privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஈழம்இவர்கள் ராஜீவுக்காக அழமாட்டார்கள்!

இவர்கள் ராஜீவுக்காக அழமாட்டார்கள்!

-

ராஜீவ்-காந்தி-கொலை

ஈழம் என்றால் புலிகள், புலிகள் என்றால் ராஜீவ் கொலை, எனவே ஈழத்தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்காகக் குரல் கொடுப்போர் அனைவரும் புலி ஆதரவாளர்கள். எனவே அது தேசத்துரோகம் அல்லது ராஜத்துரோகம் அல்லது பிரிவினைவாதம்” – 1991 முதல் இன்று வரை ஈழத்தமிழர்கள் மீதான எல்லா அடக்குமுறைகளையும் நியாயப்படுத்த இந்த எளிய வாய்ப்பாடுதான் தமிழகத்தில் பயன்படுத்தப்படுகிறது.

ஈழத்தமிழினத்தின் சுயநிர்ணய உரிமையை மறுப்பதற்கு மட்டுமின்றி, தமிழக மக்களின் மொழி, இன உரிமைகளை நசுக்குவதற்கும் பார்ப்பனக் கும்பலின் கையில் கிடைத்திருக்கும் ஆயுதம் ‘ராஜீவ்’. “பயங்கரவாத எதிர்ப்பு” என்ற பெயரில் தனது உலக மேலாதிக்க நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதற்கு புஷ்ஷுக்குக் கிடைத்த 9/11 கூட இன்று கிழிந்து கந்தலாகிவிட்டது. ஆனால் ராஜீவ் எனும் இந்த ஆயுதம் மட்டும் 17 ஆண்டுகள் கடந்த பின்னரும் முனை மழுங்காமல் தமிழ் மக்களுக்கு எதிராகப் பாய்ந்து கொண்டே இருக்கிறது. காரணம், அதனை யாரும் எப்போதும் திருப்பித் தாக்கியதில்லை என்பதுதான்.

இன்று கூட (21.05.09) ராஜீவின் இறந்த நாள் என்பதற்காக நாளிதழ்களில் பல பக்க விளம்பரம், அவரது கனவை நனவாக்குவோம் என்ற உறுதி மொழியோடு வந்திருக்கிறது. ஈழத்தை சுடுகாடாக்கிவிட்டு மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியிருக்கும் காங்கிரசு கயவாளிகள், இப்போது புலிகளை முற்றாக இலங்கை அரசுடன் இணைந்து வீழ்த்திவிட்டோம் என்ற இறுமாப்பு இந்த விளம்பரங்களில் துருத்துகிறது.

ராஜீவ் கொலை குறித்த பிரச்சினை எழுப்பப் படும்போதெல்லாம், “அதனை மறந்து விடக்கூடாதா, மன்னித்து விடக்கூடாதா” என்று மன்றாடுகிறார்கள் பல தமிழுணர்வாளர்கள். ஆனால் இந்த ராஜதந்திரம் பார்ப்பனக் கும்பலிடம் இதுவரை பலிக்கவில்லை. பிரபாகரன் மரணமடைந்து விட்டதாக கொழும்பில் சிங்கள மக்கள் கொண்டாடிக் கொண்டிருந்த வேளையில் இங்கே ஆங்கில செய்தி சேனல்களும் அதே உணர்வுடன் கொண்டாடினர். ராஜீவ் காந்தியைக் கொன்றவர்கள் தண்டிக்கப்பட்டார்கள் என்றும், இனி அந்த வழக்கு முடிகிறது என்றெல்லாம் மகிழ்ச்சியுடன் அலசினர். ராஜீவ் கொலை வழக்கு முடிந்துவிட்டதாக அவர்கள் கருதுவது சட்டப்படியும், அறத்தின்படியும் சரியானாதா? இந்தியாவில் ராஜீவ் ஆட்சி செய்தபோதும், இலங்கையில் ராஜீவ் அமைதிப்படை அனுப்பியபோதும் நடந்த படுகொலைகளுக்கு யார் காரணம்?

இந்திய அமைதிப்படையால் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான ஈழத்தமிழ் மக்களுக்காக தண்டிக்கப்பட்டவர்கள் யார்? அந்தக் கொலைமுயற்சியில் உயிரிழந்த 1300 இந்திய சிப்பாய்களின் மரணத்துக்காகத் தண்டிக்கப்பட்டவர்கள் யார்? போபால் விசவாயுப் படுகொலைக்காக, டெல்லி சீக்கியர்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலைக்காக தண்டிக்கப்படாதவர்கள் யார்? அயோத்தியைக் கிளறி இந்துப் பாசிசப் பேய்க்கு உயிர் கொடுத்தது யார்? இந்தக் குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட வேண்டியது யார்?

மேற்சொன்ன கேள்விகளை யாரும் எப்போதும் எழுப்பியதில்லை. எனவே மகாத்மா காந்தி, இந்திரா காந்தி ஆகியோருடன் தேசியப் புனிதர்களின் படவரிசையில் ராஜீவ் காந்தியும் சேர்ந்து விட்டார்.

‘மரித்தவர்களைக் குறைகூறுதல் மனிதப் பண்பில்லையாம்’. ‘அரசியல் நாகரீகம்’ எனும் பட்டாடைக்குள் ஒளிந்து கொண்டிருப்பதால், இந்த அரசியல் பிழைப்புவாதத்தைப் பலர் அடையாளம் காண்பதில்லை.

1991 மே 21 அன்று தமிழகம் முழுவதும் திமுகவினர் தாக்கப்பட்டார்கள். 2 இலட்சம் திமுகவினரின் உடைமைகள் எரிக்கப்பட்டன. ராஜீவுக்காக கண்ணீர் சிந்துமாறு தமிழகமே அச்சுறுத்தப்பட்டது. அன்று தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக கண்ணீர் விட்டவர்கள் இன்றும் ஈழத்தமிழ் மக்களுக்காக கண்ணீர் விடுகிறார்கள் – இதுவும் ஒரு வகை அரசியல் நிர்ப்பந்தம்தான். பிரணாப் முகர்ஜி கலைஞர் சந்திப்புடன் தமிழகத்தின் “கண்ணீர் விடும் போராட்டம்” முடிவுக்கு வருகிறது. ஈழத்திலோ அழுவதற்கு கண்ணீர் வற்றிய நிலையில் அவலம் தொடர்கிறது.

இனியும் கண்ணீர் விடுவதை யாரேனும் தொடர்ந்தால் அது தீவிரவாத நடவடிக்கையாகக் கருதப்படும். அவர்களுக்கெதிராக ராஜீவின் ஆவியோ, ராஜத்துரோகச் சட்டமோ ஏவப்படலாம்.

அன்று தமிழகமே கண்ணீர்க் கடலில் அமிழ்த்தப்ப்பட்ட சூழ்நிலையில், தமிழகத்திலிருந்து வெளிவரும் புதிய கலாச்சாரம், புதிய ஜனநாயகம் ஆகிய இரு இதழ்கள் மட்டுமே எதிர்ப்புக் குரல் எழுப்பின. அதன் விளைவாக போலீசின் அடக்குமுறைகளையும் எதிர்கொண்டன. “இவர்கள் ராஜீவுக்காக அழமாட்டார்கள்” என்ற தலைப்பில் ஜூன் 1991 புதிய கலாச்சாரம் இதழில் வெளியான உரைவீச்சினை இங்கே பதிவு செய்கிறோம்.

80 களுக்குப் பின் பிறந்த இளைய தலைமுறை அந்த வரலாற்றை அறிந்து கொள்ளவும், மீண்டும் மீண்டும் அரங்கேறும் கேலிக்கூத்துகளை பழைய தலைமுறை புரிந்து கொள்ளவும் இது உதவக் கூடும்

இவர்கள் ராஜீவுக்காக

அழமாட்டார்கள்!

ரோவா. எகிப்திய மன்னன்.
தான் இறந்தவுடன் தனது பட்டத்தரசியையும்,
ஆசை நாயகிகளையும், மந்திரிப் பிரதானிகளையும்,
தனது ஆடை ஆபரணங்களையும்,
பொக்கிஷங்களையும், அடிமைகளையும்
தன்னுடன் சேர்த்துப் புதைக்கச் சொன்னான் அந்த மன்னன்.
பூவுலக வாழ்வைச்
சுவர்க்கத்திலும் தொடரவேண்டுமென்பது அவன் ஆசை.
ஆசை நிறைவேற்றப்பட்டது.
பிறகு அவனுடைய வாரிசுகளும்
அவனைப் போலவே ஆசைப்பட ஆரம்பித்தார்கள்.
அவர்களுடைய ஆசைகளும் நிறைவேற்றி வைக்கப்பட்டன.
இது பொய்யல்ல, புனை கதையல்ல – வரலாறு;
சாட்சி – எகிப்திய பிரமிடுகள்.

ராஜீவின் இறுதி ஆசையைப் பற்றி நமக்குத் தெரியாது.
ஒருவேளை
பரோவாவைப் போல ராஜீவும் ஆசைப்பட்டிருந்தால்,
நாமே அதை முன்னின்று நிறைவேற்றியிருக்கலாம்.
சிதைந்து, அழுகி நாட்டின் அரசியல் பண்பாட்டு அரங்கில்
நாற்றத்தையும், நோயையும் பரப்பியபடி
இறக்கவிருக்கும் காங்கிரசு என்னும்
அருவெறுக்கத்தக்க மிருகத்தை
அவ்வாறு அடக்கம் செய்ய வாய்ப்பில்லாமல் போய்விட்டது.

ஒரு வகையில் பரோவா நல்லவன்.
தனது அதிகாரக் குடையின் நிழலில் ஆட்டம் போட்டவர்கள்
தன்னுடன் சேர்ந்து அடங்குவதே நியாயம்
என்று கருதியிருக்கிறான் போலும்!
தன்னுடன் குடிமக்களையும் சேர்த்துப் புதைக்குமாறு
அவன் உயில் எழுதவில்லை;
ஊரைக் கொளுத்திவிடுமாறு
உத்தரவிட்டதாகத் தகவல் இல்லை.

ராஜீவின் இறுதி ஆசையைப் பற்றி நமக்குத் தெரியாது.
ஆனால், பீரங்கி வண்டியில் ராஜீவின் உடல் ஏறுமுன்னே
நாடெங்கும் பல அப்பாவிகளின் பிணங்கள்
பச்சை மட்டையில் ஏறியது தெரியும்.
ராஜீவின் சிதைக்கு ராகுல் தீ மூட்டும் முன்னே
‘தொண்டர்கள்’ ஊருக்குத் தீ மூட்டியது தெரியும்.
மறைந்த தலைவனுக்கு மரியாதை செய்யுமுகந்தான்
ஊரைச் சூறையாடியது தெரியும்.

இருப்பினும் பேசக்கூடாது.

மரித்தவர்களைக் குறை கூறுதல் மனிதப் பண்பல்ல;
கருணாநிதியைக் கேளுங்கள் விளக்கம் சொல்வார்.
இருபத்தொன்றாம் தேதி இரவு 10.19 வரை
“ஆட்சியைக் கவிழ்த்த சூழ்ச்சிக்காரன்,
கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கிய கொள்ளைக்காரன்,
அக்கிரகாரத்தின் ஆட்சிக்கு அடிகோலும்
அவாளின் ஆள்”
ஆனால் 10.20-க்குப் பின் அமரர்,
அமரரைப் பழித்தல் தமிழ்ப் பண்பல்ல.
பாவத்தின் சம்பளம் மரணம்.
பாவமேதும் செய்யாதிருந்தும்
‘சம்பளம்’ பெற்றவர்கள் பற்றி….?

பேசக்கூடாது. இது கண்ணீர் சிந்தும் நேரம்.
உங்களுக்கு கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்.
ஆனால், கண்ணீர் சிந்தும் விஷயத்தில்
கருத்து வேறுபாடுகளை அனுமதிக்க இயலாது.
கண்ணீர் சிந்துங்கள். இல்லையேல்
கண்ணீர் சிந்த நேரிடும்.

சிரிக்காவிட்டால், சிறைச்சாலை;
கைதட்டாவிட்டால் கசையடி – இட்லரின்
ஆட்சியில் இப்படி நடந்ததாகக்
கேள்விப்பட்டிருக்கிறோம்.
அது பாசிசம்.

பேசாதே என்றால் பொறுத்துக் கொள்ளலாம்!
சிரிக்காதே என்றால் சகித்துக் கொள்ளலாம்,
அழாதே என்றால் அடக்கிக் கொள்ளலாம்.
ஆனால்
அழு‘ என்று ஆணை பிறப்பித்தால் அழ முடியுமா?
அச்சத்தில் பிரிவது சிறுநீர். கண்ணீரல்ல.
அடிமைச் சாம்ராச்சியத்தின் அதிபதி
பரோவா கூடத் தன் அடிமைகளுக்கு
இப்படியொரு ஆணை பிறப்பித்ததில்லையே!

ஆத்திரத்தையும் அழுகையையும் மட்டுமே
தன் மக்களுக்குப் பரிசாகத் தந்த
ஆட்சியாளனின் மறைவுக்கு
ஏன் கண்ணீர் சிந்த வேண்டும்?
அரசியல் சட்டக் காகிதங்களில் மட்டுமே இருந்த
உயிர் வாழும் உரிமையும்
தன் குடிகளுக்குத் தேவையில்லை என்று
கிழித்தெறிந்த கொடுங்கோலனின்
உயிர் பிரிந்ததற்காக
எதற்குக் கண்ணீர் சிந்த வேண்டும்?
இப்படியெல்லாம் கேட்கத்
தெரியாமலிருக்கலாம் மக்களுக்கு.
இருப்பினும் அவர்கள் கண்ணீர் சிந்தவில்லை.

புகழ் பெற்ற நான்கு உபாயங்களைத்
தலைகீழாகவே பயன்படுத்திப் பழகிய
எதிரிகள் – காங்கிரசுக்காரர்கள்
நான்காவது ஆயுதம் – தண்டம் –
தோற்றவுடனே மூன்றாவது ஆயுதத்தை
பேதம் – ஏவினார்கள். வீதிகள் தோறும்
சுடுகாடுகள். பயனில்லை. இரண்டாவது
ஆயுதம் – தானம் – பிரயோகிக்கப்பட்டது.
கூலிக்கு மாரடிக்கும் கூட்டம்
ஒலிபெருக்கிகளில் ஒப்பாரி வைத்தது.
மக்கள் கண்ணீர் சிந்தக் காணோம்.
முதல் ஆயுதம்
வன்மத்துடன் களத்தில் இறங்கியது.

ஒவ்வொரு வீட்டுக்குள்ளும்
வண்ணச் சுடுகாடு,
கறுப்பு வெள்ளைச் சுடுகாடு;
வானொலியில் முகாரி;
பத்திரிக்கைகளில் இரங்கற்பா…
“பார்… பார்… சிரித்த முகத்துடன்
எங்கள் தலைவனைப் பார்!
சூது வாது தெரியாமல்
மாலைக்குத் தலை நீட்டிய மன்னவனைப் பார்!
மக்களைத் தழுவ விரும்பியவன்
மரணத்தைத் தழுவிய கொடுமையைப் பார்!
அன்பு மனைவியும் அருமைச் செல்வங்களும்
அநாதையாக நிற்பதைப் பார்!
அமெரிக்க அதிபர் அழுகிறார்; ரசிய அதிபர் அழுகிறார்;
உலகமே அழுகிறது.
நீ மட்டும் ஏன் அழ மறுக்கிறாய்?
அழு… அழு…!”

ழுதார்கள்; அழுதீர்கள். அழுது
முடித்துவிட்டு அடுத்த வேலையைப்
பார்க்கலாம் என்று நகர்வதற்கு
இது ‘பாசமலர்’ அல்ல;
நீங்கள் அழுத பின்னால் அடுத்த வேலையை
அவர்கள் தொடங்குவார்கள்.
அவர்கள் கண்ணீரைக் கனியவைத்து
வாக்குகளாக்கும் ரசவாதிகள்.
உங்கள் கண்ணீர்த் துளிகளை மூட்டம்
போட்டிருக்கிறார்கள்.
காலம் கடந்துவிடவில்லை. கொஞ்சம்
சிந்தித்துப் பாருங்கள்.
இறந்தவரெல்லாம் நல்லவரென்றால்
இட்லரும் நல்லவனே.
கொலையுண்டவர்கள் எல்லாம் கோமான்களென்றால்
கொடுங்கோலன் என்ற சொல்லுக்கு
அகராதியில் இடமில்லை.


