Saturday, June 10, 2023
முகப்புமருத்துவக் காப்பீடு திட்டம்: மு.க.வின் கருணையா? நரித்தனமா?
Array

மருத்துவக் காப்பீடு திட்டம்: மு.க.வின் கருணையா? நரித்தனமா?

-

தமிழக-அரசின்-மருத்துவக்-காப்பீடு-திட்டம்-மு.க.வின்-கருணையா-நரித்தனமா

vote-012ஐந்தாம் முறையாக ஆட்சிக் கட்டிலில் ஏறியுள்ள கருணாநிதியின் ‘பொற்கால’ ஆட்சியின் சாதனையாக “உயிர்காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம்” எனும் புதியதொரு திட்டத்தை தற்போது தமிழக அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. “நுரையீரல் புற்றுநோயாளிக்கு மதுரை தனியார் மருத்துவமனையில் இலவச சிகிச்சை” என்றும் “சென்னை தனியார் மருத்துவமனையில் 15 வயது சிறுமிக்கு மூளைக்கட்டி இலவசமாக அகற்றப்பட்டது” என்றும் தினசரிகளில் செய்திகள் வந்து குவிகின்றன.

தமிழக அரசின் 26 நல வாரியங்களின் உறுப்பினர்களும் அவர்களின் குடும்பத்தினரும் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறலாம் என்றும், இதன் மூலம் ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்குக் குறைவாக உள்ள மக்களில் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் பயனடைவார்கள் என்றும் இத்திட்டம் கூறுகிறது. ஒவ்வொரு பயனாளிக்கும் ஸ்மார்ட் கார்டு (கிரெடிட் கார்டைப் போன்ற) ஒன்று வழங்கப்படுமாம். மாநிலமெங்கும் அரசு ஊழியர்கள் முகாம்களை நடத்தியும், வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பு நடத்தியும், நல வாரியங்கள் எவற்றிலும் உறுப்பினராக இல்லாத பயனாளிகளை அடையாளம் கண்டு இத்திட்டத்தில் சேர்ப்பார்களாம்.

“ஸ்டார் ஹெல்த் அன்ட் அலைடு இன்சூரன்சு” என்ற பன்னாட்டு காப்பீடு நிறுவனத்திடம் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்நிறுவனம் பட்டியலிட்டிருக்கும் தனியார் மருத்துவமனைகளில் அரசு ஊழியர்களுக்கு 4 ஆண்டு காலத்திற்கு இரண்டு லட்சம் ரூபா வரைக்கும் சிகிச்சை தரப்பட உள்ளது. இதற்காக ஒவ்வொரு அரசு ஊழியரிடமும் மாதாமாதம் ரூ.50-ஐ வசூலித்து காப்பீட்டு நிறுவனத்துக்கு இத்தொகையை அரசு வழங்கும். இதன் மூலம் காப்பீட்டு நிறுவனத்துக்கும், தனியார் மருத்துவமனைகளுக்கும் நிரந்தர வருவாயை அரசு உறுதிப்படுத்தியுள்ளது. சிகிச்சை பெற வரும் மக்களிடம் ஒட்டக் கறந்துவிடும் தனியார் மருத்துவமனைகள் திடீரெனக் கருணை பொங்க ‘இலவசமாக’ சிகிச்சை சேவதன் பின்னணி இதுதான்.

இத்திட்டத்தின்படி ஏழைக் குடும்பம் ஒவ்வொன்றுக்கும்  அரசே ஆண்டொன்றுக்கு ரூ.500 வீதம் காப்பீடு தொகையாக ஸ்டார் காப்பீட்டு நிறுவனத்துக்குச் செலுத்தி வரும். சென்ற ஜூலை மாதம் சென்னையில் நடந்த இதற்கான தொடக்கவிழாவில் இவ்வாண்டின் முதல் காலாண்டு பிரீமியமாக ரூ.130 கோடியை ஸ்டார் ஹெல்த்  நிறுவன அதிகாரிகளிடம் கருணாநிதி வழங்கினார்.

உலகின் தலைசிறந்த மருத்துவ நிபுணர்கள், தமிழ்நாட்டு அரசு மருத்துவக் கல்லூரிகளில் உருவாக்கப்படுகிறார்கள். தலைசிறந்த மருத்துவர்களாக இருக்கும் அரசு மருத்துவர்களைக் கொண்டு மக்களுக்குத் தரமான சிகிச்சை அளிக்காமல் தனியார் மருத்துவமனைகளிடம் அதனை ஒப்படைத்தது ஏன் என்ற கேள்விக்கு, “முதலமைச்சரின் மருத்துவ நிதி உதவி பெற விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஏழைகளுக்கும் தரமான சிகிச்சை கிடைக்கவேண்டும். எனவேதான் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது” என்று அரசு காரணம் ல்கிறது.

ஆண்டுதோறும் இத்திட்டத்திற்கு அரசு வழங்கப்போகும் தவணைத் தொகை மட்டும் ரூ.517 கோடிகளாகும். அதே நேரத்தில், மதுரை அரசு மருத்துவமனையை அனைத்திந்திய மருத்துவ விஞ்ஞான கழகம் (எம்ஸ்) தரத்திற்கு உயர்த்தப் போவதாக அறிவித்து அரசு ஒதுக்கியுள்ள தொகையோ ரூ. 150 கோடிகள்தான். இதன்படி பார்த்தால், காப்பீடுக்குத் தனியாரிடம் ஒவ்வோராண்டும் போய்ச்சேரும் பணத்தைக் கொண்டு மூன்றுக்கும் மேற்பட்ட நவீன உயர்தர மருத்துவமனைகளைக் கட்டி விடமுடியும்.

அரசு மருத்துவர்களோ, “சென்னை அரசுப் பொது மருத்துவமனையில் இருக்கும் 30 அறுவைசிகிச்சை மையங்களில் 25 மையங்கள் தினமும் காலை 8 முதல் மதியம் 2 வரை மட்டுமே இயங்குகின்றன. 24 மணி நேரமும் இயங்குபவையோ அவற்றில் வெறும் ஐந்துதான். இவற்றை முறைப்படுத்தி 24 மணிநேரமும் இயங்குபவையாக மாற்ற எந்த நடவடிக்கையும் இல்லை” என்று புலம்புகின்றனர். ஏற்கெனவே இருக்கும் அரசு மருத்துவமனைகளின் உள்கட்டமைப்பையும் நிர்வாகத்தையும் சீரமைத்தாலே தரமான சிகிச்சையினை அரசே தரமுடியும் என்றும் மருத்துவர்கள் ல்கின்றனர்.

