Thursday, May 30, 2024
முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்மதுரவாயல் ரவுடி யோசுவாவை வீழ்த்திய பள்ளி மாணவர்கள் !!

மதுரவாயல் ரவுடி யோசுவாவை வீழ்த்திய பள்ளி மாணவர்கள் !!

-

இரண்டு பள்ளி மாணவர்களுக்கு எதிராக, அனைத்து   ஓட்டுக் கட்சிகளூம், ஆளும் வர்க்கமும் ஓரணியில் சேர்ந்து நிற்பதை உங்களால் நினைத்துப் பார்க்க முடியுமா? நினைத்துப் பார்ப்பதென்ன? நேரிலேயே பார்க்க முடியும், சென்னை, மதுரவாயில் பகுதிக்கு வந்தால்; காரணம் வேறொன்றுமில்லை, அவர்கள் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியில் இருப்பவர்கள் என்பதுதான்.

தமிழகத்திலேயே தரங்கெட்ட பள்ளிகளைப் பட்டியலிட்டால், அதில் முதலிடம் பிடிப்பது மதுரவாயல் அரசு மேல்நிலைப் பள்ளியாகத்தான் இருக்கும். வகுப்பறை, கழிப்பறை, ஆசிரியர் எல்லோமே பிரச்சனைதான். பதின்வயது மாணவர்களைப் பண்பாட்டுச் சீரழிவின் உச்சகட்டத்தில் ஆழ்த்தியிருப்பதும் இங்குதான். இந்த லட்சணத்தில் பெற்றோர் ஆசிரியர் கழகம் என்ற பெயரில், கட்டாய நன்கொடையாக பல லட்சம் ரூபாயைக் கொள்ளையடித்தனர். இவை எல்லாவற்றிற்கும் தலைமை தாங்கி நடத்தி வந்த “மகாத்மா” பகுஜன் சமாஜ் கட்சியின் சிறுபான்மையினர் பிரிவின் மாநிலத் தலைவரும், உள்ளுர் ரவுடியுமான டி.பி. யோசுவா.

மதுரவாயல், பிள்ளையார் கோவில் பகுதியை மையமாகக் கொண்டு, சுற்றுப் பகுதிகளில் இயங்கிவரும் பு.மா.இ.மு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு, பள்ளி மாணவர்களையும், பகுதி மக்களையும் திரட்டி, பள்ளியை முற்றுகையிட்டு, கட்டாய நன்கொடையை ஒழித்துக்கட்டியது, மேலும் யோசுவா உள்ளிட்டோரின் சாதி அரசியலை முறியடிக்கும் விதமாக, பகுதி இளைஞகளைத் தன் கீழ் அணி திரட்டவும் தொடங்கியது.

பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்க துணைத் தலைவராக இருந்து கொள்ளை அடித்து வந்த யோசுவா, வருமானமும் இல்லாமல் அரசியல் அடித்தளமும் ஆட்டம் காணத் தொடங்கியதால் எப்படியேனும் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளவும், வஞ்சம் தீர்க்கவும் துடித்து கொண்டிருந்த சமயத்தில், அவனுக்கு வாய்ப்பாக அமைந்தது, கடந்த 13ஆம் தேதி பள்ளியில் நடந்த சம்பவம்

13ஆம் தேதி காலை 10.30 மணியளவில், வழக்கம் போல, ஆசிரியர் ஒருவர், 11ஆம் வகுப்பு மாணவன் ஒருவனை தரக்குறைவாகப் பேசி, அடித்திருக்கிறார், இந்த சம்பவம் பற்றி பள்ளியில் உள்ள பு.மா.இ.மு தோழர்களுக்கு தெரியவந்ததும், சம்பந்தப்பட்ட அசிரியரிடம் சென்று தட்டிக் கேட்டனர். அவரோ மீண்டும் தனது பாணியில்  ஏளனமாகப் பேசவே, சக மாணவர்களை அழைத்துக் கொண்டு தலைமை ஆசிரியரிடம் முறையிட, அவரும் முதலில், மதிக்காமல், திட்டியிருக்கிறார். பின்னர் முறையீடு, முற்றுகையாக மாறியது. நூற்றுக்கணக்கான மாணவர்கள் திரளவே தலைமை ஆசிரியர் சமாதானம் பேச இறங்கியிருக்கிறார்