நினைவிருக்கிறதா? இப்படித்தான்,
இப்படியேதான் நடந்தது
ஏழு ஆண்டுகளுக்கு முன்பும்.
கையில் கொள்ளியுடன்
தாயின் பிணத்தருகே தலைமகன்
உங்கள் வாக்குகளைக் கொள்ளையிட்டான்.
அந்த ஐந்தாண்டு அரசாட்சியைக் கொஞ்சம்
அசை போட்டுப் பாருங்கள்!

இந்த நேரு குலக்கொழுந்து, அபூர்வ சிந்தாமணி
அரியணை ஏறும்போதே
ஐயாயிரம் தலைகளைக் காவு வாங்கியதே
மறந்து விட்டீர்களா?
குப்பை கூளங்களைப் போல
அப்பாவிச் சீக்கியர்களின் உடல்கள்
குவித்து வைத்துக் கொளுத்தப்பட்டனவே!
அவர்களது சாம்பலுக்கு
அஸ்திக்கலசமும் திரிவேணி சங்கமமும் வேண்டாம்;
ஆறுதலாக ஒரு வார்த்தை…
சொன்னதா அந்த அரசு?

ஐயாயிரம் கொலைகள் – ஐம்பதாயிரம் அகதிகள்.
அகதிகள் பெரும்பான்மையோர்
கைம்பெண்கள், குழந்தைகள்.
பிழைப்பதற்காகச் சொந்த மண்ணை விட்டு வந்து
வியர்வையும், ரத்தமும் சிந்தி
ஆசையாகக் கட்டி வளர்த்த வாழ்க்கையை
ஒரே நாளில்
குதறி எறிந்தன காங்கிரசு மிருகங்கள்.
நீதி கிடைக்கும் நிவாரணம் கிடைக்கும் என
ஏழு ஆண்டுகள் காத்திருந்து
குழந்தைகளையும், துயரத்தையும் மட்டுமே சுமந்து
சொந்த மண்ணுக்குத் திரும்பினார்கள்
அந்த இளம் விதவைகள்.
இன்று சோனியாவுக்காகக் கண்ணீர் சிந்துபவர்கள்
இவர்களுக்கு என்ன பதில் சொல்கிறார்கள்?
கேளுங்கள்.

இந்திராவின் கொலையாளியைக் கண்டுபிடித்துத்
தூக்கிலேற்றியாகி விட்டது.
ஐயாயிரம் கொலைகளுக்கு
எத்தனை பேர் தண்டிக்கப்பட்டனர்?
தண்டிப்பது கிடக்கட்டும்; கொலையாளிகளைக்
கண்டுபிடிக்க கூட முடியாது என்று
கைவிரித்தார் ராஜீவ்.
நாடே காறி உமிழ்ந்த பின்
ஒரு கமிஷன் அமைக்கப்பட்டது.
“கண்டு பிடிக்க முடியவில்லை” –
கமிஷனும் அதையே சொல்லியது.

தூக்கிலேற்றப்பட வேண்டிய பிரதான குற்றவாளிகள்
ராஜீவின் தளகர்த்தர்கள் –
எச். கே. எல். பகத், ஜகதீஷ் டைட்லர்.
இன்று சோனியாவைப் பிரதமராக்க விழையும்
ராஜீவின் நண்பர்கள்.
அடுக்கடுக்காய் ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டன;
விளைவு, குற்றம் சாட்டியவர்களுக்குக்
கொலை மிரட்டல் வந்தது.
கமிஷன் கண்டுபிடித்த ஒன்றிரண்டு
கொலைகாரர்களின் பெயர்களையும்
அரசாங்க ரகசியமாக்கி
ஆணை பிறப்பித்தார் ராஜீவ்.

“இந்திரா நினைவு நாளோ,
குடியரசு தினமோ, சுதந்திர தினமோ எது வந்தாலும்
எங்களுக்கு நடுக்கமாக இருக்கிறது.
மீண்டும் தாக்கப்படுவோமோ என்று அச்சமாக இருக்கிறது.
அவர்கள் குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டாம்;
“வருந்துகிறோம் என்று ஒரு வார்த்தைகூட
இன்று வரை அவர்கள்
வாயிலிருந்து வரவில்லையே”
அங்கலாய்த்தாள் ஒரு இளம்விதவை.

குடிமக்கள் நலம் பேணும் கொற்றவன் –
ராஜீவ் சொன்னார்.
“மரம் விழுந்தால் மண் அதிரத்தான் செய்யும்”.
சொன்ன மரமும் இப்போது விழுந்துவிட்டது.
டில்லி மாநகரமே கண்ணீர் விட்டுக்
கதறியது என்கிறார்களே,
அந்தச் சீக்கியப் பெண்களின்
கண்கள் கலங்கினவா என்று
விசாரித்துப் பாருங்களேன்.

போபால். இந்திய வரலாற்றின் மறைக்க முடியாத
தேசிய அவமானம்.
ராஜீவ் பதவிக்கு வந்தவுடனே
நடைபெற்ற பயங்கரப் படுகொலை.
ஒரே இரவில் பத்தாயிரம் பேரைப் பிணங்களாகவும்,
ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட உழைப்பாளி மக்களை
நடைப்பிணங்களாகவும் ஆக்கிய குண்டு வெடிப்பு;
அமெரிக்க இராணுவத்தின் விஷவாயுக் குண்டுக்கு
இந்தியாவில் நடத்திப் பார்த்த சோதனை.

இல்லை. உங்கள் நாட்டுத்
தொழிலாளிகளின் அலட்சியத்தால்
நேர்ந்த விபத்து இது என்றது
யூனியன் கார்பைடு.

ஆமோதித்தது ராஜீவ் அரசு.
“விஷ வாயுவைத் தயாரிக்க
உனக்கு உரிமம் கொடுத்தது யார்?” என்று
சீறினார்கள் இந்திய விஞ்ஞானிகள்.
காங்கிரசை ஓரக்கண்ணால் பார்த்துச்
சிரித்தது கார்பைடு.
ஆத்திரம் கொண்டு அமெரிக்க முதலாளிகளைத்
தாக்கத் துணிந்தது மக்கள் கூட்டம்.
முதலாளிகளுக்கு அரணாய் நின்றது
ராஜீவ் அரசு.

நீதி எங்கே, நிவாரணம் எங்கே என
அமெரிக்க நீதிமன்றங்களில் வழக்கு
தொடர்ந்தனர் மக்கள். நீதி கேட்பதும்,
நிவாரணம் பெறுவதும் “நீங்கள் தேர்ந்தெடுத்த”
எங்கள் அரசின் உரிமை என்று
அதையும் பிடுங்கிக் கொண்டது ராஜீவ் அரசு.
அந்தச் சுடுகாட்டின் நடுவில்
ஒரு சொர்க்கபுரியை நிறுவி
அதில் கவியரங்கம் நடத்தியது;
களியாட்டம் போட்டது.

ஆறு ஆண்டுகள் கடந்து விட்டன.
இறந்தவர்கள் மறக்கப்பட்டார்கள்.
இருப்பவர்களோ குருடரானார்கள், முடமானார்கள்.
பிறப்பவையும் சப்பாணிகள், சதைப் பிண்டங்கள்.
போபால் அழுது கொண்டிருக்கிறது.
அதன் கண்ணீருக்கு ராஜீவின்
மரணம்தான் காரணமோ?
கேட்டுத்தான் பாருங்கள்.

பதில் சாட்டையாய் உரிக்கும் – அது ராஜீவின்
மரணம் தோற்றுவித்த கண்ணீரல்ல,
துரோகம் தோற்றுவித்த கண்ணீர்.

னால், ஸ்ரீபெரும்புதூரில் குண்டு வெடித்தவுடனே
வெடிக்கிறார்கள் காங்கிரசுக்காரர்கள்.
“நன்றி கொன்றவர்கள், எங்கள் தலைவனைக்
கொன்று விட்டார்கள்! நயவஞ்சகர்கள்,
முதுகில் குத்திவிட்டார்கள்!
ஒவ்வொருவரையும் சோதனை போடுங்கள்!
எல்லோரையும் விரட்டுங்கள்!
ஈழத்தமிழன் எவனையும் நம்ப முடியாது!”
ஈழத் தமிழினத்திற்குத் துரோகத் தமிழினம்
என்று பெயர் சூட்டுகிறார்கள்.

யார் துரோகி? எவன் நயவஞ்சகன்?
விடுதலைப் போராளிகளைக்
கூலிப் பட்டாளமாக உருமாற்றியது யார்?
ஆதரவுக் கரம் என்று நம்பியவர்கள்
மத்தியிலே ஐந்தாம் படையை
உருவாக்கியது எந்தக் கை?
முகத்தில் சிரிப்பும், கைகளில் இனிப்புமாக
வரவேற்ற ஈழத்தைப் பெண்டாள முனைந்தது
யாருடைய ஆட்சி?
புறாக்களைக் காட்டி ஏமாற்றிக்
கழுகுகளைப் பறக்கவிட்டு அமைதியை
நிலைநாட்டியது யாருடைய படை?
“ஆத்தாள் சிக்கிம் வென்றாள், மகன்
ஈழம் கொண்டான்” என்று
கல்வெட்டில் பொறித்துக் கொள்வதற்காக
பாக். ஜலசந்தியில் குறுக்கு மறுக்காக
அடித்து விளையாட
ஈழத்தமிழன் என்ன பூப்பந்தா?

எது துரோகம்? யார் துரோகிகள்? ஆனந்த
பவனத்திலும், சத்தியமூர்த்தி பவனத்திலும்
பொருள் கேட்காதீர்கள்.
யாழ்ப்பாண மக்களிடம் கேளுங்கள்.
துரோகம் என்ற
சொல்லின் பொருள் ராஜீவ் என்பார்கள்;
வங்காள தேசத்தில் கேளுங்கள் – இந்திரா
என்று விளக்குவார்கள்;
பஞ்சாபில் விசாரித்துப் பாருங்கள் – மோகன்தாஸ்
கரம்சந்த் என்று வரலாறு சொல்வார்கள்
பகத்சிங்கின் வாரிசுகள்.
இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, கரம்சந்த் காந்தி –
ஒரே சொல்லுக்கு
ஒவ்வொரு இடத்திலும் ஒரு பொருள்!
ஆனால், வேற்றுமையிலும் ஒரு ஒற்றுமை –
துரோகம் என்றால் காந்தி!
சோரத்தில் பிறந்து
துரோகத்தில் வளர்ந்த தங்கள் கட்சித்
தலைவனுக்காக உங்களைக்
கண்ணீர் சிந்தக் கோருகிறது.
சிந்தியுங்கள்!

தள்ளாத வயதில் ‘தலாக்’ என்று
கணவனால் தள்ளிவைக்கப்பட்ட ஷாபானு
என்ற முசுலீம் பெண்ணைக் கேளுங்கள்.
தான் போராடிப் பெற்ற நீதியை ஒரே நொடியில்
ராஜீவ் கொன்று புதைத்த கதையைச் சொல்வாள்.
திமிர் பிடித்த கணவனுடனும்,
வெறி பிடித்த முல்லாக்களுடனும்
சேர்ந்து கொண்டு ராஜீவ் தனக்கிழைத்த
கொடுமையைச் சொல்லி அழுவாள்.
ஊன்றிக் கவனியுங்கள்.
அவள் மட்டுமல்ல; பர்தாவுக்குள்ளே
முகம் புதைத்த இசுலாமியப் பெண்கள் பலர் விசும்புவதும்
கேட்கும்.

அயோத்தி நகர மக்களைக் கேளுங்கள்.
அவர்கள் சீந்தாமல் ஒதுக்கி வைத்த
பாபர் மசூதிப் பிரச்சினையை
ராஜீவ் தூண்டிவிட்ட கொடுமையைச்
சொல்லி அழுவார்கள்.
அருண் நேருவிடம் தனியே
விசாரித்துப் பாருங்கள். கோர்ட்டில்
உறங்கிக் கிடந்த வழக்கைத் தூசு தட்டி எடுத்து
மசூதியின் பூட்டைத் திறந்துவிட்டு
‘இந்து’ ஓட்டைப் பிடிக்கத்
தானும் ராஜீவும் போட்ட திட்டத்தைக்
குதூகலமாய் வர்ணிப்பார்.

ராஜீவின் உடலடக்கத்திற்கு வந்திருந்த
அமிதாப்பையும் வராத இந்துஜாவையும்
கேட்டுப் பாருங்கள்.
பீரங்கிப் பேரக் கமிஷனை ஒளிக்க
‘உடுக்கை இழந்தவன் கை போல’ வந்து உதவிய
திருவாளர் பரிசுத்தத்தை நாவாரப் புகழ்வார்கள்.

வச குண்டலம் போல ராஜீவை
விட்டுப் பிரியாதிருந்த அவரது
மெய்க்காவலர்களைக் கேளுங்கள்;
தண்டி யாத்திரை என்ற பெயரில்
ராஜீவ் நடத்திய கோமாளிக் கூத்தைச்
சொல்லிச் சிரிப்பார்கள்;
துப்பாக்கியைச் சட்டைக்குள் ஒளித்து
கதர்க்குல்லாய் மாட்டிக் கொண்டு
காங்கிரசுத் தியாகிகளாகத் தாங்கள் அவதாரம்
எடுத்ததைச் சொல்வார்கள்; ஒருமைப்பாட்டு ஓட்டத்தில்
தாங்களும் விளையாட்டு வீரர்களாக உருமாறி
ஓடிய கதையைச் சொல்வார்கள்.

ராஜீவின் பாதம் பட்ட இந்திய நகரங்களின்
மக்களைக் கேளுங்கள்.
அவரது பாதுகாப்பை உத்தேசித்துச்
சிறையிலடைக்கப்பட்ட தொழிலாளிகளை,
நடைபாதை வியாபாரிகளை, இளைஞர்களை
ஆயிரக்கணக்கில் அடையாளம் காட்டுவார்கள். அவர்களில்
எத்தனைப் பேர் ராஜீவின் மரணத்திற்காகக்
கண் கலங்கினார்கள் என்று கேட்டுத்
தெரிந்து கொள்ளுங்கள்.

மணி சங்கர் ஐயர், சுமன் துபே, ராஜீவ் சேத்தி,
சாம் பித்ரோடா, சதீஷ் சர்மா, எம். ஜே. அக்பர்… ராஜீவின்
நண்பர்களாகவும், ஆலோசகர்களாகவும்
இருந்த இந்த மேட்டுக்குடிக்
குலக் கொழுந்துகளைக் கேளுங்கள்.
கலாச்சாரத் திருவிழா, கம்ப்யூட்டர் மயமாக்கல்,
இருபத்தொன்றாம் நூற்றாண்டை விரட்டிப் பிடித்தல் –
எத்தனை கனவுகள்!
இதமான மாலை நேரங்களிலும், கிளர்ச்சியூட்டும்
பின்னிரவுகளிலும் நட்சத்திர விடுதிகளில் அமர்ந்து
இந்தியாவின் எதிர்காலத்தைத் திட்டமிட்டதை
அவர்கள் நினைவு கூறுவார்கள்.
அவர்களது கண்கள் பனித்திருக்கும் –
பிரிவாற்றாமையினால் அல்ல;
தங்களின் எதிர்காலம் இருண்டு விடுமோ
என்ற அச்சத்தினால்.

எதை நினைவுபடுத்துவது? எதை விடுவது?
ஐந்தாண்டு ஆட்சிக் காலத்தில்
இத்தனை அநீதிகளை
இழைக்க முடியுமா?
அதிர்ச்சியாயிருக்கிறது.
கொடுங்கோன்மைக்கு இரையானவர்கள்
கோடிக்கணக்கானோர்,
வகைக்கு ரெண்டு எழுதினால் கூட
வளர்ந்து கொண்டே போகிறது.

இன்னும் சொற்களில் அடக்க முடியாத
சோகங்களைக் காண வேண்டுமெனில்
காஷ்மீருக்கும் பஞ்சாபுக்கும்
அஸ்ஸாமிற்கும் சென்று பாருங்கள்.
இறந்தவர்கள் கதையை நான் கூறலாம் –
இன்னும் உயிரோடிருப்பவர்களை
நீங்களே விசாரித்தறியலாம்.
கருப்பு வெள்ளையில்
அச்சாகிக் கிடக்கும் வரலாற்றைப்
புரட்டிப் பார்க்கலாம்.
எதுவும் இயலாவிட்டால் உங்கள்
வாழ்க்கையையே உரைத்துப் பார்க்கலாம்.

அதன் பிறகு முடிவு செய்யலாம் – ராஜீவின் மரணத்திற்குக்
கண்கலங்குவது சரியா என்று!

