privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஇதரகேலிச் சித்திரங்கள்சாதீ - முகிலனின் ஓவியங்கள் !

சாதீ – முகிலனின் ஓவியங்கள் !

-

தாழ்த்தப்பட்ட மக்களை சமூகத்திலிருந்து வெறுத்து ஒதுக்குவது மரண தண்டனையை விட கொடியது என்றார் டாக்கடர் அம்பேத்கர். ஆனால் அவருக்கு முன்பும், அவர் வாழ்ந்த காலத்திற்கு பின்பும் இந்திய சமூகச் சூழலில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஆதிக்க சாதி வெறியர்களால் அவிழ்த்து விடப்பட்ட தீண்டாமை கொடுமைகள் ஆயிரம்..ஆயிரம். தஞ்சை மாவட்டம் கீழ் வெண்மணியில் தாழ்த்தப்பட்ட விவாசாயத் தொழிலாளர்கள் உயிரோடு கொளுத்தப்பட்ட கொடூரம் இப்பொழுதும் நெஞ்சை விட்டு அகலாத வடு. இப்படி எண்ணற்ற வடுக்களை ஏற்படுத்தியதில் முக்கிய பங்கு வகிப்பது இங்கு நிலவும் தீண்டாமை கொடுமை, அதை தூக்கிச் சுமக்கும் வர்ணாசிரமம், அந்த வர்ணாசிரமத்தை உயிருக்கு நிகராக பாதுகாக்கும் பார்ப்பனியம். இந்த சமூக அமைப்பின் கீழ் படிந்திருக்கும் இந்த வர்ணாசிரமக்க கசடுகளையெல்லாம் அகற்றாத வரை கீழ்வெண்மணிகள் வெவ்வேறு வடிவங்களில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். அப்படி தொடர்ந்த, தொடர்கின்ற வன்கொடுமையின் சித்திரப்பதிவுக்களே இவை!

கீழ் வெண்மனி தியாகிகளுக்கு வீர வணக்கம்

கூலி உயர்வுக்கு போராடிய கீழ் வெண்மனி விவசாயிகளை உயிரோடு எரித்த ஆதிக்க சாதி வெறியர்கள்

மேலவளவு

மேலவளவு – பஞ்சாயத்து தேர்தலில் வெற்றி பெற்ற காரணத்திற்காக ”நமக்கு மேல் இவனா” என்ற ஆதிக்க சாதி வெறி மேலோங்க முருகேசன் என்ற தாழ்த்தப்பட்டவர் உட்பட 6 பேரை வெட்டி படுகொலை செய்தனர் ஆதிக்க சாதி வெறியர்கள்

திண்ணியத்தில், கருப்பையா என்ற தலித் இளைஞனின் வாயில் மலத்தை தினித்த ஆதிக்க சாதி வெறியர்கள்

திருச்சி மாவட்டம், திண்ணியத்தில், கருப்பையா என்ற தலித் இளைஞனின் வாயில் மலத்தை திணித்த ஆதிக்க சாதி வெறியர்கள்

1992, வீரப்பன் தேடுதல் வேட்டையில் தரும்புரி வாச்சாத்தி பழங்குடியின மக்கள் மீது போலீசு நடத்திய மிருகத்தனமான தாக்குதல்

வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது தருமபுரி மாவட்டம் வாச்சாத்தி பழங்குடியின மக்கள் மீது போலீசு நடத்திய மிருகத்தனமான தாக்குதல்

பாப்பாபட்டி – கீரிப்பட்டியில் அரசை மிரட்டி தன்னை நிலைநிறுத்தி வரும் தேவர் சாதி ஆதிக்கம்

குரங்கு பேட்டையில், மரத்திலிருந்து வீழ்ந்த நாவல் கனியை தின்ற தலித் சிறுவனுக்கு இழைக்கப்பட்ட வண்கொடுமை
திருச்சி மாவட்டம், குரங்கு பேட்டையில், மரத்திலிருந்து வீழ்ந்த நாவல் கனியை தின்ற தலித் சிறுவனுக்கு இழைக்கப்பட்ட வன்கொடுமை

மதுரை மாவட்டம் திருமங்கலத்திற்கு அருகில் உள்ள வில்லூரில் தாழ்த்ப்பட்டவர்கள் தங்கள் தெருப்பக்கம் இரு சக்கர வண்டிகளை ஓட்ட தடைவிதித்தனர் ஆதிக்க சாதியினர்
மதுரை மாவட்டம் திருமங்கலத்திற்கு அருகில் உள்ள வில்லூரில் தாழ்த்ப்பட்டவர்கள் தங்கள் தெருப்பக்கம் இரு சக்கர வண்டிகளை ஓட்ட தடைவிதித்தனர் ஆதிக்க சாதியினர்

பொது நீர் நிலைகளில் குடிநீர் எடுக்க தாழ்த்தப்பட்டவர்களுக்கு தடை
பொது நீர் நிலைகளில் குடிநீர் எடுக்க தாழ்த்தப்பட்டவர்களுக்கு தடை

மனித மலத்தை மனிதன் சுமக்கும் அவலம்

மனிதனின் மலத்தை மனிதன் சுமக்கும் அவலம்

செருப்பு தைப்பது இன்னமும் ஒரு சாதிக்கு மட்டுமேயான தொழிலாக இருக்கிறது
செருப்பு தைப்பது இன்னமும் ஒரு சாதிக்கு மட்டுமேயான தொழிலாக இருக்கிறது

பொதுக்குவளைக்கு மறுப்பு - தனிக்குவளை அல்லது கையேந்த்தல் என்பதே நடைமுறையில் உள்ளது

பொதுக் குவளைக்கு மறுப்பு – தனிக்குவளை அல்லது கையேந்த்தல் என்பதே நடைமுறையில் உள்ளது

