04.01.2026

வெனிசுலா அதிபர் கைது!

பாசிச ட்ரம்ப்-இன் மேலாதிக்க வெறி!

கண்டன அறிக்கை

வெனிசுலாவின் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்காவின் அதிபர் ட்ரம்ப், வெனிசுலாவின் அதிபர் நிக்கோலஸ் மாதுரோவையும் அவரது துணைவியாரையும் நாடு கடத்தியுள்ளார். மேலும் மதுரோவும் அவரது துணைவியாரும் நியூயார்க் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுவர் என்றும் தெரிவித்துள்ளார். இதனை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாக கண்டிக்கிறது.

கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து வெனிசுலா மீது பல்வேறு பொருளாதாரத் தடைகளையும் இராணுவத் தடைகளையும் அமெரிக்கா விதித்திருந்தது. சில வாரங்களுக்கு முன்பு வெனிசுலாவை சட்ட விரோத அரசாங்கம் என்று அறிவித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், வெனிசுலாவிலிருந்து சென்ற வணிக கப்பல்கள் எண்ணெய் கப்பல்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்தார்.

அமெரிக்கா தொடர்ந்து பொருளாதாரத்தில் சரிந்து கொண்டு அதல பாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. வெனிசுலாவில் இருக்கக்கூடிய எண்ணெய் வளங்களை கொள்ளை அடித்து அதன் மூலம் தன்னுடைய பொருளாதாரத்தை தக்க வைத்துக்கொள்ள முயற்சி செய்கிறது பாசிச ட்ரம்ப் அரசு. இப்பொழுது இனி வெனிசுலாவை அமெரிக்கா வழி நடத்தும் என்றும் தெரிவித்திருப்பது மிகவும் ஆபத்தானதாகும். அதுமட்டுமின்றி இன்னொரு உலகப்போருக்கு வித்திடும் அபாயகரமான செயலை பாசிச ட்ரம்பின் அரசு மேற்கொண்டுள்ளது.

பாசிஸ்ட் ட்ரம்ப் மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளும் அமெரிக்க மக்களுக்கு எதிராகவும் புலம்பெயர் மக்களுக்கு எதிரானதாகவே இருந்தை நடைமுறை நிரூபிக்கிறது.

அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகவும் பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராகவும் தொடர்ந்து போராடியும் குரல் கொடுத்தும் வந்த வெனிசுலா மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் உலக மக்கள் அனைவரின் மீதும் நடத்தப்பட்டத் தாக்குதல் ஆகும்.

இதற்கு எதிராக அமெரிக்காவின் மக்கள் மட்டும் அல்ல; உலகம் முழுவதும் உள்ள மக்கள் அனைவரும் பாசிஸ்ட் ட்ரம்ப் வீழ்த்தப்படும் வரை போராட வேண்டும்.

பாசிச ட்ரம்பின் கூட்டாளியான மோடி அரசு வெனிசுலாவின் மீதான நடவடிக்கையை இதுவரை கண்டிக்கவில்லை. அதனை மக்கள் அதிகார கழகம் வன்மையாக கண்டிப்பதுடன் உலகம் முழுவதும் உள்ள மக்கள் அனைவரும் இணைந்து அமெரிக்க மேலாதிக்க போர் வெறியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறது.


தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலப் பொதுச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்,
தமிழ்நாடு – புதுவை.
9962366321

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



1 மறுமொழி

  1. வெனிசுலாவில் தற்போது அரங்கேறியுள்ள மாற்றங்களைப் புரிந்து கொள்ள, பாலைவனத்தின் நடுவே ஜொலிக்கும் சவுதி அரேபியாவை ஒருமுறை உற்று நோக்க வேண்டும்.

    சவுதி அரேபியா என்றாலே நம் நினைவுக்கு வருவது அதன் அளவிடமுடியாத செல்வம். அந்தச் செல்வத்தின் ஊற்றுக்கண் எது? சந்தேகமே இல்லை, அது ‘எண்ணெய்’ தான்.

    ஆனால், சவுதி அரேபியாவை விட அதிக எண்ணெய் வளங்களைக் கொண்ட ஒரு நாடு இந்த உலகில் உண்டு என்பது உங்களுக்குத் தெரியுமா? அதுதான் வெனிசுலா.

