privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஈழம்சோனியா காங்கிரசுன்னா சும்மாவா ! கருத்துப்படம், கவிதை பஜனை !

சோனியா காங்கிரசுன்னா சும்மாவா ! கருத்துப்படம், கவிதை பஜனை !

-

congress_bajanai
இத்தாலியிலிருந்து அருள்பாலிக்க வந்த அம்மா போற்றி !

ஸ்ரீபெரும்புதூரில் திவ்யமாய் தியாகியான ராஜீவ் காந்தியின் பட்டத்தரசியம்மா போற்றி !

புதுடெல்லியில் பாடிகாடால் போய்ச்சேர்ந்த இந்திராவின் மருமகளான தாயே போற்றி !

ரோஜாவின் ராஜா நேரு குடும்பத்தின் குலவிளக்கே போற்றி !

நாளைய பிரதமர் ராகுல் காந்தியைப் பெற்றெடுத்த காவியத் தாயே போற்றி !

நாளைய பிரதமரின் சகோதரி பிரியங்காவை அளித்த பெருந்தாயே போற்றி !

பிரியங்காவின் குழந்தைகளுக்கு என்ன பதவியின்னு தெரியலையே பாட்டியம்மா போற்றி !

காலையில் எழுந்ததும் கக்கா போவதற்கு அனுமதி கொடுத்த அன்புத் தாயே போற்றி !

கக்கா முடிந்து பக்காவாய் கதர் வேட்டி யூனிபார்மை கட்ட அனுமதித்தாயே போற்றி !

கட்டிய வேட்டியை உருவ சத்தியமூர்த்தி பவனுக்கு போவோமே தாயே போற்றி !

கோஷ்டி மோதலில் உருவும் வேட்டிகளை சேர்க்க இடமில்லை, வெளுக்கத் தண்ணியில்லையே என்னப் பெத்த ஆத்தா போற்றி

காங்கிரசுல கவுன்சிலருக்கே கோஷ்டின்னு எகத்தாளம் பண்றானுங்க எங்கம்மா போற்றி !

நீலகிரிசயில் பிரபுவுக்கு கோஷ்டி, கோவையில எஸ்.ஆர்.பிக்கு கோஷ்டி, ஈரோட்டுல இளங்கோவனுக்கு கோஷ்டி, விக்கு புகழ் மயூரா ஜெயக்குமாருக்கு கோஷ்டி, மக்கு புகழ் ஞானசேகரனுக்கும் கோஷ்டி,

ப.சிதம்பரமும் அவன் பையனும் ஒரு கோஷ்டி, கிருஷ்ணசாமியும் அவன் புத்திரனும் இன்னொரு கோஷ்டி, மெகா டி.வி தங்கபாலு, வசந்த் டி.வி வசந்த குமார்

அம்மா அம்மம்மா கோஷ்டிகளை எண்ணி எண்ணி வாயே வலிக்குதம்மா போற்றி !

புன்னகை மன்னன் நரசிம்ம ராவுக்கு பிரதமர் பதவி கொடுத்த மதரே போற்றி !

கல்லுளி மங்கன் மன்மோகனுக்கு விட்டுக்கொடுத்தாய் போற்றி !

அவனோ நாட்டையே அமெரிக்காவுக்கு வித்துப்புட்டான் போற்றி

அதுக்கு உங்களுக்கு வந்த கமிஷனுல இங்க கொஞ்சம் வெட்டுங்கம்மா போற்றி !

போபார்ஸ் கமிஷன்ல மூப்பனாருக்கு வெட்டுனீங்க, எங்களுக்கில்லையம்மா போற்றி !

ஸ்பெக்ட்ரமுல உடன்பிறப்பு பலகோடிகளை அள்ளிட்டான் மாதாவே போற்றி !

எங்களுக்கு சில மந்திரியை குடுடான்னா முந்திரி கூட கிடையாதுன்றான் போற்றி !

சுகாதரத்துல அன்புமணி தேற்றியதால் தைலாபுரம் தோட்டம் பெருத்து விட்டது அம்மாவே போற்றி !

ப.சிதம்ரம் பங்கு சந்தையில அள்ளிட்டு எங்களுக்கு பட்டைநாமம் போட்டான் போற்றி !

பெட்ரோல் பங்க்கும், கேஸ் ஏஜென்சியும் இப்ப இல்லைங்குறான் போற்றி !

இப்ப சிலபேர் ஈழமுங்குறான், புலிங்குறான், போர் கூடாதுங்குறான்  என்னம்மாவே போற்றி !

அய்யா ராஜீவின் ஆவி அவங்களை விரட்டச்சொல்லது அம்மையே போற்றி !

அய்யா உயிருக்கு ஆயிரம்பேர் ஈழத்துக்காரன் செத்தாலும் மனம் வேகாது பத்ரகாளி தாயே போற்றி !

அணுசக்தி ஒப்பந்தத்துல சி.பி.எம்முக்கு ஆப்பு வைச்ச அம்மா போற்றி !

அடுத்த தேர்தலுல அவன் வருவான் ஆதரவுன்னு, கவலை வேண்டாம் தாயே போற்றி

மாயாவதியும், புரட்சித் தலைவியும் பிரதமர் கனவுல அலையுறாளுங்க தாயே போற்றி !

ஒருவேளை புரட்சியோட கூட்டு வைச்சாலும் அவ காலிலும் விழுவோம் போற்றி !

சத்தியமா நாங்க செத்தாலும் இத்தாலி தாயே உன் காலில் கதறித்தான் உயிர் போகும் இது மெய்யே போற்றி !

இந்தச் சந்தக் கவிதையை எழுதிக் கிழிக்கும் வினவுக்காரனை பொடாவுல போட மறக்காதம்மா போற்றி !

  1. மிகச்சிறப்பான கருத்துப்படம்,சிறந்த ஓவியம்
    பட்டய கெளப்புற கவுஜ

    ம க இ க ந் பாடல் ஒன்று ஞாபகம் வருகிறது?

    நெருக்கடி நெருக்கடி நெருக்கடி
    ……………………………..
    அதுக்கு ஏண்ட வேட்டியில்லாம நிக்குற

    கட்சிக்குள்ள நெருக்கடி

  2. படம் அருமை. வாழ்த்துக்கள் ரவி.

    ஒரு நல்ல கார்ட்டூனிஸ்ட் கிடைத்துவிட்டார்.

    காங்கிரசுகாரர்களின் தொப்பி ஒரு படகு போல இருக்கும். இப்படி வட்ட வடிவமாகவா இருக்கிறது? கொஞ்சம் கவனித்திருந்தால், சரி செய்திருக்கலாம்.

  3. ரவி ஓவியம் பிரமாதம்,
    உங்கள் கோடுகளின் அடர்த்தி எனக்கு மறைந்து உதயனை நினைவுப் படுத்துகிறது…,
    இன்னொரு உதயன் தமிழகத்துக்கு தேவை.
    வாழ்த்துக்கள்
    குருத்தின் கருத்தையும் கணக்கில் கொள்ளுங்கள்.

  4. காங்கிரசுகாரர்களுக்கு, பல கோடிகளை சம்பாதித்து தரும் பதவிகளை, நீங்கள் “சில்லரைத்தனமான பதவிகள்” என போட்டுள்ளதை கண்டிக்கிறேன் (!)

  5. பிரமாதம்! கேலிச் சித்திரமும் அதன் தோத்திரமும்,
    காங்கிரஸ் சோனியாவின் காலில். சோ…. வாலிலா?
    ஆனாலும்….
    சோனியாவை தூற்றாதே, அவள் ஜரோப்பியத் தோன்றல் போற்றி
    இந்தி…யனை மணந்ததினால் நாற்றம் எடுக்கிறாள் போற்றி
    காந்தியின் அகிம்சை அன்று வென்றிட, ஜரோப்பியனே காரணம் போற்றி
    ஜரோப்பியன், அன்று ஆசியனென்றால், காந்தியின் அரைக்கோவணமும் அரோகரா போற்றி

  6. ரவி, நல்ல படைப்பு,
    பிரபல ஊடகங்கள் சோரம் போன நிலையில்
    இது போன்ற சுதந்திர சிந்தனைகளை ஊக்குவிக்கும் வினவு தோழர்கள் பாராட்டுக்குறியவர்கள்.

