privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கஃபியூஸ் போன ரஜினிக்கு மவுசு காட்டும் ஜூ.வி !

ஃபியூஸ் போன ரஜினிக்கு மவுசு காட்டும் ஜூ.வி !

-

ஃபியூஸ் போன ரஜினிக்கு மவுசு காட்டும் ஜூ.வி மாமா!
துக்ளக் சோ – ரஜினி

“கட்டம் கட்டினால் காட்டிக் கொடுப்பார் |விஜயகாந்த் தூதுவர்களை சந்தித்த அழகிரி – ஜெ ஷாக் | கங்கணம் கட்டும் காங்கிரஸ் | சோனியாவின் வருத்தம்-சமாளித்த கலைஞர்-டெல்லி டென்ஷன் | கூட்டணியா-சாதனையா-தி.மு.க எடுக்கும் ரிஸ்க் | கதறடிக்கும் காங்கிரசின் பொலிட்டகல் பிளாக்மெயில் | கூட்டணிக்கு 5 நிபந்த்தனை-தி.மு.க-காங்கிரஸ் உறவு தொடருமா-பரபர திருப்பம் | தோற்றுப்போன சி.டி சதி | நிதானித்த விஜயகாந்த்-படபடத்த ஜெ-விறுவிறு கிளைமாக்ஸ் காட்சிகள் | ஒரு இலை விழுந்தால் இரு இலை துளிர்க்கும்-காங்கிரசின் சூசக தகவல் | துடுக்கு முருகன்-துடிக்கும் கூட்டணி |உடைகிறது தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி-கோபாலபுரம் டூ ஜன்பத் காட்சிகள் | கடைசி அஸ்திரம் கனிமொழி-குலாம் நபி போட்ட குண்டு | கருணாநிதி வைத்த மார்ச் 5 செக் | பணாலான காங்கிரஸ் ப்ளான்-ஆப்பு வைத்த கலைஞர் | ஜெயிக்க நினைக்கிறாரா-சினிமா எடுக்கப் போகிறாரா | கூட்டணியை கரை சேர்த்த சக்திகள் | சீறிய சோனியா-எகிறிய கலைஞர் | அடுத்த பஞ்சாயத்து-தி.மு.கவில் களைகட்டும் பங்கீடு | உறவு பிரிவு-முக்கிய கட்சிகளின் கலக்கல் திருப்பங்கள்……..”

இவையெல்லாம் ஜூனியர் விகடன், நக்கீரன், குமுதம் ரிப்போர்ட்டர் பத்திரிகைகளில் சமீபமாக வெளிவந்த அட்டைப்படக் கட்டுரை தலைப்புகள்!

அரசியல் என்றாலே சாக்கடை என்று சலித்துக் கொண்டு கூண்டுக்கிளி வாழ்க்கையில் காலத்தை ஓட்டும் நடுத்தர வர்க்கத்தை குறிவைத்து வீசப்பட்ட தலைப்புகள்தான் இவை. இந்த தலைப்புகளில் நெளியும் சாரம் என்ன? இவை வாசிப்பவர்களுக்கு தரும் சேதி என்ன?

இவையெல்லாம் ஏதோ தேர்தலுக்காக மட்டும் வைக்கப்பட்ட தலைப்புக்கள் அல்ல. தேர்தல் இல்லாத காலங்களிலும் அரசியல் கட்டுரைகளின் யோக்கியதை இதுதான். அதாவது அரசியல் நிகழ்வுகளைக் கூட ஏதோ திடுக்கிடும் மர்மமான சம்பவங்களைக் கொண்ட விறுவிறுப்பான மசாலா திரைப்படம் போல இவர்கள் பார்க்கிறார்கள், எழுதுகிறார்கள், அப்படி ஒரு இரசனையையும் உருவாக்குகிறார்கள். கூட்டணி கூத்துக்கள், தலைவர்களின் வெற்று சவுடால்கள், கொள்கையே இல்லாத வார்த்தை ஜாலங்கள், தன்மானமே இல்லாத உரிமை போர்கள், சுயமரியாதை அற்ற பட்டங்கள்…இவைதான் அரசியல் என்று நமக்கு ஊட்டப்படுகிறது.

தமிழகத்தின் அரசியல் தரம் மிகவும் தாழ்ந்து கிடப்பதாக புலம்பும் நடுத்தவர்க்கம் படிக்கும், இத்தகைய தலைப்புகளின் தரமே நமது அரசியலின் யோக்கியதைக்கு ஒரு துளிபதம். இதில் இவர்கள் சாதாரண மக்கள் அதாவது இந்த புலனாய்வு புலிகளை படிக்காத பாமரர்கள் காசு வாங்கிக் கொண்டு வாக்களிப்பதாக வேறு சலித்துக் கொள்வார்கள். சரி, இவர்கள் காசு வாங்கிக் கொண்டு படித்துக் களிக்கும் பத்திரிகைகளின் தரத்தை விட அது ஒன்றும் கீழானதில்லையே? துட்டுக்கு ஓட்டு என்பதை விட துட்டுக்கு மூளையை அடகு வைப்பது கேடானதில்லையா?

ரசியல் என்றால் என்ன?

எல்லா தனிமனிதர்களும் சமூகத்தோடு இணைந்து வாழ்வதன் மூலமே உயிர்வாழ முடியும். அந்த ஒப்பந்தத்தை அதிகாரத்தின் மூலம் ஒழுங்குபடுத்துவதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பின் இயலே அரசியல். அந்த அதிகாரம் யாருக்காக, யாரால், யார் மீது ஏவப்படுகிறது என்பதிலிருந்து அந்த அரசியலின் மையமான அரசாங்கத்தின் வர்க்க நோக்கு தீர்மானிக்கப்படுகிறது. அந்த வகையில் நமது நாட்டில் இருக்கும் அரசு என்பது முதலாளிகள், நிலப்பிரபுக்கள், ஏகாதிபத்தியங்கள் நலனுக்காக அதிகாரத்தை நம் மீது ஏவி கட்டுப்படுத்தி வருகிறது. இது குறித்து பிறிதொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம்.

அரசியல் என்பது நம் அன்றாட வாழ்வின் அத்தனை அம்சங்களிலும் ஊடுறுவியிருக்கிறது. வீட்டில் சமையல் அறையிலிருந்து, தெருவிலிருக்கும் ஏ.டிஎம் வரைக்கும் அதுவே அனைத்தையும் தீர்மானிக்கிறது. இத்தனை முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கும் அந்த அரசாங்கத்திற்கான தேர்தலை இப்போது அறிவித்திருக்கிறார்கள். இந்த அரசு எப்படி செயல்படுகிறது, இதன் அதிகாரம் என்ன, அரசை வழிநடத்துவது தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளா, இல்லை அதிகார வர்க்கமா என்பதெல்லாம் உண்மையில் பெரும்பாலான அறிவாளிகளுக்கே தெரியாத ஒன்று.

போகட்டும். இத்தகைய முக்கியத்துவத்தை கொண்டிருக்கும் ஒன்றின் மீதான தேர்தல் என்பது எப்படி புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது?

இந்த அரசு அமைப்பை நாங்கள் போலி ஜனநாயக அமைப்பு என்கிறோம். மற்றவர்கள் இதுதான் சாத்தியமான ஜனநாயகம் என்கிறார்கள். சரி, அவர்கள் வாதப்படி பார்த்தாலே கூட தமிழக சட்டமன்ற தேர்தல் குறித்து பொதுப்புத்தியில் என்ன விதமான செய்திகள், ஆய்வுகள், விவாதங்கள் நடத்தப்பட்டிருக்க வேண்டும்?

