முகப்புமுதலாளித்துவ பயங்கரவாதம் முறியடிப்போம் – புதுவையில் மே நாள் பேரணி !!
Array

முதலாளித்துவ பயங்கரவாதம் முறியடிப்போம் – புதுவையில் மே நாள் பேரணி !!

-

அன்பார்ந்த நண்பர்களே,

vote-012மே நாள்! தொழிலாளி வர்க்கம் தமது உரிமைகளைப் போராடி வென்ற நாள். 19ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் அன்றைய தொழிலாளி வர்க்கம் நாளொன்றுக்கு 20 மணிநேரம் உழைக்க வேண்டும். முதலாளியிடம் கோரிக்கை வைக்கவோ, சங்கம் வைக்கவோ அவர்களுக்கு உரிமை கிடையாது. உழைப்பை விற்று உயிர் வாழலாம் அவ்வளவுதான்.

இந்த அடிமைத்தனத்திற்கு எதிராக 124 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவின் சிகாகோ வீதியில் வெகுண்டெழுந்தார்கள் ஆயிரக்கணக்கில் தொழிலாளர்கள். அவர்களது போராட்டத்தை அடக்க துப்பாக்கி ஏந்திய படையை ஏவினார்கள் முதலாளிகள். இரத்தத்தையும் உயிரையும் சிந்தினார்கள் தொழிலாளர்கள். சிவந்தது சிகாகோ வீதி. அந்த சிவந்த மண்ணிலிருந்து மே நாளில் முளைத்ததுதான் 8 மணிநேர வேலை, 8 மணி நேர குடும்ப சமூகப்பணி,  8 மணி நேர உறக்கம் என்கிற உரிமை. அமெரிக்க வீதியை மட்டுமல்ல, அகில உலகத்தையும் பற்றிக் கொண்டது அந்தப் போராட்டத் தீ. அதன்பின் சிகாகோவின் வெற்றி உலக தொழிலாளர் வர்க்கத்தின் ஒட்டுமொத்த உரிமையாக நிலைநாட்டப்பட்டது.

ஆனால் இன்றோ, பெற்ற உரிமைகள் அனைத்தையும் இழந்து நிற்கிறது தொழிலாளி வர்க்கம். கையில் செல்போன், கடன் வாங்கிக் கட்டிய வீடு, எந்நேரமும் பிடுங்கப்படலாம் என்கிற நிலையில் உள்ள இரு சக்கர வாகனம் இவற்றையெல்லாம் காட்டி தொழிலாளி வர்க்கம் முன்னேற்றம் அடைந்து விட்டதாக ஆளும் வர்க்கமும், பத்திரிக்கைகள், தொலைக்காட்சிகள் உள்ளிட்ட ஊடகங்களும் பொய்யான தோற்றத்தை உருவாக்குகின்றன. ‘முன்னேற்றம்’ என்கிற மயக்கத்தில் உரிமை என்கிற உணர்வு மறக்கடிக்கப்படுகிறது.

உலகமயமாக்கத்தின் இன்றைய விளைவாக 20 மணிநேரம் வரைக்கூட உழைக்க வேண்டியுள்ளது. சென்னை, கோவை, திருப்பூர் போன்ற நகரங்களில் உள்ள ஏற்றுமதிக்கான ஆயத்த ஆடைகள் தயாரிப்பு நிறுவனங்கள் போன்றவற்றில் பணிபுரியும் ஆண், பெண் தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு இரண்டு தடவைக்கு மேல் சிறுநீர் கழிக்கக் கூடத் தடை விதிக்கிறது, முதலாளித்துவ அடக்குமுறை. கால் மணிநேரத்திற்கு மேல் சாப்பிடக் கூடாது என கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.

நாடு முழுவதும் நடைபெறும் கட்டுமானப் பணிகளில் ஈடுபடுத்தப்படும் பீகார், ஒரிசா, மேற்கு வங்கம் போன்ற பின்தங்கிய மாநிலத் தொழிலாளர்கள் ஓய்வு, உறக்கம் இன்றி ஓடிக் கொண்டிருக்கும் தானியங்கி எந்திரமாகவே மாற்றப்பட்டு விட்டார்கள்.

