privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஈழம்ஈழத்தமிழர் வாழ்வுரிமைக்கான மாநாடும் ஈழ ஆதரவாளர்களுக்கு சில கேள்விகளும் !

ஈழத்தமிழர் வாழ்வுரிமைக்கான மாநாடும் ஈழ ஆதரவாளர்களுக்கு சில கேள்விகளும் !

-

vote-012பழ.நெடுமாறன் அவர்களைத் தலைவராகக் கொண்ட உலகத் தமிழர் பேரமைப்பின் 7 வது ஆண்டு நிறைவு விழாவும் ஈழத்தமிழர் வாழ்வுரிமைக்கான உலகத்தமிழர் மாநாடும் இரண்டு நாள் நிகழ்ச்சியாக டிசம்பர் 26, 27 தேதிகளில் தஞ்சையில் நடைபெற்றது. நடராசன் (சசிகலா), வைகோ, ம.தி.மு.க, ராமதாசு, பா.ம.க, மகேந்திரன், வ.கம்யூ, திண்டிவனம் இராமமூர்த்தி, தேசியவாத காங்கிரசு கட்சி, அர்ஜுன் சம்பத், இந்து மக்கள் கட்சி, பெ.மணியரசன், த.தே.பொ.க, வைத்திலிங்கம், இந்து தமிழர் இயக்கம், நகைமுகன் தனித்தமிழர் சேனை, இராசேந்திர சோழன், சூரியதீபன், பசுபதிபாண்டியன், வீர.சந்தானம், மறவன்புலவு சச்சிதானந்தன், காசி.ஆனந்தன், முதலானோர் முக்கியப் பங்கேற்பாளர்கள். இவர்களன்றி டத்தோ சாமிவேல் உள்ளிட்ட வெளிநாட்டுத் தமிழறிஞர்களும் உள்நாட்டுத் தமிழறிஞர்களுமாகச் சேர்த்து சுமார் 80 பேச்சாளர்கள் இரண்டு நாள் நிகழ்சசிகளிலும் பங்கேற்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஒரு மிகக் கொடிய இனப்படுகொலையையும், புலிகள் இயக்கம் சந்தித்திருக்கும் பாரிய பின்னடைவையும் தொடர்ந்து நடைபெறும் பெரியதொரு நிகழ்ச்சி என்பதனால், தமிழகத்தில் உள்ள புலிகள் இயக்கத்தின் ஆதரவாளர்கள் மத்தியிலும் ஈழத்தமிழர்கள் மற்றும் புலம் பெயர் ஈழத்தமிழர்கள் மத்தியிலும் நிலவும் பலவிதமான கேள்விகள் மற்றும் குழப்பங்களுக்கு இம்மாநாட்டில் விடை கிடைக்கக் கூடும் என்ற ஒரு இலேசான எதிர்பார்ப்பு எங்களுக்கும் இருக்கத்தான் செய்தது.

தமிழகத்தைப் பொருத்தவரை, சமீபத்திய மாவீரர் தினத்தன்று பிரபாகரனின் குரலையோ அறிக்கையையோ எதிர்பார்த்து ஏமாந்தவர்கள் பலர்.  பிரபாகரன் இருக்கிறாரோ இல்லையோ, கேள்விகள் பல இருக்கின்றன. இனி ஆயுதப் போராட்டமா, அரசியல் போராட்டமா, அதிபர் தேர்தலில் ஈழத் தமிழ் மக்கள் என்ன  செய்யவேண்டும்? தேர்தலைப் புறக்கணிப்பதா, அல்லது வாக்களிப்பதாயின் யாருக்கு வாக்களிப்பது? புலிகள் இயக்கத்தின் அதிகாரபூர்வ பிரதிநிதி யார்?..என்பன போன்ற கேள்விகளுக்கு புலி ஆதரவாளர்களே ஆளுக்கொரு விதமாகப் பதில் சொல்லி வரும் சூழ்நிலையே நிலவுகிறது. இந்நிலையில் இத்தகைய கேள்விகளுக்கு இந்த மாநாட்டில் பதிலை எதிர்பார்ப்பது குற்றமோ துரோகமோ ஆகாது என்பதால் இந்த எதிர்பார்ப்புடன் உள்ளே நுழைந்தோம்.

மேடையில் உருவிய வாளுடன் நின்று கொண்டிருந்தார் மாமன்னன் இராசேந்திர சோழன். மொத்த இலங்கையையும் வென்று ஆட்சி செய்த அந்தத் தமிழ் மன்னனுக்கு அருகில் துப்பாக்கியுடன் பிரபாகரன். பக்கத்தில் உலகத்தமிழர் பேரமைப்பின் சின்னம். அதன் பக்கத்தில் கையில் குழந்தையுடன் கதறும் தாய் – இதுதான் மேடையின் பின்புலமாய் அமைந்திருந்த சித்திரம். இது உலகத்தமிழர் ஒற்றுமையின் குறியீடா, அல்லது  இந்திய மேலாதிக்கத்துக்கு வழங்கப்பட்ட அங்கீகாரமா? உருவிய வாளுடன் நிற்கும் இராசேந்திர சோழனின் வாரிசு கருணாநிதியா அல்லது பிரபாகரனா? இவை நமக்குத் தோன்றிய கேள்விகள். தமிழ் உணர்வாளர்கள் எனப்படுவோருக்குத் தோன்றக் கூடாத கேள்விகள்.

25 ஆம் தேதி காலை முள்ளிவாய்க்கால் முடிவல்ல என்ற தலைப்பிலான அமர்வு. தலைமை வகித்த முனைவர் த.ஜெயராமன் “4000 புலிகள் ஆயுதங்களுடன் தயாராக இருக்கிறார்கள். ஆதனால்தான் இலங்கை அரசு இராணுவத்துக்கு ஆள் எடுக்கிறது. எனவே இது தோல்வியே அல்ல’’ என்றார். அந்த அமர்வில் பேசிய அனைவரும் இதையே மீண்டும் மீண்டும் வலியுறுத்தினர்.

அடுத்து மாநாட்டு மலரை வெளியிட்டுப் பேசினார் நடராசன் (சசிகலா). “நெடுமாறனும் நானும் ஒன்றாக இருப்பதை தமிழர்கள் விரும்பவில்லை என்று குமுதம் ஒரு செய்தி வெளியிட்டிருந்தது. விசாரித்தபோது அது போலீசின் ஏற்பாடு என்று தெரிந்தது. தமிழ் ஈழத்துக்காகத்தான் நாங்கள் இருவரும் ஒன்றாக இருக்கிறோம். நாங்கள் ஒன்றாக இருப்பதை நீங்கள் விரும்புகிறீர்களா இல்லையா?’’ என்று கூட்டத்தைப் பார்த்து கேள்வி எழுப்பினார். விரும்புகிறோம் விரும்புகிறோம் என்று பதிலளித்தது கூட்டம்.

அன்று நெடுமாறனை பொடாவில் உள்ளே வைத்தபோதும் அம்மாவுடன் ஒன்றாக இருந்தாரே நடராசன் அதுவும் தமிழ் ஈழத்துக்காகத்தானோ என்று யாரும் கேட்கவில்லை. “தமிழகத்தைப் பெறுவதற்காக’’ அம்மாவுடன் ஒன்றாக இருக்கிறார் சசிகலா. “தமிழீழத்தைப் பெறுவதற்காக’’ அய்யாவுடன் ஒன்றாக இருக்கிறார் நடராசன் என்று அவர்களுக்குப் புரிந்திருக்கக் கூடும்.

ஈழம் – நிமிரும் காலம் என்ற தலைப்பில் நடைபெற்ற அடுத்த அமர்வில் பேசத்தொடங்கிய திமுக முன்னாள் எம்.எல்.ஏ நிஜாமுதீன், “பிரபாகரன் அவர்களே’’ என்று விளித்து பேசத் தொடங்கினார். இங்கே நான் பேசுவது அவருக்கு கேட்கும் என்று அவர் கூறியவுடன் கைதட்டல் கூரையைப் பிளந்தது. அடுத்துப் பேசிய பேராசிரியர் அய்யாசாமி, “இது பின்னடைவே அல்ல. புலிகள் திட்டமிட்டுப் பின்வாங்கியிருக்கிறார்கள். தமிழ் ஈழப்போராட்டத்தின் வேர் உலகம் முழுவதும் பரவிவிட்டது’’ என்று கூறி, இன்றைய நிலைமையை மாபெரும் முன்னேற்றமாகச் சித்தரித்தார்.

தற்போது ஏற்பட்டிருப்பது பின்னடைவுதான் என்று நிரூபிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டார் அடுத்துப் பேச வந்த இராசேந்திர சோழன். “ஏற்கெனவே ஈழம் மலரும் என்றோம். இன்று நிமிரும் காலம் என்று தலைப்பிட்டிருக்கிறோம். வீழ்ந்ததனால்தான் நிமிர வேண்டியிருக்கிறது. இதிலிருந்தே பின்னடைவு என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும். கடந்து வந்த பாதையை சுயவிமரிசனமாகப் பரிசீலித்துப் பார்க்க வேண்டும்’’ என்றார். எதை சுய விமரிசனமாகப் பார்க்கவேண்டும் என்ற விவரத்துக்குள் போகாமல் கவனமாகத் தவிர்த்துக் கொண்டார்.

அடுத்து நடைபெற்ற பொது அரங்கிற்கு பா.ம.க தலைவர் ராமதாசு, இந்திய கம்யூனிஸ்டு தலைவர் மகேந்திரன் ஆகிய இருவருமே  வரவில்லை. இரண்டு பேருக்கும் உடல்நிலை சரியில்லையாம். என்ன நோய் என்பது ஒருவேளை பிற்காலத்தில் நமக்குத் தெரியவரலாம். ஆனால், தேர்தலுக்கு முன் ஐயாவுடன் இருந்த தியாகு, சீமான், பெரியார் தி.க போன்றோரையும் இங்கே காணமுடியவில்லை. அதற்கான விளக்கமும் சொல்லப்படவில்லை.

பொது அரங்கின் தலைவர் மறவன் புலவு சச்சிதானந்தன்.

முதலில் பேசிய வடிவேல் இராவணன், பாமக, கருணாநிதியை தாக்கிப் பேசவே நிலை கொள்ளாமல் தவித்த சச்சிதானந்தன், “”எங்களுக்கு எல்லோரும் வேண்டும். ஈழத்துக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை மட்டும் பேசுங்கள். உங்கள் உள்ளூர் பிரச்சினையை வேறு இடத்தில் வைத்துக் கொள்ளுங்கள்’’ என்றார். அடுத்துப் பேசவந்த மணியரசன், இதனைக் கணக்கில் கொண்டார் போலும். “இந்தியாவிலும் தமிழகம் அடிமையாகத்தான் இருக்கிறது, எனவே ஈழத்துக்காக மட்டுமின்றி தமிழகத்தின் விடுதலைக்காகவும் போராடவேண்டும். எது முன்னால், எது பின்னால் என்று சொல்ல முடியாது’’ என்றார். பேச வந்த அத்தனை பேரும் பிரபாகரன் புகழ் பாடுவதையும், பிரபாகரன் என்ற சொல்லைக் கேட்டவுடனே அரங்கம் ஆர்ப்பரிப்பதையும் மணியரசனாலேயே சீரணிக்க முடியவில்லை போலும்! “பிரபாகரன் புகழுக்குரியவர்தான் எனினும் புகழ்ந்து கொண்டே இருக்கவேண்டும் என்பதில்லை’’ என்று போகிற போக்கில் சொல்லிவிட்டுச் சென்றார்.

யாரையும் புண்படுத்தாமல் பேசிய மணியரசனை வெகுவாகப் பாராட்டினார் சச்சிதானந்தன். தனித்தமிழ்நாடு கேட்பதைப் பற்றி அவருக்கு கவலை இல்லை. அவர் கவலை எல்லாம் கருணாநிதியைத் திட்டுவது பற்றியதுதான். அடுத்துப் பேச வந்த ஆவடி மனோகரன் மறுபடியும் கருணாநிதியை சாடத்தொடங்கவே, சச்சிதானந்தன் குறுக்கிட்டார். அப்படித்தான் பேசுவேன் என்றார் ஆவடி மனோகர். அவர் பேசி முடித்தவுடன் “ஈழத்துக்காக எம்.ஜி.ஆர் 5 கோடி கொடுத்தார், ராஜீவ் 50 இலட்சம் கொடுத்தார். தமிழ்நாட்டிலிருந்து யார் என்ன கொடுத்தீர்கள். நாங்கள் எங்கள் சொந்தக் காலில் நின்றுதான் போராடினோம். உணர்ச்சி வசப்படுவதெல்லாம் காரியத்துக்கு ஆகாது’’ என்று புத்திமதி கூறினார் மறவன் புலவு.

“நம்பக்கூடாத இந்தியாவை நம்பி நீங்கள் கெட்டால் அதற்கு நாங்கள் என்ன செய்வது? என்னைப் பொருத்தவரை எதிரிக்கு எதிரி நண்பன் என்ற வகையில் தமிழர்கள் சீனாவை ஆதரிக்க வேண்டும்’’ என்று இன்னொரு காமெடி பிட்டை வீசினார் அடுத்துப் பேசிய நகைமுகன். இவர் உளவுத்துறையுடன் தொடர்பு கொண்டிருந்தவர், சந்தேகத்துக்குரிய நபர் என்பது தமிழகம் முழுதும் உலவிய ஒரு செய்தி.

ஸ்ரீரங்கத்தில் பெரியார் சிலையை உடைத்த கட்சியும், தில்லைக் கோயிலின் சிற்றம்பல மேடையில் பக்தர்கள் தேவாரம் பாடுவதற்கு எதிராக தீட்சிதப் பார்ப்பனர்களுக்கு அடியாள் வேலை பார்க்கும் கட்சியுமான இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் அடுத்த பேச்சாளர்.

