privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஐ.டி துறை நண்பா... புத்தகக் கண்காட்சியில் வினவு, நூல் ஆறு

ஐ.டி துறை நண்பா… புத்தகக் கண்காட்சியில் வினவு, நூல் ஆறு

-

vbf6

அன்பார்ந்த நண்பர்களே புதிய கலாச்சரத்தில் வெளியான அமெரிக்க திவால் கட்டுரையும், வினவில் வெளியான ஐ.டி துறை நண்பா உனக்கு ரோஷம் வேணுண்டா என்ற கட்டுரையும் இதையோட்டி நடந்த விவாதங்களும் இப்போது நூலாக வெளிவந்திருக்கிறது. அதில் வந்த முன்னுரையே இங்கே பதிவு செய்கிறோம்.

முன்னுரை:

ஐ.டி என்று பரவலாக அறியப்படும் தகவல் தொழில் நுட்பத் துறை சமீபத்திய ஆண்டுகளில் வளர்ந்திருப்பது அனைவரும் அறிந்ததே. வீட்டு வாடகை உயர்ந்தது முதல் நட்சத்திர விடுதிகளின் வார விடுமுறைக் கொண்டாட்டம் வரை பல்வேறு விசயங்களில் இந்தத் துறையின் செல்வாக்கும் நமக்கு தெரிந்த விசயம்தான். தீடீரென்று பலரது வாழ்க்கையை ஜாக்கி வைத்து தூக்கிய பெருமையும் இத்துறைக்கு உண்டு. ஒரு காவியம் போல வியந்தோதப்படும் இந்தத் துறையின் இன்றைய நிலை என்ன?

மென்பொருள் தயாரிக்கும் அந்த நிறுவனத்தில் வெள்ளிக்கிழமையென்றால் கூதூகலம் அனைவரையும் பற்றிக் கொள்ளும். வாரத்தின் விடுமுறை நாட்களைக் கொண்டாடுவதற்கு நிறுவனமே பல பொழுது போக்கு ஏற்பாடுகளைச் செய்யும். ஊழியர்களின் பிறந்த நாளுக்கு பரிசு, மூன்று வேளையும் உயர்தர உணவு இலவசமாக அளிக்கப்பட்டது என அந்த பொற்காலம் சுபீட்சமாகத்தான் இருந்தது சில மாதங்களுக்கு முன்பு வரை. அதன் பிறகு என்ன ஏது என தெரியாமல் அந்தப் பொற்காலத்தின் கூரைகள் ஒவ்வொன்றாய் விழ ஆரம்பித்தன. இலவச உணவு ரத்து செய்யப்பட்டது. பல ஊழியர்கள் நீக்கப்பட்டனர். முக்கியமாக வெள்ளிக்கிழமை மாலையில்தான் இந்த ஆட்குறைப்பு வைபவங்கள் நடந்தேறின. மகிழ்ச்சியை அளித்து வந்த அந்த நாள் இப்போது பீதியை பற்றவைக்கும் நாளாக மாறியது.

அந்த நிறுவனத்தின் வயது எட்டென்றால் அந்த கூரூப் லீடர் ஏறக்குறைய ஆறு வருடங்கள் வேலை செய்திருக்கிறார். சம்பளம் ரூ.30,000. திருமணம், சொந்தவீடு, வங்கிக் கடன் என பல திட்டங்கள் அந்த சம்பளைத்தை வைத்து செயல்படுத்தியிருக்கிறார். தீடீரென்று ஒரு வெள்ளிக்கிழமை மாலை  அவரது வேலை பறிக்கப்பட்டதாக ஆணை வருகிறது. உத்தரவு வந்த சில மணித்துளிகளுக்குள்ளாகவே அலுவலக கணினி அவரது உத்தரவுகளுக்கு ஆட்பட மறுக்கிறது. விரக்தி கொப்பளிக்க அவர் கதறி அழுகிறார். தன் வேலை பறிக்கப்படும் அளவுக்கு எந்த குறையையும் செய்ய வில்லையே என அரற்றுகிறார். அவரது முன்னாள் சக ஊழியர்கள் அவரை சமாதானப்படுத்துகின்றனர். அவரது அழுகைக்கு பின்னே அந்த சம்பளத்தின் தரத்திற்கேற்ப கட்டியமைக்கப்பட்டிருந்த வாழ்க்கை இனி வாழ முடியாத ஒன்றாக மாறிவிட்டது  அச்சுறுத்தும் யதார்த்தமாக இருக்கிறது. இனி அவர் புதிய வேலைக்கு முயன்றாலும் பழைய சம்பளத்தில் பாதி கிடைத்தால் பெரிய விசயம் எனுமளவுக்கு நிலைமை மாறிவிட்டது. ஏன்?

அமெரிக்காவில் நிதி நிறுவனங்களும், வங்கிகளும் திவாலாகி உலகையே ஒரு பொருளாதார வீழ்ச்சியில் தள்ளிய நேரத்தில் அதைப் பற்றி புதிய கலாச்சாரத்தில் ஒரு பெரிய கட்டுரையை வெளியிட்டிருந்தோம். அதையே வினவுத் தோழர்களும் அவர்களுடைய இணைய தளத்தில் வெளியிட்டிருந்தார்கள். பல வலைப்பூக்களும் இக்கட்டுரையை மறு பிரசுரம் செய்தன. பல ஆயிரம்பேர் படித்த அந்தக் கட்டுரையில் அமெரிக்கா நிறுவனங்கள் திவாலானதின் பின்னணியையும், குறிப்பாக முதலாளித்துவத்தின் தவிர்க்க இயலாத சூதாட்ட பொருளாதரத்தின் இயங்கு விதிகளையும் எளிமையாக விளக்கியிருந்தோம். தனியார் மயம், தாராள மயத்தின் தோல்வியும், அந்த நிறுவனங்களைக் காப்பாற்ற அமெரிக்க அரசு பல ஆயிரம் கோடி ரூபாயில் நிவாரண நிதி அளித்ததின் பின்னே மறைந்திருக்கும் முதலாளித்துவப் பொருளாதாரத்தின் தோல்வியையும் குறிப்பிட்டிருந்தோம்.

இணையத்தில் வெளிவந்த இக்கட்டுரை பல நூறு வாசகர்களால் பாராட்டப்பட்டது. பலர் மறுமொழிகளின் மூலம் தங்களது கருத்துக்களை தெரிவித்திருந்தனர். அந்தக் கட்டுரையும் மறுமொழிகளும் இங்கே வெளியிடப்பட்டிருக்கின்றன. இக்கட்டுரையின் தொடர்ச்சியாக வினவுத் தோழர்கள் ஜ.டி துறையைப் பற்றி ஒரு கட்டுரையை இணையத்தில் வெளியிட்டிருந்தார்கள். அதில் அமெரிக்கா திவாலின் பிரதிபலிப்பாக இந்தியாவில் ஏற்படக்கூடிய பாதிப்புகளையும், ஐ.டி ஊழியர்கள் தமது எதிர்காலத்தை பாதுகாப்பதற்காக தொழிற்சங்கங்களில் திரளவேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தியிருந்தார்கள். ஆனால் பல வாசகர்கள்- இத்துறையில் பணியாற்றுபவர்கள்- அவற்றை அலட்சியமாக மறுத்தார்கள். தங்களுக்கொன்றும் பாதிப்பில்லை எனவும் ஆக்ரோஷமாக தெரிவித்தார்கள். சில வாசகர்கள் அந்தக் கட்டுரையின் சாரத்தை ஏற்றுக் கொண்டதோடு ஐ.டி துறையின் ஆட்குறைப்பு நடவடிக்கைகளைப் பற்றிஆதாரங்களுடன் தெரிவித்தார்கள். இங்கே அந்தக் கட்டுரையும் அதற்கான மறுமொழிகளையும் வெளியிட்டுள்ளோம்.