மதுரை மாவட்டத்தில் உள்ள 83 கிராமங்களில் 73 ல் இன்னமும் இரட்டை குவளை முறை அமலில் உள்ளது
மதுரை மாவட்டத்தில் உள்ள 83 கிராமங்களில் 73 ல் இன்னமும் இரட்டை குவளை முறை அமலில் உள்ளது

கோவிலில் சம வழிபாட்டு உரிமை கோரியதற்காக செந்தட்டியில் இரண்டு தலித்துகள் ஆதிக்க சாதி வெறியர்களால் படுகொலை செய்யப்பட்டன்ர்
கோவிலில் சம வழிபாட்டு உரிமை கோரியதற்காக செந்தட்டியில் இரண்டு தலித்துகள் ஆதிக்க சாதி வெறியர்களால் படுகொலை செய்யப்பட்டன்ர்

கயர்லாஞ்சியில் போட்மாங்கே குடும்பத்து பெண்கள் ஆதிக்க சாதியினரால் பாலியல் வன்புணர்ச்சி செய்யப்பட்டு படுகொலை
கயர்லாஞ்சியில் போட்மாங்கே குடும்பத்து பெண்கள் ஆதிக்க சாதியினரால் பாலியல் வன்புணர்ச்சி செய்யப்பட்டு படுகொலை

____________________

– ஓவியங்கள் முகிலன்
____________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

  1. சாதீ – முகிலனின் ஓவியங்கள் !…

    பார்ப்பனியத்தை தூக்கி எரியாத வரை கீழ்வெண்மணிகள் வெவ்வேறு வடிவங்களில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். அப்படி தொடர்ந்த, தொடர்கின்ற வன்கொடுமையின் சித்திரப்பதிவுக்களே இவை!…

  2. முகிலனது ஓவியங்கள் யதார்த்அத்தஃதையும், அதனோட கொடுஉமையையும் சேர்த்து மனதில் எறியவைக்குது. வாழ்த்துக்கள். இதே போல அவரது ஆபரேஷன் கிரீன்ஹண்ட் ஓவியங்களையும் போடலாமே?

  3. ஓவியங்கள் நெஞ்சை தொடுகின்றன.
    மீண்டும் மீண்டும் ஒரு விஷயம் தங்கள் கவனத்திற்கு: கீழ வெண்மணி தலித்- ஆதிக்க சாதி வன்முறை அல்ல: நிலச்சுவான்தார், கூலி உயர்வு கேட்ட தொழிலாளிகளை உயிரோடு எரித்த கொடுமை. அதில் சாதி விளையாட விலை. முதலாளித்துவத்தின் கேடு கேட்ட செயல்.

    • ரவி,

      தோழர் முகிலனுக்கு மின்னஞ்சல் முகவரி இல்லை. அவரிடம் நீங்கள் தெரிவிக்க விரும்பும் தகவலை வினவு மின்னஞ்சலுக்கு அனுப்பினால் சேர்த்து விடுவோம். நன்றி

  4. முகிலனது ஓவியங்கள் சமீப காலத்திய சாதி ஆதிக்க வன்கொடுமைகளின் வரலாற்றுத் தொகுப்பாயும் முகத்தில் அறைகிறது. நன்றி

  5. ஓவியங்கள் நெஞ்சை தொடுகின்றன.
    இது ஓரு முதலாளித்துவத்தின் கேடு கேட்ட செயல்.

  6. முகிலனின் ஓவியங்கள் நிகழ்கால பயங்கரத்தை – தாழ்த்தப்பட்டோர்களின் மீதான ஒடுக்குமுறையை அழுத்தமாகப் படம் பிடித்துக் காட்டுகின்றன.

  7. ஓவியங்களைப்பார்த்தால் ரசிக்கதான் தோன்றும்.பெரும்பாலும் ஓவியங்கள் அழகானதைதானே வரைகிறது.ஆனால் முகிலன் அவர்களின் ஓவியங்கள் சமுக கொடுரங்கள் வெளிக்காட்டி, போராட்ட எண்ணங்களை விதைக்கிறது.

  8. இதைப்போன்ற மனசை உலுக்கும் படங்களை வெகு ஜனப்பத்திரிக்கைகள்
    என்று சொல்லிக்கொள்ளும் விகடன் போன்றவற்றில் காணமுடியாது.
    படத்தில் உள்ளதை அவர்கள் வேறு வடிவில் இன்னமும் செய்துவருகிறார்கள்.
    அதையும் நாம் தான் காசுகொடுத்து வாங்கிப்பார்க்கிறோம்.

  9. நெஞ்சை உருக்கும் படைப்புகள். ஆழ்ந்த பாதிப்பை மனதிற்குள் ஏற்படுத்துகிறது. ரிசர்வேஷனுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நபர்கள் இவ்வோவியங்களை பார்க்கவேண்டும். முக்கியமாக சென்னையில் வசிப்பவர்கள் தமிழகத்தில் தீண்டாமை ஒழிந்துவிட்டதாகவே நினைத்து கொண்டிருக்கின்றனர்.

  10. ஆதிக்க சாதி ஆதிக்க சாதின்னு மொட்டையா போட்டிருக்கீங்களே… எந்தெந்த சாதின்னு கொஞ்சம் தெளிவா போடற தைரியம் உங்களுக்கு இருக்கா..? (ஒரே ஒரு இடத்துல மட்டும் தேவர்ன்னு வருது) தலைப்பு மட்டும் ரொம்பத் தெளிவா பார்ப்பனியம்னு போட முடியுது. கொஞ்சம் யோசிங்க தோழர். எதிர்க்க முடிஞ்சவரை எதிர்க்கறது வீரம் இல்லை. எதிர்க்க வேண்டியவரை எதிர்க்கணும். முடியனைன்னா பொத்திட்டுப் போறது ரொம்ப நல்லது.

  11. ரமேஷ் அவர்களே,
    தென்மாவட்டத்தில் நடந்த ஆதிக்க ஜாதி ஒடுக்கு முறைக்கு எதிராக பத்தாவது படிக்கையில் ஆயுதம் ஏந்திய கை -இப்பொழுது தூரிகை, அவளவுதான் வித்தியாசம்.
    ஆதிக்க ஜாதி என்பதற்கு கோனார் உரை கேட்ட முதல் ஆள் நீங்கள்தான் . ‘தலைப்பு மட்டும் ரொம்பத் தெளிவா பார்ப்பனியம்னு ஏன் போடுறோம்ன ‘அது ஆணிவேர் அதன் பின்புதான் அத்தணை ஜாதியும். சர்வதேசிய ஓடுக்கு முறைக்கு
    எதிராக போராடுபவர்களுக்கு ஜாதியை குறிப்பிட்டு எழுதுவது
    பெரிய விஷயம் ஒன்றும் கிடையாது. தொடர்ந்து படைப்புகளை கவனியுங்கள், அந்த படைப்புகளில் வீரம் விரவிக்கிடக்கும். வீரம் குறித்து தாங்கள் எங்களுக்கு வகுப்பு எடுக்க வேண்டாம்,

  12. தமாஷ் பண்ணாதீங்க தோழர். பார்ப்பனியம்தான் ஆணிவேரா? மத்தவங்க எல்லாம் வாயில விரலை வெச்சாலும் கடிக்கத் தெரியாத பாப்பாவா? தெரியாமத்தான் கேக்கறேன் அப்படியே பார்ப்பான் தான் சாதியை உருவாக்கினதா இருந்தாலும் என்ன மயித்துக்கு மத்தவங்க எல்லாரும் பிடிச்சு தொங்கிட்டுக் கிடக்கறோம். அடுத்தவன் மேல பழி போடறது ரொம்ப ஈஸி. அது பிரச்னையை ஒரு போதும் தீக்காது.

    • ரமேஷ் அவர்களே, பார்பநீயம்தான் ஆணிவேர் என்பது அரிச்சுவடி. இதை கேள்வி எழுப்புவதன் நோக்கம் என்ன? பிற ஆதிக்க சாதியினர் பயன் அடைந்துள்ளனர் என்பது உண்மையே. இன்று களத்தில் மோதல் நடந்து வருவதும் அதில் ஆதிக்க சாதியினருக்கு எதிராக தோழர்கள் களத்தில் நிற்பதும் அனைவருக்கும் தெரியும்தானே? இதில் உங்கள் கேள்வி என்ன?

  13. ரமேஷ் அவர்களே,
    ஆம்,பார்ப்பனியம்தான் ஆணிவேர்,’ ‘மத்தவங்க எல்லாம் வாயில விரலை வெச்சா, கடிக்கத் தெரியாத பாப்பாக்கள் அல்ல” , அதனாலதான் தலையயும் ,வாலையும் நறுக்குவதட்க்கான களத்தில் நிற்கிறோம்.
    ”தெரியாமத்தான் கேக்கறேன் அப்படியே பார்ப்பான் தான் சாதியை உருவாக்கினதா இருந்தாலும் என்ன மயித்துக்கு மத்தவங்க எல்லாரும் பிடிச்சு தொங்கிட்டுக் கிடக்கறோம். ”
    அப்படி தொங்கிகிட்டு கிடக்கின்ற நபர்களை பார்த்து நீங்கள் கேட்க வேண்டிய கேள்வி ,எங்களை பார்த்து அல்ல.

  14. வினவு – எல்லா அதிகார மையத்தையும் எதிர்ப்பது தெரியும். ஆனால், முகில் வரைந்த ஓவியங்களில் ஆதிக்க இந்து பற்றிய மொட்டையான குறிப்புகள் மட்டுமே இடம்பெற்றிருந்தன. கிறிஸ்தவத்துக்குள் ஊடுருவியிருக்கும் சாதி வெறி, இஸ்லாத்தில் ஊடுருவி இருக்கும் சாதி வெறி,ஆதிக்க சாதிக்கு உள்ளேயே இருக்கும் சாதி வெறி, ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கு உள்ளேயே இருக்கும் சாதி வெறி என சாதியின் பிற முக்கியமான எந்த அம்சமும் இடம்பெறவில்லை. அது சாதி என்ற கோட்பாட்டை மேலோட்டமாகப் புரிந்து கொண்ட அல்லது உண்மைக்கு நெருக்கமாக இருக்கும் துணிச்சல் இல்லாத போலி அரசியல் பம்மாத்தாகவே இருக்கிறது. சாதி அமைப்பினால் அதிக ஆதாயம் அடைந்த பிரிவு என்ற வகையில் சாதியத்துக்கு எதிரான போரை பார்ப்பனியத்துக்கு எதிரான போராக ஆரம்பித்ததில் பெரிய தவறு இல்லை. ஆனால், அதற்கு அடுத்த கட்டத்துக்கு நகராமல் இருப்பது முட்டாள்த்தனம். பல நேரங்களில் சொந்த சாதியை எதிர்க்கத் துப்பில்லாத கோழைத்தனமாகவே அது இருக்கிறது.

  15. Ultimate problem of human life is selfish people seeking for money and security. They use caste, religion, language, and other differences as a mean to attain the above. Innocents support with out knowing. Such selfish people are in all the departments including religious congregations and social service centres. Beware that all the evils are selfish money oriented ones not anything else.

  16. ரமேஷ் அவர்களே
    வணக்கம் ,
    பாவம்! பார்ப்பனியம் என்ற சொல்லை கேட்டவுடனே கொதித்து போகிரிர்கள், இருக்கட்டும் . ”ஆதிக்க ஜாதி என்று ‘மொன்னையாக’ இருக்கிறது ”
    இதுதான் வீரமா ? என்று கோபம் கொண்டிர்கள் .
    அதற்கு
    பதிலாக ,ஆதிக்கசாதி ஒடுக்குமுறைக்கு எதிராக சிறு வயதிலிருந்தே களத்தில் நின்றதாக சுட்டி காட்டி, வீரம் என்பது ஒடுக்குவதா? ஓட்டுக்கு முறைக்கு எதிராக நிற்பதா? என்பை தங்களுக்கு தெளிவு படுத்தியாயிற்று.

