privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்பீபீ லுமாடா : இந்திய தூதரகத்தின் இரக்கமற்ற கொலை !!

பீபீ லுமாடா : இந்திய தூதரகத்தின் இரக்கமற்ற கொலை !!

-

வெளிநாடு வாழ் இந்தியப் பிரஜைகளுக்கு வாக்குரிமையும் ,அவர்களின் சொந்தத் தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்றம் செல்லும் உரிமைக்காகவும் விடாமல் போராடிக் கொண்டிருக்கிறார் வயலார் ரவி. தேர்தல் வாக்குச் சீட்டு என்கிற பம்மாத்தெல்லாம் எதற்கு பேசாமல் இந்திய தொழில் கூட்டமைப்பிடம் பாராளுமன்றத்த்தை குத்தகைக்கு விட்டால் அவர்களாக பார்த்து பதவிகளை விற்று விட்டு ஒரு தொகையை ராயல்டியாக அரசுக்கு கட்டி விட்டுப் போவார்கள் என்கிற அளவுக்கு நாடு நாறிக் கிடக்கது. தொழிலதிபர்கள், வாரிசுகள், உயரதிகார்கள் எல்லாம் எம்பியாகி நூற்றி பத்து கோடி இந்தியர்களின் தலையெழுத்தையும் தீர்மானிக்கும் பாராளுமன்றம் சாதா நேரமும் தொழில் முதலைகளுக்காகவும், தொழில் நிறுவனங்களுக்ககவும் சிந்தித்துக் கொண்டிருக்கும் போது, நீண்டகாலமாக வெளிநாட்டில் வாழ்ந்து கொண்டே தாய்நாட்டின் மீதான பற்றில் துடிக்கும் மேட்டுக்குடி வெளிநாடு வாழ் இந்தியர்களின் தாய்நாட்டுப் பாசத்திற்காக சலுகை காட்டுகிறது இந்திய அரசு. ஆனால் இவர்கள் தேச பக்தி என்பதே தேர்தலில் ஓட்டுப் போடுவதும், கொழுத்த பணத்தோடு வந்து தேர்தலில் போட்டியிட்டு எம்பியாவதும்தான். இந்த பணக்கார வெளிநாட்டு வெள்ளைத் தோல் மனிதர்களும், தன் குடும்ப வறுமையை போக்கிக் கொள்ள கடன் வாங்கி வெளிநாடு சென்று கடின உழைப்பில் கால நேரமில்லாமல் ஈடும் தொழிலாளர்களும் ஒன்றல்ல, எண்ணெய் கிடங்கில், கட்டிடத் தொழிலில், சாலைப்பணியில், வீட்டுத் தொழிலில், மருத்துவப் பணிகளில், மீன் பிடித்தொழிலில் என பல்லாயிரம் ஏழைகள் வெளிநாடுகளில் ரத்தம் சிந்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை எல்லாம் இந்திய ஆளும் வர்க்க எஜமானர்கள் எப்படி நடத்துவார்கள் என்பதற்கு ஒரு எடுத்துக் காட்டு பீபீ லுமாடா.

