privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஈழம்ஈழம்: தமிழகம் – லண்டன் போராட்டம்

ஈழம்: தமிழகம் – லண்டன் போராட்டம்

-

ஈழத்தின் உரிமைக் குரலுக்கு உரம் சேர்க்கும் வண்ணம் தமிழகத்தில் ம.க.இ.க, பு.ஜ.தொ.மு, வி.வி.மு, பு.மா.இ.மு , பெ.வி.மு ஆகிய அமைப்புகள் மாவட்ட தலைநகரங்களில் 21.8.2010 சனிக்கிழமை அன்று நடத்திய ஆர்ப்பாட்ட காட்சிகள்.

திருச்சி

சென்னை – குரோம்பேட்டை

கோவை

கிருஷ்ணகிரி

நாமக்கல்- பள்ளிபாளையம்


தஞ்சாவூர்


வேலூர்

லண்டன்

இதே நாளில் இலண்டனில் “புதிய திசைகள்” எனும் ஈழத்தமிழர் அமைப்பு சார்பாக பல பிரிவினரும் கலந்து கொள்ளும் ஆர்ப்பாட்டம் ஒழுங்கு செய்யப்பட்டது

இலங்கை அரசிற்கும் இந்திய அரசிற்கும் எதிரான முழக்கங்களுடன் லண்டனிலும் தமிழகத்தின் எல்லா மாவட்டத் தலை நரங்களிலும் எதிர்ப்புப் போராட்டங்கள் நடைபெற்றன. லண்டனின் சுமார் மூன்று மணி நேரம் நடைபெற்ற போராட்டத்தில் வேறுபட்ட அமைப்புக்கள் கலந்துகொண்டன. தமிழர்களைப் பெரும்பான்மையாகக் கொண்டிருந்த லண்டன் வெஸ்ட்மினிஸ்டரில் நடைபெற்ற போராட்டத்தின் போது இலங்கை அரசின் இனவழிப்பைக் வெளிப்படுத்தும் துண்டுப்பிரசுரப் போராட்டம் பரந்த அளவில் மேற்கொள்ளப்பட்டது. புதிய திசைகள் அமைப்பு மேற்கொண்ட இந்தப் போராட்டத்தின் இறுதியில் ஆங்கிலத்திலும் தமிழிலும் உரைகள் நிகழ்த்தப்பட்டன. தமிழ் நாட்டில் மக்கள் கலை இலக்கியக் கழகமும் அதன் துணை அமைப்புக்களும் போராட்டத்தை ஒழுங்கு செய்திருந்தன. கொட்டும் மழையில் நடைபெற்ற போராட்டங்களில் மக்கள் உணர்வு பூர்வமாகக் கலந்து கொண்டனர். வேலூரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டு பின்னதாக விடுதலை செய்யப்பட்டனர். போராடும் சக்திகளின் இணைவு நம்பிக்கை தருவதாக புதிய திசைகள் அமைப்பின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. போராட்டம் குறித்த ஏனைய ஒளிப்படங்கள் பின்னதாக இனியொருவிலும் ஏனைய ஊடகங்களிலும் பதிவுசெய்யப்படும்

தகவல் புகைப்பட உதவி http://inioru.com

_____________________________________________________

இந்த ஆர்ப்பாட்டங்களை ஒட்டி இலண்டன் சூர்யோதயம் வானொலிக்காக தோழர் மருதையன், பொதுச் செயலர், ம.க.இ.க, தமிழ்நாடு பேசிய ஒலிப்பதிவு

Maruthaiyan Audio

_____________________________________________________