மாணவர்களோ, “சம்பந்தபட்ட ஆசிரியர் மன்னிப்பு கேட்க வேண்டும், இனி இது போல நடக்காமலிருக்க உறுதி கூற வேண்டும்” என்று ஜனநாயக முறையில் கோரிக்கையை முன்வைத்தனர். ஆசிரியர்களின் “பாரம்பரிய உரிமையைப்” பறிக்கும் இந்த கோரிக்கையையும், மேலும் மேலும் ஒன்று சேரும் மாணவர்களையும், கண்ட, யோசுவாவின் விசுவாசிகளான சில ஆசிரியர்கள், யோசுவாவிற்கு தகவல் தந்தனர்.

தலைமையாசிரியர் முன்னிலையில், மாணவனை அடித்த ஆசிரியர் மன்னிப்பு கேட்பதாக கூறினார். பிரச்சினை முடிவுக்கு வரும் நேரத்தில், யோசுவா தலைமையில் 10 பேர் கொண்ட கும்பல் திடீரென உள்ளே நுழைந்து, எதுவும் பேசாமல் கண்மூடித்தனமாக குழுமியிருந்த மாணவர்களைத் தாக்கத் தொடங்கியது. பு.மா.இ.முவைச் சேர்ந்த ஆனந்தன், யோசுவாவிடம், “உனக்கும், இந்த பள்ளிக்கும் என்ன தொடர்பு? எந்த அடிப்படையில் எங்களை அடிக்கிறாய்?” என்று கேட்டதுதான் தாமதம், “என்னையே கேள்வி கேட்கிறாயா? நான் யார் தெரியுமா?” என வசனம் பேசிய யோசுவா, கையில் கிடைத்த கட்டை, கம்பி, செங்கல்,செருப்பு என எடுத்து வீசினான். தடுக்க வந்த தலைமை ஆசிரியர், மற்ற ஆசிரியர்களுக்கும் அடிவிழுந்தது, தனது வெறி தீர அடித்த பின்பு எல்லோரையும் மிரட்டி விட்டுச் சென்றான் யோசுவா.

தகவல் அறிந்து உடனடியாகப் பள்ளிக்கு வந்த, மதுரவாயல் பகுதி பு.மா.இ.மு செயலாளர் தோழர் செந்திலிடம், தலைமையாசிரியர் வருத்தமும் மன்னிப்பும் தெரிவித்து, தங்களையும் மீறி இச்சம்பவம் நடந்து விட்டது, இனி இதுபோல் நடக்காமல் பார்த்துக் கொள்வதாக உறுதியளித்தார். மேலும் பள்ளி நேரத்தில் வெளியே நின்ற மாணவர்கள், தோழர் செந்தில் சொன்னவுடன் வகுப்பறைக்கு அமைதியாக சென்றது கண்டு ஆசிரியர்கள் ஆச்சரியப்பட்டனர்.

தலைமையாசிரியர், மாணவர்களை சமாதானப் படுத்தி அனுப்பி வைத்து பிரச்சினையை முடித்திருக்கலாம். ஆனால் யோசுவாவிற்கோ, தன்னை எதிர்து ஒரு சிறுவன் கேள்வி கேட்டுவிட்டானே, என்று உறுத்தத் தொடங்கியது. தன்னை ஒரு ரவுடியாக நிலைநாட்ட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்ட யோசுவா, தனது மகன் சாந்த குமார் தலைமையில், உள்ளூர் பொறுக்கிகள் 30 பேரை திரட்டி பள்ளிக்கு வெளியே நிற்க வைத்தான்.