இக்கட்டுரை வெளியிட்டு இன்று ஒரிரு மாதங்கள் முடிந்து விட்டன. இன்று தகவல் தொழில் நுட்பத்துறையின் வீழ்ச்சியும், ஆட்குறைப்பும், சம்பளக் குறைப்பும் யாரும் மறுக்க முடியாத அளவுக்கு கண்கூடான யதார்த்தங்களாக மாறிவிட்டன. இதை முன்னறிந்து சொல்லும்போது மறுத்தவர்கள் இன்று அவர்களது மறுப்பைத்தான் மறுக்கவேண்டியிருக்கும். முதலாளித்துவத்தின் பயங்கரவாதமாய் அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகியிருக்கும் இந்த பொருளாதாரச் சுனாமி இந்தியாவை மட்டுமல்ல பல நாடுகளையும் பதம் பார்த்திருக்கிறது. சில மாதங்களுக்கு முன்னர் 20,000 புள்ளிகளில் கும்மாளமிட்ட மும்பை பங்குச் சந்தை இன்று 10,000த்திற்கே தள்ளாடுகிறது. இந்த இழப்பில் ஏமாந்து பலர் தற்கொலை செய்திருக்கின்றனர்.

முதலாளித்துவத்தின் அநீதியான உலகமயம் எப்படிப் பார்ததாலும் இப்படித்தான் ஒரு அழிவை மக்களுக்கு தர முடியும். இதை அரசியல் ரீதியாக புரிந்து கொள்வதும், அதற்கெதிராய் செயல் படுவதும் காலம் நம்மிடம் கோரும் கடமையாகும். அந்த கடமைக்கு வாசகரை தயார் செய்யும் பணியில் இந்த நூலும் ஒரு பங்காற்றும் என்ற நம்பிக்கையுடன் உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.

தோழமையுடன்
ஆசிரியர் குழூ,

புதிய கலாச்சாரம்.
ஜனவரி, 2009.

பக்கம் – 72, விலை ரூ.35

இந்த நூல் சென்னைப் புத்தகக் கண்காட்சியில் கீழைக்காற்று அரங்கில் ( எண்: 99 – 100 ) விற்பனைக்குக் கிடைக்கும். கண்காட்சி முடிந்தவுடன் கீழைக்காற்று கடையிலும், புதிய கலாச்சாரம் அலுவலகத்திலும் பெற முடியும். முகவரிகள்,

புதிய கலாச்சாரம்,
16, முல்லை நகர் வணிக வளாகம், 2ஆவது நிழற்சாலை,
( 15-ஆவது தெரு அருகில் ), அசோக் நகர், சென்னை – 600 083.
தொலைபேசி: 044 – 2371 8706 செல்பேசி : 99411 75876

கீழைக்காற்று வெளியீட்டகம்,
10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,
சென்னை – 600 002.
தொலைபேசி: 044 – 28412367

வெளியூர், மற்றும் வெளிநாட்டு நண்பர்கள்  vinavu@gmail.com , pukatn@gmail.com முகவரிகளில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

  1. ஆறு புத்தங்களில் ரொம்ம்ம்ம்ம்ப முக்கியமான புத்தகம் இதுதான்…
    இத அவங்கவுங்குள்கு தெறிஞ்ச ஐ.டி மக்களுக்கு வாங்கி கொடுக்கனும்!!!
    நன்றி வினவு

  2. I.T. இல்லை!
    I.T. இல்லை!!
    I.T. இல்லவே இல்லை!!!

    I.T. யில் வேலை பார்ப்வன் முட்டாள்!
    I.T. கம்பெனி ஓனர் அயோக்கியன்!!
    I.T. க்காக படிப்பவன் காட்டுமிரான்டி!!!

  3. நல்ல முயற்சி. பாராட்டுகள் தோழர். இணையத்தை பார்வையிட வசதியற்ற மக்களுக்கும் இந்த விடயங்கள் போய்ச் சேர வேண்டும். இன்றும் இந்தியாவில் பெரும்பான்மை மக்களுக்கு இணையத்தை அல்லது கணணியை பயன்படுத்தும் வசதி இல்லை. சில இடங்களில் மின்சாரம் இருப்பதில்லை. அப்படியான சூழ்நிலையில் வாழும் மக்களுக்கு நூல்கள் பயனுள்ளதாக இருக்கும். இணையமோ, நூலோ கருத்து மக்களுக்கு போய்ச் சேர்ந்தால் சரி.

