privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஐரோப்பாதோழர் ஸ்டாலின் - உலக முதலாளித்துவத்தின் சிம்ம சொப்பனம் !

தோழர் ஸ்டாலின் – உலக முதலாளித்துவத்தின் சிம்ம சொப்பனம் !

-

தோழர் ஸ்டாலின்
உலக முதலாளித்துவத்தின் சிம்ம சொப்பனம்

டிச 21, தோழர் ஸ்டாலினின் 130 வது பிறந்த நாள்.

தோழர் ஸ்டாலின் – அவர் உலக முதலாளித்துவத்தின் சிம்ம சொப்பனம்.

ஐரோப்பாவைப் பிடித்தாட்டுகிறது ஒரு பூதம், கம்யூனிசம் என்னும் பூதம் எ
ன்று கம்யூனிஸ்டு கட்சி அறிக்கையிலே குறிப்பிட்டாரே மார்க்ஸ்,
உலக முதலாளி வர்க்கத்தைப் பொருத்தவரை,
அந்த கம்யூனிச பூதத்தின் மனித உருவம் – ஸ்டாலின்.

ஏகாதிபத்திய மிருகங்களும், முதலாளித்துவக் கிருமிகளும் ஊடுருவ முடியாத
கம்யூனிசத்தின் இரும்புக் கோட்டை
முதலாளித்துவ அறிவு ஜீவிகளுக்கு அரக்கன்,
உலகப் பாட்டாளி வர்க்கத்துக்குக் ‘காவல்தெய்வம்’
………………..
எதிரிகளிடம் வெறுப்பையும் மக்களிடம் பெருமிதத்தையும்
ஒரே நேரத்தில் தோற்றுவித்த ஒரு பெயர் உண்டென்றால்
அந்தப் பெயர் – ஸ்டாலின்.
………………..
பாட்டாளி வர்க்கத் தலைவர்களிலேயே அதிகம் தூற்றப்படுபவர் அவர்தான்.
அவரை வெல்ல முயற்சி செய்தார்கள்,
முடியாததால் கொல்ல முயற்சி செய்தார்கள்.

பேனைப் பெருமாளாக்கி அவரைத் தூற்றினார்கள்.

பொய்களை ஆதாரமாகக் கொண்டே அவருக்கு எதிராக
ஆயிரக்கணக்கான நூல்களை அச்சிட்டு வெளியிட்டார்கள்.

பிறகு அந்த நூல்களின் எண்ணிக்கையை ஆதாரமாகக் கொண்டே
அந்தப் பொய்களையெல்லாம் உண்மை என்று சாதித்தார்கள்.

அவர் மறைந்து ஆண்டுகள் பல கடந்த போதிலும்,
எதிரிகளின் வெறி இன்னும் அடங்கவில்லை.
………………..
வரலாற்றில் கொடிய மக்கள் விரோதிகளுக்கும்
வில்லன்களுக்கும் கூட சலுகை வழங்கி

அவர்களுடைய தவறுகளை அனுதாபத்துடன் பரிசீலிக்கும்
அறிவுஜீவிகளின் மூளைகள்,

ஸ்டாலின் என்ற சொல்லைக் கேட்டவுடன் மட்டும்
முறுக்கிக் கொண்டு வெறுப்பைக் கக்குகின்றன.

நரமாமிசம் தின்னும் காட்டுமிராண்டியைப் போல அவரைச் சித்தரிக்கின்றன.
………………..
மார்க்சியம் லெனினியம் மா சே துங் சிந்தனை அனைத்தையும் மெச்சுவதாகக் கூறிக்கொண்டே
கட்சிக்குள் வர மறுக்கும் அறிவாளிகள்,
தங்களை நசுக்கிப் பிழியும் எந்திரமாகக் கட்சியைக் கருதுபவர்கள்,
கட்டுப்பாடுக்கு அஞ்சுபவர்கள்,
ஜனநாயகம் என்ற பெயரில்
சாதாரண தொழிலாளிகளின் உத்தரவுக்கெல்லாம் நாம் கட்டுப்படவேண்டியிருக்குமே என்று அஞ்சுபவர்கள் –

இவர்கள் யாருக்கும் ஸ்டாலினைப் பிடிப்பதில்லை.
………………..
கம்யூனிஸ்டு முன்முயற்சி
கம்யூனிஸ்டு வேலைத்திறன்
கம்யூனிஸ்டு கட்டுப்பாடு
கம்யூனிஸ்டு ஒழுக்கம்
கம்யூனிஸ்டு தியாகம்
என்ற சொற்களுக்கான இலக்கணத்தையெல்லாம்
அவருடைய தலைமையின் கீழ்தான்
இலட்சக்கணக்கான ரசிய போல்ஷ்விக்குகள் உருவாக்கிக் காட்டினார்கள்.
………………..
அவருடைய தலைமையின் கீழ் சோசலிசத்தை
கட்டியெழுப்புவதற்காகக் குனிந்த ரசியா,
நிமிர்ந்தபோது இட்லரின் குண்டுகளை நெஞ்சில் வாங்கிக்கொண்டது.

