privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஈழம்கிரிக்கெட் பயங்கரவாதம் !

கிரிக்கெட் பயங்கரவாதம் !

-

கொலை செய்வது அலுத்துப் போகும்போது
கொஞ்சம் விளையாட்டு தேவைப்படுகிறது அவர்களுக்கு…

உள்நாட்டு குளிர்பான சந்தையை
கொலை செய்த கோக்,பெப்சி…

வாகனங்களை இறக்கி விட்டு
வயல்வெளியை படுகொலை செய்யும் டாடா…

சிறுவணிகத்தின் விழிகளைத் தோண்டி
தன் முகம் ஜொலிக்கும் ரிலையன்ஸ்…

இவர்களின் இழவெடுத்த மினுமினுப்பில்
உலகக் கோப்பையில் உனது இரத்தம்…

இனக்கொலைக் கழுகுகள்
பிணச்சுவை திகட்டி
மூக்கைத் தேய்த்து இளைப்பாற
மும்பை வான்கடே வருகின்றன.

கொலை செய்தே ரன் குவிப்பதில்
இந்தியாவில் “மேன் ