privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காமாடர்ன் ஆர்ட்: சி.ஐ.ஏ ஊட்டி வளர்த்த கலை!

மாடர்ன் ஆர்ட்: சி.ஐ.ஏ ஊட்டி வளர்த்த கலை!

-

மாடர்ன் ஆர்ட்: சி.ஐ.ஏ ஊட்டி வளர்த்த கலை!
ஜாக்சன் போலாக்கின் புகழ் பெற்ற சித்திரம் எண் 8

இது சில வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவம். நண்பர் ஒருவருடன் பெருநகரம் ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஓவியக் கண்காட்சி ஒன்றிற்கு செல்ல நேர்ந்தது. நகரின் மையப்பகுதியில் குளிர்சாதன வசதி செய்யப்பட்ட அரங்கு அது. அங்கே காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தவை மாடர்ன் ஆர்ட் வகைப்பட்ட ஓவியங்கள்.

அரையிருளில் இருந்த அரங்கத்தினுள் நல்ல இடைவெளியில் அழகான சட்டகங்களுக்குள் தனித்தனியாய் ஸ்பாட் லைட்டுகள் வைக்கப்பட்டு ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. ஒவ்வொன்றின் முன்பும் பணக்கார வாசம் வீசும் சிலர் எதையோ தேடுவது போன்ற பாவனையில் முகத்தை வைத்துக் கொண்டு ஓவியங்களை முறைத்துப் பார்த்தவாறே நின்றனர். குறிப்பிட்ட ஒரு ஓவியத்தின் முன் நின்ற சின்னக் கும்பலோடு நானும்  நண்பரும் இணைந்து கொண்டோம்.

அது ஒரு வண்ணக் குழப்பம். சரியாகச் சொல்வதானால், யாரோ ஒரு மார்வாடி  பான்பராக்கை மென்று வெள்ளைத் துணியில் காறித் துப்பியது போல் இருந்தது. நீண்ட நேரம் உற்று உற்றுப் பார்த்த பின்னரும் மார்வாடியின் முகத்தை என் மனத்திரையிலிருந்து அகற்ற முடியவில்லை. அரங்கத்திலோ குண்டூசியைப் போட்டாலும் குண்டு போட்டதைப் போன்ற சப்தம் எழுமளவுக்கு நிசப்தம்.  நான் மெல்ல எச்சிலைக் கூட்டி விழுங்கியபடியே, பக்கத்தில் நின்றவரிடம் “இது எதைப் பற்றிய ஓவியம்?” என்று கேட்டேன்.

மேலிருந்து கீழ் வரை என்னை ஒரு பார்வை பார்த்தவர், முகத்தைச் சுளித்துக் கொண்டே வெடுக்கென்று வேறு பக்கம் திரும்பிக் கொண்டார். அது கேட்கக் கூடாத கேள்வி என்று அப்போது எனக்குப் புரியவில்லை. கேட்கக்கூடாதவரிடம் கேட்டுவிட்டோம் என்று எண்ணிக்கொண்டு, அந்தக் கண்காட்சியின் பொறுப்பாளரைத் தேடிக் கண்டுபிடித்து, அவரிடமும் அதே கேள்வியைக் கேட்டேன்.

அவரோ ஒரு நீண்ட மௌனத்திற்குப் பிறகு, “தனது அர்த்தத்தைத் தானே தீர்மானிக்காமல் பார்க்கும் கண்களே தீர்மானித்துக் கொள்ளும் உரிமையை இந்த ஓவியங்கள் வழங்குகின்றன. ஒரு ஓவியம் எவ்வாறு தன்னை ஒழுங்கமைத்துக் கொள்வது என்பதைத் தீர்மானிக்கும் உரிமை அந்த ஓவியத்துக்கே உரியது. தனக்கான மொழியை அது தானே தீர்மானித்துக் கொள்ளும்” என்றார். “அதே நேரம் ஓவியத்தைப் பார்க்கிறவரின் உரிமையிலும் அது தலையிடாது. பார்வையாளரின் உள்மன ஒளியில் இந்த ஓவியம் ஏற்படுத்தும் பிம்பங்கள் உண்டாக்கும் அர்த்தங்ளை அவரவர் விருப்பத்திற்கு விளங்கிக் கொள்ளலாம் என்றும் இவை ஒரு பயன்பாட்டையோ அர்த்தத்தையோ முன்வைத்து வரையப்பட்டிருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதெல்லாம் ஓவியரின் மேல் திணிக்கும் சர்வாதிகாரமாகும்” என்று ஆரம்பித்து பேசிக்கொண்டே போனார்.

அன்று அவர் வாயிலிருந்து வழிந்தவையென்னவோ ’தமிழ்’ வார்த்தைகள் தான்; ஆனால் எனக்கோ பண்டைய அராமிக் பாஷையில் யாரோ என்னோடு பேசியது போன்றதொரு உணர்வு எற்பட்டது. சொற்களால் அவர் தீட்டிய சித்திரமும் கிட்டத்தட்ட அந்த பான்பராக் ஓவியத்தையே ஒத்திருந்ததால், மெதுவாக அந்த அரங்கிலிருந்து நழுவிவிட்டேன்.

அன்றைக்கு ஓவியத்தை முன்வைத்து அவர் பேசிய அதே கருத்துகளை, கவிதை, சிறுகதை, நாவல் உள்ளிட்ட பல்வேறு இலக்கிய வடிவங்களை முன்வைத்தும் பலர் பேசுவதையும், ‘கலை கலைக்காகவே‘ என்ற கருத்து சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கேற்ப வித விதமான உருவங்களில் உலவுவதையும் பின்னாளில் கவனிக்க முடிந்திருக்கிறது.

ஒரு கதை, கவிதை அல்லது ஓவியத்தை கலைஞனின் உள்மன எழுச்சிதான் உருவாக்குகிறது என்பதை நாம் மறுக்கவில்லை. அப்படி ஒரு உண்மையான அக எழுச்சி இல்லாமலேயே மலர்விக்கப்படும் காகிதப்பூக்களும், சொற்களாலும் வண்ணங்களாலும் நிகழ்த்தப்படும் கழைக்கூத்துக்களும்தான் கலை, இலக்கிய உலகில் நிரம்பியிருக்கின்றன என்ற உண்மையையும் யாரும் மறுக்க முடியாது. எனினும், ஒரு கலை வெளிப்பாட்டை நோக்கி “அதன் பொருள் என்ன, அது வெளிப்படுத்தும் உணர்வு என்ன என்று கேள்வி எழுப்புவது அந்தக் கலையின் சுதந்திரத்தில் தலையிடுவதாகும் என்பதும், சர்வாதிகாரம் என்பதும் அவர்கள் தரப்பு வாதம்.

மாடர்ன் ஆர்ட்: சி.ஐ.ஏ ஊட்டி வளர்த்த கலை!
ஓவியம் 'தீட்டும்' ஜாக்சன் போலாக்

கலை இலக்கியம் ஓவியம் போன்ற துறைகளில் இத்தகைய சர்வ சுதந்திரக் கோட்பாட்டை குன்றின் மீது நின்று முழங்கிய பல சிங்கங்களுக்கு கறித்துண்டு போட்டு வளர்த்தவர்கள் அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ வினர்தான் என்றொரு செய்தி நெடுநாட்களாகவே அடிபட்டு வந்தது எனினும், அது கம்யூனிஸ்டுகளின் அவதூறு என்றே இதுநாள்வரை  புறந்தள்ளப்பட்டு வந்தது.

பிரான்சிஸ் ஸ்டோனார் சாண்டர்ஸ் எழுதிய சி.ஐ.ஏ வும் பண்பாட்டுப் பனிப்போரும் என்ற நூல் (Who paid the piper, The CIA and the cultural cold war) இதனை ஆதாரங்களுடன் வெளிக்கொண்டு வந்திருக்கிறது. அப்ஸ்டார்க்ட் எக்ஸ்பிரஷனிசம் என்று வகைப்படுத்தப்படும் மாடர்ன் ஆர்ட் ஓவியங்களை சி.ஐ.ஏ. உருவாக்கவில்லை. எனினும் அதனை அடையாளம் கண்டு தடுத்தாட்கொண்ட பெருமை நிச்சயம் சி.ஐ.ஏ.வுக்கே உரியது.

இரண்டாம் உலகப்போர் முடிந்த பின் 1947 ஆம் ஆண்டு அமெரிக்காவில் சி.ஐ.ஏ என்ற உளவு நிறுவனம் துவங்கப்பட்ட போதே, பண்பாடு மற்றும் கலை இலக்கியத் துறைகளில் சோசலிச எதிர்ப்பு சக்திகளையும் உளவாளிகளையும் உருவாக்குவது அதன் இலக்குகளில் ஒன்றாகத் தீர்மானிக்கப்பட்டு விட்டது.

இரண்டாம் உலகப் போரில் உலகையும் ஐரோப்பிய கண்டத்தையும் பாசிச அபாயத்திலிருந்து காத்தது ரஷ்யாவின் செம்படை. ஹிட்லருக்கு எதிராக ரசிய செம்படை களத்தில் காட்டிய தீரம் தியாகம் மட்டுமின்றி, போருக்குப்பின் பாசிஸ்டுகளை விசாரணைக்கு உட்படுத்தித் தண்டிப்பதில் ரசியா காட்டிய தீவிரமும் மேற்கு ஐரோப்பிய நாட்டு மக்களிடமும், அறிவுத்துறையினரிடமும் கம்யூனிசத்தின் பால் ஒரு ஈர்ப்பை உருவாக்கியிருந்தது.

பொருளாதாரம்,  இராணுவம் ஆகிய துறைகளில் சோசலிச முகாமுக்கு எதிராகத் தனது சொந்த நிறுவனங்களை உருவாக்க முடிந்த அமெரிக்காவால், அறிவுத் துறையினரிடையே, குறிப்பாக மேற்கு ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த நடுத்தர வர்க்க அறிவுத்துறையினரிடையே,  சோசலிசம் பெற்று வந்த செல்வாக்கைத் தடுக்க இயலவில்லை.

அமெரிக்க மெக்கார்த்தியிசத்தின் வன்மம் கொண்ட கம்யூனிச எதிர்ப்பு, சார்லி சாப்ளின் உள்ளிட்ட பிரபல கலைஞர்களையெல்லாம் கூண்டிலேற்றியிருந்ததால், அமெரிக்க ஜனநாயகத்தின் முகவிலாசம் ஏற்கெனவே அம்பலமாகியிருந்தது.  பண்பாட்டுத்துறையில்  முதலாளித்துவ கலைஞர்கள் மேற்கொண்ட சில அபாயமற்ற புதிய முயற்சிகளைக் கூட சகித்துக் கொள்ள இயலாத அளவுக்கு பிற்போக்கின் உச்சமாக இருந்தது மெக்கார்த்தியிசம். ஏற்கெனவே அமெரிக்க பண்பாட்டின் மீது மதிப்போ மரியாதையோ கொண்டிராத ஐரோப்பிய கலைஞர்களையும், அமெரிக்காவின் தலைமையிலான புதிய அரசியல் இராணுவ அணிசேர்க்கையை எதிர்த்த ஐரோப்பிய அறிவுத்துறையினரையும் தம் பக்கம் ஈர்ப்பதற்கு புதியதொரு அரசியல் அணியை உருவாக்கவேண்டும் என்பதை சி.ஐ.ஏ. உணர்ந்திருந்தது. கலை இலக்கியம் பண்பாட்டுத்துறையில்  ‘கட்டற்ற படைப்பு சுதந்திரம்’, அரசியல் துறையில்  ‘ஜனநாயக இடதுசாரித்துவம்’ என்பனவற்றை நைச்சியமாக முன்தள்ளியதன் மூலம், கம்யூனிசத்தில் ஜனநாயகமோ, தனிமனித படைப்பு சுதந்திரமோ கிடையாது என்பதை கம்யூனிசத்துக்கு எதிரான பனிப்போரின் மையமுழக்கமாக்கியது சி.ஐ.ஏ.

கலைஞனின் சூக்குமமான உளப்பதிவுளை முன்நிறுத்தும் (Abstract Expressionism)  மாடர்ன் ஆர்ட் வகைப்பட்ட ஓவியங்கள் கம்யூனிசத்துக்கு எதிரான போரில் ஏன் பயன்பட்டன என்பதை 1949இல் சி.ஐ.ஏ.வின் கலைத்துறை தலைமை அதிகாரியாக செயல்பட்ட டாம் பிராடன் கீழ்க்கண்டவாறு விளக்குகிறார்: “எக்ஸ்பிரஷனிசம் என்பது சுதந்திரத்தின் சித்தாந்தம், கம்யூனிச எதிர்ப்பு சித்தாந்தம், சுதந்திர முதலாளித்துவத்தின் சித்தாந்தம். அது சூக்குமமானது, அரசியல்ரீதியில் மவுனமானது, சரியாகச் சொன்னால் சோசலிச எதார்த்தவாதத்துக்கு நேர் எதிரானது.”

இந்தப் பயன்பாட்டை மனதிற்கொண்டுதான் கலாச்சார விடுதலைக்கான காங்கிரசு என்ற அமைப்பையும், அப்ஸ்ட்ராக்ட் எக்ஸ்பிரஷனிச ஓவியங்களுக்கான ஒரு கண்காட்சிக் கூடமாக மியூசியம் ஆப் மாடர்ன் ஆர்ட்ஸ் (MoMA) எனும் அமைப்பையும் சி. ஐ.ஏ நிறுவியது. சி.ஐ.ஏவின் முன்னாள் உயரதிகாரிகள் பலரும் இந்த ஓவியக் கண்காட்சிக் கூடத்தின் பொறுப்பு வகித்துள்ளனர். போல்லாக், டி கூனிங் போன்ற பிரபல ஓவியர்களின் கண்காட்சிகளை ஐரோப்பா முழுவதும் நடத்துவதற்கு சி.ஐ.ஏ. செலவு செய்தது. அப்ஸ்ட்ராக்ட் எக்ஸ்பிரஷனிசக் கலைஞர்கள் சிலருக்குத் தாம் யாரிடம் இருந்து பணம் பெறுகிறோம் என்று தெரிந்துள்ளது  ஆனால், பெரும்பாலானவர்களுக்குத் தாம் யாரிடம் இருந்து பணம் பெறுகிறோம் என்கிற விபரம் தெரிவிக்கப் படவில்லை.

பெறுபவர்கள் இருக்கட்டும், கொடுப்பவரான அமெரிக்க அரசின் அதிபர் ட்ருமெனுக்கே இது தெரியாது. “இதுவெல்லாம் கலை என்று சொன்னால், என்னை காட்டுமிராண்டி என்று அழைத்துக் கொள்ளவே நான் விரும்புவேன்” என்று மாடர்ன் ஆர்ட் ஓவியங்களைப் பற்றி கருத்து கூறியவர் ட்ருமென். அவர் மட்டுமல்ல, வெளிப்படையான கம்யூனிச எதிர்ப்பாளர்களான பல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்த நாசூக்கான முறையை விளக்கிப் புரிய வைத்து நிதி ஒதுக்கீடு பெறுவது இயலாது என்று சி.ஐ.ஏ வுக்கு புரிந்திருந்ததால், அது தனது ரகசிய நிதியிலிருந்தும், ராக்பெல்லர் போன்ற முதலாளிகளிடம் பெற்ற நன்கொடைகளிலிருந்தும் இத்தகைய கண்காட்சிகளை நடத்தியது.

இர்விங் கிரிஸ்டல், மெல்வின் லாஸ்க்கி, ஐசாயா பெர்லின், ஸ்டீபன் ஸ்பென்டர், சிட்னி ஹூக், டானியல் பெல், ட்வெய்ட் மெக்டொனால்ட், ரோபர்ட் லோவெல், ஹன்னா, மேரி மெக்கார்த்தி உள்ளிட்ட பல்வேறு அறிவுஜீவிகளின் புரவலராக சி.ஐ.ஏ செயல்பட்டுள்ளது.

பிற்காலத்தில் கலாச்சார காங்கிரஸ், மோமா போன்ற கலை கலாச்சார நிறுவனங்களுக்கும் சி.ஐ.ஏவுக்கும் இடையிலான உறவு அம்பலமானபோது, அது பற்றி கருத்து தெரிவித்த மோமாவின் முன்னாள் தலைவரான ப்ராடன், சி.ஐ.ஏ தனது பாத்திரத்தை ஏன் இரகசியமாக வைத்துக் கொண்டது என்பதை விளக்குகிறார்.

“எது சிறந்த பிரச்சாரமாக அமையும் என்பதை சி.ஐ.ஏ வரையறுத்துள்ளது. கலைஞன் (சி.ஐ.ஏ.வின் மொழியில் ‘சப்ஜெக்ட்’) நாம் விரும்பும் திசையில் சிந்திக்க வேண்டும். ஆனால் அது நாம் சொல்லிக் கொடுத்ததாக இல்லாமல், தனக்கு சொந்த முறையில் சரி என்று படுகின்ற காரணங்களுக்காக, அவனே அந்த திசையை தெரிவு செய்ததாக இருக்க வேண்டும்.”

கம்பனை சடையப்ப வள்ளல் அடையாளம் கண்டு வாரி வழங்கலாமேயன்றி, வள்ளல் சொல்படி கம்பன் என்று இராமாயணம் எழுதினால் எடுபடாது என்பதைத்தான் பிராடன் கூறுகிறார். அமெரிக்காவின் வெறி கொண்ட கம்யூனிச எதிர்ப்பு, பாப் கலாச்சாரம் மற்றும் நுகர்வுக் கலாச்சாரத்தின் சீரழிவுகள், அமெரிக்கத் திமிர் ஆகியவை குறித்து ஐரோப்பிய கலைஞர்களுக்கு வெறுப்பு இருந்ததென்னவோ உண்மைதான். எனினும், கம்யூனிச எதிர்ப்பின் இடத்தில் கட்சி எதிர்ப்பு, பாப் கலாச்சாரத்தின் இடத்தில் மேட்டிமைக் கலாச்சாரம், அமெரிக்க திமிரின் இடத்தில் அறிவாளித் திமிர் ஆகியவற்றைக் கொண்டிருந்த ஐரோப்பிய அறிவுத்துறையினர், அமெரிக்க நாணயத்தின் மறு பக்கமாகவே இருந்தனர். தமது சொந்தக் காரணங்களுக்காகவே சி.ஐ.ஏ விரும்பிய வழியில் சென்றனர்.

சி.ஐ.ஏ.வின் எலும்புத்துண்டுகளைப் பொறுக்கிக் கொண்ட கலைஞர்கள், அமெரிக்காவின் எல்லா வெளியுறவுக் கொள்கையையும் அப்படியே ஆதரிக்க வேண்டுமென்பதில்லை, அவ்வப்போது எதிர்க்கலாம் என்ற சுதந்திரத்தை சி.ஐ.ஏ இவர்களுக்கு வழங்கியிருந்தது. ஆனால், அதற்குரிய எல்லையையும் தீர்மானித்திருந்தது. சி.ஐ.ஏ.விடம் பெருமளவு நிதியுதவி பெற்ற என்கவுன்டர் எனும் பத்திரிகையில் முன்னாள் ஆசிரியராக இருந்த மெக்டொனால்ட், பின்னர் ஒரு சந்தர்பத்தில் தனது ‘அமெரிக்கா அமெரிக்கா‘ எனும் கட்டுரையில் அமெரிக்க நுகர்வு பற்றியும், வெகுஜன கலாச்சாரம் பற்றியும் விமரிசித்து எழுதிய கட்டுரை சி.ஐ.ஏ.வால் நிறுத்தப்பட்டது.

தங்களது சுதந்திரத்தின் எல்லை குறித்தும் இந்தப் படைப்பாளிகள் அறிந்தே இருந்தனர். அமெரிக்காவின் தெற்குப் பகுதியில் நிலவிய வெள்ளை இனவெறியைக் குறித்தோ, இந்தோசீனப் பகுதிகளிலும் அல்ஜீரியாவிலும் அமெரிக்கா நிகழ்த்திய கொத்துக் கொத்தான படுகொலைகள் பற்றியோ இவர்கள் பேசவில்லை. “அப்படி பேசுவது கம்யூனிசத்துக்கு ஆதரவாகப் போய் விடும்” என்று மெல்வின் லாஸ்கி மற்றும் சிட்னி ஹூக் போன்ற ’அறிவுஜீவிகள்’ கருத்துத் தெரிவித்துள்ளனர்.

