privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்நேபாள அரசியல் நெருக்கடி: குளிர்காயும் இந்தியா!!

நேபாள அரசியல் நெருக்கடி: குளிர்காயும் இந்தியா!!

-

நேபாள்அண்டை நாடான நேபாளத்தில், அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினரான நேபாள  மாவோயிஸ்டு கட்சியைச் சேர்ந்த  ராம் குமார் சர்மாவுக்கு கடந்த ஆகஸ்ட் மாதத் தொடக்கத்திலிருந்து தொலைபேசியில் கொலை மிரட்டல்கள் வந்து கொண்டிருந்தன. தலைநகர் காத்மண்டு-வில்  இந்தியத் தூதரகம் நடத்திவரும் கேந்திரிய வித்யாலயா பள்ளியிலிருந்து அவரது மகள் நீக்கப்படுவார் என்றும், நாங்கள் குறிப்பிடுவது போல் பிரதமர் தேர்தலில் செயல்படாவிட்டால் உங்கள் உயிருக்கு ஆபத்து என்றும் தொலைபேசி வழியாக இந்திய உளவுத்துறை அதிகாரிகள் மிரட்டினர்.

ராம் குமார் சர்மா, முன்பு லோக்தாந்திரிக் என்ற மாதேசி பிராந்தியக் கட்சியில் இருந்தவர். பின்னர் மாவோயிஸ்டு கட்சியில் இணைந்த அவர், அதன் மத்திய கமிட்டி உறுப்பினராகவும் உயர்ந்துள்ளார். தற்போது நேபாளத்தில் நடந்துவரும் பிரதமர் தேர்தலில் மாவோயிஸ்டு வேட்பாளரான பிரசந்தாவை ஆதரிக்குமாறு நேபாள மாதேசி கட்சியினரிடம் கோரியதுதான் அவர் செய்த குற்றம். நேபாள பிரதமர் தேர்தலில் மாவோயிஸ்டு கட்சி வெற்றி பெறக் கூடாது என்பதே இந்தியாவின் நோக்கம். எனவேதான் இந்த மிரட்டல்.

கடந்த ஆகஸ்டு 7-ஆம் தேதியன்று தொலைக்காட்சிகளுக்கு பேட்டியளித்த ராம் குமார் சர்மா, இதனை ஆதாரங்களுடன் விளக்கியுள்ளார். அதைத் தொடர்ந்து, பணம் கட்டிய பின்னர் திடீரென இடமில்லை என்று அவரது மகளை 11-ஆம் வகுப்பில் சேர்க்க மறுத்துள்ளது, பள்ளி நிர்வாகம். தனது உயிருக்குப் பாதுகாப்பு அளிக்குமாறு ராம் குமார் சர்மா அரசியல் நிர்ணய சபையிடம் கோரியுள்ளதோடு, நேபாள அரசாங்கத்திடமும் மனித உரிமை அமைப்புகளிடமும் முறையிட்டுள்ளார்.

இந்திய உளவுத் துறையினரும் இந்தியத் தூதரகத்தினரும் இவற்றை மறுத்த போதிலும், நேபாளத்தில் யாரும் இதை நம்பத் தயாராக இல்லை. ஏனெனில், நேபாளத்தின் உள்விவகாரங்களில் வெளிப்படையாகவே இந்தியா தலையிட்டு வருகிறது என்பது யாவரும் அறிந்த உண்மை.

“காந்திபூர்’’,”காத்மண்டு போஸ்டு” முதலான நாளேடுகளை நடத்திவரும் நேபாளத்தின் பெரிய பத்திரிகைக் குழுமமான காந்திபூர் பப்ளிகேஷன்ஸ், இந்தியாவின் தலையீட்டை அவ்வப்போது விமர்சித்து எழுதி வந்தது. இதன் தொடர்ச்சியாக, கனடாவிலிருந்து கொல்கத்தா துறைமுகத்துக்கு கடந்த மே மாதத்தில் வந்த அந்நாளேட்டுக்கான செய்தித்தாள் காகிதம், இந்திய உளவுத்துறையால் நேபாளத்துக்கு அனுப்பப்படாமல் ஒரு மாதத்துக்கும் மேலாக முடக்கி வைக்கப்பட்டது.  இதனால் அப்பத்திரிகைக் குழுமம் தொடர்ந்து நாளேடுகளை வெளியிட முடியாத நெருக்கடியில் சிக்கித் தவித்தது. இந்தியத் தூதர் ராகேஷ் சூட்-இடம் இப்பத்திரிகை நிறுவனத்தினர், தாங்கள் ‘ஆக்கபூர்வமான’ கட்டுரைகள் எழுதுவதாக உறுதியளித்த பின்னரே, பெட்டகங்கள் நேபாளத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் சிறப்புத் தூதரான  ஷியாமா சரண், நேபாள அரசியல் நெருக்கடியைத் தீர்க்க ஆலோசனை கூறுவது என்ற பெயரில் நேபாளத்துக்கு வந்து பல்வேறு அரசியல் கட்சிப் பிரமுகர்களைச் சந்தித்துள்ளார். மாவோயிஸ்டுகளை ஆதரிக்கக் கூடாது என்று அவர் பல கட்சிகளிடமும் எச்சரித்ததாக நேபாள ஊடகங்கள் அம்பலப்படுத்தி செய்தி களை வெளி யிட்டன.

நேபாளத்தில் முடியாட்சிக்கு எதிரான பேரெழுச்சியைத் தொடர்ந்து, ஐ.நா.மேற்பார்வையில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகி, அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தல் நடந்தது. அதில் அதிக இடங்களைக் கைப்பற்றிய மாவோயிஸ்டுகள் ஏப்ரல் 2008-இல் தமது தலைமையிலான புதிய இடைக்கால அரசாங்கத்தை நிறுவினர். நேபாளத்தில் மன்னராட்சி தூக்கியெறியப்பட்ட போதிலும், மன்னராட்சியால் உருவாக்கப்பட்டு, மன்னராட்சியைக் காத்துவந்த நேபாள இராணுவம் அப்படியே தக்கவைக்கப்பட்டது, நேபாள மக்கள் எழுச்சியின் பலவீனமானமாகும். மன்னராட்சியின் கட்டுப்பாட்டில் நேபாளத்தில் தேர்தல்கள் நடந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரமில்லாத  அரசாங்கங்கள்கூட, இராணுவத்தின் துணையுடன் ஒவ்வொருமுறையும்  கலைக்கப்படுவதும் கவிழ்க்கப்படுவதும் ஏற்கெனவே நடந்துள்ளதால், இனி நேபாள இராணுவம் குடியாட்சிக்குக் கட்டுப்பட்டதாக இருக்க வேண்டும் என்று மாவோயிஸ்டுகள்  அறிவித்தனர்.

ஆனால்,  அமைதி ஒப்பந்தத்திற்கு எதிராகவும், புதிய இடைக்கால அரசின் ஒப்புதலோ, உத்தரவோ இல்லாமலும் மன்னராட்சியின் கீழிருந்த நேபாள இராணுவத்தின் தளபதியான ருக்மாங்கத் கடுவால், இந்தியாவின் ஆசியுடன் நேபாள இராணுவத்தில் 2800 பேரை தன்னிச்சையாகச் சேர்த்தார். பல இராணுவ அதிகாரிகளுக்குப் பதவி நீட்டிப்பு செய்தார். இது சட்டவிரோதமானது என்று மாவோயிஸ்டுகளின் அரசாங்கம் பிறப்பித்த உத்தரவை அவர் உதாசீனம் செய்தார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்துக்குக் கட்டுப்பட மறுத்து, சட்டவிரோதமாகச் செய்யல்படும் இத்தலைமைத் தளபதியைப் பதவி நீக்கம் செய்ய மாவோயிஸ்டுகளின் அரசாங்கத்தின் பிரதமரான பிரசந்தா உத்தரவிட்டார். இருப்பினும், போலி கம்யூனிஸ்ட் கட்சியான மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நேபாள அதிபர் ராம்பரண் யாதவ், சட்டவிரோதமான வழியில் பிரதமர் பிரசந்தாவின் உத்தரவை ரத்து செய்து, இராணுவத் தலைமைத் தளபதி பதவியில் நீடிக்க உத்தரவிட்டார்.

