மாணவர்கள் கலந்தாய்வரங்கம் மற்றும் நூல் வெளியீடு

வருகிற ஆகஸ்ட் 17 ஆம் தேதி அன்று மக்கள் கல்விக் கூட்டியக்கத்தின் சார்பாக மாணவர் அமைப்புகளை இணைத்து “கல்வி தளங்களில் மாணவர்களின் பிரச்சனைகள்-தீர்வுகள்”என்ற தலைப்பில் கலந்தாய்வரங்கம் சென்னை நிருபர்கள் சங்கத்தில் நடைபெற இருக்கிறது.

இந்நிகழ்விற்கு மக்கள் கல்விக் கூட்ட இயக்கத்தின் சார்பாக போடப்பட்ட துண்டறிக்கையை ஆயிரக்கணக்கில் கல்லூரி மாணவர்களிடத்தில் புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பு குழு சார்பாக பிரச்சாரம் செய்யப்பட்டது.

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு. 94448 36642

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க