Friday, May 2, 2025
முகப்புஉலகம்ஐரோப்பாகோடை : ஐரோப்பாவில் ஆனந்தம் - இந்தியாவில் அவஸ்தை !

கோடை : ஐரோப்பாவில் ஆனந்தம் – இந்தியாவில் அவஸ்தை !

-

தென்மேற்கு பருவமழை வரும் காலத்தில், இந்தியா மற்றும் பாகிஸ்தானில் வெப்பநிலை ஆபத்தான நிலைகளை அடைந்து, மக்கள் தங்களை குளிர்விப்பது நாளின் வழமையானதாகிறது. இவ்வாண்டு ரமலான் இந்த கடும் கோடையில் வந்திருப்பதால் முசுலீம்கள் பகல் நேரத்தின் வெப்பத்தோடு நோன்பிருக்க வேண்டியுள்ளது. சில இடங்களில் வேலை நேரங்கள் குறைக்கப்பட்டுள்ளன. இருந்த போதிலும், 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் எல்லா வேலையும் சவாலானது.

இந்தியா பாக்கில் இப்படி இருக்க கோடையின் வெதுவெதுப்பான மிதவெப்பத்தை வடக்கு ஐரோப்பா அனுபவித்து வருகிறது. இங்கு சூரியகுளியல், நீந்துதல் போன்றவற்றில் மக்கள் ஈடுபடுகிறார்கள். இருப்பினும், வெப்பமானது ஜெர்மனியிலும், போலந்திலும் அதிகபட்சமாக 30 டிகிரி செல்சியசுக்கு உயர்ந்துள்ளது.

பொதுவாக சொல்வதானால், ஐரோப்பாவில் வெப்பமான வானிலை என்பது சிறிது அதிகமான ஈரப்பதத்துடன் அசவுகரியமாக இருக்கும். அந்நிலையில் நகர மையங்களில் குளிர்விப்பதன் தேவை முன்வருகிறது.

இந்தியா, அகமதாபாத்தில் ஒட்டகத்தைக் குளுமைப்படுத்தும் உரிமையாளர்.

ஜெர்மனி, மூனிச் நகரின், நிம்ஃபென்பர்க் கோட்டை கால்வாயில் தோணியில் ஒரு பயணம். ஜெர்மனியிலும் ஒரு காலத்தில் தோணி இருந்தது என்பது யாருக்குத் தெரியும்?

இந்தியாவின் அலகாபாத் நகரத்தில் 44டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் கால்நடைகளை கங்கையில் குளிர்வித்தல்.

பிரான்ஸ், பாரிஸ் நகர மையத்திலிருக்கும் நீரூற்றுக்கள்.

செங்குத்து நீர் விநியோக குழாயை அடைந்தது இந்த சிறுமியின் அதிருஷ்டம் தான். தற்போது கடுமையான வெப்ப அலையின் பிடியில் பாகிஸ்தான் உள்ளது. பலோசிஸ்தானின் துர்பாத் பகுதியில் வெப்பநிலை 53டிகிரி செல்சியசை எட்டியுள்ளது. இது உறுதிப்படுத்தப்பட்டால், பாகிஸ்தான் வரலாற்றிலேயே இது தான் அதிகமான வெப்பநிலை பதிவாக இருக்கும்.

லண்டன் பசுமை பூங்காவில் மடக்கு நாற்காலிகள். 26 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், நீல வானமும் சேர்ந்து இங்கிலாந்திற்கு அருமையான வார இறுதியை கொடுத்துள்ளன.

”குதிரைக்கு தண்ணீர் காட்டுதல்” என்ற சொற்றொடருக்கு புதிய விளக்கம். அதிக ஈரப்பதத்துடன், 38 டிகிரி செல்சியஸ் உள்ள கொல்கத்தா, இந்தியா.

வேலையை விரும்பிச் செய்யும் தொழிலாளிகளுக்கு இந்த 41 டிகிரி செல்சியஸ் அதிக சூடு இல்லை. பாகிஸ்தான், கராச்சி தேசிய அருங்காட்சியகத்தில் 1955-ம் ஆண்டின் மாடலான காடிலாக் (Cadillac) ஆடம்பர கார் மீளமைக்கப்படுகிறது.

நன்றி: அல்ஜசீரா