நேபாள அரசியல் கட்சிகள், நேபாள இராணுவத்துடன் கூட்டுச் சேர்ந்து இந்தியாவின் ஆதரவுடன் திரைமறைவில் ஆட்சிக் கவிழ்ப்பு சதியில் ஈடுபடுவதைக் கண்ட மாவோயிஸ்டுகள், கடந்த 2009-ஆம் ஆண்டு மே மாதத்தில் இடைக்கால அரசிலிருந்து பதவி விலகுவதாக அறிவித்தனர். நேபாள இராணுவத் தளபதி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குக் கட்டுப்பட்டவரா, அல்லது அரசுக்கு மேலான அதிகாரம் கொண்டவரா? என்ற கேள்வியை நாட்டின் முன்வைத்து,  குடியாட்சியின் உயரதிகாரத்தை நிலைநாட்ட அரசாங்கத்துக்கு வெளியே மக்களைத் திரட்டிப் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

மாவோயிஸ்டுகள் பதவி விலகிய பிறகு, நேபாளத்தின் போலி கம்யூனிஸ்ட் கட்சியான மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சியும் நேபாள காங்கிரசும் கூட்டணி அரசை நிறுவின. மா-லெ கட்சியின் மாதவ குமார் நேபாள் பிரதமராகப் பொறுப்பேற்றார். இந்த அரசாங்கமோ வெளிப்படையாகவே இந்திய மேலாதிக்கத்தின் கைக்கூலி அரசாகவே செயல்பட்டது. அதன் துரோகங்கள்-சதிகளை எதிர்த்து நாடாளுமன்றப் புறக்கணிப்பு, தெருப்போராட்டங்கள், வேலைநிறுத்தங்கள் -என  மாவோயிஸ்டுகள் தொடர்ந்து போராடி வந்தனர்.

நேபாள எழுச்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் நிர்ணய சபையின் பதவிக் காலம் கடந்த மே 28- ஆம் தேதி முடிவடைந்திருக்க வேண்டும். இக்காலத்திற்குள் இந்த அவை அரசியல் சட்டத்தை எழுதி முடித்திருக்க வேண்டும். ஆனால் நேபாள காங்கிரசு, போலி கம்யூனிஸ்ட் மா-லெ கட்சி மற்றும் பிற கட்சிகள் தமது வர்க்க நலன் காரணமாக நேபாளத்தின் எதிர்கால அரசியல் சட்டம் என்னவாக இருக்க வேண்டும் என்பதில் மாவோயிஸ்டுகளுடன் முரண்பட்டு நிற்கின்றன. இக்கட்சிகள் முதலாளித்துவ ஜனநாயக அரசியல் சட்டங்களைக்கூட ஏற்கத் தயாராக இல்லை. இவற்றாலும், திரைமறைவில் நடந்த இந்தியாவின் மேலாதிக்க சதிகளாலும் அரசியல் நிர்ணய சபையில் அரசியல் சட்டங்களை இயற்றும் பணி நிறைவேறவில்லை.

இதனால் அரசியல் நிர்ணயசபையின் காலம் முடிவடைவதையொட்டி நெருக்கடி தீவிரமானது. பின்னர், கடைசி நேரத்தில் மூன்று பெரிய கட்சிகளான நேபாள ஐக்கியப் பொதுவுடமைக் கட்சி(மாவோயிஸ்ட்), நேபாள ஐக்கியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) மற்றும் நேபாள காங்கிரஸ் ஆகிய கட்சிகள் பொதுக் கருத்துக்கு வந்தன. அதன்படி, அரசியல் நிர்ணய சபையை மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பது, 2006-ஆம் ஆண்டில் கையெழுத்திடப்பட்ட அமைதி நடவடிக்கைக்கான ஒப்பந்தத்தை நிறைவேற்ற முழு ஒத்துழைப்பை அளித்து பொதுக் கருத்தின் அடிப்படையிலான தேசிய அரசை நிறுவுவது, மாதவ குமார் நேபாளை பிரதமர் பொறுப்பிலிருந்து விலக்குவது – ஆகிய மூன்று முடிவுகளை அறிவித்தன. இருப்பினும், அரசியல் நிர்ணய சபை நீட்டிக்கப்பட்ட மறுநாளே மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சியும் நேபாள காங்கிரசும் தமது பழைய ஆட்டத்தைத் தொடர்ந்தன.

13 மாதங்கள் பதவியில் இருந்த பிரதமர் மாதவ குமார் நேபாள் கடந்த ஜூன் 30-ஆம்தேதி  பதவி விலகி,  அடுத்த பிரதமர் பதவியேற்கும்வரை தற்காலிகப் பொறுப்பில் இருந்த நிலையில், ஜூலை 21-ஆம் தேதி பிரதமர் பதவிக்கான தேர்தல் நடந்தது. பிரதமராக நிறுத்தப்படும் வேட்பாளர் வெற்றிபெற 600 பேர் கொண்ட     நேபாள நாடாளுமன்றத்தில் 301 வாக்குகள் தேவை.

மாவோயிஸ்டுகள் 237 எம்.பி.க்களைக் கொண்டுள்ளனர். நேபாள காங்கிரசு 114 எம்.பி.க்களையும் மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட் கட்சி 109 எம்.பி.க்களையும் கொண்டுள்ளன.  இரு பெரும் கட்சிகளான மாவோயிஸ்டு கட்சியும் நேபாள காங்கிரசு கட்சியும் பிரதமர் பதவிக்கு தமது வேட்பாளர்களை அறிவித்தன. போலி கம்யூனிஸ்டு கட்சியான மா-லெ கட்சி, பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது கட்சி வேட்பாளரை ஆதரிப்பதாக எழுத்து பூர்வமாக தெரிவித்தால் மட்டுமே தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தது. அவ்வாறு ஆதரவு கிடைக்காததால் அக்கட்சி போட்டியிடவில்லை.

மாவோயிஸ்டு கட்சி சார்பில் போட்டியிட்ட பிரசந்தாவும் நேபாள காங்கிரசு கட்சி சார்பில் போட்டியிட்ட அக்கட்சியின் துணைத் தலைவரான ராமச்சந்திர பௌதேலும் பெரும்பான்மை பெற முடியாமல் தோல்வியடைந்தனர். பிரசந்தாவுக்கு 242 வாக்குகளும் பௌதேலுக்கு 124 வாக்குகளும் கிடைத்தன. இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள மாதேசி கட்சிகளும் இதர சிறிய கட்சிகளும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தன. மா-லெ கட்சி நடுநிலை வகித்தது.

யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போனதால், அடுத்த கட்டமாக மீண்டும் ஜூலை 23-ஆம் தேதியன்று பிரதமர் பதவிக்கான மறுதேர்தல் நடந்தது. அப்போதும் இதே அளவில்தான் பெரிய கட்சிகளின் வலிமை இருந்தது. மீண்டும் ஆகஸ்ட் 2,  6,  23 – ஆகிய தேதிகளில் அடுத்தடுத்து தேர்தல்கள் நடந்த போதிலும் யாருக்கும் பெரும்பான்மை இல்லாமல் ஏறத்தாழ இதே நிலைமைதான் நீடித்தது. இப்போது மீண்டும் ஆறாவது முறையாக செப்டம்பர் 5-ஆம் தேதியன்று தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, ஐ.நா.வின் அமைதி நடவடிக்கைக்கான அரசியல்பணித் திட்டக் குழுவின் (UNMIN) கண்காணிப்புக் காலமும் வரும் செப்டம்பர் 15-ஆம் தேதியுடன் முடிவடைவதால், இக்குழுவை நீட்டிக்கக் கோருவதா, வேண்டாமா என்பதையொட்டி மாவோயிஸ்டுகளுடன் இதர அரசியல் கட்சிகள் முரண்பட்டு நிற்கின்றன.

ஐ.நா. குழு கடந்த 2007 ஜனவரி முதலாக நேபாளத்தில் இயங்கி வருகிறது. மாவோயிஸ்டுகளின் செம்படையையும் நேபாள இராணுவத்தையும் இது கண்காணித்து வந்தது. ஓராண்டு காலத்துக்கு இப்பணி இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் நேபாளத்தில் புதிய அரசியல் சட்டம் நிறைவேறுவதில் தாமதமானதால், நேபாள அரசாங்கத்தின் கோரிக்கையை ஏற்று ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் இக்குழுவை தொடர்ந்து நீட்டித்து வந்தது.