பொருளாதாரம், விலைவாசி உயர்வு, கல்வி, மருத்துவம், வேலை வாய்ப்பு, தொழில், மாணவர், இளைஞர், பெண்கள், என்று இந்த பிரச்சினைகளெல்லாம் தற்போது எப்படி இருக்கிறது என்றோ, இது குறித்து ஆட்சியிலிருக்கும் கட்சி என்ன செய்தது, அதை எதிர்க்கும் கட்சிகள் அதற்கு என்ன மாற்று திட்டம் வைத்திருக்கிறது என்றல்லவா இவை பொதுவெளியில் பேசப்பட்டிருக்க வேண்டும்?

ஆனால் பேசப்படுவது என்ன? பொதுக்கூட்ட மேடைகளில், பத்திரிகைகளில், பதிவுலகில் என்ன அலசப்படுகிறது? மேலே கண்ட அந்த திடுக்கிடும் தலைப்புகள்தான் அரசியல் என்றால் நாம் வாழ்வது நிச்சயமாக போலி ஜனநாயக அமைப்பில்தான். அதாவது நமது வாழ்வை தீர்மானிக்கும் அரசியல் குறித்து ஒரு வடிவேலு காமடியை இரசிக்கும் மனநிலையில்தான் நாம் இருக்கிறோம் என்று பொருள். இதுதான் மக்களின் தரம் என்றால் அங்கே நிச்சயம் ஜெயவும், வைகோவும், கருணாநிதியும், கார்த்திக்கும், விஜயகாந்தும்தான் இருப்பார்கள். அவர்களுக்கிடையேயான சுயநல முரண்பாடுகள் மட்டும் அரசியலாக ஆர்வத்துடன் படிக்கப்படும். இறுதியில் மக்கள் சுயவிருப்பத்தோடு இங்கே அடிமைகளாக மட்டுமே இருக்க முடியும்.

தனால்தான் ஜூனியர் விகடன் சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் ரஜினியை அட்டைப் படத்தில் போட்டுவிட்டு, “ரஜினி – சோ மீட்டிங் ரகசியம், யாருக்கு வாய்ஸ்?” என்று ஒரு தலைப்பை போட்டு வெட்கமே இல்லாமல் விற்கிறது. நாமும் வெட்கம் கெட்டு அதை காசு கொடுத்து படிக்கிறோம்.

அரசியலை ஒரு சினிமா கிசுகிசு போல பார்ப்பதற்கும், இரசிப்பதற்கும் கற்று கொடுத்து அதை ஒரு மலிவான, வெற்றிகரமான பாணியாக மாற்றிய பெருமை ஜூ.விக்கு சேரும். அந்த ராஜபாட்டையில்தான் நக்கீரன் முதல் ஏனைய புலனாய்வு புலிகள் வர்த்தக வெறியுடன் ஓடிக்கொண்டிருக்கின்றன.

ஜூவியின் கழுகுதான் இந்த கிசுகிசு அரசியலின் சீனியர். இன்றும் அந்த கழுகு வாந்தியெடுப்பதைத்தான் படித்த தமிழர்கள் விரும்பிப் படிக்கிறார்கள். இந்த வார ஜூவியை வாங்கி பார்த்தால் அந்த ரஜினி வாய்ஸ் குறித்த செய்தி, மொத்தம் ஒரு பத்துவரிகளுக்குள் இருக்கும்.

அ.தி.மு.க கூட்டணியில் ஏகப்பட்ட சினிமா நட்சத்திரங்கள் இருப்பதால் ரஜினியை தி.மு.க கூட்டணிக்கு ஆதரவாக நாலு வார்த்தை பேசவைத்து அதை அவர்களது டி.வியில் போடுவதற்கு கருணாநிதி மூலம் முயன்றார்களாம். இது போயஸ் தோட்டத்திற்கு லீக்காகி அம்மா உடனே சோ ராமசாமியைக் கூப்பிட்டு, “ரஜினி பெண்ணு திருமணத்துக்கு போகலேன்னு எம்மேல வருத்தமா இருப்பாரு, அதை வைச்சு கருணாநிதி நமக்கு எதிரா அவரை யூஸ் பண்ண பாக்குறாரு, நீங்க உடனே போய் சந்திச்சு நமக்கு சாதகமா மாத்திடுங்க”ன்னு சொன்னராம். உடனே சோவும் ரஜினியை சந்திச்சாராம். ரஜினியும் இரு அணிக்கும் வாய்ஸ் கொடுக்க முடியாது, இரண்டு பேர் மேலயும் வருத்தங்கள் இருப்பதாக சொன்னாராம். இதுதான் மேட்டர். இது ஜூவியில் மட்டுமல்ல தினமலர் உள்ளிட்ட அ.தி.மு.க அணி ஆதரவு நாளிதழ்கள் எல்லாவற்றிலும் சுவரொட்டி செய்தியாகவே வெளிந்தது.

இந்த சந்திப்பெல்லாம் வரலாற்று புகழ் மிக்க சந்திப்பு என்றால் வரலாறு செய்த தவறுதான் என்ன?

அரசியலை பெருந்திரளான மக்கள் திரளின் நடவடிக்கையாக காட்டாமல் ஒரு சில தலைவர்களது விருப்பு வெறுப்போடு மட்டும் காட்டுவது எதைக் குறிக்கிறது? நாமெல்லாம் படித்தவர்களோ இல்லை படிக்காதவர்களோ யாராக இருந்தாலும் வெறும் அடிமைகளே என்பதுதான் இதன் உட்கிடை. இந்த செய்தி உண்மையாகவே இருக்கட்டும். இதில் கோடிக்கணக்கான தமிழ் மக்கள் கலந்து கொள்ளப்போகும் தேர்தலுக்கு என்ன முக்கியத்துவம் இருக்க முடியும்?

ரஜினி நினைத்தால் யாருக்காவது வாய்ஸ் கொடுத்து ஜெயிக்க வைக்க முடியும் என்பது ஒரு வாதத்துக்காக உண்மையாக இருக்கட்டும். எனில் அது குறித்து மக்களுக்கு இடித்துரைக்க வேண்டுமா, இல்லை அதை தேவவாக்காக பரப்ப வேண்டுமா? ரஜினி வாய்ஸ் கொடுப்பதை அவரது சொந்த விருப்பங்களே தெரிவு செய்யும் எனில் தமிழக மக்களெல்லாம் இளித்த வாயர்களா? நமது தலையெழுத்தை இந்த கட்டவுட் நாயகன்தான் தீர்மானிப்பான் என்றால் நாமெல்லாம் ஆறறிவு படைத்த மனிதர்கள் என்று உயிர்வாழ்வது தகுமா?

தமிழக மக்களுக்கு இருக்கும் சினிமா மோகத்தை வைத்து நட்சத்திரங்களை அரசியலுக்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஊடகங்களும் அதை ஊதி வளர்க்கின்றன. உண்மையில் இத்தகைய சினிமா நட்சத்திரங்களை மக்கள் அப்படியே ஏற்றுக்கொள்கிறார்களா என்ன? அப்படி அவர்கள் ஏற்றுக் கொள்வதாக இருந்தால் அது குறித்த விமரிசன விழிப்புணர்வையல்லவா ஊடகங்கள் எனப்படும் ஜனநாயகத் தூண்கள் செய்திருக்க வேண்டும்? மாறாக இவர்களே அந்த மோடிமஸ்தான் வேலையை காசுக்காகவும், மலிவான சர்குலேஷன் அதிகரிப்புக்காகவும் செய்கிறார்கள் என்றால் இவர்களை விபச்சாரத் மாமாக்கள் என்றே அழைக்க முடியும். நமது தேர்தல் குறித்த செய்திகளை இத்தகைய மாமாக்கள்தான் படிக்கத் தருகிறார்கள், நாமும் அதை விரும்பி படிக்கிறோம் என்றால் தமிழகத்தை ஒரு விபச்சார தேசம் என்றே அழைக்கலாமே?

1996-ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க படுதொல்வியுற்று, தி.மு.க பெரு வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் ரஜினி, ” அ.தி.மு.கவுக்கு ஓட்டு போட்டா தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது” என்று தி.மு.கவிற்கு ஆதரவாக இரண்டு வார்த்தை பேசினார். உடனே தமிழக மக்கள் ஜெயாவை தூக்கி கிடாசிவிட்டு கருணாநிதியை ஆட்சியில் அமர்த்தினார்கள் என்று பல அறிவாளிகளும், ஊடகங்களும் ஒரு பொய்யை வரலாற்றில் பதிந்திருப்பதோடு அவ்வப்போது அதை நினைவுபடுத்தவும் செய்கிறார்கள்.

நடந்த உண்மை என்ன? அந்த தேர்தலுக்கு முன் தமிழகத்தை ஐந்தாண்டுகள் ஆட்சி செய்த ஜெயா-சசி கும்பல் பாசிச வெறியாட்டம் போட்டதோடு, முழு தமிழகத்தையும் மொட்டை போட்டது. ஊழல், சொத்து சேர்ப்பு, அதிகார ஆணவம், ஈழம் மற்றும் தமிழின ஆதரவாளர்கள் மீது அடக்குமுறை என்று சர்வாதிகாரத்தில் பீடை நடை போட்டது. இதனால் நேரடியாகவும், மறைமுகமாகவும் முழு தமிழ்நாட்டு மக்களும் பாதிக்கப்பட்டார்கள். அதனாலேயே அவர்களுக்கு யாரும் எடுத்துக் கொடுக்க தேவையில்லாமல் ஜெயா கும்பல் மீது கடும் வெறுப்பு இருந்தது.

அந்த தேர்தலுக்காக கிராமங்களுக்கு சென்ற அ.தி.மு.க அமைச்சர்கள் பலர் செருப்படி பட்டனர். இந்த ஜெயா எதிர்ப்பு அலை காரணமாகவே தி.மு.க வெற்றி பெற்றது. ஒரு வேளை இந்த சூப்பர் ஸ்டார் அன்று அ.தி.மு.கவிற்கு ஆதரவாக வாய்ஸ் கொடுத்திருந்தால் என்ன நடந்திருக்கும்? பிஞ்ச வெளக்குமாறால் அபிஷேகம்தான் கிடைத்திருக்கும். அன்று ஜெயாவை எதிர்த்து விரட்டுவது மக்களின் சொந்தப் பிரச்சினையாக இருக்கும் போது பவர் ஷூ போட்டு பால் கறப்பதாக நடிக்கும் இந்த கோமாளியா அதை தீர்மானிக்க முடியும்?

ஜெயா முதலமைச்சராக காரில் வரும்போது இந்த ரஜினி ஏதோ ஒரு சாலையில் காத்திருந்திருக்கிறார். இரண்டாவதாக பம்பொய் படமெடுத்த பிறகு மணிரத்தினத்தின் வீட்டுக் காம்பவுண்டில் யாரோ சிலர் வெடிக்காத வெங்காய வெடிகளை வீசினார்கள். இது இரண்டும் சூப்பர் ஸ்டாரின் மனதை பாதித்திதாம். பாட்ஷா திரைப்பட வெற்றி விழாவில் அதை அவர் ஏதோ முடிந்த வரை இதை புலம்பியவாறு வெளியிட்டார். இதுதான் இந்த வாய்ஸ் வாந்தியெடுக்கப்பட்ட வரலாறு.

அன்று தா.மா.காவையும் தி.மு.கவையும் இணைப்பதற்கு இந்த சோ ராமசாமி பாடுபட்டாராம். யார் இந்த சோ? தமிழகத்தின் நீரா ராடியா. ராடியாவுக்கு நீண்டமுடி இருக்கும். சோவுக்கு மொட்டை தலை. ராடியா முதலாளிகளுக்கான புரோக்கர் என்றால் சோ பார்ப்பனியத்துக்கு குறிப்பாக பா.ஜ.கவுக்கும், அ.தி.மு.கவிற்கும் புரோக்கர். தமிழகத்தின் பல தேர்தல் தலைவிதிகளை அதாவது அதற்கு காரணமான கூட்டணிகளை இந்த மொட்டைபாஸ்தான் தீர்மானிப்பார் என்று பலர் நம்புகிறார்கள்.

பார்ப்பனியத்துக்கு ஓரளவு ஆப்பு வைத்த திராவிட இயக்கத்தின் மேல் ஜென்ம விரோத பகையுடன் இருக்கும் சோ, பார்ப்பனர்கள், பிராமண சங்கம் சார்பாக தி.மு.கவிற்கு எதிராக எல்லா அரசியல் தரகு வேலைகளையும் பார்ப்பார். இப்படி மேல்மட்ட மனிதர்களின் அரசியல் நடவடிக்கைகள் மூலம் மக்களது தலைவிதியை தீர்மானிக்க விரும்பும் இந்த நரியை விமரிசித்து துரத்துவதற்கு பதில் ஊடகங்கள் சாணக்கியர் என்று கொண்டாடுகின்றன. காரணம் அந்த ஊடகங்களில் பெரும்பான்மையானவை பார்ப்பன ஊடகங்களாக இருப்பதுதான்.

மக்கள் தமது சொந்த உணர்வின் காரணமாக கருணாநிதியை எதிர்ப்பது ஆரோக்கியமானதா, இல்லை இந்த மொட்டை பாஸ் புரோக்கரது லாபி வேலை காரணமாக எதிர்ப்பது போல சித்தரிப்பது ஆரோக்கியமானதா? முதலாளிகளுக்கு ஆதரவாக யாரெல்லாம் அமைச்சர்கள் என்று நீரா ராடியா தீர்மானிப்பதற்கும், பார்ப்பனியத்துக்கு ஆதரவான கூட்டணியை இவர் தீர்மானிக்கிறார் என்பதற்கும் என்ன வேறுபாடு?

கருணாநிதியின் கார்ப்பரேட் குடும்ப ஆதிக்கத்தை வீழ்த்துவதற்கான கூட்டணி மாமா வேலைகளை இந்த மொட்டைப் பார்ப்பான்தான் செய்து முடித்தான் என்றால் இதை விட தமிழக மக்களை இழிவு செய்ய முடியுமா? ஆனால் ஊடகங்கள் அப்படி இழிவு செய்வதை தொடர்ந்து செய்கிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக ஸ்ரீரங்கத்து பாப்பாத்தியான ஜெயாவின் ராஜகுருவாக இந்த மைலாப்பூர் பாப்பான்தான் இருக்கிறார் என்பது அ.தி.மு.கவின் யோக்கியதையை பறை சாற்றுகிறது. அந்த வகையில் கருப்பு எம்.ஜி.ஆர் கூட இன்று போயஸ் தோட்டத்தில் சரணடைந்திருப்பது துக்ளக் ஆண்டுவிழாவிலேயே பேசப்பட்டது.

