privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஇந்தியாமோடி ஆட்சியில் பத்தாண்டுகளில் இல்லாத ஊதிய உயர்வு வீழ்ச்சி !

மோடி ஆட்சியில் பத்தாண்டுகளில் இல்லாத ஊதிய உயர்வு வீழ்ச்சி !

இந்த 2020-ம் ஆண்டுக்கான ஊதிய உயர்வு சராசரியாக 9.1%-ஆக மட்டுமே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது கடந்த பத்தாண்டுகளில் மிகவும் குறைவான ஊதிய உயர்வாகும்.

-

லகம் முழுவதும் நிலவும் பொருளாதார மந்தநிலையின் விளைவுகள் அனைத்தும் இந்திய நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு வழங்கும் ஊதிய உயர்வின் மீது விடிந்திருக்கிறது. நடப்பு 2020-ம் ஆண்டுக்கான ஊதிய உயர்வு சராசரியாக 9.1%-ஆக மட்டுமே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது கடந்த பத்தாண்டுகளில் மிகவும் குறைவான ஊதிய உயர்வாகும்.

கடந்த 2018-ம் ஆண்டில் இது 9.5%-மாகவும், 2019-ல் 9.3%-மாகவும் இருந்தது. இந்த ஆண்டு அதிலிருந்தும் குறைந்துவந்தது. இதற்கு முன்னர் பெரும் பொருளாதார மந்தம் ஏற்பட்ட 2008-ம் ஆண்டில் ஊதிய உயர்வு வெறும் 6.6%-மாகவே இருந்தது.

இந்த ஆண்டின் புள்ளிவிவரங்கள் நீண்டகால நிலைமையை ஒத்து இருக்கின்றன. கடந்த பல ஆண்டுகளாக ஊதிய உயர்வு விகிதம் சரிந்து வருகிறது. கடந்த 2011-ம் ஆண்டுவரை ஊதிய உயர்வு இரண்டிலக்க அளவில் இருந்து வந்தது. 2012- 2016 காலகட்டத்திலும் 10%-க்கும் அதிகமானதாகவே இருந்தது. கடந்த சில ஆண்டுகளில்தான் இதன் அளவு 9% மற்றும் அதற்கு சிறிது அதிகமாகவும் இருந்தது.

இந்த புள்ளிவிவரங்கள், ஏயான் என்ற நிறுவனம் எடுத்த கருத்துக் கணிப்பின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளன. 20-க்கும் மேலான தொழிற்பிரிவுகளைச் சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் இருந்து இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. மேலும் உற்பத்தி மற்றும் சேவை நிறுவனங்கள் என்ற வகையில் இரு தரப்பிலும் சரிசமமாக எடுக்கப்பட்டது.

இந்திய நிறுவனங்களின் நிலைமை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சிறிது சரிந்திருந்தாலும், முழுமையாக கீழ் நோக்கிச் செல்லவில்லை. இந்தக் கருத்துக் கணிப்பில் வியாபார நிலைமைகள் முன்னேற்றமடைந்தும், நிலையானதாகவும் இருக்கிறதா அல்லது சரிகிறதா எனக் கேட்கப்பட்ட கேள்வுக்கு, சுமார் 92% நிறுவனங்கள் முன்னேற்றமிருப்பதாக தெரிவித்துள்ளன.

படிக்க:
RSS வஞ்சகம் : சமஸ்கிருதத்துக்கு 644 கோடி தமிழுக்கு 23 கோடி !
♦ குஜராத்தில் வக்கிரம் : உடைகளை கலைத்து 68 மாணவிகளுக்கு கட்டாய மாதவிலக்கு சோதனை !

பல பிரிவுகளைச் சேர்ந்த நிறுவனங்களின் ஊதிய உயர்வு வரையறை இந்த ஆண்டு குறுகியுள்ளது. மின் வணிகம், துவக்கநிலை மற்றும் தொழில்முறைச் சேவைகள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு 10% ஊதிய உயர்வு அளிப்பதற்கு திட்டமிட்டுள்ளன. சரக்கு இருப்பு மற்றும் போக்குவரத்து பிரிவு நிறுவனங்கள் வெறும் 7.6% மட்டுமே தரத் திட்டமிட்டிருக்கின்றன.

“2011-க்கு முன்னர், தகவல் தொழில்நுட்பப்பிரிவு, அது சார்ந்த சேவைகள்,  தொலைதொடர்பு, சில்லறை வர்த்தக மற்றும் நிதித்துறை சேவை ஆகிய பிரிவுகள் மட்டுமே இந்திய சராசரியை அதிகரித்துள்ளன. ஆனால் தற்போது இது பல்வேறு துறைகளுக்கும் விரிவடைந்துள்ளது.” என்கிறார் ஏயான் நிறுவனத்தின் இயக்குனர் நவ்நீத் ரத்தன்.

விலைவாசி ஒருபுறம் அதிகரித்துக் கொண்டு செல்லும் நேரத்தில், ஏற்பட்டிருக்கும் பொருளாதார மந்தநிலை வேலையிழப்பை ஏற்படுத்துவதோடு, ஊதியத்தைக் குறைத்து வருகிறது. இந்த நிலைமைகளைச் சீர் செய்யாமல், வகுப்புவாதக் கலவரங்களில் மக்களைத் திசை திருப்பி நாட்டையும் பொருளாதாரத்தையும் சீர்குலைத்து வருகிறது மோடி அரசு !


நந்தன்
நன்றி :  தி வயர்.