ஐரோப்பாவும் அமெரிக்காவும் இரண்டு நூற்றாண்டுகள்
நடந்து எட்டிய முன்னேற்றத்தை,
இருபதே ஆண்டுகளில் பறந்து எட்டியது.

200 இலட்சம் ரசிய மக்களை இட்லரின் போர்வெறிக்குப் பலி கொடுத்து
உலக மக்களையே பாசிசத்திலிருந்து காப்பாற்றியது.
………………..
மனிதகுலத்தின் ஒப்புயர்வற்ற இந்த வரலாற்றுப் பெருமைகள் அனைத்துக்கும்
உலகத்தின் எந்த மூலையில் இருக்கும் ஒரு கம்யூனிஸ்டும்
இன்று நெஞ்சு நிமிர்த்தி உரிமை கொண்டாட முடிகிறதென்றால்,
அந்த கவுரவத்தை நமக்கு வழங்கியவர் தோழர் ஸ்டாலின்.
………………..
வரலாற்றில் மனித குலம் கண்டிராத உழைப்பு,
ஞானியர்களின் சிந்தனைக்கும் எட்டியிருக்க முடியாத அறம்,
கவிஞர்கள் கற்பனையாலும் தீண்ட முடியாத தியாகம்
இவையனைத்தையும் நம் கண்முன்னே நிதர்சனமாக்கியது சோசலிச ரசியா.

அந்த சோசலிச ரசியாவின் புதல்வனும் தந்தையும் – தோழர் ஸ்டாலின்.
அதனால்தான் அவர் கம்யூனிசத்தின் குறியீடு.
அதனால்தான் அவர் ஏகாதிபத்தியத்தின் குறியிலக்கு.
………………..
கம்யூனிசத்தை அது பிறந்த மண்ணிலேயே புதைத்து விட்டதாக களி வெறி கொண்டு பிதற்றிய முதலாளித்துவம்,
இதோ மரணப் படுக்கையில் கிடக்கிறது.
அதன் மலமும் மூத்திரமும் பரப்பும் வீச்சத்தால்
மனித சமூகமே மூச்சுத் திணறுகிறது.

இருப்பினும் சாக மறுக்கும் முதலாளித்துவம், நம்மைக் கொல்கிறது.

பட்டினிச்சாவுகள்
தற்கொலைகள்
கொலைகள்
பயங்கரவாதத் தாக்குதல்கள்
ஆக்கிரமிப்புகள்
நரவேட்டைகள்
அனைத்தும் ஒரே காரணம் – முதலாளித்துவம்.

மரணப்படுக்கையில் கிடக்கும் முதலாளித்துவம்,
தன்னுடைய மரணத்தைத் தள்ளிப்போடுவதற்காகவே
மனிதகுலத்தை நசிவுக்கும் அழிவுக்கும் தள்ளும் முதலாளித்துவம்!
………………..
முதலாளித்துவம் வென்று விட்டதாகவும்,
கம்யூனிசத்தைக் கொன்றுவிட்டதாகவும்

செய்யப்பட்ட பிரகடனங்கள் பொய் என்று
நாம் நடைமுறையில் நிரூபிக்கும் வரை,

அதாவது முதலாளித்துவத்தை அதற்குரிய சவக்குழிக்குள் இறக்கி
உப்பை அள்ளிப் போடும் வரை,

கம்யூனிசம் செத்துவிட்டதாக
அதன் வாயிலிருந்து ஒரு முனகலாவது கேட்டுக் கொண்டுதான் இருக்கும்.
………………..
கம்யூனிசம் வெல்லும்வரை முதலாளித்துவம் கொல்லும்.
முதலாளித்துவ லாபவெறியின் கோரதாண்டவத்தை,
பாசிசம் உலகமக்கள் மீது தொடுத்த ஆக்கிரமிப்புப் போரை,
கம்யூனிசத்தின் வெற்றியின் மூலம்தான் முறியடித்தார் தோழர் ஸ்டாலின்.