  4. தயவு செய்து ஏழாவது புத்தகமாக விடுதலை(போலி) போன்ற புரட்டல் காரர்களின் பின்னூட்டங்களை தனி புத்தகமாக வெளியிட வேண்டும்,அப்போது தான் இணைய உலகில் அவிழ்ந்து டவுசர்களுக்கு வேட்டி கட்டுவோரின் வேட்டியை மக்களே உருவி விட்டு ஓட விடுவார்கள்.அதற்கான தேவை கண்டிப்பாய் இப்போது இருக்கின்றது

    கலகம்

  5. >>> வாரத்தின் விடுமுறை நாட்களைக் கொண்டாடுவதற்கு நிறுவனமே பல பொழுது போக்கு ஏற்பாடுகளைச் செய்யும். ஊழியர்களின் பிறந்த நாளுக்கு பரிசு, மூன்று வேளையும் உயர்தர உணவு இலவசமாக <<<

    :-))) yennatha solla..

  6. நீங்கள் சொல்லும் கம்பெனி எங்கு உள்ளது???

    வார இறுதி கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்வது எந்த கம்பெனி??

    மென்பொருள் துறைக்கும் மென்பொருள் சாராத BPO and call center க்கும் வித்தியாசம் தெரியாத ஆட்கள் நீங்கள் என்பதை பல முறை நிருபித்து உள்ளிர்கள்…

  7. சதீசு,
    இவங்க ஜ.டி ஊழியர்களுக்கு சப்போர்டா பேசினா உங்குளுக்கு ஏன் கோவம் வருது?
    நீங்க ஐடி கம்பென் ஓனரா?
    இல்ல எச்சு ஆரு மேனேசரா?

  8. //மென்பொருள் துறைக்கும் மென்பொருள் சாராத BPO and call center க்கும் வித்தியாசம் தெரியாத ஆட்கள்//

    சீட்டு கிழிந்சு, வேல போயி வீதியில நிக்குற
    மென் பொருள் துறை ஊழியருக்கும்
    பிபிஓ கால் சென்டர் ஊழியருக்கும
    என்ன வித்தியாசம் சதீசு அவர்களே?

  9. ஐ.டி – வேலைகளுக்கான நிரல்களை எழுதுவது
    ஐ.டி.ஈ.எஸ் – நிரல்களைப் பயன்படுத்தி மனித உழைப்பை தருவது.

    ஐடி-என்ன வித்தியாசம். முக்கியமாக சம்பளம் அதிகம், விடுமுறை அதிகம், அறிவாளின்னு நெனப்பு etc

    நீ என்ன சோல்ல வருகிறாய்

  10. Hi,

    I am working for the Same IT Industry which you people are telling so many stories, but the fact is our younger generation who taken these as advantage and they did not realise what is the fact, they already suffered in 2000 also, but they have not learned the lession from that, atleast here after they have to change their attitude towards the LIFE!!!, Already we people are in PANIC, Do not pass any comment in this drastic situation.

  11. என்னா சதீசு,

    ஐ டிக்கும் பீபிஓவுக்கும் என்ன வித்யாசம் நீயே சொல்லுமா. முதல்ல உனக்கு என்ன வித்தியாசம்ன்னு தெரியுமா ? இனிமே உன் டவுட்ட என்கிட்ட நேரடியாவே கேக்கலாம்.பீபீஓ ஐ.டி ரெண்டு பேரும் அடிமை வேலதான் பண்ண்றாங்க.ரெண்டு பேருமேஎன்னதான் எக்.ஆர் கேவலமா திட்டுனாலும்,நாயி மாதிரி வேலை வாஙுனாலும் ஒரு எக்ஸ்கர்சன்னா பல்ல காட்டிக்கிட்டு போயி நிப்பீங்க ஒரு பங்க்சன் அப்புடீன்னா மானத்த விட்டுட்டு ஆடுவீங்க.500 பேர் வேல செஞ்ச கம்பெனியில இப்ப 50 பேர் வேல பாத்தாலும் 450 பேர் வேலையவிட்டு நீக்குனத பத்தி கொஞ்சமும் யோசிக்காம அப்புடியே சவக்குழிய நோக்கி போவீங்க
    இதுல என்ன கண்ணு வித்தியாசம்

    ஐ டி பீபிஓ பத்தி நாங்க கொஞ்சம் கிழிச்சு இருக்கோம்.வந்து படிக்குறீயா.