    பிறகு,
    பார்ப்பனியம்தான் ஆணிவேரா? மத்தவங்க எல்லாம் வாயில விரலை வெச்சாலும் கடிக்கத் தெரியாத பாப்பாவா? என்று கேட்டிர்கள் ,
    .ஆம்,பார்ப்பனியம்தான் ஆணிவேர்,’ ‘மத்தவங்க எல்லாம் வாயில விரலை வெச்சா, கடிக்கத் தெரியாத பாப்பாக்கள் அல்ல” , அதனாலதான் தலையயும் ,வாலையும் நறுக்குவதட்க்கான களத்தில் நிற்கிறோம்.
    ”தெரியாமத்தான் கேக்கறேன் அப்படியே பார்ப்பான் தான் சாதியை உருவாக்கினதா இருந்தாலும் என்ன மயித்துக்கு மத்தவங்க எல்லாரும் பிடிச்சு தொங்கிட்டுக் கிடக்கறோம். ”
    அப்படி தொங்கிகிட்டு கிடக்கின்ற நபர்களை பார்த்து நீங்கள் கேட்க வேண்டிய கேள்வி ,எங்களை பார்த்து அல்ல.
    என்பதையும் தங்களுக்கு தெளிவு படுத்தியாயிற்று.

    இபோழுது , புதிதாக கோபம் கொண்டுள்ளிர்கள். ” சாதி என்ற கோட்பாட்டை மேலோட்டமாகப் புரிந்து கொண்ட அல்லது உண்மைக்கு நெருக்கமாக இருக்கும் துணிச்சல் இல்லாத போலி அரசியல் பம்மாத்தாகவே இருக்கிறது. சாதி அமைப்பினால் அதிக ”ஆதாயம்” அடைந்த பிரிவு என்ற வகையில் சாதியத்துக்கு எதிரான போரை பார்ப்பனியத்துக்கு எதிரான போராக ஆரம்பித்ததில் பெரிய தவறு இல்லை. ”
    என்று, கூறுவதன் மூலம் ஒடுக்கபடுபவர்களின் மீது தாங்கள் கொண்டுள்ள வன்மத்தையும் ,கோபத்தையும் வெளிபடுதிவிட்டிர்கள் , நன்றி .
    ஆண்டாண்டு காலமாக சமுகரிதியாகவும், அரசியல், பொருளாதார ரிதியாகவும் ஒடுக்கப்பட்டவர்களை ”சாதி அமைப்பினால் அதிக ”ஆதாயம்” அடைந்த பிரிவு ”என்று குறிப்பிடுவதற்கே குருர புத்திகளின் டிப்போ தாங்கள் மூளையில் இருக்க வேண்டும்.
    மேலும்,
    தங்களுக்கு ஒரு விசயத்தை தெளிவு படுத்திவிடுகிறேன் , பார்பனிய சித்தாநத்தை , ஆதிக்க ஜாதியாக ஜாதியாக இருந்தாலும் , ஒடுக்கபடுகின்ற ஜாதியாக இருந்தாலும், எந்த மதத்தவராக இருந்தாலும் யார் எடுத்து பயன் படுத்தினாலும் அவர்கள் ஒடுக்கபடவேண்டியவர்களே . அதற்கான பணிகள் தொடரும் .
    மேலும் , ஆளும் வர்க்கத்திற்கு ஆதரவான வகையில் [வெகு சிலரை தவிர] ‘படைப்புகளை ‘ கலைங்கர்கள் செய்து கொண்டிருக்கும் தருணத்தில் , அதற்கு மாற்றாக நுண் கலை வடிவத்தை பெரும்பான்மையான உழைக்கும் மக்களின் சமுகபிரச்சனைகளை உள்ளடக்கமாக வைத்து பயன் படுத்தி வருகிறேன் , தொடதுந்து கவனியுங்கள் ,
    நாட்டில் நிலவி வரும் மறுகாலனி ஆதிக்கத்திற்கு எதிராகவும் ,
    பார்ப்பனியத்திற்கு எதிராகவும்,
    இந்த இரண்டயும் துக்கி பிடித்து தாங்கும் ஆதிகர மையங்களுக்கு எதிராகவும் . ,
    தொடர்ந்த, தொடர்கின்ற எமது படைப்புகளை ….

  17. சாதி அமைப்பினால் அதிகம் ஆதாயம் அடைந்த பிரிவாக நான் பார்ப்பன்ர்களைத்தான் குறிப்பிட்டிருக்கிறேன். நீங்கள்தான் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை.

    • ரமேஷ் அவர்களே
      வணக்கம் ,
      ‘பார்ப்பனியம்தான் ஆணிவேரா?’
      ‘தலைப்பு மட்டும் ரொம்பத் தெளிவா பார்ப்பனியம்னு போட முடியுது’
      ‘என்ன மயித்துக்கு’
      ‘பொத்திட்டுப் போறது ரொம்ப நல்லது.’
      ‘துப்பில்லாத’
      போன்ற இலக்கிய தரம் வாய்ந்த வார்த்தைகளை பயன் படுத்தியும் ,
      மேலும்,
      ‘பெரிய அண்ணன் ‘ தோரணையில், தாங்கள் கூறிய,
      ‘சாதி அமைப்பினால் அதிக ஆதாயம் அடைந்த பிரிவு என்ற வகையில் சாதியத்துக்கு எதிரான போரை பார்ப்பனியத்துக்கு எதிரான போராக ஆரம்பித்ததில் ‘பெரிய’ தவறு இல்லை’. என்பதிலிருந்தும்,
      தவறாக புரிந்து கொள்ள நேர்ந்தது,
      அதற்கு என் வருத்தங்கள்.
      மேலும் ,
      பார்ப்பனிய கொடுங்கோன்மையின் வரலாறு தெரிந்தவர்கள் ‘சாதியத்துக்கு எதிரான போரை பார்ப்பனியத்துக்கு எதிரான போராக ஆரம்பித்ததில் ‘பெரிய’ தவறு இல்லை’ என்று மேலோட்டமாக கருத்து தெரிவிக்க மாட்டார்கள்
      ‘சாதியத்துக்கு எதிரான போரை பார்ப்பனியத்துக்கு எதிரான போராக ஆரம்பிப்பதுதன் சரி என்று பொட்டில் அடித்தட் போல் கூறுவார்கள்

  18. சாதி ஒழிய பெரியார் ஈ.வெ.ரா அவர்கள்; வழிமொழிந்த விசயத்தையும் தேடிப்பிடித்துப் பார்ப்போமா ??????????