தற்போது நேபாள இராணுவத்தின் புதிய தலைமைத் தளபதியான சத்ரமான்சிங் குருங், ஐ.நா.வின் கண்காணிப்புக் குழு இனி அவசியமில்லை என்கிறார். மேலும், நேபாள இராணுவம் என்பது ஐ.நா. கண்காணிப்பின் கீழ் இல்லை என்றும், நேபாள இராணுவம் புதிதாக ஆளெடுப்பையும் ஆயுதக் குவிப்பு செய்வதையும் ஐ.நா. குழு எதிர்ப்பதற்கு எவ்வித உரிமையுமில்லை என்றும் அவர் கொக்கரிக்கிறார்.

ஐ.நா.கண்காணிப்புக் குழுவை நீட்டிப்பதா, வேண்டாமா என்பதை நேபாளத்தின் குடியாட்சியும், குடியாட்சியின் முக்கிய அங்கமான நாடாளுமன்றமும்தான் முடிவு செய்யவேண்டுமே தவிர, நேபாள இராணுவம் அல்ல என்கின்றனர், மாவோயிஸ்டுகள். அமைதி நடவடிக்கைகள் நிறைவேறும்வரை ஐ.நா.குழு நீடிக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். ஆனால், நேபாள அரசியல் கட்சிகள் இந்த விவகாரத்திலும் நேபாள இராணுவத் தளபதியின் முடிவை ஆதரித்து, மாவோயிஸ்டுகளுடன் முரண்பட்டு நிற்கின்றன.

அமைதி ஒப்பந்தத்தைச் சீர்குலைத்து, தமது வர்க்க நலன்களுக்கு ஏற்ப நேபாளத்தின் பிற்போக்கு கட்சிகளும் புரட்டல்வாதக் கட்சிகளும் சந்தர்ப்பவாதமாக நடந்து கொண்டு தொடர்ந்து துரோகமிழைத்து வருகின்றன. அரசியல் நிர்ணய சபையில் தனிப்பெரும் கட்சியான மாவோயிஸ்டு கட்சிக்கு அதிகாரமிக்க பதவிகளைத் தர இக்கட்சிகள் மறுக்கின்றன. மன்னராட்சியின் ராணுவத்தையே தற்போதைய நேபாளத்தின் இராணுவம் என்றும், மாவோயிஸ்டுகளின் 19,600 பேர் கொண்ட செம்படையை அதனுடன் இணைக்கமுடியாது என்றும் இவை வாதிடுகின்றன.  ஐ.நா.மேற்பார்வையில் செயல்படுத்தப்படும் அமைதி ஒப்பந்தத்தை மீறி, இப்போது இக்கட்சிகளின் ஆதரவோடு நேபாள இராணுவத்துக்கு ஆளெடுப்பதும் ஆயுதங்களைக் குவிப்பதும் நடக்கத் தொடங்கி விட்டன. இச்சட்டவிரோதச் செயலை அம்பலப்படுத்தி,  தாங்களும் செம்படைக்கு ஆளெடுப்பை நடத்தப் போவதாக மாவோயிஸ்டுகள் அறிவித்துள்ளனர். அவ்வாறு செய்தால் இராணுவம்-போலீசை ஏவி தடுத்து நிறுத்துவோம் என்று எச்சரிக்கிறது, நேபாளஅரசு

மன்னராட்சிக்கு எதிரான எழுச்சி உச்சநிலையை அடைந்த போது, மன்னராட்சி இனியும் நீடிக்க முடியாமல் முட்டுச் சந்துக்கு வந்தபோது, மாவோயிஸ்டுகளுடன் கூட்டணி கட்டிக் கொண்ட நேபாள அரசியல் கட்சிகள், இன்று அதை முறித்துக் கொண்டு மாவோயிஸ்டுகளுக்கு எதிராக நிற்பதையும், நிலைமை உச்ச கட்டத்தை எட்டிவிட்டதையும் இவையனைத்தும் நிரூபித்துக் காட்டுகின்றன. “மாவோயிஸ்டுகளை நாடாளுமன்ற ஜனநாயகக் கட்சியாக ஏற்க வேண்டுமானால், செம்படையைக் கலைக்க வேண்டும். போர்க்குணமிக்க இளம் கம்யூனிஸ்டு கழகத்தையும் கலைத்து விட வேண்டும். மன்னராட்சிக்கு எதிரான மக்கள் யுத்தக் காலத்தில் செம்படை கைப்பற்றிக் கொண்டு கூலி-ஏழை விவசாயிகளிடம் விநியோகித்துள்ள நிலப்பிரபுக்களின் நிலங்களையும் வீடுகளையும் திரும்ப ஒப்படைக்க வேண்டும். இவையனைத்தையும் நிறைவேற்றாதவரை புதிய அரசியல் சட்டத்தை நிறைவேற்ற இயலாது” என்று இக்கட்சிகள் பிரகடனப்படுத்தியுள்ளன.

இக்கட்சிகளின் துரோகத்தை அம்பலப்படுத்தி “நாட்டுப்பற்றுகொண்டோரும் இடதுசாரிகளும் ஜனநாயகக் குடியரசை ஆதரிப்போரும் அணிதிரள்க!” என்ற மைய முழக்கத்தின் அடிப்படையில் மாவோயிஸ்டுகள் ஐக்கிய முன்னணியைக் கட்டியமைத்துப் போராட விழைகின்றனர். நேபாளத்தில் தேசிய-ஜனநாயக  கூட்டுத்துவ மக்கள் குடியரசை நிறுவவும், அதை அரசியல் நிர்ணயசபையில் சட்டமாக நிறைவேற்றவும் கடுமையாக முயற்சித்து வருகின்றனர்.

2009-இல் குடியாட்சியின் உயரதிகாரத்தை நிலைநாட்டக் கோரி மாவோயிஸ்டுகள் பதவி விலகிய பிறகு, மாவோயிஸ்டுகள் தலைமையில் எந்தவொரு கூட்டணி அரசும் அமையக் கூடாது; இதர கட்சிகளின் தலைமையில் அரசு அமைந்தாலும் அதில் மாவோயிஸ்டுகளைக் கூட்டணி சேர்க்கவும் கூடாது  என்பதுதான் இந்திய மேலாதிக்கவாதிகளின் நோக்கம். இந்தியாவின் மேலாதிக்க நலன்களுக்கு எதிராக, சுதந்திரமாக-சுயாதிபத்திய உரிமையுடன் தனது சொந்த அரசியல் சட்டத்தை நேபாளம் உருவாக்கிக் கொள்ளக்கூடாது என்பதுதான் இந்தியா மற்றும் உலகெங்குமுள்ள பிற்போக்கு சக்திகளின் நிலைப்பாடாக உள்ளது.

எல்லாவற்றுக்கும் மேலாக, மீண்டும் கம்யூனிச சித்தாந்தம் தலைதூக்கக் கூடாது  என்ற வெறியோடு அமெரிக்கா  தலைமையிலான உலக முதலாளித்துவம் நேபாள உள்விவகாரங்களில் அதீத அக்கறை காட்டி தலையீடு செய்து வருகின்றது. இதனால்தான் மக்களிடம் செல்வாக்கிழந்துள்ள போதிலும், நேபாளத்தில் மாவோயிஸ்டுகள் அல்லாத இதர அரசியல் கட்சிகளை இந்தியாவும் உலக முதலாளித்துவமும் முட்டுக் கொடுத்து தூக்கி நிறுத்துகின்றன. இதனால்தான் நேபாளத்தில் நிலவி வரும் நாடாளுமன்ற முட்டுக்கட்டை முடிவுக்கு வராமல், மீண்டும் புதிய நெருக்கடிகளும் இழுபறிகளுமாகத் தொடர்கிறது.

வரலாற்று ரீதியாகவும் பூகோள ரீதியாகவும் இந்தியாவுடன் பின்னிப் பிணைந்துள்ள சிறிய அண்டை நாடுகளின் சுதந்திரம்-சுயாதிபத்தியம் என்பனவெல்லாம் இந்தியாவின் நலன்களுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் என்றும், அவற்றை அடிமை நாடுகளாகக் கருதி தலையிட்டு மேலாதிக்கம் செய்வதையும் தனது இயல்பான நடவடிக்கையாகவே இந்தியா கருதுகிறது. இதற்கேற்ப நாட்டு மக்களிடமும் இம்மேலாதிக்கத்தை நியாயப்படுத்தும் கருத்தை ஊட்டி வளர்த்துள்ளது. இந்தியாவின் தலையீடு தெற்காசிய வட்டாரத்திலும் குறிப்பாக, நேபாளத்திலும் மேலும் மூர்க்கமாகி வருவதையும், இந்தியாவின் மேலாதிக்க நலன்களுக்கு ஏற்ப ஒரு பொம்மை அரசை நிறுவி, மாவோயிஸ்டுகளைத் தனிமைப்படுத்தும் உத்தியுடன் இந்தியா கீழ்த்தரமாக முயற்சித்து வருவதையும் நேபாள நிலைமைகள் உணர்த்துகின்றன.

___________________________________

– புதிய ஜனநாயகம், செப்டம்பர் – 2010
___________________________________

  1. நேபாள அரசியல் நெருக்கடி: குளிர்காயும் இந்தியா!!…

    இந்தியாவின் மேலாதிக்க நலன்களுக்கு ஏற்ப ஒரு பொம்மை அரசை நிறுவி, மாவோயிஸ்டுகளைத் தனிமைப்படுத்தும் உத்தியுடன் இந்தியா கீழ்த்தரமாக முயற்சித்து வருவதையும் நேபாள நிலைமைகள் உணர்த்துகின்றன….

  2. இந்திய தேசவிரோத வினவு கும்பலே ஒன்றை நினைவில் கொள்ளுங்கள் அந்தந்த நாடும் தன் பாதுகாப்பு மற்றும் தன் நலன் சார்ந்து தான் செயல்படும், இந்த அடிப்படை அறிவு கூட இல்லாமல் பினாத்துகிரீரே, சரி உங்க ஆதர்சன சீன கம்னாட்டிகள் அங்கே நேபாளத்தில் என்ன புடுங்கி கொண்டிருக்கிறார்கள் என்று எழுத முடியுமா.

    • Well said. Communism is failed policy for present world. When communism written the world was different….

      Maoism is like cancer it already in beginning stage in india …india will sure kill this cancer in both India and its neighbor country.

      Red flag will turn to White soon 🙂

    • ///அந்தந்த நாடும் தன் பாதுகாப்பு மற்றும் தன் நலன் சார்ந்து தான் செயல்படும்///

      பிரிட்டன் தனது நலனுக்கு தான் இந்தியாவை அடிமைப்படுத்தி வைத்திருந்தது. அதனால், அது தப்பில்லை……. சரியா??

      அமெரிக்கா கூட தனது நலனுக்காக தான் உலகை, உலக மக்களை மேலாண்மை செய்கிறது. அதுவும் தப்பில்லை……. சரியா??

      இங்கு நாட்டின் நலன் என்பது பெரும்பான்மை மக்களின் நலனா??

      டவுட்டு டவுட்டு!

      • அண்ணே இங்கிலாந்து அதன் பாதுகாபிர்காக இந்தியாவை அடிமை படுத்தவில்லை …கொள்ளை அடிபதர்காக …. அமெரிக்கா ஈராக் மீது போர் தொடுத்தபோது அங்கு ரசாயன ஆயுதம் இருப்பாதாகவும் அதனால் தான் போர் எடுபதாக கூறியது…….. அப்படி உண்மையில் அங்கு ஆயுதம் ஏதும் இல்லை…. அனால் இந்தியா வை சுர்த்ரில்லும் பாலை போன பாகிஸ்தான் , பங்களாதேஷ், நேபால் போன்ற உதவாத நாடுகள் தான் இருக்கு …. அந்த நாடுகளில் நாடாகும் பிரச்சனிகள் நேராக இந்தியாவை தான் பாதிகின்றது ….

        பாகிதான் பயங்கரவாத்தை கொள்கையாக வைத்துகொண்டு இந்தியாவை தினம் தினம் எப்படி நாசமாகலாம் என்று யோசித்து கொண்டு இருகின்றது ….. இதே கதை நேபாளில் நடந்து விட கூடாது என்றால் இந்தியா இந்த சிறு நாடுகளின் நிலைதன்மையில் தலையிட்டு தான் ஆகவேண்டும் …….

        என்ன பாகிஸ்தானும் , வங்கதேசமும் இந்தியாவிற்கு தீவிரவாதிகளை ஏற்றுமதி செய்வதே இல்லை என்று சொல்ல போகின்றீர்களா ?? 🙂

        • அய்யோ ராமா!
          ஏண்டா என்னய இந்த மாதிரி கழிசடை பசங்களோட எல்லாம் கூட்டு சேர வைக்குற….

          சரி உங்க லாஜிக்லயே பேசுவோம்!
          நீ ஏண்டா அங்க வால உடுறேன்னு கேட்டா, அவன் இங்க நூல விடுறான்ல ன்னு கேட்குறீங்க…

          நூல விட்டதால நீ வால விடுறது சரின்னா, வால விட்டதால அவன் நூல விடுறது சரின்னு ஆகாதா? கெரகம்!

          நூல வெட்டுனா அதிக பிரச்சனை இல்ல, ரத்த சேதாரமும் இருக்காது… வால வெட்டுனா?

          இந்தியா இந்து நாடுங்குறத எப்படி எல்லாம் புரூவ் பண்றாங்க…. ஈழம், நேபாளம், பூட்டான், சிக்கிம் இப்படி அது வுட்ட வால் அனுமார் வால் மாரி நீண்டுகிட்டே போகுது….

    • என்னது இந்திரா காந்திய சுட்டுட்டாங்களா??
      என்ன கையப்புடிச்சு இழுத்தியா?
      இப்படி பொண்டாட்டி ஓடிப்போன கதையில வர்ரா மாதிரி திரும்ப திரும்ப பேசுனா, அரை லூசுங்க சீக்கிரம் முழு லூசு ஆகிடலாமாம்… இத்த பசுபதிநாதர் கோயில்ல இருக்குற கர்நாடக பாப்பான் சொன்னான்! நம்புனா நம்புங்க….

      பக்கத்து வூட்டுக்காரன் தாலிய அறுத்தலும் நான் நல்லா இருக்கனும்ன்னு சொல்றவங்கள பாத்து நீங்க என்ன சொல்லுவீங்க மக்களே? அதை கேட்டாக்கா, பக்கத்து வூட்டுக்காரன் ‘அயோக்கியன்’ன்னு கத வுடுறது!

      அவன் அயோக்கியனா இல்லையாங்கிறது இருக்கட்டும்.
      யோக்கியனுக்கு இருட்டுல என்ன வேலை?
      யோக்கியன் நீ ஏன் அவன் தாலிய அறுக்குற?

      நேபாளத்தை நோண்டி தான் இந்தியா தனது நலனை பாதுகாக்கனுமா?

      ஒனக்கு குடையுதுன்னா, ஒனக்கு நோண்டு, பக்கத்துல இருக்குறவன் குண்..ய நோண்டுனா அசிங்கம் இல்ல??
      இதுல அதே கையால தேசபக்தி ஜிலே“பி” வேற சுடுற…

      அந்த கருமாந்திரம் புடிச்ச ஜிலே“பி”ய நீயே துன்னு, இல்லன்ன ஒன்ன மாரி அரை-அரைக்கால் லூசுங்களுக்கே கொடு, வாங்கி துன்னுவாங்க!

      • நண்பரே வரலாறு பூகோளம் எல்லாம் கொஞ்சமாவது படித்து விட்டு வந்து உங்கள் கருத்தை கொட்டுங்கள்..

        • எங்கே உங்க வறலாரு, புகோல அரிவு டப்பாவ தெறந்து கொஞ்சம் கொட்டுங்களேன் பாப்பம்!

          பக்கத்து வூட்டுக்காரன நீ ஏன் நோண்டுற வரலாறு டரியல் ன்றீங்களே…. அது இன்னா வரளாறு? உங்க அறிவு கொழம்புல ஒரு கரண்டி எடுத்து ஊத்துங்க அண்ணே!

          அப்புறமா நாம பேச ஆரம்பிக்கலாம்.

      • சேரி அன்நே!!!! இப்படிக்கூட கேக்கலாம்: உன் பொண்டாட்டியே உன்கிட்ட இருக்க மாட்டேன் நு சொல்லும்போது, நே என்ன மத்தவன் போண்டாட்டஈக்கு மதர ஹார்லிக்ஸ் வாங்கி கொடுக்கறது? கேட்ட, அவல பாத்து என் பொண்டாட்டியும் ஓட மாட்டாளா நு கேக்கறது!!!
        [எல்லாம் சேரி அண்ணன் ட்ரெயினிங் தான்.