யோசுவாவின், அல்லக்கைகள் எல்லோருமே அவனை’அப்பா’ என்றுதான் கூப்பிடுவார்கள். ‘அப்பாவையே எதிர்த்து ஒருவன் அதுவும் ஒரு பள்ளி மாணவன் பேசிட்டானா? என்று ஆத்திரம் பொங்கியது அவர்களுக்கு.

மாலை 3 மணிக்கு பள்ளி இடைவெளியின்போது ஆனந்தனிடம் சக வகுப்பு மாணவன், வா வெளியே சென்று பேசலாம் என அழைக்க, கூடவே மணியும் உடன் சென்றார். காம்பவுண்டு சுவரை எட்டிப் பார்த்ததும், யோசுவாவின் ஆட்கள், இருவரையும் வெளியே இழுத்துக் கொண்டனர். பள்ளிக்குப் பின்புறம் உள்ள யோசுவா வீட்டருகே இழுத்துச் சென்று அடிக்கத் தொடங்கினர். பரமபிதாவின் தூதர் பெயரைக் கொண்டவனும் மாயாவதி கட்சியின் சிறுபான்மைப் பிரிவு மாநிலத் தலைவனான யோசுவா, இருபள்ளி மாணவர்களை உருட்டுக்கட்டையால் அடிபடுவதைக் கண்டு பரமானந்தம் கொண்டான். மயங்கி விழுந்தவர்களைத் தட்டியெழுப்பி , “இனிமேல் ஏதாவது பேசினால் கொன்றுவிடுவேன்” என்று மிரட்டி, மீட்க வந்த ஆசிரியர்களுடன் அனுப்பினான்.

“முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்” என்பது யோசுவாவிற்கு பாரதூரமாகப் பொருந்தி விட்டது. 3 மணிக்கு, ஆள் வைத்து அடித்து , தன்னை ரவுடியாக நிலைநாட்டிக் கொண்டதாக நினைத்தவனின் சந்தோசத்தில் மண்ணள்ளிப்போட , பு.மா. இ.மு தோழர்கள் சற்று நேரத்தில் வந்து விட்டனர்.

தலைமை ஆசிரியர்,தனது பழைய பல்லவியை மீண்டும் பாட,தோழர்கள், இனி நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என, அடிப்பட்டவர்களை உடனடியாக முதலுதவிக்கு அழைத்துச் சென்று , பின்பு மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்து வழக்கு பதிவு செய்தனர்.

சென்னைப் பொது மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட அந்த மாணவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கபட்டனர் .

அன்று மாலையே பள்ளி மாணவர்கள் சுமார் நூறுபேர் , காவல் நிலையம் வந்து , தோழர்களைச் சந்தித்து, யோசுவாவை உதைக்காமல் விடக்கூடாது என வலியுறுத்தத் தொடங்கினர். பகுதி முழுவதும் பரபரப்பாகி விட , வழக்கைப் பதிவு செய்த போலிசு, பொறுக்கி யோசுவாவிற்கு பு.மா.இ.மு.வின் அரசியலைப் போதனை செய்திருக்கிறது. அதனால் உஷாரான மாநிலத்தலைவரும் , மகனும் மாயமாகிவிட்டார்கள்.

தோழர்களுக்கு யார் யாரோ போன் போட்டு , “சமாதானமாகப் போகலாம்/ வழக்கை வாபஸ் பெறுங்கள்” என்று , பேச”எதை , எப்படிச் செய்வதென எங்களுக்குத் தெரியும்” என்றார்கள் தோழர்கள். வேறு வழியின்றி , யோசுவாவின் அடியாட்கள் இரண்டுபேரை உடனடியாகக் கைது செய்தது போலிசு. பு.மா.இ.மு பற்றி யோசுவாவுக்கு தெரியுமோ இல்லையோ மதுரவாயல் போலீசுக்கு நன்றாகவே தெரியும். அடுத்து என்ன செய்யப் போகிறிர்கள்? என நச்சரிக்கத் தொடங்கினர்.

15 ம் தேதி காலையில் , பள்ளி மாணவர்கள் , கல்லூரி மாணவர்கள் , பகுதி இளைஞர்களும் என 500 க்கும் மேற்பட்டோர் பு.மா.இ.மு தலைமையில் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு , கொலைகார ரவுடி யோசுவாவையும் , அவன் மகனையும் கைது சிறையிலடைக்க வேண்டுமென முழக்கமிட்டனர்.

கூட்டத்தை கலைக்க வந்த அதிரடிப்படை போலீசை மதுரவாயல் போலீசார் திருப்பி அனுப்பினார். யோசுவாவை கைது செய்து, துணைக் கமிஷ்னர் அலுவலகத்தில் வைத்திருப்பதாகக் கூறி , தோழர்களை அழைத்துச்சென்று நேரில் காட்டி , விரைவில் அவன் மகனையும் பிடித்து விடுவதாகவும் , போராட்டத்தைக் கைவிடுமாறும் கூறினர். நமக்கு போலீசை பற்றியும் தெரியும். ஆனால் மதுரவாயலில் எல்லாரையும் பயமுறுத்தி வந்த , உள்ளுர் பொறுக்கிகளால் சிங்கம் போல சித்தரிக்கப்பட்ட ஒரு ரவுடி இப்போதும் பயந்து போய் போலீசிடம் தஞ்சம் புகுந்திருக்கிறான். என்பது தான் முக்கியம். இப்போது யோசுவாவிற்கு வேண்டப்பட்டவர்களே, பள்ளி மாணவர்களை அடித்தது கண்டு காறித்துப்புகிறார்கள். அல்லக்கைகளே பயத்தில் கிலியாகி பதுங்கி கொண்டிருக்கிறார்கள்.

இப்போது யோசுவாவிற்கு ஆதரவாக அனைத்துக் கட்சி ஆர்ப்பாட்டம் நடக்க போவதாய் தகவல் வந்திருக்கிறது. இதுவரை தமக்குள் அடித்துக் கொண்ட ஓட்டுப் பொறுக்கிகள், இப்போது ஒன்று சேர்கிறார்கள். அதற்கு உறுதுணையாய் நிற்கப் போவது அரசுதான் என்பது சந்தேகமில்லை. ஏனெனில் அவர்களுக்கு எதிராக நிற்பது வெறும் பள்ளி மாணவர்கள் அல்ல, பு.மா.இ.மு வால் புடம் போடப்பட்ட பகத்சிங்கின் வாரிசுகள்.

ஏதாவது ஒரு அரசியல் கட்சியில் இணைத்துக் கொண்டு உள்ளூர் அரசு நிறுவனங்கள், பள்ளிகள், ரியல் எஸ்டேட் என்று மோசடி செய்து சம்பாதிக்கும் இத்தகைய ரவுடிகள் ஒவ்வொரு ஊரிலும் இருக்கத்தான் செய்கின்றனர். அந்த பகுதியின் எந்த பிரச்சினையும் இவர்களது கட்டப்பஞ்சாயத்தில்தான் அபராதத்துடன் தீர்க்கப்படும். சமூகத்தின் ஒட்டுண்ணிகளாக பெருத்து நிற்கும் இத்தகைய கழிவுகளை மக்கள் சக்தியைத் திரட்டினால் நிச்சயம் வீழ்த்த முடியும் என்பதற்கு மதுரவாயில் மாணவர்கள் பு.மா.இ.மு தலைமையில் வழிகாட்டியிருக்கின்றனர்.

__________________________________________________________
படங்களை பெரியதாக பார்க்க அதன் மீது சொடுக்கவும்

RSYF-Maduravoyal-புமாஇமு-மதுரவாயல்RSYF-Maduravoyal-புமாஇமு-மதுரவாயல்RSYF-Maduravoyal-புமாஇமு-மதுரவாயல்RSYF-Maduravoyal-புமாஇமு-மதுரவாயல்RSYF-Maduravoyal-புமாஇமு-மதுரவாயல்RSYF-Maduravoyal-புமாஇமு-மதுரவாயல்RSYF-Maduravoyal-புமாஇமு-மதுரவாயல்RSYF-Maduravoyal-புமாஇமு-மதுரவாயல்RSYF-Maduravoyal-புமாஇமு-மதுரவாயல்RSYF-Maduravoyal-புமாஇமு-மதுரவாயல்RSYF-Maduravoyal-புமாஇமு-மதுரவாயல்RSYF-Maduravoyal-புமாஇமு-மதுரவாயல்RSYF-Maduravoyal-புமாஇமு-மதுரவாயல்RSYF-Maduravoyal-புமாஇமு-மதுரவாயல்RSYF-Maduravoyal-புமாஇமு-மதுரவாயல்RSYF-Maduravoyal-புமாஇமு-மதுரவாயல்RSYF-Maduravoyal-புமாஇமு-மதுரவாயல்RSYF-Maduravoyal-புமாஇமு-மதுரவாயல்RSYF-Maduravoyal-புமாஇமு-மதுரவாயல்RSYF-Maduravoyal-புமாஇமு-மதுரவாயல்

_________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

 1. மதுரவாயில் ரவுடி யோசுவாவை வீழ்த்திய பள்ளி மாணவர்கள் !!…

  இரண்டு பள்ளி மாணவர்களுக்கு எதிராக, அனைத்து ஓட்டுக் கட்சிகளூம், ஆளும் வர்க்கமும் ஓரணியில் சேர்ந்து நிற்பதை உங்களால் நினைத்துப் பார்க்க முடியுமா?…

 2. Congrats Comrades & Students,
  Such Rowdies should be taught a Good Lesson. Another appreciable act of Comrades & Students is that even though that rowdy has behaved in an unlawful way, you have acted in a democratic/lawful manner. Another more congrats for Comrades for training students in a Good manner.

 3. […] This post was mentioned on Twitter by வினவு and yathirigan, sandanamullai. sandanamullai said: RT @vinavu: மதுரவாயல் ரவுடி யோசுவாவை வீழ்த்திய பள்ளி மாணவர்கள் !! https://www.vinavu.com/2010/10/26/rsyf-maduravayol/ […]

 4. பச்சை மிளகாய் காரம் உரைக்க வேண்டியவர்களுக்கு சரியாக உரைக்கிறது.

 5. RSYF தோழர்களுக்கு வாழ்த்துக்கள்.. உற்சாகமான செய்தி..!

  பெற்றோர் ஆசிரியர் கழகம் என்பதை நானும் கூட இத்தனை நாளாய் உண்மையிலேயே பெற்றோர்களும் ஆசிரியர்களும் சேர்ந்து நடத்துவது என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.
  இப்போது தான் சரியாக விளங்குகிறது – அது அந்தந்த பகுதி ரவுடிகளும் பள்ளி நிர்வாகமும் சேர்ந்து கொண்டு மாணவர்களிடம் வசூல் செய்து பொறுக்கித் தின்ன உருவாக்கப்பட்டது
  என்பது.

  போராட்ட வெற்றிகளையும் சமூக மாற்றத்தையும் எண்ணிக்கை தீர்மாணிப்பதில்லை என்பதை ‘யானைக்கால் வியாதிக் கட்சிகளின்’ இணைய தொண்டர்கள் புரிந்து கொள்ளட்டும். அது அரசியல் தெளிவோடு கூடிய உறுதியானவர்களால் தான் சாதிக்கப்படுகிறது என்பதற்கு இது ஒரு துலக்கமான உதாரணம்.