    http://kalagam.wordpress.com/2008/12/28/bpo-%e0%ae%85%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%ae%e0%af%88-%e0%ae%95%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-3%e0%ae%85%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%ae%e0%af%88%e0%ae%95/

    http://kalagam.wordpress.com/2008/11/23/bp0%e0%ae%85%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%ae%e0%af%88c0m-%e0%ae%aa%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf2%e0%ae%85%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%ae%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%ae/

    கலகம்

    • இந்த மான ரோசம் எல்லாம் communistukku  இங்க இருக்கு. ரஷ்யா ல இருந்ததா. இப்போ சினால இருக்கா. If private company owner is master, what about the chinese government head ? சும்மா comrade  ன்னு சொன்ன போச்சா. Can you question எனி of your communist heads in china ??? 70000 factories shut down in china ?? what about that. hundreds of empty container ships were stranded  off china sea near thailand. அங்க கம்முநிசம் என்ன பண்ணுச்சு. அமேரிக்காவ என்னெனவோ திடரீன்களே , எல்லா எச்போர்டும் பண்ணறது சீனா . அது ஏன் ? எதாவது மறைமுகமா அமெரிக்காவுக்கு எதிரா சதி பண்ணறீங்களா கம்யூனிஸ்ட் எல்லாம் ? உங்களைவிட கம்யூனிஸ்ட் வேக்க்யானம் தெரிஞ்ச சீனா ஏன் அமெரிக்காவோட டூயட் பாடுது. முதல்ல உங்க கம்ரடே என்ன பிளான் வசுருக்கங்கன்னு தெரிஞ்சுகாங்க .  சும்மா அவங்க குடுத்த காசுக்கு ஜால்ரா அடிக்காதீங்க. ஊரு ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டமாம் .

  12. எப்படிங்க,
    இப்படி மீசையில மண்ணு ஒட்டாத மாதிரி நடிக்குறீங்க., மானமுள்ளவங்களாம் ஐடி பீ பி ஒ க்கரவுக எதாச்சும்சொன்னா கோவம் பொத்துகிட்டு வந்திடுமாம்.என்னமோ ஐடி பீபி,ஓவில சமத்துவம் பொங்குதுன்னு 3 மாசம் கழிச்சு மறுபடியும் வந்து கூவுறீங்களேப்பா. எங்கே உன்ங சமத்துவத்தை நானும் கொஞ்சம் பட்டியலிடுறேன்.நீயும் காட்டேன் பார்க்கலாம்

    http://in.news.yahoo.com/20/20081225/1416/tnl-it-job-losses-in-india-can-top-50-00.html

    http://thesteel.blogspot.com/search/label/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF

    http://kalagam.wordpress.com/2008/12/24/it-%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a3%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/

    கலகம்

  13. தகவல் தொழிலில் நுட்ப துறை தோழா நாம் தோற்கவில்லை…. ஆனைக்கும் அடி சறுக்கும் மறுபடியும் நம் துறை மேலோங்கும்…….. காத்திருப்போம். போற்றுவர் போற்றட்டும் தூற்றுவோர் தூற்றட்டும்….!!!!!!!!!!!

  14. I agree most of the contents are true, but they have given lots fake news to make funny, as like extra fittings.

    I came to India recently and there was a news in very good magazine, like if we use hair dye, then we will have cancer and another one rape story, like they explained all situation, like how many peoples involved and how they did. The actual truth content is just 30% and rest of the 70% are editor’s imagination, to satisfy their low profile readers.

    Some of them knows, this is the Indian media style.

    The current situation is not an IT problem, it’s an world wide economy issue. initially investment bank’s are filed bankruptcy, because of their stupid action. Most of the companies are fired their contractors to reduce the cost. Now, most of the companies are not getting fund from the bank to run the company.

    My first salary in india was Rs 4000 as IT employee on 2000, but nowadays freshers are getting Rs 50000. So, the fresher IT person will behave like New Rich Person.

    Now, My monthly salary is around 5 lakhs Rupees (after converted from dollars to rupees), but i did not have any experience like this editor explained on his book.

    I saw a tamil movie “Katradhu Tamil”, such a great movie, i can understand the feelings of low salary persons in india in front of IT people.

    One of the company share was $10 in US, but now it’s just 15 cents, I can estimate after 2 years it will become $10 again. So, i bought 30000 shares. if my assumption is true, then i will get some crores of rupees, other wise my 3 lakhs rupees investment is gone away. ALL ARE GAME AND TIME.

