Sunday, September 24, 2023
முகப்புமக்கள் மீதான போருக்கு எதிராக... சிறப்புரைகள், கலைநிகழ்ச்சிகள் – வீடியோ!
Array

மக்கள் மீதான போருக்கு எதிராக… சிறப்புரைகள், கலைநிகழ்ச்சிகள் – வீடியோ!

-

vote-012சென்னை எம்.ஜி.ஆர் நகரில் நடந்த ம.க.இ.க பொதுக்கூட்டத்தின் காணொளியை இங்கே வெளியிடுகிறோம். உடனடியாக வெளியிடவேண்டும் என்ற எண்ணத்தில் படத்தொகுப்பு முடிந்தவுடன் இதை வலையேற்றியிருக்கிறோம், நல்ல தரமுள்ள காணொளியை குறைவான  அளவுடனான கோப்புகளாக மாற்றும் தொழில்நுட்பத்தை இதுவரை நாங்கள் அறிந்திருக்கவில்லை எனவே இந்த காணொளி கோப்புகள் தரவிரக்கமாக மிகுந்த நேரமாகும். சிரமத்துக்கு வருந்துகிறோம், அடுத்த சில நாட்களில் இதை சரி செய்து மறுபதிப்பு செய்துவிடுவோம். பிராட்பான்ட அல்லாத பயனாளர்களுக்கு காண்பதில் தடங்கல் ஏற்படும், ஒரு ஆலோசனை, ‘பிளே’ பட்டனை அழுத்தி படம் தரவிரக்கம் துவங்கியவுடன் ‘பாஸ்’ பட்டனை அழுத்திவிடவும்… இருபது நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் ‘பிளே’ வை அழுத்தினால் தடையிலாமல் காணொளியை காணமுடியும்.

சிறப்புரை – தோழர் பாலன், உயர்நீதிமன்ற வழக்குரைஞர், பெங்களூரு.

முதலில் பேசிய தோழர் பாலன், , ஒரிசா, ஜார்கண்டு மாநிலங்களில் புதைந்திருக்கும் அரிய கனிமவளங்களைப் பட்டியலிட்டுக் கூறினார். மனித குலத்துக்கு என்றென்றைக்கும் தேவைப்படுகின்ற கனிம வளங்களை, அடுத்த 50 ஆண்டுகளுக்குள் பன்னாட்டு நிறுவனங்கள் சுரண்டி எடுத்துவிட்டால், எதிர்காலத்தில் நம் தேவைக்கு அவர்களிடம் கையேந்தி நிற்க நேரிடும் என்ற  அபாயத்தை சுட்டிக் காட்டினார். ஒரு இலட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் மதிப்பு கொண்ட கவுந்தி வேடியப்பன் மலையில் இருக்கும் கனிவளங்களை ஜின்டால் நிறுவனத்துக்குத் தாரை வார்த்துவிட்டு, விற்பனைத்தொகையில் 0.02% மட்டுமே தமிழக அரசு ராயல்டியாகப் பெற இருக்கிறது என்பதைக் கூறி, இந்த மறுகாலனியாக்க கொள்ளை என்பது எங்கோ ஒரிசா மாநிலத்தில் மட்டும் நடப்பது அல்ல என்பதையும் விளங்கச் செய்தார்.

சிறப்புரை – தோழர் வரவரராவ், புரட்சிகர எழுத்தாளர் சங்கம், ஆந்திரா

சிறப்புரையாற்றிய தோழர் வரவரராவ் தோழர் வரவரராவ், மாவோயிஸ்டு அமைப்புக்கு எதிராக அறிவிக்கப்பட்டிருக்கும் இந்தப் போரின் பின்புலத்தில் இருக்கும் ஏகாதிபத்திய நலனை அம்பலப்படுத்தினார். பிர்சா முண்டா முதல் அல்லூரி சீதாராமராஜு வரையில் பல பழங்குடித் தலைவர்கள் காலனியாதிக்கத்தை எதிர்த்து வீரம் செறிந்த போராட்டங்களை நடத்தியிருக்கின்றனர். ஆனால், நக்சல்பாரி இயக்கம் தோன்றிய பின்னர், பழங்குடி மக்கள் மார்க்சிய லெனினிய சித்தாந்தத்தால் வழிநடத்தப்படுவதால், அவர்கள் இப்போது தாங்கள் கொள்ளையிடப்படுவதைத் தடுப்பதற்காக மட்டும் போராடவில்லை, அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காகவும் போராடுகிறார்கள் என்று விளக்கினார்.