கொள்ளுப் பையைக் காட்டி,  குதிரையை ஓட வைப்பதைப் போல தாலியைக் காட்டி இளம் பெண்களின் உழைப்பையும் எதிர்காலத்தையும் உறிஞ்சும் ‘சுமங்கலித் திட்டம்’ இலட்சக்கணக்கான ஏழை இளம் பெண்களைக் கொத்தடிமைகளாய் பிணைத்து போட்டுக் கொண்டிருக்கிறது.

இப்படி, வேலைக்கும் சம்பளத்திற்கும், வாழ்க்கைக்கும் முதலாளிகளின் தயவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் கூலி அடிமைகளாய் இன்று கோடிக்கணக்கில் தொழிலாளர்கள். உலகையே தனது வியர்வையால் கட்டியெழுப்பிய தொழிலாளி வர்க்கம், இன்று பெற்ற உரிமைகள் அனைத்தையும் இழந்து நிற்கிறது. விலையுயர்வுக்கேற்ப சம்பள உயர்வு, மருத்துவப்படி, போனஸ், ஓய்வூதியம், வாரிசுக்கு வேலை போன்று போராடிப் பெற்ற உரிமைகள் அனைத்தும் பறிக்கப்படுகிறது. இவற்றையெல்லாம் தட்டிக் கேட்க சங்கம் அமைக்கக் கூட உரிமையில்லை. மொத்தத்தில் பெற்ற உரிமைகள் அனைத்தையும் சுனாமிபோல் சுருட்டி 124 ஆண்டுகளுக்கு முந்தைய நிலைக்கு இழுத்து தள்ளிவிட்டது முதலாளித்துவ பயங்கரவாதம்.

தொழிலாளர்களோ, புதிதாக எதையும் உரிமையாக கேட்கவில்லை. ஏற்கெனவே போராடிப் பெற்ற உரிமைகளான சங்கம் கூடும் உரிமை, கோரிக்கைகளுக்காக போராடும் உரிமை இவற்றுக்காகப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்தியா உள்பட உலகம் முழுவதும் சங்கம் வைக்க தொழிலாளர்களுக்கு உரிமை இல்லை. குறிப்பாக சென்னையில் உள்ள தென்கொரிய நாட்டு ஹுண்டாய் கம்பெனியில் சி.ஐ.டி.யு. சங்கம் வைக்க அனுமதி மறுக்கப்படுகிறது. அதேபோல் பு.ஜ.தொ.மு. செயல்படும் புதுச்சேரி லியோஃபாஸ்ட்னர்ஸ், மெடிமிக்ஸ், பவர் சோப், சென்னை நெல்காஸ்ட், கோவை எஸ்.ஆர்.ஐ., உடுமலை சுகுணா பவுல்ட்ரி ஃபார்ம் போன்ற கம்பெனிகளிலும் சங்கம் வைக்க அனுமதி மறுக்கப்படுகிறது. மேற்கூறிய கம்பெனிகளில் சங்கம் வைத்ததற்காகவே தொழிலாளர்கள் வேலைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஆலைமூடல், அடியாட்கள்  மூலம் கொலை மிரட்டல், போலீசை ஏவி பொய் வழக்கு  சிறை வைப்பு என அடுக்கடுக்காக தொழிலாளர்கள் மீது அடக்குமுறை ஏவப்படுகிறது. தொழிலாளர்களின் உரிமைகள் அனைத்தும் பறிக்கப்படுகிறது.

தொழிலாளர்களின் உரிமைகள் மட்டுமல்ல, விவசாயிகள், மீனவர்கள், பழங்குடிகள், மாணவர்கள், வழக்குரைஞர்கள் என அனைத்து பிரிவினரின் உரிமைகளும் பறிக்கப்படுகின்றது. விவசாயிகள் பாரம்பரியமாக பயன்படுத்திவரும் விதைகளையும், விவசாயம் சார்ந்த அனுபவ அறிவையும் பயன்படுத்த தடை விதிக்கும் “தமிழ்நாடு வேளாண் மன்ற சட்டம்” என்னும் கொடிய சட்டமும், அமெரிக்காவின் மான்சாண்டோ கம்பெனியின் மரபணு மாற்று விதைகள் போன்றவற்றை எதிர்ப்போரை ஓர் ஆண்டு சிறையில் தள்ளவும், ரூ. 2 லட்சம் வரை அபராதம் விதிக்கவும் வகை செய்யும் “உயிரி தொழில் நுட்பவியல் ஒழுங்காற்று ஆணைய சட்டம்” என்னும் கருப்பு சட்டமும் மத்திய, மாநில அரசுகளால் கொண்டு வரப்பட்டு விவசாயிகளின் வாழ்வுரிமை பறிக்கப்படுகிறது.