    சவுதியை விட அதிக வளம் இருந்தும், வெனிசுலா ஏன் சவுதி அரேபியாவைப் போல பணக்கார நாடாக மாறவில்லை? இதற்குக் காரணம் அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்டிருந்த கடுமையான பொருளாதாரத் தடைகள்.
    இதனால் அந்த நாட்டினால் தனது எண்ணெயை சுதந்திரமாக விற்க முடியாமல் போனது.

    தற்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பயன்படுத்திய வார்த்தைகளின்படி சொல்வதானால், அமெரிக்கா அந்த நாட்டைத் தன்வசப்படுத்தியுள்ளது. தனது செய்தியாளர் சந்திப்பில் பேசிய ட்ரம்ப், “நாங்கள் பெரிய எண்ணெய் (Exxon , Chevron) நிறுவனங்களை அங்கு அனுப்ப உள்ளோம், அவர்கள் அந்த நாட்டைப் பணக்கார நாடாக மாற்றப் போகிறார்கள்” என்று அறிவித்துள்ளார்.

    பொதுவாக, ஜனநாயக நாடுகளின் எதிர்பார்ப்பு என்னவென்றால், ட்ரம்ப் அங்குள்ள எதிர்க்கட்சித் தலைவரான மரியா கரினா மச்சாடோவை (Maria Corina Machado) ஆதரிப்பார் என்பதுதான்.

    ஏனெனில்….
    மரியா மச்சாடோ வெனிசுலாவில் மிகவும் பிரபலமானவர்.
    சமீபத்தில் அவருக்கு நோபல் அமைதி விருது வழங்கப்பட்டது.
    அவர் ஜனநாயகத்தின் அடையாளமாக மேற்குலக நாடுகளால் பார்க்கப்படுபவர்.

    மதுரோ தேர்தல்களில் முறைகேடு செய்து வெற்றி பெற்றதாகக் கூறி, மரியா நாட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டது. மரியாவுக்கு ட்ரம்ப் மீது மிகுந்த மதிப்பும் உண்டு. எனவே, “மதுரோ என்ற சர்வாதிகாரியை வீழ்த்திவிட்டோம், இனி மக்களால் விரும்பப்படும் மரியாவே வெனிசுலாவை வழிநடத்துவார்” என்று ட்ரம்ப் கூறுவார் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்தனர்.

    ஆனால், ஒரு செய்தியாளர் இது குறித்துக் கேட்டபோது, ட்ரம்ப் அதை மறுத்துவிட்டார். “மரியாவை ஆதரிக்கப் போகிறீர்களா?” என்ற கேள்விக்கு, “இல்லை, அமெரிக்காதான் இனி காரியங்களை கவனித்துக் கொள்ளும்” என்று பதிலளித்துள்ளார்.

    இது ஏன்? ஒரு நாட்டை நிர்வகிப்பது என்பது தலைவலி பிடிக்கும் வேலை அல்லவா? பின் ஏன் அமெரிக்கா அதைச் செய்ய விரும்புகிறது?

    காரணம் மிகவும் எளிமையானது: செல்வம்.

    வெனிசுலாவின் மண்ணுக்குக் கீழே புதைந்து கிடக்கும் எண்ணெய் வளம் என்பது கற்பனை செய்ய முடியாத அளவிற்குப் பெரியது.

    அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள் அந்த வருவாயில் ஒரு பகுதியை வெனிசுலா அரசுக்குத் திரும்பக் கொடுத்தாலும் கூட, அது ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியையே (GDP) மாற்றி அமைக்கக்கூடிய அசுரவளர்ச்சியாக இருக்கும்.

    வணிக ரீதியாகவும், செல்வம் சார்ந்தும் சிந்திக்கும் அதிபர் ட்ரம்ப், வெனிசுலாவை ஒரு நாடாகப் பார்ப்பதை விட, ஒரு மிகப்பெரிய ‘சொத்தாகவே’ (Asset) பார்க்கிறார்.

    நேற்று நடந்த அதிரடி மாற்றங்களுக்குப் பின்னால் இருக்கும் மிக முக்கிய உந்துசக்தி இந்த எண்ணெய் வளம் மட்டுமே என்பது தெளிவாகிறது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க