புதிய கலாச்சாரம் – ஜூன் 1991 (அனுமதியுடன்)

தமிழிஷில் வாக்களிக்க…
தமிழ்மணத்தில் ஆதரவு வாக்களிக்க…
தமிழ்மணத்தில் எதிர் வாக்களிக்க….
வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

இந்த கட்டுரையை ஒத்த பல அரிய உரைவீச்சுக்கள் ”போராடும் தருணங்கள்” எனும் கட்டுரைத் தொகுப்பில் (புதிய கலாச்சாரம் வெளியீடு) உள்ளது.

கிடைக்குமிடம்:

புதிய கலாச்சாரம்

18, முல்லைநகர் வணிக வளாகம்

இரண்டாவது நிழற்சாலை, 15-வது தெரு அருகே,

அசோக் நகர், சென்னை – 600 083

e-mail: pukatn@gmail.com

    • அமிர்தலிங்கம், அவரது துணைவியார், சபாரத்தினம், பத்மனாபா ஆகியோரின் கொலைகளைப் பற்றியும் அதைச் செய்தவர்களுக்கு என்ன தண்டனை தரலாம் என்பதைப் பற்றியும் கூட எழுதுங்களேன்.

      • Deepak – I am sure you would not have read the entire post, for your haste in branding Vinavu as a LTTE Leg Licker. If you want your foot to be in ground and not in between your nose and chin, better read this throughly and the the posts before this.

      • Amirthalingam was killed, because he was elected by the eelam people as an MP and sent to the parliament to fight for the rights of people and for eelam. After going to the parliament he forgot the people whomade him the leader and the purpose he was sent to parliament as an MP and joined hands with the ruling sinhalese and enjoyed the the post and other luxuries given by the then government. That is the reason he was killed. Also his wife was not killed at that moment. Sabaratnam was killed becuse he joined hands with Indian RAW to murder prabhakaran.In retaliation he was killed.Details are elaborated in many websites and books. Even in Wikipedia you will find litte info.

      • Hubert Harris. If Amirthalingam was not working for the Tamils after becoming an MP, he should have been defeated in the next election. Why should he be killed before that? Amirthalingam was a respectable, peace loving man with genuine concerns for the welfare of tamils. Prabhakaran could not accept a counter argument to his violent ways and decided to settle with bullets.

        LTTE was full of blood thirsty killers working only to please Prabhakaran. No wonder the entire world ignored their cries for help when a bigger killer destroyed them.

      • வித்தகன்,

        //No wonder the entire world ignored their cries for help when a bigger killer destroyed them.//

        யாருடைய அழுகையை உலகம் புறகணித்ததாக சொல்கிறீர்கள்?

        அதெப்படி, அமிர்தலிங்கம் அமைதியை விரும்புபவர். பிரபாகரன் வன்முறையை விரும்புபவரா? பிரபாகரன் யார், அமிர்தலிங்கம் யார் என்று உண்மையான ஈழத்தமிழனுக்கு தெரியும். உங்களைப்போன்றவர்களுக்கு தெரிந்து எங்களுக்கு ஆகப்போவது ஒன்றுமில்லை.

        அமிர்தலிங்கத்தின் இழப்பு உங்களை பாதிப்பதை விட, ஒரு பிரபாகரன் பெயரால் ஒன்றல்ல, நூறல்ல ஆயிரக்கணக்கில் ஈழத்தமிழன அழிப்புக்கு இந்தியா துணை போனதே, அது எங்களை உயிர்வதை செய்கிறதே அந்த நியாயத்தையும் கொஞ்சம் யோசித்துத்தான் பாருங்களேன்.

      • //யாருடைய அழுகையை உலகம் புறகணித்ததாக சொல்கிறீர்கள்? //

        புலிகளின் அழுகையைத்தான் சொல்கிறேன். பிரபாகரனும் நடேசனும் சூசையும் இறந்ததற்கு எந்த ஒரு நாடும் வருந்தவில்லையே. புலிகள் உயிருக்கு மன்றாடும் போது ஒரு நாடு கூட அவர்கள் பிழைக்க வேண்டும் என்று முயற்சிக்கவில்லையே! அவர்களது கண்மூடித்தனமான பயங்கரவாதம் தான் அவர்களுக்கு வேண்டிய நேரத்தில் நண்பர்கள் இல்லாமல் செய்து விட்டது.

        //பிரபாகரன் யார், அமிர்தலிங்கம் யார் என்று உண்மையான ஈழத்தமிழனுக்கு தெரியும். உங்களைப்போன்றவர்களுக்கு தெரிந்து எங்களுக்கு ஆகப்போவது ஒன்றுமில்லை.//

        அமிர்தலிங்கம் படுகொலைக்கு நியாயம் கற்பிக்க முடியாத புலி ஆதரவாளார்களின் வழக்கமான பேச்சுதான் இது. இந்தியத் தமிழர்களின் எண்ணத்தைப் பற்றி உங்களுக்குக் கவலை இல்லையென்று ஏன் பொய் சொல்கிறீர்கள்?

        அமிர்தலிங்கத்தை ஏன் கொன்றார்கள் என்று கேட்டால், அவர் துரோகி என்கிறீர்கள்! துரோகிக்கு அடுத்த முறை ஓட்டுப் போடாமல் இருந்திருக்கலாமே ஏன் கொல்ல வேண்டும் என்றால் உனக்குப் புரிய வேண்டிய அவசியமில்லை என்கிறீர்கள். ஒழுங்காக பதில் பேசாமல், எதிராளியை பதில் பேச விடாமல் இருந்ததால்தான் புலிகள் வெறுக்கப் பட்டார்கள். இந்த ஜனநாயக விரோதப் பழக்கம் அழிய வேண்டும்.

      • //ஒரு பிரபாகரன் பெயரால் ஒன்றல்ல, நூறல்ல ஆயிரக்கணக்கில் ஈழத்தமிழன அழிப்புக்கு இந்தியா துணை போனதே, அது எங்களை உயிர்வதை செய்கிறதே அந்த நியாயத்தையும் கொஞ்சம் யோசித்துத்தான் பாருங்களேன்.//

        அப்பாவி உயிர்கள் ஆயிரக் கணக்கில் போயிருப்பது மனதை வாட்டுகிறது. குடும்பம் இல்லாத குழந்தைகளின் எதிர்காலம் பற்றி நினைக்கவே வேதனை மிஞ்சுகிறது.

        நீங்கள் இந்தியா இலங்கைக்குத் துணை போனதால் இப்படி ஆகிவிட்டதாக சொல்கிறீர்கள். புலிகள் தேர்ந்தெடுத்த பாதைதான் இத்தனை சோகங்களுக்கும்ம காரணம் என்று நான் சொல்கிறேன். புலிகளை அழிக்க இலங்கைக்கு வாய்ப்பு கிடைத்த போது அவர்கள் விடவில்லை. ஏற்கனவே இந்தியாவிடம் வீராப்பாக தன் பயங்கரவாத முகத்தைப் புலிகள் காட்டி விட்டதால் நாங்களும் தலையிட முடியவில்லை. அடி பட்டது அப்பாவிகள்தான்.

  1. சிரிக்கிறதா? அழுவுறதா? ஒண்ணுமே புரியல! இது எந்த சினிமாவில வரப்போகுது சார்! ரஜினியா அல்லது கமலா நடிக்கப்போறது? இதெல்லாம் நம்ம மக்களுக்கு சினிமா டயலாக் போலத்தான் தெரியும். தமிழனுக்கு இதெல்லாம் எப்போ புரிஞ்சு என்னத்த கிழிக்கப்போறானுகள். சும்மா போங்கப்பா அடுத்த சீரியல் தொடங்கப்போவுது. வணக்கம்

  2. //பரோவா. எகிப்திய மன்னன்.
    தான் இறந்தவுடன் தனது பட்டத்தரசியையும்,
    //

    Pharaoh is the title given to all the King . It is not a name of one person. Lot of info available in google

    http://www.egyptologyonline.com/pharaohs.htm

    *
    Rajiv /Tamil/LTTE … you may be correct but to win the battle there are lot need to be done. If any one want to win the heart of people or want to genereate a wave lot of ground works need to be done.

  3. It is important to bring to light some of the dark side of people like Rajiv whose mysterious death is sitll to be unearthed. We have information that Samy was an accomplice in his murder and he should be questioned etc appeared sometime back in internets.

    I am not a lover of violence or murder. But it is necessary that people who vote for every election should know what their candidates are up to !

    Today Tamils from Sri Lanka are refugees all over the world and many have been killed by Sri Lankan and Indian backed War mongers. Even today Mukerjee openly gave his accord to Basil to continue the war and they are preparing to supply arms.

    Karunanidhi in his old age is frightened and is shivering every time Miss Jeya lances her attack. Miss Jeya cannot be authentic to know the pain of labour of a mother. She cannot speak about the tenderness of children. She does not know to appreciate the angelic look of a child even when it suffers from pain or wounds caused by bombing.

    As Rajini has recently mentioned that the problem of Tamils will be solved if Tamils follow the footsteps of the Sri Lankan Buddhist monks. Rajini should read the book called “Terror in sri Lanka”. It will bring to light what sort of devilish personality some of those Sri Lankan buddhist monks are. They were directly involved in stoping packed buses and mini vans and attacked and urged the Singhalese public to attack and burnt them alive. Rajini needs to know in depth the atrocities of the Singhalese. My cousin who is now 60 had carried over 38 gunned down Tamils of all ages from all status. The bodies were still warm and hot. He was forced to ear fresh and hot brain of a victim by the Buddist Armed forces of these Buddhist monks. This occured in 1987 when Sri Lankan armed forces over run Vattakandal in Mannar district. My cousin who has been arrested many times escaped death and is living as a refugee. Many more stories of such atrocities of the Sri Lankan and Indian IPKF (indian people killing forces) have become the hereditary historical events that will go down as history of the perished people of Eelam.

    Let conscious and rihgteous Indians from young generation be told of these atrocities perpetrated and induced by heartless Bramins of India. What they are doing now is narrowing the space to identify as Genocide of 21st century though may not be termed as Holocaust of the Jews.

    As thousands fall and die daily in Eelam let Indians be informed in details of such atrocities done to Tamils of Eelam by India and its Brahmin backed group that lives on the flesh of the fallen ones.

    Patriot

  4. எனக்கு இன்னும் விபரம் தேவை..

    எங்கே எடுக்கலாம்?????

    என் வயதில் உள்ள யாருக்கும் விபரம் தெளிவாகத் தெரியாது.

    என் வயது 18..

  5. ராஜீவ் காந்தி படுகொலை நடக்கும் போது எனக்கு பதினைந்து வயது இருக்கும். அப்போது எனக்கு அரசியல் எதுவும் தெரியாது ஆனால் படுகொலை நடந்த அடுத்தநாள் என் வீட்டில் எல்லாருக்கும் ஒரே சந்தோசம்…. அது இப்போது தான் ஏனென்று புரிகிறது.

  6. India’s future lies on permanent absence of
    Nehru’s family from politics and possible even above that.Alas the death of Rajiv Gandhi is a great relief to this nation otherwise it might had joker as prime minister.See the situation,even if anyone is a fool from
    well known family background he can become a national leader-like prime minister/minister.

  7. aiyo sami ennakku sethu poitalam polaerukku.evalavu kevalamana suthayathil nanum oru angama.entha arasiyalum enakku ventam.nan ketpathu manithanukana mariyathai mattume.athukku nan enna pannanum?

  8. Thalaiva Rajiv Gandhiya vidung namma “viduthalai pulikalin saathanaikalai ” paarattalam. Tamizhanukkaka padupatta singala throki Padmanabavai konra Prabakaran vaazhka!! Singala throki Amirthalingam avarkalai kondra “ULAGA TAMIL THALAIVAN” Prabakaran vaazhka!!! 3000 muslimkalai Naduvittu thurathiyathaal “UNMAIYANA INDHU” endru Palthakrey-val parattapatta Annan Prabakaran Vazhka!!!!. Tamil thalavar Maathaiya -vai siraiyilitta annan tamil kadavul Prabakaran Vaazhka Vaazhka!!!!!

  9. இன்றய இளைஞர்கள் படிக்க வேண்டிய கட்டுரை. பழம் தின்று கொட்டை போட்டவர்கள் காங்கிரஸ்காரர்கள் பற்றி அறிய இந்த கட்டுரை ஒன்றே தகுந்த அதரம் .
    இன்றும் தமிழர்களை ஏமாற்றி அரசியல் பிழைக்கும் இந்த ஈனத்தனமானவர்களை நாம் அடையாளம் காட்டுவது இன்றய சமுதயத்துக்கு மட்டும் அல்ல நாளைய சமுதாயத்துக்கும் நாம் செயும் கடமை ஆகும். லச்ச கணக்கான ஈழம் மக்களின் மரணத்தை விட உயர்ந்தது ராஜுவின் மரணமாம். பிணத்தை வைத்து பொழைப்பு நடத்தும் நாதாரிகள் இவர்கள். இவர்கள் முகத்தில் துப்பினாலும் நம் உமில்நிருக்குதன் அவமானம்.

  10. The people of India are peace loving. They never support their army killing and raping people of any other country. But deliberately they are kept in the dark by the Brahmin dominated political leadership, bureaucracy, media, opinion making and policy making bodies. It is they who cause the systematic genocide of tamils in Srilanka. Unless India is liberated from these brahmins, nothing will change. But the Eelam tamils will achieve their independence with the moral support of the tamils all over the world in general and tamils from Tamil Nadu in particular.
    ORU THAMILAN

  11. முடியுமா இவர்களை திருத்த ?

    எதை மறக்க? எதை மறுக்க? சரித்திர சான்றுக்காக

    நமது பல தமிழ் சகோதரிகளின் கற்பு இழப்பிக்கு காரணமான நமது இந்திய நாட்டு மிலிட்டரி வீரர்கள், மிலிட்டரி வீரர்களின் இழப்பிற்கு காரணமான நமது வெளியுறவு கொள்கைகள், ஊழலில் ஊறிய பல முதலாளித்துவ பாசிச அரசியல் வாதிகள், அவர்கள் உருவாக்கும் செயற்கையான பஞ்சங்கள், அவற்றிற்கு காரணமான முதலாளித்துவ அணுகுமுறை, அதனால் விளையும் விவசாய பெருமக்களின் உயிரிழப்புகள், அரசியல் வாதிகளின் சாதீய அணுகுமுறைகளினால் வளரும் சாதி மற்றும் மத கலவரங்கள், இறந்த ஒரு உயிருக்காக பல உயிர்களை துணைக்கு அனுப்பிய கட்சியின் அணுகுமுறை.
    சாவு என்னவோ அவர் குடும்பதுக்காகமட்டும் வந்ததாக பினாத்தி கொண்டிருக்கும் இந்த கொள்கை சிகாமணிகள்?

  12. Totally..we should should do one thing ..i.e… let them(people of tamilnadu) know and clear about that the party of congress is not a party to care about common people and their welfare…and it is becozz of members are not middle class or lower class people.. the top level leading members are land-lords and industrialists…… so how we the common people think abt that they caring abt us……it is a plutocratic ruling party.. and i feel hard to say its as govt.. unless otherwise an revolution prevails in india.. to destroy all these self-centered …wolfs….

    by dear comrade

  13. எல்லாமே சரி என்று வைத்துக்கொள்வோம்.
    இவ்வளவு காட்டமாக எழுதும் உங்களின் அறிவுக்கு புலிகளின் பயங்கரவாதமும்,
    அவர்கள் செய்த கொலைகளும்.தெரியாமல் போனது ஆச்சரியமே!சொந்த இனம் மட்டுமின்றி,சிங்கள இன மக்களையும் அழித்ததை அவர்களால் தமிழ் இனமே அகதிகளாக ஓடி வரவேண்டிய அவலத்தையும் குறிப்பிட்டிருந்தால் இன்னுமொரு இருபது வருடங்கள் கழித்து வரும் அடுத்த தலைமுறைக்கு யாபகப்படுத்த வசதியாக இருந்திருக்குமே!நியாயம் என்ற தராசை உங்களுக்கு வசதியாக திருப்பிக்கொள்கிறீர்கள். அதை எல்லோரும் நம்புங்கடா அப்பத்தான் நீ மனிதன். இல்லாவிட்டால் வேறு சாதியில் சேர்த்து விடுவீர்கள். முதலில் நீங்கள் மனிதனாக இருங்கள்.எல்லாவற்றையும் மனித தராசில் நிறுத்துப் பாருங்கள்.
    ஜாதி,மதம்,இனம்,மொழி
    என்ற தராசில் நிறுத்துப் பார்க்காதீர்கள்.