  15. The Q3 margin in TCS has not improved. Lay offs are continuning in different modes. Working hours are increasing. What we see now is the only spill over effect of economy slowdown. This will aggrevate in 2009. There will be consolidation in the industry. Many may wind up their services. It is high time for IT guys to mobilize as union.

  16. Working for the past 15 years in IT never had such funny experiences nor my friends. Rea IT people are still in the job and getting real salaries and living real life.

    My friends from other states always say “Tamils are known for their extra-ordinary exaggeration of any event” . I used to vigorously oppose such comments. Reading such articles proves that we are indeed very good in exaggeration

    Neverthless, if the author is getting some “kick” out of kicing the IT guys,,, so be it.

  17. Dear Friends,

    In any industry, ups and downs are common. The current trend is affecting all the industries. This should be a lesson for the IT people on how to save money and how to spend wisely.

    I agree few IT people have headweights and their attitude changes lot. But this happens to everyone who gets huge money. Do not forget that there are so many industries are depend on IT people like Marketing, Entertainment, Automobile, etc.

    Any one can earn lot of money with proper vision and aim. Now is the crisis in every industry. Just do not make fun at IT people.

    How about Actors,Actresses, What the great achievement they are doing and getting paid such huge amount. They simply spoiling our culture.

    Tell me one thing, Someone should have taught you on how to surf web page, that person also should be IT person. So please do not make fun at them.
    IT person only is making your personal banking more simpler. Even Rail booking and everything.

    Finally I ask IT people spend money wisely and never change your character after seeing the money.

  18. தோழர் அசுரனிடம் இந்த அய்.டி ஊழல்கள் பற்றி ஒரு விரிவான, அருமையான விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. பார்க்க :

    http://poar-parai.blogspot.com/2009/01/it.html
    வருத்தப்பட்டு பாரம் சுமக்கும் IT ஊழியர்களே! உங்கள் பாரங்களை (முன்னாள்)சத்யம்-ன் பிராபாத்திடம் இறக்கி வையுங்கள்!!

  19. Most people do not know about the employment oppurtunities and poverty levels until the 80s in India.

    Pls try te old film “Varumayin Niram Sihappu” (1980) for a good idea.

    Something is better than nothing is a old adage.
    previously we had nothing while now we have something. Does Comrades wish to get back to the good old days of statisim, license raj, xenophobia, very high unemployment levels ?

    IBM was kicked out of India (Along with Coke) in 1977 by the ‘socialist’ minded govt then. We lost many valuable deacades.

    And Comrades celeberated 1985 May day as “Anti-Computerisation” day in India, as they belived computers will lead to unemployment. They violently opposed computarisation of govt companies then.
    Will anyone belive it now ?

    As usual they have been proved wrong. so will they be in future.

  20. Athiyaman,

    I see from your blog that you are Right Wing, so your Anti-Left stand is understandable.
    But why do you try to establish that this blog is against Information Technology and it’s Employees?
    Now thats Scandalous !

    Anybody who has “read” this post can tell you that this is in favour of the IT employees and it asks them to unionize to safe guard their rights (read jobs).

    Why does that bother you?
    What are you afraid of?

  21. Seems you are the one who’s living in the past…

    Come on Athiyaman wake up!

    Look at the chaos Wall Street has created around the world. Forget India, Millions of Jobs have been lost in the “Promised Land” America.

    Why don’t you talk about that?

  22. //Anybody who has “read” this post can tell you that this is in favour of the IT employees and it asks them to unionize to safe guard their rights (read jobs).
    //

    Let them decide that and not your comrades. We know from past histroy how irresponsible union actions destroyed many a viable factory, esp until the 80s.

    ////Seems you are the one who’s living in the past…

    Come on Athiyaman wake up!

    Look at the chaos Wall Street has created around the world. Forget India, Millions of Jobs have been lost in the “Promised Land” America.

    Why don’t you talk about that?

    ////

    IS this all your logical reply ? Sure US fin. model is wrong, reckless and no denying that. but that is not the only model of free market. and if imprudent lendings and govt interventions are there these will be the result.

    sure millions of jobs are lost. but this is not the end of the world and economy will recover in a couple of years and new jobs will be created. new jobs were always being created in a dynamic economy. Can you suggest any workable methods as an alternative to all this ?