பாசிசம் தோற்றதனால் கம்யூனிசம் பிழைத்துவிடவில்லை.
மாறாக, கம்யூனிசம் வென்றதனால்தான் பாசிசம் தோற்றது.
அந்தக் கம்யூனிச வெற்றியின் சின்னம் தோழர் ஸ்டாலின்.
………………..
முதலாளித்துவத்தைக் கொன்று புதைத்த மண்ணில்,
தோழர் ஸ்டாலினின் புகழை ஒரு மலர்ச்செடியாய் நாம் நடுவோம்.
அதற்கு முன், அவர் நினைவு தரும் உத்வேகத்தால்
முதலாளித்துவத்தைக் கொன்று புதைப்போம்!

-மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு.

“தோழர் ஸ்டாலின் – வெல்ல முடியாத சகாப்தம்”

  1. முதலாளித்துவ ஓநாய்க்கூட்டம் தோழர் ஸ்டாலினை சர்வாதிகாரி என்பதற்காக பெருமைகொள்வோம். பாசிசத்தின் கொடுங்கரங்களை வெட்டிய எமது தோழரின் கரங்களின் தேவை இன்னமுமிருக்கிறது. பாட்டாளிவர்க்க சர்வாதிகாரமே ஏகாதிபத்தியத்துக்கு பாடைகட்டும். மாக்சிய லெனினியத்தின் வழியில் முதலாளித்துவத்துக்கு இரும்புத்தடையாயிருந்த தோழரின் வழியில் பணிப்போம்.

    ஸ்டாலினின் ஆட்சிக்காலத்தில் மக்களிடத்தில் கொண்டுவரப்பட்ட , உருவாக்கப்பட்ட வளர்ச்சி இன்று எந்த முதலாளித்துவநாட்டில் இருக்கிறது.
    சோவியத்தை இரும்புத்திரையென்று இகழ்ந்தவர்களின் டிராயர்கள் கிழிந்து கிடக்கின்றன.
    முதலாளித்துவம் மக்களைக்கொல்லும்!
    மக்களைக்காக்கும் கம்யூனிசமே வெல்லும்!

  2. வார்த்தைகளால் ஒரு வரலாற்று சித்திரம்.
    புரட்சிகர வாழ்த்துக்கள்

  3. தோழர்களுக்கு அருமையான இந்த பதிவின் மூலம் என கருத்துக்கள் சில,

    ஸ்டாலினை ஒரு சர்வாதிகாரியாகவும் ஏன் ஒரு சைக்கோவாகவும் ஒரு கொடுங்கோலானாகவே இந்த உலகம் பார்க்கிறது. ஆனால் அறிவாளிகள் என்று த்ங்களாஇ கூறிக்கொன்டு ஸ்டாலினை தூற்ருபவர்கள் கூட றிந்த் ஒரு விடயம்,த்னக்கு எதிரான கொள்கைகளாஇ கொண்டவர்கள் மீது அமெரிக்க உளவு துறை சுமத்தும் வீன் பழிகளும் அதற்க்கு செலவிடப்படும் பணமும் அறிவும்.
    சார்லி சாப்ளின் முதல் கம்யுனிஸத்தை ஒழிக்கிறோம் என்று பல அறிவு ஜீவிகளின் மீது அமெரிக்க உளவு துறை போட்ட வழக்குகள் ஜோடிப்புகள், பொய் புகர்களை பின்பு அமெரிக்க பத்திரிக்கை தூறையே வெளியே கொண்டுவந்த்து.

    உளவு துறையில் வேலை செய்பவர்கள் அடியாட்கள் , அவர்கள் எந்த அளாவிற்கு மற்ற் நாடுகளில் பொய் பிராச்சாரம் மேற்கொண்டுள்ளனர் என்பதும் புத்த்கமாகவே வந்துவிட்டது. அத்ன் நீட்சியான ஸ்டாலின் மீதான அவதூறுகளும், பொய் பிராச்சரங்கலூம் நீக்கபடமால் நம் மூளையில் அமெரிக்கவின் துர்கருத்துகக்ள் சுமந்த்படி அறிவாளிகள் என்று சொல்லுகொள்வது இன்றைய பேஷ்னாகி போய்பிட்டது.

  4. “முதலாளித்துவத்தைக் கொன்று புதைத்த மண்ணில்,

    தோழர் ஸ்டாலினின் புகழை ஒரு மலர்ச்செடியாய் நாம் நடுவோம்.

    அதற்கு முன், அவர் நினைவு தரும் உத்வேகத்தால்

    முதலாளித்துவத்தைக் கொன்று புதைப்போம்”

    ஆம் கம்யூனிசம் மலரட்டும், உழைப்பவர் உலகம் பரவட்டும், இந்நாளில் உறுதியேற்போம்.