  14. ராஜிவ்காந்தியை கொன்றது யார்,அதற்கு மூலக்காரணம் யார் என்பதில் இப்போது எனக்கு கவனம் இல்லை.என் என்னை போன்றோர் எண்ணமெல்லாம்,ஈழ தமிழனுக்கு தன்னாட்சி உரிமை, கிடைக்க வேண்டும். பல‌ இலட்சம் தமிழர்களை பற்றி நாங்கள் கவலை படுகிறோம்.அதற்கு போராடும் விடுதலை புலிகளை அதரிக்கிறோம்.

    ராஜிவ்காந்தியின் கொலையை காரணம் காட்டி புலிகளை,அதை வழி நடத்தி செல்லும் பிராபாகரனை அழிக்க நினைப்பது 60 ஆண்டுகள் ஈழ தமிழர்களின் சுதந்திர போராட்டத்தை அழிக்க நினைப்பதாக மாறிவிடும்.

    அது தான் எங்கள் கவலை.ராஜிவ்காந்தியா? பல் இலட்சம் ஈழ தமிழர்களின் உரிமை போரா? என்று பார்க்கும் போது எனக்கு பல‌ இலட்சம் ஈழ தமிழர்களின் உரிமை போர் தான் பெரிதாக தெரிகிற்து/

    மேலும்,என்னை போன்றோர் திவிரவாதத்தை ஆதரிப்பவர்கள் அல்ல.ஆயுத போராட்டம்,ஈழ தமிழர்கள் அந்நாட்டின் சூழலுக்கு எடுத்த முடிவு.ஆதரவு தருவது நம்மை பொன்றோர் வேலை.அவர்கள் அற வழியில் போராடினாலும் எங்கள் ஆதரவு உண்டு.ஆனால்,அவர்களின் அற வழி போராட்டத்தை தான் நசுக்கி விட்டதே

    சிங்கள அரசு, சன் டிவியில் ஒரு இந்திய இராணுவ அதிகாரி பேட்டி போட்டார்கள்.புலிகளை அழிப்பதாலோ,பிராபாகரனை கொல்வதாலோ,பிரச்சனை தீர்ந்து விடாது.ஈழ தமிழர்களின் போராட்டத்தின் நோக்கம் நிறைவேறினால் மட்டுமே பிரச்சனை தீரும் என்று கூறியுள்ளார்.

    காஷ்மீரில்,நாம் வருடம் முழுவதும் திவிரவாதிகளை கடந்த 50 வருடங்களாக ,கொன்றுவருகிறோம்.ஆனாலும் திவிரவாதம் குறையவில்லையே.ஒரு திவிரவாதி இறந்தால்,மற்றொரு மனிதன் திவிராதியாகிறான்.அவனும் பொது மக்களில் ஒருவனாக இருந்து தான் மாறுகிறான்.திவிரவாதி தனியாக வானத்தில் இருந்து வரவில்லை. போராட்டத்தின் காரணம் கலைய்ப்படும் வரை,திவிரவாதம் தொடர்ந்து கொண்டு தான் வரும்

  15. Why bring-in a “paarppana” angle to this post. Absolutely disgusting. unakkum andha ina veri pidichcha military’kkum enna vidhayasam. unakku oru vaippu kidaiththal neeyum idhu pol kevalamaaga thaan nadandhu kollvaai pol irukkiradhe

  16. இனி ராஜீவ் காந்தியின் ஆன்மா சாந்தி அடையுமா?…

    ஈழம் என்றால் புலிகள், புலிகள் என்றால் ராஜீவ் கொலை, எனவே ஈழத்தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்…

  17. ///இன உரிமைகளை நசுக்குவதற்கும் பார்ப்பனக் கும்பலின் கையில்/////

    கலைஞரும்தான் சமயம் கிடைத்த போது (ஆட்சியில் இருக்கும் போது) சில சமயம் யாரும் pressure பண்ணாமலே உள்ள துாக்கி போடறார்… அவர் என்ன பார்ப்பன கும்பலா….?

    • ஈழம், புலி எனப் பார்ப்பன ஊடகங்கள் மற்றும் ஜெயா, சு.சுவாமி கும்பல் கூச்சல் போட்டு அச்சுறுத்தினால் உடனே கருணாநிதி அதன் மேல் நடவடிக்கை எடுத்து அப்படிப் பேசியவர்களை கைது செய்வார். எனவே பார்ப்பனக் கும்பலுக்கு பயப்படுவர்தான் கருணாநிதி

      நட்புடன்
      வினவு

      • இந்த முறை அவர் சோனியா முகம் கோணாமல் நடந்து கொண்டார் என்பதே உண்மை

  18. It is a very well written article but too long.

    Most Tamilians may not read it, as they have other things to do like purchasing jewels, shares.

    Congressmen as usual, will reject it. But they know very well that Rajiv Gandhi would be assassinated, even before it was done. Otherwise how could no other congress leader be killed, even though so many were present in that meeting?

  19. ராஜீவ் பற்றிய உங்களது கருத்து மீண்டும் சரிபார்க்கபட வேன்டும். இப்போது எப்படி சோனியா காந்தி அவர்களை மட்டும் இப்போதைய துயர் நிலைக்கு காரண‌மாக, தனிப்பட்ட நபர்களின் முடிவாக பார்கிறார்களோ, அப்போதும் அமைதிப்படை விசயத்தில் ராஜீவின் தனிப்பட்ட முடிவாக கருதினார்கள்.அதனால் தான் அரசியல் ரீதியாக எந்த பலனும் இல்லாமல் அந்த நடவடிக்கை வீணாகியது. இந்திய அரசின் நடவடிக்கையாக,ஈழத்தலையீடு பார்க்கப்பட வேண்டும்.தமிழக கட்சிகள் கருதுசோனியா, சிவசங்கர் மேனன் ஆகிய தனி நபர்கள் செய்கின்ற நடவடிக்கையாக கருதுவதை தவறு என கூறும் வினவு,சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி வருகைக்கு கருப்பு கொடி காட்டுவதை ஆதரிப்பதாக காட்டிக் கொள்வது நல்ல நகை முரண்.

    • இந்திய அரசின் இலங்கை மேலான ஆதிக்கத்தை தனிநபர்களது பிரச்சினையாக பார்க்கக் கூடாது எனும் அதே நேரத்தில் அரசாங்கத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களது தனிநபர் பாத்திரத்தையும் கணக்கிலெடுக்கவேண்டும். எமது ஈழம்: போர் இன்னும் கட்டுரையில் ” இதனால் தனிநபர்களின் பாத்திரத்தை மறுப்பதாக எடுத்துக் கொள்ளக்கூடாது” என்றுதான் எழுதியிருக்கிறோம். அவ்வகையில் காங்கிரசின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு கருப்புக் கொடி காட்டியது சரிதானே? மேலும் இப்போது ஈழப்பிரச்சினையில் இந்தியாவின் துரோகம் என்பதை இந்திய அரசு, பிரதம்ர், காங்கிரசு தலைமை, இதற்கு ஒத்தூதும் கருணாநிதி இப்படித்தான் புரிந்து கொள்ளவேண்டுமென கருதுகிறோம்.

      நட்புடன்
      வினவு

      • உங்களது கருத்துப்படி, இந்திய அரசினை அதன் செயல்பாட்டை தனி நபர்களின் செயல்பாடாக முதன்மை கருத்தாகவோ அல்லது துணை கருத்தாகவோ கொள்ள முடியாது.உங்கள் கருத்து சரியென்றால், இந்தியாவின் பங்களாதேஷ் நடவடிக்கையை இந்திரா காந்தியின் தலைமையிலான காங்கிரசின் நடவடிக்கை என்பதோடு நின்ட்ரு போகும். மேலும் இந்திய பணக்காரர்களுக்காக மட்டும் தலையீடு இல்லை. அதில் சர்வ‌தேச நலனும் அடங்கியுள்ளது.

  20. Re-posting my earlier comment: அமிர்தலிங்கம், அவரது துணைவியார், சபாரத்தினம், பத்மனாபா ஆகியோரின் கொலைகளைப் பற்றியும் அதைச் செய்தவர்களுக்கு என்ன தண்டனை தரலாம் என்பதைப் பற்றியும் கூட எழுதுங்களேன்.

    • WITHAGUN – I would like to know your opinion about the Sikh Riots and Bhopal Murders Repeat Murders. Of course if you start “THINKING” on those lines you wouldn’t be questioning like this…

      • புரியவில்லையே! போபால் விஷ வாயுக் கசிவு மரணங்களுக்கும் சீக்கியர்கள் அநியாயமாகக் கொல்லப்பட்டதற்கும் காங்கிரசும், ராஜீவ் காந்தியும் காரணமாக இருக்கட்டும். ஏன் அமிர்தலிங்கமும் அவர் மனைவியும் சபாரத்தினமும் பத்மனாபாவும் கொல்லப்பட்டார்கள்? அந்தக் கொலைகாரர்களுக்கு எந்த தண்டனை தர வேண்டும்! கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை என்றால் ஒப்புக் கொள்ளுங்கள். திசை திருப்பப் பார்க்காதீர்கள்.

    • புலிகளினால் கொல்லப்பட்ட அமிர்தலிங்கம் மற்றும் தமிழ் தலைவர்கள் ,போராளிகள், கல்விமான்கள், அப்பாவி மக்கள் பற்றியோ புலிகள் நடத்திய யுத்தத்தினால் வாழ்வை இழந்துள்ள லட்சகணக்கான தமிழர்கள் பற்றியோ பெரும்பாலான பதிவர்களுக்கு அக்கறை இல்லை. அவர்களது அக்கறை முழுவதும் பிரபாகரனையும் புலிகளையும் பற்றியதே.

      • …. புலிகள் தான் இவர்களை கொன்றார்கள் என்று சொன்னால் நீ உடனே நம்மிட்டியே. சிங்களவனின் சூழ்ச்சி பற்றி உனக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. முதல்ல நீ சிங்கள இன வெறியர்களின் வரலாறுகளையும் சிங்கள அரசியல் தலைவர்கள் வரலாறுகளையும் தெரிந்து கொண்டு பேசு. ……

        (கீழ்த்தரமான, அநாகரிகமான வார்த்தைகள் நீக்கப்பட்டிருக்கின்றன-வினவு)

    • அமிர்தலிங்கம், அவரது துணைவியார், சபாரத்தினம், பத்மனாபா ஆகியோரின் கொலைகளைப் பற்றியும் அதைச் செய்தவர்களுக்கு என்ன தண்டனை தரலாம் என்பதைப் பற்றியும் கூட எழுதுங்களேன்.

  21. மே 17ம் திகதி இரவு தமிழீழ விடுதலைப் புலிகள் தங்கள் தோல்வியை ஏற்று ஆயுதங்களைக் கைவிட்டு உள்ளதாகத் தெரிவித்த பின்னரேயே தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். இந்த அவலத்தின் கொடுமை என்னவெனில் தங்களது தலைவர்கள் சரணடைய மாட்டார்கள் என்று வாய்ச்சொல் வீரம் மட்டும் பேசும் புலத்து தமிழர்கள் அக்கொடுமையை வெளிக்கொண்டுவரத் தயங்குகின்றனர். தாங்களே கட்டமைத்த விம்பங்களை உடைக்க முடியாமல் பொன் விலங்கு பூட்டிய சூழ்நிலைக் கைதிகள் ஆகி உள்ளனர். சரணடைந்த தலைவர்கள் கொல்லபடுகிறார்கள் என்றால் தாங்கள் கட்டமைத்த அடங்காத் தமிழன், மறத் தமிழன், வீரத் தமிழன் என்ற விம்பங்கள் உடைந்துவிடும் என்ற அச்சத்தில் யதார்த்தத்தை உணர மறுக்கின்றனர். http://thesamnet.co.uk/?p=11819

    • //மே 17ம் திகதி இரவு தமிழீழ விடுதலைப் புலிகள் தங்கள் தோல்வியை ஏற்று ஆயுதங்களைக் கைவிட்டு உள்ளதாகத் தெரிவித்த பின்னரேயே …..//

      மற்றவர்வர்களையும் பலவந்தமாக யுத்தத்திற்க்கு பிடித்து கொண்டு சென்றவர்களையும் ராணுவத்திடம் பிடிபடும்போது குப்பி கடிக்கபண்ணி சாகடித்து விட்டு தாங்கள் மட்டும் எப்படி சரணடையலாம் ?

  22. // ஈழம் என்றால் புலிகள், புலிகள் என்றால் ராஜீவ் கொலை, எனவே ஈழத்தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்காகக் குரல் கொடுப்போர் அனைவரும் புலி ஆதரவாளர்கள். எனவே அது தேசத்துரோகம் அல்லது ராஜத்துரோகம் அல்லது பிரிவினைவாதம்” – 1991 முதல் இன்று வரை ஈழத்தமிழர்கள் மீதான எல்லா அடக்குமுறைகளையும் நியாயப்படுத்த இந்த எளிய வாய்ப்பாடுதான் தமிழகத்தில் பயன்படுத்தப்படுகிறது. //
    பாதி சரி, பாதி தவறான ஒரு கூற்று. ஈழம் என்றால் புலிகள், ஈழத் தமிழர்களுக்கும் புலிகளுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்ற ஒரு இமேஜை இங்கே ஊடகங்கள் பரப்பி வருகின்றன என்பது உண்மைதான். ஆனால் அது பொதுவாக புலி ஆதரவை பெருக்க நடக்கும் முயற்சி. வைக்கோவும், சீமானும், பாரதிராஜாவும், ஆனந்த விகடனும் இப்படித்தான் எழுதி வருகின்றன. இதை நீங்களே கூட முன்னால் எப்போதோ குறிப்பிட்டதாக ஞாபகம்.

    // ஈழத்தமிழினத்தின் சுயநிர்ணய உரிமையை மறுப்பதற்கு மட்டுமின்றி, தமிழக மக்களின் மொழி, இன உரிமைகளை நசுக்குவதற்கும் பார்ப்பனக் கும்பலின் கையில் கிடைத்திருக்கும் ஆயுதம் ‘ராஜீவ்’…./
    ஒரு நாட்டில் அதன் முன்னாள் பிரதமரை அவர் தேர்தலில் பிரச்சாரம் செய்யும்போது அயல் நாட்டினர் உள்ளே புகுந்து அவரை கொலை செய்தால், அந்த செயலை அந்த நாட்டினர் பாராட்டவா முடியும்? மாவோவின் கலாச்சாரப் புரட்சியால் பாதிக்கப்பட்டவர்கள் ஒன்று சேர்ந்து சதி செய்து அவரை கொன்றிருந்தால் அதை சீனாவும் மாவோ பக்தர்களான நீங்களும் பாராட்டுவீர்களா?
    காங்கிரஸ்காரர்கள் அவர்கள் தலைவரான ராஜீவை கொண்டாடுவதில், நினைவு நாளன்று விளம்பரம் கொடுப்பதில் என்ன தவறு? நீங்கள் ஸ்டாலினை தலைவராக ஏற்றுக் கொண்டிருக்கிறீர்கள். ஸ்டாலினை பற்றி மாற்று கருத்து பரவலாக இருக்கத்தான் செய்கிறது. அதற்காக ஸ்டாலினை கொண்டாடுவதை நிறுத்திவிட்டீர்களா?

    // ராஜீவ் கொலை குறித்த பிரச்சினை எழுப்பப் படும்போதெல்லாம், “அதனை மறந்து விடக்கூடாதா, மன்னித்து விடக்கூடாதா” என்று மன்றாடுகிறார்கள் பல தமிழுணர்வாளர்கள். //
    ஏன் மறக்க வேண்டும்? இந்த நாட்டில் நீதிமன்றங்கள் மட்டுமே இன்னும் ஓரளவு செயல்படுகின்றன. நீதிமன்றங்களின் முடிவுகளையும் கிள்ளுக்கீரை ஆக்கிவிட வேண்டுமா?

    // ராஜீவ் கொலை வழக்கு முடிந்துவிட்டதாக அவர்கள் கருதுவது சட்டப்படியும், அறத்தின்படியும் சரியானாதா? //
    எனக்கு சட்ட நுணுக்கங்கள் தெரியாது. பிரபாகரன் இறந்துவிட்டார் என்றும் என்னால் நிச்சயமாக சொல்ல முடியாது. அவர் இறந்திருந்தால் அது ஈழத் தமிழர்களுக்கு இழப்பு என்றும் நினைக்கிறேன். ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர் இறந்துவிட்டால் கேஸ் நடக்க முடியாது, அதனால் சட்டப்படி கேஸ் முடிந்துவிட்டது என்று சொல்வது சரிதான் என்று தோன்றுகிறது. இல்லை என்றால் சட்டம் தெரிந்த நீங்கள் ஏன் என்று விளக்குங்களேன்!