ஆனால் இதனைச் சேயாத அரசோ, கருணாநிதியின் திட்டத்தில் இடம்பெற்றுள்ள இதயநோக்கான பலூன் வால்வு சீரமைப்பிலும் இதய வால்வு சீரமைப்பிலும் நிபுணத்துவம் மிக்க சென்னை ரயில்வே மருத்துவமனையை தனியாருக்குத் தாரைவார்த்துத் தரும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. அதில் முதல்கட்டமாக, ரயில்வே மருத்துவமனையையும் தனியாரையும் சேர்த்து மருத்துவக்கல்லூரி தொடங்க முடிவு செய்துள்ளது.

மருத்துவ சேவையை தனியார்மயப்படுத்தினால் ஏற்படும் பேரவலத்துக்கு அமெரிக்கா சரியான முன்னுதாரணமாகும். அங்கு மருத்துவம் முழுக்க தனியார் காப்பீடு நிறுவனங்களின் பிடிக்குள் இருப்பதால், காப்பீடுத் தவணை செலுத்த முடியாத ஏழைகளுக்கு மருத்துவ சேவையே முற்றிலும் மறுக்கப்படுகின்றது. காப்பீடு நிறுவனங்களின் கொள்ளையால் அங்கு 5 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் மருத்துவ சிகிச்சை பெறமுடியாமல் அவதிப்படுகின்றனர்.

இந்தியாவும் அதே பாதையில் உலகவங்கியின் வழிகாட்டுதலின் கீழ் “அனைவருக்கும் ஆரோக்கியம்” எனும் சுகாதாரக் கொள்கையை 2002-ஆம் ஆண்டு அறிவித்து, அதன்படி மருத்துவ நலத்திட்டங்களில் அரசின் பங்களிப்பைக் கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து வருகிறது. தனியாரின் காப்பீடுத் திட்டத்திற்குள் பொது மருத்துவத்தைத் தள்ளிவிட உத்தரவு போட்டிருப்பது, உலகவங்கி. அதற்கு தனது பெயரைச் சூட்டியிருப்பதுதான், கருணாநிதியின் மூளை.

தொடக்கவிழாவில் பேசிய கருணாநிதி, கோபாலபுரத்தில் இருக்கும் அவரின் வீடு, அவரின் மரணத்திற்குப் பின்னர் இலவச மருத்துவமனையாக மாற்றப்படும் என்று அறிவித்துள்ளார். மருத்துவத்தைத் தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டங்கள் எதிர்ப்பே இன்றி நடைமுறைப்படுத்தப்படுமானால், அவருக்குப் பின், சென்னையில் கருணாநிதி வீடு ஒன்றில் மட்டும்தான் இலவச மருத்துவம் கிடைக்கும்.

இப்போதைக்கு கருணாநிதியின் காப்பீடுத் திட்டம், ஏழைகளிடமிருந்து கட்டணம் ஏதும் வசூலிப்பதில்லை. ஆனால் அரசின் நேரடி மருத்துவ சேவைகள் படிப்படியாக ஒழிக்கப்பட்ட பின்னர், அனைத்துத் தரப்பினரையும் தனது வியாபார வலைக்குள் காப்பீடு நிறுவனம் வீழ்த்தத் தொடங்கும். அதன் பிறகு மருத்துவக் காப்பீடு வைத்துள்ளவர்கள் மட்டுமே நோக்குச் சிகிச்சை பெற முடியும் ஆபத்தான நிலை உருவாகும்.

சேமநல அரசினை இலாபகரமாக இயங்கும் அரசாக மாற்றுதல் எனும் போக்கைத் தாராளமயமும் தனியார்மயமும் துரிதமாகச் செயல்படுத்தி வருகின்றன. இந்த அயோக்கியத்தனம் மக்களிடம் அப்பட்டமாகத் தெரிந்துவிடாதிருக்க அதற்குச் சில பூச்சுவேலைகளும் கவர்ச்சியான பெயர்களும் தேவைப்படுகின்றன. ஓட்டுப்பொறுக்கும் அரசியலுக்கு இந்தக் கவர்ச்சியும் தேவையாக இருக்கின்றது. இப்போதைய எதிர்க்கட்சி அடுத்தமுறை ஆளும்கட்சியாகும்போது, இதே திட்டத்தை மாற்றமின்றி செயல்படுத்தும் என்பதால் எந்த எதிர்க்கட்சியுமே இத்திட்டத்தை தீவிரமாக எதிர்ப்பதில்லை.

இத்திட்டத்திற்கு தமிழக அரசு தேர்ந்தெடுத்துள்ள “ஸ்டார் ஹெல்த்” நிறுவனம்தான் “ஆரோக்கியஸ்ரீ ” எனும் பெயரில் ஆந்திர அரசோடு கைகோர்த்துக் கொண்டு, வாரங்கல் மாவட்டத்தில் சில பினாமி மருத்துவமனைகளை உருவாக்கி, அறுவை சிகிச்சையே தேவைப்படாத பெண்களுக்கும்கூடக் கருப்பைகளை அகற்றிப் பல கோடிகளைச் சுருட்டியிருக்கின்றது.

கருணாநிதியின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் பயனாளிகளுக்கு 4 ஆண்டுகளுக்கு அதிகபட்சமாக ஒரு லட்சம் வரை மட்டுமே செலவிடப்படும். ஆனால், இன்றைக்கு இதய அறுவை சிகிச்சை மட்டும் ஒன்றரை இலட்சத்தில் இருந்து இரண்டு இலட்சம் வரை செலவு பிடிக்கக் கூடியதாக உள்ளது. இத்திட்டம் பட்டியலிட்டிருக்கும் 150 தனியார் மருத்துவமனைகளில் சென்னையில் மட்டும் 63 உள்ளன. காச்சல், இருமல் என்று போனாலே எக்ஸ்-ரே, எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்க வைத்து குறைந்தது ரூ 5 ஆயிரத்தைக் கறந்து விடக்கூடிய லைஃப் லைன் மல்ட்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையும், அப்பல்லோவை விட அதிகமாகப் பணம் பறிக்கும் பில்ரோத் மருத்துவமனையும் கொலைகார – கொள்ளைக்கார மருத்துவமனைகளாகப் புகழ் பெற்றுள்ள ஓசூரின் அகர்வால், அசோகா, விஜய் முதலானவையும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

ஓவுபெற்ற அரசு ஊழியர் ஒருவரின் புற்றுநோ சிகிச்சைக்கென அடையாறு புற்றுநோ மருத்துவமனை அண்மையில் ரூ.2 லட்சத்து இருபதாயிரத்தைக் கோரியிருந்தது. ஆனால் காப்பீடுத் திட்டம் அவருக்கு அனுமதித்ததோ ஒரு லட்சத்து இருபதாயிரம்தான். அவர் முழுப் பணத்தையும் மருத்துவமனையில் முதலிலேயே கட்டிவிடுமாறும், இத்தொகையை அவருக்கு ஆறு தவணைகளில் பிரித்துத் தருவதாகவும் காப்பீடு நிறுவனம் கூறியது. இதற்கு எதிராக வழக்குத் தொடுக்கப் போவதாக அவர் எச்சரித்த பிறகுதான், அந்நிறுவனம் இறங்கி வந்து காப்பீடு தொகையை ஒரே தவணையில் தரச் சம்மதித்திருக்கிறது. விவரம் தெரிந்தவர்களையே மொட்டையடிக்கப் பார்க்கும் காப்பீடு திட்டம், சாமானியர்களை என்ன பாடுபடுத்துமோ! ஆரம்பமே இப்படி அமர்க்களமாக இருப்பதிலிருந்தே, இத்திட்டம் மக்களைக் காக்குமா, அல்லது காப்பீடு நிறுவனங்களைக் காக்குமா என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

-புதிய ஜனநாயகம், செப்டம்பர்’2009

புதிய ஜனநாயகம் செப்டம்பர் 2009 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

vote-012

தொடர்புடைய பதிவுகள்

  1. The transliteration isn’t working. So I am doing it in English. I commend the writer for producing an excellent report on what is essentially the outsourcing of the management of health care to private insurance companies. Tamil Nadu is proceeding thoughtlessly down the path dictated by IMF & World Bank. These corrupt politicians are NOT capable of running anything properly, not schools, not hospitals……, except Chemmozhi Maanaadu when a minister is not allowed to speak in Tamil in the Indian Parliament! There should be a state-wide, if not a nation-wide, campaign to raise the awareness of the people as to how they are going to be enslaved by private insurance companies working with private service providers (hospitals, pharmacies, ambulances, etc.) and intermediaries (politicians and government officials).. The sorry state of US health care is a good warning.

  2. Somebody told Star Health Insurance 30% of shares going to Kanimozhi. இதில் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.இதைபற்றியும் எழுதுங்கள் வினவு அவர்களே.

  3. வினவு, கலைஞரின் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் மிகப் பெரிய விஞ்ஞான ஊழலுக்கான சாத்தியங்கள் அதிகம் என்று பலரும் கருத்துச் சொல்லி வருகின்றனர். இந்தியாவிலேயே இதுவரைக்கும் இல்லாத ஊழல் ஸ்பெக்ட்ரம் ஊழல். மிகவும் புத்திசாலித்தனமாக நடத்தப்பட்ட ஊழல் அது. சாட்சிகளை தேடி நிரூபித்து கண்டுபிடிப்பது குதிரைக் கொம்பு. நாளடைவில் இவ்வழக்கு கைவிடப்படும். அதே போன்று தான் மருத்துவக் காப்பீட்டு திட்டமும் இருக்கும். கோடீஸ்வரக் கோமான்கள் கூடிக் கொள்ளை அடிக்க ஏதுவாய் ஒரு கல்லில் மூன்று மாங்காய் அடிக்கும் திட்டம் தான் இது.

  4. அரசு மருத்துவமனைக்ளை தரம் பி¡¢த்து, பணம் முழுவதும் அதன் வசதி மேம்பாட்டுக்கு செலவுசெய்தால் எலலாம் இலவசம்.இதில் வருமான உச்சவரம்பு வராது.தொடர’ செலவு கிடையாது.பயண் ச்சிலவு குற்வுஅரசு மருத்துவர்களை ஊக்குவிக்கலாம்.இத்ன் பின்புலம்,புஜபலம் பெர்தாக் இருக்கும் போது கருத்து ச்சொல்வது மருத்துவ செலவுக்கு அதிக் பண்ம் செலவாகும்

  5. காசு வீசி தனியாரை வளர்க்கும் காப்பீட்டுத் திட்டம்
    அரசு மருத்துவமனையில் ஆரம்ப சுகாதாரம் மட்டுமே
    என நிறுவும் திட்டம்

    கலைஞருக்கு முன்பு ஆந்திராவில் ரெட்டி செய்தார்.
    அதற்கு முன் அமெரிக்கர செய்தது.

    ஏன் இது போன்ற திட்டங்கள்

    அதிகரித்து வரும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நவீன வசதி கொண்ட தனியார் மருத்துவமனைகள் இவர்களுக்கு தீனி போட ஏழைகளும் தேவைபடுகின்றன. அரசியல்வாதிக்கு எழைக்கு எட்டர்க் கனியல்ல தனியார் மருத்துவம் எனும் மாயை உருவாக்க இத் திட்டம்.

    கடமை, கண்ணியம் கட்டுப்பாடு கொள்கைகளை கைவிடும் திட்டம்.

    ஆம் அரசு தன் கடமையை கைகழுவி, தனியாரை ஊக்குவிக்கும் திட்டம். வளர்ந்து வரும் மக்கள் தொகை, சுருங்கி வரும் அரசு மருத்துவர்கள், மருத்துவ மனைகள், புதிய நோய்கள், புதிய கருவிகள், புதிய பணக்காரர்கள்.

    நாலணா கொடுத்து எட்டணா புடுங்கும் திட்டம். சில மருத்துவங்களுக்கு ரூ. 25000 மட்டும் அனுமதி. அதிகமாகும் தொகையை பயனாளி செலுத்த வேண்டும்

    காப்பீடு நிறுவனம் மற்றும் அரசின் இலக்கு முதலாண்டில் ஒரு லட்சம் நபர்கள் ஆனால் உண்மையில் பயனாளிகள் பத்தாயிரத்தை தாண்டுவது சந்தேகம். ஒருவேளை ஒரு லட்சம் பேரும் தனியார் மருத்துவமனையை படையெடுத்தால் காப்பீட்டு நிறுவனம் திவால். அரசு திவால், ஆனால் காப்பீட்டிற்காக தனியாருக்கு அளிக்கும் பணத்தை அரசு இப்படி செலவழித்தால்

    1, புதிய மருத்துவரை நியமித்தல்
    2. புதிய மருத்துவமனை தொடங்குதல்
    3. புதிய கருவிகள் வாங்குதல்
    4. மருந்துகளை மலிவு விலையில் பெறுதல்
    5. அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவ கல்லூரிகளை தொடங்குதல்

    நடக்குமா?