  5. இவ்வோளோ .கம்மிநிஸ்ட் எதிர்பாளர்கள் மத்தியில் .நானும் அவரை தப்பாக நம்பியது தப்பு தான் .

  6. மிக சிறப்பான பதிவு. தோழர் ஸ்டாலினை பற்றி தெரியாதவர்களுக்கு இது நல்ல அறிமுகம்.

    கம்யூனிச பூதத்தை கண்டு அஞ்சி பாசிசத்துடன் கள்ள உறவு வைத்த ஜனநாயகவாதிகளும்….
    உளவுத் துறையிடம் காசு வாங்கி கம்யூனிச எதிர்பு புத்தகமாய் எழுதித்தள்ளிய அறிவு சீவிகளும்…
    தனது கல்லறைக்குள் புரளுகின்றனர்…
    ஸ்டாலினை ரத்தவெறி பிடித்த சர்வாதிகாரி என்று இன்றுவரை தூற்றிவரும் ஊடகங்களும்..
    அதையே இலக்கிய நடையில் வாந்தியெடுக்கும் அற்பசீவிகளும்..
    அச்சத்தில் பிளந்த வாய் மூட மறந்தனர்…

    ஆம்..
    ரஸ்ய தனியார் தொலைக்காட்சி நடத்திய நாடுதழுவிய வாக்கெடுப்பில்
    தனது தலைசிறந்த நாயகனாக ரஸ்யமக்களால் தேர்தெடுக்க பட்டவர்
    லெனினில்லை..
    டிராட்ஸ்கியில்லை..
    குருச்சேவ், கார்பசேவ், எவருமில்லை
    அந்த நாயகன் ஸ்டாலின்..ஸ்டாலின்…ஸ் – டா – லி – ன்

    மரணித்துக்கொண்டிருக்கும் முதலாளித்துவத்தை
    மரணத்தைக்காட்டிலும் அச்சுறுத்தும் எங்கள் பேராசானின் பெயர்…
    இப்போது உலகின் நரம்புகளில்..
    ஆகா! அது எவ்வளவு இனிமையாக ஒலிக்கின்றது.

  7. சும்மா குன்ஸாவா அடிச்சுவிட கூடாது. அந்த வாக்கெடுப்பில் ஸ்டாலின் மூன்றாவது இடத்தையே பிடித்தார். ஆனால் வாக்கெடுப்பு நிகழும் பொழுது கடைசி சில வாரங்கள் வரை முன்னனியில் இருந்த ஸ்டாலினை முதலாளித்துவ ஊடங்களும் & நாடுகளும் அஞ்சி நடுங்கி பின்னுக்கு இழுக்க ப்ரம்மபிரயத்தனம் செய்தன. வாக்கெடுப்பு நடத்திய தனியார் தொலைகாட்சியின் நிறுவனர் மக்கள் முன் தோண்றி, வேறு எவரை வேண்டுமானாலும் தேர்வு செய்யுஙகள் ‘ஸ்டாலின்’ மட்டும் வேண்டாம் என மன்றாடினார். அதன் பின்னரே ஸ்டாலின் பின்னுக்கு இழுக்க பட்டார். கடைசியில் வெறும் 4500 வோட்டுக்கள் வித்தியாசத்தில் முதல் இடம் நழுவி சென்றது.
    http://translate.google.co.in/translate?js=y&prev=_t&hl=en&ie=UTF-8&layout=1&eotf=1&u=http://www.nameofrussia.ru/&sl=ru&tl=en ஆயினும் இதுவே ஓரு பெரிய வெற்றி என்றெல்லாம் அளந்து விட முடியாது. மொத்த வோட்டுக்களின் என்னிக்கையின், விகிதாச்சார அடிப்படையில் பார்த்தால் ஸ்டாலின் பெற்றது வெறும் 11.5% வோட்டுக்கள் மட்டுமே. 88.5% மக்கள் அவரை ஏற்க்கவில்லை என்பதே உன்மை. முதலாளித்துவ சதிகளை எல்லம் ஒதுக்கி விட்டு பார்த்தாலும் இந்த விழுக்காட்டில் பாரிய வித்தியாசம் ஒன்றும் நிகழ்ந்து விட போவது இல்லை. ஸ்டாலினை ‘ஹீரோ’வாக்கி வழிபடும் இந்த விசிலடிச்சான் குஞ்சுகள் மனப்பான்மையில் இருந்து கம்யூனிஸ்ட்டுகள் மீளும்வரை ‘கம்யூனிசத்தின்’ வீழ்ச்சியை யாராலும் தடுக்க முடியாது. 