ஏகாதிபத்திய உலகமயமாக்கல் காலத்தில் அரசு நிறுவனத்தில் ஏற்பட்டு வரும் மாற்றங்களைப் பற்றிக் குறிப்பிட்ட அவர், உலகவங்கித் அதிகாரியாக இருந்த மன்மோகன்சிங்கும், பன்னாட்டு நிறுவனங்களின் வழக்குரைஞரான ப.சிதம்பரமும், முன்னாள் சி.ஐ.ஏ தலைவரான ஜார்ஜ் புஷ்ஷும் அரசியலில் ஈடுபடாமலேயே அதிபர், அமைச்சர் பதவிகளைக் கைப்பற்றிக் கொள்வது உலகு தழுவிய போக்காக எழுந்துள்ளதையும், அனைத்திந்தியக் கட்சிகளான பா.ஜ.க, காங்கிரசு, மார்க்சிஸ்டு கட்சி போன்றவை மட்டுமின்றி, பிராந்தியக்கட்சிகளான திமுக முதல் அகாலி தளம், அசாம் கனபரிசத் முதலான கட்சிகளும் கூட ஏகாதிபத்திய உலகமயமாக்கத்துக்கு ஆதரவான கட்சிகளாக மாறியிருப்பதையும் குறிப்பிட்டார். மாவோயிஸ்டு செயலர் கணபதி, பேச்சுவார்த்தைக்கு தயார் என்று சமீபத்திய பேட்டியொன்றில் அறிவித்திருப்பதை சுட்டிக்காட்டிய தோழர் வரவரராவ், பேச்சு வார்த்தை குறித்து இரண்டு நாக்குகளால் பேசுபவர் சிதம்பரம்தான் என்பதை அம்பலப்படுத்தியதுடன், எத்தனை இரத்தம் சிந்தினாலும்,எத்தனை உயிர்களைப்பலியிட்டாலும் இந்தப்போராட்டம் தொடரும் என்பதையும் பெருத்த கரவொலிக்கு இடையே கூறி முடித்தார்.

சிறப்புரை தோழர் மருதையன், பொதுச்செயலர், ம.க.இ.க, தமிழ்நாடு

இறுதியில் சிறப்புரையாற்றிய தோழர் மருதையன் எண்ணெய் வளத்தைக் கைப்பற்றுவதை நோக்கத்துக்காக இராக்கின்மீது போர் தொடுத்த அமெரிக்கா, அதற்கு சதாமின் சர்வாதிகாரத்தை ஒழிப்பது என்று ஒரு போலி முகாந்திரத்தைக் கூறியது போலவே, காடுகளையும் கனிவளங்களையும் கைப்பற்றும் தனது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கு மாவோயிஸ்டுகளை முகாந்திரமாக்கியிருக்கிறது மத்திய அரசு என்றார். வளர்ச்சி என்ற பெயரில் பழங்குடி மக்களிடமிருந்து காடுகளைக் கைப்பற்றும் அரசு, அவற்றில் பொதுத்துறை சுரங்க நிறுவனங்களை உருவாக்கவில்லை; மாறாக பன்னாட்டு நிறுவனங்களுக்குததான் காடுகளைத் தாரை வார்க்கிறது. இது பழங்குடி மக்களுக்கு மட்டும் நடக்கவில்லை. காடுகளையும், கடல்வளத்தையும், பொதுத்துறைகளையும், சிறுவணிகத்தையும், விவசாயத்தையும் மக்களிடமிருந்து கைப்பற்றி ஏகாதிபத்திய நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் இந்த ஆக்கிரமிப்புப் போரின் பெயர்தான் மறுகாலனியாக்கம் என்றார்.  இந்தியத் தரகு முதலாளி வர்க்கத்துக்கு நம்முடைய வரிப்பணத்திலிருந்து, நாளொன்றுக்கு 700 கோடி ரூபாய் வரிச்சலுகை வழங்கப்படுவது, குஜராத்தில் டாடாவின் கார் கம்பெனிக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகள், அனில் அம்பானி விமானநிலையம் அமைக்க மகாரராட்டிர அரசு வழங்கியுள்ள நிலம் என்பன போன்ற எடுத்துக்காட்டுகளைக் கூறி, மக்களுடைய சொத்துக்களைப் பறித்து முதலாளிகளிடம் ஒப்படைக்கும் இந்த அரசு, மக்களுக்கு இலவசங்களை வாரி வழங்குவதைப் போல நடிப்பதையும் அம்பலப்படுத்தினார். மஞ்சள் பையில் தனது முகத்தை அச்சிட்டு மக்களுக்கு இலவச அரிசியை வழங்கும் கருணாநிதி, ஃபோர்டுக்கும், ஹூண்டாய்க்கும், நோக்கியாவுக்கும் வழங்கிய சலுகைகளையும் மஞ்சள் பையில் போட்டுத்தான் வழங்கினாரா, என்று எள்ளி நகையாடினார். பயங்கரவாதத்துக்கு கூறப்படும் இலக்கணத்தின்படி, மன்மோகன் சிங்கும் ப.சிதம்பரமும்தான் முதலாளித்துவப் பயங்கரவாதிகள் என்றும், பயங்கரவாதிகளுடன் நாம் பேசுவதற்கு எதுவுமில்லை என்றும் கூறி முடித்தார்.