    // இந்தியாவில் ராஜீவ் ஆட்சி செய்தபோதும், இலங்கையில் ராஜீவ் அமைதிப்படை அனுப்பியபோதும் நடந்த படுகொலைகளுக்கு யார் காரணம்? இந்திய அமைதிப்படையால் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான ஈழத்தமிழ் மக்களுக்காக தண்டிக்கப்பட்டவர்கள் யார்? அந்தக் கொலைமுயற்சியில் உயிரிழந்த 1300 இந்திய சிப்பாய்களின் மரணத்துக்காகத் தண்டிக்கப்பட்டவர்கள் யார்? //
    கேள்வி கேட்டுக் கொண்டே போகலாம். சரித்திரத்தின் பின்னால் போய்க்கொண்டே இருக்கலாம். தமிழர்களுக்கு உரிமைகளை பெற்றுத் தந்த ஒப்பந்தத்தை தன பதவி வெறிக்காக நாசப்படுத்தியது யார்? நீங்களே பல முறை எழுதியது போல இலங்கையில் பல தமிழர்களை படுகொலை செய்தது யார்? எத்தனையோ அப்ப்பாவி மக்களை தற்கொலைப் படை என்றும் குண்டு வைத்தும் கொன்றது யார்? இதற்கெல்லாம் யார் தண்டிக்கப்பட வேண்டும்?

    // மேற்சொன்ன கேள்விகளை யாரும் எப்போதும் எழுப்பியதில்லை. எனவே மகாத்மா காந்தி, இந்திரா காந்தி ஆகியோருடன் தேசியப் புனிதர்களின் படவரிசையில் ராஜீவ் காந்தியும் சேர்ந்து விட்டார். //
    யாரும் எழுப்பியதில்லையா? இப்போது நீங்கள் கூடத்தான் எழுப்பி இருக்கிறீர்கள். டைட்லரும் சஜ்ஜன் குமாரும் இன்று தேர்தலில் நிற்க முடியவில்லை. சிதம்பரத்தின் மீது செருப்பு வீசப்பட்டதை பற்றி நீங்களும் வரிந்து கட்டி எழுதினீர்கள். குற்றவாளிகள் தப்பித்துவிட்டார்கள் என்று வேண்டுமானால் சொல்லுங்கள்.
    மோகன்தாஸ் காந்தியையே (யாரையும் அடைமொழி வைத்து கூபிடுவது எனக்கு பிடிப்பதில்லை. ஒரு மரியாதைக்காகவும் சுலபமாக அடையாளம் காணவும் மட்டுமே இன்னும் பெரியார், கலைஞர் என்று அடைமொழி வைத்து எழுதுகிறேன்.) புனிதரா என்று கேள்வி கேட்கிறார்கள். நீங்கள் வாதம் செய்ய வேண்டும் என்பதற்காக இந்திராவும் ராஜீவும் புனிதர்களாகாதீர்கள். அந்த வேலையை காங்கிரஸ்காரர்கள் செய்யட்டும், அவர்களுக்கு கட்சி அபிமானம்.

    // 1991 மே 21 அன்று தமிழகம் முழுவதும் திமுகவினர் தாக்கப்பட்டார்கள். 2 இலட்சம் திமுகவினரின் உடைமைகள் எரிக்கப்பட்டன. ராஜீவுக்காக கண்ணீர் சிந்துமாறு தமிழகமே அச்சுறுத்தப்பட்டது. //
    அப்போது நான் இந்தியாவில் இருந்தேன். இப்படி எனக்கு நினைவில்லை. சில தீவிர புலி ஆதரவாள நண்பர்கள் ஸ்வீட் கொடுத்து கொண்டாடியதாக என்னிடம் சொன்னார்கள். (நான் அவர்களிடம் சண்டை போட்டேன்.) கிட்டத்தட்ட 20 வருஷம் கடந்துவிட்டது, என் நினைவுகள் என்னை ஏமாற்றலாம். ஆனால் நீங்கள் சொல்வது போல பெரிய அளவில் எதுவும் நடந்ததாக எனக்கு தெரியவில்லை.

    // ஈழத்தமிழினத்தின் சுயநிர்ணய உரிமையை மறுப்பதற்கு மட்டுமின்றி, தமிழக மக்களின் மொழி, இன உரிமைகளை நசுக்குவதற்கும் பார்ப்பனக் கும்பலின் கையில் கிடைத்திருக்கும் ஆயுதம் ‘ராஜீவ்’ //
    // ஆனால் இந்த ராஜதந்திரம் பார்ப்பனக் கும்பலிடம் இதுவரை பலிக்கவில்லை. //
    கடைசியாக ஒன்று. இந்த ஜாதி பார்க்கும் கேனத்தனத்தை நிறுத்தவே மாட்டீர்களா? ஒரு மனிதனை அவர் செய்யும் செயல்களுக்காவும், அவன் சொல்லும் வார்த்தைகளுக்காவும் விமரிசியுங்கள், பாராட்டுங்கள். நீங்கள் வர வர கலைஞர் மாதிரி சொன்னவன் பார்ப்பனனா என்றுதான் பூதக் கண்ணாடி வைத்து பார்க்கிறீர்கள்.

    • RV,

      //தமிழர்களுக்கு உரிமைகளை பெற்றுத் தந்த ஒப்பந்தத்தை தன பதவி வெறிக்காக நாசப்படுத்தியது யார்? //

      நீங்கள் உங்கள் தேசத்தின் மீதும் அதன் தலைவர் மீதும் கொண்டுள்ள பக்தியை நான் மதிக்கிறேன். ஆனால், அதே நேரம் நீங்கள் ராஜீவ்காந்தியின் மீதுள்ள மதிப்பினால் இலங்கை ஒப்பந்தம் எங்களுக்கு உரிமைகளை பெற்று தந்தது என்று சொல்வது வேதனையான விடயம்.

      ராஜீவ் காந்தி பல அரசியல் விமர்சகர்களாலும் அரசியல் அனுபம் இல்லாதவர் என்று விமர்சிக்கப்பட்டவர். இந்திரா காந்தியின் மறைவுக்கு பின் அவருடைய காலத்தில் இலங்கையின் வெளியுறவு செயலாளராக இருந்த பார்த்தசாரதியை நீக்கிவிட்டு ரமேஷ் பண்டாரியை வெளியுறவு செயலாளராக நியமித்தார். பார்த்தசாரதி இலங்கை விடயத்தில் மிகவும் அனுபவமுள்ள ஒருவர். அது மட்டுமல்ல இலங்கை விடயத்தில் இந்தியாவின் வெளிநாட்டு கொள்கையையும் மாற்றினார். ஏன்? இந்த ஒப்பந்தத்தை எங்கள் மீது திணிப்பதற்காகவா? இந்த ஒப்பந்தம் எங்கள் மீது திணிக்கப்பட்ட ஒன்று. அது எந்த உரிமையையும் பெற்று தரவில்லை என்பது தான் உண்மை. மாகாணசபை (Provincial Council) தமிழ் மாகாணங்களுக்குரிய எந்த ஒரு அதிகாரப்பரவலாக்கலையும் தெளிவாக குறிப்படவில்லை என்பது தான் உண்மை.

      இந்த ஒப்பந்தத்தின் படி முக்கியமாக அமைதிப்படை இலங்கைக்கு வந்தது. அவர்கள் புலிகளை தாக்கினார்கள், சரி. ஏன் அப்பாவி பொதுமக்களை தாக்கினார்கள்?அமைதிப்படை என்பதற்குரிய ஐக்கிய நாடுகள் மற்றும் சர்வதேசத்தின் எல்லா விதிமுறைகளையும் மீறினார்களே ஏன்? அதை ஏன் நீங்க்ள பேச மறந்து விட்டீர்கள். இறந்த ராணுவத்தின் கணக்கை சொன்ன நீங்கள், இறந்த அப்பாவித்தமிழனின் கணக்கை மறந்து விட்டீர்கள்.

      1987 Operation Liberation இற்கு பிறகு இந்தியா உதவுகிறது என்று சந்தோசப்பட்ட எங்களுக்கு அந்த ஒப்பந்தம் சாவுமணி அடிக்கிறது என‌ அன்று தெரிந்திருக்கவில்லை.

      • ரதி,

        ஒப்பந்த விஷயத்தில் நானும் நீங்களும் இரு வேறு நிலை கொண்டவர்கள். நான் அது நல்ல விஷயம் என்று நினைப்பவன், நீங்களோ நேர் எதிர் நிலை. இதில் நாம் ஒரு இசைவுக்கு வர வாய்ப்பு மிக குறைவு. ராஜீவ் அனுபவம் இல்லாதவர் என்று நான் கூடத்தான் சொல்லுகிறேன். ஜெயவர்தன அவரை மாட்டிவிட்டுவிட்டார் என்று எழுதி இருக்கிறேன். – http://koottanchoru.wordpress.com/2009/05/06/ஈழம்-புலிகள்-இந்தியா-தமி/ ஆனால் ஒப்பந்தம் நிறைவேறி இருந்தால் அது ஈழத் தமிழர்களுக்கு நல்லதாக இருந்திருக்கும் என்று நான் நம்புகிறேன்.

        புலிகள் அப்பாவி பொதுமக்களை தாக்கினார்கள் என்பது எதிர்வினை – இந்திய ராணுவம் செயல்பட்ட விதத்தை பற்றி பேசிய வினவு குழுவினருக்கு. நான் சொல்ல வருவது இந்த மாதிரி விஷயங்களை ப்ராக்டிகலாக அணுக வேண்டும், பழைய கசப்புகளை முடிந்த வரை மறக்க வேண்டும் என்பதற்காக. இப்போதைக்கு வெகு சில கசப்புகள்தான் இன்னும் நினைவில் கொள்ள வேண்டியவை – உதாரணமாக புலிகள் மீது இந்தியாவில் தடையை எடுக்கக் கூடாது, அது நீதிமன்ற அவமதிப்பு (அதற்காக புலிகளோடு தொடர்பு இருக்கக் கூடாது என்பதில்லை, ஒரு அரசுக்கு வெளிப்படையான இல்லாமல் தொடர்பு கொள்ள பல வழிகள் இருக்கின்றன).

    • ////ஆனால் இந்த ராஜதந்திரம் பார்ப்பனக் கும்பலிடம் இதுவரை பலிக்கவில்லை. //
      கடைசியாக ஒன்று. இந்த ஜாதி பார்க்கும் கேனத்தனத்தை நிறுத்தவே மாட்டீர்களா..////அப்படி நிறுத்தினால் இவர்களை எல்லாரும் பார்ப்பன தலைமை என்று சொல்லிவிடுகிறார்கள் என்ற பயம் போலும்….

      • //// 1991 மே 21 அன்று தமிழகம் முழுவதும் திமுகவினர் தாக்கப்பட்டார்கள். 2 இலட்சம் திமுகவினரின் உடைமைகள் எரிக்கப்பட்டன. ராஜீவுக்காக கண்ணீர் சிந்துமாறு தமிழகமே அச்சுறுத்தப்பட்டது. //
        அப்போது நான் இந்தியாவில் இருந்தேன். இப்படி எனக்கு நினைவில்லை. சில தீவிர புலி ஆதரவாள நண்பர்கள் ஸ்வீட் கொடுத்து கொண்டாடியதாக என்னிடம் சொன்னார்கள். (நான் அவர்களிடம் சண்டை போட்டேன்.) கிட்டத்தட்ட 20 வருஷம் கடந்துவிட்டது, என் நினைவுகள் என்னை ஏமாற்றலாம். ஆனால் நீங்கள் சொல்வது போல பெரிய அளவில் எதுவும் நடந்ததாக எனக்கு தெரியவில்லை.//

        நான் அப்போது ஒன்பதாம் வகுப்பு மாணவன். என் வீடு காஞ்சியில் பேரறிஞர் அண்ணாவினுடைய வீடிருக்கும் அதே வீதிதான். அன்றைய தினம் காஞ்சி முழுதுமே அல்லோலகல்லோலப்பட்டது. அண்ணாவினுடைய நினைவு இல்லம்கூடத்தப்பவில்லை. தி.மு.க. அன்பர்கள் மட்டுமல்லாது அங்கு வாழ்ந்த அனைவருமே தாக்கப்பட்டார்கள் அல்லது குறைந்தபட்சம் அச்சுறுத்தப்பட்டார்கள். அக்ரஹாரங்களைதவிர காஞ்சியில் முழுக்கவே இந்த நிலைமைதானென்று அனைவரும் பேசிக்கொண்டார்கள். எனக்கு அப்போது அதற்கான காரணம் புரியவில்லை.
        சின்னகாஞ்சியிலிருந்து பெரியகாஞ்சி வந்து புகைவண்டி பிடித்து சென்னைக்குப்போனது கடல் புறா முதல் பாகத்தில் இளையபல்லவனும் நண்பர்களும் பாலூர் பெருந்துறையிலிருந்து தப்பியதற்கு ஒப்பான சாகசம். 60 கி.மீ. தூரத்தை வெறும் 9 மணி நேரத்திலேயே அடைந்துவிட்டோம் எனில் பார்த்துக்கொள்ளுங்களேன்….
        அப்புறம் ஆர்வி அவர்களே நீங்கள் அப்போது எங்கே இருந்தீர்கள்? மயிலாப்பூரிலா? திருவல்லிக்கேணியிலா? அல்லது வேறு ஏதாவதொரு ஊரின் அக்ரஹாரத்திலா?

    • RV, Below are the clarifications for your views: // ஈழம் என்றால் புலிகள், புலிகள் என்றால் ராஜீவ் கொலை, எனவே ஈழத்தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்காகக் குரல் கொடுப்போர் அனைவரும் புலி ஆதரவாளர்கள். எனவே அது தேசத்துரோகம் அல்லது ராஜத்துரோகம் அல்லது பிரிவினைவாதம்” – 1991 முதல் இன்று வரை ஈழத்தமிழர்கள் மீதான எல்லா அடக்குமுறைகளையும் நியாயப்படுத்த இந்த எளிய வாய்ப்பாடுதான் தமிழகத்தில் பயன்படுத்தப்படுகிறது. //

      அஹிம்சை என்றால் காங்கிரஸ் என்று கூறிக் கொள்கிறார்கள் சிலர், அப்படியிருக்க ஈழம் என்றால் புலிகள் என்று சொன்னால் மட்டும் தவறா.

      // ஈழத்தமிழினத்தின் சுயநிர்ணய உரிமையை மறுப்பதற்கு மட்டுமின்றி, தமிழக மக்களின் மொழி, இன உரிமைகளை நசுக்குவதற்கும் பார்ப்பனக் கும்பலின் கையில் கிடைத்திருக்கும் ஆயுதம் ‘ராஜீவ்’…./

      இந்திரா காந்தி புலிகளுக்கு ஆயுத உதவி வழங்கி பலப்படுத்தினார். அது புலிகளின் லட்சியமான தமிழீழத்தை அடைவதற்காக அல்ல. சீனாவின் ஆதிக்கம் இலங்கைக்கு பரவாமல் இருக்க. இதை நான் கூறவில்லை. இலங்கை அரசியல் தலைவர்கள் கூறியது. உண்மையும் அதுவே. ஏனென்றால் இந்திராவே ஒரு முறை கூறியதாவது, “I will not support Tamil Eelam”. இந்திராவின் எண்ணம் தமிழ் ஈழம் அடைந்தால், தமிழ்நாட்டு மக்களும் தனி தமிழ் நாடு என்று கேட்பார்கள் என்ற பயம். அதே எண்ணமும் ராஜிவ்வுக்கு. அதனாலேயே போடப்பட்டது 1987 ஜெயவர்தேனே-ராஜீவ் ஒப்பந்தம். இதற்கு ஈழத் தமிழர்களிடம் ஒப்புதல் எதுவுமே பெறவில்லை. இந்த ஒப்பந்தத்திற்கு சிங்களர்களிடம் தான் அதிக வெறுப்பு (ஏனென்றால் கொஞ்ச நஞ்ச உரிமை கூட தமிழர்களுக்கு கிடைத்துவிடக் கூடாது). சோ ராமசாமி, ஹிந்து ராம், ஜெயலலிதா இவர்கள் யாராவது தமிழீழத்தை ஆதரித்திருக்கிறார்களா? கூறுங்கள் பார்ப்போம். இன்னும் எத்தனையோ பேர்.