    • இதுல குன்ஸா அடிச்சுவிட என்ன இருக்கு புலி? ஸ்டாலின் எதிர்ப்பாளர்களால் நடத்தப்பட்ட ஒரு தேர்தலில், ஸ்டாலினை மட்டம் தட்ட இன்னுமொரு வாய்ப்பாக இதை கருதியிருந்த ஒநாய் கூட்டத்துக்கு மத்தியில், ஸ்டாலின் என்றால் கொலைகாரன் என்று பிறப்பிலிருந்தே பயிற்சிக்கப்பட்ட இன்றைய இளைய தலைமுறையினரின் வாக்கெடுப்பில் ஸ்டாலின் மூன்றாவதாக வந்ததும், நான்காயிறம் வாக்குகளில் முதல் இடத்தை தவறவிட்டதும் சாதனையே… அது உலக முதலாளி வர்க்கத்திடமும் பல சமூக ஆய்வாளர்களிடமும் ஒரே நேரத்தில் ஆச்சரியத்த்தையும் அதிர்ச்சியையும் தோற்றுவித்த்தா இல்லையா? அதுதான் கேள்வி.
      அது ஏன் என்பதற்கான விடைதான் மேலே பதிவில் உள்ளது.

      இதே போல் தான் மார்க்சும் கடந்த நூற்றாண்டின் சிறந்த தத்துவஞானியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்…. என்ன செய்வது….? கம்யூனிசம் தோற்றுவிட்டதாக கடன் வாங்கி பிரச்சாரம் செய்து வந்த உலக முதலாளிவர்க்கம்.. இறுதியில் தான் திவாலாகமால் இருக்க சோசலிசதிடம் தன்னை ‘பெயில் அவுட்’ செய்யச் சொல்லி சரண்டையவில்லையா? அப்போது விசிலடிக்காத ‘கல்சர்டு’ முதலாளித்துவ தாசர்கள் எத்தனை முறை தற்கொலை செய்து கொண்டார்கள் என்பதற்கு எதாவது புள்ளிவிவரம் இருக்கிறதா…புலி?

      • தனக்கான ஜனநாயகத்தை மக்களுக்கான ஜனநாயகம் என்றும், தொழிலாளிகளின் உழைப்பால் திரட்டப்பட்ட மூலதனத்தை தனது திறமையால் ஈட்டப்பட்ட சொத்தாகவும் இந்த உலகத்தை (குறிப்பாக அறிவாளிகளை!)இன்றுவரை நம்பவைத்துக்கொண்டிருக்கும் அதே முதலாளித்துவம் தான் உழைக்கும் மக்களின் மாபெரும் தலைவர் தோழர் ஸ்டாலினையும் கொடுங்கோலர் என்றும், சர்வாதிகாரி என்றும் நம்பவைத்துக்கொண்டிருக்கிற‌து. படித்த அறிவாளிகளும் அவற்றை நம்புகிறார்கள் !!

        ஸ்டாலின் மீதான அவதூறு : ஹிட்லர் முதல் இலக்கியவாதிகள் வரை – பாகம் 1

        ஸ்டாலின் மீதான அவதூறு : ஹிட்லர் முதல் இலக்கியவாதிகள் வரை – பாகம் 2

        ஸ்டாலின் சர்வாதிகாரி தான்! யாருக்கு ?

        தோழர் ஸ்டாலினும், துரோகிகளும்!

