privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஇந்தியாநடிகை ஸ்ரீதேவிக்கு அரசு மரியாதை சரியா ?

நடிகை ஸ்ரீதேவிக்கு அரசு மரியாதை சரியா ?

-

டிகை ஸ்ரீதேவி கடந்த பிப் 24, 2018 அன்று துபாயில் மரணமடைந்தார். அவரது மரணத்தை வைத்து இந்திய ஊடகங்கள் நடத்திய மிகக் கேவலமான டிவி டி.ஆர்.பி கூத்துக்களை இப்போது பலர் விமர்சிக்கின்றனர். விட்டால் குளியலறைக்குள் ஒருவரை தண்ணீரில் முழ்குவதை காண்பித்தாலும் காண்பிப்பார்கள் என்ற அளவுக்கு ஊடகங்கள் விளையாடின. மற்றொரு புறம் ஸ்ரீதேவி எப்படி இறந்தார் என்ற ஆராய்ச்சி பிரம்மாண்டமாக நடந்தன.

ஒரு நட்சத்திர நடிகை வாழ்ந்தாலும், இறந்தாலும் ஆயிரம் பொன் என்பதற்கேற்ப, அவர் அழகு சிகிச்சை மருந்துகளால் மரித்தார், போனி கபூரின் திடீர் விசிட், விருந்தில் மயக்கம், சராயாம், துபாய் அரசின் பிரதேசப் பரிசோதனை என்று ஏகப்பட்ட வகைகளில் அவை நடந்தன. ஒரு வகையில் இவையெல்லாம் சீமாட்டி டயானாவின் இறுதிச் சடங்கோடு ஒப்பிடத்தக்கவை.

தற்போது ஸ்ரீதேவியின் உடல் முழு அ ரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டிருக்கிறது. அரசின் உயர் பதவிகளில் இருப்போருக்குரிய இந்த மரியாதை எப்படி ஸ்ரீதேவிக்கு அளிக்கப்பட்டிருக்கிறது என்பது அடுத்த சர்ச்சையை தோற்றுவித்திருக்கிறது.

தேசியக் கொடி போர்த்தி இறுதி ஊர்வலம்

முழு அரசு மரியாதை அளிக்கும் பொறுப்பு மாநில அரசுகளிடம் இருப்பதால் மராட்டிய அரசு செய்தது சரியாம். மறைந்த ஒருவருக்கு உள்ள புகழ் மற்றும் சமுதாயத்திற்கு அவர் ஆற்றிய தொண்டுகளைக் கருத்தில் கொண்டு இந்த முடிவை மாநில அரசுகள் எடுக்கலாம் என்பதின் படி மராட்டிய அரசு இதைச் செய்ததாம்.

நடிகை ஸ்ரீதேவி ஒரு நல்ல நடிகை, பன்மொழிகளில் நடித்திருக்கிறார் என்பதைத் தாண்டி அவர் செய்த சேவைகள் என்ன? இதற்கு இயக்குநர் ராம்கோபால் வர்மா பதில் அளித்துள்ளார்.

“நடிகை ஸ்ரீதேவி சொந்த வாழ்வில் மகிழ்ச்சியாக இல்லை. நடிகைகள் பலர் வெளியில் மகிழ்ச்சியாக இருப்பதாகக் காட்டிக் கொண்டாலும் சொந்த வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இல்லை. வருமான வரித்துறை சோதனைக்காக மற்றவர்களைப் போல ஸ்ரீதேவியும் கருப்பில் சம்பளம் வாங்கினார். அவற்றை நண்பர்கள், உறவினர்கள் கையில் கொடுத்தார். அவர்கள் ஏமாற்றியதால் ஸ்ரீதேவியின் தந்தை இறந்தார். அதே போல அவரது தாயாரும் சில நிறுவனங்களில் தவறாக முதலீடு செய்ததால் சொத்துக்களை இழந்தார். கையில் பணம் இல்லாத போது போனி கபூரை மணந்தார். கபூருக்கும் நிறைய கடன் இருந்தது.” இப்படி பட்டியல் இடுகிறார், ராம்கோபால் வர்மா.

இதன் பிறகு நிறைய சொத்துப் பிரச்சினைகள், வழக்குகள், உறவு சிக்கல்கள்… இப்படியாக நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை முடிந்திருப்பதை சோகத்துடன் குறிப்பிடுகிறார் வர்மா. அனேகமாக இதை அவர் ஒரு திரைக்கதையாக தயாரிப்பதற்கும் வாய்ப்பிருக்கிறது. அவரைப் பொறுத்தவரை இதில் பரபரப்பான கதை இருப்பதே முக்கியத்துவம் நிறைந்தது.

சரி, வர்மாவின் கூற்றுப்படி ஸ்ரீதேவி மட்டுமல்ல, பலரும் கருப்பில் சம்பளம் வாங்குகிறார்கள். இத்தகைய கருப்பு வருமானம் உருவாக்கிய வாழ்க்கைச் சிக்கல்கள், சொத்து பயங்கள், மண உறவு ஒப்பந்தங்கள் அனைத்தும் இத்தகைய நடிகைகளின் பொதுப் பிரச்சினைகள்தான். எனில் இதில் ஸ்ரீதேவியின் வாழ்க்கையை எப்படி மதிப்பிடுவது? அவரது வாழ்க்கை எப்படி மற்றவருக்கு முன்னுதாரணமாக அமையும்?

ராம்கோபால் வர்மா

ஸ்ரீதேவியின் வாழ்க்கை சோகங்கள் அவருக்கு ஏதோ இந்த சமூகம் அளித்த துன்பங்கள் அல்ல. ஒரு மேட்டுக்குடி மாந்தர் தனது சொத்துக்களை சேகரித்து, காப்பாற்றும் பிரச்சினையோடு சம்பந்தப்பட்டவை. அவர் நல்ல நடிகை என்பதற்கும், நல்ல குடிமகன் என்பதற்கும் நிறைய வேறுபாடு உண்டு. ஸ்ரீதேவியை தனது தங்கை என உருகும் கமல்ஹாசன், வர்மாவின் கருப்பு பண குற்றச்சாட்டுக்கள் குறித்து என்ன கூறுவார்? நடிகர்களுக்கு மட்டும் ஊழல், வருமான வரி, கருப்புப் பணத்தில் இருந்து விலக்கு கோருவாரா?

பதினாறு வயதினேலே படத்தில் மயிலாக நடித்த ஸ்ரீதேவியின் திரை முன்னேற்றம் மும்பையில் மையம் கொண்டிருந்தாலும் அவரது உள்ளம் இந்த வாழ்க்கையை துரத்திச் சென்று கொண்டே இருக்கிறது. அந்த துரத்தலில் அமைதியோ, மகிழ்ச்சியோ இல்லை. தோற்றம், தொழில், உறவுகள், நேர்காணல்கள், அனைத்தும் இந்த செயற்கையான வாழ்வைத் தக்கவைப்பதிலேயே உண்மைத் தன்மையை இழக்கின்றன.

திரையில் திறமையாக நடிக்கும் நடிகர்கள், சொந்த வாழ்க்கையிலும் நடித்தே ஆக வேண்டிய நிலைமையை தெரிவு செய்கிறார்கள். இறுதியில் அதற்கோர் முற்றுப்புள்ளி வருகிறது.

இந்தியாவில் சினிமாவின் பிரபலத்தை வைத்து நமது சமூக நேரம் எண்ணிறந்த வகையில் திருடப்படுகின்றன. நடிகை ஸ்ரீதேவியின் திரைத்துறை பங்களிப்பையும், அவரது மரணத்தின் சந்தேகங்களையும் விவரிக்கும் ஊடகங்கள் எவையும் அவரது மறுபாதி வாழ்க்கையை விசாரிக்க கூட முனையவில்லை. அப்படி விசாரித்தால் அது ஒருவரோடு நிற்கும் விசயமல்ல. ஏனெனில் எல்லா ஊடகங்களும் சினிமா பிரபலங்களின் செய்திகளை வைத்தே தமது வருவாயை உறுதி செய்கின்றன. அப்படி இருக்கும் போது நட்சத்திரங்களின் வில்லத்தனங்கள் வெளிச்சத்திற்கு வருவதை இவர்கள் விரும்ப மாட்டார்கள்.

அதே பிரபலம்தான் அரசுகள், அரசியல் கட்சிகளும் சினிமாவை அங்கீகரித்து முதனமையான மரியாதை கொடுக்க காரணமாகின்றன. அதனால்தான் மாராட்டிய அரசு ஸ்ரீதேவிக்கு அரசு மரியாதையை அளிக்கிறது. பாரதிய ஜனதாவின் ஆட்சிக் காலத்தில் இந்த அரசு மரியாதைகள் இப்படி சினிமாவிற்கு வலிந்து தருவதற்கு காரணங்கள் இருக்கின்றன. தனது கட்சி செல்வாக்கை அதிகரிக்க இத்திரைத்துறை அன்பளிப்புகள் உதவும் என அவர்கள் திட்டமிட்டே செய்கிறார்கள். ரஜினி – கமலுக்கு போட்டி போட்டுக் கொண்டு மோடி அரசு செய்யும் மரியாதை கூட அத்தகைய கணக்குகளை எதிர்பார்த்துத்தான்.எதிர்காலத்தில் சங்க பரிவாரத்தின் பிரமுகர்கள் பலர் மரணமடைந்தாலும் இந்த அரசு மரியாதையை செய்வார்கள்.

அரசுக்கே மரியாதை இல்லாத காலத்தில் அரசு அளிக்கும் மரியாதையின் மதிப்பு என்ன?