      // ராஜீவ் கொலை குறித்த பிரச்சினை எழுப்பப் படும்போதெல்லாம், “அதனை மறந்து விடக்கூடாதா, மன்னித்து விடக்கூடாதா” என்று மன்றாடுகிறார்கள் பல தமிழுணர்வாளர்கள். //

      மறந்து விட்டால் பின்னர் தமிழ்நாட்டில் காங்கிரஸ்காரர்கள் ஓட்டு கேட்க முடியாது. காங்கிரஸ்காரர்களின் வேலையே அதானே. முன்னர் காந்தியை சொல்லி வாங்கினார்கள். பின்னர் இந்திராவை சொல்லி வாங்கினார்கள். இப்ப ராஜீவ். காங்கிரஸ்சில் அடுத்த பெரிய தலை விழுகும் வரை ராஜீவ்வை மறக்க மாட்டார்கள்.

      // ராஜீவ் கொலை வழக்கு முடிந்துவிட்டதாக அவர்கள் கருதுவது சட்டப்படியும், அறத்தின்படியும் சரியானாதா? //

      ஏனென்றால் ராஜீவ் கொலையில் அப்போது காங்கிரஸ்சில் இருந்த சுப்ரமணியசாமி மீது குற்றம் சாட்டப்பட்டது. சந்திராசாமி மீது குற்றம் சாட்டப்பட்டது. சோனியாதான் குற்றவாளி என்று அப்போது சுப்ரமணியசாமி சொன்னார். இது எதுவுமே விசாரிக்கப் படவில்லை. இந்த குற்றச்சாட்டுகள் மறைக்கப் பட வேண்டும் என்றால் இந்த வழக்கை முடிக்க வேண்டும் தானே.

      // இந்தியாவில் ராஜீவ் ஆட்சி செய்தபோதும், இலங்கையில் ராஜீவ் அமைதிப்படை அனுப்பியபோதும் நடந்த படுகொலைகளுக்கு யார் காரணம்? இந்திய அமைதிப்படையால் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான ஈழத்தமிழ் மக்களுக்காக தண்டிக்கப்பட்டவர்கள் யார்? அந்தக் கொலைமுயற்சியில் உயிரிழந்த 1300 இந்திய சிப்பாய்களின் மரணத்துக்காகத் தண்டிக்கப்பட்டவர்கள் யார்? //

      இலங்கையில் IPKF கால் வைத்த போது சீல் உடைக்கப்படாத AK-47 ரக துப்பாக்கிகள் IPKF வீரர்களால் புலிகள் அல்லாத பிற போராளிக் குழுக்களுக்கு வழங்கப்பட்டு புலிகளுக்கு எதிராக போரிடச் செய்தனர். இதை நான் கூறவில்லை. இந்திய அமைதிப் படைக்கு தலைமை ஏற்றுச் சென்ற ஹர்கிரத் சிங் அவர்கள் தன் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

      // மேற்சொன்ன கேள்விகளை யாரும் எப்போதும் எழுப்பியதில்லை. எனவே மகாத்மா காந்தி, இந்திரா காந்தி ஆகியோருடன் தேசியப் புனிதர்களின் படவரிசையில் ராஜீவ் காந்தியும் சேர்ந்து விட்டார். //

      You are correct. குற்றவாளிகள் தப்பித்துவிட்டார்கள்.

      • செந்தில்.

        // RV, Below are the clarifications for your views: //
        விளக்கம் தர முயன்றதற்கு நன்றி! உருப்படியாக இருந்தால் இன்னும் சந்தோஷப்பட்டிருப்பேன்.

        // அஹிம்சை என்றால் காங்கிரஸ் என்று கூறிக் கொள்கிறார்கள் சிலர், அப்படியிருக்க ஈழம் என்றால் புலிகள் என்று சொன்னால் மட்டும் தவறா. //
        திருப்பதி என்றால் மொட்டை என்று சிலர் இல்லை, பலர் சொல்கிறார்கள். அதனால் பார்பர் ஷாப்பில் மொட்டை அடிக்கக் கூடாதா? யாரோ சிலர் அஹிம்சை என்றால் காங்கிரஸ் என்று சொன்னார்களாம், அதனால் நீங்கள் ஈழம் = புலிகள் என்று சொல்வது சரியாகிவிடுமாம். அட ஏன் சார் இந்த மாதிரி மொக்கை போட்டு நேரத்தை வீணடிக்கிறீர்கள்?

        // // ஈழத்தமிழினத்தின் சுயநிர்ணய உரிமையை மறுப்பதற்கு மட்டுமின்றி, தமிழக மக்களின் மொழி, இன உரிமைகளை நசுக்குவதற்கும் பார்ப்பனக் கும்பலின் கையில் கிடைத்திருக்கும் ஆயுதம் ‘ராஜீவ்’….///
        நான் கேட்டதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? நான் என்ன கேட்டேன் என்று நினைவுபடுத்துகிறேன். காங்கிரஸ் தலைவரான ராஜீவை காங்கிரஸ்காரர்கள் கொண்டாடுவதிலோ, இல்லை அவரை கொன்றவர்களை கண்டிப்பதிலோ என்ன வியப்பு, என்ன தவறு? நீங்கள் புதிதாக ஏதாவது சொல்ல விரும்பினால், என்னுடைய மறு மொழியிலிருந்து ஒரு பகுதியை எடுத்தாண்டுவிட்டு பிறகு அந்த புதிய விஷயத்தை எழுதாதீர்கள்!

        நீங்கள் புதிதாக எழுதி இருப்பது:
        // இந்திரா காந்தி புலிகளுக்கு ஆயுத உதவி வழங்கி பலப்படுத்தினார். அது புலிகளின் லட்சியமான தமிழீழத்தை அடைவதற்காக அல்ல. சீனாவின் ஆதிக்கம் இலங்கைக்கு பரவாமல் இருக்க. இதை நான் கூறவில்லை. இலங்கை அரசியல் தலைவர்கள் கூறியது. உண்மையும் அதுவே. ஏனென்றால் இந்திராவே ஒரு முறை கூறியதாவது, “I will not support Tamil Eelam”. இந்திராவின் எண்ணம் தமிழ் ஈழம் அடைந்தால், தமிழ்நாட்டு மக்களும் தனி தமிழ் நாடு என்று கேட்பார்கள் என்ற பயம். அதே எண்ணமும் ராஜிவ்வுக்கு. அதனாலேயே போடப்பட்டது 1987 ஜெயவர்தேனே-ராஜீவ் ஒப்பந்தம். இதற்கு ஈழத் தமிழர்களிடம் ஒப்புதல் எதுவுமே பெறவில்லை. இந்த ஒப்பந்தத்திற்கு சிங்களர்களிடம் தான் அதிக வெறுப்பு (ஏனென்றால் கொஞ்ச நஞ்ச உரிமை கூட தமிழர்களுக்கு கிடைத்துவிடக் கூடாது). சோ ராமசாமி, ஹிந்து ராம், ஜெயலலிதா இவர்கள் யாராவது தமிழீழத்தை ஆதரித்திருக்கிறார்களா? கூறுங்கள் பார்ப்போம். இன்னும் எத்தனையோ பேர். //
        இந்திராவும் ராஜீவும் இலங்கை துண்டாடப்படக் கூடாது என்று நினைத்தார்களா? அனேகமாக இருக்கலாம். அதனால் என்ன? சோ, ராம், ஜெ தமிழ் ஈழத்தை ஆதரிக்கவில்லையா? சரி. அதனால் என்ன? என்ன சொல்ல வருகிறீர்கள்? (ஜெயின் இப்போதைய பல்டிய நானும் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.) தமிழ் ஈழம் ஒன்றே தீர்வு என்று நானும் நினைக்கவில்லை. புலிகள் ஆட்சியின் கீழ் தமிழ் ஈழம் என்பது ஒரு ஃபா சிஸ்ட் ஆட்சியாக இருந்திருக்கும் என்ற அச்சம் எனக்கு உண்டு. வினவு தளத்திலும் இந்த கருத்தை வற்புறுத்தும் பதிவுகள் வந்திருக்கின்றன என்று நினைவு.
        தமிழ் ஈழம் சரியான தீர்வு இல்லை என்று சொல்வது வேறு, இனப் படுகொலையை ஆதரிப்பது வேறு. புலிகள்=ஈழத் தமிழர்கள் என்ற எண்ணத்தினால் இந்த வேற்றுமையை பலர் புரிந்து கொள்வதில்லை.

        // // ராஜீவ் கொலை குறித்த பிரச்சினை எழுப்பப் படும்போதெல்லாம், “அதனை மறந்து விடக்கூடாதா, மன்னித்து விடக்கூடாதா” என்று மன்றாடுகிறார்கள் பல தமிழுணர்வாளர்கள். //
        மறந்து விட்டால் பின்னர் தமிழ்நாட்டில் காங்கிரஸ்காரர்கள் ஓட்டு கேட்க முடியாது. காங்கிரஸ்காரர்களின் வேலையே அதானே. முன்னர் காந்தியை சொல்லி வாங்கினார்கள். பின்னர் இந்திராவை சொல்லி வாங்கினார்கள். இப்ப ராஜீவ். காங்கிரஸ்சில் அடுத்த பெரிய தலை விழுகும் வரை ராஜீவ்வை மறக்க மாட்டார்கள். //
        எதற்காக மறக்க வேண்டும் என்று நானும்தான் கேட்டிருந்தேன். அதற்கு உங்கள் பதிலை காணோம். எங்கேயோ போகிறீர்கள். நான் காங்கிரஸ்காரன் இல்லை.

        // // ராஜீவ் கொலை வழக்கு முடிந்துவிட்டதாக அவர்கள் கருதுவது சட்டப்படியும், அறத்தின்படியும் சரியானாதா? //
        ஏனென்றால் ராஜீவ் கொலையில் அப்போது காங்கிரஸ்சில் இருந்த சுப்ரமணியசாமி மீது குற்றம் சாட்டப்பட்டது. சந்திராசாமி மீது குற்றம் சாட்டப்பட்டது. சோனியாதான் குற்றவாளி என்று அப்போது சுப்ரமணியசாமி சொன்னார். இது எதுவுமே விசாரிக்கப் படவில்லை. இந்த குற்றச்சாட்டுகள் மறைக்கப் பட வேண்டும் என்றால் இந்த வழக்கை முடிக்க வேண்டும் தானே. //
        எய்யா சாமி, சு. சாமி என்ன சொன்னார் என்று ஆரம்பிக்காதீர்கள். சு. சாமி வழக்கு தொடுக்கலாம். போலீசில் கேஸ் கொடுக்கலாம். அந்த ஆள் சும்மா சொல்வதை எல்லாம் கேட்டு நடக்க வேண்டும் என்றால் நம் நாடு என்றைக்கும் உருப்படாது. அப்புறம் உங்கள் fact-களை சரியாக புரிந்து கொள்ளுங்கள். ராஜீவ் கொலையின்போது சு. சாமி சந்திரசேகர் கட்சிக்காரர். அவரது அமைச்சரவையில் வெளியுறவு அமைச்சராக இருந்தவர். சு. சாமி மேல் குற்றம் சாட்டப்பட்டது, ச. சாமி மேல் குற்றம் சாட்டப்பட்டது என்றால் யாரால்? என்ன ரோட்டோர டீக்கடையில் யாராவது ஏதாவது சொன்னால் கூட கேஸ் போடுவார்களா?

        // இந்தியாவில் ராஜீவ் ஆட்சி செய்தபோதும், இலங்கையில் ராஜீவ் அமைதிப்படை அனுப்பியபோதும் நடந்த படுகொலைகளுக்கு யார் காரணம்? இந்திய அமைதிப்படையால் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான ஈழத்தமிழ் மக்களுக்காக தண்டிக்கப்பட்டவர்கள் யார்? அந்தக் கொலைமுயற்சியில் உயிரிழந்த 1300 இந்திய சிப்பாய்களின் மரணத்துக்காகத் தண்டிக்கப்பட்டவர்கள் யார்? //
        இலங்கையில் IPKF கால் வைத்த போது சீல் உடைக்கப்படாத AK-47 ரக துப்பாக்கிகள் IPKF வீரர்களால் புலிகள் அல்லாத பிற போராளிக் குழுக்களுக்கு வழங்கப்பட்டு புலிகளுக்கு எதிராக போரிடச் செய்தனர். இதை நான் கூறவில்லை. இந்திய அமைதிப் படைக்கு தலைமை ஏற்றுச் சென்ற ஹர்கிரத் சிங் அவர்கள் தன் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். //
        IPKF மற்ற போராளிகளை தனக்கு சாதகமாக போரில் பயன்படுத்திக் கொண்டது என்று சொல்கிறீர்கள். போர் ஆரம்பித்த பிறகு வேறு என்ன செய்ய வேண்டும்?

        // You are correct. குற்றவாளிகள் தப்பித்துவிட்டார்கள். //
        அப்பாட! எனக்கு யு ஆர் கரெக்ட் என்று சொல்ல ஒரு வாய்ப்பாவது கிடைத்ததே!

  23. “இந்திய அமைதிப்படையால் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான ஈழத்தமிழ் மக்களுக்காக தண்டிக்கப்பட்டவர்கள் யார்? அந்தக் கொலைமுயற்சியில் உயிரிழந்த 1300 இந்திய சிப்பாய்களின் மரணத்துக்காகத் தண்டிக்கப்பட்டவர்கள் யார்?”
    was there any case filed in Indian or Srilankan or World court?
    Praba and Ltte were equal partners for all deaths and destruction during IPKF war in Srilanka

    • டேய் Praba, முதல்ல நீ கடந்த கால நிகழ்வை தெரிந்து கொள். இலங்கைக்கு இந்திய அமைதிப் படை சென்று இறங்கிய போது சீல் உடைக்கப்படாத AK-47 ரக துப்பாக்கிகளை புலிகள் அல்லாத சக போராளி இயக்கங்களுக்கு IPKF வீரர்கள் கொடுத்து புலிகளுக்கு எதிராக போர் செய்யச் சொன்னார்கள் (இலங்கை அரசின் சூழ்ச்சி மூலமாகவும்). இதை நான் சொல்லவில்லை. இந்திய அமைதிப் படைக்கு தலைமை ஏற்றுச் சென்ற திரு. ஹர்கிரத் சிங் அவர்கள் தன் புத்தகத்தில் கூறியிருக்கிறார்.

  24. RV,

    //ஆனால் ஒப்பந்தம் நிறைவேறி இருந்தால் அது ஈழத் தமிழர்களுக்கு நல்லதாக இருந்திருக்கும் என்று நான் நம்புகிறேன்.//

    நீங்கள் ஒப்பந்தம் நிறைவேறி இருந்தால் நல்லது என்று நினைக்கிறீர்கள். ஆனால், நான் இந்த ஒப்பதமே போடப்படாமல் இருந்திருக்கலாம் என்று நினைக்கிறேன். அந்த ஒப்பந்தம் போடப்ப‌டாம‌ல் இருந்திருந்தால் எங்களுக்கு இந்த பேரழிவு வந்திருக்காது என்று நம்புகிறேன்.

    வினவு என்ன சொல்கிறது என்பதைப்பற்றி எல்லாம் எனக்கு கவலையோ, அக்கறையோ இல்லை. பாதிக்கப்பட்ட ஒரு ஈழத்தமிழ் என்ற வகையில் தான் நான் பேசுகிறேன். வல்லரசு கனவு காணும் ஒரு நாடு தன் தேசிய பிராந்திய நலன்களுக்காக நாதியற்ற எங்கள் மீது எந்த தீர்வையும் திணிக்கலாம் என்று நினைப்பது ஒரு விதமான சர்வாதிகாரம்.

    அன்று ஒப்பந்தம் போட்டுவிட்டு எங்களை கொன்றார்கள். தற்காலத்தில் ஒப்பந்தம் இல்லாமலே இனப்படுகொலைக்கு துணை போகிறது காங்கிரஸ் இந்தியா. பார்வையாளர்களாலும் விமர்சகர்களாலும் பாதிக்கப்பட்டவனின் வலியை புரிந்து கொள்ள முடியாது என்பது தான் நிதர்சன்ம் போலுள்ளது.

    • எதேச்சையாகப் படித்தபோது பட்டென்று பட்டவை…………..

      வலியும் வேதனையும் பட்டால்தான் புரியும். ஆனால் சிலர் எப்போதும் அடிமைகளாக வாழ்ந்தே பழகிவிட்டால்……… அல்லது எதிர்ப்பதே சிலரது வேலையென்றாகிவிட்டால்………….. சரி ஏதோ 13 வது திருத்தச் சட்டமாம்…. நிறைவேற்ற முடியுமா இந்த இந்தியாவல்………

    • அனுபவித்து அவதிப்படும் ஈழத்தமிழர்க்கே எந்தவொரு ஒப்பந்தத்திலும் நிலைப்பாடு எடுக்கும் உரிமை உண்டு வேறு எவர்க்கும், தமிழகத்தமிழர் உட்பட, யாருக்கும் இல்லை என்பது என் அபிப்பிராயம்.