அறுபதுகளின் இறுதியில் இந்த விவரங்கள் ஓரளவு கசியத் துவங்கிய போது சில அறிவுஜீவிகள் தமக்கு ஒன்றுமே தெரியாது என்று கைகழுவி விட எத்தனித்தனர். தாங்கள் யோக்கிய சிகாமணிகள் என்றும், சி.ஐ.ஏ தமக்கே தெரியாமல் தங்களைப் பயன்படுத்திக் கொண்டது ஒரு அயோக்கியத்தனமான நடவடிக்கை என்றும் ’பொங்கியெழுந்தனர்’. இந்தப் பொங்கல் எல்லாம் அமெரிக்கா அதன் மேல் தண்ணீர் தெளிக்கும் வரை தான் நீடித்தது.

சி.ஐ.ஏ.வின் டாம் ப்ராடன் தமது பட்டியலில் இருந்த கலைஞர்கள் பற்றியும், அவர்கள் தெரிந்தே தம்மிடம் கைநீட்டி சம்பளமும் கிம்பளமும் வாங்கிய விவரங்களையும் வெளியிட்டதும் அறவுணர்ச்சியோடு பொங்கியவர்கள் அப்படியே மௌனத்தில் ஆழ்ந்து விட்டனர். (மேற்படி நூல், பக்கம்  397 to 404)

சி.ஐ.ஏவின் இரகசிய ஆவணங்கள் தொண்ணூறுகளில் வெளிடப்பட்ட போது இந்தக் கள்ளக் கூட்டு இன்னும் விமரிசையாக அம்பலமானது. எனினும், அறிவுத்துறையினர் எவரும் தமது அப்ஸ்ட்ராக்ட் எக்ஸ்ப்ரஷனிசக் கலைகளையும் படைப்புகளையும் மறு ஆய்வுக்கு உட்படுத்த முன்வரவில்லை. ஏனெனில் அவர்கள் உணர்வுப் பூர்வமாகவே அந்தக் கோட்பாட்டை ஏற்றுக் கொண்டிருந்தனர்.

படைப்பாளியின் சுதந்திரத்தை மறுப்பதால்தான் கம்யூனிச அமைப்புகளையும் சித்தாந்தத்தையும் எதிர்ப்பதாக சண்டமாருதம் செய்த இந்தக் கலைஞர்கள், தங்களது ஓவியங்களையும் படைப்புகளையும் ஆதரித்து விழா எடுத்ததற்கான காரணத்தை சி.ஐ.ஏ வெளிப்படையாகக் கூறிவிட்ட பின்னரும் அது குறித்து கருத்து கூறவில்லை. சி.ஐ.ஏ. வின் காசில்தான் தங்கள் கலை ‘உலக உலா’ வந்திருக்கிறது என்று தெரிந்த பின்னரும் வெட்கப்படவில்லை.

இது தான் இவர்கள் சோசலிச எதார்த்தவாதக் கலைகளுக்கும் படைப்புகளுக்கும் எதிராக நிறுவ முயன்ற சுதந்திரத்தின் யோக்கியதை. அதாவது அமெரிக்காவிற்கு நேர்ந்து விடப்பட்ட இந்த  அடிமை ஆடுகள், அந்த அடிமைத்தனத்தையே சுதந்திரம் என்று வரித்துக் கொண்டதோடு, சமூக நோக்கத்திற்காக படைப்பூக்கத்துடன் செயல்பட்ட படைப்பாளிகளை அடிமைகள் என்று முத்திரை குத்தி குற்றம் சாட்டினர்.

இவர்களை வெறுமனே கைக்கூலிகள், அடிமைகள் என்று சொல்வது முழுவதும் சரியல்ல. இவர்கள் கைக்கூலித்தனத்தையும் அடிமைத்தனத்தையும் தமது சொந்த சிந்தனையின் அடிப்படையில் ஆத்மார்த்தமாக வரித்துக் கொண்டவர்கள். அமெரிக்க நுகர்வு வெறியின் பின்னுள்ள அதே அராஜகவாதத்தையே இவர்கள் வேறொரு நளினமான மொழியில் வெளிப்படுத்தியவர்கள். வெளிப்பாடுகள் வேறு வேறென்றாலும் உள்ளடக்கம் ஒன்று தான்.

________________________________

சி.ஐ.ஏ.வும் அதன் கையாட்களாகச் செயல்பட்ட அறிவாளிகளும் ஓரளவுக்கு அம்பலப்பட்டுவிட்டனர் என்ற போதிலும், சிறந்த கம்யூனிச எதிர்ப்பு ஆயுதம் என்று சி.ஐ.ஏ வால் தேடித் தெரிவு செய்யப்பட்ட அந்தக் கலைக்கோட்பாடு இன்றும் செல்வாக்கு செலுத்தவே செய்கிறது. கலைஞர்கள் மற்றும எழுத்தாளர்கள் பலர், பல்வேறு அரசியல் சமூகப் பிரச்சினைகளில் ஏகாதிபத்தியத்துக்கு எதிராகவும், முதலாளித்துவச் சுரண்டலுக்கு எதிராகக் கருத்து தெரிவிக்கின்றனர். சிலர் போராடவும் செய்கின்றனர்.

ஆனால், அவர்கள் படைக்கின்ற ஓவியம், இசை, இலக்கியம் ஆகியவற்றில் வர்க்கப்போராட்டம் குறித்த கருத்தோ, ஏகாதிபத்திய எதிர்ப்புக் கருத்தோ உள்ளடக்கமாக இருப்பதில்லை. ஏனென்றால், புறவயமான உண்மைகள் அல்லது கருத்தியல் ரீதியான உண்மைகள் ஆகியவை தமது கலைப்படைப்பின் உள்ளடக்கத்தைத் தீர்மானிக்குமாயின், தமது படைப்பு கலைத்தரம் இழந்து, வெறும் பிரச்சார இலக்கியமாகிவிடும் என்று அவர்கள் நம்புகின்றனர்.

அன்று, பனிப்போர் காலத்தில் ஐரோப்பிய அறிவுஜீவிகளின் மூளையைக் குறிவைத்து சி.ஐ.ஏ தொடுத்த தாக்குதல், உலகெங்கும் உள்ள படைப்பாளிகளின் சிந்தனையை இன்றளவும் ஆட்டுவிப்பதையே நாம் காண்கிறோம்.

___________________________________________________________

– தமிழரசன், புதிய கலாச்சாரம், மார்ச் – 2011
___________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

  1. மாடர்ன் ஆர்ட்: சி.ஐ.ஏ ஊட்டி வளர்த்த கலை ! | வினவு!…

    படைப்பாளியின் சுதந்திரத்தை மறுப்பதால்தான் கம்யூனிசத்தை எதிர்ப்பதாக சண்டமாருதம் செய்த கலைஞர்கள், சி.ஐ.ஏ. வின் காசில்தான் தங்கள் கலை ‘உலக உலா’ வந்திருக்கிறது என்று தெரிந்த பின்னரும் வெட்கப்படவில்லை….

  2. தமிழினத்தை அழித்தொழித்த கொலைகாரன் நவீன ஹிட்லர் ராஜபக்சே இந்தியா வரான்.அவனுக்கு எதிர்ப்பு தெரிவிக்க கூட நம்மால் முடியல்.தமிழின தலிவர் எங்க ஒளிஞ்சிகினு இருக்காரோ?நாசமா போக.

  3. முடிஞ்சிதா? நாங்க அமெரிக்காவுக்குதான் சப்போர்ட் பண்ணுவோம். இந்திய அமெரிக்க ஆகணும்டா ஆகணும்.

  4. கம்யூனிசத்தை ‘ஏற்றுமதி’ செய்ய பிரச்சார உக்தியாக அன்றைய கே.ஜி.பி (ரஸ்ஸிய உளவு நிறுவனம்) செய்த ராஜ தந்திரங்களையும் இதே போல் விரிவாக எழுதுங்களேன் பார்க்கலாம். ஒரு விளையாட்டு, இது. ஒரு சைட் நடந்தவற்றை மட்டுமே தொடர்ந்து முழங்கினால் எப்படி காம்ரேட் ? மறுபக்கம் இதை விட பிரமாதமாக ‘விளையாடினார்கள்’ . அதையும் சேத்து சொன்னா படிக்க சுவாராசியமா இருக்கும்.

    தமிழ் எம் ஏ,

    சோவிய ரஸ்ஸிய இருந்த காலங்களில் இதை விட அதிக கூச்சல் ஒலித்தது : ‘அமெரிக்க
    கைகூலிகள், அமெரிக்காவிற்க்கு நாட்டை அடகுவைக்கின்றனர், etc, etc என்று. அப்படி கூப்பாடு போட்ட கம்யூனிஸ்டுகளின் உண்மையான கவலை அமெரிகாவின் அடிமையாக இந்தியர்கள் மாறுவது பற்றி அல்ல. மாறாக சோவியத் ரஸ்ஸியாவின் ‘அடிமைகளாக’ மாறவில்லையே என்ற வயித்தெருச்சல் தான். அடிமைதனத்தை பற்றி எல்லாம் சும்மா டைலாக் தான். அன்றைய கிழக்கு அய்ரோப்பாவை போல், இந்தியாவும் ரஸ்ஸியாவின் ‘அடிமையாக’ மாறியிருந்தால், இந்த கனவான்கள் ரஸ்ஸிய கைக்கூலிகளாக மாறி, அருந்தொண்டாட்டியிருப்பார்கள். அந்த வரலாற்றை எல்லாம் இப்ப மறைத்து விட்டு, நீர்ந்த்து போன் அமெரிக்க எதிர்ப்பை மட்டும் வைத்து குப்பை கொட்டுகிறார்கள். மற்ற் சரக்கெல்லாம் (அதாவது வரக் போர், செம்புரட்சி, சுரண்டல், etc, etc) எல்லாம் இனி இங்கு போனியாகது என்று உணர்ந்து, இந்த அமெரிக்க எதிர்ப்பை மட்டும், அமெரிக்க செர்வர்களில் ஏற்றம் செய்யப்ட்ட வினவு தளத்தின் மூலம், அமெரிக்க ஏகாதிபத்திய நிறுவனமான கூகுளின் துணையோடு செய்து கொண்டிருக்கிறார்கள். வாழ்க கூகுள். வாழ்க இணையம்.