பன்னிரண்டு கடல் மைல்கள் தாண்டி மீன் பிடிக்கக் கூடாது என சட்டமியற்றி மீனவர்களின் வாழ்வுரிமை பறிக்கப்படுகிறது. வெளிநாட்டு வழக்குரைஞர்கள் இந்திய நீதிமன்றங்களில் வாதாடலாம் என சட்டமியற்றி வழக்குரைஞர்களின் வாழ்வுரிமை பறிக்கப்படுகிறது. வெளிநாட்டு பல்கலைகழக மசோதா நிறைவேற்றப்பட்டு மாணவர்களின் கல்வி கற்கும் உரிமை பறிக்கப்படுகிறது.

மண்ணுக்குள் புதைந்து கிடக்கும் பல கோடி மதிப்புள்ள கனிவளங்களுக்கு பாதுகாப்பாய் இருந்து வருகிறார்கள் பழங்குடி மக்கள். போஸ்கோ, வேதாந்தா போன்ற பன்னாட்டு கம்பெனிகள் அந்த தாதுப்பொருட்களையும் கனிவளங்களையும் கொள்ளையடிக்க அப்பழங்குடிகள் மீது “காட்டு வேட்டை” எனும் பெயரில் தாக்குதல் நடத்தப்படுகிறது. ஒரு லட்சம் துணை இராணுவ வீரர்களை ஏவி அம்மக்களின் வாழ்வுரிமையும், உயிரும் பறிக்கப்படுகிறது.

தங்களின் வாழ்வுரிமை, பறிப்புக்கு எதிராக அனைத்து தரப்பு மக்களும் தனித்தனியாக போராடுகின்றனர். போராடும் அம்மக்கள்மீது போலீசு மற்றும் இராணுவத்தை ஏவி கொடூரமான யுத்தம் நடத்தப்படுகிறது. அதாவது பன்னாட்டு முதலாளிகள் நம் விவசாயத்தையும், விளைநிலங்களையும் அபகரித்துக் கொள்ளவும், நமது கடல் வளங்களை அள்ளிச் செல்லவும், காடு மற்றும் கனிவளங்களை கொள்ளையடிக்கவும் பாதுகாப்பு அரணாக செயல்படுகிறது, மத்திய  மாநில அரசுகள். இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் போராடினால் அந்த மக்களின் மீது போர் தொடுக்கப்படுகிறது. இவைகள் அனைத்தும் உலக வங்கி, உலக வர்த்தக கழகம் போன்றவைகளின் உத்தரவுப்படியே மத்திய, மாநில அரசுகளால் நிறைவேற்றப்படுகிறது.

மக்களின் வாழ்வுரிமை பறிப்பும் தொழிலாளர்கள் மற்றும் மக்கள் மீதான தாக்குதல்களும் ‘தேசத்தின் வளர்ச்சி’ என்ற பெயரால் நியாயப்படுத்தப்படுகிறது. பன்னாட்டு முதலாளிகளின் நலனுக்காக சொந்த நாட்டு மக்கள் மீதே நடத்தப்படும் தாக்குதலுக்கு எதிராக எந்த ஓட்டு கட்சிகளும், ஊடகங்களும் மூச்சு விடுவது இல்லை. காரணம் கொள்ளையடிக்கும் பணத்தில் ஓட்டுக் கட்சிகளுக்கும், ஊடக முதலாளிகளுக்கும் வாய்கட்டுப் போடுகின்றன பன்னாட்டு கம்பெனிகள்.

