privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புநீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்ஸ்டெயின்ஸ் பாதிரியார் கொலை வழக்குத் தீர்ப்பு : நீதிமன்றமா? காவிமன்றமா?

ஸ்டெயின்ஸ் பாதிரியார் கொலை வழக்குத் தீர்ப்பு : நீதிமன்றமா? காவிமன்றமா?

-

தனது இரு மகன்களுடன் படுகொலை செய்யப்பட்ட ஸ்டெயின்ஸ் பாதிரியார் - அவரை படுகொலை செய்த இந்து மதவெறியன் தாராசிங்
தனது இரு மகன்களுடன் படுகொலை செய்யப்பட்ட ஸ்டெயின்ஸ் பாதிரியார் – அவரை படுகொலை செய்த இந்து பயங்கரவாதி தாராசிங்

ஒரிசா மாநிலத்தில் கடந்த 1999-ஆம் ஆண்டு பஜ்ரங் தள்ளைச் சேர்ந்த தாரா சிங் என்ற இந்து பயங்கரவாதியின் தலைமையில் வந்த கும்பலொன்று, அம்மாநிலத்தில் மதப் பிரச்சாரம் செய்து வந்த ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிறித்துவப் பாதிரியார் கிரஹாம் ஸ்டெயின்ஸையும், சிறுவர்களான பிலிப், திமோதி என்ற அவரது இரு மகன்களையும் – அவர்கள் மூவரும் ஒரு ஜீப்பில் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் உயிரோடு எரித்துக் கொன்றனர்.  இப்பயங்கரவாதப் படுகொலையைச் செய்த தாரா சிங் உள்ளிட்ட 13 பேரையும் குற்றவாளிகள் என அறிவித்த குர்தா குற்றவியல் நீதிமன்றம், தாராசிங்கிற்குத் தூக்கு தண்டனையும், மற்ற 12 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையும் விதித்துத் தீர்ப்பளித்தது.

இவ்வழக்கின் மேல்முறையீட்டில், ஒரிசா உயர் நீதிமன்றம் தாரா சிங்கிற்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தது; ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட மற்ற 12 குற்றவாளிகளுள் மகேந்திரா ஹெம்ப்ராம் என்பவனின் தண்டனையை மட்டும் உறுதி செய்து, மீதி 11 குற்றவாளிகளையும் நிரபராதிகள் என விடுதலை செய்து தீர்ப்பளித்தது.

ஒரிசா உயர் நீதிமன்றத்தின் இத்தீர்ப்பை எதிர்த்து சி.பி.ஐ. தொடுத்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஒரிசா உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை இம்மி பிசகாமல் உறுதி செய்து தீர்ப்பளித்திருக்கிறது.  “அரிதினும் அரிதான வழக்குகளில் மட்டுமே மரண தண்டனை விதிக்க வேண்டும்; அதுவும் அந்தந்த சம்பவத்தின் உண்மை நிலை, சூழ்நிலையை பொறுத்தே அமைய வேண்டும்; இவ்வழக்கில் பாதிரியார் ஸ்டெயின்ஸும் அவரது இரு குழந்தைகளும் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் எரித்துக் கொல்லப்பட்டிருந்தாலும், (குற்றவாளிகளின்) நோக்கம் மதப் பிரச்சாரம் என்ற பெயரில் ஏழை பழங்குடியின மக்களைக் கிறித்தவ மதத்திற்கு மாற்றிக் கொண்டிருந்த பாதிரியார் ஸ்டெயின்ஸுக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும் என்பதுதான்” எனக் குறிப்பிட்டு, தாரா சிங்கின் தண்டனை குறைக்கப்பட்டதை நியாயப்படுத்தியிருக்கிறது.  இவ்வழக்கில் சதித் திட்டம் தீட்டப்பட்டதற்கான ஆதாரமும் இல்லை என்றும் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

1999-ஆம் ஆண்டு ஸ்டெயின்ஸ் பாதிரியார் தனது குழந்தைகளோடு எரித்துக் கொல்லப்பட்டபொழுது நாட்டில் நிலவிய சூழ்நிலை என்ன?  அப்பொழுது வாஜ்பாயின் தலைமையில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது.  தாழ்த்தப்பட்டவர்களும் பழங்குடி மக்களும் இந்து மதத்தில் இருந்து தப்பித்து ஓடுவதைத் தடுக்கும் முகமாக, “மதமாற்றம் பற்றித் தேசிய விவாதம் நடத்த வேண்டும்” என ஆர்.எஸ்.எஸ். கும்பல் கூச்சல் போட்டுக் கொண்டிருந்ததோடு, மைய அரசு அதிகாரத்தைப் பயன்படுத்திக் கொண்டு மதமாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டுவரவும் முயன்று கொண்டிருந்தது.

இதற்கு இணையாக இன்னொருபுறம் குஜராத்திலுள்ள டாங்ஸ் மாவட்டத்தில் கிறித்தவர்கள் மீதும் தேவாலயங்கள் மீதும் தாக்குதலை நடத்தி வந்தது, ஆர்.எஸ்.எஸ்.  இத்தாக்குதலுக்கு அம்மாநில பா.ஜ.க. அரசு துணை நின்றது.  இதே காலகட்டத்தில் ஒரிசாவில் பா.ஜ.க. – பிஜு ஜனதாதள் கூட்டணி ஆட்சிதான் நடைபெற்று வந்தது.  நாடெங்கிலும் கிறித்தவர்களைக் குறிவைத்துத் தாக்குவது என்ற ஆர்.எஸ்.எஸ். திட்டத்தின் ஒரு பகுதியாகத்தான் ஸ்டெயின்ஸ் பாதிரியாரை உயிரோடு கொளுத்தும் சதித் திட்டம் நிறைவேற்றப்பட்டது.

உச்ச நீதிமன்றம் கூறியிருப்பது போல ஸ்டெயின்ஸ் பாதிரியாருக்கு ஒரு பாடம் புகட்டுவது மட்டும்தான் தாரா சிங்கின் நோக்கம் என்றால், அவர் தனது இரு குழந்தைகளோடு தூங்கிக் கொண்டிருக்கும் நேரம் பார்த்து ஜீப்பைக் கொளுத்தியிருக்க வேண்டிய அவசியமே கிடையாது.  அவரை எழுப்பி மிரட்டிவிட்டு, ரெண்டு தட்டுதட்டிவிட்டுப் போயிருக்கலாம்.  ஆனால், தாரா சிங் தலைமையில் வந்த கும்பலோ, மனோகர்பூர் கிராமத்திற்குள் நுழைந்தவுடன், அக்கிராமத்தின் தகவல் தொடர்புகளைத் துண்டித்தனர்.  தீ வைக்கப்பட்ட ஜீப்பில் இருந்து அம்மூவரும் தப்பித்துவிடாதபடி ஜீப்பைச் சுற்றி நின்றுகொண்ட அக்குண்டர்கள், அம்மூவரும் கருகி இறந்தபின்தான் அக்கிராமத்தை விட்டுத் தப்பிச் சென்றனர்.

ஸ்டெயின்ஸ் பாதிரியாரை உயிரோடு கொளுத்திக் கொல்லுவதன் மூலம், ஆர்.எஸ்.எஸ். கும்பல் மதம் மாற்றும் பாதிரியார்கள், மதம் மாறிய பழங்குடியினரை மட்டுமின்றி, நாடெங்கிலும் உள்ள சிறுபான்மை கிறித்தவ சமூகத்தினர் மத்தியில் பாதுகாப்பற்ற அச்ச உணர்வை உருவாக்க முயன்றது என்பதுதான் உண்மை.  இந்தியத் தண்டனைச் சட்டங்களின்படி பயங்கரவாதக் குற்றமாகக் குறிப்பிட்டிருக்க வேண்டிய இக்கொலையை, நீதிபதிகள் சாதாரண கொலை வழக்காக நீர்த்துப் போகச் செய்துவிட்டனர்.

ஒரு உயிரற்ற கட்டிடத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் வழக்கில், அப்பாவியான அப்சல் குருவுக்குத் தூக்கு தண்டனை அளிக்கத் தயங்காத உச்ச நீதிமன்றம், இவ்வழக்கில் இரண்டு குழந்தைகள் உள்ளிட்டு மூவரை உயிரோடு கொளுத்திக் கொன்ற குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை வழங்காமல் கருணை காட்டியிருக்கிறது.  எப்பேர்பட்ட நடுநிலை! எப்பேர்பட்ட மதச்சார்பின்மை!

இப்படுகொலை பற்றி விசாரிக்க நியமிக்கப்பட்ட வாத்வா கமிசன், “1991-க்கும் 1998-க்கும் இடைபட்ட காலத்தில் ஒரிசாவின் கியோஞ்சர் மாவட்டத்தில் – படுகொலை நடந்த பழங்குடியின மக்கள் வசித்து வரும் மாவட்டம் – குறிப்பிடத்தக்க அளவில் கிறித்தவ மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. இக்காலகட்டத்தில் கிறித்தவ மக்கள் தொகை அதற்கு முந்தைய காலத்தைவிட 575 எண்ணம்தான் அதிகரித்திருக்கிறது.  இது இயற்கையான உயர்வுதான்” எனக் குறிப்பிட்டுள்ளது.  ஆனால், உச்ச நீதிமன்ற நீதிபதிகளோ இந்த உண்மையை ஒதுக்கித் தள்ளிவிட்டு, மதம் மாற்றுவதைத்தான் அபாயகரமானதைப் போலத் தீர்ப்பு எழுதியுள்ளனர்.