  19. I am Krishna Iyer here.

    In 21st century these things do not happen anywhere. These are all hallucinations, magnified mental projections, a sort of obsessive imagination disorder on the part of the artist and the Group Vinavu.

    Where brahmins come into picture?

    Certainly Mylapore Ramaseshan or Bangalore Koramangala Ramachandran is not involved in these stray incidents even assumming they happened.

    So why bash brahminism? I suggest go to City Centre in Madras and find good bhajan cds in Landmark and enjoy your day.

    Useless discussions coming from nothing.

  20. கிருஷ்ண அய்யரே !

    வணக்கம்,

    பரவாயில்லை அய்யரே! ,

    ‘ சிட்டி சென்டர் போயி பஜன் சீடி வேணுன்ன நாங்க வாங்கி கேட்குறோம்’

    அதற்கு, முன்னாடி நீங்க புத்தக கண்காட்சி போயி தர்ம தீர்த்த அடிகளரோட ‘இந்து மத கொடுங்கோன்மையின் வரலாறு ‘

    வாங்கி படியுங்கள் , வரலாற்றில் பிராமணர்களின் ‘யோக்கியதியான ‘ பாத்திரம் என்ன என்பதை தெளிவு படுத்தி இருப்பார்,

    கம்னிசுடுகள், நாத்திகர்கள் வரைந்தால், எழுதினால்தான் கற்பனை,பொய் என்பிர்கள் .

    மேலும், இச் சித்திர தொகுப்பில் வெகு சில ஆதிக்க ஜாதி வன்கொடுமைகள் மட்டுமே வரையப்பட்டுள்ளது ,

    பிரார்மானிய கொடுங்கோன்மையின் வரலாற்றை சித்திர பதிவு செய துவங்கினால், சம்புகன், ஏகலைவன் துவங்கி வரவேண்டிவரும் …அதற்கான நேரமும், காலமும் வரும் பட்சத்தில், உங்களை போன்ற பல கிருஷ்ண அய்யர்கள் என் கோடுகளுக்கு பதில் சொல்ல வேண்டியது வரும்.

    • Krishna here again:

      Dear Mr. Mugil

      Nowadays reading vinavu site is a great entertainment for me and my friend vasudevan. Rendu perum paduchuttu vizhundhu vizhundhu sirikarom.

      nammavaa baashaya kaadhu kuulira ketka mudilaye indha stateslanu yengave vendaam

      saakshaat thiruvalikeni paarthasaradhigala thathrubamaa appo appo kaamikarel…….kshamikanum, namavaa, idhu elaam evlo nanaa irukku………..inga okandhundu tamizhe keka mudilanu varutha pattom…………ippo vadigaala neenga vandhutel…..narayaa brahmnaa baasha appo appo podungo please…………enna unparliamentary words vandhaa adha skip pannanum….

      theriyaama dhaan kekakaren ungalukku elaam yedhaavahdu thejas undaa? indha kaalatha yaar vedam padika vendaamnu thaduthu vachurkaa ungala?

      ennaku purunjuduthu………….vinavu electionla aayiram chadhur yugangal ponaalum ninnu deposit kuuda vaanga mudiyaadhu………………

      inga vandhu enna perusaa articles yezhudhardhu vendikadakku………..

      tamil nadula janangal elaam nanaa pooja, punaskaaramnu nanaa dhaan irukkaa…………ipdi sila konangi seshtaigal serndhundu vambu alakardugal

      India is moving towards globalization very rapidly………………ungalaavaalukku elaam vayatherichal………….reservation policy koduvandhu ozhikalaamnaa naangal elaam americala poi settle aagitomenu………..naanaa yezhudhungo………..appo appo systema paarthu bore aduchaa neraa vinavu siteku vandhudalaam…………

      indha april mayla vacation vaangindu india varalaamnu iruken…………election adhu idhunu comedy entertainment, fun niraya undu……….

      saayangalm apdiye periya perumala poi darshanam panni anga vijaya raghavan maamata aratta aduchu pozhudha kazhikalaam……….

  21. வணக்கம்,
    கிருஷ்ணா அவர்களே!
    ‘இந்த கணினி யுகத்தில் நமக்கு ‘வால்’ தேவையா?’ என்று ‘நைசாக’ தங்கள் பெயரில் ஒட்டிகொண்டிருந்த ‘அய்யர்வாலை’ தற்காலிகமாக கலட்டி வைத்து உள்ளீர்கள் போல . தேவையான ‘நேரத்தில்’ பொருத்தி கொள்ளுங்கள்.
    ‘தங்களை யார் வேதம் படிக்க தடை விதித்தது ?’ என்று கேட்டுள்ளிர்கள்,
    எதற்கு ,
    இவ்வளவு ‘பெரிய’ வார்த்தை !
    அனைத்து சாதியனரும் அர்ச்சகராக வேண்டுமென்ற பெரியாரின் கனவை நனவாக்குவதாக சில ஆண்டுகளுக்கு முன்னர் கருணாநிதி அரசு ஒரு அரசு உத்தரவை(GO) வெளியிட்டது. அதன்படி சம்பிரதாயம், மரபு என்ற பெயரில் மற்ற சாதியினர் அர்ச்சகராவதை தடுக்க முடியாது என்று அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து அனைத்து சாதி மாணவர்களுக்கும் பயிற்சி அளிக்க அர்ச்சகர் பள்ளியும் திறக்கப்பட்டது. மாணவர்களும் சேர்க்கப்பட்டு பயிற்சி தொடங்கியது. இடையில் மதுரை பட்டர்கள் எனப்படும் பார்ப்பன அர்ச்சகர்கள் இந்த அரசு உத்தரவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தடையுத்தரவு பெற்றனர், இப்பொழுது அர்ச்சகர் பயிற்சி படிப்பை படித்த இறநூற்று ஆறு மாணவர்கள் தெருவில்.