  3. அண்ணன் கேள்விக்குறி எங்கிருந்தாலும் மேடைக்கி வரவும் இங்கு லுசுத்தனமாக பின்னூட்டமிடும் கோழைகளை. பாடுற மாட்டை பாடியும் ஆடுற மாட்டை ஆடியும் அடக்கவும்

  4. Atleast in India, you have the right to criticize the government and their policies because of our famed democracy. Try doing that in your “Communist” China.

    Agree that there is a lot of work to do in bridging the divide between the poor and the rich. But calling it a “back ward force” sitting right here in this country is a bit rich from the supporters of long dead policies like communism and maoism (which is a dangerous cancer plaguing the country btw). Why dont these maoists and red flag supporters instead start constructively contributing to their society by partnering with some NGO and start developing the society they are a part of? They won’t because then people will really have something constructive to do and will start worrying more about their families instead of thinking about these “sethupoi pul molacha” ideologies..

    Pongappa poi polappa paarunga. Pilla kuttingala padikkka vainga. Your future generation would be good.

    And just curious..why dont you “vinavu” people give us more information about the Chinese projects in Sri Lanka and POK? What should be the motive behind these? Knowing you people, it wont be a suprise if you reply ” Uplifting the downtrodden and backward communities in these areas”

    • அன்பார்ந்த வினவு பார்வையாளர் மற்றும் பதிவாளர் நண்பர்களே …

      சார் கண்டுபிடிச்சிருக்காரு பாருங்க … இந்தியா ஜனநாயக நாடாம்… எப்பொ இருந்து சார் ?..

      காஷ்மீர்ல வட கிழக்கு மாநிலத்துல உங்க சனநாயகம் அவுத்து போட்டு டான்ஸ் ஆடுதுன்னு சொன்னாங்க …
      சரி .. அங்க தான் சனநாயகம் அப்படின்னா மத்த இடத்துல பல்ல இளிச்சிகிட்டு ஆடுது… உதாரணம் சொல்லனுமா ?.. வினவுல வந்திருக்குற கட்டுரைகளை எல்லாம் படிச்சிப் பாருங்க சார் ..
      முக்கியமா குஜராத் கட்டுரைகளை படிச்சி பாருங்க .. போபால் கட்டுரைகளை படிச்சி பாருங்க ..
      கம்யூனிச சித்தாந்தங்களை அனைத்து விசயங்களிலும் தொடர்ந்து முடிவு எடுப்ப்து தான் ஒரு கம்யூனிஸ்ட் நாடுக்கு அழகு.. அப்படிப் பார்த்தால் சீனாவோ , க்யூபாவோ கம்யூனிஸ்ட் நாடாக கணக்கில் கொள்ளப் பட முடியாத நாடுகள்.

      இன்னும் உக்காந்துட்டு இந்தியா ஜனநாயக நாடு , சீனா கம்யூனிஸ்ட்டு நாடுன்னு சொல்லிட்டு காமெடி பண்ணாதிங்க சார் ..

      போங்க போய் உங்க புள்ளைக்குட்டிகளை ஒரு நாளாவது உழைச்சு திண்ணச் சொல்லுங்க அப்போதான் உழைக்கிறவன் கஸ்ட்டம் தெரியும் ..
      இப்படி உங்கள மாதிரி தற்குறியாட்டம் பேச மாட்டாங்க …

      அப்புறம் என்னமோ சொன்னீங்களே … ஆங்… NGO.. இவர்களோடு நாங்களும் சேந்து கொண்டால் நாட்டை வறுமையிலிருந்து தூக்கிடலாமா ?..

      பாருங்க மகா ஜனக்களே .. இந்த புடுங்கிகள் ஏழைகளை சுரண்டித் திண்ணுக்கிட்டே கொழுத்துக்கிட்டு இருப்பானுங்களாம். நாங்க இவங்க பின்னாடி வந்துக்கிட்டு ”ஐயா ஏழைகளுக்கு உதவி பண்ணுறோம் உங்களால் ஆன தர்மம் பண்ணுங்க”ன்னு கேட்டா போட்டோவுக்கு போஸ் கொடுத்துட்டு தர்ம பிரபு வேசம் போடுவானுங்களாம் இந்த திருட்டு நாய்கள். எத்தனை பேருடா கிளம்பியிருக்கீங்க இப்படி ?.

      நீங்கள் சுரண்டித் திண்ணதை என்றும் பிச்சைஎடுத்து உன்னிடம் இருந்து திரும்பப் பெற முயற்சிக்க ஏன் நினைத்துக் கூட பார்க்க மாட்டோம். எங்களது சுதந்திரம் பாட்டாளிவர்க்கத்தினருக்கான சுதந்திரம் கேட்டுப் பெறும் விசயம் அல்ல .. மக்கள் திரள் ஒரு நாள் ஆதிக்க வர்க்கத்தை அடித்து விரட்டி தனது சுதந்திரத்தை தானே எடுத்துக் கொள்ளூம்..

      • Reply to Fools paradise Genius செங்கொடி மருது ::

        1. /// இந்தியா ஜனநாயக நாடாம்… எப்பொ இருந்து சார் ?.. ///

        You will say “world is not sphere ! its just american tricks”…….then the world will you are —- ??

        There is no country as democratic as india do you want me to give you proof ?? (i wont post extremists links as like you 🙂 )

        The whole world saying india is democratic ,….then you wont accept that !! When the whole world says china is communist ….then you wont accept that too ??? then what the hell you are man ???

        you think your are genius than any other person in the world ??? crazy !! you have to consult a doctor soon buddy !! 🙂 🙂 🙂

        —————————-

        2. /// காஷ்மீர்ல வட கிழக்கு மாநிலத்துல உங்க சனநாயகம் அவுத்து போட்டு டான்ஸ் ஆடுதுன்னு சொன்னாங்க …
        சரி .. அங்க தான் சனநாயகம் அப்படின்னா மத்த இடத்துல பல்ல இளிச்சிகிட்டு ஆடுது… உதாரணம் சொல்லனுமா ?.. வினவுல வந்திருக்குற கட்டுரைகளை எல்லாம் படிச்சிப் பாருங்க சார் ..
        முக்கியமா குஜராத் கட்டுரைகளை படிச்சி பாருங்க .. போபால் கட்டுரைகளை படிச்சி பாருங்க .. ///

        First i want to ask you why you never show up that you are a muslim ?? I know you came from a muslim majority town called “கடையநல்லூர்” …is that why you blow things bigger if any muslim face prob ??

        Ya in some parts of giant india there are some probs …is that mean india not a democratic country ??? did you go for school ?? Democracy doesn’t mean happily allow you to go and expolode bombs as like as you wish…. india knows very well how to tackle guys like you.

        IF YOU DARE CAN YOU GIVE AN EXAMPLE WHERE IS NO PROBLEM ? PAKISTAN ? 🙂

        ————————–

        3. // கம்யூனிச சித்தாந்தங்களை அனைத்து விசயங்களிலும் தொடர்ந்து முடிவு எடுப்ப்து தான் ஒரு கம்யூனிஸ்ட் நாடுக்கு அழகு.. அப்படிப் பார்த்தால் சீனாவோ , க்யூபாவோ கம்யூனிஸ்ட் நாடாக கணக்கில் கொள்ளப் பட முடியாத நாடுகள். //

        Ya ofcourse by theory communist is dream land its a nice fiction story where in reality it cant be achieved ……….and not only that WHICH EVER COUNTRY FOLLOW COMMUNISM WILL FACE SERIOUS POVERTY AND UNEMPLOYMENT …BECAUSE COMMUNISM NEVER EVER HAVE IDEAS TO CREATE EMPLOYMENT ….ITS FULL OF KILLING JOBS, VIOLENCE AND HATRED THOUGHTS.

        That’s why its failed all over the world ……..ask a school boy today , he will tell you communism is a dangerous sick thoughts…….

        WHEN WE ASK YOU TO GIVE AN EXAMPLE FOR COMMUNISM YOU ARE SHOWING ONLY NEPAL !! Can you tell me now how the hell this nepal going to reduce poverty there ??? do they know how to generate jobs and feed millions of family ?? Most of the communists are violent uneducated guys who don’t have any idea about economics. I hope you too the same ??