‘‘பலவந்தமாகவோ, ஆசை காட்டியோ, மதம் மாற்றியோ, மற்ற மதங்களைவிடத் தன் மதம் உயர்ந்தது என்ற கருத்தின் அடிப்படையிலோ மற்றவர்களது நம்பிக்கைகளில் தலையிடுவதை நியாயப்படுத்த முடியாது” என்ற நீதிபதிகளின் சூக்குமமான  வார்த்தைகளுக்கு, “கிறித்தவர்கள் மருந்து கொடுத்து, கல்வி கொடுத்துப் பழங்குடியின மக்களை மதம் மாற்றுவது சட்டப்படி குற்றம்” என்ற ஆர்.எஸ்.எஸ்.-இன் கொள்கையைத்தான் பொழிப்புரையாக எழுத முடியும்.

இக்காவித் தீர்ப்பைக் கண்டித்துப் பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்தவுடன், “பாதிரியார் ஸ்டெயின்ஸும் அவரது இரு குழந்தைகளும் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் எரித்துக் கொல்லப்பட்டிருந்தாலும், (குற்றவாளிகளின்) நோக்கம் மதப் பிரச்சாரம் என்ற பெயரில் ஏழை பழங்குடியின மக்களை கிறித்தவ மதத்திற்கு மாற்றிக் கொண்டிருந்த பாதிரியார் ஸ்டெயின்ஸுக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும் என்பதுதான்” என்ற வரிகள் வரும் பத்தியைத் தீர்ப்பில் இருந்து நீதிபதிகள் நீக்கிவிட்டனர்.

இதை நீக்கியவுடன்,  ” தாரா சிங்கிற்கு மரண தண்டனை அளிக்கப்படாதது ஏன்?” என்ற கேள்வி வந்துவிடும் என்பதை உணர்ந்திருந்த நீதிபதிகள், “குற்றம் நடந்து 12 ஆண்டுகள் கடந்துவிட்டதால், ஒரிசா உயர் நீதிமன்றம் அளித்த ஆயுள் தண்டனையை அதிகரிக்கத் தேவையில்லை” எனத் தீர்ப்பைத் திருத்தியும் விட்டனர்.

தாரா சிங்கிற்கு அதிகபட்ச தண்டனை அளிக்கக்கூடாது என்பதை மனதில் வைத்துக்கொண்டுதான் நீதிபதிகள் செயல்பட்டுள்ளனர் என்பதற்கு இதைவிட வேறென்ன ஆதாரம் வேண்டும்?

600-க்கும் மேற்பட்ட முசுலீம்கள் படுகொலை செய்யப்பட்ட மும்பக் கலவரம் நடந்து 17 ஆண்டுகள் கடந்துவிட்டன.  2,000 முசுலீம்கள் படுகொலை செய்யப்பட்ட குஜராத் கலவரம் நடந்து 8 ஆண்டுகள் மறைந்துவிட்டன.  உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி பார்த்தால், இக்குற்றச் செயல்களைப் புரிந்த இந்து மதவெறி பயங்கரவாதிகளுள் ஒருவருக்குக்கூட அதிகபட்ச தண்டனை அளிக்கவே முடியாது.

“பலவந்தமாகவோ, ஆசை காட்டியோ, மதம் மாற்றியோ, மற்ற மதங்களைவிடத் தன் மதம் உயர்ந்தது என்ற கருத்தின் அடிப்படையிலோ மற்றவர்களது நம்பிக்கைகளில் தலையிடுவதை நியாயப்படுத்த முடியாது” என்பதற்குப் பதிலாக, “மற்றவர்களின் மத நம்பிக்கையில் எந்த வழியில் தலையீடு செய்வதையும் நியாயப்படுத்த முடியாது” எனத் தீர்ப்பு தற்பொழுது மாற்றப்பட்டுள்ளது.  முழுக்க நனைந்த பின்னும் முக்காடு போட்டுத் திரிவது   என்பது இதுதானோ!
__________________________________________________

புதிய ஜனநாயகம், பிப்ரவரி 2011
__________________________________________________

  1. ஸ்டெயின்ஸ் பாதிரியார் கொலை வழக்குத் தீர்ப்பு : நீதிமன்றமா ? காவிமன்றமா ? | வினவு!…

    பாதிரியாரை கொளுத்திக் கொன்றதன் மூலம், ஆர்.எஸ்.எஸ். கும்பல் சிறுபான்மை கிறித்தவ சமூகத்தினரிடன் பாதுகாப்பற்ற அச்ச உணர்வை உருவாக்க முயன்றது என்பதுதான் உண்மை….

  2. ஒரு உயிரற்ற கட்டிடத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் வழக்கில், அப்பாவியான அப்சல் குருவுக்குத் தூக்கு தண்டனை அளிக்கத் தயங்காத உச்ச நீதிமன்றம் —Eanda dai…AFSAL GURU attacked indian PARLIMENT, is he a innocent. Such a stupid debate….First you must be punished fior writing these kind of essays…Because u will support KASAB also, take ABSAL GURAU and KASAB to ur home…ur home also just a building, let him attack. U forgot how many people died in mumbai attack..

    Who started violence in GUJARATH. MUSLIMS torched 50 SADHUS in train, then they got back the same thing. This happenned first time in GUJARATH all over the india.

    I will tell u one thing. The word ‘MURPOKKU’ does not mean that, you should always blame only HINDUS and should always support MUSLIMs. From PERIYAAR to MANJAL THUNNDU all ONIONS are doing the same

    • மாசற்ற அந்த இரண்டு இளம் பிஞ்சுகளை உயிருடன் தீயில் பொசுக்கிய மனிதரூபத்தில் இருக்கின்ற இந்த கீழ்தர ஜந்துவிற்க்கு ஆதரவாக மரண தண்டணையை ஆயூள் தண்டணையாக குறைத்து தீர்ப்பு எழுதும் அளவிற்க்கு மதவெறி போதையில் மூழ்கிபோய்விட்டது நீதிதுறை? இழிஜென்மங்களின் அடிகழுகி குடிக்கும் உன் மதப்பற்றை காண்பிக்கும் முன்பு ஒரே ஒரு நிமிடம் உன் வீட்டில் தூங்கின்ற குழந்தைகளின் முகத்தையும் பார்த்துவிட்டு வா? பன்றியையும், பாம்பையும் தெய்வமாக்கி மனிதனை கொல்லும் கோட்பாட்டில் ஊறித் திளைத்தவன்தானே நீ உன்னிடம் உன் உச்ச குடுமியிடமும் இதைவிட வேறு நாகரீகமான எதையும் எதிர் பார்க்க முடியாது, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பானர்ஜி தலைமையில் மத்திய அரசு அமைத்த விசாரணை கமிஷன் ‘கோத்ரா சம்பவம் தற்செயலாக நடத்த விபத்து என்று சொல்கிறதே’ மதவெறிபிடித்த மிருகங்களே கொஞ்சம் மனிதனாக மாற முயற்சி செய்யுங்கள்.

    • மனிதவேட்டை நடத்திய மதவெறி கும்பலுக்கு இரக்கம் காட்டும் நீதிதுறையின் பாரபட்சமான ஒரு தீர்ப்பை பற்றிய ஒரு கட்டுரையில் நியாயம் உள்ளதா இல்லையா என்று பார்ப்பதை விட்டுவிட்டு நீ ஏன் அவனை பற்றி எழுதவில்லை இவனை பற்றி எழுதவில்லை என்று கேட்பது, பாக்கிஸ்தனில் போய் இப்படி எல்லாம் பேச முடியுமா என்று பின்னுட்டம் இடுவது எல்லாம் கேணத்தனமாக தெரியவில்லையா?

      • அதையே தானய்யா நாங்களும் சொல்கிறோம். மதவாதத்தால் அப்பாவிகள் உயிரிழந்தால் மைனாரிட்டி இனம், மெஜாரிட்டி இனம் னு பார்க்காம்ம குரல் கொடு. அப்பத்தான் எல்லா மதவாதத்தையும் ஒழிக்க முடியும்னு. அறிவாளிகளால் அதை புரிஞ்சுக்க முடியல.

        • அதேதானய்யா நாங்களும் சொல்கிறோம் மதவெறியுனுடன் நடத்தப்படும் படுகொலைகளுக்கு மைனாரிட்டி, மெஜாரிட்டி பார்க்காமல் தூக்கில் போடு என்று. நீதிமான்களுக்கு இதை புரிஞ்சிக்க முடியலியே!

    • Super nnaaa..One thing I can understand u hate Hinduism and Hindus…then no probs migrate to ISLAM and go to PAKISTAN…but here u are specking a lot, but there will be killed within one month and you can’t even speck, if u are alive more than a month you will be doing any slave job only there. But don’t bark nasty here..I have lot of good MUSLIM friends and I LIKE them, one of my close friend is MUSLIM, I trust them, but I don’t trust u people (fake MURPOAKKUVATHIKAL).

      You people are acting like u are supporting the minorities…ha ha ha..what a fun..For your information, even they don’t like u people. First of all in this site, you people are writing essays with the indention of hurting HINDUS. You are teasing/hurting hindus, and all others, stop this non-sense do some thing for UNITY and INTEGRITY

  3. intha thirppai parkum pothu pasisam yentha alau valarndullath yana tharigeradu.
    intha pasisa payangara vathathai olikka oru migapperiya poeattam anaivaralum nadathappada veandum.

  4. கிறிஸ்தவ தளமொன்றில் வாசித்ததை, இங்கே பகிர்ந்து கொள்கிறேன். ஏன் எனில் இம்மாதிரியான விஷயங்கள் நடந்தால், அவை வினவின் காதுகளுக்கு, கண்களுக்கு, அறிவுக்கு எட்டாது என்பதால். ஜம்மு காஷ்மீரில் கிறிஸ்தவத்துக்கு மாறிய ஒரு முஸ்லீம் வெட்டி கொல்லப்பட்டான். மதவாதத்தை சுய விருப்பு வெறுப்பின்றி பார்க்க தெரியாத வினவு, கட்டுரை எழுதுவது வீண்.

    • மனிதவேட்டை நடத்திய மதவெறி கும்பலுக்கு இரக்கம் காட்டும் நீதிதுறையின் பாரபட்சமான ஒரு தீர்ப்பை பற்றிய ஒரு கட்டுரையில் நியாயம் உள்ளதா இல்லையா என்று பார்ப்பதை விட்டுவிட்டு நீ ஏன் அவனை பற்றி எழுதவில்லை இவனை பற்றி எழுதவில்லை என்று கேட்பது, பாக்கிஸ்தனில் போய் இப்படி எல்லாம் பேச முடியுமா என்று பின்னுட்டம் இடுவது எல்லாம் கேணத்தனமாக தெரியவில்லையா…?

  5. என்ன நடக்கின்றதென்றே புரியவில்லை இந்தியாவில். கொலைபாதகச்செயலை நிகழ்த்திய கொடியவர்கள் குற்றமற்றவர்கள் என்று கூறுவது இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் எப்படி சாத்திய மாகிறது? சிறுபான்மை சமூகத்திற்கெதிராக நடத்தப்படும் தாக்குதல்களில் பங்கெடுத்துக்கொண்டவர்கள் தண்டிக்கப்பட்டதாக இந்திய வரலாற்றில் காண முடியவில்லை. ஊழல் வாதிகளான அரசியல் தலைவர்களும் அவ்வாறே! குற்றம் சுமத்தாப்பட்டு நிலுவையில் வழக்கு இருக்கும்போதே தேர்தலில் போட்டியிட்டு ஆட்சிக்கு வந்துவிடுகிறான் அந்த அ(ட)ப்பாவி!
    குண்டு வைத்தவனும் அதற்கு உடந்தையாய் இருந்தவனும் RSS காரன் என்றால் அது குற்றமே இல்லை. காரணம் பெரும்பான்மை சமூகத்தை காப்பாற்றவும் சிறுபான்மை சமூகத்தை அச்சுறுத்தவும் தானே அக்குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது என்று வரும் காலங்களில் தீர்ப்பு மன்றங்கள் கூறி அவர்களை கைது செய்ததே தப்பு என்று கூறினாலும் மக்களே ஆச்சரியப்பட வேண்டாம்! காரணம் இது பெரும்பான்மையின் ஜனநாயகம்!

    • ஆமாமாம். உங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரவில்லையென்றால் இப்படித்தான் சொல்வீர்கள்.

      //சிறுபான்மை சமூகத்திற்கெதிராக நடத்தப்படும் தாக்குதல்களில் பங்கெடுத்துக்கொண்டவர்கள் தண்டிக்கப்பட்டதாக இந்திய வரலாற்றில் காண முடியவில்லை.//

      இன்னும் கூட அப்சல் குருவும், கசாப்பும், டைட்லரும் உயிரோடு தான் இருக்கிறார்கள்.

  6. மதசார்பற்ற தன்மை இந்தியாவில் இருக்கின்றதா செத்துவிட்டதா?
    நீதிமன்றங்களின் பெயர் மாற்றம் கொண்டுவாருங்கள் அவைகளை இனி காவிமன்றங்கள் என்றே அழையுங்கள். என்று தொகாடியாக்களும் தாக்கரேக்களும் வழக்குப்பதிவு செய்து அவைகள் தீர்ப்பு மன்றங்களுக்கு வருமானால் மக்களே உஷார் விரைவில் பெயர் மாற்றம் வரும் என்பதில் சந்தேகமில்லை.
    நிலுவையில் உள்ள வழக்குகள், கமிஷன்கள் இனி தீர்ப்பளிக்கப்படாது. ஏன் அவைகள் இனி ஒரு பொருட்டாகவே கருதப்படாது என்றாலும் ஆச்சரியப்படுவதர்க்கில்லை.
    மக்களே விழித்தெழுங்கள் தமிழக நீதிமன்றங்கள் செத்துவிடவில்லை. அவை ஒன்றையேனும் தக்கவைத்துக்கொள்வோம்.
    இல்லை பாதிக்கப்படுவது நம் போன்ற சிறுபான்மை சமூகமே. அதுவும் நம் சந்ததிகளே!

  7. சில தினங்களுக்கு முன், வினவில் வந்த பதிவொன்றுக்கு, ஒரு பின்னூட்டம் வந்திருந்தது. “தாலிபன்களின்” அக்ரமங்களை அம்பலபடுத்திய பின்னூடடம் அது. வெளியிடப்பட்ட பின்னூட்டத்தை சற்று நேரத்தில் நீக்கி விட்டது. ஏன். தீவிர வாதம், மதவாதம் இவற்றை கண்டிப்பதில் இரட்டை நிலை, அணுகுமுறை எடுக்கும் வினவு, தன்னை சுத்திகரித்து கொள்ள வேண்டும். இல்லையெனில் ஒரு பார்வைக்கு வினவும் ஆர்.எஸ்.எஸ்ஸாக தான் காட்சி தரும்.

  8. இந்திய நீதி மன்றங்கள் அதிலும் குறிப்பாக உசச நீதிமன்றம் காவி மயமாகத்தான் இருக்கிறது என்பது உண்மைதான்.அதிகாரம் மேலே இருக்கிறது என்பதைக் காட்டிவிட்டால் கீழே இருக்கிற இந்து மத வெறியர்கள் பயஙகரவாதிகளாக மாறிவிடுகிறார்கள்.துணிந்து பயஙகர படுகொலைகளைச் செய்கின்றனர்.மேற்படி ரவி போன்றவர்கள் அவர் பார்ப்பனியத்தை சரி என்று கருதாவிட்டாலும் இந்து பயஙரவாதத்தை ஆதரிக்கிறார்கள்.மத அடிப்படையில் இல்லாமல் வேறு வழியில் இவர்களுக்கு சிந்திக்கத் தெரியவில்லை.இந்தியாவில் காவி பயஙகரவாதம் வெற்றி பெறவிடாமல் தடுப்பது எல்லா ஜனனாயகவாதிகளின் கடமை.

  9. உச்சிக் குடுமி மன்றத்துக்கு கிறித்தவர்கள் மேல் ஏற்பட்ட இந்த ஆத்திரம், அவர்களின் தவறான புரிதலினாலேயே ஏற்பட்டது. இந்து மதச் சாக்கடையின் நாற்றம் தாங்காமல் கிறித்தவத்தை நோக்கி ஓடுபவன், போய்ச் சேர்ந்த இடத்தில் எப்படி இருக்கிறான்? கிறித்தவனாகவா இருக்கிறான்? இல்லையே…! இயேசுவை வழிபடுகிறான் அதுமட்டுமே அவனிடம் ஏற்பட்ட மாற்றம்! ஒரு மூட இந்து என்னென்ன மூடத்தனமான நம்பிக்கைகளைப் பின்பற்றுகிறானோ அதை அச்சு பிசகாமல் புதுக் கிறித்தவனும் செய்கிறான்! எந்தக் கிறித்தவனும் தன் பிள்ளைக்கு கிறித்தவப் பெயரைச் சூட்டுவதில்லை இப்போதெல்லாம்! இந்து சமற்கிருதப் பெயரையே வைக்கிறார்கள் தன் பிள்ளைகளுக்கு! இயேசுவைக் கும்பிடுபவன் ஒரு கிறித்தவ இந்துவாகவே வாழ்கிறான். கிறித்தவர்கள் செறிவாக வாழும் இடத்திலேயே இதுதான் நிலமை. பிற மதத்தினருடன் கலந்து வாழும் கிறித்தவனோ தனது கிறித்தவ அடையாளம் எதையும் மறந்தும் கூட வெளிப்படுத்துவதில்லை. கார்த்திகை தீபத்தைக் கூட ஏற்றுக் கொண்டு விட்டு, இப்போது மகர ஜோதியின் பக்கம் தன் பார்வையைத் திருப்பியிருக்கிறான் கிறித்தவன்!
    கிறித்தவனும் இந்து வெறியனும் ஒண்ணுக்குள் ஒண்ணுதான்! என்ற கேடான நிலை கண்ணுக்கெட்டிய தொலைவுதான்! இவனைப் போய்… எதிரியாக எண்ணும் முட்டாள் தனத்தை உச்சிக் குடுமி மன்றத்தினர் செய்வது, அவர்கள் ஒரு உலகம் தெரியாத கிணற்றுத்தவளைகள் என்றே எண்ண வைக்கிறது! இப்படிப் பட்ட, இலாடம் கட்டிய பார்ப்பனக் கோவேறு கழுதைகளின் தொழுவமான உச்சிக்குடுமி மன்றத்திலிருந்து, சிறுபான்மையினர் அறத்தை (நியாயத்தை) எதிர்பார்ப்பது எப்படி அறமாகும்? காசிமேடு மன்னாரு.

    • இந்துக்களாகிய நீங்கள் அவர்களின் அடையாளத்தை வைத்து இரவோடு இரவாக அவர்களை உறக்கத்தில் கொளுத்திவிட்டால் என்ன செய்வார்கள் அவர்கள் ! பாவம் ! அதனால் என்னவோ தம்மை வெளியில் ஒரு இந்துவாக காட்டி உள்ளுக்குள் இயேசுவை வணங்கி வருகிறார்கள். இந்த இரட்டை நிலைமைக்கு யார் காரணம்……………. மத பாசிசம் தானே காரணம்…………………..பாவம் ஸ்டனியிஸ் பாதிரியாரும் வெளியே ஒரு இந்துவாக காட்டி உள்ளுக்குள் மதப் பிரச்சாரம் செய்திருந்தால் விட்டு இருப்பீர்கள். உண்மை பேசியதன் விளைவு மரணம்……………

      • டியர் அரைவேக்காட்டு தம்பி :

        முதலில் உங்கள் மதத்தார் பெரும்பான்மையாக உள்ள நாடுகளில் கிறித்தவர்கள் எப்படி நடத்தபடுகிறார்கள் என்று கவனித்துவிட்டு அப்புறம் பேசுங்கள். இந்தப் பாதிரியார் தன் மதமாற்று வேலைகளை ஒரு முஸ்லிம் நாட்டில் செய்திருந்தால் அரசாங்கமே தண்டனையை நிறைவேற்றியிருக்கும்.

        பாகிஸ்தானில் கிறித்தவ தேவாலயங்கள் உடைக்கப்பட்ட கதையென்ன? சூடானிலும் நைஜீரியாவிலும் கிறித்தவர்கள் தொடர்ச்சியாகக் கொல்லப்பட்டு அவர்கள் தனி நாடு கேட்கும் நிலைக்குச் சென்றதென்ன ? விடுதலை இயக்கம் என்ற பேரில் இஸ்ரேலிலும் காஷ்மீரிலும் மற்ற மதத்தவரை கொன்று குவிப்பதென்ன…என்ன என்ன என்ன …

        கொஞ்சமாவது மனசாட்சி இருந்தால் முதலில் மேலே சொன்னவற்றைப் பற்றி உங்கள் கருத்து என்னவென்று சொல்லிவிட்டு அப்புறம் விவாதத்தைத் தொடருங்கள். நான் உங்கள் கருத்துக்களைப் படித்தவரை சொல்கிறேன் – உங்களுக்கு மனசாட்சி கிடையாது.

        • ஐயா, இக்பால் மட்டும் படிக்கிறிங்க… செல்வன ஏன் படிக்க மட்டேங்கிரிங்க?

          அவரு மானிக் பட்ஷா மாதிரிப்பா?

          இக்பாலோட புனைவு நல்லாவே இருக்கும். இந்தமுறை ஏன் சொதப்புனார்னு தெரியல…

        • ரவி… என்ன பதில் சொல்லமுடியாத உலக தரமான கேள்வியை IR8 கேட்டுட்டாரு… ரொம்ப புகழுறீங்க?

          காஷ்மீரிலும் இஸ்ரேலிலும் கொல்லப்படுவது அப்பாவி முஸ்லீம்கள் தானய்யா.. இந்திய ராணுவத்திலோ இஸ்ரேலிலோ இருந்தால் நீங்களும் உங்கள் பங்குக்கு 4 முஸ்லீம்களை கொன்று திருப்தி பட்டுக்கொள்ளலாம்.. அப்புறம் வினவு தளத்துக்கு வந்து மனசாட்சியுடன் வியாக்கியானம் செய்யலாம்..

          ஒருவன் எந்த அளவுக்கு இந்திய கிரிக்கெட் டீமை ரசிக்கிறான் என்பதை வைத்து அவனது தேச பக்தியை அளவிடும் தேசிய உணர்வாளர்கள் தானே நீங்கள்….

        • பாகிஸ்தானில் உடைக்கப்பட்ட இந்து கோவிலை பாகிஸ்தான் அரசு கட்டியது. அதை திறந்து வைப்பதற்கு சென்று ஜின்னாவைப்பற்றி புகழ்ந்து RSS வெறியர்களிடம் வாங்கிக் கட்டிக்கொண்டார் அத்வானி.

          இது நம் இந்தியாவில் நடந்து விடுமா? இருக்கிற மசூதிகளை இடிக்காமல் இருந்தால் போதுமே!!!

  10. “அரிதினும் அரிதான வழக்குகளில் மட்டுமே
    மரண தண்டனை விதிக்க வேண்டும்”
    உச்ச நீதிமன்றத்தின்
    அரிதினும் அரிதான,
    நாகரிகமான, நாசூக்கான தீர்ப்பு.

    ஸ்டெயின்ஸ் பாதிரியார் குழந்தைகளுடன்
    கொளுத்தப்பட்டது அரிதினும் அரிதில்லை.
    ஏனென்றால் இது இன்றோடு
    நிறுத்தப்படப் போவதில்லை.
    இன்னும் நிறைய பாதியார்கள்
    நிலுவையிலிருக்கலாம்.
    அவர்களைக் கொல்ல
    இன்னும் நிறைய தாராசிங்குகள்
    தயார் நிலையிலிருக்கலாம்.
    ஆதலால் ஸ்டெயின்ஸ் பாதிரி கொலை வழக்கு
    ஒன்றும் அரிதினும் அரிதல்ல,
    இதோடு முடித்துக் கொள்ள…!

    ஆட்டோ சங்கர் செய்த கொலைகள்
    அரிதினும் அரிது.
    அவனுக்குத் தூக்கென்றால் ஒத்துக்கொள்ளலாம்.
    ஏனென்றால் அவன் கொன்றது –
    கொல்லப்பட்டவர்கள் கண் விழிதிருக்கும்போது.
    இது அரிதினும் அரிது.
    ஆனால், பாதிரிக்குடும்பம்
    தூங்கிக்கொண்டிருக்கும்போதல்லவா எரிக்கப்பட்டார்கள்?
    அதனால் அவர்களுக்கு வலித்திருக்காது.
    ஆகையால்
    இதைக் கொலையல்ல என்று கூட
    வாதிட வாய்ப்புண்டு.

    ரயில்கள் கொளுத்தப்பட்டு
    பிணங்கள் வீழ்ந்தால்
    அரிதினும் அரிதில்லை.
    பேருந்து கொளுத்தப்பட்டு
    மாணவிகள் எரிந்தால்
    அரிதினும் அரிதில்லை.
    கும்பகோணத்துக் குழந்தைகள்
    கொத்தாக எரிக்கப்பட்டாலும்,
    அது அரிதினும் அரிதில்லை.
    ஆனால், ஒரேயொரு தாஜ் ஓட்டல் கொளுத்தப்பட்டு
    உயர்ரக பிணங்கள் எரிக்கப்பட்டால்தான்
    அது, அரிதினும் அரிதாயிருக்கலாம்.

    கொல்லப்பட்டது மகாத்மா என்றால்
    அது அரிதினும் அரிது.
    அதனால் கோட்சேக்கள்
    தூக்கிலிடப்படலாம்.
    ஆனால் கொல்லப்பட்டது சாதாரண ஆத்மாதானே?
    அதுவும் ஆஸ்திரேலிய ஆத்மா.
    இதுக்குப் போய் அலட்டிக்கலாமா?

    • தலைவா ஸ்டெயின்ஸ் பாதிரியாரின் மனைவி ஓரு பேட்டியில்,தன் கணவனை,குழந்தைகளைக் கொன்றவர்கள் மீது எவ்வித நடவடிக்கை எடுக்க வேண்டாம்.அவர்களை மன்னித்துவிட்டார் எனக் கூறியுள்ளார்.

      அவள் என்ன கம்யுனிஸ்ட்டா…கிறிஸ்தவள்

    • கொல்லப்பட்டவரின் தாயாரே கொலையை மன்னிக்க வேண்டிக்கொண்டாலும், மன்னிப்பதற்குச் சட்டத்தில் இடம் இல்லை.

      கிறிஸ்தவப் பெண்மணி மன்னிக்கச் சொன்ன பெருந்தன்மைக்காக இந்துத்துவ கொலை வெறியாட்டம் நின்று விட்டதா?

      இது சும்மா பழிவாங்கல் விடயமல்ல. சமூக விரோதக் குற்றங்கள் தொடர்வது பற்றிய பிரச்சனை.
      சட்டம் சும்மா இருப்பது தவறு.

      • இது சமிப காலக்தில் நிகல்ந்தடகு ஆனால் வரலாரை எடுத்து பாருஙல் கிருத்துவர்கல் செய்த கொடுமை தெரியும் அவர்கல் இடித்த கோவில்கல் எத்ட்கனை ,கட்டாயத்தின் பேரில் மதம்மாட்ர்ட்ரியது எவ்வலவொ பேரை…..
        சத்தியம் என்றூம் தோற்காது நன்பரே கிருத்துவர்கள் முகத்திரை கிலியும் நாள் வெகு அருகில் ………..

  11. வினவு தோழர்களுக்கு,

    இந்த படுகொலை நடந்த சனவரி 22 1999 அன்று ஒரிசாவை ஆட்சி செய்தது ஜே.பி.பட்நாயக், காங்கிரஸ் கட்சி… காங்கிரஸ் கட்சி… மறைமுகமான ஹிந்து வெறி கட்சிதானே… காரணம் ராஜிவ் ஆட்சியில்தான் பாபர் மசூதிக்குள் ஆர்.எஸ்.எஸ். மதவெறி ஜந்துக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது… நரசிம்மராவ் பாபர் மசூதியை இடிக்க பார்த்து கொண்டிருந்தான்…

    ஆர்.எஸ்.எஸ்., பாஜக, தமிழக ஆர்.எஸ்.எஸ். கிளை புரட்சிதலைவி அம்மாவின் கட்சி, எல்லாம் சொல்வது எல்லாம் ஒன்றே… இதனை காங்கிரஸ் ஆதரிக்கும்… சிறுபான்மை பார்ப்பனீயத்திற்கு கட்டுப்பட்டு ஹிந்துக்கள் அடிமையாய் வாழ்வதைப் போல் இஸ்லாமியர்களும், கிருத்துவர்களும் அடங்கி வாழ வேண்டும்… பார்ப்பனீயத்திற்காக உச்சா(சு) நீதி(குடுமி) மன்றம் என்ன பாசிச தீர்ப்பு வேண்டுமானாலும் எழுதும்…

    இங்கே சட்டமும் நீதியும் யாருக்காக?

    காஷ்மீரி பண்டிட்களுக்காக, பார்ப்பனர்களுக்காக, அம்பானிகளுகாக, டாடாவுக்காக, மிட்டல்களுகாக, பிர்லாகளுகாக, பிரேம்ஜிகாக, நாராயணமூர்த்திகாக…

    ஹிந்திய அரசை பொருத்த வரை… இவர்கள் மட்டுமே மக்கள்…

    இந்த தீர்ப்பு எதற்காக… குஜராத் கொலையாளிகளை விடுவிக்க முன் உதாரணம், கற்பழிப்பு, கொலை புகழ் ஜெகத் குருக்கள் ஜெயேந்திர, விஜேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளை விடுவிக்க முன் உதாரணம்…

    போகிற போக்கை பார்த்தால் மசூதியையும்… தேவாலயங்களையும் உடைத்து கொலை செய்தால் கூட… அவர்கள் நோக்கம் சிறுபான்மையினரை கொலை செய்வது… ஆனால் திட்டமிடமால் கையில் கிடைத்த அரிவாளை கொண்டு வெட்டியதால் கருணை காட்டுவதாக கூட… ஹிந்து நீதிமான் சொல்வார்கள் போல் இருக்கிறது…

  12. அப்போது இந்திய நீதித்துறை மதவிசயமாக ஒருவன் கொலை செய்தால், அது பெருங்குற்றம் இல்லை என்றுக் கூறி இருக்கிறது. அப்படி என்றால் இந்தியாவில் இனி பிடிபடும் எந்த மதத்தீவிரவாதிக்கும் இதே போல தண்டனைக் கொடுப்பார்களா? அதாவது மதத்தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை இல்லை என்பார்களா?

    மதம் மாற்றுவது தவறு என்றே வைத்தாலும், அவர்களைக் கொல்வது சரியா? அந்தக் கொலையை நீதிமன்றமே நியாயப்படுத்துவது சரியா? என்ன பெரிய ஆயுள்தண்ட்னை 14 வருஷம்…… இதற்கு தாராசிங்கையும் அவர்கள் விடுதலை செய்திருக்காலாம்..

    வாயில் அசிங்கமாக வருகிறது. காப்பி அடித்து பாஸ் ஆனால் நீதிபதிகளின் தீர்ப்புகளில் எப்படி நீதி இருக்கும்………… இந்தியாவில் இருக்கும் சிறுபானமையினரும், நடுனிலையாளர்களும் தமது இந்தியக் குடி உரிமையைத் திருப்புக் கொடுத்துவிட்டு, வேறொரு நாட்டுக்கு புலம் பெயர வேண்டியது தான் ஒரே வழியாக இருக்கும்………..

  13. அதிர்ச்சியளித்த தீர்ப்பு. இவ்வளவு கொடூரமாக பிள்ளைகளை எரித்துக் கொலை செய்த கயவனுக்கு மரண தண்டனை அளிக்காமல் குறைத்தது தவறு. மீதிப் பேரை விடுவித்திருப்பது அநீதியிலும் அநீதி. அப்படிப் பார்த்தால் பழங்குடியினரை, அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையை நம்பிக்கையை விடுத்து, இவர்கள் இந்து மதத்துக்குள் சேர்த்தார்கள் என்பதும் கூட சட்டப்படி குற்றம் தான்.

  14. //ஒரு உயிரற்ற கட்டிடத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் வழக்கில், அப்பாவியான அப்சல் குருவுக்குத் தூக்கு தண்டனை அளிக்கத் தயங்காத உச்ச நீதிமன்றம், இவ்வழக்கில் இரண்டு குழந்தைகள் உள்ளிட்டு மூவரை உயிரோடு கொளுத்திக் கொன்ற குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை வழங்காமல் கருணை காட்டியிருக்கிறது.//

    இந்தக் கருத்திலே உடன்பாடு இல்லை. பாராளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தியவனை பின் என்ன கொஞ்சவா முடியும்? இந்தியன் ஒருத்தன் பாக் பாராளுமன்றத்தின் மீது அல்லது சீனாவின் ஒரு முக்கிய கட்டிடத்தின் மீது குண்டுவீச்சு நடத்திப் பிடிபட்டு வெளியே வந்துவிட முடியுமா? இதிலே அப்பாவி என்ற வக்காலத்து வேறு. உங்கள் நோக்கங்களைச் சந்தேகப் பட வைக்கிறது. பாக்கில் பிடிபட்ட அமெரிக்கச் சி ஐ ஏ வையும் அப்பாவி என்பீர்களா?

  15. ”அரிது,அரிது,மானிடராகப் பிறத்தல் அரிது, அதனினும் அரிது கூண், குருடு, செவிடு நீங்கிப்

    பிறத்தல் அரிது”. ஆனால், மானிட உருவத்தில் உள்ள குரங்குப் பிறவிகள், கொள்ளி

    வைத்தலையே, தனது குலத்தொழிலாகக் கொண்டு பாதிரியாரையும் இரு

    குழந்தைகளையும் உறங்கிகொண்டிருக்கும்பொழுது உயிரோடு எரித்துக் கொன்றுவிட்டு

    ஒன்றுமே தெரியாதது போல் நடிக்கும் மிகக்கொடுமைக்கார விலங்குகள் ஆவார்கள்.

    இதைச் செய்தவர்கள் மனிதத்தன்மை சிறிதும் இல்லாமல், அப்படியே ”அ” – நீதி மன்றங்கள்

    மூலம் விடுவிக்கப்பட்டு,ஆர்.எஸ்.எஸ் போன்ற இந்து மதவெறி பாசிஸ்ட்களுக்கு அடியாளாய்

    உள்ளார்கள் என்பதைதெளிவுபடுத்திஉள்ளார்கள்.

    மேலும், இந்தியா, பார்ப்பன இந்து மதவெறி கொண்டதுதான்

    என உறுதிப்படுத்தியுள்ளர்கள். இதில், பின்னூட்டம் போட்டவர்களில் சிலரது ”மனிதநேயம்”

    புல்லரிக்கச்செய்கிறது. மனிதர்களைக் காப்பாற்ற, கொடூரவிலங்குகளை என்ன

    செய்யவேண்டுமோ அதை இவர்களுக்குச் செய்யவேண்டும்.

    உச்சமன்றங்கள் ”உச்ச”மன்றங்களாக நாறுகின்றன , இந்த நாற்றத்தைப் போக்குவது எப்படி,

    நறுமணம் வீசச்செய்வதெப்படி.

    • நாடு முழுவது அரபு அத்தர் தெளிக்கலாம், இல்லை கிறித்தவ பிரான்சிலிருந்து சென்ட் வாங்கிவந்து அடிக்கலாம்.

  16. பேசாம நீதி மன்றங்களை எல்லாம் முடி விட்டு… நீதிபதியாக இருப்பவர்கள் எல்லோரையும் மோகன் பகவதி, பிரவீன் தொட்காடியா, பாபு பஞ்ரங்கி, நரேந்திர மோடி, அத்வானி, ஜெயலலிதா, ராம கோபாலன் போன்ற ஆர்.எஸ்.எஸ்.காரர்களின் வீட்டு கழிவறைகளை சுத்தம் செய்வது, வீடு கழுவுவது, சமையல் செய்வது போன்ற வேலைகளோடு சோ ராமசாமி, எஸ்.வி இ. சேகர் போன்ற மாமாக்களுக்கு எடுபிடியாக ஜெயேந்திரன், விஜேயேந்திரன் போன்ற ஜெகத் குருக்களுக்கு மாமா வேலை செய்வது போன்ற வேலைகளை மட்டுமே முழு நேர வேலையாக்கி விட வேண்டும்…

    ஆர்.எஸ்.எஸ். எடுபிடிகளை விட இழிவாக தீர்ப்பெழுதி கொண்டிருக்கும், காவி தீவிரவாதிகளை என்ன செய்ய முடியும்?