“இலங்கைப் பிரச்சினை என்பது தமிழரின் இனப்பிரச்சினையோ, மொழிப்பிரச்சினையோ அல்ல. அது காஷ்மீர் முதல் இலங்கை வரை உள்ள 110 கோடி இந்துக்களுக்கு எதிராக ஒரு கோடி பவுத்தர்கள் தொடுக்கும் போர். அதேபோல சைவம் வேறு தமிழ் வேறு அல்ல. களப்பிரர் காலத்தில் தமிழகத்தை ஆக்கிரமித்த சமண, பவுத்தங்களை வீழ்த்தி சைவத்தை மீட்டார்கள் சமயக் குரவர்கள். இந்தப் பிரச்சினையை இப்படி சரியான கோணத்தில் புரிந்து கொண்டிருப்பதனால்தான், எங்கள் தலைவர்கள் பால் தாக்கரேயும், முத்தாலிக்கும் (கர்நாடக இந்து சேனா) புலிகளை ஆதரிக்கிறார்கள்’’ என்றார். நாத்திகர்களை ஏளனம் செய்து அர்ஜூன் சம்பத் பேசிய போது மட்டும் கீழேயிருந்து சிறிய தொரு சலசலப்பு வந்தது. அதை அர்ஜூன் சம்பத் சட்டை செய்யக்கூட இல்லை. மற்றப்படி அவரது பேச்சை மேடையிலிருந்த யாரும் ஆட்சேபித்தோ மறுத்தோ பேசவில்லை.

அப்புறம் ஓவியர் வீர சந்தானம். “பிரபாகரன் இருக்கிறார் என்று நெடுமாறன் சொன்னார். எனக்கு 99% நம்பிக்கை வந்தது. அப்புறம் மலேசியா போயிருந்த போது அங்கேயும் இருக்கிறார் என்றார்கள். 100% நம்பிக்கை வந்துவிட்டது’’ என்றார். “அம்மா தேர்தல் நேரத்தில் ஈழத்துக்காக குரல் கொடுத்தவுடன் ரொம்ப சந்தோசப்பட்டேன். அப்புறம் ஏனோ அதை கைவிட்டு விட்டார்கள். கலைஞரும் ஜெயலலிதாவும் சேர்ந்து ஈழத்துக்காக நின்றால் நாம் அனைவரும் அவர்கள் பின்னால் நிற்போம்’’ என்றார். “இப்போதைக்கு நெடுமாறன் சொல்கிற இடத்தில் நிற்கணும்’’ என்பதுதான் அவர் உலகத்தமிழர்களுக்குக் கூறிய அறிவுரை.

26 ஆம் தேதி காலை முதல் அமர்வு – முள்வேலிக்குள் நெறிபடும் மனித உரிமைகள் . பேசியவர்கள் வதை முகாமின் கொடுமைகளை விவரித்தனர். இன்றைய சூழ்நிலையில் இந்தியாவைச் சூழ்ந்து வரும் சீன அபாயத்தை விளக்கினார் பேரா. சுப்பிரமணியன். இலங்கையில் மட்டுமல்ல, நேபாளத்திலும் மாவோயிஸ்டுகள் மூலம் சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வருவதாகவும், இதன் காரணமாக தென்தமிழகத்தின் கூடங்குளம், கல்பாக்கம் அணுமின் நிலையங்களுக்கு ஆபத்து என்றும் எச்சரித்தார். இந்த உண்மைகளை மத்திய அரசு உணரவில்லை என்றும் அதனை அவர்களுக்கு உரைப்பது போல நாம் எடுத்துச் சொல்ல வேண்டும் என்றும் கூறினார்.

அடுத்துப் பேசவந்தவர் மார்க்சிய லெனினியப் பார்வையில் இந்திய தேசியத்தையும் தமிழ்த்தேசியத்தையும் அணுகும் எழுத்தாளர் சூரியதீபன்.  இந்தியக் கொக்கின் தலையில் வெண்ணெய் வைத்துப் பிடிக்கும் தமிழ் உணர்வாளர்களின் மேற்படி தந்திரம், ஒரு காலாவதியாகிப்போன காமெடி என்பதையோ, சீன அபாயம் என்பதே அமெரிக்க இந்தியக் கூட்டணி தனது தெற்காசிய மேலாதிக்கத்தை நியாயப் படுத்துவதற்காக உருவாக்கியிருக்கும் புதிய கொள்கைப்பாடல் என்பதையோ சூரியதீபன் சுட்டிக்காட்டவில்லை. “மேற்குலக நாடுகளின் பிரதிநிதிகளையெல்லாம் அனுமதிக்காத ராஜபக்சே இந்திய எம்.பிக்களை அனுமதிக்க காரணம், இவர்கள் இலங்கை அரசின் கூட்டாளிகள் என்பதுதான்’’ என்று ஊரறிந்த ஒரு உண்மையை உலகத்தமிழர்களுக்காக  இன்னொருமுறை கண்டுபிடித்து வெளியிட்டார். இலங்கை சென்றிருந்த திமுக எம்.பி டி.ஆர்.பாலு, எட்டு கோடி உலகத் தமிழர்களின் தலைவர் கலைஞர்தான் என்று அங்கே பேசியதைச் சாடி, உலகத்தமிழர்களின் தலைவன் பிரபாகரனே என்று பிரகடனம் செய்தார். பிறகு கருணாநிதி நடத்தவிருக்கும் மாநாட்டில் கலந்து கொள்ளவரும் சிவத்தம்பியையும், ஆள்பவர்களை அண்டிப்பிழைக்கும் தமிழறிஞர்களையும் சாடினார்.

அடுத்துப் பேசிய ஈழப்பத்திரிகையாளர் அய்யநாதன், தான் ஆண்டுக்கு 6 இலட்சம் ரூபாய் சம்பாதிக்கும் பத்திரிகையாளன் என்பதை போகிற போக்கில் சொல்லிவிட்டு, புலிகள் சரணடையக் காரணம் அவர்கள் போரிடும் ஆற்றலை இழந்தது அல்ல, மக்களைக் காப்பாற்றும் நோக்கத்துக்காகத்தான் என்று “தெளிவு’’படுத்தினார். எனினும் இன்று தலைவர் இல்லாததால் நாம் நிர்க்கதியாக நிற்கிறோம். “போராட்டத்தை தொடர்வதற்கு ஆயுதம் ஏந்தவேண்டுமென்று அவசியமில்லை. இனி, நெடுமாறன் வழிகாட்டுதலில் செயல்படுவதுதான் உலகத்தமிழர்களின் கடமை’’ என்றார். எம்.ஜி.ஆர் மட்டும் உயிரோடு இருந்திருந்தால் இன்று நிலைமையே வேறு என்பதையும் அவர் சுட்டிக்காட்டத் தவறவில்லை.

அடுத்துப் பேசவந்த அருட்தந்தை பாலு, “இனி மனித வரலாற்றை கி.மு, கி.பி என்று குறிப்பிடக்கூடாது. தமிழனுக்கு முன், தமிழனுக்குப் பின் என்றுதான் குறிப்பிட வேண்டும்’’ என்றார். கல்லும் மண்ணும் தோன்றுவதற்கு முன்னரே தோன்றியவன் தமிழன் என்பதால் தமிழனுக்கு முன் என்ன வரலாறு இருந்திருக்கும் என்று நமக்குப் புரியவில்லை. தமிழனுக்குப் பின் என்று வேறு அவர் கூறிவிட்டதால், உலகத்தமிழினம் முழுவதும் ஒழித்துக் கட்டப்படும் நாளை எண்ணி அச்சம் மேலிட்டது.

“தமிழனுக்கு மட்டுமல்ல, எல்லா இனத்துக்கும் தலைவன் பிரபாகரன்தான். ஈழம் ஏற்கெனவே பிறந்து விட்டது. சற்று நோய்வாய்ப்பட்டுள்ளது. அவ்வளவுதான்’’ என்று அடுத்த அதிர்ச்சிப் பிரகடனத்தையும் வெளியிட்டார். பிறகு, இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை மாற்றவேண்டும் என்றார். கடைசியாக சோனியாவைப் பழிவாங்கியே தீருவேன் என்று சூளுரைத்துவிட்டு, விவிலியத்தில் ஏரோதுக்கு நேர்ந்த கதிதான் சோனியாவுக்கு நேரும் என்று சாபமிட்டார்.

முள்வேலிக்குள் நெறிபடும் மனித உரிமைகள் என்ற இந்த அமர்வுக்கு பிரபல தன்னார்வத் தொண்டு நிறுவனத் தலைவர் ஹென்றி திபேன் வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அவரைக் காணோம்.

தோள் கொடுப்போம், துணை நிற்போம் என்ற தலைப்பிலான அடுத்த அமர்வில் மும்பை, கருநாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களிலிருந்து 8 தமிழறிஞர்கள் பேசினர். புதிதாக ஒன்றும் விசயம் இல்லை. வெளிநாட்டு தமிழறிஞர்கள் பங்கு பெறும் அடுத்த அமர்வுக்கு டத்தோ சாமிவேல் வரவில்லை. மலேசியத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் ஒருவர் பேசினார்.

பிறகு உலகப் பெருந்தமிழர்களுக்கு விருது வழங்கி கவுரவித்தார் நெடுமாறன். உலகப்பெருந்தமிழர் என்ற விருதினைப் பெற்ற இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தலைவர் நல்லகண்ணு, இந்திய அரசின் மீது மிகவும் மென்மையாகத் தனது விமரினத்தைத் தெரிவித்தார். பேராசிரியர் விருத்தாசலம், சங்க இலக்கியங்களிலிருந்து தமிழரின் மேன்மையை நினைவுபடுத்திப் பேசினார். விருது வழங்கி விழாப்பேருரையாற்றினார் நெடுமாறன். அவரது பேச்சு முழுவதும் சச்சிதானந்தனுக்கு பதிலாகவே அமைந்திருந்தது. 1983 முதல் ஈழத்தமிழர் போராட்டத்துக்காக தமிழகத்திலிருந்து செய்யப்பட்ட உதவிகளைப்பட்டியலிட்டார். எம்.ஜி.ஆர் செய்த உதவிகளை விவரித்தார். பாரதிய ஜனதா மதவாதக் கட்சியாக இருந்தபோதும், ஈழப்பிரச்சினையில் ஆதரவாக இருந்ததாகக் கூறினார். இறுதியாக ஈழப்போராட்டத்தை பிரபாகரன் தொடர்ந்து நடத்துவார். இப்போதே நடத்திக் கொண்டுதான் இருக்கிறார் என்று கூறி முடித்தார்.

மாலை பொது அரங்கிற்கு தலைமை தாங்கிய காசி ஆனந்தன், “பிரபாகரன் இருக்கிறார் என்று நெடுமாறன் கூறுகிறார். இல்லேன்னா சொல்வாரா? அதனால் தலைவர் இருக்கிறார் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்’’ என்றார். “இன்று சந்தித்திருப்பது பின்னடைவு என்று கூறுவதே தவறு. விடுதலைப் போராட்டத்துக்குத் தோல்வியே கிடையாது, ஈழம் ஒன்றுதான் தீர்வு’’ என்றார்.

அடுத்துப் பேசியவர் இந்து தமிழர் இயக்கத்தின் தலைவர் வைத்தியலிங்கம். தஞ்சையைச் சேர்ந்த வழக்குரைஞரான இவர் ஏற்கெனவே இருந்த இடம் பாரதிய ஜனதா கட்சி. “எல்லா அனைத்திந்தியக் கட்சிகளையும் புறக்கணிக்க வேண்டும், எல்லோரு வீட்டிலும் பிரபாகரன் படத்தை மாட்டுவதுடன், ஒரு உண்டியல் வைத்து காசு சேர்த்து அதனை நெடுமாறனிடம் கொடுக்கவேண்டும்’’ என்றார் வைத்தியலிங்கம்.

கடைசியாகப் பேசிய வைகோ, இறுதிப் போரின் கொடுமைகளை விவரித்தார். “போரில் படுகாயமுற்று இரண்டு கால்களையும் இழந்த சோழமன்னன் விஜயாலயச் சோழன், என்னைத் தூக்கிக் கொண்டு போய் போர்க்களத்தில் விடுங்கள் என்று கூறிய மண் இது. எனவே தலைவர் பிரபாகரன் இருக்கிறார். வழிநடத்துவார்’’ என்றார். பிறகு வட்டுக்கோட்டை தீர்மானத்தின் வரலாறு, அதற்கு ஆதரவாக ஐரோப்பிய நாடுகளில் நடக்கும் வாக்கெடுப்புகள் பற்றிக் கூறி தமிழகத்திலும் வாக்கெடுப்பு நடக்கும் என்றார். எதற்கு வாக்கெடுப்பு, தனி ஈழத்துக்கா, தனித் தமிழ்நாட்டுக்கா என்று கூறாமல் நைசாக அவர் நழுவிய போதிலும் கூட்டம் ஆரவாரித்தது. பிறகு 33 ஆண்டுகளுக்கு முன் ஈழத்துக்கு ஆதரவாக அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் மாநிலத்தில் தீர்மானம் நிறைவேற்றிய கதையை விலாவரியாக சொன்னார். ஈழத்தமிழர்க்கு நடந்த கொடுமைகளை தமிழக மக்கள் மத்தியில் கொண்டு சென்று ஆதரவு திரட்டவேண்டும் என்றும், பிரபாகரன் புதிய எழுச்சியுடன் வருவார் என்றும் பிரகடனம் செய்தார்.

தனி ஈழம்தான் தீர்வு, வட்டுக்கோட்டை தீர்மானம்தான் இறுதி. அதுதான் இலக்கு என்பதே இந்த மாநாட்டின் தீர்மானம்.


மாநாடு நடைபெற்ற இடம் நடராசனுக்கு (சசிகலா) சொந்தமான தஞ்சை தமிழரசி திருமண மண்டபம். கூட்டம் சுமார் 2000 பேர். மண்டபம் கொடுத்தது மட்டுமின்றி வந்திருந்தவர்களுக்கு சாப்பாடும் அங்கே போடப்பட்டது. வெளிநாட்டில் இருந்தபடியே விழாவிற்கான ஏற்பாடுகளை செய்த நடராசனுக்கு வெகுவாக நன்றி தெரிவித்தார் நெடுமாறன். பிரபாகரன் படங்கள், பனியன்கள் ஆகியவற்றுடன் தமிழ் தேசிய சீருடையும் அங்கே விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. சந்தன நிற சட்டை, அரக்கு நிற பார்டருடன் சரிகை போட்ட நீண்ட மேல்துண்டு – துண்டை பழைய தமிழ்ப்பட ஜமீன்தார் பாணியிலும், சுப்பிரமணியசாமி பாணியிலும் பலர் அணிந்திருந்தார்கள். பெண்களுக்கான தமிழ்த் தேசியச் சீருடை என்று எதையும் காணோம்.