        You said last time a story about Nokia SEZ ….and you conclude all SEZ india is loosing billions of money !!! then can you tell me how indias GDP is growing ? how its foreign currency reserve is growing ??? how per capita income growing ?? how people spending power growing ?? How its able to spend more now to build express way, bridges, hospitals …etc by you story indian suppose to reach bankruptcy by now !!!???

        India now following china economic reforms which is very successful 69% from below poverty line in 1970’s china reached 10% just in 30 years …..all these by economic reforms and globalization only ….what communism did for poor people ??? communism is just good for tea stall talk only…otherwise its a rubbish !!

        ——————————-

        4. /// இன்னும் உக்காந்துட்டு இந்தியா ஜனநாயக நாடு , சீனா கம்யூனிஸ்ட்டு நாடுன்னு சொல்லிட்டு காமெடி பண்ணாதிங்க சார் .. ////

        ஆமாம் இவரு வந்து இதியாவ வாயுக்கு வந்தபடியெல்லாம் பேசுவாரு …. இதியாவ அழ்ளிகண்ணும் சொல்லுவாரு ….பாகிஸ்தான் நல்லவன் இந்திய சதிகாரனு ஒளருவாறு … கம்முநிசம் நா இன்னனுனே தெரியாம உலகத்துல இருக்குற எல்லாருக்கும் அட்வைஸ் பண்ணுவாரு …..நாங்க உடனே வாழ்ழ்க அண்ணன் ஒழ்லிக இந்தியான்னு வெடிகுண்டு எடுத்துகிட்டு பினாடியே அளயன்னும் ….அப்படிதானே ???

        ————————

        5. //போங்க போய் உங்க புள்ளைக்குட்டிகளை ஒரு நாளாவது உழைச்சு திண்ணச் சொல்லுங்க அப்போதான் உழைக்கிறவன் கஸ்ட்டம் தெரியும் .. //

        As like all communist dont act like only you care about poors……… you will keep acting and you will make poors more poor only….we are not rich ….most of the indians are came from poor family only.

        In your language…people who do physical work are only called as work is it ??? So who every do white collar jobs are thief is it ???

        ————————

        6. /// பாருங்க மகா ஜனக்களே .. இந்த புடுங்கிகள் ஏழைகளை சுரண்டித் திண்ணுக்கிட்டே கொழுத்துக்கிட்டு இருப்பானுங்களாம். நாங்க இவங்க பின்னாடி வந்துக்கிட்டு ”ஐயா ஏழைகளுக்கு உதவி பண்ணுறோம் உங்களால் ஆன தர்மம் பண்ணுங்க”ன்னு கேட்டா போட்டோவுக்கு போஸ் கொடுத்துட்டு தர்ம பிரபு வேசம் போடுவானுங்களாம் இந்த திருட்டு நாய்கள். எத்தனை பேருடா கிளம்பியிருக்கீங்க இப்படி ?. ///

        You never ever learn respect ??? When you dont have manners why you talk like god ??? ok i answer you in your same style

        ஆமாக அண்ணே உங்களோட சேர்த்து ஒரு 100 திருட்டு நாய்யுங்க இருக்கும் ??? 🙂 🙂 🙂

        ———————–

        7. /// நீங்கள் சுரண்டித் திண்ணதை என்றும் பிச்சைஎடுத்து உன்னிடம் இருந்து திரும்பப் பெற முயற்சிக்க ஏன் நினைத்துக் கூட பார்க்க மாட்டோம். எங்களது சுதந்திரம் பாட்டாளிவர்க்கத்தினருக்கான சுதந்திரம் கேட்டுப் பெறும் விசயம் அல்ல .. மக்கள் திரள் ஒரு நாள் ஆதிக்க வர்க்கத்தை அடித்து விரட்டி தனது சுதந்திரத்தை தானே எடுத்துக் கொள்ளூம்.. ///

        கேக்குறவன் கேணயனா இருந்தா எருமாடு airoplane ஓட்டுமாம் !!! 🙂 🙂 🙂

        Already maosists in andra gone….now in another three years there wont be any in WB too…

        ——————-

        Buddy i asked you what is you education qualification ….but you never answered ???

        You are giving ideas to the whole world …so we must know about you before understand you new super dooper ideas !! 🙂

  5. நேபாளாத்தில் ஒரு போதும் சீனா தலையிடவில்லையா, நடுநிலையாகவா இருந்தது.அந்தச் சின்ன நாட்டில் உள்ள அரசியல் சூழல் சரியாக இல்லை.மாவோயிஸ்ட்களால் நிலைமையை சரிவர கையாள முடியவில்லை.குறைந்த ஆதரவினைக் கொண்டு ஆட்சியில் நிலைக்க முடியவில்லை..மாவோயிஸ்ட்களால் பிற கட்சிகளின் முழு நம்பிக்கையை பெற முடியவில்லை.அவர்களின் ‘ராணுவத்தினை’ என்ன செய்வது என்பதிலும் சிக்கல். இந்தியா தன் நலன்களை பாதுக்காகவும்,சீனாவின் வால் ஆடும்போது எதிர் நடவடிக்கை எடுப்பதும் இயல்பான ஒன்று.மாவோயிஸ்ட்களின் செல்வாக்கு குறைந்து விட்டது.மாவோயிஸ்ட்கள் அவ்வப்போது இந்திய எதிர்ப்பு நிலை எடுப்பதும் உலகறிந்த ஒன்றுதான்.இன்று தேர்தல் நடத்தினால் இருக்கிற எண்ணிக்கையில் 60%-70%தான் அவர்களுக்கு கிடைக்கும். இப்படியே இடியாப்ப சிக்கல் நீடித்தால் மக்கள் மன்னராட்சியே பரவாயில்லை என்று மன்னரை அழைத்தாலும் அழைப்பார்கள்.

    • ///இடியாப்ப சிக்கல் நீடித்தால் மக்கள் மன்னராட்சியே பரவாயில்லை என்று மன்னரை அழைத்தாலும் அழைப்பார்கள்.///

      மக்கள் மன்னரை அழைக்கட்டும், கிரிஜா பிரசாத் கொய்ராலவை அழைக்கட்டும், அது அவங்க விருப்பம், அவங்க பிரச்சனை! நீ ஏன் அங்க உன் ஊத்த மூக்க நுழைக்கிற?
      இடியாப்பமே இந்தியா தன் சூ….ஆல தான் சுடுதாம்… கூடிய சீக்கிறம் அந்த மக்கள் பின்னால சுட போறாங்க…..

  6. அட சீனா சீனான்னு குதிக்கிற லூசுங்களா! சீனா கம்யூனிசத்த காத்தில பறக்கவிட்டு வெகுகாலம் ஆச்சுன்னு உங்க யாருக்குமே தெரியாதாய்யா? இலங்கைலயும், நேபாள்ளயும் இந்தியா ஏண்டா வாலாட்டுதுன்னு கேட்டா சீனா ஆட்டுது நானும் ஆட்டுறேன்னு சொல்றதுதான் ‘அறிவுசீவி’க்கு லச்சணமோ? ” நான் மட்டுமா தின்னேன்? உங்கண்ணனும்தான் தின்னான்..” னு ஒரு கதை தெரியுமா உங்களுக்கெல்லாம்?

    போயி இந்திய முதலாளிகளுக்கும், மன்னுமோகன், தத்துவானி வகையறாவுக்கும் கழுவி விடுற வேலைய பாருங்கப்பா! வந்துட்டாங்க… கம்யூனிசம் ஃபெயிலாடிச்சு, காரவட ஊசிப்போச்சுன்னு…

    ஒரு டாபிக் பத்தி பேசுனா மொதல்ல அதுக்கு பதில சொல்லுங்க…

    • கழுவி விட்டு ரொம்ப அனுபவம் போல.. அதெல்லாம் உங்களை போன்ற ஆட்களை பார்த்துக்கொள்ளுங்கள்..

    • அண்ணே மேதாவி விந்தைமனிதன் !!! மற்றும் படிக்காத மேதைகள் அனைவருக்கும் !!!!

      ஒரு வெங்காயமும் தெரியாமல் உலகத்திற்கே புத்தி சொல்லும் நீங்கள் சில அடிப்படை விஷத்தை தெரிந்து கொள்வதற்காக !!!

      Wikipedia :
      http://en.wikipedia.org/wiki/Communist_state

      Present communist states: China, Cuba, North Korea, Laos, Vietnam

      ஒரு நாடு பல கொள்கைகளை வைத்து தான் அது என்ன வென்று சொல்லுவார்கள் ………சீனா பொருளாதார கொள்கையில் கம்முனசத்தை கைவிட்டு விட்டது (பல ஆண்டுகள் ஆனது கொமுநிசும் எழ்மையைதான் அதிகரிக்கும் என்று புரிய ) ……ஆனால் சீனா அரசியல் மற்றும் வெளிஉறவு , ராணுவம், மக்கள் சுதந்திர்ரம், பத்திரிகை சுதந்திரம் என்ன அன்னைதில்லும் இன்னமும் கம்முநிசும் தான் .

      சும்மா திரும்ப திரும்ப சீனா கம்முநிசம் இல்ல , கியூபா கம்முநிசம் இல்ல என்று பினாத வேண்டாம் !!! அட அத விடுங்க இந்த பல போன கம்முநிசம் எதனை இடத்தில கைவிடப்பட்டது என்று தெர்யுமா ??

      Formerly communist: Afghanistan, Albania, Angola, Benin, Bulgaria, Cambodia, Congo, Czechoslovakia, Hungary, East Germany, Ethiopia, Mongolia, Mozambique, Poland, Romania, Somalia, South Yemen, Soviet Union

      இப்போ புரிகிறதா ??? சீனாவின் கம்முநிசம் கொள்கை மக்கள் சுந்திரத்தை நசுக்கி , அடக்குமுறையை பேசி போல அடவிடு கிறது !!!! ஆனால் அதே சீனாவின் தரலமயமாகபட்ட பொருளாதார கொள்கை அங்கு மக்களின் வறுமையை மிக விரைவாக குறைத்து விட்டது மட்டும் இன்றி இன்று உலகிலேயே வலிமை மிக்க நாடாக மாற்றயுள்ளது !!!

      World Bank:

      China before Economic reform 1970 : 64% below poverty line

      China after Economic reform 2004 : 10% below poverty line !!!

      இதில் இருந்தே உங்கள்ளுக்கு தெரியும் எது சிறந்தது என்று இனி யாவது கொஞ்சம் புரிந்து பேசுங்கள் !!!! 🙂 🙂 🙂

      • வாங்கய்யா வாங்க! மொதல்ல நான் செலத தெளிவு படுத்துறேன்! நா ஒண்ணும் ர்ர்ர்ர்ரொம்ப படிச்சி கிளிச்சிட்டு பொருளாதரத்தப் பத்தி ஏசி ரூம்புல பேசி மாயுற மேதாவி இல்ல! சாதாரணமா ஊருக்குள்ள சுத்திட்டு எவன் எவன்லாம் நாலு செண்டு நெலத்த வெச்சிகிட்டு வயத்துல ஈரத்துணிய போட்டுட்டு இருக்கான்ங்கிறத கங்கூடா பாத்துட்டு திரியற பட்டிக்காட்டான். ஏதோ பொழப்புக்காவ இப்பக்கி மெட்றாசு சிட்டியில திரிஞ்சிட்டு இருக்குறவன்.

        அடுத்தாப்புல ஒங்க ‘அமேரிக்கா’வுலயும், இன்ன பெற அய்ரோப்பாவுலயும் ‘புர்ர்ச்சிப் பொருளாதாரம்’ வீங்கி வெடிச்சதுல எத்தன பேரு நடுரோட்டுக்கு வந்தான்ங்கிறதையும், மகாராஷ்டிராவுலயும், ஆந்திராவுலயும் எத்தன வெவசாயி நாண்டுகிட்டு செத்தான்ங்கிறதையும் டீக்கட நூஸ்பேப்பர்ல படிச்சி தெரிஞ்சுகிட்டு வயிறு எரியிற அப்புராணி.

        நாங்கேட்ட கேள்வி என்னான்னா இந்தியா ஏண்டா அடுத்த நாட்டு வெவகாரத்துல வாலாட்டுதுங்குறது! அதுக்கு முடிஞ்சா ஞாயமா பதிலச் சொல்லணும்…. இல்லன்னா மூடிகிட்டு போவணும்.. அத உட்டுட்டு சீனா ஆட்டுது, அமெரிக்கா ஆட்டுதுன்னா என்னா ஞாயம்னு புரியல இந்த மரமண்ட ‘மேதாவி’க்கு!

        நேபாளத்துல ஆட்டுற வால அணு ஒப்பந்தம் போட்டப்பவும், நட்ட ஈடு கொடுக்க வேண்டாம், உன்னால முடிஞ்ச அளவுக்கு சொரண்டிக்கோன்னு சொல்றப்பவும் ஆட்ட வேண்டியதான? அதுக்குப் பதிலா வாலக் கொழச்சிட்டு காலுக்குள்ள சொருவிட்டு நின்னது யாரு? போபால்ல வெசவாயு கசிஞ்சப்ப ஒங்க அப்பனாத்தாவும், அக்கா தங்கச்சியும் மூச்சுமுட்டி செத்துருந்தா இந்த மாதிரியா ஞாயம் பேசுவ?!

        அமெரிக்க ஏர்போர்ட்ல ஜார்ஜ் ஃபெர்ணாண்டஸை அவுத்துபோட்டு நின்னுடான்னப்ப ஆட்ட வேண்டியதான இந்த வால? சிலுப்பா செட்டிய அவமானப்படுத்திட்டாங்கன்னு மட்டும் அந்த குதி குதிச்சீங்க?

        ஒங்க வீரத்த காமிக்க இளிச்சவாயி ஈழமும், நேபாளும்தான் கெடச்சிதா?

        அப்புறம் கடேசியா ஒண்ணு….

        //ஒரு வெங்காயமும் தெரியாமல் உலகத்திற்கே புத்தி சொல்லும் நீங்கள் சில அடிப்படை விஷத்தை தெரிந்து கொள்வதற்காக !!!

        ரொம்ப ஞாயமான ஆளுய்யா நீங்க! நாங்க தெரிஞ்சிக்க வேண்டியது அடிப்படை விஷம்னு கரீட்டா சொல்றீங்க!

        • /// நா ஒண்ணும் ர்ர்ர்ர்ரொம்ப படிச்சி கிளிச்சிட்டு பொருளாதரத்தப் பத்தி ஏசி ரூம்புல பேசி மாயுற மேதாவி இல்ல! சாதாரணமா ஊருக்குள்ள சுத்திட்டு எவன் எவன்லாம் நாலு செண்டு நெலத்த வெச்சிகிட்டு வயத்துல ஈரத்துணிய போட்டுட்டு இருக்கான்ங்கிறத கங்கூடா பாத்துட்டு திரியற பட்டிக்காட்டான். ஏதோ பொழப்புக்காவ இப்பக்கி மெட்றாசு சிட்டியில திரிஞ்சிட்டு இருக்குறவன். ///

          What the hell ?? Is it crime if any one live in AC or other facility ??

          Ask you a question…if today’s poor life changed (lets guess) and he able to buy AC…etc then will you say he is criminal ??? So meaning you want to keep all poor as poor and keep singing panja paattu ??

          Uneducated and poor can be hinest and good person but its very hard chance to be a smart guy…due to lack of education and awareness …and poverty mostly wont allow people to think in long term…. That’s why crime rates always high in poor countries. But same time it doesn’t mean they are stupid. Its just probability.

          —————————

          /// அடுத்தாப்புல ஒங்க ‘அமேரிக்கா’வுலயும், இன்ன பெற அய்ரோப்பாவுலயும் ‘புர்ர்ச்சிப் பொருளாதாரம்’ வீங்கி வெடிச்சதுல எத்தன பேரு நடுரோட்டுக்கு வந்தான்ங்கிறதையும், மகாராஷ்டிராவுலயும், ஆந்திராவுலயும் எத்தன வெவசாயி நாண்டுகிட்டு செத்தான்ங்கிறதையும் டீக்கட நூஸ்பேப்பர்ல படிச்சி தெரிஞ்சுகிட்டு வயிறு எரியிற அப்புராணி. //

          Why you its our america ??? Capitalist is not fully perfect …but it will learn and adjust by mistakes….. But no communism is failed and proven idiotic ideology…want proof ?? 🙂 🙂

          People like you always take poverty in agri as a chance to get sympathy supporters….. But do you know why poor farmers in India going for suicide ?? Due to too much man power supply in agri than demand their pay and returns are very low…

          Most of the farm workers have to work everyday to eat everyday …this is purely because of low wages …why its low ?? because of huge availability of manpower in villages ….. In america if one farm worker can manage 100 acres in india we need 1000 workers to manage 100 acres …it makes very manpower very cheap.

