காவிரி நீரில் தமிழகத்தின் உரிமையை வஞ்சிக்கும் காங்கிரஸ் பிஜேபி-யை புறக்கணிப்போம் !
காவிரி மேலாண்மை வாரியம் அமைவதை எதிர்க்கும் ஆர்.எஸ்.எஸ், பிஜேபியை தமிழகத்தில் இருந்தே விரட்டியடிப்போம் !
தமிழகம் முழுவதும் 18.10.2016 மக்கள் அதிகாரம் ரயில் மறியல் போராட்டம் !
1. கரூர்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகமெங்கும் போராட்டங்கள் வெடித்துவருகின்றன. விவசாய அமைப்புகள், அரசியல் கட்சிகள் மற்றும் பல அமைப்புகள் என ஒட்டுமொத்த தமிழகமே போர்க்களம் போல் காட்சியளிக்கிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை மத்திய அரசு வெளிப்படையாக மறுக்கிறது. தமிழக மக்களுக்கு மாபெரும் தூரோகத்தை இழைத்துவிட்டு கர்நாடகாவில் அடுத்து வரவிருக்கும் தேர்தல் ஆதாயத்திற்காக கர்நாடக அரசை ஆதரிக்கிறது. இவற்றைப்பற்றி கவலைப்படாத கல்லூளி மங்கன் மாதிரி நாடகமாடுகிறார் நரேந்திர மோடி. எனவே இச்செயலை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் எனவும் தமிழகமெங்கும் நடைபெறுகின்ற போராட்டத்திற்கு மக்கள் அதிகாரம் தன் முழு ஆதரவை அளிப்பதுடன் போராட்ட களத்தில் பங்கெடுத்துக் கொண்டுவருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று (18.10.2016) கரூரில் மக்கள் அதிகாரம் சார்பாக அதன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் தலைமையில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. பாலக்காடு பயணிகள் விரைவு ரயிலை மறித்து முழக்கம் இட்டடு மறியல் போராட்டம் செய்யப்பட்டது. பின்பு வலுக்கட்டாயமாக போலீசு 3 குழந்தைகள் உட்பட பெண்கள் மற்றும் 18 பேரை கைது செய்தனர். பின்னர் உழவர் சந்தை அருகில் உள்ள காவிரி அம்மாள் மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.
2. தர்மபுரி
காவிரி மேலாண்மை வாரியம் அமைவதை எதிர்க்கும் ஆர்.எஸ்.எஸ், பிஜேபியை தமிழகத்தில் இருந்தே விரட்டியடிப்போம் ! – என்ற முழக்கத்தின் அடிப்படையில் 18.10.2016 அன்று தர்மபுரியில் மக்கள் அதிகாரம் சார்பில் இரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
3. தஞ்சை
தஞ்சையில் மக்கள் அதிகாரத்தின் சார்பில் காவிரி விவகாரத்தில் துரோகம் புரியும் கங்கிரசு, பி.ஜே.பி கும்பலை தோலுரிக்கும் விதமாக ரயில் மறியல் போராட்டம் 18.10.2016 அன்று நடைபெற்றது.
( படங்களைப் பெரிதாகப்பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் :
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு.