Friday, May 2, 2025
முகப்புவாழ்க்கைமாணவர் - இளைஞர்வர்தா நிவாரணப் பணியில் பு.மா.இ.மு

வர்தா நிவாரணப் பணியில் பு.மா.இ.மு

-

nmb-pk-msb-nagar-relife-work-219 (9)ப்போதெல்லாம் மக்கள் பாதிக்கப்படுகிறார்களோ அப்போதெல்லாம் முதல் ஆளாக களத்தில் இறங்கி செயலாற்ற அரசு வருவதில்லை. மக்களே தங்கள் பாதிப்புகளை சரி செய்ய வேண்டிய அவலநிலையில் இருக்கிறார்கள். வர்தா புயல் நிவாரணப் பணிகளை முழுவீச்சில்செய்யாமல் செயலற்றுக் கிடக்கிறது அரசு. உழைக்கும் மக்கள் வாழும் பகுதிகள் அனைத்தும் இருளில் மூழ்கியுள்ளன. மதுரவாயல், நொளம்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல இடங்களில் குடிசை வீடுகள் மீது மரங்கள் சாய்ந்ததால் வீடுகள் நாசமானது. வீடுகளின் மீது கூரைகளும், சிமெண்ட் ஓடுகளும் பறந்து சென்றன. மரங்கள் சாய்ந்ததால் மின்சார ஒயர்கள் அறுந்து விழுந்து கிடக்கின்றது. கூவம் ஆற்றின் மறுகரையில் இருக்கும் நொளம்பூர் பகுதிக்கு செல்லும் தரைபாலத்தின் ஒரு பக்கத்தில் மரங்கள் சாய்ந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. நிவாரணப்பணிக்கு அரசு வரவில்லை. காத்திருக்காமல் களத்தில் இறங்கினர் பு.மா.இ.மு தோழர்கள்.  தோழர்கள் மேற்கண்ட பகுதிகளில் 13-ம் தேதி காலை முதல் போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகளில் ஈடுப்பட்டுனர். புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக சில அத்தியாவசிய தேவைகளை ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற உணர்வுடன் புதுச்சேரியைச் சார்ந்த புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணித் தோழர்கள் சாப்பாத்தி, பிஸ்கெட் பாக்கெட்டுகள், பிரட் போன்ற உணவுப் பொருட்களை எடுத்து வந்திருந்தனர். அவைகளும் மக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டன.

தகவல்:
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, சென்னை

தொடர்புக்கு 94451 12675

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க