privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஈழம்பரிதாப பார்வதியம்மாள் ! பகடையாடும் கருணாநிதி EXCLUSIVE !!

பரிதாப பார்வதியம்மாள் ! பகடையாடும் கருணாநிதி EXCLUSIVE !!

-

ஆறு மாதகால விசா பெற்று மருத்துவ சிகிச்சைக்காக சென்னை  வந்த பார்வதியம்மாளை விமானத்தை விட்டே இறங்க விடாமல் தமிழக போலீசின் உதவியோடு  திருப்பி அனுப்பினார்கள் சென்னை விமான நிலைய அதிகாரிகள். இது தொடர்பாக வினவில் விரிவான கட்டுரை ஒன்றை எழுதி விட்டோம். பார்வதியம்மாள் விவாகரம் தொடர்பாக முதலில் அறிக்கை வெளியிட்ட கருணாநிதி “நள்ளிரவு 12 மணிக்கு தகவல் தெரிந்து விமான நிலையத்தை தொடர்பு கொண்ட போது அவரை திருப்பி அனுப்பி விட்டதாகச் சொன்னார்கள்” என்றார். பின்னர் சட்டமன்றத்தில் இது தொடர்பாகப் பேசிய கருணாநிதி “காலையில் நாளிதழ்களைப் பார்த்தே நான் தெரிந்து கொண்டேன் என்று” மாற்றிப் பேசினார்.

ஆனால் கருணாநிதி ஆதரவு தமிழுணர்வாளர்களோ வைகோவும், நெடுமாறனும் பார்வதியம்மாளை வைத்து தமிழின எழுச்சி மாநாடு நடத்தத் திட்டமிட்டிருந்ததாக உளவு நிறுவனம் கொடுத்த தகவலின் பேரிலேயே  பார்வதி திருப்பி அனுப்பப்பட்டதாகவும், ஆளும் கட்சிக்கு நெருக்கமான திருமா, சுப.வீரபாண்டியன் போன்றோர் மூலம் தொடர்பு கொண்டிருந்தால் அவர்கள் கருணாநிதியிடம் பேசி சிகிச்சைக்கு ஏற்பாடு செய்திருப்பார்கள் என்றும் சொன்னார்கள்.

நெடுமாறன், வைகோ போன்றவர்கள் பார்வதியம்மாளை வைத்து ஆடிய ஐ.பி;எல்- ஆட்டம் தோற்றுப் போக அதையே தங்களுக்கு சாதகமாக எடுத்துக் கொண்ட திருமா, சு,ப. வீரபாண்டியன், கி.வீரமணி போன்றோர் பார்வதியம்மாளை திருப்பி அனுப்ப முன்னர் கடிதம் எழுதிய ஜெயலலிதாவைக் கண்டித்து பெரியார் திடலில் கூட்டம் நடத்தினார்கள்.  தொடர்ந்து கருணாநிதியை நேரில் சந்தித்து வீரமணியும், சு,ப.வீரபாண்டியனும் பார்வதியம்மாளுக்கு சிகிச்சை வேண்டி கோரிக்கை விடுத்தனர். வெளியில் வந்து பேசிய சுப.வீ. “பார்வதியம்மாள் மனுக் கொடுத்தால் பரிசீலிப்பதாக முதல்வர் உறுதியளித்திருக்கிறார்”” என்றார்.

இதற்கிடையில் மூத்த வழக்கறிஞர் கருப்பன் பார்வதியம்மாளை திருப்பியனுப்பியது தொடர்பாக வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருக்கிறார். அதற்கு பதிலளித்துள்ள மத்திய அரசு வழக்கறிஞர் ,”மனுத்தாக்கல் செய்துள்ளவர் பார்வதியம்மாளின் உறவினரோ, அவருக்கு தொடர்பானரவோ கிடையாது, இந்தியரல்லாத ஒருவரின் விசாவை ரத்து செய்யும் உரிமை குடியுரிமை அதிகாரிகளுக்கு உண்டு எனவும், 2003- ல் தமிழக அரசு கேட்டுக் கொண்டதன் பேரிலேயே மத்திய அரசு பார்வதியம்மாள் பெயரை எச்சரிக்கைப் பட்டியலில் சேர்த்துக் கொண்டதாகவும், இந்த நடைமுறையை அறியாத மலேஷியாவில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகள் தவறுதலாக விசா கொடுத்துள்ளதாகவும்”  விளக்கமளித்திருக்கிறார்.”

இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றம் “’இந்த ஏழு ஆண்டுகளில் அதாவது பார்வதியம்மாள் வன்னிக்குத் திருபிச் சென்ற 2003- ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை எவ்வளவோ மாற்றங்கள் நடந்து விட்ட நிலையில் தமிழக அரசு தனது நிலையை பரிசீலித்து தனது முடிவை நீதிமன்றத்திற்கு தெரிவிக்க வேண்டும்””” என்று தெரிவித்திருக்கிறது. மறுநாள் 30-04-2010 அன்று மீண்டும் மனு விசாரணைக்கு வந்த போது மத்திய அரசு வழக்கறிஞர்  ரவீந்திரன் மாநில அரசு கேட்டுக் கொண்டால் மத்திய அரசு பார்வதியம்மாளுக்கு சிகிச்சை தொடர்பாக பரிசீலிக்க தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். மாநில அரசு வழக்கறிஞர் ராஜாகலிபுல்லா “’பார்வதியம்மாளிடம் இருந்து மனு எதுவும் இன்னும் வரவில்லை. வந்தால் அதை மத்திய அரசுக்கு அனுப்பி அனுமதி கோரப்படும்”” என்றிருக்கிறார். இந்த அளவில் இந்த வழக்கு நான்கு வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு மாதம்.

வழக்கு – மத்திய மாநில அரசுகள் இணைந்து நடத்தும் கபடிப் போட்டி

ஈழ ஆதரவாளர்களும், தமிழுணர்வாளர்களும் இன்று இரு பிரிவாக பிரிந்து நிற்கின்றனர். ஒன்று சுப.வீ, வீரமணி, திருமா தலைமையிலான கருணாநிதிக் கூட்டணி, இன்னொன்று நெடுமாறன் வைகோ, தலைமையிலான ஜெ கூட்டணி. முத்துக்குமாரின் உயிர்த்தியாகத்தில் தொடங்கிய இந்தக் கேடுகெட்ட துரோகத்தனம் இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஜெ, கருணா என்ற இந்த இரண்டு தமிழின விரோதிகளாலும் குறைந்த பட்ச மனித நேய உதவிகளைக் கூட செய்ய முடியாத இரக்கமற்ற போக்கை ஈழ ஆதரவாளர்கள் கண்டுணரத் தயங்குகிறார்கள்.

2003-ல் பார்வதியம்மாளை அனுமதிக்க மறுத்த ஜெயலலிதா அதற்கு முன்னரும் இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்காக அனுமதி கோரிய புலிகளின் முன்னாள் அரசியல் பிரிவுத்தலைவர் ஆண்டன் பாலசிங்கத்தையும் சிகிச்சைக்கு அனுமதிக்க மறுத்தவர் என்பதோடு, ஆண்டன் பாலசிங்கமும் கருணாநிதி அரசிடம் இவ்விதமாய் மருத்துவ உதவி வேண்டி கேட்ட போது ஜெயலலிதாவைக் காட்டியே கருணாநிதியும் ஆண்டனுக்கு சிகிச்சை அளிக்க மறுத்த கதைகள் முன்னுதாரணங்களாய் கிடக்கின்றன. சரி 2003-ல் ஜெயலிதா மறுத்தார்; கருணாநிதி ஆட்சிக்கு வந்து ஆட்சியும் முடியப் போகிறதே இந்தக் காலத்திலேனும் அந்த எச்சரிக்கைப் பட்டியலில் இருந்து பார்வதியம்மாள் பெயரை நீக்க முடியாதா? என்ற கேள்விகள் எல்லாம் இருந்த போதும் பார்வதியம்மாள் விவாகரம் தொடர்பாக நீதிமன்றத்தில் மத்திய மாநில அரசுகள் இணைந்து நடத்தும் கபடியாட்டத்தையும் நாம் இங்கே புரிந்து கொள்ள வேண்டும்.

மத்திய அரசோ’’ 2003-ல் மாநில அரசு கேட்டுக் கொண்டதன் மூலமே விசா மறுத்ததாகவும் மாநில அரசு விரும்பினால் பார்வதியம்மாள் சிகிச்சை தொடர்பான விஷயத்தை மைய அரசு பரிசீலிக்கும்” என்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்து விட்டது. மாநில அரசோ, “’பார்வதியம்மாளிடம் இருந்து கடிதம் வந்தால் மத்திய அரசுக்கு அனுப்பி அனுமதி கோருவோம்”” என்று சொல்கிறது. சரி அப்படியானால் ஜெயலலிதா 2003-ல் பார்வதியம்மாளுக்கு கொண்டு வந்த தடையை நீக்க வேண்டியது யார் பொறுப்பு? அந்தத் தடையை நீக்காமல் மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதாலேயே மீண்டும் மலேஷியத் தூதரகம் விசா வழங்கிவிடுமா, என்ன?

ஆக ஜெ மத்திய அரசுக்கு மாநில அரசின் சார்பில் செய்த பரிந்துரை ரத்து செய்யப்படாதவரை பாவதியம்மாள் சிகிச்சைக்கு வர சாத்தியமில்லை.  ஆனால் மாநில அரசோ “மனுக்கொடுத்தால் மத்தியா அரசுக்கு அனுப்புவோம், அதாவது நாங்கள் எதுவும் செய்ய மாட்டோம், செய்யச் சொல்லி நிர்பந்திக்கவும் மாட்டோம், கடிதமோ, மனுவோ எது வந்தாலும் மத்திய அரசுக்கு அனுப்புவோம்” என்று நரித்தனத்துடன் பேசுகிறது. ஆனால் மத்திய அரசோ “இதில் நாங்கள் செய்ய எதுவும் இல்லை எல்லாம் மாநில அரசின் கையில்தான் இருக்கிறது, அவர்கள்தான் பார்வதியம்மாளை அனுமதிக்க வேண்டாம் என்றார்கள், ஆகவே அவர்கள்தான் இப்போது பார்வதியம்மாள் விவாகாரம் தொடர்பாக மத்திய அரசிடம் பேச வேண்டும்” என்று சொல்கிறது.

பாருங்கள் யார் முதுகில் யார் இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. வார்த்தைகளில் விளையாடிய இந்த மத்திய மாநில துரோகிகளின் நிலையைப் பார்த்து புரிந்து கொண்ட நீதிமன்றமோ வழக்கை ஒரு மாதம் தள்ளிப் போட்டு விட்டது. அப்பாடா……. ஒரு மாதம் இந்த ஒரு மாதத்தில் ஈழத்து தமிழறிஞர்களை எல்லாம் அழைத்து தனக்கு ஒரு பாராட்டு விழாவும் விருதும் கூட கருணாநிதி வாங்கிவிடுவார். ஆனால் பார்வதியம்மாள் என்ற எண்பது வயதைக் கடந்து விட்ட அந்த தாய்க்கு பக்கவாதம். சரியாக நினைவில்லை.

ஒரு மாதத்தில் அவருக்கு ஏதாவது ஒன்று ஆனால் கருணாநிதி என்ன செய்வார்? பழியைத் தூக்கி அப்படியே ஜெயலிதா மீது போடுவார். திருமா போய் அஞ்சலி செலுத்து போட்டோவுக்கு போஸ் கொடுப்பார். ஏதோ ஒரு வார இதழில் தொடர் எழுதுவார். நெடுமாறனும், வைகோவும் கருணாநிதிதான் காரணம் என்று அறிக்கை விடுவார்கள். கடைசி வரை நிம்மதியில்லாத நிலையில் அவர் மரித்துப் போகக் கூடும். மீண்டும் சில காலத்திற்கு நீங்கள் உற்சாகமிழந்த பின் மீண்டும் உங்களின் கபடி ஆட்டத்திற்கு இன்னொரு ஈழத்து இழிச்சவாயன் கிடைப்பான்.

பார்வதியம்மாளின் கடிதம் கீழே இணைக்கப்பட்டுள்ளது

பார்வதியம்மாள் கடிதம் – சில கசப்பான உண்மைகள்!

பார்வதியம்மாள் தொடர்பான வாதம் நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்த (30-04-2010) அன்றே பார்வதியம்மாளிடம் இருந்து கருணாநிதிக்கு கடிதமும் வந்து விட்டது. மனிதம் அறக்கட்டளையின் அமைப்பாளர் அக்னி சுப்பிரமணியன் என்பவர் மூலம் வந்ததாகச் சொல்லப்படும் இந்தக் கடிதம் தமிழுணர்வாளர் சுப.வீரபாண்டியனிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் சுய நினைவு பாதித்து பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டுள்ள பார்வதியம்மாளால் இப்படி ஒரு கடிதத்தை சுய நினைவோடு எப்படி எழுத முடியும்? பார்வதியம்மாள் எழுதியதாகச் சொல்லப்படும் இக்கடிதத்தின் படி விசா விண்ணப்பித்தால் அதற்கான நேர்முகத்திற்கு அவரே செல்வாரா? அவரால் அதிகாரிகள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல இயலுமா? என்பதெல்லாம் இக்கடித்ததின் பின்னால் எழும் கேள்விகள். ஒரு வயதான சுயநினைவு சரியாக இல்லாத அம்மாள் தனது கைப்படக் கடிதம் எழுதவேண்டுமென்றால் இதை விட வக்கிரமும், ஆபாசமும் என்ன இருக்கிறது?

பார்வதியம்மாள் பெற்ற பிள்ளையான விநோதினி எழுதிய கடிதத்தை மறுத்து பார்வதியம்மாளிடமே கடிதம் கேட்கும் மனோபாவம் ஆளும்வர்க்கங்களின் வக்கிர புத்தியா?அல்லது செய்ய முடியாத நிலையை சட்டத்தின் மீது பழி போட்டுத் தப்பித்துக் கொள்ளும் முயற்ச்சியா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.ஆனாலும் பார்வதியம்மாளுக்கு  சிகிச்சையளிக்க மத்திய மாநில அரசுகள் அனுமதித்தால் போதும் என்ற மன நிலையே எல்லோரிடமும் இருக்கிறது.

பார்வதியம்மாள் கடிதம் எழுதுவதற்கு முன்னர் பிரபாகரனின் சகோதரி விநோதினி தமிழக முதல்வருக்கு ஒரு கடிதம் எழுதியதாகவும் ஆனால் பார்வதியம்மாள் கைப்பட மட்டுமே கடிதம் வேண்டும் என்று கேட்கவே இப்போது பார்வதியம்மாளின் கைநாட்டில் கடிதத்தை ஒப்படைத்திருக்கிறார்கள். பார்வதியம்மாள் சென்னையில் வைத்து திருப்பியனுப்பப்பட்ட போது “’இப்போதுதான் எங்களை எல்லாம் நினைவுக்கு வந்ததா?” என்று கேட்ட சுப. வீரபாண்டியன் “சிறிது நேரம் முன்னால் பேசியிருந்தால் கலைஞரிடம் பேசி ஏற்பாடு செய்திருப்பேனே””  என்று அங்கலாய்த்திருக்கிறார்.

இப்போது பார்வதியம்மாள் எழுதிய கடிதம் அவர் கையில்; நெடுமாறனோ, வைகோவோ, ஜெயலலிதாவோ இதில் தலையிட முடியாது. வந்து தடுத்தால் கருணாநிதிக்கு கிடைத்துள்ள துரோகப் பட்டம் அவர்களுக்கும் கிடைக்கும். சுப.வீரபாண்டியனே கலைஞரிடம் பேசி மத்திய அரசுக்கு சம்பிரதாய கடிதம் அல்ல, பார்வதியம்மாளுக்கு சிகிச்சை செய்யும் படியான நடவடிக்கைக்கு ஏற்பாடு செய்வார் என்று நாம் எதிர்பார்க்கலாம். ஜெகத்ரட்சகன் நடத்திய வள்ளுவர் கோட்டம் விழாவில் கலந்து கொண்டு பல மணிநேரம் குத்தாட்டம் பார்த்ததால் தனக்கு ஏற்பட்ட முதுவலியை ஏதோ உலகப் பிரச்சனை ரேஞ்சுக்கு ஊதிப் பெருக்கிய கருணாநிதி அடுத்தவர் வலிகளையும் அதுவும் தன்னை விட வயதில் மூத்தவரான ஒரு தாயின் வலிகளைகளையும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே நமது ‘ஆசை’.

நளினி, பார்வதியம்மாள் ஒரு ஒற்றுமை

“நளினி விடுதலையில் மத்திய அரசு செய்வதற்கு ஒன்றுமே இல்லை, ஆயுள் தண்டனைக் கைதிகள் விடுதலை தொடர்பாக முடிவு செய்ய வேண்டியது மாநில அரசின் பொறுப்பு” என்றது மத்திய அரசு.  முதலில் காலம் கடத்தி  நளினி விஷயத்தில் பதில் சொல்லாமல் இழுத்தடித்து வந்த மாநில அரசோ கடைசியில் ” நளினி விவாகரத்தில் நாங்கள் எங்களுக்கு சுயக்கட்டுப்பாடு ஒன்றை விதித்துள்ளோம்”  என்று விடுதலைக்கு ஆப்பு வைத்தது. நளினி மீண்டும் மனு செய்தார். அது விசாரணைக்கு வருவதற்கு முன்னரே நளினியின் அறையில் செல் போனைக் கண்டு பிடித்து அடுத்த ஆப்பை இறுக்கமாக இறுக்கி விட்டார்கள்.

இனி சில ஆண்டுகளுக்கு நன்னடத்தை விதிகளின் கீழ் விடுதலை கோர முடியாத அளவுக்கு பொய் பிரச்சாரம் ஒன்றை நளினிக்கு எதிராக செய்து விட்டது கருணாநிதி அரசு. இதோ பார்வதியம்மாள் விவாகரத்திலும் மத்திய அரசு செய்ய எதுவும் இல்லை எல்லாமே மாநில அரசு கையில்தான் இருக்கிறது என்று விட்டது மத்திய அரசு. மாநில அரசோ பார்வதியம்மாளிடம் மனு வந்தால் மத்திய அரசுக்கு போஸ்ட் பண்ணுவோம் கடிதம் எழுதுவோம் என்று காலம் கடத்தத் துவங்கிவிட்டது.  பல சூழல்களில் பார்வதியம்மாள் விஷயத்தில் அவருக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்வீர்களா? செய்ய மாட்டீர்களா? என்ற நெருக்கடி வரும் போது பார்வதியம்மாள் மீதும் குண்டு வீசப்படலாம். கருணாநிதி வீசாத குண்டுகளா?  அதை எந்த நேரத்திலும் யார் மீதும் செய்யத் தயங்காதவர் அவர். பார்ப்போம் பார்வதியம்மாளை வைத்து எப்படி எல்லாம் விளையாடுகிறார் என்று?

வன்னியில் பல ஆயிரம் மக்களைக்கொன்ற சிங்கள இனவெறியின் அழிவுப் போர் நடந்து ஓராண்டு ஆகப்போகிறது. அப்போது போரின் முடிவைத் தெரிந்து கொண்டே போரை நிறுத்துவதாக நாடகமாடிய இந்த அரசுகளும், தலைவர்களும் இப்போது ஒரு முதிய ஈழத்து பெண்மணிக்கு மருத்துவத்தைக்கூட தரமுடியாமல் சட்ட மொழியில் குள்ளநரித் தந்திரத்துடன் விளையாடுகிறார்கள். இந்த நரிகளை எப்போது வேட்டையாடப் போகிறோம்? நரிகளுக்கு பஜனை பாடும் ஈழ, தமிழின ஆதர்வாளர்களை எப்போது சட்டையைப் பிடித்து நாக்கை பிடுங்குமளவு கேட்கப் போகிறோம்?

