Friday, May 2, 2025
முகப்புசெய்திகாவிரி : திருச்சி, மதுரை - ரயில்மறியல் - படங்கள்

காவிரி : திருச்சி, மதுரை – ரயில்மறியல் – படங்கள்

-

காவிரியில் தமிழகத்தின் உரிமையை வஞ்சிக்கும் காங்கிரஸ், பி.ஜே.பி – யை தமிழகத்திலிருந்து விரட்டியடிப்போம் !

மிழகம் முழுவதும் 18.10.2016 அன்று தமிழகம் முழுக்க மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் இரயில் மறியல் போராட்டங்கள் நடைபெற்றன.

1. திருச்சி

காவிரியில் தமிழகத்தின் உரிமையை வஞ்சிக்கும் காங்கிரஸ்,பி.ஜே.பி – யை தமிழகத்திலிருந்து விரட்டியடிப்போம் என்கிற வகையில் திருச்சி மத்திய இரயில் நிலையத்தில் மக்கள் அதிகாரம் சார்பாக காலை 10.30 மணியளவில் இரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டம் மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பு குழு தோழர்.ப.தர்மராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

காலை முதலே அதிகப்படியான காவல்துறையினர் இரயில்வே ஜங்சனில் குவிந்திருக்க நாம் அருகே உள்ள பாலத்தில் அடியில் இறங்கி இரயிலை மறிக்க முயலும் போது காவல்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்ய முற்பட்டனர். தோழர்கள் காவிரி விவகாரத்தில் நம் உரிமைக்காக போராடினால் ஏன் தடுக்கிறீர்கள் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தண்டவாளத்தில் அமர்ந்து மத்திய அரசை கண்டித்து முழக்கமிட்டனர். பிறகு காவல்துறையினர் அனைவரையும் வலுக்கட்டாயமாக இழுத்து சென்று கைது செய்தனர்.

 

பத்திரிக்கை செய்தி :

Trichy

2. மதுரை

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கும் மத்திய அரசை கண்டித்து தி.மு.க உட்பட அனைத்துக் கட்சி சார்பாக மதுரையில் இரயில் மறியல் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.  அதை ஆதரிக்கும் வகையில் மக்கள் அதிகாரம் அமைப்பை சார்ந்தவர்களும் அதன் தோழமை அமைப்பின் தோழர்களும் காலை 9 மணிக்கு தயார் நிலையில் இருந்தோம்.  ஆனால் அங்கு தி.மு.க, ம.ந.கூட்டணியோடு காங்கிரஸ் சேர்ந்து வந்ததால் அவர்களோடு நாம் சேர்ந்து செல்வது சரியாக இருக்காது என்பதால் குறிப்பாக நாம் இந்த காவிரி பிரச்சனையில் யார் எதிரி, யார் நட்பு சக்தி என்ற வரையறையின்படி மதுரையை தவிர்த்து புறநகர் பகுதியான திருமங்கலத்தை தேர்வு செய்து உடனே அங்கிருந்து திருமங்கலம் தேவர் சிலையை வந்தடைந்தோம்.

தேவர் சிலை அருகில் இருந்தே தோழர்கள் மத்திய மோடி அரசை கண்டித்து முழக்கங்களுடன் மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் குருசாமி தலைமையில் இரயில் நிலையத்தை நோக்கி சென்றர்.  ஏற்கனவே மக்கள் நல கூட்டணி சார்பாக மறியல் செய்து கைதாகி வேனில் ஏற்றி கொண்டு இருந்த நிலையில் மக்கள் அதிகாரம் தோழர்கள் உள்ளே நுழைய அனுமதி மறுத்தது காவல் துறை. பிறகு சிறு வாக்குவாதத்திற்கு பிறகு நாகர்கோவில் பாசஞ்சர் இரயில் வருவதை கண்டு அதை மறிப்பதற்கு தோழர்கள் தயார் ஆகையில் போலிசார் தடுத்தனர். தடையை மீறி விடாபடியாக உள்ளே புகுந்து இரயிலை மறித்து அனைத்துக் கட்சி போராட்டமும் ஒற்றுமை ஓங்குக என முழக்கமிட்ட தோழர்களை போலிசார் கைது செய்து ரெங்க விலாஸ் திருமண மஹாலில் அடைந்தனர்.  ஏற்கனவே கைது செய்யப்பட்ட மக்கள் நல கூட்டணி தோழர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அங்கு இருந்துள்ளனர்.  மக்கள் அதிகாரம் தோழர்கள் அங்கு வந்ததும் மேலும் அவர்களுக்கு உற்சாகமும் நம்பிக்கையும் அளித்தது.

பத்திரிக்கை செய்தி :

மதுரை

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

செய்தி:
மக்கள் அதிகாரம், தமிழ்நாடு.