          As Agri is fully depend on nature (rain…etc) if any one year rain fails then millions of poor loose their live hood .

          Govt now trying to move these too much availability of manpower in villages to city by creating reliable jobs in cities … .Example take chennai …after much industrialization which creates huge jobs for low skilled and uneducated poors…now chennai poverty rate is very much low in india (only 8%).

          You might ask if huge farm workers moved from village to city then who will produce food ?? India agri tech is very very old after put so many manpower we still produce 5 times lower food per acre compared to developed country …example if one acre India produce 100 kg rice ….but china produce 500 kg. India already taking steps to change its technology in agri… and lots of foregin investors will be allowed in these filed slowly to match the food production…

          Some facts you should think ….

          * India 30 % people lives in city generate 70% of its GDP !!

          * India 70% people lives in rural gerates only 30% of GDP.

          * India never spend money for tax payers …but India is world biggest spender to give free subsidiary for rural people who never pays any tax.

          * An IT employee in india pay 30% tax …when he out of job govt never gives any help to him ….But non tax payers in rural gets compensation when their crops damaged by natural disaster…..

          ^^^ I am not saying its wrong….thats actually correct as rural people face huge poverty in india.

          ————————————–

          //// நாங்கேட்ட கேள்வி என்னான்னா இந்தியா ஏண்டா அடுத்த நாட்டு வெவகாரத்துல வாலாட்டுதுங்குறது! அதுக்கு முடிஞ்சா ஞாயமா பதிலச் சொல்லணும்…. இல்லன்னா மூடிகிட்டு போவணும்.. அத உட்டுட்டு சீனா ஆட்டுது, அமெரிக்கா ஆட்டுதுன்னா என்னா ஞாயம்னு புரியல இந்த மரமண்ட ‘மேதாவி’க்கு!

          நேபாளத்துல ஆட்டுற வால அணு ஒப்பந்தம் போட்டப்பவும், நட்ட ஈடு கொடுக்க வேண்டாம், உன்னால முடிஞ்ச அளவுக்கு சொரண்டிக்கோன்னு சொல்றப்பவும் ஆட்ட வேண்டியதான? அதுக்குப் பதிலா வாலக் கொழச்சிட்டு காலுக்குள்ள சொருவிட்டு நின்னது யாரு? போபால்ல வெசவாயு கசிஞ்சப்ப ஒங்க அப்பனாத்தாவும், அக்கா தங்கச்சியும் மூச்சுமுட்டி செத்துருந்தா இந்த மாதிரியா ஞாயம் பேசுவ?! ///

          யன்ன்கும் உன் ரேஞ்சுக்கு இறங்கி கோதா கொம்மானு பேச விருப்பம் இல்லை !!

          How many times you are going to link this bhopal tragedy to every single issue ???

          Of course india can not control america or china as they are much superior than us…. so is that mean we should let all other country to kill us ???

          America or china is not sending terrorist to our country …and those are quiet stable countries….even any political changes happen their wont affect india.

          But countries like Pakistan, bangaladesh, nepal, srilanka are very dangerous for us….as they are not stable and as we have past experience where they spend and send huge number of terrorists in india.

          When ask you to see the world you will say you wont ….and you keep talking like a frog in well is it ???

          —————————–

          /// அமெரிக்க ஏர்போர்ட்ல ஜார்ஜ் ஃபெர்ணாண்டஸை அவுத்துபோட்டு நின்னுடான்னப்ப ஆட்ட வேண்டியதான இந்த வால? சிலுப்பா செட்டிய அவமானப்படுத்திட்டாங்கன்னு மட்டும் அந்த குதி குதிச்சீங்க? ///

          You make no sense man !! For both above incidents india official condemn that…. you dont expect india to take war for that. Also when small countries do the same mistakes india never take chance to misuse that….

          Shilpa shetty issuse hyped by indian media not by indian govt ….dont act kiddish….get educate yourself.

          ————————–

  7. இலங்கையை இந்தியா தின்று இன்று துப்பிக்கொண்டிருக்கிறது. நேபாளத்தில் மக்கள் பலம் மாவோயிஸ்டுகளிடம் தான் உள்ளது. இந்தியா ஒரளவிற்கு மேல் வாலாட்ட முடியாது.

    • டேய் க…………….. ( ஐ மீன் கமியுநிச்டுன்களா) அது தான் தெரியுது இல்ல .. இந்தியாவோட சொறிஞ்சா இருக்கிற கோவணமும் போகும்னு.. இந்த மாவோயிஸ்ட் மொல்லைமாரிங்க சீனாவோட குழாவினாங்க இந்திய வைச்ச ஆப்பிலே இப்போ ரொம்ப முனகிறாங்க..
      டே நாங்க சீனாவை பார்க்கிறோம்.. நீங்க மூடிகிட்டு இருங்க சரியா…
      பாகிஸ்தான். பங்களாதேஷ், இலங்கை, நேபால், பூட்டான் எல்லாம் இந்தியாவ்ட எல்லைக்கு உட்பட்டது..
      இதை உணர்ந்தால் சரி…

      • என்ன கருணா .. இத்துணூண்டு போதுமா ?.. அமேரிக்கா , சீனா, சப்பானு, ரசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா எல்லாமே இந்தியா தான் .. உனக்கு தெரியாதா ?..

        எல்லா இடத்துலையும் கம்யூனிஸ்ட் ஆட்சி வரும்போது எல்லாமே ஒரே நாடாகும் … நீ வேணும்னா பாரேன் .. உன்னொட ஆசை ஒரு நாள் நிறைவேறும் .. ஆனா அதுக்கு பல தலைமுறைகள் ஆகும். நீயும் நானும் உயிரோட இருக்க மாட்டோமே …

        அதனால் இந்தியா மட்டும் கம்யூனிஸ்ட் நாடாக மாறுவதை உன் வாழ்நாள் முடிவதற்குள் கண்டிப்பாக பார்ப்பாய் என்று நம்புகிறேன்.

        • செங்கொடி மருது: உமது காலம் முடிவதுக்குள் இந்தியாவில் இருக்கும் எல்லா மாவ்யிச்டுகளுக்கும் “கா*” அடிக்கப்படும் 🙂
          இன்னும் ஒரு இரண்டு – மூன்று ஆண்டுகளுக்குள் நடக்கும் 🙂
          சவாலா?????

        • // அதனால் இந்தியா மட்டும் கம்யூனிஸ்ட் நாடாக மாறுவதை உன் வாழ்நாள் முடிவதற்குள் கண்டிப்பாக பார்ப்பாய் என்று நம்புகிறேன். //

          Day dreaming ??? Already communist in india lost their address 🙂 🙂 🙂

          Why you all not writing anything abbot Maoists who kidnaps and kills cops now ??? The cops family begging Maoists but they are still killing them like chicken ……..IS this is the rule you are talking about ???

          Don’t come and say Maoist history was so terrifying ….then why they kill these cops who not directly involved in that ???

          They are just barbarians …and counting their last days….

      • இந்தியாவோட சொறிய வரலை! எனக்கும் சிரங்கு வந்துரும்.. காமன்வெல்த் போட்டிக்கு வந்தாலே சொறி வந்துடும்னு நான் இல்ல, சாதாரண போட்டியளர்களே சொல்றாங்க. அவங்களையே அப்படிநடத்தினா சாதாரண மக்களை மிருகங்களையும் விட கேவலமா தான் நடத்துவாங்கன்னு இப்போ உலகத்தின் மூலை முடுக்கெல்லாம் பேசுறாங்கப்பா. அய்யோ நான் சொறிய வரல தலைவரே.

  8. //உமது காலம் முடிவதுக்குள் இந்தியாவில் இருக்கும் எல்லா மாவ்யிச்டுகளுக்கும் “கா*” அடிக்கப்படும்//
    இப்போ மட்டும் என்னவாம்? 4 முதலாளிகளும், 5 அரசியல்வாதிகளும் சேர்ந்து அதைத் தானே மொத்த இந்திய மக்களுக்கும், தெற்காசிய மக்களுக்கும் செய்து கொண்டிருக்கிறீர்கள்.
    உங்கள் ஆனந்தப்படுத்த மட்டும் இந்த லிங்கை கிளிக் செய்து பாருங்கள்:

Leave a Reply to சேரிக்காரன் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க