ஓமன் நாட்டில் வீட்டுப் பணிப்பெண்ணாக வேலை செய்தவர் பீபீ லுமாடா , இவர் இந்தியாவுக்கு திரும்பும் வழியில் தோஹா விமானநிலையத்தின் தன் இந்தியப் பாஸ்போட்டைத் தொலைத்திருக்கிறார். இதனையடுத்து அப்பெண்ணை தோஹா விமான நிலைய அதிகாரிகள் அவரை இந்தியாவுக்கு செல்ல அனுமதிக்காமல் மஸ்கட்டுக்கே திருப்பி அனுப்பியிருந்தனர். கடவுச் சீட்டு இல்லாததனாலும், ஒமானுக்குள் மறுபடியும் நுழைவதற்கான விசா இல்லாததாலும் இவரை விமான நிலையத்தை விட்டு வெளியில் செல்ல அனுமதிக்காமல் மஸ்கட் விமான நிலையத்திலேயே வைத்து விட்டு மஸ்கட்டில் உள்ள இந்தியத் தூதரகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்தியத் தூதரகப் பணியாளர்களோ அப்பெண்ணை விரைவில் தொடர்பு கொள்வோம் என்று சொன்னதோடு சரி, வந்து பார்க்கவும் இல்லை ஏன் என்று கேட்கவும் இல்லை. ஐந்து நாட்களாக லுமாடா தங்கிவதற்கு அறையோ தனக்கு ஒத்துக் கொள்ளும் உணவோ இன்றி வாடிய நிலையில், அச்சம் அவரை துவட்டி எடுக்க ஆறாவது நாள் காலையில் உறங்கிய நிலையிலேயே லுமாடாவின் உயிர் பிரிந்திருந்தது. அதுவரை நேரில் வந்தோ அள் அனுப்பியோ அந்த பெண்ணின் உயிரைக் காப்பாற்றாத இந்திய தூதர் அனில் வாத்வா  ”பாஸ்போர்ட்டைத் தொலைத்திருந்த லுமாடாவுக்கு தற்காலிக பயண ஆவணங்களை தருவதற்குள்ளாக அவர் உயிரிழந்தது வருத்தம் அளிப்பதாக ” தெரிவித்திருக்கிறார். இப்போது லுமாடாவின் உடலை பத்திராமாக அவரது சொந்தங்களிடம் சேர்க்க முயர்சிக்கிறதாம் இந்தியாத் தூதரகம். ஆமாம் இந்த இந்தியா எப்போதும் ஏழைகளின் உடலை பத்திரமாக அனுப்புவதிலேயே குறியாக இருக்கும்.

________________________________

தொம்பன்
________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

 

  1. பீபீ லுமாடா : இந்திய தூதரகத்தின் இரக்கமற்ற கொலை !! | வினவு!…

    பல்லாயிரம் இந்திய ஏழைகள் வெளிநாடுகளில் ரத்தம் சிந்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை இந்திய ஆளும் வர்க்க எஜமானர்கள் எப்படி நடத்துவார்கள் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு பீபீ லுமாடா…

  2. […] This post was mentioned on Twitter by Kirubakaran S, சங்கமம். சங்கமம் said: பீபீ லுமாடா : இந்திய தூதரகத்தின் இரக்கமற்ற கொலை !!: பல்லாயிரம் இந்திய ஏழைகள் வெளிநாடுகளில் ரத்தம் சிந்திக் கொண்டிர… http://bit.ly/dmhWUq […]

  3. vetkam, maanam poandra ithyathikalai vittu kaetkiraen….. naan yaen velinaatu prajavurimai vaangi settle aagi vidakudathu…..( nadakkum ethayum maatrum sakthi-illatha kozhai endru kooda ninaithukollungal )