தமிழகத்தின் பெரும்பான்மை மக்கள் துக்ளக் சோவின் நடவடிக்கைகளை அறியாதவர்கள், ஏற்காதவர்கள். அமெரிக்கா போக முடியாத தமிழ்நாட்டு பார்ப்பனர்களும், அமெரிக்கா சென்றும் பார்ப்பனியத்தை தலைமுழுகாத தமிழ்நாட்டு பார்ப்பனர்களும்தான் சோவை தமது அரசியல் ஆசானாக கருதுகிறார்கள். இப்படி இந்த பார்ப்பன குரு தமிழக சட்டமன்ற தேர்தலில் சகுணியாட்டம் ஆடுவது நமது இழிவான அரசியல் யதார்த்தம்.

தனது படங்களுக்கான டிக்கெட்டுகள் பிளாக்கில் விற்பனை செய்யப்படுவதன் மூலமே கோடிஸ்வரரான ரஜினி எனும் நடிகனுக்கு, தமிழக மக்களின் தலைவிதியை நிர்ணயிக்கும் தேர்தல் குறித்து பேசுவதற்கு கூட தகுதி இல்லை. அடுத்த படத்தில் அண்டார்டிகாவில் ஏதோ இந்தி நடிகையுடன் கையைக் காலை அசைத்து ஆடப்போகிற இந்த சுயநலவாதிக்கு ஏதோ பெரும் வாய்ஸ் இருப்பதாகவும், அதை கண்டு தமிழகமே அஞ்சி நடுங்குவதாகவும் ஜூ.வி ஒரு தேர்ந்த மாமா போல சித்தரிப்பது பச்சையான அயோக்கியத்தனம்.

சொல்லப்போனால் ரஜினிக்கு இப்படி ஒரு வாய்ஸ் பவர் இருப்பதாகவும், அதனால் அவர் கட்சி ஆரம்பித்து தமிழகத்தை காப்பாற்ற வேண்டும் என்ற கதையை உருவாக்கி வெளியிட்டு இன்று வரை அது வரலாற்றில் இடம்பெற்றிருப்பதற்கு காரணமே துக்ளக் சோதான்.

பொது அரங்கில் இத்தகைய சகுணிகளும், வாய்ஸ் ஸ்டார்களும் என்று தூக்கியெறியப்படுகிறார்களோ அன்றுதான் தமிழகம் ஆரோக்கியமான அரசியல் பாதையில் அடியெடுத்து வைக்க முடியும். கருணாநிதி, ஜெயா போன்ற கார்ப்பரேட் கம்பெனிகளையும் வீழ்த்த முடியும். இல்லையேல் நமது தலையெழுத்தை ரஜினி, சோ போன்ற பாசிசக் கோமாளிகள்தான் தீர்மானிக்கப் போவதாக நம்மை மாற்றிவிடுவார்கள். அதை அடிமைத்தனம் என்றும் அழைக்கலாம்.

______________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

 1. ஃபியூஸ் போன ரஜினிக்கு மவுசு காட்டும் ஜூ.வி…

  தனது படங்களுக்கான டிக்கெட்டுகள் பிளாக்கில் விற்பனை செய்யப்படுவதன் மூலமே கோடிஸ்வரரான ரஜினிக்கு, தமிழக மக்களின் தலைவிதியை நிர்ணயிக்கும் தேர்தல் குறித்து பேசுவதற்கு கூட தகுதி இல்லை….

 2. ரஜினி விஷயத்தை டைட்டிலாக்கி, முதல் சில பாராக்களில் உங்க வழக்கமான வாந்தியை எதுக்கு பந்தியில் வைக்கிறீங்க பாஸ்?! அதையெல்லாம் கொஞ்சம் கழட்டிவிட்டுட்டு மேட்டருககு வாங்களேன்

  • வாந்தின்னு தெரியுதுல்ல, அப்புறம் ஏன் நக்கிப் பாத்துட்டு நல்லா இல்லைன்னு ஒப்பாரி வைக்கிற. கெளம்பு காத்து வரட்டும்.

  • these media people want rajini always (including vinavu), then only they can survive…

   Puse pona bulbaa…rajiniya…dai vinavu thambi…overaa peasatha….avara vimarsikka u r not eligible…

   But u can earn by writing bad about him

   • ரஜினியை பற்றி கேவலமாக எழுதுவது நாளை நடக்கபோகும் புர்ர்ச்சிக்கு ரொம்ப முக்கியம் தோழர் ரவி அவர்களே …… அதனால் தான் எழுதி இருக்கிறார்

   • அடபாவி மக்கா…!!! ரஜினியை விமர்சிப்பது விளம்பரத்திற்காக என்று சொல்லி ரஜினியை விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவராக மாற்றி நிறுத்தும் அளவிற்க்கு உங்களை மூளை மழுங்கச்செய்த ஊடகங்களை அல்லவா இக்கட்டுரை விமர்சித்திருக்கிறது. நான் படித்தேன் அதனால் இன்ஜினியர், அவன் கஷ்டப்பட்டு படித்தான் அதனால் அவன் டாக்டர், ஊழல் செய்தாலும் அரசியல் கற்ற காரணத்தினால் கருணாநிதி ஒரு அரசியல்வாதி என்று சொல்வதில் ஒரு அர்த்தம் இருக்கிறது ஆனால் உலக அழகியின் இடையை பிடித்து ஆடிய ஒரே தகுதிiயை கொண்ட ஒருவரை தமிழ்நாட்டின் அரசியல் விதியை மாற்றி எழுதும் சக்திகொண்ட மா மனிதராக சித்தரித்து உங்களை கேவலப்படுத்துவது ஏன் உங்களுக்கு புரியவில்லை.

    Try to understand that deciding authority as to who will ruin the government sorry run the government of Tamil Nadu belongs to the voters, people of Tamil Nadu not only rajini and tukluck sho, but medias are propagating as if these two jokers alone can do that.

 3. சோ வைப் பற்றி நீங்கள் எழுதியிருப்பது வரிக்கு,வரி உண்மை.ஆனால் ரஜினி அப்படி அல்ல ஒரு நடிகர் என்பதற்கு மேல்.பொதுவான மனிதராக தமிழக மக்களால் கருதப்படுபவர்.அவரின் கருத்துகளும் மக்களால் பரிசீலிக்கப்படுகிறது,அப்படியே ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை,சரியான கருத்து என்றால் ஏற்றுகொள்கிரார்கள் தவறு என்றால் ஒதுக்கிவிடுகிரர்கள்.

 4. நடிகர்கள் மக்களுக்கு செய்த தியாகம் என்ன? நடிகைகளிடம் கட்டி புரண்டு இருதததை தவிர. ஒரு சவர, தெரு கூட்டும், விவசாய, மற்றும் பல தொழில் செய்வோர் அடுத்த மக்களுக்கு ஒரு பயனுள்ள வகையில் வாழ்கின்றனர். இவர்கள் செய்வது ‘கலை சேவை’ என்றாலும் இதற்கு ஏன் இவ்வளவு பரபரப்பு?
  இவர்களால் மக்களுக்கு என்ன பயன்? துளி உழைப்போ, வெயிலோ படாத இவர்கள் மற்றவர்களை எய்து அதிகாரம் பெற எது வேண்டுமானாலும் செய்வார்களாம்.
  மக்களுக்கு உண்மை நிலை புரிந்தால் இப்படி நடக்காது.