      • ஒப்பந்தம் செய்து கொள்ளும் உரிமை வேறு எவருக்கும் இல்லை என்று இறங்குவோனும் ரதியும் இன்னும் பலரும் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை. எவ்வளவு நல்ல நோக்கம் இருந்தாலும் சரி, எவ்வளவு நல்ல ஒப்பந்தமாக இருந்தாலும் சரி.

        ஆனால் நான் உரிமையை பற்றி பேசவில்லை. ஒப்பந்தம் நல்ல விஷயம், நிறைவேறி இருந்தால் தமிழர்களுக்கு நல்லது நடந்திருக்கு என்று நான் நினைப்பதை பற்றி மட்டுமே பேசி இருக்கிறேன். உரிமை இல்லை என்பதற்காக மட்டுமே ஒப்பந்தமே தமிழர்களுக்கு இன்னல் விளைப்பது என்று சொல்லாதீர்கள்.

    • சில வேளைகளில் நாம் பொன்னான நேரங்களை வீணடிக்கிறோமோ என்று எண்ணுவதுண்டு. தீரு ஆர்வீ அவர்களே இப்போது, உங்களது பாணியில் புலிகளது கதைமுடிந்துவிட்டது. பயங்கரவாதம் ஒழிந்துவிட்டது. சரி இந்திய நாட்டுக்கு ஆண்மையிருந்தால் , பெண்ணால் ஆளப்படும் பொம்மையாட்சியில் ( பெண்ணிலைவாதிகளே, பெண்களது உரிமைகள் பற்றியதல்ல) ஒப்பந்தம், அதாவது ராஜீவ் -ஜெயவர்த்தனா ஒப்பந்தம் பற்றிப் பேசட்டும் பார்க்கலாம். உங்களால் இனி சிறிலங்காவிலே ஒரு ழூழூழூழூ கூடப் புடுங்க முடியாது. அத்தோடு தமிழைச் சீரழித்து, தமிழினத்தை அழித்து இல்லாது செய்வதே வடநாட்டினதும் காங்கிரசினதும் நீண்டகாலத் திட்டமென்பதை நீங்கள் புரியாவிடினும் தமிழகம் புரிந்து கொண்டுள்ளது. கேவலம் ஒரு நதிநீரைக் கூடப் பெறமுடியாத தமிழகத்தினது நிலை. பாவப்பட்ட ஜென்மங்களாக கடலிலே சுட்டுவீசப்படும் தமிழக மீனவரது நிலை, இவற்றிலிருந்து எமது நிலையினையும் புரிந்து கொள்ள முடியும். சும்மா அளக்காது உண்மைகளைப் பேசுங்கள். எழுதுங்கள்.

      ஆர்வீயிடம் ஒரேயொரு கேள்வி உங்களது நாராயன சிவசங்க வகையறாக்களால் இலங்கை – இந்திய ஒப்பந்தம் பற்றி ஏதாவது இனிமேல் பேச முடியுமா? சும்மா ஒப்பந்தம் ஒப்பந்தம் அது இது என்று உங்களையும் ஏமாற்றி மற்றையோரையும் ஏமாற்றி அரசியல் விபச்சாரம் புரியும் இந்திய அரசினது மனிதாபிமானமற்ற கொடுமைகளை மறைத்துத் திசைதிருப்பாது நியாயமாக எழுதுங்கள்.

      • நொச்சியான்,

        உங்கள் புனைபெயரை வைத்து நீங்களும் ஒரு இலங்கை தமிழர் என்று நினைக்கிறேன். தவறு என்றால் சொல்லுங்கள்.

        இந்த நிலையில் இலங்கை தமிழர்களுக்கு ப்ராக்டிகலாக யோசிப்பது கஷ்டம்தான். இருபது வருஷம் முன்னால் புலிகள் இந்த ஒப்பந்தத்தை கொன்றுவிட்டார்கள் என்று மட்டும் நினைவுபடுத்துகிறேன். செத்துப்போன ஒப்பந்தம் அப்படியே மீண்டு வருவது கஷ்டம்.

    • திரு ஆர் வீ அவர்களே ! ஒப்பந்த்தைக் கொண்டு வரும்படி கேட்கவில்லை. உங்களால் , அடச் சீ உங்களது கா…….ங்……………. கீ…………… ர………… சு…………………… அரசால் அந்த ஒப்பந்தம் பற்றிப் பே பே ச முடியுமா? அது கிந்திய நலனுக்கான ஒப்பந்தமென்பதால் கேட்கிறேன். தமிழர் தரப்பும் சிறிலங்காவும் செய்த ஒப்பந்தத்தை நீங்கள் மன்னிக்கவும் காங்கரசு அரசு கிழித்தெறிய வைத்தது. ஆனால் சீனாவோ பாக்கியோ கிழிப்பிப்பான் அப்போதாவது சிங்களரை புரிந்து கொள்கிறார்களா பார்க்கலாம்.

      • என்னதான் சொல்ல வருகிறீர்கள்? ஒன்றும் புரியவில்லை.

        ஒப்பந்தம் செத்துவிட்டது. புலிகள் அதை கொன்று பல வருஷங்கள் ஆகிவிட்டன. செத்துப்போன ஒப்பந்தன்த்தை பற்றி மேனனும் கீனனும் பேசினால் என்ன, பேசாவிட்டால் என்ன?

  25. ராஜீவின் கொலை பற்றிப் பேசுவோரே முல்லைத்தீவிலே சாட்சியமே இல்லாது இந்திய – சிறிலங்கா அரசுகளால் கூட்டுப்படுகொலைக்குள்ளானவர்களுக்கான நீதிபற்றியும் பேசுங்கள். தான் விதவையானதற்காகப் பல்லாயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டு, பல லட்சம் மக்கள் அனாதைகளாக முகாம்களென்று சொல்லப்படும் முட்கம்பிச்சிகைளுக்குள் அடைக்கப்பட்டு பெண்கள் பாலியல் வதைகளுக்கும் ஆண்கள் உயிரோடு கிழிக்கப்பட்டு இந்தியாவுக்கும் ஏற்றுமதியாகிறதாமே தமிழரின் உறுப்புகள், இது பற்றியும் எழுதுங்கள். பேசுங்கள். பழைய பாடல் தட்டுப்போல ராஜீவ் புராணம் பாடியே தமிழனையும் தமிழகத்தையும் அழிக்கிறார்கள். அடக்குகிறார்கள். அன்றை தவறான முடிவுகளால் விளைந்ததே தொடர்வினையாகும். ஆனால் அதிலிருந்து இன்றுவரை இந்தியக் காங்கிரஸ் ஒரு நேர்மையானவழியைக் காணமுயலாது தமிழின அழிப்பையே குறிக்கோளாக நின்று செயற்பட்டுள்ளது. ஆனால் இதற்கான வலியை அது தனது முற்றத்திலேயே இதே சிறிலங்கா அரசால் பெற்றுக்கொள்ளும். அப்போது புரியும் .

  26. நாம் யாருக்கும் அஞ்சப் போவதில்லை…

    [வெள்ளிக்கிழமை, 22 மே 2009, 04:13 பி.ப ஈழம்] [தமிழ்நாட்டிலிருந்து அ.பொன்னிலா]

    ஈழத் தமிழர்களின் இனப் படுகொலையில் புதுடில்லியின் ‘கை’யும் நனைந்துள்ளது என்றும் அத்துடன் தமிழ்நாட்டு மக்கள் கையறு நிலைக்கு ஆளாக்கப்பட்டனர் என்றும் உண்மை நிலவரங்களை அலசுகின்றார் தமிழ்நாட்டில் இருந்து அ.பொன்னிலா…………………….
    http://www.ponmaalai.com/2009/05/blog-post_23.html

    பக்ததாஸர்காள், ராஜீவின் ஆவி எப்போது அடங்கும்? இனி அடங்கிவிடுமா? மிச்சமுள்ள தமிழரையும் பலியெடுக்க அலையுமா? சொல்லிவிடுங்கள் மலையாள மாந்திரீகரிடம் போவதற்று………..

  27. இரங்குவோன்,

    // ஆர்வி அவர்களே நீங்கள் அப்போது எங்கே இருந்தீர்கள்? மயிலாப்பூரிலா? திருவல்லிக்கேணியிலா? அல்லது வேறு ஏதாவதொரு ஊரின் அக்ரஹாரத்திலா? //
    திண்டிவனத்தில் இருந்தேன். 🙂 ஸ்வீட் கொடுத்து கொண்டாடிய நண்பனை பார்க்க பஸ்சில் போய்க்கொண்டிருந்தேன். பஸ் நிறுத்தப்படவில்லை. ஒரு மண்ணும் நடக்கவில்லை. திண்டிவனம் பஸ் ஸ்டாண்டிலிருந்து அவன் வீட்டுக்கு நடந்துதான் போனேன். எந்த வித கலவரமும் நடந்த மாதிரி நினைவில்லை. எனக்கு தெரிந்து திண்டிவனத்தில் அக்ரகாரங்கள் கிடையாது. என் நண்பன தீவிர திராவிடர் கழக சார்புள்ள குடும்பத்தை சேர்ந்தவன். அவன் நிச்சயமாக அக்ரகாரத்தில் வசிக்கவில்லை.

    அது என்ன, தமிழ் நாட்டில் எல்லாருக்கும அடி விழும், பார்ப்பனர்களுக்கு மட்டும் விழாதா? இந்த மாதிரி ஜாதி வெறி வினவு தளத்தில் நேர்முகமாகவும் மறைமுகமாகவும் ஊக்குவிக்கப்படுவது மிக மோசமான விஷயம்.

    அப்புறம் எல்லாரும் பாத்துக்கங்கப்பா, அடுத்த ஜாதி வெறி இல்லாத ஆத்மா கிளம்பிட்டாரய்யா கிளம்பிட்டாரு! இந்த மாதிரி நீ குடுமி, அம்பி, அக்ரகாரத்துக்காரன், உன் genotype என்ன அப்படின்னு கேனத்தனம் வினவு தளத்தில் நிறைந்து காணப்படுவதால்தான் நான் பார்ப்பன ஜாதியில் பிறந்தவன்ன்னு அடிக்கடி சொல்லிக்க வேண்டி இருக்கிறது. அது சரி, வினவு குழுவினரே ஜாதி பார்க்கக் கூடாதுன்னு சொல்லிக்கிட்டு நாலு பதிவுக்கு ஒரு முறை பார்ப்பன ஊடகம், சதி அப்படின்னு எழுதினா வர்றவங்க எப்படி இருப்பாங்க?

    • ஆர்வி அவர்களே! எங்கள் ஊரிலும் அதே தினம் சென்னையிலும் நடந்தவற்றை சொன்னேன். அதிலும் கோயில்களும் அக்ரஹாரங்களும் நிறைந்த காஞ்சியில் அக்ரஹாரங்கள் மட்டும் வன்முறையிலிருந்து தப்பியது எப்படி? அது எப்படியோ போகட்டும் …நாங்கள் இப்போதும் அந்தண நண்பர்களிடம் “இந்த மாதிரி கலவரம் அடுத்த முறை வந்தால் உங்கள் வீட்டிற்குதான் புகலிடம் தேடி வருவோம்” என வேடிக்கையாய் சொல்வதுதான். மற்றபடி அன்றைய தினம் தமிழகமே அமைதிப்பூங்காவாய் இருந்ததைப்போல் நீங்கள் சொன்னது இருந்தனால்தான் அந்த நையாண்டி. நீங்கள் எந்த ஜாதியில் பிறந்திருந்தாலும் இதைதான் சொல்லியிருப்பேன். மற்றபடி ஜாதியெல்லாம் கிடையாது. கொள்கைக்காகவே வேறு ஜாதி ஏழைப்பெண்ணை மணந்தவன் நான். பார்ப்பனீயம் என்பதை பார்ப்பனரல்லாதோரிடமும் பார்க்க முடியும், பார்ப்பனீயமில்லாத பிராமணர்களையும் எனக்குத் தெரியும்.

      • //இந்த மாதிரி நீ குடுமி, அம்பி, அக்ரகாரத்துக்காரன், உன் genotype என்ன அப்படின்னு கேனத்தனம் வினவு தளத்தில் நிறைந்து காணப்படுவதால்தான் நான் பார்ப்பன ஜாதியில் பிறந்தவன்ன்னு அடிக்கடி சொல்லிக்க வேண்டி இருக்கிறது.//
        மேலும் நான் நீங்கள் அக்ரஹாரத்தில் இருந்தீர்களா என்றுதானே கேட்டேன்? அக்ரஹாரத்தில் அந்தண்ரல்லாதோர் இருக்கமாட்டார்களா என்ன? நீங்கள் ஏன் அப்படி புரிந்து கொள்ளவேண்டும்?

      • இரங்குவோன்,

        தமிழகம் அமைதிப் பூங்காவாக நிலவியது என்று நான் சொன்னதாக நீங்கள் நினைப்பது தவறான புரிதல். மீண்டும் சொல்கிறேன், இருபது வருஷங்கள் ஆகிவிட்டன, என் நினைவுகள் என்னை ஏமாற்றலாம். ஆனால் பத்திரிகைகளிலும், செய்தித்தாள்களிலும் பதட்ட நிலை நிலவியது என்பதற்கு மேல் செய்தி வந்ததாக எனக்கு நினைவில்லை. நான் சென்னைக்காரன். திண்டிவனத்துக்கு போயிருந்தேன், அவ்வளவுதான். எனக்கு தெரிந்து சென்னையிலும் எதுவும் நடந்ததாக தெரியவில்லை. அறிவாலயத்தை யாராவது தாக்கினார்களா என்ன?

        பொதுவாக தமிழ் நாட்டில் அன்றுதான் புலிகள் எதிர்ப்பு ஆரம்பித்தது. இதையாவது ஒத்துக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

        அடுத்த மறுமொழியில் அக்ரகாரத்தில் பார்ப்பனர் அல்லாதவர்கள் இருக்க மாட்டார்கள் என்று கேட்கும் நீங்கள் இந்த மறுமொழியில் ஏன் உங்கள் அக்ரகாரத்து அந்தண நண்பர்களிடம் மட்டும் புகலிடம் கேட்டீர்கள்? அக்ரகாரத்தில் வசிக்கும் பார்ப்பன்னர் அல்லாத நண்பர்களிடம் கேட்க வேண்டியதுதானே? 🙂

  28. இரங்குவோன்,

    நேற்றோ, முந்தைய நாளோ, திமுக ஆதரவாளர், பிரபல தமிழ் பதிவர், லக்கி லுக் எழுதிய இந்த பதிவை பார்த்தேன். – http://www.luckylookonline.com/2009/06/blog-post_02.html இதை படிக்க நீங்களும் விருப்பப் படலாம்.

    இந்த பதிவிலும் நீங்கள் சொன்னது போல சில விஷயங்கள் இருக்கின்றன.
    // அந்த துன்பியல் சம்பவம் நடந்ததைத் தொடர்ந்து நடந்த வேறு சில துன்பியல் சம்பவங்கள் :

    * நங்கநல்லூர் மார்க்கெட் அருகே அவர் பழக்கடை வைத்திருந்தார். அதிகாலையிலேயே அவரது பழக்கடை சிலரால் அடித்து நொறுக்கப்பட்டு, பெட்ரோல் ஊற்றி தீவைக்கப்பட்டது. சிலகாலம் முன்பாக தள்ளுவண்டியில் பழங்கள் விற்றுக் கொண்டிருந்தவர் அப்போதுதான் கடனோ, உடனோ வாங்கி பழக்கடை ஆரம்பித்திருந்தார். கடை எரிக்கப்பட்ட சோகத்தில் மனம்போன போக்கில் திரிந்து கொண்டிருந்தவர் சில நாட்களிலேயே தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். குறிப்பிட்ட அக்கட்சியைச் சேர்ந்தவர் இவர்.

    * தமிழகமெங்கும் இருந்த மற்ற கட்சிக்காரர்களின் நிலையும் இதுதான். இவர்கள் நடத்தி வந்த தொழிற்நிலையங்கள் அடித்து நொறுக்கப்பட்டது. கடைகள் தீக்கிரையாயின. கடைகளுக்குள் இருந்த பொருட்கள் களவாடப்பட்டன. இரத்த ஆற்றில் குளித்தது படுகொலை செய்யப்பட்ட தலைவன் மட்டுமல்ல, அந்த கட்சிக்காரர்களும்தான்.