  4. இந்தியர்களை தாக்கினால் பொறுக்க மாட்டோம்: வயலார் ரவி

    ///வெளிநாடுகளில், இந்தியர்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது என்றும், அதையும் மீறி இந்தியர்கள் தாக்கப்பட்டால், அதை இந்தியா பொறுத்து கொள்ளாது என்றும் மத்திய அமைச்சர் வயலார் ரவி கூறினார்.பொள்ளாச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆஸ்திரேலியாவில், இந்திய மாணவர்கள் தாக்கப்படும் சம்பவம் தொடர்பாக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்த சம்பவத்திற்கு, அந்நாட்டு அரசும், தூதரகமும் மன்னிப்பு கேட்டுள்ளது. அந்நாட்டு அரசுடன் பேச்சு நடத்தியதில், ஆஸ்திரேலியாவுக்கு வரும் இந்தியர்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அந்நாட்டு அரசும் பாதுகாப்பு அளிப்பதாக உறுதி அளித்துள்ளது. இந்தியாவும், வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.உலகின் எந்த பகுதியிலும் இந்தியர்கள் பாதிக்கப்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.இப்பிரச்னைக்கு முக்கிய காரணம், ஓரே ஆண்டில் 50 ஆயிரம் பேர் வீதம் இரண்டு ஆண்டுகளில், ஒரு லட்சம் பேருக்கு விசா வழங்கப்பட்டுள்ளது. இவர்கள், அனைவரும் மாணவர்கள் என்ற பெயரில் வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். ஆனால், அவர்களில் 70 சதவீதம் பேருக்கு ஆங்கிலம், இந்தி என எந்த மொழியும் தெரிவதில்லை. வெளிநாடுகளில், வேலைக்கு ஆட்கள் எடுக்கும் நிறுவனங்கள் மாணவர்கள் என்ற பெயரில் அழைத்து செல்கின்றனர். இங்கிருந்து செல்பவர்களுக்கு சரிவர பாதுகாப்பு கிடைப்பதில்லை. இந்த நிலையை தவிர்க்க, ஆஸ்திரேலிய அரசு விசா வழங்கும் முறையை கட்டுபடுத்தியுள்ளது.வெளிநாடுகளுக்கு செல்லும் இந்தியர்களுக்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதையும் மீறி இந்தியர்கள் தாக்கப்பட்டால், இந்தியா அதை பொறுத்து கொள்ளாது என்றார். /////வயலார் ரவிகளும் இந்திய ஆளும் வர்க்கங்களும் எந்த இந்தியனைத் தாக்கினால் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள் என்பதை தெரிந்து கொள்ளவும்.

    • உண்மை தான். ஆஸ்திரேலியா-வில் இந்தியர்கள் தாக்கப்பட்டால் அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியாது. அங்கே என்ன கட்டுமான பணியாளர்கள் மற்றும் இன்ன பிற சாதாரண வேலை செய்யும் ஏழை மக்களா வசிக்கிறார்கள்? இல்லையே. ஆஸ்திரேலியாவில் மட்டுமல்ல அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வல்லரசு நாடுகளிலும் இந்தியர்கள் தாக்கப்பட்டால் அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியாது! ஆனால் அரேபிய நாடுகளில் வேலை செய்யும் இந்தியர்களுக்கு என்ன ஆனாலும் அவர்கள் தாங்கிக்கொள்வார்கள். நீ கொன்றால் என்ன? நான் கொன்றால் என்ன? இந்திய ஏழைகள் செத்து ஒழிந்தால் சரி.

  5. ஏழைகள் என்று ஒரு பாவப்பட்ட இனம் இந்தியாவில் இருக்கிறது என்பதை ஆட்சியாளர்கள் மறந்து பல வருடங்கள் ஆகிறது, அவர்கள் எல்லாம் வாக்காளர்கள்.

  6. இது முழுக்க முழுக்க இந்தியத் தூதரகத்தின் அக்கரையின்மையால் மட்டுமே நடந்தது.

    அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சலால்தான் அவர் இறந்திருக்கக்கூடும்.

  7. சண்டையில கிழியாத சட்டை உண்டோ… வல்லரசுக் கனவுநோக்கிய அயராத பயணத்தில் யார் செத்தா என்ன யார் வாழ்ந்தா என்ன? :((

  8. ஓமான், மற்றும் கத்தார் அரசுகளைதான் நான் முதலில் குற்றம் சாட்டுவேன்.
    வெளி நாட்டில் இருந்து, தனது நாட்டிற்கு வந்துள்ள ஒரு விருந்தினரை , இப்படியா பாதியில் விட்டு விடுவது

    • பெத்தவளுக்கே அக்கரை இல்லாத போது ஊர்காரனுக்கு என்ன வந்தது?

    • @ ராம்ஜி

      விவரம் தெரிந்துதான் சொல்கிறீர்களா என்று தெரியவில்லை பாஸ்போர்ட் இல்லாத ஒருவரை (அது தொலைந்திருந்தாலும்)அவர் கூறும் எந்த நாட்டுக்கும் எந்த நாடும் அனுப்பமுடியாது
      அவர் கூறும் நாட்டு தூதரகத்திலிருந்து வந்து விபரம் கேட்டு அவர் கூறும் விபரம் சரியா என்று அந்த நாட்டில் வெரிஃபிக்கேஸன் செய்த பிறகு தான் சொந்த நாட்டுக்கு டெம்ரவரி பாஸ்போர்ட் எடுத்து அனுப்பபடும் இந்த சட்டம் உலகலாவிய அனைத்து நாட்டுக்கான சட்டம்.