 5. நாலு நடிகர்களை (விஜய காந்த், விஜய், கார்த்திக், சரத் ) அ.தி.மு.க. வில் புகுத்தி தேர்தலுக்கு பிறகு கட்சியை குழப்பி காங்கிரசுடன் சேர்ந்து ஆட்சியை பிடிக்க திட்டம் தீட்டியிருந்த கேடி சகோதரர்களின் திட்டம் “பணால்”.

  Now last attempt? rajini????

  • நல்ல கற்ப்பனை சக்தி,உங்களுக்கு.நல்லதா ஒரு கதை ரெடி பண்ணி அந்த சகோதரர் களிடம் போங்கள்.யார் கண்டது,எந்திரன்2 இயக்கும் வாய்ப்பேக்கூட உங்களுக்கு கிடைக்கலாம்.

 6. தனது படங்களுக்கான டிக்கெட்டுகள் பிளாக்கில் விற்பனை செய்யப்படுவதன் மூலமே கோடிஸ்வரரான ரஜினி எனும் நடிகனுக்கு, தமிழக மக்களின் தலைவிதியை நிர்ணயிக்கும் தேர்தல் குறித்து பேசுவதற்கு கூட தகுதி இல்லை. அடுத்த படத்தில் அண்டார்டிகாவில் ஏதோ இந்தி நடிகையுடன் கையைக் காலை அசைத்து ஆடப்போகிற இந்த சுயநலவாதிக்கு ஏதோ பெரும் வாய்ஸ் இருப்பதாகவும், அதை கண்டு தமிழகமே அஞ்சி நடுங்குவதாகவும் ஜூ.வி ஒரு தேர்ந்த மாமா போல சித்தரிப்பது பச்சையான அயோக்கியத்தனம்.

  U r talking too much…ACTING is his business and he is still NO 1 in that…every Indian is having rights to speck about election. You (VINAVU) is vomiting about politicians and RAJINI, then he is also having rights to speck about election, and he is having mass followers. I don’t know how many people are following this site (including me) If he does his business (dancing with heroine), is he a selfish? Stupid debate…Then u r hurting everyone in ur site, Is it a good business? Dai in the name of MURPOKKU u r only hurting HINDUS only…

 7. //*தமிழக மக்களுக்கு இருக்கும் சினிமா மோகத்தை வைத்து நட்சத்திரங்களை அரசியலுக்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஊடகங்களும் அதை ஊதி வளர்க்கின்றன. உண்மையில் இத்தகைய சினிமா நட்சத்திரங்களை மக்கள் அப்படியே ஏற்றுக்கொள்கிறார்களா என்ன? அப்படி அவர்கள் ஏற்றுக் கொள்வதாக இருந்தால் அது குறித்த விமரிசன விழிப்புணர்வையல்லவா ஊடகங்கள் எனப்படும் ஜனநாயகத் தூண்கள் செய்திருக்க வேண்டும்? மாறாக இவர்களே அந்த மோடிமஸ்தான் வேலையை காசுக்காகவும், மலிவான சர்குலேஷன் அதிகரிப்புக்காகவும் செய்கிறார்கள் என்றால் இவர்களை விபச்சாரத் மாமாக்கள் என்றே அழைக்க முடியும். நமது தேர்தல் குறித்த செய்திகளை இத்தகைய மாமாக்கள்தான் படிக்கத் தருகிறார்கள், நாமும் அதை விரும்பி படிக்கிறோம் என்றால் தமிழகத்தை ஒரு விபச்சார தேசம் என்றே அழைக்கலாமே?*//

  மிகச்சரியான கருத்து…………………….

  //*பார்ப்பனியத்துக்கு ஓரளவு ஆப்பு வைத்த திராவிட இயக்கத்தின் மேல் ஜென்ம விரோத பகையுடன் இருக்கும் சோ, பார்ப்பனர்கள், பிராமண சங்கம் சார்பாக தி.மு.கவிற்கு எதிராக எல்லா அரசியல் தரகு வேலைகளையும் பார்ப்பார். இப்படி மேல்மட்ட மனிதர்களின் அரசியல் நடவடிக்கைகள் மூலம் மக்களது தலைவிதியை தீர்மானிக்க விரும்பும் இந்த நரியை விமரிசித்து துரத்துவதற்கு பதில் ஊடகங்கள் சாணக்கியர் என்று கொண்டாடுகின்றன. காரணம் அந்த ஊடகங்களில் பெரும்பான்மையானவை பார்ப்பன ஊடகங்களாக இருப்பதுதான்.*//

  அத்தனையும் உண்மை………………

  இந்தக் கட்டுரையின் பல இடங்களில் ‘பார்பனன்’ என்கிற சொல் வருகிறது. கட்டுரையின் நோக்கமும் கருத்தும் ஒருபக்கம் இருந்தாலும் இந்த ஒரு சொல்லுக்கு எதிர்ப்பு தெரிவிக்க மட்டுமே ஒரு கூட்டம் வந்து பின்னூட்டமிட்டு கட்டுரையின் நோக்கத்தையே மாற்றிவிடும்………………..
  வாருங்கள் கிராசுபெல்டுகளே அணிதிரள்வீர்………………………………………

 8. உங்களுக்கே ரஜினியின் மவுசு தேவப்படுதே அப்படி தேவையில்லையென்றால் ரஜினி என்பதற்க்கு பதில் நடிகன் என போடவும் நீங்கள் போடமாட்டீர்கள் ஏன் என்றால் உங்களுடையது வெறும் வயிற்றெரிச்சல் கூச்சல் கூப்பாடுதானே

 9. ரஜனி படம் நடிப்பதும், பணம் சம்பாதிப்பது அவரது சொந்த விடயம். அதேபோல் தேர்தல் தொடர்பாக கருத்து கூறுவது அவரது தனிப்பட்ட விடயமே. ஆனால் ரஜினியை விமர்சிப்பது விளம்பரத்திற்காக என்று சொல்லி ரஜினியை விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவராக மாற்றி நிறுத்துவது ஏற்க முடியாத விடயம். (ஜேசு முதல் காந்தி வரை அனைவரும் இப்போது விமர்சனத்திற்கு உள்ளான வேளை ரஜனி எம்மாத்திரம்)

 10. ரஜனி படம் நடிப்பதும், பணம் சம்பாதிப்பது அவரது சொந்த விடயம். அதேபோல் தேர்தல் தொடர்பாக கருத்து கூறுவது அவரது தனிப்பட்ட விடயமே. ஆனால் ரஜினியை விமர்சிப்பது விளம்பரத்திற்காக என்று சொல்லி ரஜினியை விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவராக மாற்றி நிறுத்துவது ஏற்க முடியாத விடயம். (ஜேசு முதல் காந்தி வரை அனைவரும் இப்போது விமர்சனத்திற்கு உள்ளான வேளை ரஜனி எம்மாத்திரம்)

  (தமிழ் நாட்டில் முட்டாள்கள் இருப்பதால் தான்) தெளிவான கருத்தோ, சிந்தனையோ இல்லாத ரஜனியின் கருத்தை செவிமடுக்கவேனும் ஒரு கும்பல் இருக்கிறது. சூழ்நிலைக்கு தகுந்தபடி தனது கருத்துகளை மாற்றி கூறிவரும் பச்சோந்திதான் ரஜனி. முதல் நாள் கர்நாடகாவை கண்டிப்பார் அடுத்தநாள் கர்நாடகா சென்று தான் அப்படி கதைக்கவில்லை என பல்டி அடிப்பார். அவர் ராட்சசி என வர்ணித்த ஜெயலலிதாதான் சில நாட்களின் பின் அவருக்கு ஆதி பராசக்தியாக அருள் புரிந்தார்.
  மும்பையிலும் இந்தியாவில் பல இடங்களில் கலவரத்தை தூண்டி பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களின் சாவிற்கு காரணமான அத்வானியையும் பால் தாக்ரீயையும் தனது கடவுள் என புலம்பும் இவருக்கு பல முஸ்லிம் வாலிபர்கள் ரசிகர்கள் என்ற பெயரில் காவடி எடுப்பது சோகமான விடயம்.

