இன அழிப்பு போர்க்குற்றவாளி ராஜபக்சேவைத் தண்டிக்கவும், இனப்படுகொலைக்கு துணைநின்ற மன்மோகன் அரசை திரைகிழிக்கவும், ஈழமக்களது சுயநிர்ணய உரிமைக்கு ஆதரவாகவும் மக்கள் கலை இலக்கியக் கழகமும் அதன் தோழமை அமைப்புகளும் மே 18 அன்று ஆர்பாட்டம் நடத்தினர்.
படங்களை பெரியதாக பார்க்க படத்தின் மீது அழுத்தவும்
சென்னை
சென்னையில் சைதை பனகல் மாளிகை முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ம.க.இ.க மற்றும் அதன் தோழமை அமைப்புகளும், கூடவே சிறுவர்களும், பெண்களும் ஏராளமாகப் பங்குபற்றினர்.
திருச்சி
திருச்சியில் ம.க.இ.க மற்றும் அதன் தோழமை அமைப்புகளின் சார்பாக கலைநிகழ்ச்சிகளுடன் கூடிய ஆர்ப்பாட்டம் புத்தூர் நாலு ரோடு பகுதியில் நடைபெற்றது.
கோவை
கோவையில் புஜதொமு தோழர் விளவை ராமசாமி தலைமையில் ம.க.இ.க தோழர் மணிவண்ணன் உரையாற்ற மே 18 ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் போரை நடத்திய உலக நாடுகளைப் பற்றியும், ராஜீவ் சாகாவிடினும் தரகுமுதலாளிகளுக்காக இந்தப் போர் நடைபெற்றே தீரும் என்பதை விளக்கியும், உள்நாட்டில் இந்தியா தன் மக்கள் மீதே முதலாளிகளுக்கு ஆதரவாக தொடுத்திருக்கும் போர்கள் பற்றியும் விளக்கி தோழர்கள் உரையாற்றினர்.
தர்மபுரி
தருமபுரியில் விவிமு தோழர்கள் காலை 11 மணிக்கு ராஜகோபால் பூங்கா அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சிவகங்கை
போர்க்குற்றவாளியான ராஜபக்ஷே மற்றும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரைத் தண்டிக்கக் கோரும் ஆர்ப்பாட்டம் மே 18 அன்று சிவகங்கை அரண்மனை வாயிலின் முன் நடைபெற்றது. முள்ளிவாய்க்கால் படுகொலையின் இரண்டாமாண்டு நிறைவை ஒட்டி நடைபெற்ற இவ்வார்ப்பாட்டத்தில் ம.க.இ.க வைச் சார்ந்த தோழர் மயில்வாகனன் உரையாற்றினார். புஜதொமு தோழர் ஆனந்த் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
வினவு சார்ந்த இயக்க தோழர்களுக்கும் மற்றும் கொள்கையாளர்களுக்கும், ஈழம் சார்பான போராட்டத்திற்கு எனது வாழ்த்துக்களும் பாரட்டுக்களும்
வாழ்த்துக்களும் பாரட்டுக்களும்
அஃதே போல் ஈழப்பிரச்சினை பற்றி சாதாரண மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுமாறு ஏதாவது செய்தீர்களானால் நன்றியுடையவர்களாயிருப்போம்
https://sites.google.com/a/theekkadhir.com/www/theekkadhir/state/120
ராஜ்பக்சேயின் பெயரைக் குறிப்பிடாமலேயே தண்டனை வழங்கு என ஊளையிடும் சிபிஎம்
நாளைக்கு ராஜ்பச்சேகூட தேர்தல் கூட்டு வச்சா பெயரைச சொல்லலையே சும்மா
ஒரு இதுக்குதான் என்று சொலவதற்கும், நாங்களும் ஈழத்தமிழர்க்கு குரல் கொடுத்தோம்ல்ல என்று தமிழ் மக்களிடம் சொல்வதற்குதான் இத்தனை பித்தலாட்டஙகளும் செய்யறாங்க அசுரன் தோழர்.
இந்தியா தமிழனுக்கு எவ்வளவு துரோகம் இழைத்தாலும்
நாம் அதை எல்லாம் மறந்து வெறித்தனமாக நம் அடிமை பாடல்களான தேசிய கீதம்,தேசிய பாடல்களை பாடிக்கொண்டு திரியவேண்டும்
இறையாண்மை என்று சொல்லி தமிழனை இறையாக்கிகொண்டிருக்கிறார்கள்.
இலங்கை தமிழினத்தின் எதிரி,
ஈன இந்தியா தமிழினத்தின் துரோகி.
எதற்க்காக அன்று இந்தியாவுக்கு இங்கிலாந்திடம் விடுதலை வேதவைப்பட்டதோ இன்று அதே காரணத்திர்க்காக
தமிநாட்டுக்கு இந்திய ஆதிக்கத்தில் இருந்து விடுதலை தேவைபடுகிறது
எழுவோம் வெல்வோம்(இது ஆகாது, முடியாது என்று சொல்கின்ற கோழைகளான ஈன பிறவிகளை புறம் தள்ளுவோம்)
[…] https://www.vinavu.com/2011/05/22/may-18-demonstration/ […]
ilankainet.com
Saturday, October 8, 2011
இந்திய அகதி முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழர்களின் அவலக்குரல்.
http://www.ilankainet.com/2011/10/blog-post_5400.html