கூட்டத்துக்கு வந்திருந்தவர்களில் பெரும்பான்மையினர் 80 களில் ஈழப்போராட்டம் துவங்கியபோது இளைஞர்களாக இருந்து தற்போது நடுத்தர வயதைத் தாண்டியவர்கள், முதியவர்கள். சுமார் 30 சதவீதம் பேர் இளைஞர்கள்.

பேச்சாளர்கள் அனைவரும் சிங்கள இராணுவத்தின் கொடுமைகள், இந்திய அரசின் சதி, கருணாநிதியின் துரோகம் ஆகியவற்றையும் நடைபெறவுள்ள செம்மொழி மாநாட்டையும் தாக்கிப் பேசினர். பிரபாகரன் என்ற சொல்லைக் கேட்டவுடன் மகிழ்ச்சிக் கூச்சல், அவர் உயிருடன் இருக்கிறார் என்று கூறியவுடன் ஆர்ப்பரிப்பு, கருணாநிதியைத் திட்டினால் கைதட்டல்.

இந்த மூன்றும்தான் கூட்டத்தைக் கவரும் பாயிண்டுகள் என்று பேச்சாளர்களுக்குத் தெளிவாகத் தெரிந்து விட்டது. எனவே இதே விசயங்களை ஒருவரை ஒருவர் விஞ்சும் விதத்தில் பில்டப் கொடுத்துப் பேசத்தொடங்கினார்கள் பேச்சாளர்கள். இதன் விளைவாக அடுத்தடுத்தப் பேச வந்த பேச்சாளர்கள் முந்தைய பேச்சாளர்களின் ரிக்கார்டை முறியடிக்க முடியாமல் மூச்சு வாங்கினார்கள்.

“தலைவர் இருக்கிறார், இது பின்னடைவே அல்ல, தலைவரின் தந்திரம்,  4000 புலிகள் தயாராக இருக்கிறார்கள், முன்னிலும் வேகமாகத் தாக்குதல் தொடுப்பார்கள்.. ” என்று பலவிதமாகப் பேசி, பார்வையாளர்களின்

நரம்புகளை முறுக்கேற்றி, இதற்கு மேல் முறுக்கினால் அறுந்துவிடும் என்ற நிலையில் கடைசி பேச்சாளராக வழக்கம்போல வைகோ இறக்கப்பட்டார். வைகோவைப் பார்த்து சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. பல்சார் பைக்கைப் போல ஸ்டார்ட் செய்து சில நொடிகளில் டாப் கியருக்குப் போய்விடுகிறார். அப்புறம் அவ்ளோதான்.

வைகோ பேச்சைக் கேட்கும்போது தஞ்சை ரெட்டிப் பாளையம் தப்பாட்டக்குழுதான் நினைவுக்கு வருகிறது. அந்தக் குழுவிரின் முறுக்கேறிய அடியும் ஆட்டமும், தூங்குகிறவனைக் கூட கிளப்பி முறுக்கேற்றி விண்ணென்று நிறுத்திவிடும். அந்தத் தாளம் எந்தக் கருத்தையும் கூறுவதில்லை. வைகோ வின் பேச்சைப் போலவே அதுவும் வெறும் ஓசைதான். என்றாலும் இன்னதென்று தெரியாத ஒரு முறுக்கேறிய நிலையை மட்டும் அந்தத் தாளமும் ஆட்டமும் கேட்பவர்களின் உடலில் உருவாக்கிவிடும். ஆட்டம் முடிந்த பின் ஆடியவர்கள் மட்டுமல்ல, கேட்டவர்களும் அறுந்து போன ஸ்பிரிங் கம்பியைப் போல துவண்டு விடுவார்கள்.

வைகோவின் பேச்சும் அப்படித்தான். அவரை எப்போதுமே கடைசிப் பேச்சாளராகப் போடுவதன் நோக்கம், பார்வையாளர்களின் முறுக்கை மேலும் ஏற்றுவதா, அல்லது ஏறிய முறுக்கை இறக்குவதா என்ற புதிருக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை.

கடைசியாக வைகோ தமிழ்நாட்டுத் தமிழர்களுக்குத் தந்திருக்கும் வேலைத்திட்டம் இதுதான்.  இறுதிப்போர் துயரத்தின் புகைப்படங்களை வீடுவீடாகத் தமிழ் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். வாக்கு கேட்கவேண்டும். இதே காரியத்தைத்தான் மே மாதம் செய்து, முடிவும் தெரிந்து விட்டது. மக்கள் கிடக்கட்டும், போட்டோக்களை போயஸ் தோட்டத்துக்கு எடுத்துச்சென்று காட்டி அம்மாவைப் பேசச்சொல்வாரா வைகோ? அதற்குப் பதில் இல்லை. அத்வானியை வைத்து அன்று ஆர்ப்பாட்டம் நடத்தினாரே, இன்று அத்வானி ஏன் பேசமறுக்கிறார்? அதற்கும் பதில் இல்லை. கூடியிருந்த கூட்டத்திடம் இப்படிப்பட்ட கேள்விகளும் இல்லை.

மாநாட்டில் இன்னொரு விசயம் பளிச்சென்று தெரிந்தது. “எல்லாப்பயலும் திருடனுங்க. ஐயா நெடுமாறன்தான் உலகத்தமிழர்களின் ஒப்பற்ற தலைவர்’’ என்று பலர் பேசினார்கள். எளிமையானவர், நேர்மையானவர் என்று ஹமாம் சோப்பு விளம்பரம் போல நெடுமாறன் உயர்த்தப் பட்டார். வீரம், தியாகம் என்பனவற்றை முன்னிறுத்தி புலிகளை உயர்த்திப் பிடித்ததற்கும் இதற்கும் பெரிய வேறுபாடு இல்லை. எளிமையான, நேர்மையான தலைவரான நெடுமாறனின் கொள்கை முடிவுகள் பற்றி யாரும் கேள்வி கேட்கவில்லை.

கடந்த நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கியவுடனே ஈழ ஆதரவு அவதாரம் எடுத்தவர் சசிகலாவின் கணவர் நடராசன். இந்த அரசியல் தரகனை தமிழ்நாட்டு சுப்பிரமணியசாமி என்றும் கூறலாம். ஜெயலலிதாவால் தூர நிறுத்தப்பட்டாலும், அம்மாவின் வெற்றிக்காக அயராது உழைத்து அதன் மூலம் அதிகாரத் தாழ்வாரங்களில் தனது செல்வாக்கைப் பேணிக்கொள்ளும் இந்த நபரை ஒரு பெருநோயாளியைப் போல அரசியல் உலகமே ஒதுக்கி வைத்திருக்கிறது. ஈழத்தமிழரின் விடுதலை இப்படிப்பட்ட ஒரு நபரால் ஸ்பான்சர் செய்யப்பட வேண்டுமா என்ற கேள்வியையும் யாரும் எழுப்பவில்லை.

இத்துத்துவக் கொள்கைகளை அமல்படுத்துவதில் பார்ப்பனக் கும்பலைக் காட்டிலும் தீவிரமான சூத்திர ஆழ்வார் நான்தான் என்று நிரூபிப்பதற்காகவே கட்சி தொடங்கியிருப்பவர் அர்ஜுன் சம்பத். ஈழப்பிரச்சினை தமிழர் பிரச்சினையே அல்ல, இந்துப் பிரச்சினை என்று பேசிவரும் இப்பேர்ப்பட்ட ஒரு நபரை அழைத்து வந்து மேடையேற்றுகிறார் நெடுமாறன் என்றால் அது அறியாமை அல்ல. இத்தகைய நபரை மேடையேற்றுவதன் மூலம் முஸ்லிம் மக்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த தமிழ் மக்கள் வெறுப்பு கொள்வார்கள் என்பதும் நெடுமாறன் அறியாதது அல்ல. நெடுமாறனின் தமிழ்ப் போர்வை போர்த்திய ஆர்.எஸ்.எஸ் கொள்கை அப்பட்டமாக அரங்கேறுவதைத்தான் இது காட்டியது.

யோசித்துப் பாருங்கள்! ஈழத்தமிழ் மக்களின் தன்னுரிமைப் போராட்டத்தை ஆதரிக்கிறோம். ஆனால் புலிகளை விமரிசிக்கிறோம் என்று கூறும் யாராவது இந்த மேடையில் ஏறியிருக்க முடியுமா? ஆனால் ஈழப்பிரச்சினை இனப்பிரச்சினையே அல்ல இந்து பிரச்சினை என்று பேசும் அர்ஜுன் சம்பத் ஏற முடிகிறது. இந்த அருவெறுக்கத்தக்க நபருடன் மேடையைப் பகிர்ந்து கொள்வதில் மணியரசனுக்கோ, இராசேந்திர சோழனுக்கோ, சூரியதீபனுக்கோ எவ்விதப் பிரச்சினையும் இல்லை போலும்! இப்பேர்ப்பட்ட ஐயாவின் கையினால் விருது வாங்குவதில் தோழர் நல்லகண்ணுவுக்கும் எவ்விதக் கூச்சமும் இல்லை. மாநாட்டில் பேசிய சிலர், மூன்றாவது அணியொன்றை ஐயா நெடுமாறன் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். எதற்கு மூன்றாவது அணி?  ஐயா பாரதிய ஜனதா, ஜெயலலிதாவுடனான இரண்டாவது அணியின் தூணாக நின்று கொண்டிருப்பது இன்னும் அவர்களுக்குப் புரியவில்லை போலும்!

இறுதியாக, இம்மாநாட்டை ஒட்டி, தமிழகத்தில் உள்ள புலிகள் இயக்கத்தின் ஆதரவாளர்களிடமும், புலம் பெயர்ந்த புலி ஆதரவாளர்களிடமும் சில கேள்விகளைக் கேட்க விரும்புகிறோம்.

30 ஆண்டு காலப் போராட்டத்தில் ஏற்பட்டிருக்கும் பாரிய பின்னடைவு, கொடூரமானதொரு இனப்படுகொலையை நடத்தி முடித்து விட்டு குற்றவாளிகள் கடுகளவும் அச்சமின்றி நடமாடும் சூழல், தமிழக மக்கள் மத்தியில் வடிந்து விட்ட ஈழப்பிரச்சினை குறித்த அக்கறை, இலங்கையில் இந்திய மேலாதிக்கத்தின் புதிய காய்நகர்த்தல்கள், கடந்த தேர்தலுக்கு முன் ஈழத்துக்காகக் குரல் கொடுத்த தமிழகத்துக் கட்சிகள் இப்போது சாதித்து வரும் மர்மமான மவுனம்… என பேசுவதற்கும் பரிசீலிப்பதற்கும் பல விடயங்கள் உள்ளன. இவையெதுவும் இந்த மாநாட்டில் பேசப்படவே இல்லை என்பதைக் கவனித்தீர்களா?

இது தோல்வியே அல்ல என்று பேசுகிறார்கள் சிலர், தோல்விதான் என்று அரைமனதுடன் ஒப்புக் கொள்கிறார்கள் சிலர். இது குறித்த மாநாட்டின் முடிவு என்ன? ஐரோப்பா முழுவதும் நாள் கணக்கில் தெருவில் நின்று கதறியபோதும் முள்ளிவாய்க்கால் படுகொலையை நிறுத்த முடியவில்லையே, இலங்கையின் மீது ஒரு கண்டனத் தீர்மானத்தைக் கூட நிறைவேற்ற முடியவில்லையே, அவலமான இந்த உண்மை நிலையைக் கூட அங்கீகரிக்காமல் சவடால் அடிப்பவர்களை ஈழ மக்களின் நண்பர்கள் என்றா கருதுகிறீர்கள்?

பிரபாகரன் இருக்கிறார் என்று உறுதிபடப் பிரகடனம் செய்கிறார்கள் பலர். இதே தஞ்சையில் இதற்கு முன் நடைபெற்ற கூட்டமொன்றில் கீழ்க்கண்டவாறு பேசினார் நெடுமாறன். “பிரபாகரன் உயிரோடு இருப்பதாகச் சொல்கிறீர்களே, என்ன ஆதாரம் என்று என்னிடம் பலர் கேட்கிறார்கள். என் ஆழ்மனது சொல்கிறது. அவர் இருக்கிறார். இதுதான் என்னுடைய பதில்’’ என்றார் நெடுமாறன். “ஐயா சொல்வதால் நானும் நம்புகிறேன்’’ என்கிறார் காசி ஆனந்தன்.

பிரபாகரன் இருக்கிறார் என்பதே உண்மையாக இருக்கட்டும். இந்த உண்மையை மட்டுமே திரும்பத் திரும்ப அடித்துப் பேசி, அதற்குக் கைதட்டி ஆர்ப்பரித்து மகிழ்ந்து கொள்வதன் பொருள் என்ன? அதன் மூலம் சம்மந்தப் பட்டவர்கள் பெறுகின்ற நம்பிக்கை எந்த விதத்தில் அவர்களுடைய செயலுக்கு வழிகாட்டப் போகிறது?

தந்தையை இழந்து நிர்க்கதியாய் விடப்பட்ட குடும்பத்தில், அதுவரை உலகம் அறியாத பெண்ணாக வீட்டுக்குள் அடைபட்டிருந்த மனைவியோ அல்லது பருவம் வராத சிறுவனோ கூட, எதார்த்தத்தைத் துணிவுடன் எதிர்கொண்டு, குடும்ப பாரத்தைச் சுமப்பதையும் கரைசேர்ப்பதையும் அன்றாட வாழ்க்கையில் நாம் காணத்தான் செய்கிறோம். இருக்கிறார், வருவார் என்பதை மட்டுமே நற்செய்திகளாக வழங்கியிருக்கிறது இந்த மாநாடு. இதனை ஜெபக்கூட்டம் என்று அழைப்பதா அல்லது மாநாடு என்று அழைப்பதா?