  • //பல முஸ்லிம் வாலிபர்கள் ரசிகர்கள் என்ற பெயரில் காவடி எடுப்பது சோகமான விடயம்//

   ஓ…. ஒன் பிரச்சினை இதுதானா !!! 😉

   • இந்தியாவின் தவப் புதல்வர்களில் ஒருவர் ரஜினி! – இல கணேசன்

    தமிழர்களைக் கொன்ற ராஜபட்சேவுக்கான ஆதரவு பற்றி.
    சோ: அவர் அடக்கியது புலிகளை. புலிகள் மட்டுமே தமிழர்கள் என்று இருப்பதாலேயே இக்கேள்வி வருகிறது. அவர் புலிகளை ஒடுக்கியது பெரிய விஷயம். இப்போது கேம்புகளில் இருக்கும் தமிழருக்கு மறுவாழ்வு அளிக்கும் திட்டம் நடந்து வருகிறது. ஆனால் புலிகளை இங்கும் வடிக்கட்ட வேண்டியிருக்கிறது.

 11. தாங்களும் இதற்கெல்லாம் முக்கியத்துவம் கொடுத்து எழுதாமல் விட்டால் நீங்கள் நல்லவர்.
  இந்த நாய்களைப் பற்றி எழுதாமல் இந்த அரசியல் சூழ்நிலையில் மக்கள் என்ன முடிவெடுக்க வேண்டும் என்பதற்கான தீர்வுக்கு அழுத்தம் கொடுத்து அதை மட்டுமே எழுதுங்கள்.
  ஏனென்றால் நீங்கள் எழுதும் விஷயங்கள் எல்லாம் நிறைய மக்களால் படிக்கப் ப்படுவதால் கண்ட குப்பை எல்லாம் கிளறாமல் முடிவை நோக்கிய பாதையின் தெளிவு பற்றி எழுதுங்கள்

  • //ONe of the worst articles i ever read……..
   ur views are only against brahmins……..waste of my time//

   ஒன் ஆப் தி பெஸ்ட் ஆர்டிகில் எதுனு சொல்லுங்கண்ணே அத முதல்ல படிக்கனும்…

 12. நல்லா திட்டி இருக்கீங்க (திட்டறதுக்கு வினவுக்கு சொல்லியா தரணும்). கவலைப்படாதிங்க. இனி தமிழ்நாடு திருந்திடும். வினவு இல்லேன்னா தமிழ்நாடு கெட்டுகுட்டி சுவரா போயிடாதா.

 13. //ரஜினியை பற்றி கேவலமாக எழுதுவது நாளை நடக்கபோகும் புர்ர்ச்சிக்கு ரொம்ப முக்கியம் தோழர் ரவி அவர்களே …… அதனால் தான் எழுதி இருக்கிறார்//

  சரிங்க மிஸ்டர் அயர்ன் ஸ்கிரீனு.

 14. //பொது அரங்கில் இத்தகைய சகுணிகளும், வாய்ஸ் ஸ்டார்களும் என்று தூக்கியெறியப்படுகிறார்களோ அன்றுதான் தமிழகம் ஆரோக்கியமான அரசியல் பாதையில் அடியெடுத்து வைக்க முடியும். கருணாநிதி, ஜெயா போன்ற கார்ப்பரேட் கம்பெனிகளையும் வீழ்த்த முடியும். இல்லையேல் நமது தலையெழுத்தை ரஜினி, சோ போன்ற பாசிசக் கோமாளிகள்தான் தீர்மானிக்கப் போவதாக நம்மை மாற்றிவிடுவார்கள். அதை அடிமைத்தனம் என்றும் அழைக்கலாம்//

  எத்திக்கலிஸ்டு அவ்ர்கள் மேற்படி கருத்துக்கும் தனது கருத்தை முன் வைக்க வேண்டும்….

 15. ஆனந்த விகடன் பிரதான அரசியலில் பிரமண கொள்கைள் தொடர்ந்து செயலில் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறது. மிக நுட்பமான எதிர்பார்ப்பு அவர்களுக்கு இது தான் மற்றபடி அரசியலில் ரஜினி காமடி பீஸாக மாறி சில வருடங்கள் ஆகிவிட்டது. வினவு.. எதிர் வரப்போகும் தேர்தலில் ஊழலின் வழியே தொப்பையை பெருக்கிக்கொண்டவர்கள் வாக்கு கேட்டு வரப்போகிறார்கள் அதை எழுதுங்கள். plz dont waste your writings….

 16. எதிர் பார்த்தேன். எழுதி விட்டீர்கள். நன்றி!

  “நாமும் வெட்கம் கெட்டு அதை காசு கொடுத்து படிக்கிறோம்.”

  மக்களை வெட்கம் கெட்டவர்கள் என்று விளிப்பது சரிதானா? பரிசீலிக்கவும்.

 17. மூன்று வித கூட்டம் ஆஜர்.
  1.கட் அவுட் நாயகனின் காலை நக்க துடிக்கும்,மூத்திரத்தை அண்டாவில் வைத்தால் மொண்டு குடிக்க தயாராக இருக்கும் முண்டகலப்பைகள்.
  2.மொட்ட பாப்பானுக்கு ரிவிட் அடித்ததால் வெறி கொண்ட அம்பிகள் கூட்டம்.
  3.வினவின் நிரந்தர ரசிக குஞ்சாமணிகள்.

 18. oru andapulugan[ ju.v],oru loosu paya[ rasini] oru muttakkannu motta paappaan [cho] tamil naattula tamilana andi polachi tamilanukke vettu vaikkira evanungalukku sariyaana aappu..hukkum!

 19. The article is good but targeting particular persons and making them big is not good. From my point of view, the title should be in common not pointing out particular person…..Its better all people should see Rajni as an artist and dont see him as political leader, only his fans making such big issues. It seems that Rajini too dont like to enter into the politics thats why for the past 2 election he didnt speak………….so rajini was fused long time before not now when he was put down against PMK.

  “தேர்தலுக்காக கிராமங்களுக்கு சென்ற அ.தி.மு.க அமைச்சர்கள் பலர் செருப்படி பட்டனர். இந்த ஜெயா எதிர்ப்பு அலை காரணமாகவே தி.மு.க வெற்றி பெற்றது. ஒரு வேளை இந்த சூப்பர் ஸ்டார் அன்று அ.தி.மு.கவிற்கு ஆதரவாக வாய்ஸ் கொடுத்திருந்தால் என்ன நடந்திருக்கும்? பிஞ்ச வெளக்குமாறால் அபிஷேகம்தான் கிடைத்திருக்கும்”.

  ithai yaar kuurinaalum “பிஞ்ச வெளக்குமாறால் அபிஷேகம்தான் கிடைத்திருக்கும்”.