காட்டுவேட்டை – இசைச்சித்திரம், ம.க.இ.க மையக்கலைக்குழு

இசைச்சித்திரம் என்பது ம.க.இ.க தோழர்கள் புதிய கலைவடிம். இதில் தனிச்சிறப்பாக பதிவு செய்யப்பட்ட இசையும், இணைப்புரையும் மேடையில் ஒலிக்க, அதற்கேற்றபடி கலைஞர்கள் நடிப்பது, ஆடுவது, கருப்பொருளுக்கேற்றபடி மேடையொளி ஒளிர மொத்தத்தில் ஒரு எழுச்சியூட்டும் கலையை பார்வையாளர்கள் உணர்வார்கள். இங்கே பழங்குடி மக்களின் வாழ்க்கையும், போராட்டமும், பன்னாட்டு நிறுவனங்களின் சுரண்டலும் இசைச் சித்திரமாய் விரிகின்றது.

கலைநிகழ்ச்சிகள் – ம.க.இ.க மையக்கலைக்குழு

தமிழகத்தில் ம.க.இ.க கலைக்குழு மிகவும் பிரபலம் என்றால் அது மிகையில்லை. எமது அரசியல் போராட்டத்தின் பிரச்சாரத்தை கலையால் தமிழகத்தின் மூலை முடுக்குகளிலெல்லாம் இந்த கலைக்குழு தோழர்கள் பாடிவருகின்றனர். இவர்களது பாடல்கள் இதுவரை பதினொரு குறுந்தகடுகளாக வெளிவந்து பல்லாயிரக்கணக்கான படிகள் விற்பனையாகியிருக்கின்றன. இங்கு ஆளும்வர்க்கங்களும் ஓட்டுக்கட்சி அரசியல்வாதிகளும்தான் இந்த நாட்டைக் காட்டிக் கொடுக்கும் நாய்களென்பதையும், நாட்டைக் காக்கும் நாயகர்கள் நக்சல்பாரிகளே என்பதையும் கலைக்குழுவின் பாடல்கள் வெவ்வேறு கோணங்களில் விளக்குகின்றன.

vote-012

தொடர்புடைய பதிவுகள்

  1. தமிழகத்தின் சிறந்த பாடகர், சிறந்த பாடகி யார் என எப்பொழுதெல்லாம் கேள்விகள் ஊடகங்களில், பத்திரிக்கைகளில் எழுப்பப்படுமோ, அப்பொழுதெல்லாம், மக்கள் கலை இலக்கிய கழகத்தின் தோழர் கோவனும் பெண்கள் குழுவில் கொஞ்சம் கனத்த பெண் தோழரும் தான் நினைவுக்கு வருவார்கள். என்ன ஒரு தெளிவு, கோப ஆவேசம், கேட்பவர்கள், பார்ப்பவர்களை தொற்றிக்கொள்ளும். சட்டையை பிடித்து போராட்டத்திற்கு இழுத்து வரும்.