புலிகள் நூற்றுக்கு நூற்றுப்பத்து வீதம் சரியானவர்களாகவே இருக்கட்டும், இன்று புலிகள் இயக்கத்தின் பிரதிநிதிகள் யார், இன்றைய சூழலில் புலிகள் இயக்கத்தின் நிலைப்பாடு என்ன என்ற கேள்விகளுக்கு முரண்பட்ட பதில்கள் வருகின்றனவே, இதற்கு எப்படித் தீர்வு காண்பது? எது சரியான தீர்வு என்பதை எப்படிக் கண்டடைவது?

இந்த மாநாட்டு மேடையில் இந்தியாதான் குற்றவாளி என்கிறார்கள் பலர்; இந்திய அரசுக்குப்புரியவைத்து வென்றெடுக்க வேண்டும் என்று சிலர்.  தனித்தமிழ்நாடுதான் தீர்வு என்கிறார்கள் சிலர்; காங்கிரசையும் திமுகவையும் முறியடிப்பதுதான் தீர்வு என்று சிலர். பின்னடைவுதான் என்று சிலர், பின்னடைவு என்று சொல்வதே குற்றம் என்று சிலர். பிரபாகரன் இருக்கிறார் என்று பலர், இல்லை என்று சிலர். இது இந்து பவுத்த பிரச்சினை என்று சிலர், ஆரியர் தமிழர் பிரச்சினை என்று சிலர். எல்லாம் முடிந்தபின் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை அமல் படுத்துவோம் என்பது மாநாடு போட்ட தீர்மானம். ஐயா சொல்படி நடப்போம் என்பது மாநாடு போடாத தீர்மானம்.

எதைப்பற்றியும் பரிசீலிக்காமல் முரண்பட்ட கருத்துகளை விவாதத்துக்கும் உட்படுத்தாமல், ஐயா சொல்படி நடப்போம் என்று முடிவு எடுக்கும் மாநாட்டுக்கும், அம்மா சொல்படி நடப்போம் என்று முடிவு எடுக்கும் அதிமுக பொதுக்குழுவுக்கும் என்ன வேறுபாடு?

சேர்ந்திருப்பதா பிரிந்து போவதா என்பதைத் தீர்மானிக்கும் உரிமை ஈழத்தமிழ் மக்களுடையதுதான் என்பதில் ஐயமில்லை. வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை நிறைவேற்றுவோம் என்று இவர்கள் தஞ்சையிலிருந்து பிரகடனம் செய்கிறார்கள். ஐரோப்பாவெங்கும் இருக்கும் புலம்பெயர் தமிழர்கள் வாக்களித்திருக்கிறார் என்கிறார் வைகோ. வட்டுக்கோட்டைத் தீர்மானத்தைப் பற்றி வட்டுக்கோட்டையில் (இலங்கை மண்ணில்) வாழும் தமிழர்கள் என்ன சொல்கிறார்கள்? கேட்கத் தேவையில்லையா? வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்குப் பின்னர் பிறந்த தமிழர்களிடம் அது பற்றிக் கேட்கத் தேவையில்லையா? அன்று முதல் இன்று வரை நடைபெற்ற போராட்டத்தின் சரி பிழைகளை ஆராயத் தேவையில்லையா? புலிகள் இயக்கத்தின் ஆதரவாளர்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

தமிழ் ஈழம்தான் ஒரே தீர்வு, பிரபாகரன்தான் ஒரே தலைவர் என்று நீங்கள் நம்பிக்கையுடன் முழங்கிய காலம் ஒன்று இருந்தது. தஞ்சை மாநாட்டில் கூடியிருந்தோரிடம் அத்தகைய நம்பிக்கையைக் காணமுடியவில்லை. மாறாக தம் நம்பிக்கையை மறு உறுதி செய்து கொள்வதற்காகவும், தலையெடுக்கும் சந்தேகங்களைத் தம் சொந்த மனதில் ஆழப்புதைத்து மூடுவதற்காகவும், ஒத்த உணர்வுள்ளவர்கள் ஏற்பாடு செய்து கொண்ட சந்திப்பாகவே இது இருந்தது. தோற்றத்தில் வீரம் காட்டினாலும், இது பரிதாபத்துக்குரிய ஒரு அவலம்.

உளனோ அன்றி இலனோ என்று தனது ஐயத்தைப் பாடலில் பதிவு செய்ய மாணிக்க வாசகருக்கு இருந்த தைரியம் கூட அங்கே யாருக்கும் இல்லை. “ஐயர் சொல்வதனால் கடவுள் இருக்கிறார்’’ என்று நம்பி வளர்ந்த சமூகம், “”ஐயா சொல்வதனால் பிரபாகரன் இருக்கிறார்’’ என்று நம்புகிறது. பெரியார் பிறந்த மண்ணுக்கு இது ஒரு பேரவலம்தான்.

ஆனால் கடவுள் இருக்கிறார் என்று நம்பும் தீவிர பக்தனும் கூட தனது அடுத்த வேளைச் சோற்றுக்கு கடவுள் வழி சொல்வார் என்று காத்திருப்பதில்லை. தன் சொந்த முயற்சியையும் உழைப்பையுமே அவன் நம்புகிறான். இறை நம்பிக்கையை இழந்து விடவில்லையென்றாலும்,  தன் சொந்தத் தவறுகளைப் பரிசீலிக்கவும் செய்கிறான். அதன் ஊடாக, தன் சொந்த எதிர்காலத்தைத் தானே உருவாக்கிக் கொள்ளும் ஆற்றலையும் பெறுகிறான். பின்னொரு நாளில், அவன் இறை நம்பிக்கையைத் துறந்து விட்டான் என்ற உண்மையை நாம் அவனுக்கு நினைவூட்ட வேண்டியதாகி விடுகிறது. “அப்படியா, மறந்து விட்டேன்’’ என்பது அவனது பதிலாக இருக்கிறது.

நாம் பிரபாகரனை மறக்கச் சொல்லவில்லை. இந்தப் போராட்டத்தின் சரி பிழைகளை நினைக்கச் சொல்கிறோம். அவ்வளவே.

vote-012

தொடர்புடைய பதிவுகள்

  1. நியாயமான கேள்விகள். நல்ல கட்டுரை. ஈழத்தமிழர்களுக்காக உண்மையிலேயே கவலைப்படுபவர் பலர் மனதில் இன்=தக் கேள்விகள் இல்லாமல் இல்லை. பதில்தான் இன்னும் கிடைக்க வில்லை.

  2. நானும் ஓர் ஈழத்தமிழர் என்பதால் இந்த பதில். புலிகள் அரசியல் அறிவிலிகள், அவர்களுக்கு சந்தர்ப்பவாத அரசியல் தெரியவில்லை, ஈழத்துக்காய் உயிரைகொடுத்தை தவிர அப்படி வேறெதை அவர்கள் ஈழத்தமிழனுக்காய் செய்து கிழித்துவிட்டார்கள். அப்படிப்பட்டவர்கள் இனிமேல் ஏன் ஈழத்தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும்? ஏன் இனிமேல் யாராவது இந்த அரசியல் அறிவிலிகளான புலிகளுக்காக காத்திருக்க வேண்டும்? புலிகளை விட அறிவாளிகள், தியாகிகள் இனிமேல் ஈழப்போராட்டத்தை தொடருவார்கள். அதுதான் ஈழத்தில் பட்டியலில் வராத  சித்திரவதைக்கூடத்தில் நிர்வாணமாய், கை, கால் முறிந்து முடமாய் இழுபடும் எஞ்சியுள்ள புலிகளுக்கும் நல்லது. அப்படியே ஐயா நெடுமாறனிடமும் ஓர் வேண்டுகோள். பேசாம உங்களுக்கு சொந்த வேலை ஏதாச்சும் இருந்தா பாருங்கையா? இதையே சகோதரர் சீமானிடமும் என் சார்பில் தெரிவிக்கவும். 

    • ரதி உங்கள் அரசியல் அறியாமை சகிக்கவொண்ணாத்தாக உள்ளது. நீங்கள் மெச்சும் ஐயா நெடுமாறனை பொடாவில் உள்ளே போட்ட அம்மாவின் உடன்பிறவா சகோதரி ச்சிகலாவின் கணவர் அம்மாவின் பினாமி சொத்துக்காரர் போட்ட பிச்சையிலே இந்த இரண்டுநாள் மாநாடு நடந்துள்ளது. இரண்டு நாட்களும் பேசவேண்டிய பிரச்சினைகள் எதுவும் பேசப்படவில்லை என்பதை கட்டுரை தெளிவாக விளக்குகிறது. இதில் அர்ஜூன் சம்பத் போன்ற இந்து மதவெறியர்களையும், நகைமுகன் போன்ற சாதி வெறியர், போலீஸ் உளவாளிகளையும் மேடையேற்றிருக்கிறார் உங்கள் ஐயா. ஈழத்தின் துயரை கிச்சுக்கிச்சு மூட்டும் இந்தக் கூட்டத்தைத்தான் உங்கள் பிரபாகரன் நம்பினார் என்றால் இதை விட கேடுகாலம் வேறு ஏதும் உண்டா?

      • என்னைப்பற்றிய உங்கள் கருத்துக்கு நன்றி. என் அரசியல் அறியாமை குறித்து நீங்கள் அதிகம் கவலைப்படாதீர்கள். அறியாமை நோயினால் பீடிக்கப்பட்டவர்கள் யாரும் கருத்து பதியக்கூடாதா? பிரபாகரன் யாரை நம்பினார் என்று உங்களிடம் தான் சொல்லியிருந்தார் என்றால் அதை தெரிந்துகொள்ள ஆவலாயுள்ளேன். 

        • ஜெயல்லிதாவின் இரகசிய பினாமி ச்சிகலா நடராசன் பிச்சையில் ஐயா நெடுமாறன் இந்த இரண்டு நாள் மாநாடு நடத்தவேண்டிய அவசியம் என்ன? ‘ஜெயல்லிதாவின் பினாமிக்கும் ஈழத்திற்கும் என்ன தொடர்பு? மேடையில் கருணாநிதியை விமரிசித்தவர்கள் (விமரிசிக்க கூடாது என்று சொல்லவில்லை) அம்மா ஜெயல்லிதாவை மறந்தும் கூட விமரிசிக்க மறுத்தது ஏன்? அனைவரும் பிரபாகரன் உயிருடன் உள்ளார் ஏன்று பேசி கைதட்டல் வாங்கி ஒருவொருக்கொருவர் முதுகு சொறிந்த்து ஏன்? இத்தகைய சதிகளும் மர்மங்களும் அடங்கிய கூட்டத்தின் தலைவர் பழ நெடுமாறனைத்தான் உங்கள் பிரபாகரன் மலைபோல நம்பினார் என்பதன் பொருள் என்ன? பதிலளிக்க வேண்டியது நீங்கள்தான் ரதி!

  3. //எதைப்பற்றியும் பரிசீலிக்காமல் முரண்பட்ட கருத்துகளை விவாதத்துக்கும் உட்படுத்தாமல், //
    முரண்பட்ட நீங்கள் தான் விவாதத்திற்கு உட்படுத்தவேண்டும்

    //ஐயா சொல்படி நடப்போம் என்று முடிவு எடுக்கும் மாநாட்டுக்கும், // முரண்பாடு இல்லாதவர்களை முரண்டு படச்சொல்லுகின்றீர்களா ?

    //அம்மா சொல்படி நடப்போம் என்று முடிவு எடுக்கும் அதிமுக பொதுக்குழுவுக்கும் என்ன வேறுபாடு?//
    ஐயாவையும் அம்மாவையும் ஏன் ஒப்பிடுகின்றீர்கள்

    //வட்டுக்கோட்டைத் தீர்மானத்தைப் பற்றி வட்டுக்கோட்டையில் (இலங்கை மண்ணில்) வாழும் தமிழர்கள் என்ன சொல்கிறார்கள்? கேட்கத் தேவையில்லையா? வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்குப் பின்னர் பிறந்த தமிழர்களிடம் அது பற்றிக் கேட்கத் தேவையில்லையா? //

    புலம் பெயர் நாடுகளில் வட்டுகோட்டைத்தீர்மானத்தை குழப்பும் இந்தோ லங்கா க்கள் வட்டுக்கோட்டையில் நடாத்த விடுமா ?

    அதை நடாத்த முற்படுபவர்களையும் உயிரோடு விடுமா ?

    வட்டுக்கோட்டைக்கு என்ன வழி என்று கேட்டால் கொட்டைப்பாக்கு என்பது போல் உள்ளது

    //அன்று முதல் இன்று வரை நடைபெற்ற போராட்டத்தின் சரி பிழைகளை ஆராயத் தேவையில்லையா? புலிகள் இயக்கத்தின் ஆதரவாளர்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.//

    ஆடு நனைகின்றது என்று ஓநாய் அழுவது போல் இருக்கின்றது
    ஏற்கனவே பிளவு பட்டிருக்கும் தமிழர்களை இன்னும் பிளவு படுத்துவதற்கு இது ஒரு சாட்டு

    சரி ஆராய்ந்து என்ன வேறு இயக்கம் தொடங்கப்போகின்றீர்களா ?

    தமிழர்களின் விடிவுக்கு அடுத்த ஆயுதப்போராட்டத்தை உருவாக்கக் கூடியவர்கள் மட்டும் தான் புலிகளின் சரி பிழைகளை ஆராய்வதற்கு தகுதியானவர்கள்

    ஆனால் அதற்கும் புலிகளை விட்டால் வேறு யாரும் கிடையாது

    ஆனால் உங்களைப் போன்றவர்கள் அடிக்கடி இப்படி உச்சரிப்பது புலிகள் மேல் சேறு பூசி புலிகளை தமிழர் மனங்களிலிருந்து அகற்றும் துரோகச் செயலே

    //நாம் பிரபாகரனை மறக்கச் சொல்லவில்லை. இந்தப் போராட்டத்தின் சரி பிழைகளை நினைக்கச் சொல்கிறோம்.//

    புலிகளை போற்றி சேறு அடிக்கும் பாணி

    இது போன்ற பலர் கிளம்பி பல நாட்களாகி விட்டது
    புதினத்தில் வழுதி
    நக்கீரனில் ஜெகத் கஸ்பார்
    ஈழநாட்டில் புலிகளின் முன்னால் ஆலாத்தி நிலாந்தன்

    சரி வினவிற்கு நீங்களா ? அல்லது நீங்களே வினவா ?

    http://suthumaathukal.blogspot.com/2009/12/blog-post_8801.html

    • எல்லாளன் சுற்றி வளைக்காமல் பதிலளிக்கவும். இப்போது புலிகளின் இயக்கத் தலைவர் யார்? புலிகளின் செயல்திட்டம் என்ன? முள்ளிவாய்க்கால் தோல்விக்குப் பிறகு வன்னி மக்களும், புலம்பெயர்ந்த மக்களும் செய்ய வேண்டிய வேலைத்திட்டங்கள் என்ன? இதைப்பற்றி புலிகள் என்னவென்று அறிவித்திருக்கிறார்கள். இப்போது புலிகளிலேயே பல பிரிவுகள் இருப்பதன் பின்னணி என்ன? ஈழ மக்களை ஒடுக்கிய பாசிச ஜெயாவின் பினாமி உதவியில் பழநெடுமாறன் நடத்தும் இந்த மாநாட்டின் உள்நோக்கம் என்ன? சில புலிகள் பிரபாகரன் இறந்துவிட்டதாக சொல்லும்போது நெடுமாறன் மட்டும் அவர் உயிருடன் இருப்பதாக அடித்துச் சொல்லுவதன் மர்மம் என்ன? நீங்கள் நெடுமாறன் ஆளா? இல்லை என்ன வகை புலிக்கோஷ்டியின் ஆதரவாளர்? அறியக் காத்திருக்கிறோம்.

    • சரத்பொன்சேகாவிற்கு வாக்களிக்க வேண்டுமென்பதுதானே எல்லாளன் உங்கள் நிலைப்பாடு. எந்த சரத்பொன்சேகா? முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை நடத்திய சரத்பொன்சேகாதானே? இரண்டு கொலைகாரர்களையும் புறக்கணிப்பதை விட்டு ஒரு கொலைகாரனுக்கு வக்காலத்து வாங்குவதுதான் புலிஆதரவாளர்களின் இன்றைய அரசியல் என்றால் என்னத்தைச் சொல்ல?; எவ்வளவு பட்டும் இன்னும் அறிவு வரவில்லை என்றால் புலிகளை யார்தான் காப்பாற்ற முடியும்?

  4. நல்ல முயற்சி.ஆனால் திசை மாறி சென்று விட்டது போல் தெரிகிறது ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்.நடைபெற்றது இலக்கிய கூட்டம் அல்ல.இன்றைய சூழலில்,தமிழன் என்றொரு இனமுண்டு.அந்த இனம் உரிமைகள் மறுக்கப்பட்டு,நசுக்கப்படுகின்றது என்ற உண்மை வெளி உலகுக்கு தெரிய வந்திருக்கிறது என்றால் அதற்கு மூல காரணமானவர்கள் புலிகளே.சும்மாவாகிலும் நாலு பேர் கேள்வி கேட்கும் அளவுக்கு கொண்டு வந்திருக்கிறார்கள்.இதுவே பாரிய வெற்றி இல்லையா?உரிமைக்காகப் போராடும் ஒவ்வொருவரும் தலைவர்களே.சரியான நேரத்தில் பெரிசு வரும்.பொறுத்திருங்கள்.

  5. பெரியாராவது சிறியாராவது. போங்கடா சீனனின் அடிவருடிகளே.

  6. ரியல் என்கவுண்டர்,

    ஐயா நெடுமாறன் அவர்களின் பிரபாகரனின் இருப்பு பற்றிய கருத்துக்களில் எனக்கும் உடன்பாடு இல்லைதான். இந்த விடயத்தில் இவர்கள் தமிழக தமிழர்களை குழப்புகிறார்கள் என்பதுதான் ஆரம்பத்திலிருந்தே என் கருத்து. அடிப்படையில் நீங்கள் ஓர் விடயத்தை மறந்துவிடுகிறீர்கள். நாங்கள் ஈழத்தமிழர்கள். எங்களின் உரிமைகளை இவர்கள் அல்ல இந்தியாவிலுள்ள வேறு  யாருமே பெற்றுத்தரப்போவதில்லை என்பதில் எங்களுக்கு மாற்றுக்கருத்து கிடையாது. ஆனால், எங்களின் குரலை, நியாயத்தை தமிழக தமிழர்களிடம் கொண்டு செல்லும் ஓர் ஊடகமாகத்தான் நான் இவர்களை பார்க்கிறேன். அவலத்தில் தத்தளிக்கும் நாங்கள் எந்த துரும்பை கண்டாலும் பற்றிக்கொள்ளும் நிலையில் தான் இன்னும் உள்ளோம். அப்படி நாங்கள் ஆரம்பத்திலிருந்தே பற்றிக்கொண்டவர்களில் ஒருவர் தான் ஐயா நெடுமாறன். இப்போதுள்ள அரசியல் சூழலில் நீங்கள் சொல்வதைப்போல் அவருக்கும் மற்றைய அரசியல் கட்சிகளுக்கும் என்ன தொடர்பு? இந்த கூட்டத்தின் பலன் என்ன? இதையெல்லாம் தமிழக தமிழர்கள் சிந்திக்கட்டும். ஒருவேளை, இவரும் நீங்கள் சொல்வது போல் மாறிவிட்டால் இதற்கென்று நாங்கள் தனியாக உட்கார்ந்து இனிமேல் அழவேண்டிய கட்டத்தை தாண்டிவிட்டோம். அனாலும், நன்றி மறத்தல் நன்றன்றே. திருமாவளவன் போல் தான் இவரும் என்றால் காலம் அதை சொல்லத்தானே போகிறது. 

    ஆனால், தமிழக தமிழர்களுக்கு சரியான ஓர் தலைமை அல்லது வழிகாட்டல் என்கிற வெற்றிடம் நிரப்படும் வரை இது தொடரத்தான் போகிறது. ஈழத்தமிழர்கள் விடயத்தில் நீங்கள், தமிழ்நாட்டு தமிழர்கள், எல்லோரும் எப்போது ஒற்றுமையாய் ஒருமித்த குரலில் பேசுவீர்கள்? கனத்த மனங்களோடு நாங்கள் காத்திருக்கிறோம். அந்த ஒற்றுமை எங்களுக்கு மட்டுமல்ல உங்களுக்கும் நன்மை தரும். இங்கே ஒருவர் மாற்றி ஒருவர் மற்றவரை விமர்சிப்பதிலேயே காலம் கடந்துகொண்டிருக்கிறது. இது அறிவுரையா? இருக்கட்டுமே. எங்களுக்கு நீங்கள் எவ்வளவோ அறிவுரை சொல்லும் போது நாங்களும் இதை உரிமையோடு தான் சொல்கிறோம். வேறுவழியில்லை, என் அரசியல் அறியாமைக்கு எட்டியவரை சொல்லிவிட்டேன்.  

    • ஐயா நெடுமாறன் பிரபாகரன் இருப்பு பற்றி இன்னமும் குழப்ப வேண்டிய தேவை என்ன? இந்தக் குழப்புதலில் அவர் அடையும் ஆதாயம் என்ன? சும்மா போகிற போக்கில் அவர் இப்படி பேசமாட்டார் என்பதால் இதன் பின்னணியை நீங்கள் விவரிக்கவேண்டியது அவசியம். அடுத்து ஈழத்தமிழரின் உரிமையை இந்தியாவில் எவரும் பெற்றுத் தரவேண்டிய அவசியம் இல்லை என்று சொல்லிவிட்டு அடுத்த வரியில் கிடைக்கும் எந்த துரும்பும் அவசியம் என்கிறீர்கள். அந்த துரும்பு பாம்பாக இருக்கிறது என்பதே என் கேள்வி. இந்தியாவின் மேலதிக்கத்தின் தயவில் ஈழத்தை அடைந்து விடலாம் என்று தரகர் வேலை செய்யும் பழ நெடுமாறன் உள்ளிட்டவர்களோடு உண்மையான ஈழ விடுதலையை விரும்பும் சக்திகள் எப்படி சேர முடியும்? எப்படியாவது அனைவரும் ஒன்று சேரவேண்டும் என்ற கோரிக்கையில் அரசியல் இல்லை. அதுதான் இப்போது புலி ஆதரவாளர்கள் சரத்பொன்சேகாவை ஆதரிக்கும் இழிவான நிலையில் கொண்டுபோய் சேர்த்திருக்கிறது.

  7. ரியல் என்கவுண்டர், 

    //இத்தகைய சதிகளும் மர்மங்களும் அடங்கிய கூட்டத்தின் தலைவர் பழ நெடுமாறனைத்தான் உங்கள் பிரபாகரன் மலைபோல நம்பினார்//

    நான் கீழே/மேலே எழுதியுள்ள பதிலை படித்திருப்பீர்கள் என நம்புகிறேன். நீங்கள் நெடுமாறன் அவர்களை உங்கள் பாணியில் “என்கவுண்டர்” செய்யுங்கள். பிறகு, அவரின் இடத்தை நீங்கள் பிடித்துக்கொள்ளுங்கள். அதில் எங்களுக்கு வருத்தம் இல்லை. இதில் பிரபாகரனை ஏன் இழுக்கிறீர்கள். பிரபாகரனை நெடுமாறன் நேசிக்கிறார். பிரபாகரன் நெடுமாறனை நேசித்தார். இதற்குமேல் எல்லாமே உங்கள் கற்பனை. பிரபாகரன் தன் பேட்டிகளிலும், மாவீரர் உரையிலும் இதை எத்தனை தடவையோ தெள்ளத்தெளிவாக, எளிய தமிழிலில் சொல்லிவிட்டார். தான் தன்னையும், ஈழம் என்ற லட்சியத்தோடு தன் பின்னால் வந்த போராளிகள், எந்த மக்களுக்காக போராடினாரோ அந்த மக்கள் இவர்களை நம்பித்தான் ஈழப்போராட்டம் நடத்தினார். இந்த எளிய உண்மை புரியாமல், “பிரபாகரன் இந்தியாவை நம்பிக்கினு இருந்தாரு, நெடுமாறனை நம்பிக்கினு இருந்தாருன்ட்டு”.  என்னங்க இது. தாங்கமுடியலைங்க உங்க அபத்தம். உங்கள் கருத்தை மற்றவர்கள் ஏற்றுக்கொண்டே தான் ஆகவேண்டும் என்ற தொனிதான் உங்கள் பதில்களில் தெரிகிறது. இது ஆரோக்கியமானதல்ல. 

    உங்கள் பாசையில், சதி, மர்மம், கூட்டத்தின் தலைவர் இதையெல்லாம் தயவுசெய்து மக்களுக்கு ஆராய்ந்து தெரியப்படுத்துங்கள், தெளிவுபடுத்துங்கள். இந்த சதி, மர்மம் எல்லாத்தையும் கியப்பியவர் நீங்கள் தான். பிறகேன், என்னை பதிலளி என்கிறீர்கள்? 

    • “எந்த மக்களுக்காக போராடினாரோ அந்த மக்கள் இவர்களை நம்பித்தான் ஈழப்போராட்டம் நடத்தினார்”
      இப்பத்தான் இந்த விசயமே தெரியும். தெரிந்தால் கொஞ்ச்ம் விளக்கலாம். உங்களுக்கு புலிகள் புனிதர்களாக இருந்து விட்டு போகட்டும் யாரும் உண்மையை சொல்லக்கூடாதா என்ன? எத்தனை காலத்துக்கு அதைப்பற்றி பேசாமல் இருப்பீர்கள். இதற்கு பேர் என்ன வகையான உணர்வு? நெடு கோஷ்டி உண்மையான இன உணர்வு இருந்திருந்தால் சாதா தாயை ஸ்பெசல் ஈழமாதாவாக்குவார்களா? அர்ஜுன் சம்பத் இது இந்துப்பிரச்சினை என்றாரே(!)
      இதெல்லாம் உங்களுக்கு கோவமே வரலையா. எவன் வாங்கி கொடுத்தாலும் வாங்கித்தின்ன இதென்ன கல்ல பர்பியா?

      “திருமாவளவன் போல் தான் இவரும் என்றால் காலம் அதை சொல்லத்தானே போகிறது”
      என்னங்க எப்ப பார்த்தாலும் டென்ஷன் ஆகுறீங்க! நெடுசார் திருமா மாதிரி ஆகலை என்கிறீர்களா? என்னவோ அந்த ரெண்டுக்கும்’ வித்யாசம் தெரியலை.

      ஈழத்தைப்பற்றி 3 புத்தகம் வந்திருக்கு வாங்கி படியுங்க

      1.நேர்மையான சந்தர்ப்பவாதமும், நேர்மையற்ற சந்தர்ப்பவாதமும்
      2.ஈழம் – ஒரு மீளாய்வு
      3.வர்க்கப்பார்வையை மறுக்கும் தமிழ்த்தேசியர்கள்

  8. எல்லோரைப்பற்றியும் எல்லாவற்றை பற்றியும் திட்டி தீர்ப்பது ஒரு மனநோய். விளைவு ….வினவு.

  9. //தமிழ் ஈழம்தான் ஒரே தீர்வு, பிரபாகரன்தான் ஒரே தலைவர் என்று நீங்கள் நம்பிக்கையுடன் முழங்கிய காலம் ஒன்று இருந்தது.//

    அப்போ இனிமேல் எல்லோரும் சீனா சொம்பு தூக்கிகளை நம்புங்கள் !

    //இலங்கையில் இந்திய மேலாதிக்கத்தின் புதிய காய்நகர்த்தல்கள்//

    சரி இலங்கையில் சீனா ,ரஷ்யா என்ன மேலாதிக்கம் செய்கிறது வினவு !