      இந்த மரணத்துக்கு இந்திய தூதரகமே முழுவதும் பொருப்பு.

  9. செய்தாளில் படிக்கும்போதே இதயம் கனத்தது. இந்திய ஏழையாய் பிறப்பதால் எண்ணற்ற வேதனைகளில் உழல்வது விதிக்கப்படாத சட்டமோ என்னவோ?

  10. நாய்கள். இதெற்கெல்லாம் ஒருநாள் கணக்குத் தீர்க்கப்படவேண்டும்.

  11. இந்திய தூதரகங்கள் வெளிநாடுகளில் செயல்படும் விதத்தை நான் நேரில் பார்த்திருக்கிறேன்.. நம்ம ஊர் முனுசிபாலிட்டி ஆபிஸ் மாதிரி நடந்து கொள்வார்கள் …

  12. Dear Sir,

    Below some Points about INDIAN IN KUWAIT, AND KUWAIT EMBASSY ACTIVITIES.

    In Kuwait, Indian embassy And Workers are so great, They treat the workers like hell,
    1. In Kuwait the highly profitable bakale (shop) is Indian Embassy, ie: For each and every Documents Attestation, Stamping New Passport, for all the transaction their charging KW KD : 8 to 16/-.
    Average KD: 12/- per person, every day around 200 to 400 workers dealing for this way average KD: 12 x 300/- : 3,600/- per day.
    Every month 3,600 x 20 days: KD 72,000/- ic Indian Rupees: 11,520,000/- , yes, but this dealing and activities with Indian workers like Owner treat with Domestic Workers.
    2. For Dead Body, cancellation for the Passport also their charging same like KD: 15/- more over charging for the welfare fund also from dead person account to live workers for welfare, what kind of welfare, nobody knows, also treatment very bad, what is their answer is the payment will pay by company, so what. Other Countries Like Pakistan doing with free of cost for the all transaction, moreover send back body to the home country on their flight cargo charges also free, for Indian dead body flight cargo charges costing KD: 250/- (irs: 40,000/-) + other documents expenses.
    3.Indian Travel Tickets, Most of the time the travelers say this season so the fare will be increased from KD: 80/- 220/- (irs : 12,800/- 35,200/-) for what they are cheating with workers and families, who all are staying with various reason etc. not like other countries with standard rate like throughout year. Here many Indian associations working with many poor workers fund collection, but they never take this mater or discuss on these matters, may be they get benefit through some other way.

    Regds.

    Indian ordinary man.

  13. இந்த மாதிரி சம்பவங்கள் வளைகுடா நாடுகளில் அடிக்கடி நடக்கிறது. ஒன்றிரண்டுதான் வெளியே தெரிகிறது. நம்ம தூதரக அதிகாரிகளுக்கு விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவும், விழாக்களுக்கு தலைமை தாங்கவுமே நேரம் பத்தாது. இந்திய ஏழைகளின் உயிருக்கு இந்தியாவில் மட்டுமல்ல, உலகில் எங்கு சென்றாலும் மதிப்பில்லை.

  14. ஓமன் தூதரகத்தில் உள்ளவனுக்கெல்லாம் தினசரி வேலை என்பது எதாவது கூட்டம்,விருந்து என்று போய்விட்டு போட்டோவுக்கு போஸ் குடுத்துவிட்டு பின் அங்கு தரப்படும் ஓசி சரக்கை குடித்துவிட்டு வீட்டுக்கு போவதுதான். ஒரு பிலிப்பினோ தூதரகமோ,இலங்கை தூதரகமோ தனது நாட்டு மக்களிடம் காட்டும் அக்கறையில் நூறில் ஒரு பங்குகூட இந்தியத்தூதரகம் இந்திய(??) மக்களிடம் காட்டுவதில்லை.