தொழிலாளர்களின் உரிமைகள் அனைத்தையும் பறிப்பது, பன்னாட்டு முதலாளிகள் மற்றும் அவர்களுக்கு தரகு வேலை பார்க்கும் உள்நாட்டு முதலாளிகளின் கொத்தடிமைகளாக தொழிலாளர்களை மாற்றுவது, மக்களின் வாழ்வாதாரங்களை பறிப்பது, எதிர்த்து போராடும் மக்களை வாழ்விடங்களிலிருந்தே விரட்டியடிப்பது, நாட்டையே பன்னாட்டு கம்பெனிகளின் வேட்டைக்காடாக மாற்றுவது, இதைத்தான் மறுகாலனியாக்கம் என்கிறோம். வாழ்வுரிமையை இழந்து போராடும் மக்கள், நாடு மறுகாலனியாகிறது  நமது பிரச்சினைகளுக்கு அதுதான் காரணம் எனப் புரிந்துக் கொள்ளவில்லை. அவ்வாறு மக்களுக்கு புரிய வைப்பதும் மறுகாலனியாதிக்கத்திற்கு எதிராக மக்களை ஓரணியில் திரட்டுவதும் தொழிலாளி வர்க்கத்தின் கடமை. ஏனெனில் தனது நலனுக்காக மட்டுமின்றி, பிற வர்க்கங்களின் நலனுக்காகவும் போராடும் மரபை கொண்டது தொழிலாளி வர்க்கம்.

அனைத்து உழைக்கும் மக்களின் உரிமைகளை பறித்து நாட்டையே அடிமையாக்கும் பன்னாட்டு முதலாளிகளுக்கு ஆதரவாக போலீசு, இராணுவம், நீதிமன்றம், சட்டமன்றம், பாராளுமன்றம், ஓட்டுக் கட்சிகள், ஊடகங்கள் அனைத்தும் ஓரணியில் நிற்கின்றன. ஆனால் உரிமைகளை இழந்து நிற்கும் தொழிலாளி வர்க்கத்திற்கோ, தங்களை போல் வாழ்வுரிமை பறிக்கப்பட்டு போராடும் பிற மக்களை தங்களுடன் இணைத்துக் கொள்வதும், சிதறி கிடக்கும் தொழிலாளர்களை அமைப்பாக அணிதிரட்டுவதையும் தவிர வேறுவழியில்லை. ஒற்றுமை உணர்வும் ஓங்கிய கைகளும் தோற்றதாக வரலாறு இல்லை. தொழிலாளி வர்க்கமாய் ஒன்றிணைவோம்! முதலாளித்துவ பயங்கரவாதத்தை வீழ்த்துவோம்!

____________________________________________________________

அறிமுகப் பிரசுரம் மென்நூல் (PDF)

நிகழ்ச்சி நிரல் பிரசுரம் மென்நூல் (PDF)

____________________________________________________________

நிகழ்ச்சி நிரல்:

மே 1 – 2010

பேரணி
துவங்கும் நேரம்: மாலை 4 மணி
இடம்: பாக்கமுடையான் பட்டு,
கொக்குப்பாலம், புதுச்சேரி.

பேரணி துவக்கிவைப்பவர்:
தோழர் காதர் பாட்ஷா, அமைப்பாளர்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புதுச்சேரி.

பொதுக்கூட்டம்

மாலை 6 மணி
சிங்காரவேலர் சிலை, ரோடியர் மில், புதுச்சேரி

தலைமை:
தோழர் அ. முகுந்தன், தலைவர்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, தமிழ்நாடு.

“போராட்டக் களத்தில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி”
நேருரைகள்: கோவை, ஓசூர், புதுச்சேரி தோழர்கள்

உலகமயமாக்கமும், தொழிலாளர் வர்க்கத்தின் மீதான அடக்குமுறையும்:
தோழர் சுப. தங்கராசு, பொதுச்செயலாளர்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, தமிழ்நாடு.

சிறப்புரை:
முதலாளித்துவ பயங்கரவாதத்தை வீழ்த்துவோம்!
மறுகாலனியாதிக்கத்தை முறியடிப்போம்!
தோழர் காளியப்பன், இணைச் செயலாளர்,
மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு.

புரட்சிகரக் கலை நிகழ்ச்சி
மையக்கலைக்குழு, ம.க.இ.க., தமிழ்நாடு

__________________________________________________

மே நாள் சூளுரை!

· தொழிலாளி வர்க்கமாய் ஒன்றிணைவோம்!

· போராடிப் பெற்ற உரிமைகளை மீட்டெடுப்போம்!

· முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிப்போம்!