    • அல்லகைகளின் அடிவருடியான அதியமான் அவர்களே. என்ன விளையாடினார்கள் எப்படி விளையாடினார்கள் என்று நீங்கள் எப்படி விளக்குவீர்கள் என்று தெரியும். உங்களை மாதிரி அடிவருடிகள் எழுதிய விக்கிபீடியா லின்கை கொடுத்து பொய்கள எல்லாவற்றிருக்கும் பதில் சொல்லுங்கள் என்பீர்கள்.. பொய்களுக்கு பதில் சொல்லுமளவு உங்களை போல் நாங்கள் வேலை இல்லாமல் இல்லை.

      அமெரிக்க எதிர்ப்பு என்பது அமெரிக்க ஆளும் வர்கங்கள் அதை சார்ந்த துணை நிறுவனங்கள் எதிரான எதிர்ப்பு மட்டும் தான், அமெரிக்க மக்கள் மீதான எதிர்ப்பல்ல. அப்படியும் அந்த நிறுவனங்களை மக்கள் எதிர்க்க வேண்டும் என்ற பிரச்சாரமாக இருக்கும். கூகுள் என்ன புஷும், க்ளின்டனும் ரத்தம் சிந்தி உழைத்தா உருவாக்கினார்கள்? அதுவும் மக்கள், நிறுவனத்தில் இரவு பகல் பாராமல் உழைத்தவர்களின் உழைப்பு தான் கூகுள்.

      அடிவருடும் வேலையை தொடருவும்

      • அக்கினிபார்வை,

        நீர் என்ன, எம்மை அல்லக்கை, etc என்று பெயர் வைத்து கூவுவது. அதான் நானே புதிய புணைப்பெயர் சூடிக்கொண்டேன் !! சரி, விக்கிபீடியா சுட்டிகளை வினவு மட்டும் தான் மேற்கோள் காட்ட வேண்டும் என்ற உங்க தர்மம் என்பதால், நான் முன்பு இந்த ‘விளையாட்டை’ பற்றி எழுதிய சுவாரசியமான பதிவு :

        http://athiyamaan.blogspot.com/2008/07/kgb-cia.html

    • மேலும் சில related சுட்டிகள் :

      http://www.guardian.co.uk/world/2011/mar/31/spy-kim-philby-disillusioned-communism

      http://athiyamaan.blogspot.com/2008/07/kgb-cia.html

      http://intellibriefs.blogspot.com/2005/09/how-kgb-bought-india.html

      http://www.indianexpress.com/oldStory/78404/
      India’s KGB Hands

      Despite the brave denials, the sullen nervousness of CPI leaders on television screens through Sunday betrayed their instincts about the ‘The Mitrokhin Archive II’. The book makes fairly well-documented allegations that, from the ’50s to the ’80s, left-leaning Congressmen and members of the CPI were paid stipends and electorally funded by the KGB. Indian diplomats in Moscow were subjected to honey traps, the book says, sections of the intelligentsia and media were on Soviet secret service retainers.

      There are two ways in which to react to the book. First is the route the Congress has taken — dismiss the statements as “vague” and cite the party’s history of patriotism. There is more realistic approach. During the Cold War, it was clear that an influential section of the political and foreign policy establishment was Left-aligned. It saw India as a Soviet fellow traveller. This led India into a quixotic and self-defeating non-alignment that, ultimately, it had to abandon. As the book says, NAM was “regarded as an important vehicle for KGB active measures”.

      The key issue raised by ‘The Mitrokhin Archive II’ is that India’s Kremlin tilt was not merely the product of principled minds, but also of compromised souls. It is an open secret in the Indian Foreign Service as to which officers, posted in Moscow in the ’50s, came back as lifelong votaries of Indo-Soviet friendship, which CPI intellectuals travelled to Black Sea resorts for annual holidays, which party newspapers carried special Soviet advertorials and which individuals made their fortunes from the sham rupee-rouble trade. It is time to face up to this shameful aspect of India’s past. When apartheid ended in South Africa, that country set up a Truth Commission to bring a sad chapter to closure. India’s KGB connections deserve nothing less. This is not a le Carre novel; it’s a matter of India’s honour.

    • The Mitrokhin Archives II from an Indian Perspective: A Review Article

      http://independentindian.com/2005/10/11/the-mitrokhin-archives-ii-from-an-indian-perspective-a-review-article/

      ….Everyone in the 1970s and through the 1980s knew of the tight grip around New Delhi’s policy-making circles of top bureaucrats, academics, journalists etc who were blatantly and incorrigibly pro-Soviet, some being active communists or fellow- travellers. Some of those complaining today know fully well that a cardinal implicit reason the CPI(M) broke from its parent party had to do precisely with Moscow’s control of the CPI. Moreover, while it might have been newsworthy when the KGB honey-trapped a senior diplomat or a junior cipher clerk in the Indian Embassy now and then, there were also hundreds of public sector bureaucrats, military personnel, journalists, technology professors, writers, artists, dancers et al who were treated most hospitably by the Soviet state – getting freebies flying to Soviet cities, being greeted by singing Young Pioneers, touring L’Hermitage with Intourist, receiving dollar honoraria and splendid gifts, sitting in on “technical training”, even receiving bogus Soviet doctoral degrees to allow themselves to be called “Dr” etc. Purchasing influence in New Delhi or any other capital city has never been merely a crude matter of cash-filled suitcases sloshing around in the middle of the night. Much of what Mitrokhin’s material says about the KGB’s penetration of India should, candidly speaking, generate but a desultory yawn from us –although even this book seems not to know that Narasimha Rao’s infamous, catastrophically damaging remarks in August 1991, in favour of the abortive KGB coup led by Kryuchkov against Gorbachev and Yeltsin, had been prompted by a staunchly pro-Soviet retired Indian diplomat at his side long-associated with the CPI.

  5. இதையும் பார்க்கவும் : [obscured]

    Clandestine Service
    The Ultimate International Career

    The CIA’s Clandestine Service is the front-line source of clandestine information on critical international developments, from terrorism and weapons of mass destruction to military and political issues. The mission often requires clandestine service officers to live and work overseas, making a true commitment to the Agency. This is more than just a job – it’s a way of life that challenges the deepest resources of personal intelligence, self-reliance and responsibility. National Clandestine Service Officers are individuals with varied backgrounds and life experiences, professional and educational histories, language capabilities, and other elements that allow us to meet our mission critical objectives.

    [obscured]

  6. நல்ல வேலை வாய்ப்பு இருக்கு. யாராவது ட்ரை செய்யலாம். நல்ல சம்பளம் கொடுப்பாக.

    Clandestine Service — Central Intelligence Agency
    The Ultimate International Career: The CIA’s Clandestine Service is the front-line source of clandestine information on critical international developments, from terrorism and weapons of mass destruct…
    [obscured]
    Buzz by 3.02 PM 01/04/2011

    அதியமான்

    – வினவு வாசகர்களுக்கு ஒரு செய்தி. மேற்கண்ட பஸ்ஸை அதியமன் விட்டிருக்கிறார். வேலை வாய்ப்பு செய்திகள் தருவது சில பதிவர்கள் பண்பு. ஆனால், அதியமான், உலகமெங்கும் பல மக்கள் தலைவர்களை போட்டு தள்ளிய, விடுதலை போராட்டங்களை கருவறுக்கும் வேலை செய்கிற சி.ஐ.ஏ. வேலைக்கு முயற்சியுங்கள். நல்ல சம்பளம் தருவார்கள் என பரிந்துரைக்கிறார்.

    • குருத்து,

      அதே செய்தியை இங்கு முதலில் இட்டேன். வினவு பிரசுரிக்க மறுத்துவிட்டனர். முக்கிய சுட்டி, (சி.அய்.ஏ வலைமனை சுட்டி) அளித்தேன். பிரசுரிக்கவில்லை. எடிட் செய்து விட்டனர். சி.அய்.ஏ வலைமனை என்று கூகுள் செய்து தேடிப் படிக்கவும் !

      • அடிவருடி அதியமான். நீங்கள் கைகூலி என்று பெயர் வைத்துக்கொண்டது வேடிக்கை. அடிவருடிகளை ஒப்பிடும் போது கைகூலிகள் கொஞ்சம் மேன்மையானவர்கள். நீங்கள் அடிவருடி. [obscured] பெயரை ‘முதலாளித்துவை அடிவருடி’ என்று மாற்றிகொள்வீர்கள் என நம்புகிறேன்..

        உங்களுக்கு இப்படி மொக்கை பதிவை எழுத நேரமிருக்கிறது, எனக்கு அந்த மொக்கையை படிக்க நேரமில்லை..உங்கள் பெயரை மாற்றிக்கொண்ட பின் பேசுகிறேன்

        • அக்கினி,

          உம்ம இஸ்டத்துக்கு எல்லாம் ஆட முடியாது. ’மொக்கைகளை’ படிக்காவிட்டால் உமக்கு தான்பா நஸ்டம் !!! :)). உமக்காக மட்டும் இங்கு எழுதல. வேறு பல உருப்படியான வாசகர்கள் இருக்காக. படிப்பாக.

          மேலும் நல்ல அனுபவித்து சிரிக்க நான் எழுதிய பழைய பதிவு :

          http://athiyamaan.blogspot.com/2008/07/blog-post_15.html
          கம்யூனிஸ ஜோக்ஸ்

          இதில் கே.ஜி.பி யின் லீலைகளை பற்றி நிறைய இருக்கு !!

        • Mr.Ivanov, a Russian engineer is caught on the streets by the KGB,
          brought with a black car to the secret headquarters for
          interrogation…

          KGB agents: “Where do you live?”

          Mr.Ivanov: “I live on Stalin Street, number 9”

          After a few hours he gets beaten up and asked again…

          KGB agents: “Where do you live?”

          Mr.Ivanov: “I told you, I live at Stalin Street number 9”

          He gets beaten up, tortured and thrown into a chamber…

          The next day he gets asked again, then beaten up again and so on…

          After a week of beating and torturing, the KGB agents think he’s crazy
          and let him go home…

          When Mr.Ivanov arrives to his building, his neighbour, and old lady
          whispers to him: “Psst! Mr.Ivanov! There were a coupple of agents
          here, several times this week, they were asking whether you lived
          here. But don’t worry Mr.Ivanov, I told them I never heard about you!”
          ———————————–

          An East German citizen is caught at the Berlin wall by border guards
          and is interrogated, then he ends up in a nuthouse.

          Then, when a relative visits him there he is asked “Why were you
          brought to the nuthouse?”, the detainee replies: “I wanted to
          immigrate to the Soviet Union”
          ——————————————-

          Crazy dictator, Nicolae Ceauşescu visits a mental institution in Romania.