    உழைக்கும் மக்களின் வாழ்க்கைத் துயரத்தை, தியாகத்தை, போராட வேண்டியதின் தேவையை, சங்கமாய் சேர வேண்டிய அவசியத்தை தமிழகத்தின் முக்கிய வீதிகளிலெல்லாம் கலைக்குழு தோழர்களின் குரல்கள் ஓங்கி ஒலிக்கின்றன.

    அவர்களின் புரட்சிப்பணி தொடரட்டும். வாழ்த்துக்கள்.

  2. வணக்கம் வினவு!
     இந்த விழிப்புணர்வு பொது கூட்டத்தில் படித்த உயர்தர வர்க்க மக்கள் கலந்து கொண்டார்களா?.இந்த ஒளிப்படத்தை காணும்போது அதில் கலந்து கொண்டவர்கள் சாதாரண மத்தியதர, அடித்தட்டு மக்கள் தான் அதிகம் கலந்து கொண்டார்கள் போல் தெரிகிறது. 

    • பிரகாஷ்,
      இத்தகைய கூட்டங்களுக்கு சாதாரண மக்கள்தான் அணிதிரள்வார்கள். அதற்கு அடுத்தபடியாக நடுத்தர வர்க்க மக்கள் வருவார்கள். இதற்கு மேல் உள்ள வர்க்கத்தினர் வருவதில்லை சில விதிவிலக்குகளைத் தவி. மற்றபடி பதிவுலகைச்சேர்ந்தோர் கணிசமான எண்ணிக்கையில் வந்திருந்தனர். கூட்டத்தில் தொழிலாளிகள், பெண்கள் எண்ணிக்கையும் குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகம். மாற்று அரசியல் அமைப்புகளைச் சேர்ந்தோரும் வந்திருந்தினர். நேபாள மக்கள் – நேபாள் மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள், சென்னையில் பணிபுரிபவர்கள் – சிலர் வந்திருந்தனர். பத்திரிகைத்துறை நண்பர்கள் சிலர் தமது சொந்த ஆர்வத்தில் வந்திருந்தனர்.

  3. அன்றைய கூட்டத்தில் நடுவில் உட்கார்ந்திருந்த என்னால் இசைச் சித்திரத்தின் இசையை மட்டுமே கேட்க முடிந்தது. இங்கு விடியோவைப் பார்த்த பொழுது மிகச் சிறப்பாக வந்திருப்பது தெரிகிறது. இந்த பொதுக்கூட்டம் முன்னிறுத்தும் அரசியலை இந்த இசைச்சித்திரம் நன்றாக எடுத்துக் காட்டுகிறது.

    எதிர்காலத்தில் இன்னும் பல புதிய யுத்திகளைப் புகுத்தி(சிம்பளைஸ் செய்கிற யுத்திகள்) இசைச்சித்திரம் என்ற வடிவத்தைச் செழுமைப்படுத்த வேண்டும். நவீன நாடகங்களிடமிருந்து, நவீன நிகழ் கலைகளிலிருந்து புதிய வடிவங்களை எடுத்துக்கொண்டு, புரட்சிகர அரசியல் உள்ளடக்கத்துடன் வழங்க இசைச் சித்திரம் நல்ல வடிவம். குறிப்பாக இந்த இசைச்சித்திரத்தில் இசை பிரமாண்டமாக இருந்தது. சில குறைகள் தென்பட்டாலும் அவை தோழர்களின் தொடர் முயற்சிகளில் காணமல் போய்விடக் கூடிய தன்மை கொண்டவையே. இந்த பொதுக்கூட்டத்திற்காக சிறப்பான தயாரிப்புகளை மேற்கொண்ட அனைத்துத் தோழர்களுக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள்.

    தோழமையுடன்,
    பழங்குடி

  4. This Event is Really Interesting and Informative. This place is full of Internet and name shake Revolutionists (it includes me). Instead Ma.ka.i.ka and vinavu are doing great job in the place where it is needed. After closely watching the above speeches and the programs , I really changed my view towards Maoists.

    Bravo Brothers…! Eventhough I have some differences in the stand about LTTE / Eelam , My moral support is always with you.!

    Work for a new freedom where everyone has the same chance , same respect , same value….!