    * அது தேர்தல் நேரமும் கூட. பிரச்சாரத்துக்காக வைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவு ஒன்றின் மீது பெட்ரோல் ஊற்றி கொளுத்த ஒரு கும்பல் முயற்சித்துக் கொண்டிருந்தது. தடுத்தவர்கள் மீதும் பெட்ரோல் ஊற்றி கையில் தீப்பெட்டியோடு, கொலைவெறியோடு துரத்தினார்கள். இச்சம்பவத்தில் ஒருவர் மீது தீப்பற்றி இடுப்பு வெந்தது.

    * இப்போது மாதிரி இல்லாமல் அப்போதெல்லாம் கட்சிக்கொடிக் கம்பங்கள் ஒவ்வொரு கட்சியின் கவுரவச் சின்னங்கள். ஊர் முகப்பில் இருந்த கொடிக்கம்பத்தை வெட்டிச்சாய்க்க வந்தவர்களிடம் எதிர்த்துப் போராடிய ஒரு தொண்டனுக்கு கழுத்தில் அரிவாள் வெட்டு விழுந்தது. மாநிலமெங்கும் கட்சிக் கொடிக்கம்பங்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டது.

    * அக்கட்சியினரின் வீடுகள் சூறையாடப்பட்டது. தீவைக்கப்பட்டது. கட்சித் தொண்டர்களை கண்ட இடங்களிலெல்லாம் தாக்கினார்கள். //

    மீண்டும் சொல்கிறேன், என் ஞாபகம் வேறு மாதிரிதான் இருக்கிறது. தமிழ் நாட்டில் ஓரளவு பத்தட்டம் இருந்தது என்று நினைவிருக்கிறது, என்றாலும் சாதாரண வாழ்க்கை பெரிதாக பாதிக்கப்படவில்லை என்றுதான் ஞாபகம். லக்கி லுக் கூட உயிர் சேதம் எதுவும் இருந்ததாக குறிப்பிடவில்லை. (ஒருவருக்கு காயம், நஷ்டம் ஏற்பட்டதால் ஒருவர் தற்கொலை என்று எழுதி இருக்கிறார்). இவர் சொல்லும் அளவுக்கு வீடுகளும், கடைகளும் சூறையாடப்பட்டதாக எனக்கு நினைவில்லை. இது மட்டுமல்ல, நான் அப்போது பம்பாயில் வேலை செய்துகொண்டிருந்தேன். தமிழர்கள் வாழும் எந்த பகுதியிலும் எந்த தாக்குதலும் நடக்கவில்லை என்பது உறுதியாக தெரியும். இந்தியாவிலும் வேறு எங்கும் தமிழர்கள் தாக்கப்படவில்லை என்றுதான் ஞாபகம்.

    இருந்தாலும் நீங்கள் சொன்னது போலவே இன்னொரு பதிவரும் சொல்லி இருப்பது உங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன்.

  29. RV,

    இந்த ஒப்பந்தத்தை கிழித்துப் போட்டது புலிகள் அல்ல. இலங்கை அரசு. புலிகள் இந்த ஒப்பந்தத்தை ஆரம்பத்தில் இருந்தே எதிர்த்தார்கள் என்பது மட்டும் தான் உண்மை.ஒப்பந்தம் போடப்ட்ட காலங்களில் இந்திய RAW வால் பிரதம மந்திரி ஆக்கப்பட்டவர் வரதராஜப்பெருமாள். அவரே இந்த ஒப்பந்தம் எந்த அதிகாரப்பரவலாக்கலையும் செய்யவில்லை என்று தூக்கி எறிந்து விட்டு போய்விட்டார். இந்த ஒப்பந்தம் சமபந்தமாக பிற்காலங்களில் சில தடையுத்தரவுகளை இலங்கை அரசு நீதிமன்றத்தில் வாங்கியுள்ளது என்று படித்திருக்கிறேன்.

    இந்த ஒப்பந்தத்தின் (ராஜீவ்‍_ஜெயவர்த்தனா ஒப்பந்தம்) முக்கிய அம்சங்களில் ஒன்று வட‌க்கு‍‍_கிழக்கு இணைந்த தற்காலிக நிர்வாகம். அதாவது,கிழக்கு மாகாணம் தமிழர்களுக்கு சொந்தமானது. ஆனால், இலங்கை அரசு இந்த இரு மாகாணங்களின் இணைப்புக்கு ஆரம்ப காலங்களிலிருந்தே எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. காரணம், எல்லோருக்கும் தெரிந்தது தான், திருகோணமலை துறைமுகம். அங்கு, தற்காலத்தில் சீனாவின் ராடர்கள் நிறுவப்பட்டுள்ளதாக‌ செய்திக‌ள் அடிப‌டுகிற‌து. இதுதான், சீனாவும் இல‌ங்கையும் இந்தியாவுக்கு விடும் சவால்.

    //இந்த நிலையில் இலங்கை தமிழர்களுக்கு ப்ராக்டிகலாக யோசிப்பது கஷ்டம்தான். இருபது வருஷம் முன்னால் புலிகள் இந்த ஒப்பந்தத்தை கொன்றுவிட்டார்கள் என்று மட்டும் நினைவுபடுத்துகிறேன். செத்துப்போன ஒப்பந்தம் அப்படியே மீண்டு வருவது கஷ்டம்.//

    எதை வைத்து நாங்க‌ள் யதார்த்த‌மாக‌ சிந்திக்க‌வில்லை என்று சொல்கிறீர்க‌ள்?

    ச‌ரி, நீங்க‌ள் சொல்வ‌து போல் புலிக‌ள் இந்த‌ ஒப்ப‌ந்த‌த்தை கொன்றார்க்ள் என்றால், இந்தியா புலிக‌ளை அழித்து விட்டது, இல்லையா? ஏனென்றால், இல‌ங்கை அதிப‌ர் ராஜப‌க்க்ஷே இந்தியாவின் போரை தாங்க‌ள் ந‌ட‌த்திக்கொடுத்திருப்ப‌தாக‌ NDTV இல் பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். அத‌ற்கு இநதியா எந்த‌ ம‌றுப்பு அறிக்கையும் விட‌வில்லை என‌ நான் ம‌ட்டும் சொல்ல‌வில்லை, இந்தியாவின் முன்னாள் ராணுவ‌ அதிகாரி அசோக் மேத்தா என்ப‌வ‌ரும் பிர்த்தானிய‌ ஊட‌க‌ம் ஒன்றின் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்.

    செத்துப்போன‌ இந்திய‌_இல‌ங்கை ஒப்ப‌ந்த‌த்தை இந்தியா புதுப்பிக்க‌ நினைக்கிற‌து என்றுதான் என‌க்கு தோன்றுகிற‌து. இந்தியாவின் புதிய‌ அமைச்ச‌ர‌வை கூட்ட‌த்தில் இந்திய ஜ‌னாதிப‌தி பிர‌தீபா ப‌ட்டேல் ஆற்றிய‌ உரையில் இல‌ங்கை த‌மிழ‌ர்க‌ளுக்கு ச‌ம‌ உரிமை கிடைக்க‌ வேண்டும் என்ற‌ ரீதியில் ஏதோ பேசியிருந்தார். அதாவது, ஈழத்தமிழரின் பிரச்சனையில் தங்கள் தலையீடு இருக்க வேண்டுமென இந்தியா விரும்புகிறது.இந்தியாவின் நோக்க‌ம் ஒப்ப‌ந்த‌த்தை புதுப்பிப்ப‌தாக‌ இருந்தாலும், இல‌ங்கை அர‌சு இதை அனும‌திக்க‌ப்போவ‌தில்லை. இன்னும் சொல்ல‌ப்போனால், அந்த‌ ஒப்ப‌ந்த்தில் உள்ள‌ த‌மிழ்மாகாண‌ங்க‌ளுக்கான‌ உரிமைக‌ளைவிட‌ குறைவான அதிகாரங்களையே 13வ‌து திருத்த‌ ச‌ட்ட‌ம் என்ற‌ பெய‌ரில் திணிக்க‌ நினைக்க‌லாம். ஆனால், வ‌ட‌க்கும் கிழ‌க்கும் இணைக்க‌ப்ப‌ட‌மாட்டாது என்று இல‌ங்கை அரசு மீண்டு மீண்டும் கூறிவ‌ருகிற‌து.

    ஆக‌, இந்தியாவும் ச‌ரி இல‌ங்கையும் ச‌ரி, ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளுக்கு எந்த‌ ஒரு அதிகாரப்ப‌ர‌வ‌லாக்க‌த்துட‌ன் (Internal Self-Determination)கூடிய‌ தீர்வையும் த‌ர‌ விரும்ப‌வே மாட்டார்க‌ள். அதில் இருவ‌ருமே மிக‌ தெளிவாக‌ இருக்கிறார்க‌ள். ஆனால், இங்கே தான் முர‌ண்பட‌வும் போகிறார்க‌ள் என்றும் என் சிற்ற‌றிவுக்கு தோன்றுகிற‌து. ராஜீவ்_ஜெயவர்த்தனா ஒப்பந்த‌த்தை புதுப்பிக்க வேண்டும் இந்தியாவிற்கு. (அத‌ற்காக‌, ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளின் ந‌ல‌ன்க‌ளில் ஏதோ இந்தியாவுக்கு அக்க‌றை இருப்ப‌தாக‌ நினைத்துவிடாதீர்கள்) அதை, எதிர்க்க வேண்டும் என்பது குறிகோள் இலங்கைக்கு. உரிமைக‌ள் ம‌றுக்க‌ப்ப‌ட்டு அடிமைப்ப‌ட்டு கிட‌ப்ப‌து நாங்க‌ள். ஆனால், ஆளாளுக்கு எங்க‌ள் மீது ஏதாவ‌து தீர்வுத்திட்ட‌த்தை திணிப்ப‌திலேயே குறியாக இருக்கிறார்க‌ள். இந்த‌ யதார்த்த‌ம் கூட‌ புரியாத‌வ‌ன‌ல்ல‌ ஈழ‌த்த‌மிழ‌ன். ஆனால், இந்த‌ நிலையில் நாங்க‌ள் எங்கே யதார்த்த‌மாக‌ சிந்திக்க‌வில்லை என்று நினைக்கிறீர்க‌ள்?

    • மன்னிக்கவும். வரதராஜப்பெருமாள் முதல் மந்திரி ஆக்கப்பட்டார். என் கவனக்குறைவால் அது பிரதமமந்திரி என்று குறிப்பிட்டு விட்டேன்.

    • மன்னிக்கவும். வரதராஜப்பெருமாள் முதலமைச்சர் ஆக்கப்பட்டார். என் கவனக்குறைவால் பிரதமம்ந்திரி என்று குறிப்பிட்டுவிட்டேன்.

    • ரதி,

      ஒப்பந்த விஷயத்தில் நமக்கு நேர் எதிர் நிலை இருக்கிறது. உங்கள் நிலை எனக்கு புரிகிறது, என் நிலையும் உங்களுக்கு புரியும் என்று நம்புகிறேன். உதாரணமாக ஒப்பந்தம் தோல்வி அடைந்ததற்கு புலிகள் காரணம் இல்லை என்ற பொருள்படும்படி எழுதி இருக்கிறீர்கள். இதைப் பற்றி நான் என்ன சொல்வேன் என்று உங்களுக்கு தெரியாதா என்ன?இசைவு ஏற்பட வழி இல்லை என்னும்போது வேறு ஏதாவது பேசுவோமே?

  30. வித்தகன்,

    //இந்தியத் தமிழர்களின் எண்ணத்தைப் பற்றி உங்களுக்குக் கவலை இல்லையென்று ஏன் பொய் சொல்கிறீர்கள்?//

    நான் இந்திய தமிழர்கள் என்று ஒட்டு மொத்தமாக சொல்லவில்லை. வித்தகன் என்ற தனிமனிதரின் கருத்து பிரபாகரன் விடயத்தில் எனக்கு ஒரு பொருட்டில்லை என்று தான் சொல்கிறேன்.

    /பிரபாகரனும் நடேசனும் சூசையும் இறந்ததற்கு எந்த ஒரு நாடும் வருந்தவில்லையே. புலிகள் உயிருக்கு மன்றாடும் போது ஒரு நாடு கூட அவர்கள் பிழைக்க வேண்டும் என்று முயற்சிக்கவில்லையே! //

    புலிகள் ஒருபோதும் தங்கள் உயிருக்காக மன்றாடியதில்லை. அவர்கள் தங்கள் முடிவு இதுதான் என்று முடிவெடுத்த பின்னர்தான் களமிறங்கி பலவருடங்களாக போராடினார்கள். சூசை இறுதியாக சர்வதேசத்திடம் விடுத்த வேண்டுகோள் இருபத்தையாயிரம் மக்கள் காயமுற்றிருக்கிறார்கள் அவர்களை காபாற்றுங்கள் என்றுதான். சர்வதேசம் இன்றுவரை ஈழத்தில் அப்பாவித்தமிழனையே சிங்கள ராணுவவெறியர்களிடமிருந்து காப்பாற்ற எந்த முயற்சியும் எடுத்ததில்லை. புலிகளை தான் காப்பாற்றுவார்கள் என்று நாங்கள் நம்பிக்கொண்டிருந்தோமா? உங்களுக்கு ஈழத்தமிழர் விடயத்தில் யதார்த்தம் புரிபடவே மாட்டேன் என்கிறது.

    புலிகள் என்றால் நஞ்சை கக்கும், ஈழத்தமிழர்கள் விடயத்தில் அபத்தமான கற்பனையுள்ள உங்களிடம் (வித்தகனிடம்) பேசிப் பயனில்லை. புலிகளின் தியாகம் அவர்களை மதிப்பவர்களுக்கு புரியும்.

    • //இறுதியாக சர்வதேசத்திடம் விடுத்த வேண்டுகோள் இருபத்தையாயிரம் மக்கள் காயமுற்றிருக்கிறார்கள் அவர்களை காபாற்றுங்கள் என்றுதான்//

      பக்கத்து இலைக்கு பாயாசம் கேக்குற மாதிரி இருக்கு….

  31. பதிவுலக நன்பர்களே – இந்த விவாதத்தில் நீங்களும் கலந்து கொள்ளுங்களேன் – 1
    இதுவரை நான் சந்தித்த சமுகத்தின், படித்த/அறிந்த விசயங்களில் தாக்கத்தில் எனக்கென்று சில கருத்துகள் அல்லது குழப்பங்கள் உருவாகி இருக்கிறது. இதில் சரியானவை அல்லது பெருபாண்மையானவருக்கு நன்மை ஏற்பட கூடியவை பற்றி அறியும் சிறு முயற்ச்சி தான் இந்த பதிவு.
    http://oviya-thamarai.blogspot.com/2009/06/1.html

  32. The information about 21st May 2001 is totally incorrect. I was in India. I was working in a Pvt. Firm. On that day, we didn’t go to work. The next day we were able to go to the work. When Rajiv’s body was creminated we had a Marriage of one of our relative and that was not distrubed anyone. On that day (24th May 1991) there were many more marriages happened. Even Karunanidhi won’t accept that 2 Lakhs DMK supporters were attacked in the name of Rajiv’s killing.

  33. ராஜீவ் யர்ர் அந்த மனிதன் ? எனக்கு தெரியாது , தெரிய வேண்டியது இல்லை 

  34. நானும் இலங்கை தமிழர்களை எண்ணி வருந்துகிறேன் .அவர்கள் ௫௦ வருடங்களாகப் பல வித இன்னல்களை அனுபவித்து வருகிறார்கள் .குட்டிமணியை சிறையில் கொடூரமாக கொன்றது போன்ற பல நிகழ்வுகள் என் மனதை மிகவும் பாதித்தது .நானும் ஆரம்பத்தில் பிரபாகரனைப் பற்றி உயர்வாக எண்ணி இருந்தேன் .ஆனால் பின்பு படிப்படியாக சகப் போராளிகளை கொன்றுக் குவித்தது .எல்லாவற்றுக்கும் மேல் காந்தியவாதியான அமிர்தலிங்கத்தைப் படுகொலை செய்தது மிகவும் மோசமான தவறு.அவர் சர்வாதிகாரியாக ஆட்சி செய்ய விரும்பினார்.ராஜீவ் படுகொலையை எந்த விதத்திலும் நியாயப் படுத்தமுடியாது .ராஜீவ் செய்தது சிலருக்கு பிடிக்காமல் இருக்கலாம்.ஆனால் படுகொலை அதற்க்கு தீர்வாகாது இன்றும் சோனியாவும் கருணாநிதியும் சேர்ந்து புலிகளை அழித்ததை வன்மையாக கண்டிக்கிறேன்

  35. உங்களின் எழுத்தில் உண்மை அப்படியே இருக்கிறது எழுத்து நடைக்குகூட ஒரு வார்த்தைகளை புனைவாக எழுதவில்லை மிகவும் நன்று தோழரே…..

Leave a Reply to Kari Nilavan பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க