          Because the “nutcases” who live there are so stupid that they can’t
          remember their own names, they are given numbers… like: Popescu is
          “Number 1”, Ionescu is “Number 2” and so on…

          The dictator enters the mental hospital and starts chatting with the
          crazy patients.

          Ceauşescu: “Hey, hello kid! Who are you?”

          “Nut”: “Hi, ahhh, I’m Number 8!”

          Ceauşescu: “Wow! You are smart! And do you know who I am?”

          “Nut”: “Yeapp, ya’re Number 9!”
          —————————————
          heared in JNU, N.Delhi
          Ques : Which State is the most Marxist in India ?

          Ans : Bihar. becasue in the ultimate state of marxisim, the ‘state’ will
          wither away, and the people will rule themselves. It is already there in Bihar.
          ———————————————

        • அட்டென்ஷன் : அக்கினிப்பார்வை.
          ‘Libertarian’
          என்ற கீழ் மட்ட எழுத்துக்களிலிருந்து
          ‘LIBERTARIAN’ என்ற
          ‘கேபிடல்’ லெட்டெர்களுக்குள்
          புகுந்துகொண்ட லிபெர்டெரியன்,
          ‘முதலாளித்துவ கைக்கூலி’ என்று
          முழங்கிக் கொள்வார்; நாளை
          ‘முதலாளித்துவ அடிவருடி’ என்றும்
          தம்மைத் திருத்திக் கொள்வார்.
          அதற்கு ஒரு ‘லிங்க்’ கொடுப்பார்.
          நீங்கள் வயிற்றுப் பிழைப்பு
          வேலைகளையெல்லாம் முடித்துவிட்டு
          ‘சேவிங் செட்’ எடுத்து
          சிரைக்க உட்காரும்போது மட்டும்
          படியுங்கள்; பொருத்தமாயிருக்கும்.

        • (லிங்குகளை அள்ளி வீசியும், இவரது தளங்களைப் படிக்க வாசகர்களை வற்புறுத்தும் இவருக்கு இன்னொரு கட்டுரை விவாததில் பின்னூட்டமிட்டிருந்தேன்.)

          //Libertarian,

          நான் வேண்டாமென்கிறேன். உங்களைப் பொருத்தவரை நான் ஒரு பாசிஸ்ட்.

          நீங்கள் வேண்டுமென்கிறீர்கள். என்னைப் பொருத்தவரை நீங்கள் ஒரு ஆழ்ந்த கருத்தின் விவாத்திலிருக்கிறீர்கள்.

          ஆனால் இருவர் மட்டுமே முடிவு செய்யப்போவதில்லை. பலவாறு, பற்பல கோணங்களில் விவாதிப்பார்கள்.

          ஆயினும் உங்கள் கருத்துக்கு எதிரானவர்கள் யாவரும், உங்களைப் பொருத்தவரை பாசிஸ்டுகள். ஆனால் என்னைப் பொருத்தவரை எனது கருத்துத்தான் முடிவானது என்ற முடிவுக்கு நான் வந்ததேயில்லை. மற்ற பதிவர்களை வார்த்தைகளால் சாடியதுமில்லை.

          சரி… இப்படி வைத்துக் கொள்ளலாம். என்னை பொருத்தவரை கோடிக்கணக்கான மக்கள் இந்திய கிரிக்கெட்டை தடை செய்ய கோருகிறார்கள் என்கிறேன். சிறுபான்மையில் நீங்கள் மறுக்கிறீர்கள் என்கிறேன். அப்போது உம்மையும், உம் லிபர்ட்டேரியன் வாதத்தையும், உமது தளங்களையும் ‘தடை’ செய்ய வேண்டும் என்று மக்கள் சொல்வார்களே? எது சரி?

          இரண்டுமே சரியில்லை. இரண்டும் ஆய்வில், விவாதத்திலிருக்கின்றன. ஆனால் உண்மையும், அறிவியலும், இயற்கை விதிகளும்தானே ஜெயிக்கும்?

          “e=Mc2″ எனும் அறிவியல் பூர்வ உண்மை ஒரு அழகான மாலை நேர உலாவின்போது வந்துவிடவில்லை. பற்பல விவாதங்கள், ஆய்வுகள், சிந்தனைகள், கட்டுரைகள்; காலதாமதங்கள், தவறுகள்: இவைகளுக்குப் பின்னே சர்வ சாதாரணமாய் ஒளிந்திருந்த உண்மை இன்று வெளிவந்துவிட்டது.

          ***
          //இது DIPLOMACY யின் ஒரு பகுதியாக உலக நாடுகள் அனைத்தாலும் செய்யப்படும் ஒரு மிக சாதாரண சம்ப்ரதாய நடவடிக்கையே. ஆயுதங்களின் பயன்பாட்டைக் கண்காணிக்கும் உரிமை நாம் ஆயுதம் விற்றாலும் வேண்டாம் என்று சொல்வீர்களா?இது போன்ற சாதாரண விஷயங்களை பெரிதுப்படுத்தி அமெரிக்காவை நமது நாட்டிற்க்கே எதிரியாக்க முயலாமல் எனது பழைய பதிவுகளை படித்து கொஞ்சமாவது திருந்துங்கள். //

          உமது பின்னூட்டம்தான். (கிரிக்கெட் தேச பக்தர்களே, இந்தியா அமெரிக்காவின் அடிமையான கதை தெரியுமா).

          “வாங்க சார், வாங்க சார், வந்து நான் எழுதியதை கட்டாயாமாப் படித்து பாருங்க சார், நல்லாயிருக்கும் சார்” என்று பிராண்டி உங்கள் தளத்துக்கு இழுத்துச் செல்வதுபோலிருக்கிறது, உங்கள் பின்னூட்டங்களின் நடை.

          “எனது பழைய பதிவுகளைப் படித்து கொஞ்சமாவது திருந்துங்கள்” என்று எகத்தாளம் வேறு. தெனாவட்டு. இது கடைந்தெடுக்கப்பட்ட பாசிசம் இல்லையா? உம்மில் நாகரிகம் இல்லையே? ஒரு உண்மையான பாசிஸ்ட் விரலை நீட்டி மற்றவர்களை பாசிஸ்ட் என்பதா?

          நீர் என்ன இவ்வுலகைக் காக்க வந்த இரட்சகரா? நீர் சொல்வதனைத்தையும் நாங்கள் வேதவாக்க எடுத்துக் கொள்ளவேண்டுமா என்ன? உமதுஅனைத்து பின்னூட்டங்களிலும் உங்களைப்பற்றி நீங்களே விளித்துக்கொள்ளும் மேதாவித்தனம் நிறைந்த அப்பாவித்தனம் காணப்படுகின்றன. இவ்வுலகில் தான் ஒருவனே மிகச்சிறந்த அறிவாளி என்று கூறிக்கொள்பவந்தான் மிகச் சிறந்த முட்டாளாயிருப்பான்.

          டாஸ்மேனியாவிலிருந்து ஒரு ‘லிங்க்’, ஐஸ்லாந்திலிருந்து ஒரு ‘லிங்க்’, அவன் அல்லது இவன் சொன்னன் என்று ஒரு லிங்க். ‘லிங்குகள்’ ஒன்றும் தேவ தூதர்களால் எழுதப்படவில்லையே. அவைகளும் மனிதர்கள் வெளிப்படுத்திய கருத்துக்கள் தாமே? லிங்குகளால் நிறைந்த உமது பின்னூட்டமும், பதிவுகளும். நான் உதாரணங்களை மக்களிடமிருந்து எடுக்க முயல்கிறேன்.

          2 + 2 = 4 என்று தலைப்பிட்டு, ஒரு தலை சிறந்த கணித வாத்தியாரை அமர்த்தி ஒரு பக்க அளவில் வினவு ஒரு கட்டுரை பதிவிட்டாலுங்கூட, அதற்கு ஒரு மறுப்பு உம்மிடமிருந்து கண்டிப்பாயுண்டு. ஆதலால் உம்மைப்போன்றோரை நான் இதுனாள் வரை ஒரு பொருட்டாய் மதித்ததேயில்லை.

          நான் பாமர மக்களோடு சேர்ந்து சிந்திக்கவும் வாதிடவும் விரும்புகிறேன். உங்களைப் போன்று லிபர்ட்டேரியன் என்று கூறிக் கொள்பவர்களிடம் அல்ல. ஏனெனில் உம்முடைய லிபர்ட்டேரியன் வாதம் ஒரு முடிவற்ற விதண்டாவாதமாகவே முடிவடையும்.

          எனினும், உமது கருத்துக்களுக்கு மிக்க நன்றி.//

        • புதிய பாமரன்,

          மேலே நீங்க இட்ட பின்னூட்டங்களில் பேபிட்டல் எழுத்தக்களில் (LIBERTARIAN) என்ற பின்னூட்டம் மட்டும் நான் இட்டதல்ல. ஒரு போலி. அதை பற்றி ஏற்கெனவே இங்கு விவாதம் செய்தாகிவிட்டது. அதை படிக்காமலே இப்படி மீண்டும் இடுவது நியாயமல்ல.

          மற்றபடி எமது பதிவுகளை, சுட்டிகளை படிக்க சொல்லி யாரையும் ‘வற்புறுத்துவதெல்லாம்’ கிடையாது. முடியவும் முடியாது. விருப்பமுள்ளவர்கள் படித்துவிட்டு போகிறார்கள். உமக்கு என்ன அதை பற்றி. அது அவர்களின் உரிமை. ஓகே.

          எனது argumentsகளுக்கு நேரடியாக பதில் சொல்பவர்களுக்கு மட்டும் தான் நான் பதில் சொல்ல முயல்கிறேன். விதண்டாவாதம், தனி மனித தாக்குதல் செய்பவர்களுக்கு அல்ல. மேலும் எனது பதில் கேள்விகளுக்கும் எதிர்வினை ஆற்றினால் தான் ஒருவருடன் தொடர்வேன். அது எமது உரிமை மற்றும் விருப்பம். அதே போல் தான் இங்கு எல்லோருக்கும் உரிமைகள் உள்ளன. பதில் சொல்லாமல் இருக்க, etc. இன்னும் இணையத்தில் கம்யூனிச அல்லது வேறு வகை சர்வாதிகாரம் எதுவும் உருவாகவில்லை. எனவே…

        • capitalism.org
          நீதிமன்றத்தில், தான் ஒரு திரிபுவாதி என்று புகாரினின் ஒப்புதல் வாக்குமூலம் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன் அதைப் பற்றி பேச மறுப்பது ஏன்?