  7. சர்வதேச மூலதனத்தின் சதியை முடியடிப்போம்

    சுயநிர்ணயப் போராட்டம் என்பது தடம் புரண்டு நேரிடையாகவே சர்வதேசத்திற்கிடையில் சதுரங்க ஆட்டம் நடைபெறுகின்றது. கண்ணீர் விட்டோம் வளர்த்தோம் என்று நாம் இன்று நெஞ்சில் அடிப்பதன் மூலம் எவ்வித பயனும் அடையப் போவதில்லை. இன்றைய நிலையில் எதிர்காலத்தில் என்ன செய்ய வேண்டும் என பார்ப்பதே முக்கியமானதாக அமையும்.
    வன்னியில் மக்கள் சிறிய பிரதேசத்தில் அகப்பட்டிருக்கின்றார்கள் இந்த மக்களை பாதுகாப்பதில் எவரும் கவனம் செலுத்துவதாக தெரிவில்லை. ஆனால் எவ்வாறு புலிகளை சரணடைய வைக்கலாம் அல்லது முற்றாக அழிக்கலாம் என்பதில் சர்வதேசம் தமக்கிடையே கருத்து ஒற்றுமை கொண்டு செயற்படுகின்றது.
    இவற்றை அறிந்து கொண்ட சிறிலங்கா பாசீச அரசு புலிகளை அழிக்கின்றோம் எனக் கூறிக் கொண்டு தமிழ் மக்களை படுகொலை செய்கின்றது. புலிகளின் பகுதிகள் அனைத்துமே ஏற்றுக் கொள்ளப்பட்ட தாக்குதல் இலக்கு என ஸ்கை செய்தி நிறுவனத்துக்கு கொடுத்த பேட்டியில் ராஜபட்சே கூறியிருந்தார். இதனால் அங்கிருக்கும் மக்களை பாதுகாப்பதில் இனவாத அரசு சிறிதும் அக்கறை கொள்ளவில்லை என்பதைக் காட்டுகின்றது. (புலியெதிர்ப்பாளர்கள் இதனை உண்ணிப்பாக கவனிக்க தவறுகின்றனர் இது அடிமை விசுவாசம் இது இருக்கட்டும்.) இதற்கு புலிகள் அந்த மக்களை தடுத்து வைத்திருப்பதாக அரசு கூறுகின்றது.

    புலிகளின் பிரதேசங்களில் இருக்கின்ற மக்களை பல்வேறு வகையாக பிரிக்கலாம்
    புலிகளின் தலைமையில் குடும்பத்தினர்
    மாவீரர் குடும்பத்தினர்
    தேசபக்தர்கள், அதாவது புலியை தமது விடுதலை அமைப்பாக ஏற்று கொண்ட விசுவாசிகள். ( இவர்கள் புலியெதிர்ப்பாளர்கள் கூறுவது போல கொல்லப்பட வேண்டியவர்கள் என ஏற்றுக் கொள்ள முடியாது.)
    அங்கவீனமான போராளிகள்
    இவர்களில் குறிப்பிட்ட பகுதியினர் புலிகளினால் தடுத்து வைக்கப்பட்ட மக்களாக இருக்கவும் முடியும். இப்படி பலதரப்பட்ட மக்கள் இருக்கின்றனர். இவ்வாற வேளையில் சர்தேசியவாத நிலையில் இருந்துதான் முடிவெடுக்க வேண்டும். எவ்வாறெனில் உள்நாட்டு சர்வதேச எதிரிகளின் சூழ்ச்சி இவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும்.

    ஆக புலிகளினால் தடுத்து வைக்கப்பட்டவர்களை விட மற்றவர்கள் எவ்வாறு அரச கட்டுப்பாட்டு பகுதிக்குள் வரமுடியும்.
    இங்கு அரசபடை வடித்தெடுத்து கொலை செய்வார்கள்
    அரசபடைகளுடன் சேர்ந்தியங்கும் குழுக்களின் பழிவாங்கலுக்கு உள்ளாகுவர்.
    வரும் மக்கள் திறந்தவெளிச் சிறைச்சாலையில் தான் வாழ வேண்டும். ஏனெனில் அரச கட்டுப் பாட்டில் உள்ள பிரதேசங்கள் அத்தனையும் திறந்த வெளிச் சிறைச்சாலைக்கு ஒப்பாகத் தான் இருக்கின்றது. அங்கு வாழ்கின்ற மக்கள் சுதந்திரமாக வாழவில்லை. அப்பிரதேசத்தில் தந்திரோபாயமாக தமது வாழ்க்கையை தப்பி பாதுகாத்து வாழ்கின்றனர். இலங்கையில் ஒரு சிங்கள குடி எவ்வித (பொருளாதார வசதி இல்லாது இருக்கலாம்) எவ்வித உயிராபத்தும் இல்லாது வாழ முடிகின்றது போல தமிழ் மக்கள் வாழ முடிகின்றதா?
    இவர்களின் எதிரிகள் யார் எனப் பார்ப்பது நல்லது
    -சிறிலங்கா அரசபடைகளும்
    -அவர்களுடன் சேர்ந்தியங்கும் குழுக்கள்
    -விடுதலைப் புலிகளின் பழிவாங்கல்
    இந்த மூன்றுவிதமான இல்லாதொழிப்பிற்கு மத்தியில் வாழ வேண்டியிருக்கின்றது.

    இவ்வாறான நிலையில் பழிவாங்கல் என்றில்லாமல் மக்கள் தாமே தமது நிலையை தீர்மானித்துக் கொள்ளக் கூடிய வகையில் யுத்த நிறுத்தம் அமைந்து கொள்ள வேண்டும். கைதுகள், காணாமல்போதல், சித்திரவதை மற்றும் பழிவாங்கல்கள் அனைத்துப் பிரிவினராலும் நிறுத்தப்பட வேண்டும். இவையே யுத்தநிறுத்தத்தின் ஒரு அம்சமாக இருக்க வேண்டும்.
    புலிகள் தற்பொழுது இருக்கும் நிலைப்பரப்பில் அவர்களை வேண்டுமென்றால் முடக்கி விட முடியும். அதே வேளை அரசசார்பு குழுக்களின் நடமாட்டம், அரச படைகளின் கட்டுப் பாடு என்பது 1970களுக்கு கொண்டு செல்லப்பட வேண்டும். இவைகள் யுத்த நிறுத்தத்தின் பின்னரான பேச்சுவார்த்தையில் ஒரு அம்சமாக கொள்ளப்பட வேண்டும்.

    யுத்தத்தை நிறுத்துவது
    நிவாரணப் பொருட்களை அனுப்புவது
    அரசு தனது சுற்றிவளைத்துள்ள பகுதிகளில் பாதுகாப்பினை மேற்கொள்ளலாம் ஆனால் புலிகளின் பிரதேசத்தினுள் பிரவேசம் செய்யக் கூடாது.
    இதே போல புலிகளும் எவ்வித பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது.
    புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து வெளியேறும் மக்களை வெளியே புலிகள் அனுமதிக்க வேண்டும்

    அனைத்துப் பகுதியினரும் பேச்சுவார்த்தை மேசைக்கு வரவேண்டும்-
    அரசியல் தீர்வை முன்வைத்தல் வேண்டும் இவைகள்
    தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம்
    தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை இருக்கு என்பதை ஏற்றுக் கொள்ளல் அத்துடன் முஸ்லீம், மலையக மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்தல் வேண்டும்
    வட- கிழக்கு இணைப்பு
    அனைத்து மக்களுக்கும் குடியுரிமை அளிக்கப்பட வேண்டும்.

    புலிகள்: மக்கள் தாம் விரும்பியவாறு தமது போராட்டத்தை தொடர அனுமதித்தல் வேண்டும்
    ஏகபிரதிநிதித்துவக் கோட்பாட்டை கைவிடல் வேண்டும்.
    மேற்கூறியவை உடனடியாக அமுல்படுத்த வேண்டியவையாகும்.

    இதன் மூலமே புலியெதிர்ப்பாளர்கள் மக்களின் உரிமையை சோற்றுக்கும் சலுகைக்கும் நிகரானது என அரசுடன் சேர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர். இன்று வன்னி மக்களின் அவலத்திற்கு புலிகளை மாத்திரம் குற்றம் சுமத்திக் கொண்டு மக்களின் உரிமைகளை நசுக்குவதில் எவருக்கும் குறையாது செயற்படுகின்றனர்.
    யுத்த நிறுத்தம்
    நிவாரணம்
    படைகள் தத்தம் இடங்களில் நிலைகொள்வது
    மக்களை விரும்பும் இடத்தில் குடியிருக்க அனுமதிப்பது
    ஏகதலைமை கோட்பாட்டை புலிகள் கைவிடல்

  8. ஏகபிரதிநிதித்துவக் கோட்பாட்டை கைவிடல் வேண்டும்.
    அனைத்துப் பகுதியினரும் பேச்சுவார்த்தை மேசைக்கு வரவேண்டும்.
    புலிகளும் எவ்வித பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது.

    புலிகளின் அடிப்படையிலே கை கைவைக்கிறீர்களே!!!

  9. காலையில் எழுந்ததும் கக்கா போவதற்கு அனுமதி கொடுத்த அன்புத் தாயே போற்றி !

    கக்கா முடிந்து பக்காவாய் கதர் வேட்டி யூனிபார்மை கட்ட அனுமதித்தாயே போற்றி !