        http://thesamnet.co.uk/?p=146

      • இந்த சாதனையின் பின் உள்ள உளவியல் அம்சத்தை காண முடியாமல் நமது ஸ்டாலின் பாசம் தடுக்கத்தான் செய்யும். அது ஒரு வரலாற்றின் எல்லா காலங்களுக்குமான‌ சிறந்த ‘ரஷ்ய ஹிரோ’வை தேர்ந்தெடுக்கும் ஒரு வாக்கெடுப்பு. ஸ்டாலின் காலத்தில் சோவியத்து ஒன்றியம் மிக பலம் வாய்ந்ததாக உலகின் இரு முகாம்களில் ஒன்றாக இருந்த வரலாற்று உன்மையை யாராலும் மறைக்க முடியாது. இன்று அது சிதறுன்டு, ரஷ்யா தனது மேன்மையை இழந்து சிறுமைப்பட்டு உள்ளதை காணும் ர்ஷ்யர்கள் அதற்காக வருந்தி கொண்டு இருக்கிறார்கள். அதில் உள்ள ஒரு குறிப்பிட்ட அளவு மக்கள் ‘ஸ்டாலின்’ காலத்தை இழந்த பொற்க்காலமாக காணத்தான் செய்வார்கள். அந்த மக்களின் உள்ளார்ந்த ஆசையான ரஷ்யா மீண்டும் தனது இழ்ந்த மேன்மையை அடைய நினைப்பதே, இங்கு 11.5% சதவிகிதமாக புலப்படுகிறது. ஒருவேளை ஜெர்மனியில் இப்படி ஒரு வாக்கெடுப்பு நிகழ்ந்தால் ‘ஹிட்லர்’ ஒரு 10% வாக்கு பெற கூடும். அதை வைத்து அது பாஸிசத்திற்க்கு மக்கள் கொடுத்த அங்கிகாரம் என்று எடுத்து கொள்ளலாமா? நிச்சயமாய் கூடாது. அது போல் இந்த வோட்டெடுப்பையும் நாம் புறக்கனிப்பதே நேர்மையான கம்யூனிஸ்ட்டின் வழி.
        விமர்சனம் என்ற பெயரில் எது வந்தாலும் அவர்கள் முதலாளித்துவத்தின் ( அல்லது பார்பனியத்தின்) பக்கம் நிற்கிறார்கள் என்று கட்டம் கட்டி அடிக்கும் பழக்கத்தை முதலில் கை விடுங்கள். வெறும் துதி பாடும் இயக்கமாய் கம்யூனிஸத்தை குறுக்கி விட வேண்டாம். எந்த முதலாளிகள் விசிலடித்தார்கள் அல்லது தற்கொலை செய்து கொண்டார்கள் எனும் புள்ளி விவரமெல்லாம் என்னிடம் இல்லை! 
        இங்கு நான் வருவது கம்யுனிஸத்தை மேலும் கற்றறிய. ஸ்டாலின் பற்றிய எனது மதிபீடுகளை ஏற்க்கனவே நான் ‘சர்வதேசியவாதிகளின்’ தளத்தில் எடுத்து வைத்து விட்டேன். மீண்டும் வேண்டுமாலும் கூறுகிறேன். சோஷலிஸ  கட்டுமானத்தின் ஆரம்ப காலகட்டத்தில் அவர் எத்த்னையோ இடர்பாடுகள் மற்றும் முதலாளித்துவ சதிகளின் ஊடே பனியாற்றி, அந்த கட்டமைப்பை வளர்த்து எடுத்தார் என்பதில் மறுப்பு ஏதும் இல்லை. அந்த சாதனைகளை நினைக்கும் பொழுது நிச்சயமாய் பெருமிதமாய் தான் இருக்கிறது. ஆனால் அதை செய்ய அவர் கையாண்ட வழிமுறைகளை நிச்சயமாய் ‘நம‌க்கு’ ஏற்புடையது அல்ல. பிரமிடுகளை பார்த்து பிரமிக்கும் அதே வேளையில் அதற்கு பலியிடப்பட்ட ஆயிரம் ஆயிரம் அடிமைகளை, அவர்கள் இழந்து வாழ்வை சிந்திக்கும் மனம் வேண்டும் என்கிறேன், அவ்வளவே. அந்த மனம் இல்லையெனில் நாம் மனிதகுலமாக இன்னும் பரினாம வளர்ச்சி அடையவில்லை எனவே கொள்ள வேண்டும். 

        • புலிகேசி,

          ஸ்டாலினை ஆசானாக ஏற்றுக்கொண்டுள்ள என்னைப்போன்றவர்களுக்கு அவரின் மேன்மையை உணர இந்த வாக்க்கெடுப்பு எதற்கு. இது அவரை தூற்றியவர்கள் எடுத்த வாக்கெடுப்பு.. இதை வைத்து அவரை மட்டம் தட்ட நினைத்தார்கள்..ஆனால் முடிவோ அவர்கள் முகத்தில் கரியை பூசியது. இதன் முக்கியத்துவம் எதில் இருக்கிறது என்றால் எத்தனை கோடி கொட்டி அழுதாலும் கம்யூனிச பூதம் மீண்டும் மீண்டும் உயிர்த்தெழுகிறதே.. என அன்று முதலாளித்துவத்தின் பத்திரிக்கைகள் என்னது ஸ்டாலினா?’ அதிர்ச்சியடைந்த்தே அதில் உள்ளது. அவ்வளவே.