    ஆனகரிககாலத்திலேயே அமெரிக்க செவிந்தியர்கள் சமுக அறிவு உள்ளவர்களாக இருததர்கள் என்பது வரலாறு, அப்படிப்பட்ட ‘ஸ்டேட்ஸ்ல’ , இருப்பத்து ஒன்றாம் நூற்றாண்டில் உக்காந்துகிட்டு , கொஞ்சம் கூட அடிப்படை சமுக அறிவு இல்லாம இட ஒதிகீடு பற்றி உங்க வயிற்றிசெலை உளறி உள்ளீர்கள் .
    உங்ககிட்ட நேரம் செலவிட்டு இதுக்கெல்லாம் அம்பெத்கர பட்டியுங்கள் ,பெரியார படியுங்கள் கொஞ்சம் ‘உணர்ச்சி’ வரும்ன்னு சொல்றத விட ,
    ‘நன்னா’ நாலு பஜனை சீடி வாங்கி கேளுங்கோ …என்று சொல்வதுதான் சரியாக இருக்கும்.

    • Mr. Mugil

      Vedas proclaim “tat tvamasi”. Nee yedhuvaaga nenaikiraayo adhuvaagave aagi vidugirai

      Indha dwaitha prapanjam elaam perum mayai…………leave the soceity…..understand yourself by the question who am i……..we always say “I did this” , “I am happy”, “I suffer ” etc….

      try to find the person I……………………….hamsa soham soham hamsah:…………..this is avyakthat japa……………..means every jeevan tells “I ” , “I” repeatedly without even knowing…………..means this is inherent japam, a constant repitition by default…….

      find out where this I thought comes from

      you may wonder why I suddenly deviated…………..actually I expected that you will start to use unparliamentary words…………..but it was not so…………..i respect your art of drawing…………I am sure one day or other you will use it to paint God………..dont get caught up in the politicians you have quoted and try to live them…………….they were all offering devotion secretly and lead a hypocratic way of political life for personal gains……

      swamy — manasa pottu alatikaadheengo……………………….ahimsa paramo dharmah:………..I dont justify any sort of violence………….chummaa yekalaivan adhu idhunu paadhi prunjundu yengala sandela izhukaadhingo……………………..I cannot even conceive how all this violence one can imbibe on others……………..

      mathavaa apdi illenaa naama odhingi pogidanum……….bhagavan paarthupar……….dont think Ishwara or Vishnu as your enemy……….all are your mental notions……………please come out of the granthi (knot) you have put around yourself………

      This way of your life will never give you shanthi……………if you want to help others do your best……….leave the rest to God…………

      Generally I wont tell this to all……………but seeing your art work I can only remember of Integral Yoga and Life Divine of Sri Aurobindo where art is described an expression of the beauty, love, the Mahalakshmi swarupam………………

      All the above I write without any inward motive…………….From my deep earnestness I write…………I write this for you to re-think, just give a thought and follow for yourself…….

      Kannadasan maarinar………………….neengalum maarungo………….ungaloda drawings innum niraya Divine aspects represent pannanum………………….

  22. All the differences like caste, religion etc are created by selfish people, followed and misused by the selfish people to attain money and power. Really genuine ones do not bother about all these things because for them one human family and one devine power. They keep on living the art of life and show the technique of life to those who are not able to live a dignified life. All these ‘thargavada’ should enlighten all those who read this and live as one human family helping oneanother to live better enjoying the creations of God equally and maintaining them with concern. God bless you all.

  23. வணக்கம்,
    கிருஷ்ணா அவர்களே!
    உங்களுக்கு பதில் சொல்வதை நிறுத்திவிடலாம் என்றுதான் இருந்தேன், தற்பொழுது நீங்கள் வைத்திருக்கும் கேள்விகளுக்கும் ‘வழிகாட்டுதலுக்கும்’ பதில் கூற வேண்டிய கட்டாயம் உள்ளது.
    பொதுவாக ஆன்மிகவாதிகளும், ஆன்மிக வாதத்தை தழுவி நிற்பவர்களும் ‘உங்களை தேடுங்கள், உங்களுக்குள் இருக்கும் அமைத்தியை தேடுங்கள்’ என்று சமுகத்தில் நிலவும் பிரச்சனைகளிலிருந்து தன்னை துண்டித்து கொள்ளும் வழி முறைகளைத்தான் கூறுகிறார்கள். இது கோழைத்தனமும், காரியவதமும் அடங்கிய வழி காட்டுதல்களே ! அதைத்தான் நீங்களும் கூறியுள்ளிர்கள்.

    மேலும்,
    ‘சும்மா ஏகலைவன் அது இதுதுன்னு அரை குறைய புருன்ச்சுண்டு சண்டைக்கு இழுக்கதிங்கோ’ என்று கூறியுள்ளிர்கள்,
    ராமனையும், கிருஷ்ணனையும் நீங்கள் எவளவு தெரிந்து உள்ளிர்களோ , அதை விட ஒருபடி மேல் ராமனையும், கிருஷ்ணனையும் , சம்புகனையும் , ஏகலைவனையும், நந்தனையும் தெரிந்து கொள்ள வேண்டிய கட்டாயம் எங்களுக்கு உள்ளது. அதுமட்டும் அல்ல இராமாயணம், மகாபாரதம், மனுதர்மம் போன்றவற்றை எரித்த காரணங்களை எல்லாம் உள்வாங்கி கொண்ட பிறகுதான் அம்பேத்கர் , பெரியார் போன்ற பார்ப்பனியத்தை எதிர்த்த தலைவர்கள் மீது அளவு கடந்த மரியாதையும்,காதலும் வந்துள்ளது.