    ஸ்டார் நிறுவனம் வளருமா?

    நீங்களே சொல்லுங்கள்

      • முதல்வரை தேர்ந்தெடுக்க வாக்களிக்கும் உங்களாலும் முடியும். இதுவரை வாக்குச்சாவடிக்கே செல்லாத என்னாலும் மாற்றத்தை கொண்டுவர முடியும் உங்களைப் போன்றோர் ஆதரவு அளிக்க முன்வரும் பட்சத்தில்

  6. இத்திட்டம் ஊழலுக்களு வழி வகுக்கும் என்பது உண்மைதான். ஆனால் அமெரிக்க மருத்துவ துறை போல மாற வாய்ப்பில்லை. (அமெரிக்க அமைப்பு மிக மிக சிக்கலானது, புரிந்துகொளவது கடினம். ஆனால் கனடா, மே.அய்ரோப்பா நாடுகளில் பொது மருத்துவ சேவை சிறப்பாகவே செயல்படுகிறது. அமெரிக்காவில் தான் சிக்கல்).

    அரசு மருத்துவ துறைக்கு, பல ஆயிரம் கோடிகள் ஆண்டு தோரும் கொட்டப்படுகிறது. (இன்னும் அதிகரிக்கப்பட வேண்டும்). ஆனால் பெரிய பயன் இல்லை. ஏன் ? அடிப்படை காரணம் அரசு ஊழையர்களின் மொத்தனம் மற்றும் ஊழல். lack of accountabiltiy and responsibilty and work ethics ; ஏழைகள் கூட முடிந்த வரை தனியார் மருத்துவமனைகளை நாட முயல்கின்றனர். ஏன் ? அரசு ஊழியர்களுக்கும் இருக்கும் jon security அவர்கள் எப்படி வேலை செய்தாலும் அல்லது செய்யாவிட்டாலும், வேலை போகாது என்ற தைரியத்தை தருகிறது.
    அரசு மருத்துவராக பணி புரியும் ஒரு நண்பன் கதை, கதையாக கூறுகிறார். அதிர்சியளிக்கும் முறைகள் மற்றும் நிகழ்வுகள். மேலும்..

    • திரு அதியமான்,

      ஒப்பீட்டளவில் தனியார் மருத்துவமனைகள் செய்யும் அக்கிரமங்களே அதிகம். பயிற்சியே இல்லாத செவிலியர்கள், தேவையில்லாத பரிசோதனைகள், தவறான சிகிச்சை அளிப்பது என தனியார் மருத்துவமனைகள் மீதான குற்றச்சாட்டுக்கள் எண்ணிக்கையில் அடங்காதவை. இவர்களின் லாபவெறிக்கான ஆதாரங்கள் உங்கள் அருகிலேயே ஏராளமாக கிடைக்கும். மேலும் இதைப்பற்றி மிக விளக்கமாக போஸ்ட்மார்ட்டம் (ஜூவி வெளியீடு) எனும் நூலில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

      பொறுப்பில்லாத அரசு மருத்துவமனை ஊழியர்களைப்பற்றி கவலைப்பட்டுவிட்டு , ஏழை நோயாளிகளை பணவெறி பிடித்த தனியார் மருத்துவமனைகளிடம் ஒப்படைக்கலாம் என தயக்கமே இல்லாமல் சொல்கிறீர்கள். என்ன நியாயம் அய்யா இது ??

      அது சரி, ஏழை குடும்பத்திற்கு ஒரு லட்சத்திற்குள் செலவாகும் வியாதிதான் வரவேண்டுமா ?? அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிக்கு செலவு ஒரு லட்சத்தை தாண்டினால் தனியார் மருத்துவமனைகள் என்ன செய்யும் ? அங்கு job security இல்லாத ஊழியர்கள் இருப்பார்கள் என்பதால் மிகவும் தாயுள்ளத்தோடு தொடர்ந்து சிகிச்சை அளிப்பார்களோ ?

      • ///பொறுப்பில்லாத அரசு மருத்துவமனை ஊழியர்களைப்பற்றி கவலைப்பட்டுவிட்டு , ஏழை நோயாளிகளை பணவெறி பிடித்த தனியார் மருத்துவமனைகளிடம் ஒப்படைக்கலாம் என தயக்கமே இல்லாமல் சொல்கிறீர்கள். என்ன நியாயம் அய்யா இது ??////
        இல்லை. நான் அப்படி சொல்லவில்லை. அரசு மருத்துவ துறை ஊழியர்களை நேர்மையாகவும், ஒழுங்காகவும் வேலை செய்ய என்ன மாற்றங்கள் கொண்டு வரவேண்டும் என்று விவாதிக்க வேண்டும் என்கிறேன். அனைத்து துறைகளையும் தனியார்மயமாக்க சொல்லவில்லை. கனடாவில் எப்படி பொது மருத்துவம் சிறப்பாக இருக்க முடிகிறது ?

      • ///அங்கு job security இல்லாத ஊழியர்கள் இருப்பார்கள் என்பதால் மிகவும் தாயுள்ளத்தோடு தொடர்ந்து சிகிச்சை அளிப்பார்களோ ?///

        அனுபவத்திலிருந்து சொல்கிறேன். job security இந்திய அரசு ஊழியர்களின் அளவிற்க்கு அளித்தால், பொறுப்பற்ற தன்மை, மற்றும் ஒழுங்கின்மை (indisipline) and inefficency மிக மிக அதிகமாகும். மனித இயற்க்கை அது. தனியார் நூற்பாலைகளையும், அரசு என்.டி.சி நூற்பாலைகளின் work ethics அய் ஒப்பிடுங்கள். இரு துறைகளிலும் எமக்கு exposure உள்ளது. அதுவும் இந்திய அரசு ஊழியர்களின் work ethics பற்றி bitter experiences மிக அதிகம் உண்டு.

        நான் அடிக்கடி திருப்பூர் வருவேன். ஒரு முறை சந்திக்கலாம். சென்ற மாதம், இரு தினங்கள் அங்குதான் இருந்தேன். அருகில் உள்ள குன்னத்தூர் ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் எம் நெருங்கிய நண்பர் அரசு மருத்தவராக, மிக மிக நேர்மையாகவும், திறமையாகவும் பணியாற்றுகிறார். பல விசியங்கள் அவர் கூறிதான் அறிந்துகொண்டேன். மேலும்..

    • அதியமான்,
      கனடாவில் பொது மருத்துவ சேவை (Primary Health Care)  சிறப்பாகத்தான் இருக்கிறது, மற்றைய சில நாடுகளுடன் ஒப்பிடும் பொது. இந்த இணைப்பை பாருங்கள். உங்களுக்கு நிறையவே ஆங்கில அறிவு இருப்பதால் இந்த இணைப்பை விட இங்கேயுள்ள பொது மக்களின் கருத்துக்களை படித்துப்பாருங்கள். அரசை குறை சொல்கிறார்களா அல்லது வைத்தியசாலை நிர்வாகத்தை குறை சொல்கிறார்களா?  எங்கே என்ன  குறையிருந்தாலும் அதை ஊடகங்கள் பொதுமக்களை கொண்டு சொல்லவைக்கிறார்கள்.  அந்த விழிப்புணர்வுதான் அவசியம்.  

      http://www.healthzone.ca/health/newsfeatures/article/737552–hospital-death-rates-fall-in-new-era-of-disclosure

  7. தமிழக அரசின் திட்டம் நடைமுறையில் எப்படி செயல்படும் என்று சில ஆண்டுகளில் தெரிய வரும். நிறுத்தப்படலாம். ஆனால் இந்த தனியார் மயமாக்கும் முயற்சி, வேறு வழி இல்லாமல் தான் உருவானது. இருக்கும் அரசு எந்திரம் ஊழல் மற்றும் inefficent ஆக மாறியது தான் அடிப்படை காரணம்.

    கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களை காண்ட்ராக்ட் முறையில் எடுத்து நடத்த ரிலையன்ஸ் நிறுவனம் சில ஆண்டுகளுக்கு முன் முயன்றது. அப்ப்படி ஒரு தகவல்.
    எமது அரசு மருத்துவர் நண்பரிடம் கேட்ட போது, சிறப்பாக செயல் படும் என்றார். மிக எளிமையான காரணம் : ஊழியர்கள் ஒழுங்காக வேலை செய்வார்கள். அவ்வளவுதான் காரணம். ஒவ்வொறு நாளும், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், வேலைக்கு வராமல் ஓ.பி. அடிக்கும் ஊழியர்கள் மற்றும் மருத்துவர்களின் சதம் என்ன ? வேலைக்கு வந்தாலும், நேர்மையாக, ஒழுங்காக பணி புரிபவர்கள் எத்தனை சதம் ? வேலைக்கு வராவிட்டாலும், சம்பளம் உண்டு. மாதம் தோரும் D.M.O விற்க்கு ‘கப்பம்’ கட்டிவிட்டால் போதும். விசாரித்து பாருங்கள். அருமையான கட்டமைப்புகள், வசதிகள் இருந்தும், உரிய சேவைகள் நடப்பதில்லை.

    ஊழல்களில் அளவு மிக மிக அதிகம். அன்புமணி ராமதாஸ் மற்றும் உயர் அதிகாரிகள் மீது disproportionate assets case கள் தொடர்ந்தாலே விளங்கும். இதற்க்கு தீர்வு தான் என்ன ? தனியார் மயமா ? காண்ட்ராக்ட் முறையா ? செம்புரட்சி பற்றி கனவு காண்பவர்களுக்கு ஒரு விசியம் இன்னும் விளங்கவில்லை. புரட்சிக்கு பின், ஊழியர்களை ’நேர்மையாக’ வேலை செய்ய வைக்க வேண்டும். அவ்வளவு சுலபமில்லை அது. மேலும்..

    • பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களை காட்டிலும் இவாள்தான் அரசாங்க உத்தியோகத்தில் அதிகமாக உள்ளனர். அதில் இவாள் வேலைக்கு வராமல் ஓ, பி, அடிப்பது அதிகம். அப்படியே வந்தாலும் புகையிலை மென்னுன்டு, கதாகாலட்சேபம் செய்வார்கள். அந்த அனுபவத்தில் இந்த பின்னுட்டம்.
      அதையும் தாண்டி செம்புரட்சி பற்றி ஏதாவது சொல்லைவில்லை என்றால் தினமலர் போல் இவருக்கும் தூக்கம் வராது.

    • ஊழியர்களை ஊழல்மயமாக்குவதே முதலாளித்துவத்தின் தனிச்சிறப்பு. கருங்காலி தொழிற்சங்கங்களைக் கட்டுவதும், அப்படிப்பட்ட சங்கங்களையே அங்கீகரிப்பதும் முதலாளிகளுக்கும், முதலாளித்துவ அரசுக்கும் அடிப்படைத் தேவையாக உள்ளதை அதியமான் போன்றோர் அறிந்துகொள்ளவே முடியாது. காமாலைக் கண்ணுக்கு கண்டதெல்லாம் மஞ்சல்.

  8. அதியமான் நீங்கள் திருந்தவே மாட்டீங்களா? உங்கள் சமுக அக்கரையைப்பார்த்து புல்லரிக்குதுப்பா. நாலு எழுத்து படிக்க தெரிந்தால் போதும் தீர்ப்புசொல்லவந்துடுவாங்க.போங்கய்யா நீங்களும்,சமுக மாற்றத்தை மறுக்கும் உங்க மண்ணாங்கட்டி அறிவும்.

    • பித்தன், முதலில் give respect and take respect. ok. எம் கருத்துகளை, தகவல்களை தர்க ரீதியாக, ஆதாரங்களுடன் மறுக்கவும். அத செய்ய துப்பிலாமல், தனி நபர் தாக்குதல் தொடர்ந்தால், அதை விட அதிகமாக திருப்பியடிக்க எமக்கு அதிக நேரம் ஆகாது. உமக்குதான் அறிவோ, இங்கிதமோ, நடைமுறை யாதார்த்தம் பற்றிய புரிதலோ சிறிதும் இல்லை.

  9. அது என்னஓ தெரியல, அதியமான் உங்கள் பெயரை பார்த்தாலே குப்புன்னு ஏறுது. அந்த அளவுக்கு உங்களை புடிச்சு இருக்குது. தர்க்கத்தைப்பற்றி சொல்ராரு,அய்யோ தாங்க முடியல சாமி, உபரி மதிப்புக்கு நீங்க தந்த விளக்கத்தைப்பாத்து,ஆடம்ஸ்மித்,டேவிட் ரிக்கார்டோ,காரல் மார்க்ஸ், என் கனவில் வந்து அதியமானுக்கு சொல்லிவையுங்கள் என்று என்னை டார்ச்சர் பண்ராங்க.நான் என்ன பண்ரத்து சொல்லுங்க அதியமான்.