· போலி ஜனநாயக மயக்கத்தை விட்டொழிப்போம்!

· நாடாளுமன்றத்தை புறக்கணிப்போம்!

· புதிய ஜனநாயகப் புரட்சிக்கு திரண்டெழுவோம்!

___________________________________

மக்கள் கலை இலக்கியக் கழகம்
விவசாயிகள் விடுதலை முன்னணி
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி

______________________________________________________

வாசகர்களும், பதிவர்களும் இந்த மே தின நிகழ்ச்சிக்கு வருமாறு அழைக்கிறோம். சென்னையில் உள்ள நண்பர்கள் வினவுத் தோழர்களுடன் சேர்ந்து வரலாம். காலை ஒன்பது மணி அளவில் கிளம்பி புதுச்சேரி சென்று, ஊர்வலம், பொதுக்கூட்டம் நிகழ்ச்சிகள் முடிந்த உடன் சென்னை திரும்பலாம். தொழிலாளி வர்க்க தினத்தில் பங்கேற்பதன் மூலம் நமது சமூக வாழ்க்கை தொடங்கட்டும்.

வாருங்கள், நாம் வென்று காட்டுவதற்கு ஒரு உலகம் அழைக்கிறது !
அதை
செய்து காட்டுவதற்கு ஒரு வாழ்க்கையும் இருக்கிறது !!

தொடர்புக்கு: வினவு – 97100 82506

______________________________________________________

vote-012

தொடர்புடைய பதிவுகள்

 1. நன்றி தோழர் வினவு,

  //அறிமுகப் பிரசுரம் மென்நூல் (PDF)
  நிகழ்ச்சி நிரல் பிரசுரம் மென்நூல் (PDF) //

  மேற்கண்ட இரண்டு லிங்க்கிலும் ஒரே கோப்பு தான் உள்ளது

 2. அட்வான்ஸ் மேதின வாழ்த்துக்கள் !!!

  உழைக்கும் தொழிலாளர்கள் வாழ்க ! அவர்தம் ஒற்றுமை ஓங்குக !!!

  அறிவுடைநம்பி

 3. வினவிற்கு மே தின வாழ்த்துக்கள், புதுச்சேரி நிகழ்ச்சியில் நானும் என் நண்பர்களும் கலந்துகொள்வோம், முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிப்போம்! தொழிலாளி வர்க்கமாய் ஒன்றிணைவோம்!!!….
  நன்றி தோழர் வினவு.

 4. “மக்களின் வாழ்வுரிமை பறிப்பும் தொழிலாளர்கள் மற்றும் மக்கள் மீதான தாக்குதல்களும் ‘தேசத்தின் வளர்ச்சி’ என்ற பெயரால் நியாயப்படுத்தப்படுகிறது.” இது அதிகமாகிக்கொண்டே வருகிறது, இந்தியாவை இத்தாலிகாரர்களிடம் அடகு வைத்துவிட்டோம்

 5. போராட்டம் புரட்சியாக வெடிக்க வாழ்த்துக்கள் ……

  தொழிலாளர்கள் ,இளைஞர் களின் உணர்வுகளை தட்டி எழுப்ப வேண்டும் …

  கலகத்தை உண்டுபண்ணும் தோழர்களுக்கு மே தின வாழ்த்துக்கள் ..

 6. He believes that contact with such a ALIEN species could be devastating for humanity, and suggests that aliens might raid Earth for its resources and then move on: “We only have to look at ourselves to see how intelligent life might develop into something we wouldn’t want to meet.
  “I imagine they might exist in massive ships, having used up all the resources from their home planet. Such advanced aliens would perhaps become nomads, looking to conquer and colonise whatever planets they can reach.” –Astrophysicist Stephen Hawking holds a news conference at the Kennedy Space Center landing strip in Cape Canaveral, Florida, on April 26, 2007, prior to floating weightless on a zero-gravity jet.

 7. அணைத்து உழைப்பாளிகளுக்கும் ( தொழிலாளர்கலாகட்டும் அல்லது முதலாளியாகட்டும் ) நம்முடைய மே தின வாழ்த்துக்கள்.

