Saturday, May 3, 2025
முகப்புஉலகம்அமெரிக்காஅமெரிக்கா : கருப்பின மக்களை மிரட்டும் பன்றிகளின் கூவம்

அமெரிக்கா : கருப்பின மக்களை மிரட்டும் பன்றிகளின் கூவம்

-

மெரிக்காவின், சுத்தம், சுகாதாரம் குறித்து நீங்கள் என்ன நினைப்பீர்கள்? திருப்பூரில் ஆலைக்கழிவுகள் வெளியேற்றப்படுவதற்கும், அமெரிக்காவில் ஆலைக்கழிவுகள் வெளியேற்றப்படுவதற்கும் பாரிய வித்தியாசம் இருப்பதாக நினைக்கிறீர்களா? இருக்கின்றது நீங்கள் நினைத்தால் அது தவறு என்று நாங்கள் சொல்லவில்லை; அமெரிக்கர்களே சொல்கின்றனர்.

அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாநிலத்தில் மொத்தம் பத்து மில்லியன் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த மாநிலம் அமெரிக்காவின் ஒட்டுமொத்த பன்றி இறைச்சி உற்பத்தியில் இரண்டாம் இடம் வகிக்கின்றது. இங்குள்ள பண்ணைகளில் ஏறக்குறைய ஒன்பது மில்லியன் வெண் பன்றிகள் வளர்க்கப்படுகின்றன.

பிரச்சினை என்னவென்றால் கழிவுகள் கையாளப்படும் விதம்தான்; திருப்பூரில் கழிவுகள் சுத்திகரிக்கப்படாமலும், நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக ஆற்றில் கொட்டப்படுவதாலும் எப்படி நொய்யலாறு பாழடைந்து மக்கள் பாதிக்கப்பட்டார்களோ, அதற்குச் சமமான அளவு இங்குள்ள மக்களும், குறிப்பாக கறுப்பின மக்கள் அதிகம் வாழும் தென்கிழக்கு கரோலினா பகுதி மக்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகியிருக்கின்றார்கள்.

வெண் பன்றிகளின் மூத்திரம், இறந்து போன பன்றிக்குட்டிகள், இறைச்சிக்காக வெட்டப்படும் பன்றியிலிருந்து வெளியேற்றப்படும் இரத்தம் மற்றும் திடக்கழிவுகள் அனைத்தும் மிகப்பிரமாண்டமாக வெட்டப்பட்டுள்ள குளத்தில் கொட்டப்படுகின்றன. பார்ப்பதற்கு சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் இவற்றின் கொள்ளளவு அதிகரித்துக்கொண்டே போவதைத் தடுக்க இந்த நிறுவனங்கள் இராட்சத எந்திரக்குழாய்களைக் கொண்டு தண்ணீரை வானத்தில் பீய்ச்சியடிக்கின்றன.

அப்படி பீய்ச்சியடிக்கப்படும் தண்ணீர் குறித்து ஒரு கறுப்பர் கூறுகையில் “அது ஏறக்குறைய மழை பெய்வது போலத்தான் இருக்கும்; கதவுகள், ஜன்னல்களைத் தாழிட்டுக்கொள்வோம், துணிமணிகளை வெளியே உலர்த்தும் வாய்ப்பே இங்கில்லை: தலைவலி, மூச்சுத்திணறல் போன்ற பல்வேறு பிரச்சினைகள் இங்குள்ள மக்களுக்கு சர்வசாதாரணமாகிவிட்டது. இந்த துர்நாற்றம் பல ஆயிரம் அழுகிய முட்டைகளை விட மோசமாக இருக்கும்; மாநில நிர்வாகம் இது குறித்து எந்த அக்கறையும் காட்டவில்லை; மாறாக எங்களுக்குத் தரப்படும் இழப்பீட்டுத் தொகையை மேலும் மேலும் குறைத்து வருகிறது”. மக்கள் வேறு வழியின்றி இப்போது போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

செய்தி ஆதாரம்:

North Carolina Hog Farms Spray Manure Around Black Communities; Residents Fight Back

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க