    • பித்தன், உம் கனவில் வந்தவர்கள் என்ன சொன்னார்கள் என்று, ‘உபரி மதிப்பு’ குறித்து எமது பதிவில் வந்து, ஆதாரத்துடன் வாதம் செய்திருக்க வேண்டும். அதை செய்யாமல், பொதுப்படையாக தனிமனித கீறல்கள் மட்டும் தான் இன்னும் செய்கிறீக.

  10. அதியமான் உங்களை நான் தாக்கி சொல்லவே இல்லை.விமர்சனம் தான் செய்தேன்.உங்களுடன் விவாதம் செய்யவேண்டும் என்றால் நான் மீண்டும் நிலபுரவுத்துவ, முதலாளிசிந்தனைமுறைக்கு மாறவேண்டும். நானும் மாற வேண்டும்தான் நினைக்கிறேன்,ஆனால் இந்த சமுகம் என்னை கேடுத்துவிடுகிறது.நான் என்ன செய்வேன் அதியமான்.

    • ///////ஆனால் இந்த சமுகம் என்னை கேடுத்துவிடுகிறது. நான் என்ன செய்வேன் அதியமான்./////// ஒரு நாலு லார்ஜ் அடித்துவிட்டு, சமுகத்தை திருப்பி கெடுக்கவும்.

      • அருமையான உபதேசம், தங்கள் திருவாயால் மேற்கொண்டு உபதேசங்களை எதிர்பார்த்து காத்திருக்கும் பக்தர்கள்

  11. தவளை தன்வாயால் கெடும் என்று கேள்விப்பட்டு இருக்கேன்.ஆனால் அதை இங்குதான் நான் பார்க்கிறேன்.அதுவும் மதிப்புக்குரிய அதியமான் அவர்கள் மூலம். குடிக்கார குடிமக்களுக்கு அதியமான் சொல்லுகிற, குடி கெடுக்குர,கூட்டிக்கொடுக்கர, புரட்சியை செய்து செய்துக்கொண்டு இருக்கும் இந்திய ஓட்டுகட்சி இயக்கங்களின் புரட்சி சொல்லும் இதுதான்,துன்பத்தை மறக்க குடி,இன்பத்தை அனுபவிக்க குடி இதுதான்.

    • பித்தன், ஜோக் அடிக்ககூட விடமாட்டீகிறீகளே !! சரி, போகட்டும். இத்தோட இந்த ‘விவாதத்தை’ முடித்து கொள்ளலாம். தமிழக் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை பற்றி மட்டும் பேசலாமே. மற்றொரு கேள்வி : உங்களுக்கோ, அல்லது உங்கள் குடும்பதார்களுக்கோ, உடல் நலம் சரியில்லை என்றால் தனியார் மருத்துவர்களை அனுகுவீர்களா அல்லது அருகில் இருக்கும் அரசு மருத்துவமனை அல்லது ஆரம்ப சுகாதார நிலையத்தை அனுகுவீர்களா ? ஏன் ?

      • நான் ஒரு பொதுஉடமைச் சிந்ந்தனையாளனதான். மருந்து, மருத்துவன், நோய்ஆய்வு, மருத்துவமனை ஆகியனபற்றி நன்றாகத்தெரியுமாதலால் சுயமாக ஹோமியோபதி கற்று சுய மருத்துவம்தான் என்க்கும் என்குடும்பத்திற்கும் எதிர்பார்க்கும் நண்பர்களுக்கும். மோசடிக்கு முடிந்தவரை வாழ்வோம் .

      • நான் ஒரு பொதுஉடமைச் சிந்ந்தனையாளனதான். மருந்து, மருத்துவன், நோய்ஆய்வு, மருத்துவமனை ஆகியனபற்றி நன்றாகத்தெரியுமாதலால் சுயமாக ஹோமியோபதி கற்று சுய மருத்துவம்தான் என்க்கும் என்குடும்பத்திற்கும் எதிர்பார்க்கும் நண்பர்களுக்கும். 15ஆண்டுகள் அனுபவம்.மோசடிக்கு எதிராக முடிந்தவரை வாழ்வோம் .

        • சாகித். கனடா ஒரு முதலாளித்துவ நாடுதான். அங்கு ஊழல்மயமாகவில்லை. ஏன் ? அங்கு பொதுமருத்துவமும் சிறப்பாக செயல்படுவதாக ரதி சொல்கிறார். படிக்கவில்லையா ? யாருக்கு காமாலை கண் என்று வாசகர்கள் முடிவு செய்யட்டும்.

  12. ஒரு வேளை சாப்பாடுக்கே வழி இல்லாமல் நீங்களும்,உங்கள் குடும்பமும் இருக்கும் போது,நீங்கள் உங்கள் விதியை நினைத்து கொள்விர்களா? அல்லது பிச்சை எடுப்பிர்களா? அல்லது கொள்ளை அடிப்பீர்களா சொல்லுங்கள் அதியமான்.

  13. பித்தன், இப்பதிவிற்க்கு சம்பந்தமில்லாத கேள்வி. (ஒரு வேளை நாலு லார்ஜ் அடித்துவிட்டீர்களோ !!). ஆனாலும் பதில் சொல்கிறேன். எம் குடும்பம் வறுமையில் இருந்த வந்ததுதான். எந்த சூழ்னிலையிலும் திருடவோ, பிச்சை எடுக்கவோ முயலமாட்டோம். கிடைத்த வேலைகளை செய்து, படிப்படியாக வாழ்க்கையில் முன்றே முயல்வோம். அப்படிதான் முன்னேறினோம். இனிமெலாவது இது போன்ற தனிமனித விசியங்கள் வேண்டாமே.

    அரசு மருத்துவமனைகள் இயங்கும் லட்சணத்தை பற்றி விளக்கவே நான் அப்படி ஒரு கேள்வி கேட்டேன். பதில் சொல்லுங்கள்.

  14. அது எப்படி அதியமான் முதலில் போலி ஜனநாயக அரசாங்கத்தின் அதிகார மற்றும் நலதிட்டங்களின் செயல்கள்,மக்கள்போக்கு,கல்வி முறை,அடிப்படை உரிமைகள்,மருத்துவம் மற்றும் பல விசியங்களில் அரசாங்கத்தின் செயல்பாடுகளைப்பற்றிப்பேசாமல்,பிரித்து,பிரித்து பார்த்து பேசி,ஊசல் என்று சொல்பவனை முட்டால் என்று சொல்லாமல் என்னவென்று சொல்வது.
    முன்னெற்றம் என்பது என்ன ? இதற்கு பதில் சொல்லுங்கள்

    • //////பிரித்து பார்த்து பேசி,ஊசல் என்று சொல்பவனை முட்டால் என்று சொல்லாமல் என்னவென்று சொல்வது.
      முன்னெற்றம் என்பது என்ன ? இதற்கு பதில் சொல்லுங்கள்///// போடா வெண்ண. உன்னை போன்ற அரைவேக்காடுகளை சீரியாச எடுத்துக்கிட்டு விவாதம் செய்ய முயன்றது தான் எம் ‘முட்டாள்’தனம்.

