Friday, July 19, 2024
முகப்புஉலகம்ஈழம்ஈழம்: இலண்டன் வானொலியில் தோழர் மருதையன் உரையாடல் - ஆடியோ

ஈழம்: இலண்டன் வானொலியில் தோழர் மருதையன் உரையாடல் – ஆடியோ

-

புதிய திசைகள் என்ற தமிழ் பேசும் மக்கள் புலம் பெயர் நாடுகளைச் சார்ந்த அமைப்பொன்று லண்டன் சூரியோதயம் – சன்றைஸ் (SUNRISE) வானொலியில் உரையாடல் ஒன்றை கடந்த வெள்ளி இரவு (20.11.09) அன்று நடத்தியது. மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் பொதுச்செயலர் தோழர் மருதையன் உரையாடலில் கலந்துகொண்டார். இதன் ஆடியோ தொகுப்பை கீழே இணைத்துள்ளோம். ஈழம் தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு தோழர் மருதையன் தெரிவித்த கருத்துக்கள் சுமார் இரண்டு மணிநேர உரையாடலில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. கேளுங்கள், கருத்துக்களை தெரிவியுங்கள்.

Maruthaiyan_Interview_Nov_21.mp3

DOWN1

vote-012

தொடர்புடைய பதிவுகள்


இன அழிப்பின் பின்னணியில்

  • தரவிறக்கம் செய்ய உடனடியாக வாய்ப்பு ஏற்படுத்தி தந்ததற்கு வினவுக்கு நன்றி.

   விடுதலைப்புலிகள், இலங்கை அரசு, இந்திய அரசு, புலம்பெயர்ந்தவர்களின் நடவடிக்கைகள், வர்க்கத்தின் போராட்டத்தின் ஒரு அங்கமாக தேசிய போராட்டம் என பல இரண்டு மணி நேர உரையாடல்கள் பல விசயங்களை விவாதித்து, ஒரு தெளிவான புரிதலை தந்துள்ளது.

   ஈழத்தின் கடந்த கால வரலாற்றை திரும்பி பார்த்து, ஒரு மீளாய்வு செய்வதின் மூலம், உண்மையான நண்பர்கள் யார்? எதிரிகள் யார்? துரோகிகள் யார்? என்பதை புரிந்து கொள்வதற்காக தான் இந்த உரையாடலுக்கான தேவை என அறியும் பொழுது, மகிழ்ச்சியாக இருக்கிறது.

 1. புலம் பெயர்ந்த தமிழர்களீடையே நமது நிலைப்பாடுகளைத் தெளிவாகப் புரிந்து கொள்ள ஒரு நல்ல வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த சூர்யோதயத்திற்கு நன்றி. மயில்.

  • தோழரே இன்று அதிகாலையில் 4 மணியிலிருந்து நேரலையாக இதை கேட்கும் வாய்ப்பை பெற்றேன். நல்ல முயற்சி . தகவல் தொழில்நுட்பம் வ்ழங்கிவரும்
   வாய்ப்பினை இது போல சிறப்பாக பயன்படுத்துதல் வேண்டும். தோழர் மருதையன் ஈழத்தை பற்றி மற்றுமல்லாது, இந்திய உலக நிலைகளை பற்றி ஒரு
   பறவைப்பார்வையினை மார்க்சிய நோக்கில் எளிமையாகவும் சிறப்பாகவும் அளித்துள்ளார். இது ஒரு நல்ல துவக்கம்,

   வானொலி நிலையத்திலிருந்து கலந்துரையாடலில் பங்கு பெற்றவர்கள் இன்னும் தயாரிப்புகளுடன் இருந்திருக்கலாம் என்று கருதுகிறேன், (கேள்விகள் மற்றும்
   குறிக்கீடுகள் ) அவர்களுக்கு இது முதல் முயற்சி என்பதால் இனி வரும் காலங்களில் சிறப்பாக செயல்படுவார்கள் என நம்புகிறேன்.

   எப்படியாகினும் புதிய திசைகளின் முன்முயற்சி போற்றத்தக்கது. துன்பியல் உணர்வுகளில் மூழ்கிவிடாமல் அடுத்து என்ன செய்யவேண்டும் என்ற துடிப்பும்,
   சரியான நட்பு சக்திகளை அடையாளம் காண்பதில் கவனம் செலுத்துவதும் பிற முற்போக்காளர்களுக்கு வழிகாட்டுதலாக அமையும். பரந்துபட்ட புலம் பெயர் ஈழத்
   தமிழர்களை அரசியல் படுத்தி அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச்செல்ல இந்த நிகழ்ச்சி ஒரு துவக்கமாக அமையும் என்பதில் எனக்கு ஐயமில்லை

 2. ஆர்குட்டில் நடைபெற்று வரும் விவாத சுட்டி கீழே உள்ளது
  ஆர்குட் புரொஃபைல் உள்ள தோழர்கள் விவாதத்தை கவனியுங்கள்
  பங்கேற்று விவாதியுங்கள்.

  http://www.orkut.co.in/Main#CommMsgs?cmm=37515815&tid=5403197974184673816&na=4&nst=1&nid=37515815-5403197974184673816-5404960117658128805

 3. ஆரிய பார்ப்பனிய இந்தியாவால், தமிழ்நாடு ஒடுக்கப்படுகின்றது. நேரடியான ஆயுதந்தாங்கிய முறையில் அல்லாமல், தமிழ்நாட்டின் மீதும் பிற தேசிய இனங்களின் மீதும் இந்தியத் தேசிய அரசின் தேசிய இன ஒடுக்குமுறை இந்தியாவில் நிலவுகின்றது. இவ்வாறான, இன ஒடுக்குமுறை தம்மீது ஏவப்படுகின்றது என்ற விழிப்புணர்வு பெறாத நிலையிலேயே பெரும்பாலான தேசிய இனங்கள் இந்தியாவில் ஒடுக்குமுறையை அனுபவிக்கின்றன.

  காசுமீர், அசாம், நாகாலாந்து உள்ளிட்ட வடகிழக்குப் பகுதிகளின் இவ்வொடுக்குமுறைக்கு எதிரான நேரடி ஆயுதந்தாங்கியப் போராட்டம் நடைபெறுவதால், இந்தியத் தேசிய அரசு அதனை ஆயுதந்தாங்கி ஒடுக்கி வருகின்றது. தமிழ்நாட்டில், இந்தியத் தேசிய அரசின் தேசிய இன ஒடுக்குமுறை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்ற தமிழ்த் தேசிய அமைப்புகளால் இந்தியத் தேசியத்திற்கு அச்சுறுத்தல் நிலவுகின்றது. எனவே, தமிழ்த் தேசிய சக்திகளை, தமிழ்த் தேசிய அரசியலை, ஆரிய இனவெறி நாடான இந்தியா “பிரிவினைவாதம்” என்றும், “பிராந்தியவாதம்” என்றும் இழிவுபடுத்துகின்றது. “தமிழ்த் தீவிரவாதம்” என்று மக்களுக்கு அச்சமூட்டுகின்றது. இந்தியத் தேசியத்தைத் திரை கிழிப்பது “நாங்க தானுங்கோ” என்று வாய்ச்சவடால் அடிக்கும், ஆளும் வர்க்கத்தின் துணைப் படையான ம.கஇ.க., இந்தியத் தேசிய ஆளும் வர்க்கத்தின் குரல்களை மார்க்சிய சொல்லாடல்களைக் கொண்டு வாந்தி எடுக்கின்றது.

 4. இந்திய வல்லாதிக்கத்தை எதிர்த்து நீங்கள் ஆயுதப்போரை நாடாதுகிறீர்களா? உங்களின் மக்கள் இராணுவம் ஆயுதம் ஏந்தி உள்ளதா? ம க இ க பண்பாட்டு இயக்கம் எனில், உங்கள் ஆயுத இயக்கம் எது?
  இந்திய வல்லதிக்கதுக்கு எதிராக ஆயுதப் போர் நடாத்தக் கோரும் உங்களை தமிழ்னாட்டுக் காவற் துறையும் இந்திய உளவு அமைப்புக்களும் எவ்வாறு விட்டு வைதிருக்கின்றன?

 5. really this is an wonderful effort taken by the refugees living in europe and aboroad. this encounter with Mr. maruthaiyan is a starting point and we need to go ahead with him and with his movement a long way. please please make use of your meadi to continue to contace mr marithayyan and his movement and thus through your media raise an awareness in our displaced tamils of lanka island. thousand times i thank you for this wonderful effort. i got to know many many things from his sharing. we tamils need a broad and analytical outlook in looking at and understanding our problem – amal

  thankyou dears in London and thank you vinavu

  • Hey, Indian SLUM DOG, stop lecturing us.
   Do not assume all Eelam Tamils are refugees. They came to Europe and other western countries to save their lives – not like you (H)Indian scum.
   You Indians have the reputation as street dogs in many countries in the world, because of your characteristics and manners.

 6. தோழர் மருதையனுடைய நேர்காணல் மிகச்சிறப்பாக இருந்தது
  சூரியோதையம் வாணொலிக்கு வாழ்த்துக்க‌ள்.

