தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில்…
என்று ‘அறம்’ பாடியவருக்கு
துணை பாடியவர்களே..
இதோ…
ஊருக்கே சோறு போடும் விவசாயி பட்டினிப் போராட்டம் நடத்துகிறான்!
என்ன செய்யப் போகிறீர்கள்?
எல்லையில் நிற்கும் இராணுவத்தாரே
உம் எல்லைக்குள் நடக்கிறது
ஓர் வீரம் செறிந்த போராட்டம்
தேசம் காக்க…
இப்போது சொல்லுங்கள்..
எது தேசம் என்று?
தன் பசி
தாய் அறிவாள் என
கண் அயரும் உன் பிள்ளை!
உன் பசியும் சேர்த்துணர்ந்த விவசாயி.. அவர் கண்ணில் இன்று
உறக்கமில்லை தாயே!
நீ என்ன செய்யப் போகிறாய்..
விதவிதமான உணவுகள்
ரகரகமான உணவகங்கள்
ருசியின் பேரிரைச்சலில் அமுங்கிப் போகிறது..
பட்டினியில் ஊண் உருகும் சத்தம்!
படைத்தளித்தவனுக்கு என்ன நீதி தரப்போகிறாய்?
காவிரியைத் தடுத்து..
கங்கையில் சாக்கடை கலந்து ‘புனிதமாக்கி’..
கார்ப்பரேட்டுக்காக கழுத்தறுக்கும்
காவிக் கூட்டம்!
விவசாயிகளின் உயிர்பிரிவது
உன் நிலத்தில்!
அநீதிகள் நடப்பது
உன் கண்ணெதிரில்!
இவற்றில் உனக்கு சம்மதமா ?
எந்த வர்க்கப் பிரச்சனையானாலும்
தன் சொந்த வர்க்கப் பிரச்சனையாய்..
களத்தில் நிற்கும் விவசாய வர்க்கம்!
தானியக்களம் தாண்டி
போர்க்களம் புகுந்திருக்க..
எதிர்க்கட்சிகள் திகைத்திருக்க..
எதிரியில்லையெனக் கொக்கரித்த பாசிசத்தின் முகத்தில்
குத்து விட்டு நிமிர்ந்தெழுந்த
தேசத்தின் முதுகெலும்பு!
தாய்நிலத்தில் படர்ந்திருக்கும்
பாசிசத்தைக் கிழித்தெறியக் கிளம்பிய தேசத்தின் முன்னத்தி ஏர்!
விவசாய வர்க்கத்துடன்
கரம் கோர்த்துக் களமிறங்கு!
பாசிச எதிர்ப்புப் போரில்
ஒரு வர்க்க ஆயுதம் ஏந்து!
செங்குரல்
பதிவு
மக்கள் அதிகாரம்
நெல்லை மண்டலம்
9385353605
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
எந்த வர்க்கப் பிரச்சனையானாலும்
தன் சொந்த வர்க்கப் பிரச்சனையாய்..
களத்தில் நிற்கும் விவசாய வர்க்கம்!
உண்மையை உரத்துக் கூறும் சிறந்த வரிகள். பாசிசத்தை வீழ்த்துவதில் விவசாயிகள் தான் முன்னத்தி ஏர். பாசிசத்தால் ஒடுக்கப்படும் எல்லா வர்க்கங்களுக்கும் தெளிவான பாதை காட்டுகிறார்கள்.
பாசிச இருட்டைக் கிழித்து கோடான கோடி மக்களுக்கு வெளிச்சத்தைப் பாய்ச்சுகிறார்கள்.
அரசியல் கூர்மையும், வர்க்க உணர்வும் கவிதையில் தெறிக்கிறது தோழரே…
புரட்சிகர வாழ்த்துக்கள்… உங்களிடமிருந்து உழைக்கும் மக்கள் சார்பாக செங்கவிதைகளை தொடர்ச்சியாக எதிர்பார்க்கிறோம் …