    Ok. then what do propsoe we should do ? get back to the good old days of Licensing and state socialsism as it was before 1991 ? kick out all MNCs and FIIs and FDIs ? raise taxations to the levels of 70s ?
    You people still oppose all these. But one of your former comrades of W.Bengal (esp the present and past CM) welcome LPG whole heartedly, simply becasue they are realists, pragmatists and knew reality better than theoriticians like you.

  23. > Last week Sun Micro Systems in Blr terminated 150 employees
    > out of 850+ employees. Motorola has already terminated 150
    > people. Juniper, Nortel are planning. IBM India is planning
    > a 10% cut and this time appraisals have been very strict. In
    > the AIX group out of 150 people 25 might go. Every software
    > engineer we know has seen 1 or 2 people who have lost their
    > jobs.
    >
    > If about 10% loose their jobs in 2009. That will be about
    > 100,000 jobs in bangalore. This will be a very large number.
    > I might not be correct with the nos – correct me if i am
    > wrong
    >
    > When some companies offer a compensation which might help
    > employees to sustain 3-6 months at half their pay, many just
    > writeoff people with one month salary of less.
    >
    > The situation in 2001-2002 was slightly different in India
    > as people were able to find alternate jobs. However in 2009
    > the oppurtunities elsewhere have narrowed a lot. Putting IT
    > employees to a lot of stress.
    >
    > However these are not recognised as official
    > layoff/termination becuase of the current economic crisis.
    > Widely its been told that – the bottom 5% – who are not able
    > to carry their weight are being let off – we are just
    > trimming down – we are shedding extra flab and so
    > on..However such a large number of terminations cannot be
    > seen as a regular performance cut.
    >
    > What are the responsibilities of employees as peers, what
    > are the responsibilities of the government towards such
    > skilled workers. What are the responsibilities of corporates
    > who have made considerable profits in the earlier quarters.
    >
    > What should be our response to this situation as citizens
    > should we intervene or should we ignore.
    >
    > -S
    >
    >
    >
    > * finance counseling :
    >
    > http://lay-off.org/index.php?option=com_content&view=article&id=8:personal-finances-during-lay-off-period&catid=2
    >
    > * Legal support:
    >
    > http://lay-off.org/index.php?option=com_content&view=article&id=10:never-resign&catid=2
    >
    > – awareness about industrial disputes act
    > – compensation which is stipulated under the act
    >
    >
    > * Job support network :
    >
    > * Counseling :
    >
    > from another affected person to overcome shock..
    >
    > ———
    > * ilo has guidelines – but management employees in india
    > not protected :
    >
    > ilo guideline on termination :
    >
    > In view of the flexibility which multinational enterprises
    > may have, they should strive to assume a leading role in
    > promoting security of employment, particularly in countries
    > where the discontinuation of operations is likely to
    > accentuate long-term unemployment; avoid arbitrary dismissal
    > procedures and provide some form of income protection for
    > workers whose employment has been terminated.” The code
    > is not binding but forms the basis of labour laws in many.
    > For instance, the US Worker Adjustment and Retraining
    > Notification Act requires companies to give employees 60
    > days notice before mass layoffs or a plant closing. The
    > protection extends to all employees of companies with more
    > than 100 people. The Act defines mass layoff as the shutdown
    > of a site in which 50 or more employees lose their jobs.
    >
    > * however there are also corrupt corporate practices :
    > showing a layoff as performance cut – there is no proper way
    > of recording and exposing these things as of now
    >
    > * advocacy : however there is no law in india specifically
    > for white collar employees – especially open to the vagaries
    > of the market – especially management employees
    >
    > ———
    > some things existing in blr
    >
    > lay-off.org
    >
    > http://www.unitespro.org/ – affiliated to intuc – but
    > certain friends in the press are not sure about these folks

  24. Dear Friends
    Pls add for A/L political Science books and Short Notes .in this side very worth rural&isloted students in upcountry of srilanka all kind of notes this knowledge we giving free access internet write down the notes. best for srilanka his try and srilanka curriculum of education,and several subjects books.
    thanks
    sathiswaran

Leave a Reply to அர டிக்கெட்டு ! பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க