    இங்கே வினவோ ,, இல்லை நெடுமாறனோ ஈழ தமிழ் மக்களுக்கு ஒன்னும் பெருசா செய்யபோவது இல்லை , பதிக்கப்பட்ட அவர்கள் தான் அவர்களை சரி செய்து கொல்ல வேண்டும் ,, புலிகளையும் ஈழ பிரச்சனையும் பேசி கலாம் கடத்துவதும் அதனால் பயன் அடைவதும் நெடுமாறன் கொள்கை என்றல் இந்த மாதிரி கட்டுரை வெளிடுவது உங்கள் கொள்கையோ ,,

    சி ,பி ,எம் போலி கம்யூனிசம் என்றல் ,,,வினவு சால்ரா ( சொம்பு தூக்கி ) கம்யூனிசம்

  10. ரதி……….பிரபாகரன் முஸ்லீம்களை துரோகிப் பட்டம் கட்டி குடும்பம் குடும்பமாக சொந்த ஊர்களிலிருந்து அநாதைகளாக விரட்டி விட்டார். இப்போது நெடுமாறன் இந்து அடிப்படை வாதிகளோடு சேர்ந்து கொண்டு ஈழப் பிரச்சினை இந்துக்களின் பிரச்சினை என்று சொல்கிறார். இது உங்களுக்கு உறுத்தவே இல்லையா? நீங்கள் ஆதிக்க சாதியில் பிறந்த இந்துப் பெண்ணாக இல்லாமல் ஒரு தலித்தாகவோ முஸ்லீமாகவோ பிறந்திருந்தால்தான் இந்த அசிங்கத்தை உணர்வீர்களா?

    • வித்தகன் ரதி ஏற்கனவே தான் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்தவர் என்பதை ஒரு விவாத்தஃதில் பதிவு செய்துள்ளார். பிரச்சினை அதுவல்ல, ஈழப்பிரச்சினையில் அவர் தமிழ்நாட்டு புலிஆதரவாளர்களது மனநிலை செட்டப்பையே கொண்டு வளர்ந்துள்ளார். இந்த அம்மாவை மாற்றுவது சிரம்மஃ என்றே தோன்றுகிறது.

  11. // சீன அபாயம் என்பதே அமெரிக்க இந்தியக் கூட்டணி தனது தெற்காசிய மேலாதிக்கத்தை நியாயப் படுத்துவதற்காக உருவாக்கியிருக்கும் புதிய கொள்கைப்பாடல் என்பதையோ சூரியதீபன் சுட்டிக்காட்டவில்லை.////
    அப்படியா ? அப்ப சீனாவினால் எந்த அபாயமும் இல்லையா என்ன ? இந்திய மாவோயிஸ்டுகளுக்கு ஆயுதங்களும், உதவிகளும் பின் inஎங்கிறுந்து யார் செய்கிறார்கள் ?
    China considers India as a dangerous competitor both in economic and politcal spheres. And Chinese rregime is ruthless and unethical enough to try to destabilise India thru hook or crook. Chinese play a dangerous power game and are neither communists nor maoists. just old fashioned power politics. And people like you acts as their ‘helpers’ without even realising all this.

    • இப்போ அண்டை அயல் நாட்டிலெல்லாம் குறுக்கிடுவது இந்தியாவா அல்லது சீனாவா?
      இலங்கையிலே நேபாளத்திலே எல்லாம் இந்தியா பண்ணுகிற அட்டுழியம் தெரியாமலா பேசுகிறீர்கள்?
      உங்கள் கவலை இலங்கையில் இந்திய ஆதிக்கம் இல்லது போய் விடும் என்பதா?
      இலங்கையில் எந்த அந்நியக் குறுக்கிடும் வேண்டாம்.
      இது வரை பட்டது போதும்.

      “ரா” பி. ராமன் போல நபர்கள் கிளப்பி விடுகிற புரளிகளை நம்ப விரும்புகிறவர்கள் நம்புகிறார்களே ஒழிய உண்மை தெரிந்தவர்களல்ல

  12. இன்னமும் தமிழகத்தில் புலிகள் குறித்தான ஒரு வகை ஹேங் ஓவர் மிச்சமிருக்கிறது. புலம்பெயர் ஈழத் தமிழரிடமும் கூட அதே வித மனப்பான்மை
    உள்ளதை அவதானிக்க முடிகிறது. புலி ஆதரவாளரிடமும் புலி எதிர்ப்பாளரிடமும் ஒரே விதமான ஒரு அப்செஷன் இருக்கிறது. புலி ஆதரவாளர்கள்
    ஒன்றை புரிந்து கொள்ள மறுக்கிறார்கள் – அது களத்தில் நின்ற புலிகள் முற்றாக அழிந்து போய் விட்டார்கள் (களத்தில் நின்ற என்று சொல்லி
    இருக்கிறேன்) புலி எதிர்ப்பாளர்களோ – சரியோ தவறோ, புலிகளின் இந்த முப்பதாண்டு கால போராட்டம் ஈழ விடுதலைக்கான களத்தை
    முப்பதாண்டுகளுக்கு முன்பிருந்த நிலையினின்று வெகுவாக மாற்றியமைத்திருக்கிறது என்பதையும், இனி விடுதலைப் போராட்டம் என்பது புலிகள்
    இதுகாறும் செய்திருந்த (விடுதலைக்கான நேர்மையான) பங்களிப்புகளின் மேல் நின்று தான் தொடர முடியும் என்பதையும் பார்க்க மறுக்கிறார்கள்.
    புலிகள் 100% தவறே செய்தவர்களுமல்ல – அதே நேரம் 100% சரியே செய்தவர்களுமல்ல. இப்படித்தான் நான் புரிந்துகொள்கிறேன்.

    ராம்போ, ராக்கி வரிசைப் படங்களில் நாயகன் எல்லா நம்பிக்கையையும் இழந்த பின், கடைசிக்கட்டத்தில் திடீரென்று சீறியெழுந்து எதிரிகளை
    பந்தாடுவதை பார்க்கையில் ரசிகர்கள் கொள்ளும் ஒரு விதமான உணர்வை தமிழகத்தில் நான் சந்தித்த சில புலிஆதரவு நன்பர்கள் வெளிப்படுத்துவதைக்
    கவனித்திருக்கிறேன். பிரபாகரன் ஒரு ராம்போவும் அல்ல – விடுதலைப் போராட்டம் ஒரு ஆக்ஷன் திரைப்படமும் அல்ல எனும் உண்மை
    அவர்களுக்கு உரைக்க மாட்டேனென்கிறது.

    புலிகளின் மேலான அரசியல் விமர்சனங்களைக் கண்கொண்டு காண மறுக்கிறார்கள் – விஷயங்களை உள்ளே எடுத்துக் கொள்ளாமலேயே இடது
    கையால் புறந்தள்ளுகிறார்கள். இது ஒருபுறமென்றால், மறுபுறம் தமது செயலற்ற தன்மையை புலியெதிர்ப்பு கொண்டு மறைக்க எத்தனிக்கும்
    போக்கு ஒரு புறம். இன்னுமொருபுறத்தில் தெட்டத்தெளிவாக புலியெதிர்ப்பு என்பதனூடாக சிங்கள பேரினவாதத்திற்கு காவடி தூக்கும் இந்து பாணி
    விமர்சகர்கள் ஒரு பக்கம்.

    களத்தில் போராடி உயிர்நீத்த புலிகளின் தியாகத்தை அங்கீகரிப்பதுடன் அவர்களை அந்த அழிவுக்குள் தள்ளிய காரணிகளை ஆய்வுக்குட்படுத்தும் கட்டுரைகள் இன்றைய தேவையாயிருக்கிறது.

    சகோதரி ரதி, எள்ளாலன் போன்றவர்கள் விமர்சனம் என்பதே சேறடிப்பு என்று குறுகிய நோக்கில் புரிந்து கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

  13. மணியரசன் “பிரபாகரன் புகழுக்குரியவர்தான் எனினும் புகழ்ந்து கொண்டே இருக்கவேண்டும் என்பதில்லை’’ என்றதை அவர் சீரணிக்கமுடியாத பொறாமையில் பேசினார் என்று எழுதியிருப்பது தினமலம் தரத்திலான விஷமப் பார்ப்பனியம். 
    “சீன அபாயம் என்பதே அமெரிக்க இந்தியக் கூட்டணி தனது தெற்காசிய மேலாதிக்கத்தை நியாயப் படுத்துவதற்காக உருவாக்கியிருக்கும் புதிய கொள்கைப்பாடல்” ‍உலகின் எல்லா பிரச்சினைக்கும் அமெரிக்காவே காரணம்; சீனர்கள் பால்குடி மறக்கா பாலகர்கள் எனும் வழக்கமான புரட்சிகர சிந்தனை வழக்கம் போல புல்லரிக்க வைக்கிறது.
    ம‌ற்றபடி, ஆரோக்கியமான விவாதங்களோ, கொள்கை விளக்கங்களோ, கருத்துப் பரிமாற்றங்களோ இல்லாமல் வெறும் உணர்ச்சி வசப்பட்ட பேச்சுக்களும் கைதட்டல்களுமாக மாநாடு  நட‌ந்துள்ளதையும் மாநாட்டின் பின்னணியில் ஒரு உள்ளூர் அரசியல் இழை மெலிதாக ஓடியிருப்பதையும் சுட்டிக் காட்டியதில் கட்டுரையாளருடன் நான் உடன்படுகிறேன். 
    ஆதாரமில்லாமல் பிரபாக‌ரன் உயிரோடு இருக்கிறார் என்று சொல்வேனா என்று சமீபத்தில் நெடுமாறன் ஜூவி நேர்காணலில் சொல்லியிருந்தார். பிராபாகரன் இருக்கிறாரா இல்லையா என்ற கேள்வியை அப்படியே விட்டுவிட்டு  ஈழவிடுதலைக்கு  ஆற்ற வேண்டிய வேலைகளைப் பார்ப்பது நலம் என்பது என் கருத்து.

  14. அய்யா நெடுமாறன் ஏமாந்தது வைகோ என்ற அரசியல் சுயநலவாதியிடம்.
    கலைஞரிடம் அவர் சேராமல் கடைசிவரைப் பார்த்துக் கொண்டார்.
    தன்னைச் சிறையில் வைத்து அவமானப் படுத்திய முந்தானையுடன் முடிச்சுப் போட்டுக் கொண்டார்.தன்னை விடுவித்து ஆதரித்தத் தமிழ் உணர்வாளர்களிடமிருந்து விலகக் கூடாத நேரத்திலே விலகி தமிழின அழிவின் முக்கிய காரணமாக ஆகிவிட்டது தமிழினத்தின் வேதனை.
    இனியாவது வெறும் உணர்ச்சி வார்த்தைகளை நம்பாமல் சேர வேண்டியவர்களுடன் சேர்ந்து ஆக்க பூர்வமாகச் சிந்தித்துச் செயல் பட,
    நொந்து போன இதயத்துடன் வேண்டுகின்றோம்.

  15. எனக்கு இந்த பதிவில் சுத்தமாக உடன்பாடு இல்லை. ஏனென்றால், சேறு இறைப்பது வெகு ஈசி. அதை நீக்குவது ரொம்ப கட்டம். அவர் வேஷம் கலைகிறது என்றால் அதில் உங்களுக்கு என் இந்த ஆர்வம்? தயவு செய்து மக்களுக்கு நல்ல கருத்துகளாக எழுதுங்கள்.

  16. நன்றி மிக அருமையான கேள்விகள், எல்லோரிடுய மனதிலும் இது இருக்கிறது . ஈழ கடைசி போரில் விடுதலை புலிகள் நம் தமிழக தலைவர்களிடம் கடைசி வரை பேசினார்கள் . வைகோ கடைசீயாக அமைரிக்கவுக்கு ஈமெயில் அனுப்பினார். கதறி அழுதிருந்தார் . ஆனால் பின் மௌனமாகிவிட்டார். போருக்கு பின் நடந்தைவகள், போருக்கு முன் நடந்தவைகளை, இவர்கள் மறைக்கிறார்கள். அதில் உண்மைகளை சொல்லி அடுத்த கட்டதிருக்கு நகரவும் மறுக்கிறார்கள். கேட்டால் வைகோ தான் கனவு கண்டதை சொல்லுகிறார்.நெடுமாறன் ஒரு கதை சொல்லுகிறார். அனால் இன்றைக்குவரை நெடுமாறன் ஒருவர் தான் பிரபாகரன் உயிரோடு இருப்பதாக அடித்து சொல்லுகிறார். அவர் மீது உள்ள நம்பிக்கையீன் வெளிப்பாடே தமிழ் உணர்வாளர்களின் நம்பிக்கை. அனால் களத்து நிலைமைகள் மாறி வருகின்றன. எந்த ஒரு விடுதலை இயக்கமும் இப்படி ஒரு பின்னடைவை அடைந்தது கிடையாது. அதைப்போல எந்த ஒரு விடுதலை இயக்கமும் அடுத்த கட்ட நகர்வை இவ்வளுவு தாமத படித்தியது இல்லை. இவர்களின் நோக்கம்தான் என்ன என்றே புரியவில்லை.போருக்குப்பின் இத்தனை காலமாக ஒரு நம்பிக்கையான.,தகவல் தொடருபுக்கு கூட ஆளில்லை என்பதுதான் உண்மை. இந்த இயக்கம் மீண்டும் உருவானாலும் அந்த நம்பிக்கைதன்மை வருமா என்பது சந்தேகம்தான். பத்து கோடி தமிலன்க்கும் ஒரு உண்மையான தமிழ் தலைவன் கிடைக்கவில்லை. இது ஒரு பரிதாபம்தான்.பிரபாகரன் வர வேண்டியது கூட இல்லை. அவருடைய இயக்கத்துக்கு ஒரு நம்பிக்கையான தகவல் தொடர்புக்கு ஆள் இல்லாத அளவுக்கு சிங்களமும் இந்தியாவும் சேர்ந்து அழித்துவிட்டது என்பது தான் உண்மை. நெடுமாறன் அவர்களின் கதை அடுத்த கட்டதிருக்கு ஈழ போரை கொண்டுசெள்ளவிடாமல் தடுக்கிறது.

  17. அந்த கடைசி கட்டத்தில் நடந்தவைகள் மூடு மந்திரமாகி போனது. அந்த அளவுக்கு புலிகள் தங்கள் தகவல் தொடர்புகளை வைத்திருந்தார்கள். ஆனால் அதற்க்கு முன்னால் வரையில் நெடுமாறன் போன்றவர்கள் இது ஒரு தந்திரம் விடுதலைபுலிகளின் தந்திரம் என்றே சொன்னார்கள்.அதைத்தான் நாம் நம்பினோம் . ஆனால் கதை முடிந்துவிட்டது. தோல்விகளை விமர்சனம் செய்து புதிய நடை போடுமா தமிழின விடுதலை போர்.