          உங்களை முதலாளித்துவத்தின் பிரதிநிதியாக நான் கருதவில்லை… என்னை நீங்கள் விசிலடிச்சான்குஞ்சாக கருதியதற்காக எனக்கு எந்த வருத்தமும் இல்லை… கம்யூனிச வளர்ச்சியின் பால் நீங்கள் கொண்டிருக்கும் அன்புக்காக ஒரு ஆலோசனை… கம்யூனிசம் என்பது நடைமுறைத் தத்துவம் சரியோ தவறோ அதை இணையத்தில் பேசி ‘மட்டுமே’ கற்க முடியாது.. கட்சியில் இணைந்து பணியாற்றுங்கள், நீங்கள் கற்றதை நீங்களே சோதித்து அறியுங்கள்

          வாழ்த்துக்கள்

        • நான் கடவுளையும் அதன் இயக்குனர் பாலாவயும்,
          சிலாகிக்கிறீர்கள். கஞ்சா குடி சாமியாரின் கதையை சிலாகிகிறீர்கள்.

          உங்களுக்கு தோழர் ஸ்டாலினை உயர்த்திப்பிடிப்பது
          விசிலடிச்சான் குஞ்சை போலுள்ளது????

          உங்களுக்கு ‘விசிலடிச்சான்’ என்ற வார்த்தையை
          பயன்படுத்த அறுகதை இருக்கிறதா என்பது வேறு விடயம்.

          முதலாளித்துவ ஜனநாயத்தின் பயங்கரத்தையும்,
          முன்னால் சோசலிச நாடுகளின் சாதனை மற்றும் மக்கள் வாழ்வு,
          இன்ன பிற உணமிகளையும் சாதாரன கண்கள் கொண்டே பார்க்க முடியும் போது, அதை மறைக்க முதலாளித்துவ ஊடகங்கள் செய்யும் பொஇ
          பிரச்சாரங்களை மட்டுமே நம்பிக்கொண்டு உண்மைகளை பார்க்க
          மறுப்பதை என்ன வென்று அழைபீர்கள்??

        • ////அந்த கட்டமைப்பை வளர்த்து எடுத்தார் என்பதில் மறுப்பு ஏதும் இல்லை. அந்த சாதனைகளை நினைக்கும் பொழுது நிச்சயமாய் பெருமிதமாய் தான் இருக்கிறது. ஆனால் அதை செய்ய அவர் கையாண்ட வழிமுறைகளை நிச்சயமாய் ‘நம‌க்கு’ ஏற்புடையது அல்ல. ///
          வேறு வழி சாத்தியமில்லை புலிகேசி. Means and ends matters. It is impossible to bring about Stalinism without terrible violation. The path to communism is like that and there is no alternative path. It will be the same if in future, any nation tries it. also see
          : http://nellikkani.blogspot.com/2009/03/blog-post_19.html மார்க்ஸிசமும், ஸ்டாலினிஸமும்

  8. நல்ல பதிவு. நன்றி. எனக்கு தோழர் ஸ்டாலினை பற்றிய நல்ல அறிமுகம் இது.

  9. நல்ல பதிவு தோழர்

    ஆனால் ஸ்டாலின் பற்றிய அவதூறுக்கு நாம் இன்னும் சரியான பதிலடியை தரவில்லை என நினைக்கிறேன்

  10. ஸ்டாலினை புரிந்து கொள்ள இக்கட்டுரை உதவிஉள்ளது. வினவு தோழர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

  11. “Molotov–Ribbentrop Pact ” – read this before eulogising stalin. MN Roy feared for his life and escaped from stalin. power creates an aura – forsaken whelps are attracted to it. the scientific rigour of marxism was greatly undone by this personality cult of megalomaniac stailn – he was communist in name but czar in attitude. all peronality cults only pander to the emotional conformity of the slaves.

  12. புலிகேசிஇடம் ஒரு கேள்வி அவர் செய்ததில் இதெல்லாம் சரி இதெல்லாம் தவறு என்று சீர் துக்கி பார்த்து சரியானதை மட்டும் எடுத்துக்க சொல்கிறீர்கல் சரி அதே கேள்வியை நீங்கள் ஏன் முதலாளித்துவ நடுகளிலிடம் கேட்ககூடாது அதாவது கம்யுனிச தலைவர்கள் செய்ததை எல்லாம் விட்டு விடுங்கள் அனால் கம்யுனிச தத்துவம் சரிதான் அந்த கருத்துகளை நாம் ஜனநாயக ரீதீயில் ஏற்றுக்கொண்டு அந்த கருத்துக்களை கொண்டவர்களை தேர்தலில் போட்டியிடலாம் என்று சொல்லலாமே. அவர்கள் தான் உயர் ஜனநாயக தத்துவத்தை பின்பற்றுபவர்கள் ஆயிற்றே. பின் ஏன் எழுபது ஆண்டுகளாக கம்யுனிச தத்துவத்தை தடை செயைபட்ட ஒன்றாக வைத்துள்ளர்கள்.