  தனது படங்களுக்கான டிக்கெட்டுகள் பிளாக்கில் விற்பனை செய்யப்படுவதன் மூலமே கோடிஸ்வரரான ரஜினி எனும் நடிகனுக்கு, தமிழக மக்களின் தலைவிதியை நிர்ணயிக்கும் தேர்தல் குறித்து பேசுவதற்கு கூட தகுதி இல்லை. அடுத்த படத்தில் அண்டார்டிகாவில் ஏதோ இந்தி நடிகையுடன் கையைக் காலை அசைத்து ஆடப்போகிற இந்த சுயநலவாதிக்கு ஏதோ பெரும் வாய்ஸ் இருப்பதாகவும்
  What about MGR? why MGR started new ADMK?
  Anna used MGR and Karunanithi for him against Kamarajar, then latter MGR started ADMK and Karunanidi DMK. DMK illtreated JAYA. Then JAYA become chief-Minister. So overall only 2 political parties are ruling alternatively…………..DMK followed by ADMK and vice versa…..for long time. In past years, Everyone gave money for vote but nowadays useless election promises become money for vote. People should wake up and dont vote for any political parties. Let allow the govt get stunned and try to show that we dont like any govt (DMK, ADMK, Congress….)…..

  If no one like this govt then how DMK or ADMK or other parties are winning? people should get united…………….

 20. What most of the people are thinking about Rajni and JuVi is well projected. Sometimes JuVi projects the tinsel clown as a ‘Saint’ assigning a meaning for his blinks and moves. Swirl your stick more and make the people understand that these are the worst ‘viruses’ affecting our peaceful life.

 21. அவசியமான கருத்துக்களை உணர்ச்சிப்பூர்வமாக எடுத்துரைக்கும் பதிவு. ரஜினி குறித்த ஜூ.வி செய்தியை மட்டும் மையப்படுத்தியிருக்க வேண்டியதில்லை. மாறாக, அரசியல், தேர்தல் குறித்த புரிதல்களை உரசி இன்னும் விரிந்திருக்கலாம்.

 22. By using Rajni’s Name Vinavu also doing same cheep publicity for HITS. Rajni Cho va meet panavee kudathaa? illa avar nanbargal kuda Arasiyal pathi pesavee kudathaa? Avar voice kudukiren.. atharavu tharugireennu kilambunaa.. neenga vimarshanam panrathu niyam.summa santhipukuee yen ungalluku evluvuu GAANDU? Rendu bottle Gelusil vangi kudichitu poi election seat ku amma kita pichai edukum communistkala pathi ezuthunga!!!

  • nalla sonenga ….avar voice kudhtaaru …nallatha irundha naanga kettom DMK jeyichutu ….avar adutha election la sonnaru …naanga paguthu arinji senjom …avar sonna alungaa thothaanga…ippa ena adukku …avar sonna seiyarathukku naanga enna adimaigala ….rasiganunga…nee edukku da…vayiru eriyara…ebba …computer athiguthgunu eriyara alavukku …katurai ezhudaran…nee maoodikittu …arivalayam vaasalla …poes gardern vaasalla nikkaranunga paaru avangala thiruthu ….illa nee thirundhu…vayiru eriyatha…balack la vithu kodiswaran ayittaram enna logic …neeyum poi vithtu periya aala ayikka …jeyikiravana paathu edukku vayiru eriyara …ezhthuungara thu nalla vishayam …ungala mathiri blog ezhuduravanga…konjam arokiyamana vishyatha ezhuduneenganna ..ellorukum nallathu …JU vi …10 vari newskku …ivaru 100 vari ezhudaraaru …..appa evlo kaandu paarunga…nalla irunnga …nanbare,….vaazhga valamudan…:D

 23. ஏன் டா நாய்களா, உங்களுக்கெல்லாம் ரஜினி என்னும் சூரியனை பார்த்து குலைப்பதே வேலையபோச்சி.. அசிங்கம இல்ல?
  நீங்க எவளோ குலைச்சலும் எங்க தலைவர அசைக்க முடியாது. எங்க தலைவர எங்ககிட்ட இருந்து எந்த நாயும் பிரிக்க முடியாது.

 24. Dear all,

  One thing everyone should understand, don’t blame brahmins and their philosophy.All cast they have own philosophy and they are following that only.Some cast have own political party and joined during election with these two parties only.Every one spoil the society.But we blame only brahmins.you know why? they are the soft and not like the violence.If anybody comment any other cast,definitely they will not survive and alive.Why parties are going to Mukkulathore jayanthi,if they are common?

  So dont blame only brahmins, and don’t use them as a dies.

  • Definitely, I accept your words…..If vinavu is neutral they should not target the cast……..I hope hereafter they wont use the cast better they can speak the politics in the general manner…………………

   • மிக கேவலமாக அந்த பாப்பான் இந்த பாப்பான் ..என்று வினவு ரசிக குஞ்சாமனிகள் அடிக்கும் கமெண்ட்டுகுகளுக்கு மாடெரேசன் இல்லை என்பதை.. வைத்தே சொல்லி விடலாம்.. இவர்களின் துவேஷத்தை!!!

 25. அரசியல் மாமா (தரகன்) என்று தமிழர்களால் இகழப் படும் பார்ப்பனர் சோ…, பகுதி நேரக் குடிகாரனும், முழுநேர உளறு வாயனுமான கன்னடன் இரசினி எனப்படும் சிவாஜிராவைச் சந்தித்ததில்… தமிழ் நாட்டையே புரட்டிப் போடும் அதிர்வு இருப்பதாக ஆ வி யின் ஜூவி முகப்பிடுகிறதென்றால், அது, கண்டிப்பாக தமிழர்களைக் கேனயன்களாக முடிவு கட்டியதன் வெளிப்பாடுதான். இந்த உளறு வாயனின் வாய்சை… அவர் கட்டவுட்டுக்கு பீர் அபிசேகம் செய்யும் அரைக் கிறுக்குக் கூட்டமே கண்டு கொள்ளாமல் இந்தக் காதில் பெற்று, மறு காதில் வெளியேற்றி விட்டு, சட்டையைக் கிழித்துக் கொள்ளக் கிளம்பி விடுவார்கள்! இதற்கு முந்தைய இந்திய நாடாளுமன்றத் தேர்தலில், இந்த உளறு வாயனின் அதிமுக ஆதரவு வாய்சு அவரின் கிறுக்கு இரசிகனின் மண்டையில் கூட ஏறவில்லை! நாற்பது தொகுதிகளிலும் மண்ணைக் கவ்வியதிலிருந்து தமிழர்கள் இந்த ஆளின் வாய்சை எந்த சாக்கடையில் தூக்கிப் போட்டார்கள் என்பதை புரிந்து கொள்ளலாம்! இவரின் வெத்து வேட்டு வாய்சை, புரட்டிப் போடும் வாய்சாகக் காட்டும் இந்த அயோக்கியத்தனத்தில் ஜுவி யை மட்டும் குற்றம் சொல்ல முடியாதபடிக்கு. சூடு, சுரணை, தன்மானம் இதில் ஒன்றாவது தமிழனுக்கு இருக்க வேண்டுமென்பதற்காக உரிய சரியான கருத்துக்களை முன் வைத்து தோழர்கள் எழுதினால்…. நீ என்ன சொல்வது? நான் என்ன கேட்பது..! என்ற முரட்டுத்தனத்துடன் ஏடாகூடமான பின்னூட்டங்களை வாரியிறைக்கும் நம்மவர்களை பார்த்ததினால் தான் ஜூவி யும் அந்த முடிவுக்கு வந்திருக்குமோ..? காசிமேடு மன்னாரு.