  • மே நாளே முதலில் வாழ்த்து சொல்வதற்கான நாள் அல்ல.
   ஆனா மோட்டுவளை அதற்கும் மேல போயி முதலாளிக்கு வேற வாழ்த்து !
   அதியமானுக்கு சொல்லுங்க உங்க வாழ்த்த‌..
   நானும் ஒரு காலத்துல என்று ஆரம்பிப்பார்..

   • அதியமானை வம்புக்கு இழுக்கும் உங்கள் புரட்சி ஓங்குக. ரொம்ப அருமையான புரட்சி. உம் புரட்சிக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.

    • அதியமான என்னா வம்புக்கு இழுத்தேன் ?
     அவரு சில காமெடி கதைகளை அப்பப்போ சொல்லுவாரு, அதை அப்பப்போ சொல்லாட்டி அதியமான் அண்ணனுக்கு அழுகாச்சியே வந்துரும்.

     முத‌லாவது ஸ்டாலின் மாவோ சர்வாதிகாரம்.

     இரண்டாவது தொழிலாளியின் உயிரை பிழிந்து முதலாளி திருடும் உபரி மதிப்பு மாயை என்கிற மயாவாதம்.

     மூன்றாவது நானும் தொழிலாளி தாம்பா என்கிற கேட்டுக்கேட்டு புளிச்சுப்போன0 டயலாக்.

     இந்த‌ மூனாவது டயக்லாக்குக்கா உங்க வாழ்த்தை அவருக்கு சொல்லுங்கன்னு சொன்னேன் இதுல என்னப்பா தப்பு ?

 8. பூர்விக குடிகளுக்கு எதிராக(இலங்கை வன்னிமக்கள்,ஒரிசா,சர்டிஷ்கர்,ஜார்கண்ட் மக்கள்) ஏகாதிபத்திய(பிலிநேயர்கள்,கார்பரேட் நிறுவனங்கள்) சதிகளை முறியடிப்போம்!.அப்படியில்லாமல்…
  பூர்விக குடிகள் என்றவுடன்,”தலித்துக்களும்,பழங்குடிகளும்” மட்டும்தான் என்று தலித் சிறுத்தைகள்,தெலுங்கு மாவோயிஸ்டுகள்?,அம்பேத்கார் படை,சொறி,சிரங்கு என்று முத்திரை குத்திக்கொண்டு வந்தால்(காலனித்துவ சதி) மற்றவர்களெல்லாம்,என்ன வந்தேறு குடிகளா?.
  டாக்டர் அம்பேத்கார் அவர்கள் “ஒரு பூர்விக குடி” ஆனால் அவர் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் எழுதியபோது?,”ETERNITY CLAUSE” என்ற இந்திய “பூர்விகத்தை” பிதிபலித்தாரா?.தன்னுடைய “பிரிட்டிஷ் கல்வியை” பயன்படுத்தி,காப்பியடித்தார்!.
  Omvedt posits that Hindutva groups foster an ethnic definition of Hinduism based on geography, ancestry and heritage in order to create a solidarity amongst various castes, despite the prevalence of caste-based discrimination.According to academic Gail Omvedt: “Ambedkar’s Buddhism seemingly differs from that of those who accepted by faith, who ‘go for refuge’ and accept the canon. This much is clear from its basis: it does not accept in totality the scriptures of the Theravada, the Mahayana, or the Vajrayana. The question that is then clearly put forth: is a fourth yana, a Navayana, a kind of modernistic Enlightenment version of the Dhamma really possible within the framework of Buddhism?”.Most Dalit Indian Buddhists espouse an eclectic version of Buddhism, primarily based on “THERAVADA”, but with additional influences from Mahayana and Vajrayana. On many subjects, they give Buddhism a distinctive interpretation. Of particular note is their emphasis on Shakyamuni Buddha as a political and social reformer, rather than merely as a spiritual leader.Ormvedt’s idea of an ‘Enlightenment version of the dharma’ opposed to a traditional ‘acceptance by faith’ is a misapplication of Western categories, since the Buddha encouraged people to put all teachings – including his own – to critical test and not to accept anything on the basis of tradition.Hindu critics have argued that efforts to convert Hindus to Ambedkarite Buddhism are political stunts rather than sincere commitments to social reform.Siddhartha was born in Lumbini and raised in the small kingdom or principality of Kapilvastu, both of which are in modern day Nepal. At the time of the Buddha’s birth, the area was at or beyond the boundary of Vedic civilization, the dominant culture of northern India at the time; it is even possible that his mother tongue was not an Indo-Aryan language.The Buddha’s community does not seem to have had a “CASTE SYSTEM”.THE INTERPRETATION OF BUDDHIST TEXTS IN fourth yana, a Navayana, a kind of modernistic Enlightenment version OF THERAVADA BUDDHISM, IS OF FUNDAMENTALIST NATURE”!.

 9. பூர்விக குடிகளுக்கு எதிரான….
  “DALITH PANTHERS” was formed in “MAHARASHTRA” as a American “CIA” Agent with “PL-480 FUNDS” DURING COLD WAR PERIOD against CONGRESSI,now Dalith panthers is with congress!.
  I was born in Minneapolis, went to Carleton College, and came out to Berkeley only after my first year in India, in 1963-64, returning to India in 1970-71 to do my Ph. D. dissertation and then to finally ?settle? there in 1978. So I have taken something of the ?great years? of the 60s from Berkeley to India � and vice versa! When trying to combine living in India and teaching at San Diego didn?t work, I quit and went to India. I had married into a middle caste (?Bahujan?) ?rich peasant? farming family in western India and have ?settled? in the large ?village? of Kasegaon (my daughter calls it a ?town? in her poems but by Indian definition it?s a village) in southern Maharashtra, with Bharat and other members of an Indian joint family. I?ve been an Indian citizen since 1983. — Iam no more as a CIA agent with PL-480 funds – GAIL OMVEDT.

 10. திரு ப..சித்சம்பரம் அவர்களும்,புலம்பெயர்ந்த இலங்கைத்தமிழர்களும், கவிஞ்சர்? கனிமொழியும்(ஜி.கே.மூப்பனார்தான் கனிமொழிக்கும்,திருமாவளவனுக்கும் பாலமாக இருந்தவர்- ஏனேன்று அவருக்குதான் வெளிச்சம்),”அமெரிக்க என்ன சொல்லுகிறதோ அதை அப்படியே,சொந்த அறிவில்லாமல்,கிளிப்பிள்ளை போல் கக்குகிறார்கள்!..அதனால்தான் தங்கள் அடிமடியிலேயே,”அமேரிக்கா கைவைத்தபோது(இலங்கை வன்னி மக்களின் முள்ளிய வாய்க்கால்)”,இவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை!.இதற்கு  இவர்களின்,தேசியம்,மொழி,இனம்,என்றில்லாமல்,”அட்லிஸ்ட்” இந்தியா – இலங்கை என்ற பிராந்திய உணர்வுகுட இல்லாமல், “ஜாதி,குடும்பம்..” போன்ற “SECTARIAN”” உணர்வுடனேயே செயல்பட்டார்கள்!THERE IS A SYSTAMATICAL DISTRUCTION OF “TAMILS AS A ETHNIC GROUP”!.AMERICAN SOCIETY WAS A UNCULTURAL SOCIETY,WHICH WAS MEDIATED BY THA EUROPEANS TO UNDERSTAND THE “SO CALLED ORIENT” IN 19 th CENTURY.NOW INDEED, THE UNDERSTANDING WAS DEVELOPED,SO IT IS NOT THE LACK OF UNDERSTANDING,IT IS THE LAVK OF CONCERN(யார் குத்தி அரிசியானால் என்ன).Paul Carus(A German – American in 1890s):Carus approached Oriental thought from a positionhe identified philosophically as “Monism.” He wasstrongly convinced that Western thought had falleninto error early in its development when it hadaccepted distinctions between body and mind and thematerial and the spiritual. Kant had formalized thisdualism in Western philosophy when he had dividedthe field of knowledge between the phenomenal andthe noumenal realms; and Christianity had rooted itin the Western religious viewpoint when it had differ-entiated between the soul and the body, and the naturaland the supernatural. Rejecting such dualisms, Caruslooked to science to reestablish the unity of knowledge.The philosophical result he labeled “Monism.” Heshowed special concern at the growing split betweenscience and religion, advocating a scientific religion asthe need of the age. Such a religion must combine thehighest ethical teachings with the most rigorousempirical procedures; it must, he declared, be both a“Science of Religion” and a “Religion of Science.”Drawing upon the increasing evidence of historical andcomparative religious studies, he came to believe thatBuddhism offered the best hope of reconciliation.