    கட்டிய வேட்டியை உருவ சத்தியமூர்த்தி பவனுக்கு போவோமே தாயே போற்றி !

    கோஷ்டி மோதலில் உருவும் வேட்டிகளை சேர்க்க இடமில்லை, வெளுக்கத் தண்ணியில்லையே என்னப் பெத்த ஆத்தா போற்றி

    பிரமாதம்

  10. காலையில் எழுந்ததும் கக்கா போவதற்கு அனுமதி கொடுத்த அன்புத் தாயே போற்றி !

    கக்கா முடிந்து பக்காவாய் கதர் வேட்டி யூனிபார்மை கட்ட அனுமதித்தாயே போற்றி !

    கட்டிய வேட்டியை உருவ சத்தியமூர்த்தி பவனுக்கு போவோமே தாயே போற்றி !

    கோஷ்டி மோதலில் உருவும் வேட்டிகளை சேர்க்க இடமில்லை, வெளுக்கத் தண்ணியில்லையே என்னப் பெத்த ஆத்தா போற்றி

    பிரமாதம் ….சரி மத்த ஊர் காங்கிரஸ்காரங்களை ஏன் விட்டுட்டீங்க அவங்க என்ன பாவம் பண்ணினாங்க?

  11. It is incomplete without rest of the congress culprits; and Sonia’s puppets and dummies.

    It could have depicted the atrocity perpetrated against Eezham Tamils or the betrayal to Tamil Nadu Tamils.

    I hope you will consider these contexts next time.

    (Ellame thamizharkalin thalai vithi’yai yar yaro theermanikirarkal enra koba’mum aathangam thaan)

  12. Tsri
    ஏகபிரதிநிதித்துவக் கோட்பாட்டை கைவிடல் வேண்டும் அனைத்துப் பகுதியினரும் பேச்சவார;த்தை மேசைக்கு வரவேண்டும். புலிகளும் எவ்வித பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது.

    புலிகளின் அடிப்படையிலே கை கைவைக்கிறீர;களே!!!
    ————————————————————————————————————————————————————
    கோழியொன்று முட்டையிட்டு பாம்புக்கும், காக்கைக்கும் இரையாகாமல் பாதுகாத்து குஞ்சுபொரித்தபின் அந்தக் குஞ்சை பருந்தும், பூனையும் அண்டவிடாது தன் உயிரையும் பாராது கொத்தித் துரத்தி பாதுகாத்து வளர;ப்பதற்கு பெரும் போராட்டம் நடத்தியிருந்தது. பின்பு குஞ்சு வளர;ந்து பெரிதாக வந்தபின் கேட்டதாம், பாம்பும், காக்கையும் பருந்தும், பூனையும் எவ்வளவு அழகானவை. அவைகளுடன் என்னை விளையாட விடாது அடித்து துரத்திவிட்டாயே சீ நீ ஒரு தாயா? என்று.

    Tsr என்பவரை போன்றோரை கேட்கிறேன் 1948ல் இருந்து 1983 வரையில் நடந்த போராட்டம்
    போராட்டமா? அதை சாத்வீக போராட்டம் என்கிறார;கள். சிங்களவன் அடிக்க அடிக்க ஓடீ ஓடீ திரும்பிவந்து அவன் காலில் விழுவதும்.
    திரும்பவும் சிங்களவன் அடிக்க அடிக்க ஓடீ ஓடீ திரும்பிவந்து அவன் காலில் விழுவதும். இதுதானே அந்தக்காலதில் தமிழர; வாழ்க்கை. கையில் அகப்பட்ட தமிழ் பெண்களை எல்லாம் வன்புணர;வுக்குள்ளாக்கி கருத்தரிக்கச் செய்தானே. அப்போது கருவாகி இன்று வளர;ந்துவிட்ட பெருமக்களா நீங்கள்? உங்களைப் போன்றவர;கள்தான் இன்றைய உலகுக்கு ஏற்றவர;கள். வாழ்க உங்கள் விவாதங்களும் கருத்துக்களும்.