    பீபி லூமாடா தடுத்துவைக்கப்பட்டிருந்த நாள்முதல் தினமும் ஒரு மஸ்கட் காவல்துறை அதிகாரி தூதரகத்திற்கு தொலைபேசி emergency travel document வழங்கச்சொல்லி ஞாபகப்படுத்தியிருக்கிறார். ஆனால் இந்த கொழுப்பெடுத்த நாய்கள் வழக்கம்போலவே உதாசீனப்படுத்தியிருக்கின்றன.
    உடலை இந்தியாவுக்கு அனுப்பியபோது 10,000 ரூபாய் கொடுத்தது இந்திய தூதரகம் அல்ல, indian social club.

    இவர்கள் வெட்டிக்கிழித்து ஓய்வெடுப்பதற்கு ஓமன் நாட்டு விடுமுறை நாட்கள் மட்டுமல்ல,இந்திய விடுமுறை நாட்களிலும் தூதரகத்தை மூடிவிடுவார்கள்.

    தவறான நிறுவனத்தில் மாட்டிக்கொண்டு துயரப்படும் ஒரு இந்தியத்தொழிலாளிக்கு தூதரகத்தின் உதவி என்பது எப்போதும் கிட்டாத கானல்நீர்தான்.

  15. Ithai omanil irunthukondu padikka enakku migavum varuthamaga ullathu, Indian embassy yoda intha seyal migavum vetkakedanathu, oru attested kke 5 rial vasulikkum intha thoo………..ragam oru matru vazhikku ivlo naal wait panna antha penmani oru 100 rial koduthuruntha marunale kidaithirukkum melum antha pennoda agent tum itharkku muthal karanam avan oru 20 rial kkaga antha pennai doga vazhiya ga anupiyathu, direct flight ticket vangi koduthuruntha intha nilamai antha pennirku vanthirukathu

  16. Srilankan born Tamils (eventhough with a Canadian Passport) cannot get a visa to without bribing officials in Indian High Commision in India.
    These bastards brazenly hold the passports untill the Flight date (they wont issue visa without booking a Ticket) and demand money…
    Every single person expects money in Indian H.C.
    They will beg for money in elevators…
    Even poor African nations would run their embassys and officies in professional manner.
    I am sure very soon Indian H.C’s will run brothels in their offices….

  17. நிச்சயமாக இது கொலைதான்.
    இந்திய மக்களின் வரிப்பணத்தில் உயர் கல்வி கற்று விட்டு அந்த மக்களுக்கு துரோகம் செய்து காசுக்கு ஆசைப்பட்டு வெளிநாட்டுக்கு ஓடிப்போகும் நன்றி கெட்ட ஓடுகாலிகளுக்கு வாலை சுருட்டிக்கொண்டு பணிவிடை செய்யும் இந்திய அலுவல் வர்க்கம் பீபி லுமாடா போன்ற உழைக்கும் ஏழைகளை அலட்சியப் படுத்தியே வருகிறது.ஆறு நாட்களாக அந்த வானூர்தி நிலையத்தில்,உணவும் நீரும் இன்றி பாலைவனத்தில் சிக்கிக்கொண்ட பயணியைப்போல்,அலைந்து திரிந்து அனாதையாக உயிர் நீத்த அந்த அன்னையின் அவலம் நெஞ்சை உருக்குகிறது.
    ”தற்காலிக பயண ஆவணங்கள் அணியப்படுத்த” ஆறு நாட்கள் எடுத்துக்கொண்ட தூதரக அலுவலர்கள் மனிதர்களா, தடித்தோல் கொண்ட எருமைகளா.

    • ரொம்ப உருக வேணாம் ..அந்த பெண்மணிக்கு உணவு..படுக்க இடம் எல்லாம் கிடைத்தது..ஆனா மனநிலை தான் சரியில்லை… பாஸ்போர்ட்டை கவனமாக பார்த்துக்கொள்ள வேணாமா? ஒரு $100 பாக்ஸ் பண்ணியிருந்தா அந்த அதிகாரி நாதாரி உடனே கொடுத்திருப்பான்… இந்தியாவை மாதிரி ஒரு கேவலமான நாடு உலகில் ஒன்றுமே இல்லை…

Leave a Reply to Anonymous பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க