 11. ஒரு பொதுக்கூட்டம் நடத்துவதற்கே தொடைநடுங்கும் கோழைகள் பழங்குடிமக்களை ஜெயிக்கப்போகிறதாம்.  

 12. நேற்று நடக்க இருந்த மே தினப் பேரணி, பொதுக்கூட்டத்திற்கான அனுமதி புதுச்சேரி காங்கிரசு அரசு மறுத்துவிட்டது. தடையை மீறி மறியல் செய்து சில ஆயிரம் தோழர்கள் கைது. பிறகு இரவு விடுதலை செய்ததாக செய்தி சொன்னார்கள். தொழிலாளர்களின் அடிப்படை உரிமையான ஒரு மே தின பேரணியையும், பொதுக்கூட்ட அனுமதி என்ற ஜனநாயக உரிமையை மறுக்கும் காங்கிரசின் பாசிச போக்கை வன்மையாக கண்டிக்க வேண்டும்.

  விரிவான செய்தியை வினவில் விரைவில் எதிர்பார்க்கிறோம்.

 13. மே தினகூட்டத்துக்கு அனுமதி மறுப்பு;​ சாலைமறியல்

  First Published : 02 May 2010 01:04:45 AM IST – தினமணி

  புதுச்சேரி,​​ மே 1:​ புதுவையில் மே தின பொதுக்கூட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டதால் சாலைமறியலில் ஈடுபட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போலீஸôரால் கைது செய்யப்பட்டனர்.​ ​

  ​ புதுவை பழைய பேருந்து நிலையம் அருகில் மே தின பொதுக்கூட்டம் நடத்த புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி மற்றும் பல்வேறு இயக்கங்கள் சார்பில் உருளையான்பேட்டை காவல்நிலையத்தில் அனுமதி கோரப்பட்டுள்ளது.​ ​ ​

  ​ பாதுகாப்பு காரணங்களுக்காக போலீஸôர் கூட்டத்துக்கு அனுமதி மறுத்துள்ளனர்.​

  இருப்பினும் ​ புதுவை மற்றும் தமிழகத்திலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பழைய பேருந்து நிலையம் அருகே கூடினர்.​ இதையறிந்த ​ போலீஸôர் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.​

  அதனால் இங்கு கூடக்கூடாது என்று தெரிவித்துள்ளனர்.​ ​

  ​ அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து புதிய பேருந்துநிலையம் அவர்கள் அருகே சாலை மறியிலில் ஈடுபட்டனர்.​ அவர்களை உருளையான்பேட்டை போலீஸôர் கைது செய்தனர்

 14. முதலில் நாம் புதுச்சேரி அரசிற்கு நன்றி சொல்ல வேண்டும்.
  மே நாள்! தொழிலாளி வர்க்கம் தமது உரிமைகளைப் போராடி வென்ற நாள். அதற்கேற்ப பேரணி மற்றும் பொதுக்கூட்டங்கள் நடத்த அரசு அனுமதி மறுத்ததன் மூலம் மேநாளை போராட்டத்துடன் கொண்டாட நமக்கு வாய்ப்பேற்படுத்திக்கொடுத்தது. இறுதிவரை முழக்கமிட்டு போராடிய தோழர்களின் போராட்ட உணர்வைக் கண்ட மக்கள் பாராட்டினர். தோழர்களின் விண்ணதிர் முழக்கங்கள் புதுவை பஸ்நிலையம் சுற்றிலும் போதையுடன் தள்ளாடிக்கொண்டிருந்த குடிமகன்களின் போதையையே தெளியவைத்தது. தோழர்களின் போராட்ட்த்தின் போது அவ்வழியே விஜயகாந்த் பாடலுடன் AICITU கொடியுடன் சென்ற ஆட்டோவைக் கண்ட பலர் குழப்பமடைந்தனர். அவர்களுக்கு நாங்கள் அவர்களில்லை (போலிகள்). நாங்கள் வேறு அவர்கள் வேறு (போலிகள்) என்று மக்களுக்கு புரியவைத்தபோது மக்களில் பலர் ”அதானே பார்த்தேன்” என்று கூறியதுதான் ஹைலைட். 
  இது புதுவைக்கு புது அனுபவம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க