  13. அதியமானந்தா அவர்களுக்கு சமர்ப்பனம், பொதுத் துறை நிறுவனங்கள், தனி மனிதர்களின் அறிவுத் திறன் பற்றிய அவர் முதலாளித்துவ கற்பிதங்களுக்கு இந்த செய்தி பதில் கூறும்.

    Govt firms leave pvt & foreign biz behind
    http://in.news.yahoo.com/248/20100401/1593/tbs-govt-firms-leave-pvt-foreign-biz-beh.html

    *
    Buzz Up
    * Share
    o Twitter
    o Delicious
    o Myspace
    o Digg
    o Stumble Upon
    o Facebook

    Thu, Apr 1 01:42 PM

    The performance of public sector units (PSUs) has been far better than their private sector and foreign peers during 2009, when the Indian industry had just begun recovering from the pangs of the sub- prime and global credit crises.

    ”The total income of PSUs in 2009 recorded a year-on-year (YoY) growth of 22.8 per cent compared to the total income growth of 16.7 per cent and 10.8 per cent for private sector enterprises and foreign companies, respectively,” said Kaushal Sampat, chief operating officer (CEO) of Dun & Bradstreet India (D&B), a leading database and research company.

    ”The YoY profit growth for the PSUs was stagnant when its private and foreign peers saw their net profits decline by 11.3 per cent and 8.9 per cent, respectively,” Sampat added.

    Privately promoted companies dominate the composition of the Top-500 firms’ list in terms of ownership with a share of more than 75 per cent. However, PSUs continue to lead the 500 companies in terms of share in total income at 47.8 per cent and are followed by their private and foreign peers at 46.3 per cent and six per cent, respectively, D& B said in its latest edition of India’s Top-500 Companies.

    In terms of net profit margins (NPMs), the foreign companies are ahead of their public and private sector counterparts.

    The NPMs of PSUs, private players and foreign companies were at 6.9 per cent, 9.2 per cent and 11.3 per cent, respectively.

    ”The lower margins of PSUs can be justified to a certain extent because of their social obligation. For example, the subsidy burden of the government-owned oil refining and marketing companies. The oil companies bled to maintain retail prices of petroleum products low when crude oil prices hit a peak of over $ 147-per-barrel,” the research firm said.

    Between 2007 and 2009, the total income of PSUs, which was a tad below the total income contribution of private sector enterprises, finally surpassed the total income of their private sector peers to dominate the total income contributed by the Top-500 Companies in 2009.

    Though PSUs are less profitable compared to the private sector and foreign enterprises on account of their social obligations, the net profit growth of PSUs was better than their peers between 2007 and 2009.

    ”One reason for their ( PSUs) success, we have noticed, is the fact that they cater to the

    domestic markets and have lesser exposure to exports as compared with their private sector peers,” the report noted.

    • The bulk of the PSU turnover in India is from petroloeum companies and SAIL. The Pteroloeum companies are heavily subsidised from govt budget and ‘protected’ from competition as they sell at below cost while no private company can compete with them. As long as the govt of India covers the losses from the budget, this will continue. The petroleum pricing mehcanism and taxation is a mess and highly politiised ; no easy solution in the near future. unlike many other nations. Indian PSUs are the source of greatest corruption and the likes of Ram Vilas Paswan and Sathis Sarama, Sukh Ram and Vaalaipaadi Ramamurthy and Murali Deoras’ dream. Also see :

      http://nellikkani.blogspot.com/2008/07/blog-post.html
      பொதுத் துறை நிறுவனங்கள் பற்றி..

  14. மார்க்சியம் லெனினியம் மா சே துங் சிந்தனை அனைத்தையும் மெச்சுவதாகக் கூறிக்கொண்டே

    கட்சிக்குள் வர மறுக்கும் அறிவாளிகள்,

    தங்களை நசுக்கிப் பிழியும் எந்திரமாகக் கட்சியைக் கருதுபவர்கள்,

    கட்டுப்பாடுக்கு அஞ்சுபவர்கள், ஜனநாயகம் என்ற பெயரில்

    சாதாரண தொழிலாளிகளின் உத்தரவுக்கெல்லாம் நாம் கட்டுப்படவேண்டியிருக்குமே என்று அஞ்சுபவர்கள் –

    இவர்கள் யாருக்கும் ஸ்டாலினைப் பிடிப்பதில்லை.சுபெர்ப்..எனக்குப் பிடிக்கும். பிடிக்கிறது நல்ல நினைவூட்டல் ஸ்டாலின் பிறந்த நாளுக்கான அஞ்சலி யார் எழுதி இருந்தாலும் அவருக்கு எனது வாழ்த்துகள் பாராட்டுகள்.

Leave a Reply to கேள்விக்குறி பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க