 7. \\\\ஆர்குட்டில் நடைபெற்று வரும் விவாத சுட்டி கீழே உள்ளது
  ஆர்குட் புரொஃபைல் உள்ள தோழர்கள் விவாதத்தை கவனியுங்கள்
  பங்கேற்று விவாதியுங்கள்.

  http://www.orkut.co.in/Main#CommMsgs?cmm=37515815&tid=5403197974184673816&na=4&nst=1&nid=37515815-5403197974184673816-5404960117658128805////
  மேற்கூறிய சுட்டிக்கு தோழ‌ர்க‌ள் வ‌ந்து த‌ங்க‌ளது நேர‌த்தை வீணாக்க‌ வேண்டிய‌தில்லை என்ப‌து என‌து கருத்து.மேலும் அங்கு சில‌ தோழ‌ர்க‌ள் ம‌ற்றும் ஆத‌ர‌வாள‌ர்க‌ள் இருப்ப‌தால் அவ‌ர்க‌ளே போதுமான‌வ‌ர்க‌ள். அதுவும் அங்கு விவாதம் மற்றும் விவாதப் பொருள் என்னவென்று தெரியாத ஒரு சில‌ லூசுக‌ள் தான் திரிந்து கொண்டிருக்கிற‌து.

  ந‌ன்றி.

 8. தோழர்.மருதையன்
  தங்களின் உரையாடல் நிகழ்ச்சியை கேட்டேன்.தங்களின் கருத்துக்களோடு உடன்படுகின்றேன்.புலிகளின் தவறுகளை சீர்தூக்கி பார்க்கவேண்டியது கட்டாயமானாலாலும்,தற்பொழுது தமிழீழத்திற்க்கு எதிராக உளவு அமைப்புகள் தொடங்கியிருக்கும் யுத்தம் கவனத்தில் கொண்டு பார்கையில் புலி எதிர்ப்பு என்பது தமிழீழத்திற்க்கு எதிரானதாக தான் பயன்படும்.
  இதற்க்காக புலிகளின் பாசிசத்தை ஏற்க்க சொல்லவில்லை.மாறாக தற்போதய சூழலையும் கருத்தில் கொண்டு புலிகளுக்கு அறிவுரை கூறுவது போன்றோ அல்லது அவர்களின் தோல்விக்கு காரணம் என்ன என்பதை மக்களுக்கு புரியவைக்கவேண்டும்.
  தாங்களும் இதை கருதியே பேசியிருப்பிர்கள் என் நம்புகிறேன்.ஆயினும் தாங்கள் பேசிய தொனி ஒரு கம்யுனிசம் பற்றி அறியாதவர்களுக்கு குழப்பத்தயே தரும்.
  தற்ப்போதய சூழழில் தாங்கள் பேசியது தமிழீழ மக்களுக்கு பயன்படவேண்டும் உளவு அமைப்புகளுக்கு அல்ல.அந்த வானொலி நிலையத்தை பற்றி, அதை யார் கட்டுப்பாட்டில் இயங்குகிறது பற்றியும் அறிந்துதான் பேசியிருப்பீர்கள் என நம்புகிறேன்.
  தற்போதய சூழலில் புலிகளோடு சேர்ந்து போராடும் ஒரு பொது உடமை அமைப்பு என்ற கோஷமே மக்களின் தற்போதய எழுச்சியை கட்டியமைக்க பயன்படும் அல்லாமல் புலி அல்லாத ஒரு போராட்டகுழு என்ற பேச்சு தற்போதய சூழலில் எழுச்சியை கட்டுபடுத்த வல்லரசுகளுக்கே பயன்படும்.ஆதலால் புலிஎதிற்ப்பு அல்லாமல் புலி விமர்சனம் புலிகளுக்கு அறிவுரை என்பதே பயனளிக்கும்.

  தயவு செய்து தாங்கள் பேசியதை சாதாரண புலம்பெயர்ந்த தமிழனாக தற்போதய உளவு அமைப்புகள் உள்ள சூழ்நிலையில் சிந்தித்து பாருங்கள்.

  தோழரை தமிழீழத்திற்க்கு எதிராக யாரும் பயன்படுத்தகூடாது என விரும்பும் தோழன்.

 9. பல வருடங்களுக்கு பின்னர் மருதையனின் நிதானமான குரலில் அமைந்த செறிவான பேச்சை கேட்க முடிந்ததில் மகிழ்ச்சி.ஈழ தமிழர் போகும் திசை தெரியாமல் அலை மோதும் சூழலில் இந்த கருத்துக்கள் நிச்சயமாக தொலைதூர வெளிச்சம்.

Leave a Reply to red பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க