  13. இன்று புலிகள் தமது தலைமையை பாதுகாத்துக் கொண்டு தான் இருக்கின்றனர். ஆனால் இன்று சிறிய பிரதேசத்தில் இருப்பவர்கள்
    அடிநிலைப் போராளிகள்
    சாதாரண மக்கள் போராளிகளின் குடும்பங்களும் பொது மக்களுமாவர். இவர்களை புலிகளின் தலைமை அல்லது அதிகாரவர்க்கத்தவர் இழப்புப்போல இவர்களை இழப்பதற்கு துணை போக முடியாது.
    அதிகார வர்க்கம் வேறு அடிமட்டப் போராளிகள் வேறு. ஏன் புலிகள் தலைமையின் தவறுகள் தமிழ் மக்கள் முன்னிலையில் விமர்சனப்படுத்தப் பட வேண்டும். ஆனால் புலிகளை தண்டிப்பதற்கு பிராந்திய வல்லரசுக்கோ அல்லது எந்த ஏகாதிபத்தியத்திற்கோ அல்லது சிறிலங்கா இனவெறி அரசுக்கோ தண்டிப்பதற்கு அருகதை இல்லை.

  14. தமிழீழ விடுதலைப் புலிகள் வானத்திலிருந்து குதித்து வந்தவர;களல்ல. அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றவந்த பதவிவெறி கொண்டவர;களுமல்ல. இலங்கையில் அதிகாரத்தைக் கொண்டுள்ள பெரும்பான்மை மக்களால் மிகவும் கொடூரமாக அடக்கப்பட்ட தமிழர;களின் அந்திமத் தோற்றமே விடுதலைப் புலிகள். அவர;களும் சராசரி மக்களைப்போன்று குறைபாடுகளைக் கொண்டிருப்பவர;கள் என்பதனை மறுக்கமுடியாது. ஆனால் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவித்து அவர;களின் தவறுகளை தட்டிக்கேட்க வேண்டிய நேரம் இதுவல்ல. அவர;களைப் பலப்படுத்தவேண்டும். தமிழ்மக்களுக்கு பாதுகாப்பும், உரிமையும் ஏற்படுத்தப்பட்ட பின்பு ஒரு தமிழனாக நானும் அவர;களை கேள்வி கேட்பேன் என்று முன்பு யேர;மனியில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் திரு. கஸ்பார; அடிகளார; கூறினார;.

  15. Among Eezham Tamils, it is an undisputed fact that Tamil Tigers are their representatives. Of course, we can talk about pros and cons of supporting or not supporting LTTE. However, now is not the time to criticize or dispute about LTTE among ourselves.

    Let us all stand together for those who suffer in Vanni. The innocent civillians agony and sufferings should be heard through our voice, because they are being strangled by the Singhala gov’t.

    Vinavu has an obligation as well. It is not the right time to view the ethnic conflict of Eezham Tamils under the light of communism. It is escalating the tension among supporters and non-supporters of LTTE.

    I personally find it confusing for a lay person, like me. So, Do we really cares about inncocent tamils in Vanni? Or are we busy disputing about LTTE among ourselves?

  16. போர் நிறுத்தம் என்று பிரணாப் கூறி உள்ளார். ஆனால் எப்போது போர் நிறுத்தம், எத்தனை நாளில் என்று முதல் அமைச்சர் கேட்க வேண்டும். இலங்கை எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை என்கிறார்கள்.
    அப்படியானால் சீனா, பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருந்தால், அது இந்தியாவுக்கு ஆபத்து இல்லையா?, தனி ஈழம் மலர்ந்தால் நமக்கு நட்பு நாடாக இருக்கும். எனவே இந்தியா வெளியுறவு கொள்கையை மாற்றி கொள்ள வேண்டும்.

    காங்கிரஸ் பணம் இலங்கைக்கு வழங்கவில்லை என்று அடித்து கூறியது ஆனால் உண்மை நிரூபிக்கபட்டவுடன் ஒத்து கொண்டது .
    காங்கிரஸ் ஆயுதம் இலங்கைக்கு வழங்கவில்லை என்று அடித்து கூறியது ஆனால் உண்மை நிரூபிக்கபட்டவுடன் ஒத்து கொண்டது .
    காங்கிரஸ் இந்திய ராணுவம் இலங்கைக்கு வழங்கவில்லை என்று அடித்து கூறியது ஆனால் உண்மை நிரூபிக்கபட்டவுடன் ஒத்து கொண்டது .

    இப்பொது பாகிஸ்தான் பிரச்சனைக்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை என்கிறது இது உண்மையா? இல்லை வழக்கம் போல் புலுகல . பொய், பித்தலாட்டம் புழுகல் எல்லாம் சந்தையில் தான் பார்த்தோம். இப்போது பெரிய பெரிய மனிதர்கள் எல்லாம் சரளமாக புளுகுகிறார்கள். எது எப்படியோ இது இந்தியாவிற்கு நல்லது அல்ல

Leave a Reply to Senthil Kumar பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க