 6. தலித் அரசியலை ஆதாரமாகவைத்துக்கொண்டு பிழைப்பு நடத்தும் இந்த ஓட்டுபொறிக்கிகளுக்கு இந்த போராட்டம் ஒரு சம்மட்டி அடியாகும்.

 7. மாணவர்கள் தாக்கப்பட்டதை அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களையும் திரட்டி கண்டித்து இந்த அயோக்கியர்களை முறியடிக்க வேண்டும். சென்னையின் மூலை முடுக்கெல்லாம் இந்த ரவுடிகள் + அரசு கூட்டை அம்பலப்படுத்க்ட வேண்டும் பிரச்சாரங்கள் மூலமாக…

  கலகம்

 8. வடநாட்டில் மனித மலத்தை மனிதன் சுமக்கும் கொடுமை நடக்காமல் பார்த்துக்கொள்ள கண்காணிப்புக் கமிட்டி போட்டிருக்கிறார்களாம்.. செய்தி.

  இங்கே, தமிழக தொழிலாளர் மத்தியில் மாவோயிஸ்ட் ஊடுருவல் என்ற பெயரில், சமுதாய மலங்களை அப்புறப்படுத்தத் தோள்கொடுப்போரை வேவுபார்க்க படைபலத்தை ”க்யூ”வில் நிறுத்தியிருக்கிறாறாம் லத்தி.. இதுவும் செய்தி.

  பகத்சிங்கின் வாரிசுகளே.. வாழ்த்துக்கள்.

 9. பள்ளி மாணவர்களுக்கு, புரட்சி அமைப்புகளுடன் தொடர்பு எதற்கு?உருப்பட விடமாட்டீர்களா?

  போராட ஆள் கிடைக்கவில்லையென, பள்ளி மாணவர்களை,உங்கள் அமைப்புகளில் இழுத்து போடுகிறீர்களே, வெட்கமாக இல்லை?

  ரவுடிகளுடன் மோதும் அளவுக்கு, மாணவர்களை பெரிய ரவுடிகளாக மாற்றியதில், என்ன பெருமை?

  இதை வாழ்த்தி பதிவு வேறு! ஜால்ரா பின்னூட்டங்கள் வேறு!

  • rammy அவர்களே இதை தெரிவிக்க உங்களுக்கு வெக்கமா இல்லையா?

   மானவர்கல்னா வாத்தியாருங்க சொல்றதெல்லாம் செய்யணும் சூ கழுவி குளுப்பட்டி விடனும், என்ன திட்டினாலும் அத கேட்டு சகிச்சுக்கிட்டு இருக்கணும், மோத்ததுள்ள ஒரு நடை பிணமா இருக்கணும், அவர்களை அவர்கள் பெற்றோர்கள் படிக்க அனுப்பினார்களா இல்லை வாத்திகல்லுக்கு சேவை செய்ய அனுப்பினார்களா,

   அந்த காலத்தில பாப்பன் கிட்ட போய் படிச்சப்ப மாணவர்களுக்கு என்ன நிலை இருந்ததோ அதைவிட இப்போ உள்ள பள்ளிகளில் மிக அதிகமாக கொடுமைகள் நடக்கின்றன,

   ஆக ஒரு ரவுடி, உரிமையை கேட்ட மாணவர்களை அடியாட்கள் வைத்து பள்ளிகுல்லேயே வந்து தாக்குவான், அத பார்த்துகிட்டு வாயையும் ..யும் வடிவேலு பானையில மூடிகிட்டு இருக்கணும், இதுதான் உங்க விருப்பம்.