        • johnny,

          அதை பற்றி பல முறை ஏற்கெனவே எழுதியாச்சு. கே.ஜி.பி யின் சித்தரவதை கூடம் பற்றி படித்து பாருங்க. இந்த ‘ஒப்புதல் வாக்குமூலங்கள்’ எப்படி பெறப்பட்டன என்று தேடிப் படிக்கவும். தம் இளம் மனைவியையும், மகனையும் ’காக்க’ அவர் ‘ஒப்புக்கொண்டார்’. அன்று நிலவிய சூழல் பற்றி அறியாமையில் இருப்பவர்கள் தான் இந்த ‘ஒப்புதல் வாக்குமூலங்களை’ நம்புவார்கள். நாசிக்களின் கெஸ்தப்போ வைவிட கொடூரமான சித்தரவதைகளை ரஸ்ஸியாவில் கையாண்டார்கள். நாட்டை விட்டு தப்பவும் முடியாது. குடும்பத்தினர் வதை முகாம்களுக்கு அனுப்பப்படும் அபாயம் எப்போதும் உண்டு :

          For some prominent communists such as Bertram Wolfe, Jay Lovestone, Arthur Koestler, and Heinrich Brandler, the Bukharin trial marked their final break with communism and even turned the first three into fervent anti-Communists eventually.[10]

          While Anastas Mikoyan and Vyacheslav Molotov later claimed that Bukharin was never tortured and his letters from prison do not give the suggestion that he was tortured, it is also known that his interrogators were instructed with the order: “beating permitted”. Bukharin held out for three months, but threats to his young wife and infant son, combined with “methods of physical influence” wore him down. But when he read his confession amended and corrected personally by Stalin, he withdrew his whole confession. The examination started all over again, with a double team of interrogators.[11]

          http://www.answers.com/topic/nikolai-bukharin#ixzz1IMVfpHAw

          சுமார் 50 ஆண்டுகளுக்கு பிறகு முழு உண்மைகள் வெளி வந்தன. புகாரின் நிரபராதி என்று சோவியத் ரஸ்ஸியா ஒத்துகொண்டது :

          http://www.thefreemanonline.org/columns/soviet-admissions-communism-doesnt-work/
          http://mises.org/daily/5128/A-Bolshevik-Love-Story

          1980களில் ‘திருபுவாதிகள்’ செய்த பொய் என்றெல்லாம் கூட நீங்க சொல்லக் கூடும். நம்புவதும், நம்பாததும் உங்க இஸ்டம். ஆனால் அறிவுலகம் எதை உண்மைகள் என்று கருதுகிறது என்பது வேறு விசியம்.

        • காக்க காக்க கனகவேல் காக்க
          நோக்கநோக்க விக்கியை நோக்க
          வீழ்த்தவீழ்த்த கம்யூனிசத்தை வீழ்த்த
          இணையத்தைப் புரட்டு
          கம்யூனிசத்தை வீழ்த்திவிடலாம்!
          கம்யூனிஸ்ட் என்று சொல்லிக்கொண்டு முதலாளித்துவ பாதைக்கு செல்பவனை திரிபுவாதி என்று தான் அழைக்கமுடியும். 1 ம் வகுப்பு பையனுக்கு பாடம் எடுப்பது போல் எடுக்கவேண்டிய நிலையை எண்ணி வேதனையாக இருக்கிறது. ஸ்டாலின் கால சூழ்நிலையை ஸ்டாலினின் சமகாலத்தவரின் வார்த்தையிலிருந்துதான் புரிந்துகொள்ளமுடியும். அன்றைய பிரபல அமெரிக்க பத்திரிக்கையாளர் ஹோவார்ட் கே.ஸ்மித் கூறியது, “ஒரு சில ஆயிரம் அதிகாரவர்க்கத்தினரையும் அதிகாரிகளையும் ஒழித்துக்கட்டாமல் இந்த மறைமுக சதி நீடித்திருந்து ஹிட்லரின் படைகள் சோவியத்தை தாக்கியிருந்தால் இரண்டு மாதத்துக்குள் செஞ்சேனை வீழ்ந்திருக்கும்.”
          பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் கூறியது, ‘மேற்கு ஐரோப்பிய நாடுகளில் உள்ளது போன்றவை என்றாலும் சில அம்சங்களில் ஆங்கிலேய விதிமுறைகளைவிட குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அதிகபட்சம் சாதகமானவை. இந்த விசாரனை நேர்மையாக நடத்தப்பட்டது.”
          அன்றைய அமெரிக்கத் தூதர் டேவிஸ், அங்கு குற்றம்சாட்டப்பட்டவர்கள் அனைவரும் ஐயத்திற்கிடமின்றி குற்றவாளிகள் என்பதை விசாரணையைக் கவனித்த நாங்கள் அனைவரும் ஒப்புக்கொண்டோம்.
          மேற்சொன்ன இவர்களெல்லாம் வதைமுகாம் சித்திரவதைக்குப் பிறகுதான் இதனை சொன்னார்களோ! இரண்டாம் உலகப்போருக்கு முன் லெனின், ஸ்டாலின் மீது அவதூறு பரப்பியவர்கள் இரண்டாம் உலகப்போரின் போது அதே ஸ்டாலினுடன்தான் கூட்டணி அமைத்துக் கொண்டார்கள். போர் முடிந்தவுடன் மீண்டும் அதே அவதூறு. அவதூறு எழுதியவன் பணம் வாங்கி எழுதியதை ஒத்துக்கொண்டான். ஆனாலும் மீண்டும் அதே அவதூறுகள்.

  7. KGBஐக் காட்டி CIAஐ நியாயப்படுத்தலாம்.
    ISIஐக் காட்டி RAWஐ நியாயப்படுத்தலாம்.

    கொட்டைப் பாக்கு இடுகைகளின் நோக்கமே பிரச்சினையிலிருந்து கவனத்தைப் பெயர்ப்பது தானே.
    பயனுள்ள எதைச் சொன்னாலும், என்ன புனைபேரிலும் சிலது தரும் எதிர்வினை, படுக்கோட்டைக்கு வழி கேட்டால் பதில் “துட்டுக்கு இரண்டு கொட்டைப்பாக்கு” என்ற மாதிரித் தான் இருக்கும்.

    • கொட்டைப்பாக்கு என்றெல்லாம் பிதற்றாமல், கிழே உள்ளவறை நிதானமாக படித்து உள் வாங்க முயலவும் :

      http://www.aynrand.org/site/PageServer?pagename=ari_ayn_rand_collectivized_rights

      http://aynrandlexicon.com/ayn-rand-ideas/introducing-objectivism.html

      The ideal political-economic system is laissez-faire capitalism. It is a system where men deal with one another, not as victims and executioners, nor as masters and slaves, but as traders, by free, voluntary exchange to mutual benefit. It is a system where no man may obtain any values from others by resorting to physical force, and no man may initiate the use of physical force against others. The government acts only as a policeman that protects man’s rights; it uses physical force only in retaliation and only against those who initiate its use, such as criminals or foreign invaders. In a system of full capitalism, there should be (but, historically, has not yet been) a complete separation of state and economics, in the same way and for the same reasons as the separation of state and church.

  8. .

    உங்கள் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளும்
    அதே வேளையில் சில வரலாற்று உண்மைகளையும் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன்

    .

    அமெரிக்காவில் உள்ள மனிதர்களை ஒரே அமெரிக்க அடையாளத்தில் மொத்தமாக கெட்டவர்கள் என்று சொல்லமுடியாது. அரசு உளவு நிறுவனங்கள் அப்படித்தான் இருக்கும். இந்தியாவின் ரா வின் செயல்பாடுகளுக்கு கோவில்பட்டி கீத்துக் கொட்டகையில் முருக்கு விக்கும் குருசாமியையும் சேர்த்து “இந்திய ராத்தனம்” என்று குற்றம் சொல்ல முடியாது.

    கம்யூனிசத்தை சரியாக உள்வாங்கி சாதித்தவர்களில் அமெரிக்க மக்களும் அடங்குவார்கள். தமிழக கம்யூனிஸ்டுகள்போல ரெண்டுபொண்டாட்டி இருந்துச்சா? தொடர்பு இருந்துச்சா? என்று ஆராய்ந்து பீராய்ந்து எவனையும் தற்கொலை செய்துகொள்ளவைக்கும் வெற்றுக் கட்டப்பஞ்சாயத்துகளில் காலம் தள்ளுவது இல்லை.

    ***

    அமெரிக்கர்களுக்கு எட்டு மணிநேர வேலை என்பது சும்மா வந்துவிடவில்லை. அதைச் சாதித்தது லேபர் யூனியன் போராட்டங்களே. அதாவது அவர்களுக்கு யாரும் வாங்கிக் கொடுக்கவில்லை.

    http://en.wikipedia.org/wiki/Eight-hour_day

    //In August 1866 the National Labor Union at Baltimore passed a resolution that said, “The first and great necessity of the present to free labour of this country from capitalist slavery, is the passing of a law by which eight hours shall be the normal working day in all States of the American Union. We are resolved to put forth all our strength until this glorious result is achieved.”//

    தொழில்புரட்சி காலங்களில் பஞ்சாலைத் தொழிலார்களிடம் ஒற்றுமையை ஏற்படுத்தி யூனியனை அமைக்க பாடுபட்ட வீரர்கள் உண்டு.

    History of the labor movement in the United States: From colonial times to … By Philip Sheldon Foner
    http://books.google.com/books?id=yVoxQv0KqwYC&printsec=frontcover#v=onepage&q&f=false

    Norma Rae (1979)
    என்ற படம் இதுபோன்ற ஒரு மில் தொழிலாளியின் போராட்டத்தைப் பதிவு செய்கிறது.

    இன்றும் களப்போராட்டங்களில் இருக்கிறார்கள்
    ஏப்ரல் 4 ல் நடக்க உள்ள போராட்டம்.
    http://www.aflcio.org/splash_weareone.cfm?continue=/aboutus/history/history/timeline.cfm

    ***

    தமிழகத்தில் ஓட்டலில் டேபிள் துடைக்கும் சிறுவனுக்கும் அமெரிக்காதான் 8 மணி நேர வேலைக்கு சுதந்திரம் வாங்கித்தரவேண்டும் என்று சொன்னால், இங்கே எதற்கு கம்யூனிஸ்ட் கட்சி? அம்மாவுடம் சீட் பேரம் பேசவா? அல்லது ஊற்றிக்கொடுத்தாரா என்று கேட்டவரிடம் பேரம் பேசவா?