    In this partial societly A richman’s life is valued about few crores. a poorman’s life is valued about 20 rupees a day. How we can allow such impartial things?

    But , there are little good examples throughout the world about the real communism…..hope it will be a fresh start….!!!

    Naxels are own peoples of this country. If you fight with naxels it means you are fighting with your own peoples. this is word we need to emphasis to our rude rulers.!!!

  5. அன்றைக்கு நானும் கூட்டத்திற்கு வந்திருந்தேன். பதிவர்கள் ருத்ரன், மதிமாறன், கிழக்கு மருதன் ஆகியோரைப் பார்த்தேன். நிகழ்ச்சி நன்றாக இருந்தது.

  6. உங்க பதிவை மிக மதிக்கிறேன்…..

    கலை நிகழ்ச்சியும்….. இசை நிகழ்ச்சியையும்….மனம் கனக்க பார்த்து நெகிழ்ந்தேன்…

    நக்சல் மீது மிகுந்த மரியாதையும் …. புரிந்துணர்வும் ஏற்படுகிறது.

  7. ஒவ்வொரு பகுதியாக உரைகளையும் நிகழ்ச்சிகளையும் link கொடுத்தால் பகிரவும் வசதியாக இருக்கும்.

  8. பல தோழர்களின் கடிதங்களை பார்த்த போது சென்னை சென்று கேட்க, பார்க்க இயலவில்லையே என்ற ஏக்கத்தை போக்கியது காணொளிகளின் தொகுப்பு.  ஏற்கனவே தோழர் பாலன் உரையை மதுரையில் 3 முறை கேட்டிருக்கிறேன். தோழர் பாலன் மற்றும் தோழர் மருதையனின் சிறப்பு மிக்க உரைகள் அற்புதம்.  தொடரட்டும் இது போன்ற பணிகள்

  9. காணொளியை வெளியிட்டமைக்கு நன்றி . என்ன… இந்த கியு பிராஞ் பயலுக பேசிக்கிட்டுருந்ததையும் வீடியோ எடுத்து போட்டிருந்தா இன்னும் நன்னா இச்சி , நல்லா இருந்திருக்கும்.

  10. Great work, there is a strong mis conception among the intellectuals and other leftist including me that cpi maoist is some time is handling narrow left wing extremism and i have some shadow of doubts regarding ma ka i ka… but now it has changed and i can understand that it is doing a historical work . red salutes to the comrades of tamilnadu. you people are in the right path. YOU ARE NOT HITTING THE SLEEPING ELEPHANT AND RUNNING AWAY… YOU ARE HITTING A GIANT WHILE IT IS AWAKE AND STANDING IN FRONT OF IT BOLDLY …. NOMATTER WHAT IS THE OUT COME YOU ARE BRAVELY STANDING… NOW IT IS THE TIME TO DECIDE …. YOU CAN’T BE NEUTRAL IN A MOVING TRAIN’ IS THE QUOTE I REMEMBER….. LET ALL THE PEOPLE AWAKE AFTER SEEING THE VIEDEOS… its time to break the party lines .. its time to break the comfort zones … its high time to support openly the just cause of the adivasis. the dividing line is very crisp clear and bright. the vote bank parties -corporate media – one side- and the others on the adivasis side. let us take stand . let us support atleast conditionaly the people who are with the adivasis. its time to start.

  11. //நாளொன்றுக்கு 700 கோடி ரூபாய் வரிச்சலுகை வழங்கப்படுவது//
    //சிதம்பரத்தின் பல சிதம்பர ரகசியங்கள்//
    அதிர்ச்சி தரும் விஷயங்கள்…

  12. வெளியிட்டமைக்கு மிக்க நன்றி….மிக அருமையான கருத்துரைகள்..கலைக்குழுவினரின் பாடல்கள்.நேரில் வர முடியாத வருத்தத்தை போக்கியது

    மீண்டும் நன்றி தோழரே ….

  13. //நல்ல தரமுள்ள காணொளியை குறைவான  அளவுடனான கோப்புகளாக மாற்றும் தொழில்நுட்பத்தை இதுவரை நாங்கள் அறிந்திருக்கவில்லை//
    total video converter மூலம் அளவை குறைக்க முடியும் இந்த லிங்க் மூலம் டவுன்லோடு செய்யலாம்http://www.effectmatrix.com/total-video-converter/

  14. காணொளிகளை எனது சொந்தக் கோப்புகளாக கணிணிக்கு தரவிறக்கம் செய்வது விரும்பிய பொழுது பார்ப்பது எப்படி?