   பெற்றோர்களே கலத்தில இறங்கி போராடுறாங்க உங்களுக்கு எங்க வலிக்குது, உங்க கிட்ட இதல்லாம் சொல்றதே வேஸ்ட்டு, போங்க போயி தயிர் சாதம் இருந்தா சாப்ட்டுட்டு தூங்குங்க, நாளைக்கு உங்க புள்ளைங்கள யாராவது இப்படி செஞ்சாங்கனா அப்பா உங்களுக்கு தெரியும் அந்த வலி.

   • Mr. Rajasuriyan!

    ஒரு ரவுடி வெளியே! ஒரு கும்பல் உள்ளே! = புது ரவுடிகள் உருவாக்கம்!

    // மானவர்கல்னா வாத்தியாருங்க சொல்றதெல்லாம் செய்யணும் சூ கழுவி குளுப்பட்டி விடனும், என்ன திட்டினாலும் அத கேட்டு சகிச்சுக்கிட்டு இருக்கணும், //

    //அந்த காலத்தில பாப்பன் கிட்ட போய் படிச்சப்ப மாணவர்களுக்கு என்ன நிலை இருந்ததோ அதைவிட இப்போ உள்ள பள்ளிகளில் மிக அதிகமாக கொடுமைகள் நடக்கின்றன, //

    சூத்திர வாத்தியார்களை இப்படி நாறடித்து விட்டிர்களே!

  • Rammy,

   I appriciate you… You are right. These communists are silent about atrocities committed by China, North Korea etc.

   China helped Sri Lanka in war against LTTE. Not even a single word from vianvu against China.

   Lenin/Stalin killed thousands of people and demolished all churches and mosques in Russia. Will it be the same for all the churches and mosques along with temples in india if communists come to power?

   LTTE had child soldiers. These communists also follow their footsteps.

 10. பூ.மா.இ.மு தோழர்களுக்கு செவ்வனக்கனம்,
  ஓட்டு பொருக்கி கட்சிகளுக்கு இது ஒரு சரியான சவுக்கடி, இனியாவது அவர்கள் வாலை சுருட்டிக்கொள்ள வேண்டும், இல்லையென்றால் இதுபோன்ற பல நிகழ்வுகளை அவர்கள் சந்திக்க வேண்டியிருக்கும் என்பதை நிரூபித்துவிட்டது இந்த போராட்டம்,

  உழவன் வடித்திட்ட கண்ணீரில் தோன்றி
  உயிருக்கு நிகரான செங்கொடி ஏந்தி
  திமிரில் கொழுத்த சுரண்டலின் மார்பை
  இடியாய்ப் பிளந்ததே நக்சல்பாரி- மக்கள்
  இசையாய்ப் பொழிந்ததே நக்சல்பாரி!”

  என்ற பாடல் வரிகள் நினைவுக்கு வருகிறது, இது போன்ற இன்னும் நிறைய போராட்டங்களை மேற்கொண்டு இந்த ஒட்டு போரிக்கிகளை மக்களுக்கு அடையாளம் காட்டி அவர்களை புறக்கணிப்பு செய்ய மக்களை அணி திரட்டி கொண்டுவர வேண்டும்.

  மீண்டும் நன்றி.

 11. வினவுக்கு சபாஷ்.
  இந்த கட்டுரை வினவு பற்றிய என் கண்ணோட்டத்தை மாற்றியதை பதிவு செய்கிறேன். இத்தனை நாட்களாக என் எண்ணம் – பார்ப்பனர்களை எதற்கெடுத்தாலும் இழுத்து இழிவு செய்யும், ஆண்கள் எல்லோருமே கெட்டவர்கள், இந்தியா என்றாலே வெறுப்பு, ரஷ்யாவும் சீனாவும் தான் மிக சிறந்த நாடுகள், பெண்கள் எல்லோருமே தேவதைகள், நல்லவர்கள், தலிதுகள் எதை செய்தாலும் எப்படியாவது நியாயப்படுத்திவிட வேண்டும் என்பதாகவே இருந்தது. முதல் முறையாக ஒரு தலித் அரசியல்வாதியை எதிர்த்து உண்மையை பதிவு செய்ததற்கு வாழ்த்துக்கள்…..

 12. போராடிய மாணவத் தோழர்களுக்கும் அமைப்புத்தோழர்களுக்கும் செவ்வணக்கம் . இது போன்ற எந்த அருமையான தகவல்களை பதிவுகளாகப் போட்டாலும் மலத்தை வாரி வீச இந்த சூதாட்டம் ஒன்று வந்து தனது நாற்றத்தை நம்மீது வீசிவிட்டுப் போகிறது. மற்றுமொரு நண்பர் இந்தப் பதிவைப் பார்த்துவிட்டுத்தான் தனது முடிவை மாற்றிக்கொண்டதாக கூறியுள்ளார் . ஆனால் திருமா உள்ளிட்ட பல்வேறு தலித் தலைவர்கள் பற்றி எத்தனையோ விமர்சனங்கள் செய்துள்ளிர்கள் என்பதை நண்பர் கவனிக்கத் தவறிவிட்டார். இருப்பினும் அவரது இன்றைய மாறுதலுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

  • உம் சிந்தனைகளை/செயல்களை எதிர்க்கும் தனி மனிதனை, கண்ணியக் குறைவாக்கும் மூடனே! எந்தக் கட்டுப்பாடு கொண்டு நீ கடமையாற்றப் போகிறாய்! இதுதான் உன் கொள்கையோ?அடிப்படை ஒழுக்கமில்லாத நீ சமூகத்தை திருத்தப் போகிறாயா?

 13. paaval அவர்களுக்கு ,
  என் கண்ணோட்டத்தை மாற்றியதற்காக வினவுக்கு நன்றி சொல்லும் பதிவு தான் அது. நான் என் விவாதங்களை வெளியிட்டு அதன் எதிர்வினைகளை சீர்தூக்கி அலசி தெளிவை கண்டடைவதன் பொருட்டே விவாதங்களில் பங்குபெறுகிறேன். நான் எந்த அரசியல் இயக்கத்தை சேர்ந்தவன் அல்ல. எந்த சாதி, மத அடையாளங்களை ஏற்றுக் கொண்டவனும் அல்ல. ஊடகங்களின் வழியாக நமக்கு கிடைக்கப்பெறும் செய்திகள் எவ்வளவு அரசியல் சித்தாந்த பின்புலம் கொண்டது என்பதை ஓரளவு அறிந்தவன் தான். ஒற்றைத் தன்மையான் செய்திகளை எப்போதுமே சந்தேகத்துடன் அணுகுகிறேன். கருப்பு- வெள்ளை என்ற இருமை கண்ணோட்டத்துடன் எனக்கு உவப்பில்லை. ஆனால் வினவு தளத்தில் சில நேரங்களில் விவாதிப்பவரின் தொனி ஆட்சேபிக்க வைக்கிறது. வசைகளை பிறர்மீது பொழிவதை வாடிக்கையாக காண்கிறேன். ஒரு நல்ல அறிவுத் தேடல் கொண்டவர்களுக்கு இது சரியானதல்ல. தங்களை ஒரு “ELITE” ஆக எண்ணிக் கொள்பவர்கள் செய்யும் வேலை அது. நம்மை அறிவுஜீவிகளாகவும் மக்களை ஒன்றும் தெரியாத ஆட்டுமந்தைகளாகவும் எண்ணிக் கொள்வதால் வரும் விளைவு அது.
  தயவுசெய்து நம் கருத்துக்களை காழ்ப்புணர்ச்சி இல்லாமல் முன்வைக்கலாம். அதுவே ஒரு நல்ல விவாதத்திற்கான விதிமுறையாக இருக்க முடியும். நீங்கள் இந்த கருத்தை ஆதரிப்பீர்கள் என்று நம்புகிறேன்.
  நன்றி……

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க