    .

    • கல்வெட்டு நீங்கள் கம்யுனிஸ்ட் கட்சி என்று சொல்லுபவர்கள் ‘போலி கம்யுனிஸ்ட்’ கட்சிகள். அவர்களை மையப்படுதி விவாதித்தால் நேரம் விரையம் மட்டும் தான். அமெரிக்க மக்கள் கம்யுனிஸத்தை உளவாங்கவில்லை. ஆனால் கம்யுனிஸ்ட் பூதம் என்கே முதலாளிகளின் காப்பிடலசத்தை வீழ்த்திவிடுமோ என புத்திசாலித்த்னமாக த்ங்கள் மக்களுக்கு சில சலுகைகளை அளிதது. உங்கள் கூற்று படி அந்த சலுகைகளையே மக்கள் போராடி தான் பெற்றார்கள்.. இன்று முற்றி அழுக தொடங்கியிருக்கும் காப்பிடலசத்தை அமெரிக்க மக்களே வெறுக்க தொடங்கியுள்ளார்கள்.. அமெரிக்க பற்றி விவாதிக்க நிறைய இருக்கிறது.

      • .
        அக்னிபார்வை,
        அமெரிக்க மக்கள் கம்யூனிசத்தை உள்வாங்கவில்லை என்ற உங்கள் கருத்தில் மாறுபடுகிறேன்.பெரும்பாலனவர்கள் என்று சொல்லுங்கள் அல்லது ஆகக்குறைந்த சதவீதம் என்று சொல்லுங்கள் சரி. பல புரட்சிகள் நடந்துள்ளது கடந்த காலங்களில். அதாவது தொழில் புரட்சிகளின் போது. குறைந்த சதவீதம் என்றாலும் அவை மதிக்கப்படவேண்டியவை.

        முடிந்தால் Norma Rae (1979) என்ற படத்தைப் பாருங்கள்.
        http://www.imdb.com/title/tt0079638/

        http://en.wikipedia.org/wiki/Norma_Rae

        http://www.southernstudies.org/2009/09/real-norma-rae-dies-of-cancer-after-insurer-delayed-treatment.html

        //Crystal Lee Sutton, formerly Crystal Lee Jordan, was fired from her job folding towels at the J.P. Stevens textile plant in her hometown of Roanoke Rapids, N.C. for trying to organize a union in the early 1970s. Her last action at the plant — writing the word “UNION” on a piece of cardboard and standing on her work table, leading her co-workers to turn off their machines in solidarity — was memorialized in the 1979 film by actress Sally Field. The police physically removed Sutton from the plant for her action.//

        இதுபோல நிறைய உண்டு.

        நிகழ்காலத்தில் அப்படி இல்லை ஆனால் அதன் நீட்சியாக இருப்பதுதான் இன்று விஸ்கான்சனில் நடக்கும் மாநில ஊழியர்களின் போராட்டங்கள். அப்ப‌டி ஒன்றை நீங்கள் தமிழ்நாட்டில் இன்றும் பார்க்க முடியாது. பொது மக்கள் பொதுப்பிரச்சனைக்கு திரளுவது இல்லை.

        அமெரிக்கா என்றாலே முதாலாளித்துவ நாடு என்றுதான் பார்க்கப்படுகிறது. அது உண்மைதான் என்றாலும், அதற்கு பலர் கவனிக்க மறந்த வேறு முகமும் உண்டு. இன்றைய முதலாளித்துவ நிலையை அறியும் அதே வேளையில் பழைய‌ போராட்டக்காரர்களையும் நினைவு கூற‌ல் வேண்டும் என்பதற்காகவே இதைப் பதிவு செய்கிறேன்.

        .

  9. உழைக்க வேலையின்றி
    உண்ண உணவின்றி
    கைஏந்தி, சிந்திய
    கண்ணீர்த் துளிகள்.

    ஓ… புரிகிறது, புரிகிறது.
    உன் ஓவியம் புரிகிறது.

    ஈராக்கிய இரத்தத் துளிகள்
    காஷ்மீரத்து இரத்தத் துளிகள்
    அள்ளித் தெளிக்கப்பட்டிருக்கிறது.
    இரண்டுக்கும் செவ்வண்ணம்.

    ஓ… புரிகிறது, புரிகிறது.
    உன் ஓவியம் புரிகிறது.

    குறுக்கும் நெடுக்குமாக
    குழப்பமில்லாமல் ஓடும்
    ஆண்டைகளின் அற்புத
    ஆணிவேர்கள், கிளை வேர்கள்…

    ஓ… புரிகிறது, புரிகிறது.
    உன் ஓவியம் புரிகிறது.

    கழுத்தறுப்பு பச்சை கலரிலும்
    காசு பணம் கருப்புக் கலரிலும்,
    ஆபாசங்கள் மஞ்சள் கலரிலும்,
    அற்புதங்கள் தெரிகிறது.

    ஓ… புரிகிறது, புரிகிறது.
    உன் ஓவியம் புரிகிறது.

    ஓ மாடர்ன் ஆர்ட்டு சித்திரகாரனே
    இத்தனையும் சொல்லும் உன் ஓவியம்.
    அனைத்தும் நீ வரைந்தது. ஆனால்
    அதன் பின்னால் ஒன்றை மறைத்தாய்.

    ஓ… புரிகிறது, புரிகிறது.
    உன் ஓவியம் புரிகிறது.

    கீழ்வானத்துச் சிவப்பை ‘டெக்னிக்கலாக’
    நீ மறைத்த அற்புதம்; புரிகிறது.
    ஓ… புரிகிறது, புரிகிறது.
    ஓவியம் புரிகிறது.

  10. இங்கு இடப்படும் பயனுள்ள ஒவ்வொரு கட்டுரையினதும் தர்க்கரீதியான விருத்தியைத் திசை திருப்புவதே ஒரு சஹஸ்ரநாம வெத்துவேட்டின் வேலை.
    அதனுடன் விவாதிப்பதை விட உபயோகமாகத் தெரு நாயுடன் விவாதிக்கலாம். (ஆனாலும், வெற்றி எப்போதுமே தெரு நாயுடையது தான்).

    இந்த லட்சணதில் மற்ற எல்லாருக்கும் முட்டாள் பட்டம் சூட்டுகிற வேலை தொடர்கிறது.

    மீண்டும் சொல்கிறேன்: கொட்டைப் பாக்கு இடுகைகளின் நோக்கம் எப்போதுமே பிரச்சினையிலிருந்து கவனத்தைப் பெயர்ப்பது தான்.
    கூட வரும் வசைகள் கொட்டைப் பாக்கு இடுகைக்காரரின் இயலாமையின் பரிதாபமான வெளிப்பாடுகள்.

    (கற்றது கைம்மண்ணளவு என்பது போல) பண்பாட்டுத் தளத்தில் சி.ஐ.ஏ. நடத்திய சீரழிவுப் பணியில் ஒரு சிறு பகுதி மட்டுமே கட்டுரையில் உள்ளது.
    இந்தியத் துணைக்கண்டதின் “தூய” கலைவாதிகளின் தில்லுமுல்லுகளை அதனுடன் சேர்த்து நோக்க வேண்டியுள்ளது.
    அது பற்றி யாராவது விசாரித்தால் உபயோகமாக இருக்கும்.

    • சி.அய்.ஏ வின் சதிகளிக்கு எதிராக கே.ஜி.பியின் லீலைகளை பற்றி பேசினால், அது திசை திருப்புவதாக தான் சில ’சொட்டை பாக்குகளுக்கு’ தெரியும் !! :)))))

      இங்கு, கல்வெட்டு மற்றும் அக்கினிபார்வை நடத்திய உரையாடல் ‘திசை திருப்பும்’ வகையாக தெரியவில்லையா ?

      வாசகர்கள் முடிவு செய்து கொள்ளட்டும். எது வேண்டும், எது வேண்டாம், எதை படிக்காமல் புறக்கணிப்பது என்று. சில ‘முட்டா பாக்குகள்’ முழங்க வேண்டாமே.

    • பெரிய தவறு ஒன்றை நியாயப்படுத்த அதற்குச் சம்பந்தமில்லாத ஒன்றை எடுத்து “இங்கே மட்டுந்த் தானா? அங்கேயும் தான்!” என்ற விதமாகத் திசை திருப்புகிற யுக்தி மிக மலினமானது.
      .
      அது மலினமான மனிதர்கட்கே உரியது.
      .
      கொட்டைப் பாக்கு இடுகைகளின் நோக்கம் எப்போதுமே பிரச்சினையிலிருந்து கவனத்தைப் பெயர்ப்பது தான்.
      கூட வரும் வசைகள் கொட்டைப் பாக்கு இடுகைக்காரரின் இயலாமையின் பரிதாபமான வெளிப்பாடுகள்.

  11. கமல்ஹாசன் காதலா காதலா படத்தில் இப்படித்தான் எச்சில் துப்பி ஒரு ஓவியம் வரைவார். அதனை பேராசிரியர்கள் உள்ளிட்டோர் வியந்து பாராட்டுவார்கள்.

    ஆனால் கமல்ஹாசன் மட்டும் கலை கலைக்காகவே என்று இம்சை செய்வார்.

    ஆதவன்.

  12. ஸ்டாலினுக்குப் பிறகு வந்தவர்கள் போலிக் கம்பியூனிஸ்டுகள், சீனாவில் இருப்பவர்கள் போலிக் கம்பியீனிஸ்டுகள் என்று சொன்னால் இந்த முதலாளித்துவ அதியமான் கொசி காதிலேயே வாங்க மாட்டேன் என்கின்றது.

    ஸ்டாலின் காலத்தில் யார் இப்படி இந்தியாவின் ஏன் உலகின் எந்த ஒரு நாட்டிலும் ஊழலில் ஈடுபட்டார்கள் என நிருபிக்க முடியுமா ?