    பிறகு,
    தங்கள் சமுக அறிவின் அடிப்படைக்கு, செவிந்தியர்களை உதாரணம் கட்டியமைக்கும [ வரலாற்றில் அவர்கள் அப்படி இருந்தார்கள் என்பது வேறு ] வருத்தப்பட்டேன், ஏனெனில் இப்பொழுது அமெரிக்காவை பற்றி இருக்கும் எமது கருத்து மாறுபாடணுது.

    எமது
    ஒவிங்ககளை மதித்து உள்ளதாக கூறியுள்ளிர்கள், நன்றி!
    அதேசமயம், ‘கண்ணதாசனை போல மாறினால் இன்னும் உங்களது ஓவியம் தெய்வீகத்தின் பல கோணங்களை உணர்ந்து பொறுப்புடன் பேசும்!,’ என்று கூறியுள்ளிர்கள்.
    நான் பெரும்பான்மையான உழைக்கும் மக்களின் வலிகளையும். போராட்டத்தையும் அவர்களின் விடுதலை பற்றியும் பேச வேண்டும் என்பதில் உறுதியோடு இருப்பவன். வரையப்படும் ஓவிங்கள் பார்க்கும் யாரையோனும் குற்ற உணர்வு அடைய செயிது, போராடுவதற்கு தூண்டு கோலாக அமைந்தால் அதுதான் என் ஓவியங்களுக்கான அங்கீகாரம் என்று கருத்துபவன்.

    மேலும்,
    கண்ணதாசன் போன்ற மது, மற்றும் மாது மயங்கிகளைஎல்லாம் ‘ரோல் மாடலாக’ எனக்கு அறிமுகம் செய்ய வேண்டம் ,
    டேவிட், கோயா … [ தற்காலத்தில் இர்பான் குசைன் [ இந்து மத வெறியர்களால் கடத்தி படு கொலை செயய பட்டவர் [1999 ] , உதயன் போன்ற மக்களை நேசித்த, சமுக பிரச்னை பற்றிய பேசிய ஓவியர்களும்,
    டாவின்சி , மைகேல் என்ஜெலோ , வின்சென்ட் வான்க…போன்ற கலை வாழ்க்கைக்கு நேர்மையாக இருந்த படைப்பளிகலுமே எனது ரோல் மாடல்கள்.
    நன்றி!

    • Dear Mr. Mugil

      Let me tell you my routine. I will use to visit anti brahminic forum just for fun and so my friend. Most of the time we will get some verbal unparliamentary abuse and we will stop with that. But you are not so.

      I dont even know few of the western names you have mentioned as artists. You are no doubt having bright intellect and have some sort of ‘truth’ in your feelings. My friend Vasudevan asked me not to reveal the sacred texts, advaitic quotes to someone who hates Lord Rama and Lord Krishna. This was my reply to him , “Vasu I know that, I will write to him some more, let him come out with his arguments, feelings etc,etc…. Somehow I feel a love flowing towards Mugil an unalloyed love and a sense of well being to him and his family. If I fail in my objective thats ok atleast let me interact with him.
      dont stop me”

      He was little bit upset and told that it is waste of your time.

      Ok so coming to your points, I never told that you need to be an escapist, forget society and understand yourself. You do whaterver service you want to do, uplift so many poors, arrange so many agitations, paint so many drawings,priase so many periyars you want and bash how many puranic texts you want.

      But atleast inside yourself dont get deluded, dont get carried way with wrong notion on Atmaa.

      When we die, we dont die really, for what is expressing through brain now will continue to exist in a state and try to express through some other mode. Unless you as a perceiver of whatever sufferings you see, that “you” is studied for some time, looked upon intently, there is no shanthi. I dont know if art is your profession, politics is your full time activity and your age or other details. But whatever be the case, even if you hate all vedas and upanishads, take buddhism and follow what they have to say. Or follow any other faith but dont say no to all, stand alone with the subtle ego beating all the time around the heart.

      Buddha also told God does not exist. Read what they have to say, just have a open agnostic attitude and approach his views. Try to practise them along with whatever you do. Hi — this cannot be carried on to go like this eternally. You may say that all the time I will think of the supressed and die for them like Muthukumar.

      Well, in one way is good to destory that ‘ego’ and offer oneself fully to other’s cause, but I dont know how to express it, but give it a try.

      Even if it means bread and butter for you to be an atheist outwardly, question yourself what is this “I” coming every time? You need not even acknowledge or agree all my points in a public forum. Think within yourself and try to assimilate.

      From my heart I am saying, I dont write all this to convert you or change you or to expect any sort of phenomenon from your end which may mentally thrill me.

      All this I write for its own sake.

      Why all people identify themselves with brahmin, non brahmin, orthodox, rich, poor, healthy, weak etc.

      How it looks like when you try to remain as “I am”? Without any identification to any ideas whatsover.

      I will tell you one thing:

      This type of 24 X 7 brahmin bashing and rama bashing, 24 X 7 finding all types of faults will create a sort of negative atmosphere within you.

      Until world will be there differenes in standard of living will be there.

      So in the name of social service and social awareness please dont entagle yourself.

      The vibrations produced on a sincere prayer to God cannot be got in organising a dappanguthu meeting just to bash a religion.

      I have to continue so I am not ending this in a formal language.

      Regards,
      Krishna

  24. வணக்கம்,
    கிருஷ்ணா அவர்களே!
    உங்கள் பதில்களில் நக்கலும் கிண்டலும் வழிந்தோடும்,
    இப்பொழுது,
    கொஞ்சம் ‘சீரியசாக’ பேச ஆரம்பித்து உள்ளீர்கள்.
    வரவேற்கிறேன்.

    நீங்கள் பிராமணர்கள் அல்லாதவர்கள் கூடும் அரங்கிட்க்கு சென்றிருக்கலாம்……, அனால் எமது நோக்கம் வெறுமனே பிராமணர்களை திட்டுவது அல்ல , மனிதனை ‘மனிதன் ‘ பிறப்பின் அடிப்படையில் ஜாதி பிரித்து ஒடுக்கும் பிராமணிய சித்தாந்த்தை சமுகத்திலிருந்து அப்புறபடுதுவதுதன்.
    அச் சித்தாந்த்தை பிராமணர்கள் மட்டும் அல்ல, யார் கையில் எடுத்தாலும் ஒடுக்குவதுதான். அதை தாங்கி பிடிக்கும் கடவுளர்களையும் சந்திக்கு இழுத்து அம்பலபடுத்துவதுதான், எமது கடமை.

    மேலும்,
    இந்த ‘பிரபஞ்சத்தை பகவான் படைத்தார்…என்று உங்கள் வாதத்தை துவங்கி …ஆகையால் ஆத்மாவை நம்புங்கள்’ என்றுமுடிப்பிர்கள்.
    ஆனால் எமது வாதத்தை டார்வின்லிருந்து துவங்கி,
    அறிவியல் பூர்வமாக ஆத்மா என்று ஒன்று இல்லை,
    அதனால் அதை குப்பை தொட்டிக்கு அனுப்புவதே முறை என்போம். நீங்கள் முறையிட்டிரும் ஆத்மாவை பற்றி எமது கருத்து இதுதான்.
    உங்களுக்கு புனிதமாக இருப்பது அறிவியலுக்கு முடத்தனம்தான்.

    ‘பிராமணர்கள் அறிவாளிகள், அனால் ஆய்வறிவலர்கள் கிடையாது …’ என்பார் டாக்டர் அம்பேத்கர், அதை தங்கள் அப்பிடியே நிருப்பித்து உள்ளீர்கள்.
    மேலும்,
    ‘நீங்கள்’ புத்திசம் நோக்கி பயணிக்கலாம் என்று என்னை ‘ஆற்று படுத்தி ‘ உள்ளீர்கள்.
    இந்த மண்ணிலிருந்து புத்தமதத்தை சீனா, இலங்கை, பர்மா, திபெத்… என்று விரட்டி அடித்ததே பிராமணியம்தான்.

    ‘மகாயானம்’ என்ற பெயரில் புத்தமதத்தை சீர்குலைத்தது பிராமணியம்தான்.

    புத்த பிட்சுக்களை படுகொலைகள் செயிது வீதியில் வீசியது பிராமணியம்தான்.

    வரலாற்றை சரியான சமுக அறிவியல் கண்நோடோத்தொடு முடியுமானால் ‘ஆய்வு’ செயுங்கள், உங்கள் கைகளில் ரத்தக்கறை படிந்திருப்பதை உணர்வீர்கள்.
    எதோ பொழு போகாமல் பிராமணியதுடன் நான் பகை வளர்த்து
    திரிவதாக கூறி உள்ளீர்கள்.

    புத்த மதத்தின் தோற்றம், பிராமணியதுடன் மோதி புத்திசம் உடுருவி வளர்ந்த வரலாறு தெரியாமல் அல்ல, அந்த வரலாற்று காலங்களை எல்லாம் தாண்டி பல பாய்ச்சலின் மூலம் விஞ்ஞாந பூர்வமாக வளர்ந்த மார்க்சிய தத்துவத்தின் வழியே பயணிப்பதையே சரி என உறுதியோடு நம்புகிறேன். ‘இந்த உலகம் இருக்கும் வரை ஏழை,பணக்காரன், வறுமை,செல்வம் ..எல்லாம் இருக்கும்” என்று நீங்கள் நம்புகிறிர்கள். இந்த ஏற்ற தாழ்வை உடைப்பதற்கான தத்துவம் மார்க்சியம தான்
    என்று நான் நம்புகிறேன். மற்றபடி நாத்திகம் பேசி பிழைப்பு நடதுவதட்க்கு நான் வீரமணி கிடையாது, வெறுமனே வறட்டு நாத்திகம் பேசுவது எமது திட்டமும் அல்ல.
    சமுக மாற்றத்திற்கான களப்போரில், எனது கோடுகளும் பயணிக்கிறது என்பதில் மகிழ்ச்சியும், மனநிறைவும் கொண்டுள்ளேன்,என்பதை தங்களுக்கு தெரிவித்து கொள்கிறேன். மேலும்,
    நீங்கள் நினைத்து கொண்டிருப்பது போல் என் மனம் அலை பாய்ந்தபடி இல்லை என்பதையும் தங்களுக்கு தெரிவித்து கொள்கிறேன்.

    நேரம் ஒதுக்கி உங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்க்கு நன்றி!.

  25. தன் தகுதியை மிரி ஏன் ஆசை படுகிரிர்கல், உன்னுடைய தகுதி என்னவோ அதர்க்கு மட்டும் ஆசை படுங்கல் தேவையட்ர ஆசைகலை தவிர்து பாருங்கல் ,பின்னர் நாங்கல்
    ஏன் உங்கலை தன்டிக்க வேன்டும்

  26. சமூக கொடூரத்தை, மக்களுக்கு நடந்த கொடுமைகளை உணர்ச்சிப்பூர்வமான ஓவியமாக தீட்டியிருப்பது அருமை. பார்ப்பவர்களின் உணர்வை தட்டியெழுப்புகிறது. தோழர் முகிலனுக்கு என் வாழ்த்துக்கள்.

Leave a Reply to Mugil பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க