  18. ரியல் என்கவுண்டர்,
    நான் கிடைக்கும் எந்த துரும்பும் அவசியம் என்று சொன்னது வதைமுகாம்களில் உள்ள மக்களின் விடுதலையை மனதில் கொண்டு எழுதியது. அடுத்து, “இதன் பின்னணியை நீங்கள் விவரிக்க வேண்டியது அவசியம்” என்று எழுதியுள்ளீர்கள். எனக்கு சிரிப்பதா, அழுவதா என்று தெரியவில்லை. எனக்கு ஐயா நெடுமாறனின் இந்த கூட்டத்தின் அரசியல் பின்னணி தெரியும் என்று எதை வைத்து ஒரு தவறான கணிப்பீடு செய்கிறீர்கள்? இப்படியொரு கூட்டம் நடைபெற்றதே எனக்கு வினவில் படித்த பின் தான் தெரியும். இங்கே நானறிந்தவரையில் எந்தவொரு ஊடகத்திலும் இது பற்றிய செய்திகளை பார்க்கவில்லை. படிக்கவில்லை. ஒரேயொரு விடயம் என்னால் நிச்சயமாக சொல்லமுடியும். பொதுவாகவே ஈழத்திலும் சரி, புலத்திலும் சரி தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் மற்றும் தமிழ்நாட்டு தமிழர்களிடம் ஈழத்தமிழர்களுக்கு உள்ள நம்பிக்கை போய்விட்டது. பிரபாகரனின் இருப்பு பற்றி ஐயா நெடுமாறன் ஏன் குழப்புகிறார் என்பதெல்லாம் என் அரசியல் அறியாமைக்கு தெரியவில்லை. புலத்தில் தமிழர்கள் எவ்வளவு தூரம் இந்த மனிதரை நம்புகிறார்கள் என்றால், மனம் திறந்து சொல்கிறேன், இப்போதெல்லாம் இங்கே (கனடா) எந்த ஊடகமும் தமிழ்நாட்டு தலைவர்கள் பற்றி அதிகம் அலட்டிக்கொள்வதில்லை என்றுதான் தோன்றுகிறது. இலங்கை தேர்தல் கள நிலவரம் குறித்து எனக்கு எந்த கருத்தும் இல்லை. தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை கோமாளிகள் என்று சொன்னவர்கள், இன்று என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்? அனால், பொதுவான பேச்சு மகிந்தாவை இந்தியா ஆதரிக்கிறதாம். சரத்தை அமெரிக்கா ஆதரிக்கிறதாம். அப்போ போட்டி யாருக்கு என்று என் சிற்றறிவு ஓர் கேள்வி கேட்கிறது. உங்களைப்போன்ற அறிவாளிகள் பதில் தெரிந்து சொன்னால் நல்லது. 

     

  19. இறுமாப்பு வேண்டாம் இந்தியாவே! இனியாவது எங்களை வாழவிடு, துஸ்ட்டனே தூர விலகு……….

    கொடிதான இனப்படுகொலைகள் நடத்தப்பட்டு இப்போது அந்த மண் இரத்தம் படிந்த மேற்தரைகளோடு அமைதியாக இருக்கின்றது. அந்த மண்ணின் மக்கள் மட்டுமல்ல இலை, செடி, கொடி மரம் மிருகங்கள் என்று அனைத்துமே கருகிப்போயுள்ள அந்த பிரதேசம் இப்போது பேய்கள் உலாவும் மயானங்களாகவே உள்ளன.

    பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்று நீங்கள் அதற்கு பெயர் சூட்டி அழைத்தாலும் அங்கு பெருமளவில் இடம்பெற்றது இனப்படுகொலைகளே.

    மிகுந்த மூர்க்கத்தனத்தோடு நடத்தப்பட்ட மேற்படி படுகொலைகளைச் செய்ய நீங்கள் எத்தனை பேர் அந்த மண்ணில் நின்றீர்கள்? சுமார் 30 நாடுகளின் கூட்டுப் பங்களிப்பு அல்ல கூடாத பங்களிப்பு அது. அதிலும் வேடிக்கை என்னவென்றால் எதிரிகளாக தங்களுக்குள் மோதிக்கொண்ட பல நாடுகளே அங்கு மறைமுகமாக கைகோர்த்து நின்றன. நாங்கள் நன்றாகவே பார்த்தோம். உங்கள் பகைமைகளை மறைத்தபடியும் தற்காலிகமாக மறந்த படியும் அந்த மண்ணில் வந்து நின்று கொடிய சங்காரத்தை நடத்த வேண்டிய அவசியம் என்னதான் உங்கள் அனைவருக்கும் இருந்தது. காரணம் இருந்தது. அந்த சிறியதொரு தீவுக்குள் பெரியதொரு விடுதலை இயக்கம். முப்பது ஆண்டுகளாக முப்பதாயிரத்தை நெருங்கும் மாவீரர்களை மண்ணுக்கு விதையாகக் கொடுத்திருந்தாலும் இன்னும் பின்னடைவையே மனதாலும் எண்ணிப்பார்க்காத துணிவு. மூன்று படைகளையும் தங்களால் முடிந்த அளவிற்கு ஆரம்பித்து அவற்றின் வெற்றிகளை பல தடவைகள் பரீட்சித்துப் பார்த்த இராணுவ பலம். தென்கிழக்கு ஆசியாவின் நிலப்பரப்பிற்குள் இன்னுமொரு புதிய நாடு உருவாகுவதா? அதுவும் ஆயுதப் புரட்சியின் மூலம் அது சாத்தியமாவதா? ஆபத்தான விடயம் இது என்ற தவறான கணிப்பு. இவைதான் உங்கள் சங்காரத்திற்கு நீங்கள் கற்பித்துக் கொண்ட காரணங்கள்.

    இந்தியாவே உன்னை நோக்கிய எத்தனை கோரிக்கைகளை நீ உதாசீனம் செய்தாய். உலகின் பலமான ஒரு விடுதலை அமைப்பை அழிப்பது என்ற உன் தீர்மானத்திலிருந்து சற்றும் விலகவில்லை. ஆனால் மக்களின் கோரிக்கைகளுக்கு மதிப்பளிப்பது போல பாசாங்கு செய்தாய். தமிழ் நாட்டில் தமிழ்த் தலைவர்களுக்கிடையே நீண்ட பகையை ஏற்படுத்த தீவிரமாகச் செயற்பட்டாய். மேற்குலக நாடுகளிலிருந்து வீதிகளில் இறங்கி மன்றாட்டமாக கேட்டுக் கொண்ட தமிழர்களின் அவலக் குரல்கள் கேட்டும் கேட்காத செவிடன் போல உன் செயற்பாடுகள் இருந்தன.

    தீங்கு செய்ய முயன்ற உனக்கு நீ தவறுகள் செய்வதை உணர முடியவில்லை. உன்னைச் சுற்றியுள்ள பாகிஸ்தான், சீனா ஆகியவை இரண்டும் உன் பரம விரோதிகள். உன்னை அழித்து உன் வளர்ச்சியை சிதைக்க எந்த நாட்டோடும் கூட்டுச் சேர்வதற்கு தயாரான நாச நாடுகள் அவை. இது உனக்கு நன்கு தெரியும். ஆனால் தமிழர்களின் கண்ணீருக்கும் செந்நீருக்கும் காரணமாக அமைந்து விட்டது உன் கபடநாடகம்.

    இந்தியாவிற்காக யுத்தத்தைதான் நாம் நடத்தினோம் என்று இலங்கை கூறியபோது உன் வெளியுறவுச் செயலாளர் சிவ்சங்கர் மேனன் அதை ஆமோதித்துள்ளார். ஆமாம் இந்தியாவிற்குரிய யுத்தத்தைத்தான் இலங்கைப் படைகள் நடத்தின என்று இலங்கையின் கூற்றை அவர் ஆமோதித்தார். நான் நடத்த வேண்டிய யுத்தத்தை எனக்காக எனது நண்பன் இலங்கை செய்தான் என்று நீ இன்று கூறுகின்றாய். இறுமாப்புக் கொள்கின்றாய். ஆனால் எங்கோ மேற்குலக நாடொன்றின் உனக்கெதிரான யுத்தத்தை உனது அண்டை நாடுகளான பாகிஸ்தானும் சீனாவும் நாளையோ அன்றி மறுநாளோ செய்கின்ற ஒரு காட்சியை நாம் மனக் கண் கொண்டு பார்க்கின்றோம். அந்த கொடிய யுத்தம் தொடங்கி உனது மக்களும் படைகளும் வளங்களும் அழிக்கப்படுகின்றபோது உனக்காக அனுதாபம் காட்ட ஒருவருமே இருக்கமாட்டார்கள்.

    இன்று வன்னி மக்களின் வளத்தையும் உயிர்களையும் அழிக்க உன்னோடு ஒன்றாய் நின்ற அந்த 30 நாடுகளும் மறுபுறத்தே நின்று உன்னை அழித்து நிற்கப்போகின்றன. அப்போது ஈழத்தமிழகத்தில் அழுவதற்கு தமிழர் இல்லாவிடினும் உனக்காக உலகெங்கும் வாழும் தமிழர்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை மறந்து உனக்காக குரல் கொடுப்பார்கள்.

    உலகெங்கும் புலனாய்வு வேலைகளை செய்யும் உனது றோவிற்கு நிச்சயம் தெரிந்திருக்கும் இந்த விடயம். சீனாவும் பாகிஸ்தானும் உனது எல்லையை நோக்கிய பிரதேசங்களில் தங்கள் படைகளையும் பயங்கர ஆயுதங்களையும் குவித்துள்ளன. இன்னும் எத்தனை மாதங்களோ அன்றி எத்தனை ஆண்டுகளோ அந்த இரண்டு கொடியவர்களாலும் நீ குறிவைக்கப்படுவாய். குதறப்படுவாய். பல துறைகளில் முன்னேற்றம் கண்ட உன் வளங்கள் உன் கண் முன்னால் அழிக்கப்படும். அப்போதுதான் நீ உணர்வாய். அந்த கொடுமைகளை தாங்கும் சக்தியை உனக்கு தரவல்லவர்கள் யார் உள்ளார்கள் என்று நீ நிச்சயம் ஏங்கித் தவிப்பாய். நேற்று நீ செய்த நாச வேலைகளுக்கு உடனேயே தண்டனை கிடைத்து விட்டது என்று உன் தேச மக்கள் கண்ணீர் வடிப்பார்கள். ஈழத்தமிழர்கள் விட்ட கண்ணீரும் சிந்திய செங்குருதியும் உன் கண்களின் முன்பாக தோன்றி மறையும் நமது மக்களின் சடலங்களின் தடயங்களை அழித்துவிடலாம். ஆனால் அவைகள் பற்றிக்கொண்டிருக்கும் உண்மை வெளிப்பட்டே தீரும். அன்றைக்கு தான் இனப் படுகொலைக்கு துணை போன உன் நாட்டுத் தலைமையின் நாகரீகமற்ற நடவடிக்கைக்காக இந்தியா என்ற நாடு வெட்கித் தலை குனியும் நாள் வரும்.

  20. இந்திய அரசியல் சனநாயகம் என்பது ஒரு பெண்ணை ஐந்து நபர்கள் பலாத்காரம் செய்வதற்கு சமம். இன் நிலையில் தமிழர் பிரட்சினைகளை விட தன் கட்சிகளுக்கு அரச பிரதிநிதித்வம் முக்கியம் என்பதை மனதில் கொண்டு கூட்டணிக்கான தவிர்பாக கருதலாமே ஒழிய பிரட்சினைகளில் இருந்து பின் வாங்கிவிட்டார்கள் என கருதக்கூடாது. தாய் தமிழகத்தில் தேர்தலை புறக்கணித்த பெரியரைப்போல, ஐயா நெடும… மேலும் பார்க்காறன் அவர்கள் தனக்குரிய தியாகதன்மையோடு ஈழ தமிழர்களுக்கு பணிசெய்து வருகின்றார்கள்.

    தமிழர்கள் எதை வேண்டுமானாலும் விட்டுக்கொடுக்கலாம், மானத்தை விட்டுக்கொடுக்க முடியாது. இன்றைய சுழலில் ஒவ்வருடைய நடவடிக்கையையும் பலமாக எடுத்துக் கொண்டு, தனி ஈழம் பெறுவது ஒன்று தான் இதுவரை வாழ்ந்ததற்கு அர்த்தமுடையதாகும். இனி வரும் களப் போரில் தமிழ்நாட்டு தமிழனும் பங்கேற்பின் மூலம் உறுதி செய்ய வேண்டும். முதலில் ஈழ மக்களுக்கான நிலையான கொள்கையுடைய தமிழக பிரதிநிதிகள் இந்திய நாடாளுமன்றத்தில் இடம்பெற வேண்டும்.

    தமிழ் ஈழ தேசிய தலைவர் ஒரு ‘கலங்கரை விளக்கம்’ போன்றவர். ஆனால் இலட்சியத்தை வெல்லக்கூடிய ‘மாலுமிகள்’ யார்?

  21. எல்லாம் சரி நீங்கள் இப்போது என்ன சொல்ல வருகிறீர்கள்.  நாங்கள் அதிமுக வை ஆதரிப்போம் ஆனால் அவர்களுடன் சேர்ந்து பிரசாரம் செய்ய மாட்டோம் என்று காமடி பேசும் நபர்களின் கமட்கி போல் உள்ளது உங்கள் பதிவு.