    கேஜிபியில் ஊடுருவிய (ஸ்டாலினுடை தவறுகள் மூலமாக – தோழர் செங்கொடி இதனைப் பற்றி விளக்கமாக எழுதி உள்ளார்) போலிகள் செய்த படுகொலைகள் மூலமாக கட்சியைக் கைப்பற்றிய போலிகள் தமது ஏகாதிபத்திய சுரண்டலுக்கு என எல்லாம் செய்தனர், ஸ்டாலினுக்குப் பிறகு கேஜிபி இன்னொரு சி ஐ ஏ அவ்வளவுதான்.

    ஆக, சி ஐ ஏ வுக்கு எதிராக் இன்னொரு சி ஐ ஏ வை – முதலாளிக்கு எதிராக இன்னொரு முதலாளியை கம்பியுனிஸ முகமூடியில் நிறுத்துவதில் அதியமான் அம்பலப்பட்டுப் போகின்றார்.

    அதிருக்கட்டும் அதியமான் ! ஐ டி மாணர்வகளை குறி வைத்து ஆர் எஸ் எஸ் நடத்திய அமைப்பில் ஆலோசகராக இருந்த உங்கள் பணி தொடர்கின்றதா ?

    ஆதவன்

    • ஆதவன்,

      நான் அய்.டி துறையில் இல்லை. (90களில் சான்சை விட்டு தொலைத்துவிட்டேன்). ஆர்.எஸ்.எஸ் ஐ ஆதரிப்பதும் இல்லை. சும்மா வீண் அவதூறுகளை செய்ய வேண்டாம்.

      ஸ்டாலிக்கு பின், ஸ்டாலிக்கு முன் என்று கி.பி, கி.மு ரேஞ்க்கும் sharpஆ ‘பிரித்து’ பார்க்கும் வறட்டுவாதம் இது. நல்ல brain wash செய்யப்பட்டிருக்கிறீர்கள். புகாரின் எப்படி ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார், கெ.ஜி.பிக்கு முன்னால் இருந்த NKVD மற்றும் ஸ்டாலினிம் ஆருயிர் நண்பர் அண்ணன் பெரியா என்ன செய்தார் என்பதையெல்லாம் நடுனிலையோடு ஆராயும் மனோபாவம் உங்கள் யாருக்கும் இல்லை. over simplification and sheer denial mode இல் இருப்பவர்கள். மனித நேயத்தோடு நடக்க பல கம்யூனிஸ்டுகள் முயன்றனர். forced collectivisation பல எதிர்பார்க்காத கொடுமைகளை உருவாக்கியது கண்டு பலரும் நொந்து போய், moderationஅய் முன்மொழிந்தனர். அதில் புக்காரின் முதன்மையானவர். மாற்று கருத்தை வைத்தாலே அவன் துரோகி என்று சொல்வது மார்க்சியம் அல்ல.

      லெனின் நடு வயதில் இறக்காமல், ஒரு 20 வருடங்கள் இன்னும் இருந்திருந்தால், உலக வரலாறே மாறியிருக்கும். ஸ்டாலினிசம் உருவாகியிருக்காது. லெனின் புதிய பொருளாதார கொள்கையை ஏன் கொண்டு வந்தார், அதை புகாரின் ஏன் முன் மொழிந்தார் என்பதை பற்றி பேசுவோமா ? 1928இல் அதை தொடர ஸ்டாலின் மறுத்துவிட்டார். இந்த முரண்பாடுகளின் விளைவுகள் பயங்கரமாக இருந்தன.

      ரஸ்ஸியாவின் துரதிஸ்ட்டம் லெனின் சீக்கரமே இறந்தது. இந்தியாவின் துரதிஸ்ட்டம் லால் பகதூர் சாஸ்திர் அகால மரணம் அடைந்து, இந்திரா காந்தி அதிகாரம் பெற்றது. தமிழகத்தின் துரதிஸ்ட்டம், அண்ணா 1969 அகால மரணம் அடைந்து, கருணானிதி முதல்வர் ஆனாது.

    • ஸ்டாலின் பற்றி லெனின் தனது இறுதிநாட்களில் சொன்னது ; (மிக சரியாக இருந்தது)

      Contents of Lenin’s Last Testament :
      http://www.marxists.org/archive/lenin/works/1922/dec/testamnt/congress.htm

      The criticism of Stalin and Trotsky:

      Comrade Stalin, having become Secretary-General, has unlimited authority concentrated in his hands, and I am not sure whether he will always be capable of using that authority with sufficient caution. Comrade Trotsky, on the other hand, as his struggle against the C.C. on the question of the People’s Commissariat of Communications has already proved, is distinguished not only by outstanding ability. He is personally perhaps the most capable man in the present C.C., but he has displayed excessive self-assurance and shown excessive preoccupation with the purely administrative side of the work.

      These two qualities of the two outstanding leaders of the present C.C. can inadvertently lead to a split, and if our Party does not take steps to avert this, the split may come unexpectedly.

      Lenin felt that Stalin had a lot more power than he knew how to handle and may be dangerous if allowed to succeed him. In a postscript written a few weeks later, Lenin recommended Stalin’s removal from the position of General Secretary of the Party:
      Stalin is too rude and this defect, although quite tolerable in our midst and in dealing among us Communists, becomes intolerable in a Secretary-General. That is why I suggest that the comrades think about a way of removing Stalin from that post and appointing another man in his stead who in all other respects differs from Comrade Stalin in having only one advantage, namely, that of being more tolerant, more loyal, more polite and more considerate to the comrades, less capricious, etc. This circumstance may appear to be a negligible detail. But I think that from the standpoint of safeguards against a split and from the standpoint of what I wrote above about the relationship between Stalin and Trotsky it is not a [minor] detail, but it is a detail which can assume decisive importance.

      • லெனினின் New Economic Policy பற்றியும், ஸ்டாலின் பற்றி லெனினின் கருத்துகள் பற்றியும் விவாதிக்கலாம் என்றால், யாரும் ஆட்டத்துக்கு வர மாட்டேங்றீங்களேபா ? இதை விட முக்கிய விசியம் வேறு என்ன இருக்க முடியும் ? வினவு நீங்களாவது ஆட்டத்துக்கு வாங்களேன் !

  13. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பார்கள் அது போல தான் கருணாநிதிக்கு தான் கொள்ளை அடித்து பொருள் சேர்பதற்கு யார் குறுக்கே வந்தாலும் அது பார்ப்பன சதி என்பது போல வினவிற்கு எல்லாமே சி.ஐ.ஏ சதி தான் நீங்கள் மார்க்சிய வெளிச்சத்தில் எதையும் பார்ப்பதில்லை. இருட்டில் அறிவை தொலைத்து விட்டு வெளிச்சத்தில் நாணயத்தை தேடுகிறீர்கள் நண்பர்களே. மெய்பொருள் காண்பது அறிவு

  14. படைப்பாளியின் சுதந்திரத்தை மறுப்பதால்தான் கம்யூனிச அமைப்புகளையும் சித்தாந்தத்தையும் எதிர்ப்பதாக சண்டமாருதம் செய்த இந்தக் கலைஞர்கள், தங்களது ஓவியங்களையும் படைப்புகளையும் ஆதரித்து விழா எடுத்ததற்கான காரணத்தை சி.ஐ.ஏ வெளிப்படையாகக் கூறிவிட்ட பின்னரும் அது குறித்து கருத்து கூறவில்லை. சி.ஐ.ஏ. வின் காசில்தான் தங்கள் கலை ‘உலக உலா’ வந்திருக்கிறது என்று தெரிந்த பின்னரும் வெட்கப்படவில்லை
    இது தான் இவர்கள் சோசலிச எதார்த்தவாதக் கலைகளுக்கும் படைப்புகளுக்கும் எதிராக நிறுவ முயன்ற சுதந்திரத்தின் யோக்கியதை. அதாவது அமெரிக்காவிற்கு நேர்ந்து விடப்பட்ட இந்த அடிமை ஆடுகள், அந்த அடிமைத்தனத்தையே சுதந்திரம் என்று வரித்துக் கொண்டதோடு, சமூக நோக்கத்திற்காக படைப்பூக்கத்துடன் செயல்பட்ட படைப்பாளிகளை அடிமைகள் என்று முத்திரை குத்தி குற்றம் சாட்டினர்.

    இவர்களை வெறுமனே கைக்கூலிகள், அடிமைகள் என்று சொல்வது முழுவதும் சரியல்ல. இவர்கள் கைக்கூலித்தனத்தையும் அடிமைத்தனத்தையும் தமது சொந்த சிந்தனையின் அடிப்படையில் ஆத்மார்த்தமாக வரித்துக் கொண்டவர்கள். அமெரிக்க நுகர்வு வெறியின் பின்னுள்ள அதே அராஜகவாதத்தையே இவர்கள் வேறொரு நளினமான மொழியில் வெளிப்படுத்தியவர்கள். வெளிப்பாடுகள் வேறு வேறென்றாலும் உள்ளடக்கம் ஒன்று தான்.

    இவ்வாறு தெளிவாக எழுதப்பட்ட பின்னும் அதியமான் போடும் கூச்சல் அநாகரீகமானது.

    • யோகன்,

      சி.அய்.ஏ சதிகளுக்கு (அவை சதிகள் தான் என்பதில் மாற்றமில்லை) எதிராக, இதே பாணியில் இலக்கியவாதிகளையும், படைப்பாளிகளையும் கே.ஜி.பி பயன்படுத்தியதை பற்றி பேசினால், அது உமக்கு கூச்சலாக தான் தெரியும். ஒரு பெரும் விளையாட்டு இது. ஒரு தரப்பு இன்னிங்க்ஸ மட்டும் காட்டினா எப்படி ? எதிர் அணியில் இன்னிங்ஸ பார்க்காம இருப்பது போர் அடிக்குமே !!

  15. அதியமான் வேறு வேறு பெயர்களில் பின்னூட்டமிடுவதை கண்டிக்கிறேன். இது தனது முதலாளித்துவ ஆதரவு கருத்துக்களுக்கு கோஷ்டி சேர்க்கும் கேவலமான வழிமுறையாகும்.

    அதியமான் ஏன் இவ்வாறு செய்கிறார் ? பின்னூட்டங்களை வாசிப்பவர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்துவதும், பதிவுக்கு நிறைய எதிர்ப்பு வருகிறது என்கிற கருத்தையும் வாசிப்பவர்களிடம் ஏற்படுத்துவதுமே அவரின் நோக்கம்.

    எனவே வினவு தோழர்கள் இனிமேலும் இதை அனுமதிக்கக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன்.

Leave a Reply to கார்ப்பரல் ஸீரோ பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க