    இப்படி ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளை சரியென தீர்ப்பெழுதும் போது… நீதிமன்றம், விசாரணை என சொல்லி மக்களின் நேரத்தை ஏன் வீணாக்க வேண்டும்?

  17. ”அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது,அதனினும் அரிது கூண்,குருடு,செவிடு நீங்கிப்

    பிறத்தல் அரிது”. அதனினும் அரிது இந்து மதவெறிபாசிஸ்ட்டுகள் இந்திய “அ”நீதி

    மன்றங்களால் தண்டிக்கப்படுவது அரிது.ஒரிசாவில் ஸ்டெயின்ஸ் பாதிரியார் மற்றும்

    அவரது இரு மகன்களும் ஜீப்பில் உறங்கும் போது எரித்துக் கொல்லப்பட்டார்கள்,இதைச்

    செய்த ”மாவீரர்கள்”எவ்வளவு ”மனிதநேயமிக்கவர்கள்” .இந்த மதவெறியர்கள்

    பாம்புக்கும்,எலிகளுக்கும் பாலூற்றுவார்கள் ,கடவுளின் தொண்டர்கள் என்று

    கூறி.ஆனால் மனிதர்களுக்கு கடைசிப் பாலை ம்ட்டுமே ஊற்றுவார்கள்.இவர்களுக்கும்

    பால் காத்துக்கொண்டியிருக்கிறது. இதில் பின்னூட்டமிட்ட சிலரது

    ”மனிதாபிமானம்” மயிர் சிலிர்க்கவைக்கிறது.

  18. (குற்றவாளிகளின்) நோக்கம் மதப் பிரச்சாரம் என்ற பெயரில் ஏழை பழங்குடியின மக்களைக் கிறித்தவ மதத்திற்கு மாற்றிக் கொண்டிருந்த பாதிரியார் ஸ்டெயின்ஸுக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும் என்பதுதான்”
    All fools, are you justifying the conversion… without seeing the about sentences in the judgement why you people are foul crying?
    Biased people like VINAVU should be thrown at the arabic ocean

  19. ” பா.ராகவன்: ஆர்.எஸ்.எஸ்-இன் அஜினோமோட்டோ ராஜரிஷி! ” – கட்டுரையை படித்து தான் நான் வினவு படிக்க ஆரம்பித்தேன்.

    அதில் பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் ஏவல் சங்கங்கள் பற்றியும் எழுதி அதன் முகதிரையை கிளிக்கப்பட்டிருந்தது.

    அதே போல் தொடர்ந்துவந்த கட்டுரைகள் என்னை மிகவும் ஈர்த்தது.

    தராசிங்கின் மரணதண்டனை கூட குறைவு என்றே எண்ணுகிறேன். சர்வதிகாரி கூட தன்னை எதிர்பவர்களை தான் கொல்லுவான். ஆனால் பாதிரியார் யாரை எதிர்த்தார். பிரச்சாரம் தானே செய்தார். பிரச்சனை செய்யவில்லையே. சரி ஒன்றும் அறியாத பச்சிளம் குழந்தைகள் என்ன செய்தன.

    உயிர்களை வதைக்கக்கூடது, மாமிசம் உண்ணகூடாது என்று பேசிக்கொண்டு மனித கொலை செய்வது எந்தவிதத்தில் நியாயம்.

    இந்த வழக்கை பொருத்தவரை
    ”கண்ணுக்கு கண்- பல்லுக்கு பல்” என்னும் நீதியே சரியானது. இதை எடுத்துரைத்த வினவுக்கு நன்றி.

    இதுவரை வினவின் நடுனிலை பத்திரிக்கை என எண்ணியிருந்த எனக்கு இப்போது ஒரு சந்தேகம் இந்த கட்டுரையின் மூலம் தோன்றியுள்ளது. அதை தீர்த்து வைப்பது வினவின் கடமை.

    வினவு எளியோருக்கும், ஏமாற்ற படுபவருக்கும், அநீதிக்கும் எதிராக குரல் கொடுக்கும் பத்திரிக்கையா? அல்லது பார்பணர்காளுக்கும், பாணக்காரர்களுக்கும் எதிராக குரல் கொடுக்கும் பத்திரிக்கையா?

    காரணம்:

    1. //ஒரு உயிரற்ற கட்டிடத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் வழக்கில், அப்பாவியான அப்சல் குருவுக்குத் தூக்கு தண்டனை அளிக்கத் தயங்காத உச்ச நீதிமன்றம் //

    பாராளுமன்றத்தில் தாக்குதல் என்பது நமது நாட்டிற்க்கும், பாதுகாப்பிற்க்கும் விடப்பட்ட சவால் மட்டும் அல்ல அவமானமும் தான்.

    அப்படி பார்த்தால் பாபர் மசூதி இடிப்பையும் உயிரற்ற கட்டிடம் என்று விட்டு விடலாமா?

    உங்கள் வீட்டை ஒருவன் இடித்து விட்டால், உயிரற்ற கட்டிடம் தானே என்று விட்டு விடுவீர்களா?

    2. ஏழை எளியவரின் உரிமைக்காக குரல் குடுக்கும் நீங்கள் (வினவு), பணக்காரரின் உயிர் என்றால் மட்டும் கேவலமாக பார்ப்பது ஏன்?

    தாஜ் ஹோட்டலில் தாக்குதல் நாடத்தியது என்ன சேவையா?

    நாமது நாட்டின் அன்னிய செலவானிக்கு தீங்குவைத்து நாட்டின் வளர்ச்சியை மட்டம் செய்யும் காரியம் தேச தொண்டா?

    உலகறிய செய்த படுகொலைகாரன் தனது தாண்டனைக்கு எதிராக மேல் முறையீடு செய்யும் உரிமை காவி மன்றங்கள் தானே வழங்கி உள்ளது.

    ஒரு தண்டனை வாழஙப்பட்ட அன்னியன் மேல் முறையீடு செய்யவும், தண்டனை நிறைவேற்றவும் அவக்காசம். இஸ்லாமிய நாடுகளில் உள்ளதா?

    மத்திய கால கட்டத்தில் கிறிஸ்துவமும், இஸ்லாமும் தங்கள் மததை விரிவு அவர்கள் செய்த செயல்களை ஒருமுறை திருப்பி பார்க்க வேண்டுகிறேன்.

    3. தங்கள் மததையும், செல்வாக்கையும் விரிவுபடுத்த வேண்டும் என்று புனித போர், சிலுவை போர், ஜெஸியா வாரி என்று அரசர்களை கைபொம்மையாக்கி மக்களை வதைத்த மத குருக்கள் என்ன தெய்வபிறவிகளா?

    4. உயிர்களுக்கு தீங்கு செய்யகூடது என்று சொன்ன புத்தரின் கொள்கை பரப்பிகள் (புத்த பிட்சுக்களின்) ஆணைப்படி ஈழதமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டதையும், அதை காண்டு கொள்ளத ( தனது நாட்டின் வணிககட்டிடம் இடித்தவுடன் ஒரு நாட்டின் மீது படையெடுத்து நாட்டி அரசியலையே மாற்றிய) பெரியாண்ணன் அமெரிக்கவையும், இந்த கொலைக்கு ஆயுத உதவி செய்த சீனாவையும் எப்படி பாராட்டுவதாக உத்தேசம்?.

    5. உதவி என்பது கைமாறு எதிர்பாரமள் பிறறுக்கு செய்வது, மதம் மாரியவருக்கு உதவி செய்கிறேன் என்பதா புனித தொண்டு ?

    வீரமாமுனிவர் பற்றி அனைவருக்கும் தெரியும். சரியாக தெரியாதவர்கள் அவரை இந்து முனிவரோ எனா எண்ணகூடும். முனிவர் என்று சொன்னல் மட்டுமே மக்கள் நாம் சொல்வதை கேட்பார்கள் என்பதை உண்ர்ந்தார். மக்களோடு மக்களாக கலந்தார். உத்திராச்சம் அணிந்தார். மக்கள் தொண்டும், தமிழ் தொண்டும் அற்றினார்.

    இவரி வளர்ச்சியை கண்டு கடுப்பேறிய மற்ற குழுக்கள் போபுக்கு கடிதம் எழுதினர். வீரமாமுனிவர் கிறிஸ்துவதிற்க்கு எதிராக இந்துக்களை போல் நடந்து கொள்கிறார் என்று. நிலமை உண்ர்ந்த போப், வீரமாமுனிவர் செய்வது சரி என்றும், மததை பரப்புவதை தனது கடமை என்றும் அது எப்படி வேண்டுமானாலும் செய்யலாம் என்று பதில்லனுப்பினார்.

    சகோதரி நிவேதிதாவும், அன்னை தெரசாவும் மதம் மாற்றவில்லை.

    பொதுவில் போராட களம் இறங்கியபின் காட்டி கொடுப்பவனுக்கும் செர்த்தே போராட வேண்டியிருக்கும். இதை கருத்தில் கொண்டு வினவு நடுனிலையாக கட்டுரை எழுத வேண்டும் என்றும் எனது கேள்விகளுக்கு பதிலுரைக்க வேண்டும் என்றும் கேட்டு கொள்கிறேன்.

  20. அன்புள்ள சூத்திரன்,உலகத்தில் எத்தனையோ ஆட்சி முறைகள் உள்ளன.அதில் முன்னேறிய ஆட்சி முறை சோசலிச ஆட்சிமுறை.ருசியாவில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த அந்த ஆட்சி முறை உலக முதலளிகளுக்கு எதிரானதாக இருந்ததால் அவர்கள் அதை ஒழித்துவிட்டார்கள்.இப்போது ஜன நாயகத்தின் பேரால் முதலாளிகளின் ஆட்சி நடைபெறுகிறது. ஜன நாயக நாட்டில் வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் தனி மனித சுதந்திரம் உள்ளது.அதன் படி எந்த மதத்தையும் ஏற்றுக்கொள்ளவும்,மாறவும்,மறுக்கவும் உரிமை உள்ளது.இந்தியா ஜன நாயக சோசலிசக் குடியரசு என்று சொல்லிக்கொள்கிறது.அப்படிப்பட்ட நாட்டில் மதம் மாறுவது ,மாற்றுவது என்ற பேச்சுக்கே இடமில்லை.அது தனி நபர் விவகாரம்.வினவு எந்த மதத்தையும் ஆதரிக்கவில்லை என்று கருதுகிறேன்.மதத்தின் பேரால் சிறுபான்மையினர் ஒடுக்கப்படுவதை எதிர்க்கிறது.ஜன நாயகதின் பேரால் இந்த அ நீதி உச்ச நீதி மன்றம் வரை பரவியிருப்பது கவலைக்குரியது.பாராளுமன்றமே புனிதமானதில்லை.வெள்ளைக்காரன் கட்டிய கட்டிடம் எப்படிப் புனிதமாகும் ? மக்கள் ஓட்டுப் போட்டுத் தேர்ந்தெடுக்கும் நபர்களே அதை துளிகூட மதிப்பதில்லை.தேசிய,மத வெறியைத் தூண்டுவதற்குதான் பயன்படுகிறது.பாராளுமன்றக் கட்டிடம் தாக்கப்பட்டதில் அப்சல் குருவுக்கு சம்பந்தம் இல்லாவிட்டாலும் நாட்டின் பொதுக் கருத்தை திருப்திப் படுத்தவே தீர்ப்பு வழஙப்பட்டிருப்பதாக நீதி மன்றம் சொல்லியிருக்கிறது.இப்படிதான் இந்துப் பொதுக் கருத்தை இந்து ஆதரவாளர்கள் எல்லா முனையிலிருந்தும் உருவாக்குகிறார்கள்.அது தாராசிங்குகளை உருவாக்குகிறது.உச்ச,நீதிமன்றங்கள் மீண்டும் இந்து மதவெறிக்கு கருணை காட்டுகிறார்கள்.பாபர் மசூதி இசுலாமியர்களின் வழிபாட்டுத் தலம்.மத நம்பிக்கை சார்ந்தது.சிறுபான்மையின்ர்.ஜன நாயகத்தில் சிறுபான்மையினர் உரிமைக்குப் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.அதை அரசு உத்திரவாதப் படுத்த வேண்டும். அப்படி இல்லாத போது தான் தீவிரவாதம் தலை தூக்குகிறது.அரசு பயஙகரவாதம் அதை நசுக்குவதாகச் சொல்லி அப்பாவி மக்களையும் கொன்று குவிக்கிறது.எல்லா மத நிறுவனஙகளும் தஙகளுக்கு சுதந்திரத்தை விரும்புகின்றன ஆனால் தன் உறுப்பினர்களுக்கு அதைத் தர விரும்புவதில்லை. ஒப்பீட்டளவில் மற்ற மதங்களை விட இந்து மதம் மிகவும் பிற்போக்கானது.மக்களை கடுமையாக, குறிப்பாக சாதி ,தீண்டாமை,சடங்கு,சம்பிரதாயங்களால் ஒடுக்குவது.அதையே பெருமையாகப் பேசுவது.இந்தக் கோணத்தில் சிந்தித்துப் பார்ப்பதே ஜன நாயகப்பூர்வமானது நண்பரே.

    • //பாராளுமன்றக் கட்டிடம் தாக்கப்பட்டதில் அப்சல் குருவுக்கு சம்பந்தம் இல்லாவிட்டாலும்//

      இது தாராசிங்கை உருவாக்காதா?

    • மலையப்பன் அண்ணா!

      வழிகாட்டும் உரிமை அனைவருக்கும் உண்டு, ஆனால் நான் காட்டும் வழி தான் சரி என்று சொல்ல யாருக்கும் உரிமையில்லை.

      வழியில் முன்னால் சென்றவர்கள் அசுத்தம் செய்துவிட்டனர். அதை தாண்டி செல்லுங்கள், முடிந்தால் சுத்தம் செய்து உனது சந்ததிகளுக்கு நல்ல வழியை அமைத்துக்கொடுங்கள் இல்லையென்றால் உங்களுக்கு பிடித்த வழியில் செல்லுங்கள். உனது தாய் அசிங்கதில் விழுந்துவிட்டால் அவளை சுத்தம் செய்வது உனது கடமை இல்லையா?

      அப்சல் குரு அப்பாவி என கூறியதை நீங்கள் ஒப்பு கொள்கிறிர்களா?

      நான் இவ்வளாவு பெரிய பின்னுட்டம் எழுத காரணம் இதுதான்.

  21. ஐரோப்பியனுக்கு அரசியல். அமெரிக்கனுக்கு முதலாளித்துவம். சீனனுக்கு கம்யூனிசம். இந்தியனுக்கு இந்து மதம். இந்தியாவின் முதுகெலும்பு இந்து மதம். இந்தியன் எதை வேண்டுமானாலும் பொறுத்துக்கொள்வான். ஆனால் அவன் மதத்துக்கு ஓர் ஆபத்து என்றால் பொங்கி எழுவான். சிப்பாய் கலகம் ஆரம்பித்ததே ஆங்கிலேயன் இந்திய மதத்தை அவமதித்ததனால் தான். கிட்டத் தட்ட 900 வருடங்களாக அடிமையாக இருந்தும் அமைதியாக இருந்த இந்தியா, மத அவமதிப்பால் 1857 முதல் சுதந்திர போராட்டத்தை ஆரம்பித்தது. இந்தியனுக்கும் மதம் உயிர். அவன் எதையும் மதம் என்னும் கண்ணாடி வழியாகத் தான் பார்ப்பான். அவனுக்கு மதம் மூலம் சொன்னால் தான் எதுவும் புரியும்.

    ஆனால் கிருத்தவனுக்கோ மதம் என்பது எண்ணிக்கை. அவனுக்கு அவன் மதத்தில் ஆட்கள் மற்ற மதங்களை விட அதிகமாக இருக்க வேண்டும். அதனால் தான் ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் சாதாரண மக்கள் மதிக்காத ஒரு மதத்தை ஆசியாவிலும், ஆப்ரிக்காவிலும் பரப்புகிறார்கள். எத்தனை இந்துக்கள் வீடுகளில் விநாயகர், முருகன் படங்களுடன் ஏசு, மேரியின் படங்களும் சிலையும் வைத்து வழிபடப்படுகின்றது. எதாவது ஒரு கிருத்தவன் இந்துக் கடவுளின் படத்தை ஏசு படத்துடன் வைத்து வழிபடுகின்றானா?

    நான் பாதிரி குடும்பத்தை படுகொலை செய்ததை கண்டிக்கின்றேன். அந்த பாதகத்தை செய்தவனுக்கு தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும். ஆனால் யார் இந்த பாதிரி கூட்டத்தை காட்டுவாசி மக்களிடம் சென்று கிருத்துவத்தை பிரச்சாரம் செய்யச் சொன்னது. அது தான் முதல் தவறு. ஒரு இந்திய கிராமத்திற்குச் சென்று பெண்களை கேலி செய்தால், அடித்து துவைத்து விட மாட்டார்களா? அது போல் எதிர் வினையை அறியாமல் கிருத்தவர்கள் இம்மாதிரியான மக்களிடம் போய் மதத்தை பரப்புகின்றேன் பேர்வழியென்று பிரச்சனையை தாங்களை இழுத்து வைத்துக் கொள்கிறார்கள்.

    ஆனால் இங்கு எந்த அரசியல்வாதியும் இதைப் பற்றி பேசுவதில்லை. அவனுக்கு தன் ஓட்டு வங்கி திவாலாகிவிடக்கூடாது என்றக் கவலை. இங்கு எல்லாம் வசவுகளும் இந்துக்களுக்கு தான். திருடன் என்பார்கள். மூடர்கள் என்பார்கள். ஏனய்யா, உனக்கு தைரியம் இருந்தால் இதையே நீ மிற மதத்தினனை பார்த்து சொல்ல முடியுமா? நீ சொல்லிதான் வாயை மூட முடியுமா? சொல்லி முடிவதற்குள் என்ன நடக்கும் என்பதை நாம் இங்கு சொல்ல வேண்டியது இல்லை.

    நாம் யாரையும் எதிர்க்க வேண்டியதில்லை. அரவனைத்துப் போவதே நமது குணம். உனக்கு அது தான் வழியா, அது தான் உனக்கு பிடிக்கின்றதா, ரொம்ப சந்தோஷம், நீ அவ்வழியிலேயே செல். வெற்றி பெறு. ஏன் எங்களையும் உன் வழியில் இழுக்க முயல்கிறாய். உனக்கு உன் வழி போல், எனக்கும் ஒரு வழியிருக்கின்றது. நான் அதில் போகக் கூடாதா? நீ இழுக்க முயல்வதனால் தானே பிரச்சனை இருக்கின்றது. நாங்கள், உன் கூற்றுப் படி, திருடர்களாக மூடர்களாகவோ இருந்துவிட்டு போகிறோம். உனக்கேன் அதைப்பற்றிய கவலை. நீ உன் வழியில் செல். நான் என் வழியில் செல்கிறேன். இருவருக்கும் பிரச்சனை இருக்காது.

    மீண்டும் சொல்கிறேன், செய்த தப்பிற்கு உரிய தண்டனை கொடுத்தே ஆக வேண்டும். யாராக இருந்தாலும் சரி. இது போல் மீண்டும் தவறு நடக்காமல் இருக்க, அவரவர் வழியில் செல்லுங்கள்.

      • //இதெல்லாம் நடக்கும்னு நெனக்கறீங்களா? வினவு & கோ.வும் இந்த கூட்டத்தில் ஒருத்தர் தான்…//

        வாங்க சீனு நீங்க எந்த கூட்டம்? கோத்ராவுல பெண்ணின் யோனியை கிழித்து குழந்தையைக் கொன்ற கூட்டம்தானே? எப்படிங்க இத்தனையும் செஞ்சிட்டு தேசப்பற்று, நாட்டு நலன், எல்லா இந்துவும் அப்படினு எல்லாம் பேச முடியுது? கொஞ்சம் கூட வெட்கப் பட மாட்டீங்களா?

    • Hinduism is not India’s backbone. It is India’s disease. More than that, Hinduism is also infection, which affects people of other faith with caste and superstition. Hinduism is cancer. It kills silently from inside.

      • hinduism is breath of india…great culture…..great way for for peaceful life……….but see the christian countrys it enters via war ,slowly enters and cheating others ,they are doing sevice for whom they can convert and get money from abroad……dont believe any christian they are culprits……the time is very near christian made run out of country.

    • //சிப்பாய் கலகம் ஆரம்பித்ததே ஆங்கிலேயன் இந்திய மதத்தை அவமதித்ததனால் தான். //

      இந்த வரலாறை செவ்வாய் கிரக்கத்துல சொல்லிக் கொடுக்குறங்களா?

      • இது உண்மை தான். துப்பாக்கிகளுக்கு grease ஆக செயல்பட ஹிந்துக்களுக்கு மாட்டு இறைச்சியும் முஸ்லிம்களுக்கு பன்றி இறைச்சியும் கொடுத்தான். அத்துப்பாக்கிகளை load செய்வதற்கு பல்லால் கடித்து இழுக்க வேண்டி இருந்தது. இதுவே கலவரத்திற்கு காரணம். தேச பக்தி secondary தான்.

      • இந்தியன்,
        தகவலை அரைகுறையாக விளங்கிக் கொண்டு எழுதியுள்ளீர்கள் போலுள்ளது.

        “துப்பாக்கிகளுக்கு grease ஆக செயல்பட ஹிந்துக்களுக்கு மாட்டு இறைச்சியும் முஸ்லிம்களுக்கு பன்றி இறைச்சியும் ” எப்படிக் கொடுக்க முடியும்?

        மாட்டுக் கொழுப்பு உள்ளது என்று ஒரு பகுதியினரும் பன்றிக் கொழுப்பு உள்ளது என்று ஒரு பகுதியினரும் கிளர்ந்ததாகத் தான் கதை.

        ஆனால் சிப்பாய்க் கிளர்ச்சிக்கு அதை விட ஆழமான காரணங்கள் இருந்தன.

      • //சிப்பாய் கலகம் ஆரம்பித்ததே ஆங்கிலேயன் இந்திய மதத்தை அவமதித்ததனால் தான். //
        கற்பணைக்கு அளவே இல்லையா????

    • //மீண்டும் சொல்கிறேன், செய்த தப்பிற்கு உரிய தண்டனை கொடுத்தே ஆக வேண்டும். யாராக இருந்தாலும் சரி. இது போல் மீண்டும் தவறு நடக்காமல் இருக்க, அவரவர் வழியில் செல்லுங்கள்.//

      நீங்க அத்வானி அண்டு மோடி வழியா?

    • First you get out of India… India is NOT a Hindu country. If you want, declare the constitution as Hindu country. Then not even dogs will live in this stupid country. India is a secular and republic nation. If you want Hindu supremacy, you get out of this country.

      • ஸ்டுபிட் கன்ட்ரி என்று சொல்லிவிட்டு அப்புறம் இங்கு உனக்கென்ன வேலை, போய் உங்கள் அறிவு ஜீவி நாடுகளுக்கு போங்களேன் அய்யா !!

      • //First you get out of India… India is NOT a Hindu country. If you want, declare the constitution as Hindu country. Then not even dogs will live in this stupid country. India is a secular and republic nation. If you want Hindu supremacy, you get out of this country.//well said..and form the sides of human beings,the humble request is if you want to live in hindhu country…plz dont say that India is Hindu country..rather than it,better migrate to Nepal which is declared as complete Hindu country…

    • Only indian ….. இந்தியா என்ன உங்க அப்பன் வீடு சொத்தா?… நீ யாருப்பா அத சொல்றதுக்கு… ?

  22. கோத்ராவில், சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் எரிக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 31 பேருக்கு இன்று தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டது. அதன்படி 11 பேருக்கு தூக்குத் தண்டனையும், 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

  23. மலையப்பன்!
    //உலகத்தில் எத்தனையோ ஆட்சி முறைகள் உள்ளன.அதில் முன்னேறிய ஆட்சி முறை சோசலிச ஆட்சிமுறை.ருசியாவில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த அந்த ஆட்சி முறை உலக முதலளிகளுக்கு எதிரானதாக இருந்ததால் அவர்கள் அதை ஒழித்துவிட்டார்கள்.//

    சோசலிச முறை சிறந்ததெனில், அந்த நாட்டு மக்கள், கலகம் செய்து ஏன், அத்தகைய சிறந்த ஆட்சியை அகற்றினர்!? உலக முதலாளிகள் முயற்சி ஏன் வெற்றி அடைந்தது?
    கோர்பசேவ் தான் காரணமெனில், அவர் வெளியேறியபின், ஏன் மறுபடி, சோசலிச ஆட்சி மலரவில்லை?
    சீனத்தில் ஏன் சோசலிசம் (உங்கள் குழுவினர் கூற்றுப்படி) மறைந்துவிட்டது?

    சோசலிசத்தில் எங்கே ஓட்டை! கருத்திலா? அமலாக்கத்திலா?
    சோசலிசம் யாருக்காக? மக்களுக்கா? ஆட்சியாளருக்கா?
    சோசலிச அரசுகள், அனைத்தும் ஏன் இரும்புத்திரை போர்த்திக் கொண்டன?தன் மக்களை ஏன் உலகத்திடம் இருந்து, பிரித்து, மறைத்து வைத்தன?
    சோசலிச அரசுகள் அனைத்தும் ஏன், தன் மக்களிடம் அடக்குமுறையை ஏவிவிட்டன?
    அடக்குமுறையால் தான் சோசலிச கொள்கையைக் காப்பாற்ற முடியும் என்று, சோசலிச கருத்தை வடைவமைத்தவர்கள் அறிவுறுத்தினரா?

    அனுபவித்த மக்கள், தூக்கி எறிந்ததை, எப்படி அய்யா, தலை சிறந்த ஆட்சி முறை என்று சொல்லுகிறீர்கள்?
    சிறந்ததெனில் தற்காலத்தில், புதியதாய் ஏன், சோசலிச நாடுகள் தோன்றுவதில்லை!

      • அருமையான கேள்விகள் !!! Cold war என்றொரு டாக்குமென்டரி படம் இருக்கிறது.. 20 பாகங்கள் என் நினைக்கிறேன்.. அமெரிக்க, ரஷ்ய, மற்றும் ஏனைய நாடுகளின் அரசியல் பற்றி உலகப்போர் முதல் இன்று வரை விரிவாகவும், நடுநிலையாகவும் இருக்கும்.. குறிப்பாக பெர்லின் மக்கள் எவ்வாறு மேற்கு ஜெர்மனியைப் பார்த்து ஏங்கினார்கள் என்றும், கிழக்கில் இருந்து மேற்கு ஜெர்மனிக்கு செல்ல அவர்கள் மேற்கொண்ட முறைகளையும் பற்றி விவரித்திருப்பார்கள்..

  24. Main stream media has already a hype that our judicary system is clean and above all, being in a democratic country several time I felt this Judicary system is an autocratic body. In India justice is always delayed and in turn denied.

Leave a Reply to kvsent பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க