  22. இலங்கை தமிழரின் உண்மையான எதிரி நிச்சயமாக சிங்களவன் இல்லை, இந்தியனே அது. 1947 முதல் சிங்களவனால் இன சுத்திகரிப்பிற்குட்பட்டு அரசியல் ரீதியாக போரிட்டு எதுவுமே கிடைக்காமல், இறுதியில் உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் வைத்து(1974ல்) சிங்கள ராணுவத்தால் 14 தமிழர்கள் கொல்லப்பட்ட பின்பு , ஆயுதம் ஏந்தினால் தான் தமிழன் தப்பலாம் என்ற நிலை ஏற்பட்ட போது, தமிழ் இளைஞர்கள் தம்முள் ஒன்று சேர்ந்த போது, அவர்களை இந்தியாவுக்கு அழைத்து ஆயுதபயிற்சி கொடுத்து அவர்களுக்கு ஆதரவு தந்தார் இந்திரா காந்தி அம்மையார்.இந்திரா காந்தி உயிருடன் இருந்திருந்தால் இப்போது தமிழீழம் எனும் சுதந்திர தேசம் தனது இருபதாவது சுதந்திர தினத்தை கொண்டாடி இருக்கும், ஆனால் அம்மையாரின் மரணம் எல்லாவற்றையும் மாற்றிவிட்டது.அதன் பின் பதவியேற்ற ராஜிவ் ஆளுமையற்றவராகவே இருந்தார்.இந்திரா காந்தி அம்மையார் இந்திய கொள்கை வகுப்பாளர்களை மிக திறமையாக இயக்கி இருந்தார்.ஆனால் ஆளுமையற்ற ராஜிவை இந்திய கொள்கை வகுப்பாளர்களே இயக்கியிருந்தனர். இந்திய கொள்கை வகுப்பாளர்களில் இருந்த மலையாளிகள் தமிழீழம் அமைவதை விரும்பவில்லை. ராஜிவ் பிழையாக வழி நடத்தப்பட்டார். றோவினால் தமிழ் இயக்கங்களிடையே பிளவுகள் ஏற்படுதப்பட்டன,பிரபாகரனை விட மற்றய அணைவரும் றோவினால் கட்டுப்படுத்தப் பட்டனர்.பிரபாகரன் மிகவும் உக்கிரமாக இலங்கை ராணுவத்தை எதிர்த்துப் போரிட்டார்.நெல்லியடியில் நடந்த தாக்குதலில் ஒரே நாளில் 500க்கு மேற்ப்ப்ட்ட ராணுவம் கொல்லப்பட, அப்போது இலங்கை ஜனாதிபதியாக இருந்த ஜயவர்த்தனா புலிகளை ஒரு போதும் இலங்கை ராணுவத்தினால் வெல்ல முடியாது என்பதை நன்கு உணர்ந்து கொண்டார். இந்தியனை வைத்தே புலிகளை அழிக்க திட்டமிட்டார்.இந்திரா காந்தியிடம் பலிக்காத ஜயவர்த்தனாவின் தந்திரம் முட்டாள் ராஜிவிடம் பலித்தது, விளைவு இந்திய-இலங்கை ஒப்பந்தம் ,நடக்கப் போகும் விபரீதத்தை உணர்ந்த பிரபாகரன் ஒப்பந்தத்தை ஏற்க் மறுக்கிறார்.ஆணால் இந்தியா அவரை கைது செய்து வீட்டுக் காவலில் வைத்து ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கியது.அதன் பின்னர் தமிழீழம் வந்த(கொலை வெறி,கொள்ளை வெறி , காம வெறி) இந்திய அமைதிப்படையின் அட்டூழியங்கள் வரலாற்று வடு. விளைவு ராஜிவ் கொலை.ராஜிவ் என்ற மிருகம் கொல்ல பட வேண்டியதுவே. ஏன்? ஒரு சம்பவம் (இந்திய அமைதிப்படையின் அட்டூழியம் ஒன்றினை உங்கள் முன் வைக்கிறேன்.
    இந்திய காம வெறியர்களாள் கீரிமலை கிராமம் சுற்றி வளைக்கப்படுகிறது. சிவன் கோவில் அய்யர் வீட்டினுள் வெறியர் நுழைந்தனர். அங்ஙே அய்யர் தனது மனைவி, மகள், மருமகன் உடன் இருகிறார். வெறியர் கூட்டதின் பார்வை அங்குள்ள பெண்கள் மீது படுகிறது.உடனே அய்யரும் மருமகனும் கயிற்றால் கட்டப்படுகின்றனர்.நடக்கப் போகும் விபரீதத்தை உணர்ந்த அவர்கள் கத்துகின்றனர்.மிக பெரிய பாரத வல்லரசை அவர்களது கத்தல் என்ன செய்து விட முடியும், வெறியர் கூட்டம் தனது வேலையை காட்டுகிறது, இரு பெண்களும் அவர்களது கணவர், தந்தை கண்களின் முன்கற்பழிக்கப் படுகிறார்கள்.அப்போது கயிற்றுக் கட்டை அறுத்துக் கொண்டு மனைவியை காப்பாற்ற முயற்சித்த அய்யரின்மருமகன் சுட்டுக் கொல்லப் படுகிறார். 14 இந்திய வெறியன்களாள் மாறி மாறி கற்பழிக்கப்பட்ட பின் அந்த பெண்கள் இருவரும் அவர்களது பெண் உறுப்பிலேயே சுட்டுக் கொல்லப் ப்டுகின்றனர்.மூலம் வினோ(வினவு) )இதைப் போல் நூற்றுக்கணக்காண சம்பவங்கள். ராஜிவ் கொலையை எதிர்ப்பவர்களிடம் ஒரே ஒரு கேள்வி, மேற்கூறப்பட்ட சம்பவம் உங்கள் குடும்பத்தில் நடந்திருந்தால்……? (அதிக வேலைப் பளு காரணமாக தொடர்ந்து எழுத முடியவில்லை.. இன்னொறு சந்தர்ப்பத்தில் இணைந்து கொள்கிறேன்.

  23. \\\\மேடையில் உருவிய வாளுடன் நின்று கொண்டிருந்தார் மாமன்னன் இராசேந்திர சோழன். மொத்த இலங்கையையும் வென்று ஆட்சி செய்த அந்தத் தமிழ் மன்னனுக்கு அருகில் துப்பாக்கியுடன் பிரபாகரன்.///

    அந்த படத்தில் இருப்பவர் பேரரசன் ராஜேந்திர சோழன் அல்ல,அது ஈழத்து வன்னி மண்ணின் கடைசி அரசன் குலசேகரம் பண்டர வன்னியன், ஈழத்தில் வன்னிப் பெருநிலத்தில், அடங்காப்பற்று என்ற இடத்திலிருந்து ஆண்ட குறுநில மன்னன். ஆங்கிலேயர்களுடன் போரிட்டு வீரச் சாவடைந்த ஈழத்தமிழன். ஆங்கிலேயரால் அவரது நினைவாக அமைகப்பட்ட கற்தூண் இன்றும் அவர் போரில் வீழ்ந்த இடமாகிய வன்னியிலுள்ள கற்சிலை மடு என்ற இடத்திலுள்ளது.

    • எங்கே மீண்டும் பிரபாகரன் வந்துவிட்டாலோ அல்லது அவர் காட்டிய வழியில் போராடி ஈழத் தமிழர்கள் தமிழீழம் அடைந்துவிட்டாலோ, தமிழ்நாட்டு தமிழன் இங்கு உள்ள புரட்சிகர அமைப்புகள் என்று சொல்லி நிறைய பேசிக் கொண்டும்,எழுதிக் கொண்டும் இருப்பவர்களை கொஞ்சமும் மதிக்காமல் போய்விடுவார்கள் என்ற அச்சம் இந்த கட்டுரையில் உள்ளூர தெரிகிறது. கவலை வேண்டாம். அமைப்புகளின் கையாலாகாத்தனமாகத்தான் நாங்கள்( இன உணர்வாளர்கள்)  பார்க்கின்றோம். புலிகளைப் பற்றி விமர்சனம் புலிகளுக்கு தான் தேவை. எங்களை போன்ற் வலைதள வாசகர்களுக்கு தேவையில்லை.அதுவும், இந்திய மாவோயிஸ்ட்களோ, நேபாள் மாவோயிஸ்ட்களோ அல்லது உங்களுக்கு தெரிந்த வேறு ஒரு உண்மையாக ஆயுதம் ஏந்தி போராடும் அமைப்பு தெரிவித்தால் பயனுள்ளதாக அமையும். 
      அல்லது குறைந்தபட்சம், நான்காம் ஈழப் போர் உச்ச கட்டமாக நடந்து கொண்டிருந்த போது, தமிழ்நாட்டில் இருந்த ஒரு புரட்சிகர இயக்கத்தாலும் மயிர் பிடுஙக முடியவில்லையே ஏன்? என்று, விமர்சனத்திற்கு பெயர் போன ம.க.இ.க கூட ஒரு வெளியீடு கொண்டு வரவில்லையே ஏன்?  விடுதலை புலிகள் ஒரு வேலை சீன மொழி பேசும் இனமாகவோ, அல்லது தமிழ் அல்லாத வேறு மொழி பேசும் இனத்தில் தோன்றியிருந்தால் அந்த இயக்க வரலாற்றை சீனாவில் இருந்த மொழி பெயர்த்து பிரபாகரனிஸ்ட் என்று ஒரு ”புரட்சிகர்” இயக்கம் இங்கு தோன்றி இருக்கும்.நம்மை சுயவிமர்சனம் செய்து பழகுவோம்.

      • ஏங்க செந்தில் ஏன் இப்படி ? இதுல கேட்டிருக்குற ஒரு கேள்விக்கும் பதில் தெரியலன்னா தெரியலன்னு சொல்லுங்க மத்தபடி இத மாநாடு பந்தலா நெனச்சுகிட்டு எதுக்கு சவடால்-பொலம்பல் இதெல்லாம் வேண்டாமே! அப்புறம் விமர்சனத்துக்கு பெயர் போன மகஇக ஒன்னில்ல 3 வெளியீடு கொண்டு வந்திருக்காங்க என்ன செய்ய நீங்க்கல்லாம் போயஸ் தோட்டத்துல காவடி எடுத்துகிடந்தப்ப பாக்க மறந்திருப்பீங்க.

    • எங்களுக்கு எப்போதுமே ஆண்ட பரம்பரைக் கதையும் கனவும் தான்.

      செத்து மடிந்த 150000 பேரைப் பற்றியோ 500000 அகதிகள் பற்றியோ தமிழ் நாட்டு ‘ஈழ விடுதலை மேடை முழக்கக்காரர்கட்கு எது அக்கறை?

  24. ஈழத் தமிழர் மீது அக்கறை கொண்டவர்கள் /ஈழத் தமிழர் பிரச்சனையை புரிந்து கொள்ள விரும்புவர்கள் பார்க்க வேண்டிய காட்சி ஊடகத்தில் வரலாற்று பதிவு. http://www.youtube.com/watch?v=3wf2Tr498hk&feature=player_embedded நன்றி குளோபல் தமிழ்.

  25. ஈழத் தமிழர் மீது அக்கறை கொண்டவர்கள் /ஈழத் தமிழர் பிரச்சனையை புரிந்து கொள்ள விரும்புவர்கள் பார்க்க வேண்டிய காட்சி ஊடகத்தில் வரலாற்று பதிவு 2 http://www.youtube.com/watch?v=viTLD8Biuio http://www.youtube.com/watch?v=7_EdgRs9Syk

  26. நான் பிறிதொரு இணையத்தில்வந்த செய்திக்கு அளித்த கருத்தையொட்டியே செய்தி இருப்பதால் அதே கருத்தை இங்கும் தெரிவிக்கிறேன்.

    தமிழ்த் தேசிய விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் அரசியல் ரீதியான வெற்றிவாய்ப்புக்கு தற்போது வழியமைத்துள்ளது. ஆனாலும் மாபெரும் தலைவன் இன்று இருக்கிறானா! இல்லையா! என்ற வாதப் பிரதிவாதங்கள் மக்களைக்குழப்பி மனச்சோர்வடையச் செய்வதுமட்டுமன்றி, தொடரும் இலங்கை இந்திய தமிழின அழிப்பு கூட்டுச் செயற்பாடுகளுக்கு மெளனகீதம் பாடவைக்கிறது. வீரவேங்கை மாவீரன்! நாட்டுப்பற்றாளன்! மாமனிதன்! தேசத்தின்குரல்! என வீரமறவர்களுக்கு பட்டமளித்து போற்றிய தலைவனுக்கு எந்தமதிப்புமே அளிக்கவிடாது அந்த உன்னத வீரனையும் அவனோடு இணைந்திருந்த தீரப்புலிகளையும் சூனியமாக்கி விட்டார்களே!! இதனைவிட இழிவான கொடுமை வேறுண்டோ!!!. அவன் உயிருடன் இருக்கட்டும். சிங்களவன் கூற்றுப்படி இல்லையென்றே நாம் ஏற்றுக்கொண்டு அவனுக்கு வழங்கும் உயர்வும், மதிப்பும், பாராட்டும், மரியாதையும், அவனை ஒரு வீரக்கடவுளாக வழிபடச்செய்து மக்கள் மீண்டும் ஒன்றிணைய வழிகோலலாம். இந்த வழிபாடுகளை உயிருடனே இருந்து காணும் பேறும் அத்தலைவனுக்கு ஏற்படலாம். என்பதும் மறுப்பதற்கில்லை. ஆனாலும் இதனை அரசியலாக்கி இலாபமடைய வழிதேடும் சாக்கடையில் ஊறிநிற்கும் சில தலைவர்களையும், அவர்களை பின்பற்றி நிற்கும் அமைப்பின் சில பிரகிருதிகளையும் என்னவென்று சொல்வது.

    யாழ் இணையத்தில் வந்த ஒரு செய்தி:-
    அம்மா ஒருவரின் மகன் 10 ற்கு மேற்பட்ட வருடமாக புலிகள் இயக்கத்தில் இருந்தவர், அவர் இறந்து விட்டார் என கிரிகைகளும் செய்து முடிந்து விட்டது, ஆனால் அவர் இப்போது தொலைபேசி மூலம் அவரது தாயாருக்கு தொடர்பு கொண்டு “நாங்கள் நலம், சித்திரைக்கு யாழ்ப்பாணம் வருவோம், சிறிது பணம் அனுப்பவும்” என்று கூறி இருக்கின்றார், அவர் இன்னும் இலங்கையில் தான் இருக்கிறார்,

    இந்த தாய்மனதில் பொங்கியெழும் ஈடிணையற்ற மகிழ்ச்சி அனைத்து தமிழர் மனங்களிலும் வருவதற்கும் வாய்ப்பிருக்கலாம்.

  27. இன்று ஈழத்துக்கு எதிரானவர்கள் ஏன்?அன்று ஈழப்போராட்டத்தை ஆதரித்தார்கள்? போராட்டகுளுக்களுக்கு ஆயுதம் மற்றும் பயிற்சி அளித்தார்கள்? உண்மையில் அவர்களுக்கு ஈழத்தமிழர்கள் மேல் உள்ள அக்கறைய?இல்லை இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்தவ?

Leave a Reply to ரியல் என்கவுண்டர் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க