      • வினவு,
        உங்களுக்கு ஒரு வேண்டுகோள் கே.அர் அதியமான் அவர்களை புறக்கணிக்காமல் விவாதங்களை தொடர வாண்டுகீரன
        If you ignore or insult K.R.Athiyaman no body will discuss the topic and no body will read it. So I request you as a regular reader to donot discourage opposite thoughts.

        subbu – a regular reader of your blog

  15. என்ன அதியமான் இவ்வளவு கேவப்படுறீங்க. உங்க வயசுக்கு இது பாதிப்பு தரும்.எதுக்கும் கொச்சம் தியானம் செய்யுங்கள். அரசாங்கத்தை விமர்சித்தால் உடனே அதிகாரிகள் சரி இல்லை.ஊழல் தான் காரணம் என்று பைத்தியகாரனாக பேசினால்,இதுபோல கேள்விதான் வரும். ஊழல் இல்லாத அரசாங்கத்தை தரமுடியுலானா,பேசாமா கலைத்துவிட்டு போயிட வேண்டியதுதானே.அதற்கு போலி சோசியலிசம் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அரசாங்கத்தில்லும்,சட்டத்திலும்,சாதிரிதியாக,மதரிதியாக,முதலாளிக்கு ஆதரவாக எல்லாம் செய்துவிட்டு,ஆயிரமாயிரம் ஓட்டைகள் ஏற்படுத்திவிட்டு,ஒரு ஓட்டையை பற்றி சொல்லவந்துட்டார் ஜாரின் வாரிசு.
    வயது ஏறுகிர அளவுக்கு,உங்களுக்கு அறிவு வளரவில்லை.

  16. கருவாயன் ஒரு திட்டம் ஆரம்பித்தா, அதில் அறிவுக்கு வேலை இருக்காது. நீங்க விவாதிக்க வேண்டிய அவசியமே இல்லை. அந்த ஆளு ஆரம்பிச்சா, அது ஏதோ புது கொள்ளைக்கு அடி போடுறதா தான் அர்த்தம். அரசு ஊழியரின் மகன்கள், பிரமாணத்தை எதிர்க்கும் நாய்கள் மட்டும் அந்த ஆளை தூக்கி வைத்து கொண்டாடும்.

  17. நோயாளிகளின் எண்ணிக்கைகேற்ற அளவில் மருத்துவர்களோ செவிலியர்களோ இல்லாத அரசு மருத்துவமனைகளில் வேலைப்பளு காரணமாகவோ புரையோடிப்போன ஊழலின் ஒரு வடிவமாகவோ அலட்சியம் தலை விரித்தாடுவது உண்மைதானே. அரசு அலுவலர்கள் எப்போதுமே இதையெல்லாம் தம் தீவிர கோரிக்கையாக வைத்து போராடியது கிடையாது. தொலைதொடர்பு துறை BSNL ஆகி பாடைக்கு போகும் நிலையை பார்த்தாவது தம் பிழைப்பு நிலைபெற வேண்டும் என்பதற்கேனும் இத்திட்டத்திற்கு எதிராக மருத்துவத்துறை ஊழியர்கள் போராட வேண்டும்,

  18. 86 – ஐ கடக்கும் போது
    காலன் துரத்துவதாக
    ஒரு கனவு
    கண் விழித்தேன்

    உனக்காக
    உடன்பிறப்பே
    கலைஞ ர் காப்பீட்டுத் திட்டம்
    கண்டேன்

    உடன்பிறப்பே
    தெரியுமா உனக்கு
    நயவஞ கன் காலன்
    என்னையே முதுகில்தான்
    தாக்கினான்

    எதையும் தாங்கும் நெஞ்சிருக்க
    எனக்காக இராமச்சந்திரா இருக்க
    எனதருமை மருத்துவர்களும் உடனிருக்க
    எமனையே விரட்டினேன் விரட்டினேன்

    உடையாரைப் போல்
    செட்டியார், முதலியார் மற்றும்
    ஆழ்வாரை போற்றும்
    அருமை உடன்பிறப்பு
    ஆகியோரும்

    ஆங்காங்கே
    கடைவிரித்து
    கல்லா கட்ட
    கடுந்தவம் வேண்டி நின்றனர்

    மற்றொரு புறம்
    கர்ர்ப்பரேட் மருத்துவர்கள்
    காப்பீட்டு முதலாளிகள்
    கருணை வேண்டி
    மனு செய்தனர்

    கருணாநிதியான நான்
    மனுநீதி சோழனுக்கு சிலை
    கண்ணகிக்கு சிலை
    வாழும் வீடு
    இலவச மருத்துவமனை- என
    பெருமைச் சேர்க்க

    இன்னொரு மகுடமாய்
    உனக்காக கண்டதே
    காலனை விரட்டும்
    காப்பீட்டுத் திட்டம்

    30 படுக்கைகள்
    60 நோயாளிகள்
    2 தாதியர்கள்
    1 மருத்துவர்

    அதையும் தாண்டி
    நுழையவே முடியாத
    கழிப்பிட அறை
    பற்றாக்குறை மருந்துகள்
    அறுவைச் சிகிச்சை நூல் வாங்கிட
    அங்காடி செல்லும் அவலம்

    ஏதுமில்லை உடன்பிறப்பே
    இனி எல்லாம்
    கார்ப்பரேட் மருத்துவமனை
    பார்த்துக் கொள்ளும்
    கழக அரசு
    காப்பீட்டை செலுத்தும்
    கவலைப்படாதே……..

    எருமையேறி அவன் வருவானென
    பொறுமையின்றி இருக்காதே
    உரிமையோடு செல்
    உடன்பிறப்பே
    கார்ப்பரேட் மருத்துவம்
    கடவுளாய் உனை காக்கும்

    இங்ஙனம்
    காலனை வென்ற
    கலைஞர்

  19. மருத்துவத்தை தனியார்க்கும இன்சுரன்செகம்பநிக்கும்
    தரைவர்த்த மு.க. வீர்க்கு சரியான சாட்டையடி .

  20. கலைஞர் காப்பிட்டு திட்டம்:

    ஏழை எளிய மக்களுக்கு நவீன தரமான நல்ல சிகிச்சை கொடுக்க வேண்டும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை .

    இப்போது மக்களுக்காக காப்பீட்டு திட்டத்தை கலைஞர் தமிழக முதல்வர் தமிழக மக்கள் வரி பணத்தில் செயல்படுத்தி உள்ளார்.550 கோடி வருடத்திற்கு ஒரு தனியார் காப்பிடு நிறுவனத்திடம் கொடுக்கப்பட்டுள்ளது .அந்த 550 கோடிக்கு வட்டி 55 கோடி ஆண்டுக்கு .55000 பேருக்கு மேல் காப்பீட்டு கொடுக்கலாம் தலா ஒரு லட்சம் விதம் . கண்டிப்பாக ஆண்டுக்கு 30000 பயனாளிக்கு கீல் தான் பயன் பெறுவர் .எந்த தனியார் நிறுவனமும் லாபம் இன்றி செயல்படாது.
    550 கோடியை அரசு வங்கி வைத்து பாதிக்க பட்டவருக்கு கொடுக்கலாம் .
    ஒரு மாதத்துக்கு 1100 பேர் அவர்கள் செலவு 1100*100000 = 11 கோடி அப்படி என்றால் 12 மாதம் 11 கோடி *12 =132 கோடி .தமிழக அரசு தனியார் காப்பிடு நிறுவனத்திடம் இடம் கொடுத்த தொகை 550 கோடி .வருடத்துக்கு காப்பிடு நிறுவனத்தின் லாபம் 418 கோடி +550 கோடி பணத்துக்கான வட்டி. அனேகமாக௦ 470 கோடிக்கு மேல் .
    தகவல் அறியும் உரிமை கீல் அரசு எத்தனை பயனாளிக்கு எவளவு பணம் கொடுகபட்டுளது என்று கேட்டு பெற்று கொள்ளலாம்.
    கலைஞர் தமிழக முதல்வர் 11 /04/2010 அன்று அறிவுப்பு 1 கோடி 44 லட்சம் மக்கள் சேர்ப்பு .69278 பேர் பயன் 200 கோடி ரூபாய் .

    பயனாளி அந்த பணத்தை பெருவதுற்கு உள்ள எத்தனை பேருக்கு எவளவு கையுட்டம் கொடுக்க வேண்டி இருக்கும் ?.
    அனைத்து பயனாளிக்கும் அட்டை கொடுக்க ஆகும் செலவு .அரசு இயத்ரம் செயல்பாடு .இது எல்லாம் கணக்கு இட்டால் .
    அரசு அட்டை கொடுக்க காரணம் மக்கள் இடம் பரிசு சிட்டு கொடுப்பது போல் .தங்களுக்கு ஒரு லட்சம் பரிசு விழுத்தது போல் .
    1 .அட்டை பெற வேண்டும்
    2 சுகவீனம் வர வேண்டும்
    3 .அரசு கூறிய நோய் வர வேண்டும்
    4 .அரசு கூறிய மருத்துவமை சிகச்சை பெற வேண்டும்
    5 .காப்பிடு தொகைக்கு மேல் செலவு பண்ண திறன் இருக்க வேண்டும்
    6 .சரியான முறை அணுகி சரியான கையுட்டம் கொடுத்து .பணத்தை பெறவேண்டும் .
    7 .72000 கீல் வருமானம் சான்றுதல் பெற எளிய மக்கள் என்ன படு பட வேண்டும் .

    மாவட்டம் 5 முதல் 8 மருத்துவமனை தான்.
    51 வகை நோய்க்கு மட்டும் சிகிச்சை .கலைஞர் தமிழக முதல்வர் 11 /04/2010 அன்று அறிவுப்பு 69278 பேர் பயன் .
    சுமார் ஆறு மாதத்துக்கு மேல் .30 மாவட்டம் 69278 /30 =2309
    2309 /6 =384 .ஒரு மாததுக்கு சுமார் 400 நோயாளியை கையாள திறன் அற்று ஒரு மாவட்டம் முழுவதும் உள்ள மருதுவமணி உள்ளது ?.
    அரசு மருத்துவமனை செய்ய முடியாயததை அந்த மாவட்டத்தில் உள்ள அந்த தனியார் மருத்துவமனை செய்கிறது ?
    .
    ஒரு ஆய்வு செயலாம் அரசு மருதுவமணி இல்லாத வசதி அந்த அரசு கூறிய 7 தனியார் மருதுவமணி என்ன உள்ளது
    நோயாளி தங்கும் அரை ,அறுவை சிகிச்சை அரை ,மருத்துவர் .
    scaning கருவி ரத்த சோதனை பிரான வாயு ரத்தம் .சில நுனிய கருவி .
    மருத்துவர் அரசு மருத்துவமனை தான் சிரத்த மருத்துவர் இருப்பார். அப்படி இல்லாத பட்சத்தில் பணம் கொடுத்து அத மருத்துவரை அந்த அறுவை சிகிச்சை செய வைக்கலாம் .தவிர்க்க முடியாத சமயத்தில் .
    மருதுவண்மனை சுத்தம் இதை சில பண செலவில் செய்து விடலாம் .
    இதை எல்லாம் மனதில் வைத்து தனியார் 100000 ரூபாய் செலவு பண்ணிகிரத்தை அரசு 10000 செலவில் பண்ணிவிடலாம் .
    அரசு மருத்துவமனை அந்த நோயாளியை தன்னால் குண படுத்த முடியாது என்று குறிகிறதா?அப்படி எதுவும் சான்று அளிக்கிறதா.

    அரசு மருத்துவமனை மூடி தனியார் மருத்துவமனை நன்மைக்கு அரசு முயற்சி .
    நோயாளி தன தொடர் சிகிச்சை தனியாரி நாட வேண்டும் முதலில் தனியார் காண்பித்தால்.
    பிற உபாதைக்கும் தனியறை நாட வேண்டும்.
    சில உளவியல் காரணம் முதலில் இரண்டு முறை இலவசமாக கொடுத்து பின் தன் பக்கம் இழுப்பது .
    அரசு ஆண்டுக்கு 550 கோடி செலவு பண்ண தயார் என்றால் நாம் உலக வங்கி இடம் சுமார் 20000 கோடிக்கு மேல் கடன் வாங்கி அரசு மருதுவமணியை மிக சிறப்பாக ஆக்கலாம் .காப்பிடு கொடுக்கும் தொகை கடன் அடைத்து விடலாம். .ஆண்டுக்கு ஆண்டு காப்பிடு நிறுவனத்துக்கு கொடுக்கும் தொகை கூடும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க