Friday, May 2, 2025
முகப்புஉலகம்அமெரிக்காடொனால்ட் டிரம்ப் – சவுதி நாடுகளின் கள்ளக்கூட்டணி

டொனால்ட் டிரம்ப் – சவுதி நாடுகளின் கள்ளக்கூட்டணி

-

வெள்ளை மாளிகையில் 09.06.2017 அன்று உரையாற்றிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் “மிக நீண்ட காலமாகவே கத்தார் நாடு தீவிரவாதிகளுக்கு நிதி உதவி செய்வதில் முதலிடத்தில் இருந்து வருகிறது. இது உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும். மேலும் கத்தார் மீதான அரசியல் உறவுகளைத் துண்டித்துள்ள சவுதி, ஐக்கிய அரபு நாடுகள், ஏமன் பஹ்ரைன் மற்றும் எகிப்து நாடுகளின் கூட்டு நடவடிக்கையை வரவேற்கிறேன்” என்று திருவாய் மலர்ந்துள்ளார். இது குறித்து உலகின் பல்வேறு ஊடகங்கள் புகைப்படங்கள் மற்றும் கேலிச்சித்திரங்கள் வழியாக டிரம்ப்பை விமர்சித்து வருகின்றன. அவற்றின் தொகுப்பு…..

சவுதி மன்னர் குடும்பத்துடன் வாளை கையில் ஏந்தி ஆனந்த நடனமாடும் டிரம்ப்…

அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரியும் அவருடைய உதவியாளர் ஜான் பொடெஸ்டோவும் பரிமாறிக்கொண்ட மின்னஞ்சல் விக்கிலீக்ஸ்-ஆல் அம்பலப்படுத்தப்பட்டது.

ஹிலாரியின் மின்னஞ்சலில் சவுதியும், கத்தாரும் கூட்டுக்களவாணிகள் என்பதுடன் சேர்த்து டிரம்ப் ஒரு பொய்யர் என்பதையும் நிரூபிக்கிறார்.

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதத்தின் உண்மையான ஊற்றுக்கண் யார்? இந்த எளிய கணித வாய்ப்பாடு புரியவைக்கிறது..

ஈரான் மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளை அழிக்க உருவாக்கப்பட்ட டிரம்ப், சவுதி கூட்டணி…

மத்திய கிழக்கு ஆசியாவின் பேரழிவிற்குக் காரணம் இந்த மெகா கூட்டணியே…

அமெரிக்க அடியாள் சவுதியின் இரட்டை வேடம்

ஐ.எஸ் தீவிரவாதிகள் எந்த நாடுகளிலிருந்து ட்விட்டரை அதிகம் பயன்படுத்துகின்றனர்??

டிரம்ப் சொல்கிறார்…. “ஈரான் உனக்கு, 110 பில்லியன் அமெரிக்க டாலர்கள் எனக்கு”

செய்தி ஆதாராங்கள்:

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க