_____________________________________________

–          இராவணன்.

vote-012

தொடர்புடைய பதிவுகள்

  1. தமிழனம் தொடர்ந்து துரோகத்தால், சதியால் வீழ்கிறது..meendum meendum இதே தவறு நடக்கிறது.ethai naam veeltthavendum.

  2. ராஜீவின் கொலை நடந்த நேரத்தில் சுப்ரமணிய சாமியுடன் கூடிக்குலவிய ஸ்ரீ சபரத்தினத்தின் அண்ணன் திடீர் என மர்மம் ஆனார். என திருச்சி வேல்சாமி தனது பேட்டியில் ( குமுதம் )கூறியிருந்தார். ஸ்ரீ சபாரத்தினம் கலைஞ்சரின் செள்ளபிள்ளையாக திரிந்தவர்.ராஜீவின் கொலைக்கும் கருணாநிதிக்கும் தொடர்பு இருக்குமோ என்கிற சந்தேகம் வலுக்கிறது.பிரபாகரன் தனது பேட்டிகளில் (பி .பி. சி ) ராஜீவ் கொலையை தாங்கள் செய்யவில்லை என மறுத்துள்ளார். பிரபாகரன் மீது இப்படி ஒரு வீண் பழியை கருணாநிதி திட்டமிட்டு செய்துருக்கிறார்.கருணாநிதிக்கு பிரபாகரன், நளினி போன்றோர் மீது உள்ள வெறுப்புக்கு காரணம் .என்னவென்றால் இவர்களால் தான் அகப்பட்டுவிவோம் என்ற எண்ணாமாக இருக்கலாம்.

  3. அது மட்டும் அல்ல ராஜீவின் கொலையாளிகளை /சந்தேக நபர்களை ( சுப்ரமணியசாமி, சந்திராசாமி ) இன்னும் முறையாக விசாரிக்கப்படவில்லை.இது ராஜீவின் பத்தினிக்கும் தெரியும். கூட்டி , கழித்து பார்க்கும் பொது அண்ணல் ராஜீவின் மரணத்தின் பின் ஒரு மர்ம திரை உள்ளது.
    அது போல் தமிழ் இன துரோகி கருணாநிதிக்கு விடுதலை புலிகளுக்கு நிகழ இருந்த முடிவும் தெரிந்தே இருந்தது .காங்கிரசுக்கும் கருணாநிதிக்கும் கை கூலிகளாக இருந்து வெவ்வேறு நிலைகளில் பலர் செயல் பட்டிருக்கிராகள் ( கஸ்பர்,சு.ப. வீ போன்ற துரோகிகள் ) என்பதும் புலன் ஆகிறது .புலிகளும் ,புலி ஆதரவாளர்களும் இவர்களியே நம்பி மோஷம் போனார்கள். கிட்டு மாமா ராஜீவை கொன்றது மக்கள் கலை இலக்கிய கழக காரர்கள் என லண்டனிலிருந்து “வீர ” அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.என்பது எனக்கு ந்ஜாபகம் வருகிறது.புலிகளின் தலைமை வெறும் புகழ்சியில் வீழ்ந்து கிடந்தது. இந்த துரோகிகளை அவர்களது ஆதரவாளர்கள் இன்னும் நம்ம்புவது வேடிக்கை .விசுவின் வார்த்தையில் சொன்னால் வேடிக்கை எங்கள் வாடிக்கை ஆகி விட்டது தோழர்களே.

    • யோகன் ஆதாரம் இன்றி எதையும் பேசக்கூடாது கிட்டு அவ்வாறான எந்த அறிக்கையும் விடவில்லை.புலிகளின் தலைமை புகழ்சியில் வீழ்ந்து கிடந்தது என்பதை எதை வைத்து சொல்கிறீர்கள் விளக்க முடியுமா?

      • தமிழ்
        ராஜிவ் கொலையின் போது இலண்டனிலிருந்து அறிக்கை வெளியிட்ட கிட்டு இந்தக் கொலையை ம.க.இ.கவின் புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் பத்திரிகைகளின் நிருபர்கள் செய்திருக்கலாம் என்று அறிக்கை வெளியிட்டது உண்மைதான். இது அப்போது எல்லாத் தமிழக தினசரிகளிலும் செய்தியாக வெளிவந்திருக்கிறது. புதிய ஜனநாயகம் இதழும் இதை பலமுறை பதிவு செய்திருக்கிறது.

  4. ஏன் கருணாநிதி நினைத்தால் முடியுமே ????? பாராளுமன்றத்திற்கு போகாத மகனுக்காய் டெல்லி வரை சென்று அமைச்சர் பதவி வாங்கி தந்தவர் …!!! இவர்கள் அவர்கள் மீது பழி போடுவதும் அவர்கள் இவர்கள் மீது போடுவதும் அருவருப்பாய் உள்ளது ………………!!! அதுவும் அந்த அம்மாவே கடிதம் எழுத வேண்டுமென்பது வக்கிரத்தின் உச்சம்

  5. இந்தக் கடிதத்தின் ஒரே ஒரு பயன் கருணாநிதியை அம்பலப் படுத்துவது மட்டுமே.
    இருந்தும் என்ன? எருமை மாட்டின் முதுகில் பெய்த மழை மாதிரித் தான் அதுவும்.
    பார்வதி அம்மாள் இலங்கை திரும்பியிருக்கலாம்.
    கருணாநிதிக்கு மிரட்டலாகவுள்ள அளவுக்கு அவர் ராஜபக்சவுக்கு மிரட்டல் அல்ல.

  6. தமிழ்
    ராஜீவ் கொலையுண்ட பொது எல்லா வாய் வீரர்களும் ஓடி ஒழிதது கொண்ட நிலையில் எனக்கு தெரிந்த வரையில் புதிய கலாச்சாரம் மாத்திரமே துணிந்து ராஜீவ் கொலைக்காக ஈழத்து மக்கள் கவலை பட மாட்டார்கள் என்ற பொருள் பட ( சரியான தலைப்பு ஞாபகம் இல்லை ) நீண்ட கட்டுரை வெளியிட்டது.வாய் சவிடால் அடித்த தலைவர்கள் எல்லாம் ” நம்மக்கு ஏன் இந்த வம்பு ” என்று பதுங்கிவிட்டார்கள்.இன்று புலிகளுக்கு வக்காலத்து வாங்கும் எவனும் மூச்சு கூட விடவில்லை.
    பிரபாகரனை பற்றி ,புலிகளை பற்றி புதிய கலாச்சாரம் பல தடவை அரசியல் ரீதியாக விமர்சித்து வந்திருக்கிறார்கள். அதற்கு எந்தவிதமான மறுப்போ ,பதிலோ புலிகள் தரப்பில் இருந்து கிடைத்ததில்லை .அவ்வளவு அரசியல் நாணயம் புலிகளிடம் இருந்ததில்லை.கொலம்பியா மாபியாக்களுடன் தொடர்பு இருப்பதாகவும் ,அதன் மூலம் கிடைக்கும் பணத்தால் இஸ்ரேலிடம் புலிகள் ராணுவ பயிற்சி பெற்றதாகவும் ,புலிகளுக்கு பயிற்சி கொடுத்த அதே தளத்தின் ஒரு பகுதியில் சிங்கள ராணுவத்திற்கு மொசார்ட் பயிற்சி கொடுத்ததாகவும் மொசார்ட்டில் இருந்து தப்பி ஓடிய அதிகாரி கனடாவிலிருந்து எழுதிய புத்தகம் ஒன்றை ஆதாரம் காட்டி எழுதியது புதிய கலாச்சாரம்.
    இது போன்ற பல விமர்சனங்களுக்கு பதில் எழுத துப்பில்லாத கிட்டு என்கிற ரௌடி முட்டாள் தனமாக வெளியிட்ட அறிக்கை தான் ராஜிவை ம.க.இ.கவின் புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் பத்திரிகைகளின் நிருபர்கள் செய்திருக்கலாம் என்ற அறிக்கை.
    1984 லிருந்து புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் இதழகள் என்னிடம் இருக்கிறது .
    தங்களை பெரிய அறிவு மேதாவிகளாக காட்டி கொள்ளும் விமர்சகர் ( லண்டனிலிருந்து எழுதும் இதயச்சந்திரன் போன்றவர்கள் உட பட )எல்லாம் “தலைவரின் வழி காட்டுதலில் “என்று ஒவ்வொரு கட்டுரையிலும் எழுதினார்களே இதெல்லாம் புகழ்ச்சி இல்லையா ?
    தலைவர் தான் காட்டுக்குள்ளே இருந்தார் ,நாடுக்குள்ளே இருந்தவர்களாவது எடுத்து சொல்லி இருக்கலாமே.இன்று சர்வதேச வீதிகளில் திரண்ட மக்கள் சில வருடங்களுக்கு முன்னால் திரண்டிருந்தால் நிலைமை வேறுவிதமாக இருந்திருக்கும். அதெல்லாம் தேவை இல்லாத விடயங்கள் ” நீங்கள் காசை மட்டும் தாங்க ,நாங்கள் ஆயுதம் வாங்கி ஈழம் எடுத்து தாரோம்” இது தானே புலிகள் செய்தது. ” தலைவர் எல்லாம் செய்வார் ” என்று மக்களை நம்ப வைத்தார்கள்.

    மக்களை அணி திரட்டுங்கள் என்று சொன்ன போதெல்லாம் எள்ளி நகை ஆடினார்கள்.
    தேனிசை செல்லப்பாவின் பாடல்களில் பிரபாகனின் புராணம் தானே பெரும்பாலானவை.
    உத்வேகமான கவிதைகளை எழுதிய புதுவை ரத்னதுரை என்னவானார் என்பது புரியவில்லை. அவரை பற்றி யாருக்கும் கவலை இல்லை என்பது வருத்தமளிக்கிறது.உணர்ச்சி அலையில் தவறான பாதாளத்தில் வீழ்ந்து விட்டார். எனினும் மாபெரும் கவிஞ்சனை இழந்த வருத்தம் என்னுள் எழுவதை தவிர்க்க முடியவில்லை.

    • //பிரபாகரனை பற்றி ,புலிகளை பற்றி புதிய கலாச்சாரம் பல தடவை அரசியல் ரீதியாக விமர்சித்து வந்திருக்கிறார்கள். அதற்கு எந்தவிதமான மறுப்போ ,பதிலோ புலிகள் தரப்பில் இருந்து கிடைத்ததில்லை //

      அவ்வளவு worth இல்லை என்று விட்டிருபபார்கள்..

  7. என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்பே!(நா தழுதழுக்கிறது), அஞ்ச்சுகத்தாய் சிலையருகில் அமர்ந்து கலைஞ்சர் கடிதம் எழுதும் எனக்கு ஆருயிர் இள(ழ)வாளின் தாய் கடிதமா?,ஐய்யகோ!.முன்பு ஒரு குத்தாட்ட நிகழ்ச்சியில்,தாய்மையைப் பற்றி ஒரு நடிகர் பேசியபோது,என்கண்கள் கலங்கியது உதடுகள் துடித்தன.நான் எந்தடிமை “சன்டிவி கேமராமேனை” தனியாக கூப்பிட்டு,அதை கோலசப்பில் எடுக்க சொல்லியிருந்தேன்,ஆனால் என் பேரன் மட்டும் கண்டுபிடித்துவிட்டான் மேக்கப் சிறிது கலைந்திருந்ததை,நீ மட்டும்தான் அதைக்கண்டு கதரியழுதாய்.ஆனால் உன் விட்டு பெண்கள் கதரியழுகவேண்டும்.எத்தனை மேடை கண்டிருப்பேன்!,தற்போது தாயமார்கலேல்லாம்,”மெகா சிரியல் கண்டுதானே” கண்ணீர் வடிக்கிறார்கள்.அதற்குதானே நான்,”பிளாட் ஸ்கிரின் மானிட்டர்” வந்தபிறகு கொரியாவில்,”பிக்சர் டியுப் மானிட்டரை” குப்பையாக்குவதற்கு செலவு பிடிக்கும்,அதை இலவசமாக இந்தியாவுக்கு தள்ளி விடுகிறோம் என்பதை,அரசாங்க பணத்தை நம் கைக்கு மாற்றும் விதமாக,”ஏழைகளுக்கு கலர் டிவி” கொடுத்தேன்.ஒரே கல்லில் டபுள் மாங்கா!.பிரபாகரன் மீதுதான் கசப்பே தவிர,தமிழ்ச்செல்வம் மீது அல்ல,ஏனென்றால் அவர் நம் குலக் கொழுந்தல்லவா!.உடன்பிறப்பே,பார்வதியே,”இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நானா நன்னயம் செய்து விடல்”,என்ற அய்யன் திருவள்ளுவரின் கருத்துக்கு ஓப்ப,ஒரு விழா நடத்தி என்னைப் புகழ்ந்து ஒரு விருது கொடுத்து விடுங்கள்!.

    • இதையும் சேர்த்திருக்கலாம் பிரடெரிக்

      தயாளு ராஜாத்தி என்று சொல்லும் போது உதடுகள் ஒட்டாது குஷ்பு என்று சொன்னால்தான் உதடுகள் கூட ஒட்டும்

  8. இதோ இன்றைய பத்திரிகை செய்தி ///////

    இது தொடர்பாக துணை முதல்வர் மு.க., ஸ்டாலின் சட்டசபையில் விதி 110 ன் கீழ் தானாக முன்வந்து அறிக்கை தாக்கல் செய்தார். அவர் அப்போது கூறியதாவது: பார்வதி அம்மாள் எழுதிய கடிதம் தொடர்பாக பரிசீலித்து . ஆராய்ந்து , மத்திய உள்துறை அமைச்சக செயல் அதிகாரிகளுக்கு பார்வதி அம்மாள் தமிழகம் வரும் விஷயத்தில் அனுமதி அளிக்கலாம் என பரிந்துரை செய்து கடிதம் அனுப்பியுள்ளோம் என்றார். மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் பார்வதி அம்மாள் தமிழகத்தில் சிகிச்சை எடுத்து கொள்ள முடியும். தமிழக அரசு ஒரளவுக்கு பச்சைக்கொடி காட்டி விட்டது. ///////

  9. இவங்க எல்லாம் எப்போ சாவாங்க? தமிழன் ஆட்சி முதலில் தமிழ்நாட்டில் இருக்கா? எப்போ ஒரு தமிழன் வேண்டாம் ஒரு மனுஷன் நம்ம நாட்ட ஆள்றது ?
    சனியன் படிச்சவனுக்கு ஒரு சாவு வர மாட்டேங்குது

    • //ஒரு தமிழன் வேண்டாம் ஒரு மனுஷன் நம்ம நாட்ட ஆள்றது ?//
      இந்த எண்ணம் ஒட்டு போடும் எல்லோருக்கு வந்தால் கண்டிப்பாக ஆள்வான். தமிழ் பித்து எல்லோருக்கும் தலைக்கு ஏறி இருப்பதால் எல்லா அரசியல் வாதிகளும் தமிழ் பேசியே ஓட்டுகளை அள்ளுகின்றனர்.

  10. பார்வதி அம்மையாரின் சிகிச்சையை விட… அவரை கொண்டு ஜெ… அம்மையாருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய முடியவில்லை எனும் கவலை வைகோ போன்றவர்களுக்கு…

    இந்த கடிதத்தை தமிழக அரசு ஏற்று கொண்ட பின்… பின் மத்திய சோனியா-ராகுல் அரசு என்ன செய்கிறது என பார்க்க வேண்டும்…

  11. தமிழக அரசின் நிதி உதவியுடன் சிகிச்சை பெரும் உடன்பிறப்பு பார்வதி அம்மையாரை பார்க்க சென்றேன்!,கண்கள் குளமாயின,நான் அழ,அவர் அழ,பக்கத்திலிருந்த அமைச்சர் டாக்டர் மு.க.ஸ்டாலின் அழ,அமைச்சர் டாக்டர் தயாநிதி மாறன் அழ,அமைச்சர் டாக்டர் அழகிரி அழ,அமைச்சர் டாக்டர் கனிமொழி அழ,அதைக்கண்டு,தமிழக நிதி உதவியில் கொடுத்த “கலர் டிவியில்” கொலசப்பில் பார்த்த தாய்மார்கலேல்லாம் அழ, எல்லோரும் தேம்பி தேம்பி அழுது,”டாக்டர் கலைஞ்சருக்குதான் ஓட்டுப் போடுவோம்” என்று குறி,விழா நடத்தி விருது கொடுத்தார்கள்.
    முன்பு ஒரு முறை “டாக்டர் பரிமளம் என்பவர்” ஊரெல்லாம் “அறிஞ்சர் அண்ணா பெயரும்,சிலையும் வைத்தேன் என்பதற்காக” அவரின் வாரிசுகள் “சிபாரிசுகளுக்கு” தொந்திரவு செய்தார்கள் என்பதற்காக,என்னிடம் வந்து பலர் காண,விழா எடுத்து,விருது கொடுத்து,நான் கொடுக்கும் “பொற்கிழியையும்,சிபாரிசுகளையும்” வாங்க மாட்டேன் என்று “அடம் பிடித்து” கிணற்றில் தலையை மோதி தற்கொலை செய்து கொண்டார்! -ஹி…-ஹி…அந்த நிலைமை உனக்கு வேண்டுமா பார்வதி அம்மையாரே!.
    /தமிழக அரசு பரிந்துரைக்கும் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும். சிகிச்சைக்கான தொகையை தமிழக அரசே ஏற்கும் என்ற நிபந்தனைகளை பார்வதி அம்மாள் ஏற்றுக் கொண்டால் அவருக்கு அனுமதி அளிக்கப்படும் என்று திங்கள்கிழமை தில்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில் தமிழக முதல்வர் கருணாநிதி குறிப்பிட்டார். இந்த நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டால், அவருக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கும் என்று தெரிகிறது./–தினமணி.5 .5.2010 .
    /அறிஞர் அண்ணாவின் வளர்ப்பு மகன் பரிமளம் தற்கொலை
    செவ்வாய்க்கிழமை, மார்ச் 25, 2008,
    முன்னாள் தமிழக முதல்வர் அண்ணாதுரையின் வளர்ப்பு மகனான டாக்டர் பரிமளம் தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 67.
    இவர் தனது குடும்பத்தினருடன் சென்னை நுங்கம்பாக்கம் அவென்யூ சாலையில் வசித்து வந்தார். அரசு மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.உடல் நலம் தேறியதையடுத்து நேற்று மாலை தான் அவர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினார். ஆனால், வீடு திரும்பினாலும் கவலையுடன் காணப்பட்ட அவர், நானும் என் மனைவி சரோஜாவிடமே போய் விடுகிறேன் என்று கூறிக் கொண்டிருந்தார் (சரோஜா இரு ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார்).
    அவரைத் தேற்றிய குடும்பத்தார் அவரை தூங்க வைத்துவிட்டு உறங்கச் சென்றனர். இந் நிலையில் நள்ளிரவில் பரிமளம் வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்துக்கு சென்று அங்கிருந்த கிணற்றுக்குள் குதித்தார்.அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பிரேத பரிசோதனைக்குப் பின் அவரது உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
    கிணற்றில் சுவற்றில் தலை மோதியதாலும் நீரில் மூழ்கியும் பரிமளம் இறந்ததாக பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
    /.— /thatstami.

Leave a Reply to Corporal Zero பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க