மீண்டும் அழைக்கிறது காசா! | கவிதை

மீண்டும் அழைக்கிறது காசா!

ன்னும் என்ன எஞ்சியிருக்கிறது காசாவில்!
குண்டு பிளந்த கட்டடங்கள்
எலும்புக் குவியல்கள்
இரத்தக் கவிச்சி வீசும்
மண்ணைத் தவிர..

ஆயினும்..
அவர்கள் வருகிறார்கள்
பாட்டுப்பாடி!
மேளம் தட்டி!

இறுதியாக நாம் மீண்டும் வந்தோம்
(Finally we return)
இதுவே இன்றைய காசாவின்
நம்பிக்கை குரல்!

விடுதலையின் ராகம் புரியாதவர்கள்
இடிபாடுகளின் சத்தங்களையே
இன்னும் கேட்கிறார்கள்!

உயிருக்குப் பயந்தவர்களே
பாசிசத்தின் துப்பாக்கி முனைக்கு அஞ்சுகிறார்கள்!

பாலஸ்தீனத்தின் வீரமிகு மக்கள் மீண்டும் நுழைகிறார்கள் காசாவிற்குள்!
தழுவிக் கொள்ளக் காத்திருக்கிறது
தாய் நிலம்!

இடிபாடுகளுக்கிடையில்
இன்னும் மிச்சமிருக்கிறது நம்பிக்கையின் வேர்!

பாலஸ்தீனத்தை விடுதலை செய்யக்
காத்திருக்கிறது வரலாறு!


செங்குரல்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க