  15. உணர்ச்சிபூர்வமான ஒரு நிகழ்வாக இருக்கின்றது. காணொளிகளுக்கு நன்றிகள். சிதம்பரம் என்பவரை பற்றி அறியும்போது அதிர்ச்சியாகவும் அச்சமாகவும் இருக்கின்றது. ஒரு இறைபக்தி உள்ளவர் சிதம்பரத்துக்கு வாக்களித்திருந்தால் நிச்சயம் அவர் பஞ்சமா பாதகம் செய்தவராகின்றார். எந்த ஜென்மத்திலும் விமோசனம் கிடைக்காது.
    கலை நிகழ்ச்சிகள் உயிரோட்டமாக இருக்கின்றது.
    இந்த நிகழ்வால் பழங்குடிமக்களை அழிப்பதை இந்திய அதிகாரவர்க்கம் நிறுத்தும் என்பதை விட இவ்வாறான ஒரு நிகழ்வை நடாத்தியும் அதில் கலந்துகொண்டவர்களையும் பார்க்கும்போது மனிதாபிமானம் மீது நம்பிக்கை வருகின்றது. இந்த நம்பிக்கை பெருமளவாக வளரும்போதே பழங்குடிமக்கள் உயிர்கள் பாதுகாக்கப்படும்.

  16. உரைகளுக்கிடையில் நிகழ்த்திய பாடல்களின் ஒளி/ஒலி பார்க்க கிடைக்குமா? இங்கு இணைத்திருக்கும் உரைகளின் முடிவில் இணைக்கப்பட்டு இருக்கிறதா என்று இன்னும் பார்க்கவில்லை.

    • உமா, உரைகளுக்கிடையில் பாடப்பட்ட பாடல்கள் இந்த வீடியோ தொகுப்பில் இடம் பெறவில்லை.

  17. பார்வையாளர்கள் உத்வேகம் பெற வேண்டுமென்றால் மேடையில் நடை பெறுகின்ற நிகழ்ச்சிகள் அனைத்தும் மிகத் துல்லியமாகத்  தெரியவேண்டும்.அதற்கு அதிகப்படியான திரைகள் வைக்கப்படவேண்டும்.தமிழகத்தின் மிகத் தொலைவில் இருந்து வந்தவர்கள் பெரும்பாலானவர்கள் இந்நிகழ்ச்சியின் மூலம் உத்வேகம் பெறுகின்ற வாய்ப்பு முழுமையாக கிடைக்கவில்லை என்பதே உண்மை.இனி வரும் காலங்களில் கவனம் தேவை.  

  18. பதிவுக்கு சம்பந்தமில்லாதது:

    இந்த பட்ஜெட் போடும் முன்பே, இந்த முறை பட்ஜெட்டுக்கு முக்கிய ஆதாரம் வரிகள் என்பதை அறிவித்துவிட்டுத்தான் செய்தார்கள். அதே போலவே செய்தும் விட்டனர்

    பட்ஜெட் பற்றி உண்மைத்தமிழன் அண்ணாச்சி எழுதியுள்ள நல்லதொரு பதிவு:

    2010 மத்திய பட்ஜெட் – ஒரு தேசபக்தனின் கண்ணோட்டம்..!
    http://truetamilans.blogspot.com/2010/03/2010.html

  19. நீ எந்த சடலைட்டையும் கொண்டு வா , ஆனால் நக்சலைட்டை ஒழிக்க முடியாது !
    தோழர் கோபனுக்கும், சக கலைஞ்சர்களுக்கும் எனது வாழ்த்துக்கள் .

  20. I watched videos and it made me so emotional.. just memories went how CT won the election .. why dont u guys do some awareness program in entire sivaganga district during coming election.. chidamabrathuku thooku thookara MLA Sundaram.. puduvayal mill owner padikasu (sarayam kaichi vithavar ippa Thiruchendur kovil tharma kartha).. ivankala akku verah annivera medaila neenkha kilikanum…

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க