  • அய்யே டோமுரு, அமுக்கிகினு போவியா …. வெத்து வேட்டு வெத்து வேட்டு நு சொல்றியே அப்ரோ இன்னாத்துக்கு தலிவர பத்தி இங்க கூவுறீங்கோ ????? வந்திட்சி பாரு ஏறிகினு

  • ” சூடு, சுரணை, தன்மானம் இதில் ஒன்றாவது தமிழனுக்கு இருக்க வேண்டுமென்பதற்காக உரிய சரியான கருத்துக்களை முன் வைத்து தோழர்கள் எழுதினால்…” முதல்ல.. நீங்கள் நாகரிகமா கருத்து சொல்ல கற்றுகொள்ளுங்கள் அதற்கு பிறகு.. ரஜினிக்கும் சோவுக்கும்.. மற்றவர்களுக்கும் அறிவுரை சொல்லலாம்.

   சோ-வை சோன்னு சொல்லாம பார்பான் சோன்னு சொல்ற உங்கள.. ப………ன்.. காசிமேடு மன்னாருன்னு சொன்னா ஒத்துக்குவிங்களா..?!!

 26. athavthu namma oruthara pathi solrathukku munnala nama yar, nammaloda yoghyathai enna ithellam therindu pinnar pesanum illa eluthanum, summa namakkum kai irukku eluthalam vai irukku pesalamnu ninaikka koodathu. Intha vinavu website ethanai perukku theriyum evanavathu engaiyavathu suthi suthi vantha websitela mattum. ana rajini vanthu tamil nadu muluthum ariappatta oru actor mattum illa, nalla manithar. ithu cinima industry solrathu illa, pothu makkalum parthu therintha visayangal. ennamo tamil nattu makkal ellam arive illatha mutta pasanga mathiriyum vinavu sitela mattumthan arivaligala poranthu appadiye arivuraia alli vidarathu marthiri eluthura. pongada neengalum unga site-m, inniyoda onga siteye padikka koodathunnu mudivu pannittom

 27. “பார்ப்பனியத்துக்கு ஓரளவு ஆப்பு வைத்த திராவிட இயக்கம்”

  எதுல ஆப்புனா.. 1000 கோடி அம்மாவின் ஊழலுக்கு பதிலாக 50000 கோடி விஞ்ஞான பூர்வ ஊழல் வகையில் தானே..ஹிஹிஹி…போங்க தம்பி போங்க..!!

 28. சூடு,சொரனை,வெட்கம்,மானம்,சுயமரியாதையுள்ளமுள்ளவன்
  பாஸ்,.மாமாபயல்களின் பத்திரிக்கையெல்லாம் வாங்கமாட்டேன் பாஸ்
  மொட்டைத்தலையனை(விசப்பிராணி)மாக்களாகத்தான் பாக்குறேன் பாஸ்,வாக்குரிமை பெற்றதலிருந்து,கொள்ளையடிப்பதற்கு யாருக்கும்
  உரிமை தஙததுல்ல பாஸ்,சினிமாவுல வர்ர பொம்பளகள பார்த்துஆசைப்பட்டது.மாதிரி ஆம்பள நடிகன பாத்து ஆசைப்பட்டுசிறுசு,இளசு,பெருசுக மாதிரி புத்திகெட்டு வரிசையில நிக்கல பாஸ்.என்னையும் மொத்த கணக்கில சேத்தீட்டீங்ளே பாஸஇது ஞாயமா, இது அடுக்குமா?ஒரு தாடிக்கார பெருசு தமிழ்நாட்டு மக்கள்மீது அய்யோ,
  பாவம்னு இரக்கப்பட்டதினால.60 வருடபாவம் புடுச்சுஆட்டுதுபாஸ்.
  இன்னும் 60 வருடம் முடியலிங்கபாஸ.ஏகப்பட்ட கண்ட்றாவிங்க(பாவம்) இருக்குங்க.பாஸ். சிறுஎண்ணிக்கையில இருந்தாலும் மொத்த கணக்கில சேக்காதீங்கபாஸ்

 29. பக்திப் பரவசமாய் பழனி சித்தனாதன் விபூதியை மண்டையில் தடவி பொழுதும் சிகரெட் புகைக்கும்
  இமயமலை அடிவருடியை இப்படியா அடிப்பது?

 30. ஃபியூஸ் போன ரஜினிக்கு மவுசு காட்டும் ஜூ.வி…

  ரஜினி RSS காரர்ருன்னு உங்களுக்கு தெரியாதா ?

 31. யாருக்கும் வோட்டு போட விரும்பாதவர்கல் 49 ஓ போட்லாமே!! அதன் மூலம் ஒரு திருப்பத்தை கொன்டு வர முடியாதா? சொல்லுஙகல் தோழர்கலே!!

  • அதனாலே.ஒன்னும் பண்ணமுடியாது. பருப்புகூட வேகாதுன்னா பாத்துகுங்க.

 32. hi vinavu,
  neenga rombha overa pesaringa boss,,ella post lauim neenga edho oru socitya hurt pandringa ,,neenga rajiniya pathi enathan pesinalum avaru super star ngra thu yaralauim oppose pana mudiyathu,,neenga idhe mathri pesuneengana unga followers reduce avanga,,,,then neenga kekreengle donation adhum kuda low agum,,,rajini is a common man but not comedy man,,,,//தனது படங்களுக்கான டிக்கெட்டுகள் பிளாக்கில் விற்பனை செய்யப்படுவதன் மூலமே கோடிஸ்வரரான ரஜினிக்கு, தமிழக மக்களின் தலைவிதியை நிர்ணயிக்கும் தேர்தல் குறித்து பேசுவதற்கு கூட தகுதி இல்லை….// ivaru voice koduthhu than 1996 election DMK win anadhu,,therinchukonga boss,,neenga jayalaltha,,karunanithi,rajini,etc ivanga ellarauim oppose pani write pandringa,,,edhukunu therla,,but ungaluku ivangala kandra poramai,,,,,dash aripum than iruku boss,,,,adha sorinchutu poi velaya parunga,,puthi soldrarama po pa

 33. ” அன்று ஜெயாவை எதிர்த்து விரட்டுவது மக்களின் சொந்தப் பிரச்சினையாக இருக்கும் போது பவர் ஷூ போட்டு பால் கறப்பதாக நடிக்கும் இந்த கோமாளியா அதை தீர்மானிக்க முடியும்? ”

  நல்ல கருத்து மக்கள் திருந்தட்டும்

 34. பெரும்பாலான தமிழக இளைஞ்சர்களை முட்டாள் ஆக்கிய பெருமை இந்த கழிசடையையே சாரும்.

 35. பாவம் அவரை திட்டாதீஙக….அவுக தமிழர் இல்லை..தமிழ் இனத்தின் தலயில்நாளும் மொளகாய் அரைத்து ஏதொ ஒரு வெலை வயித்தை களுவுராரு…அவரைப்போயி……

Leave a Reply to Anonymous பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க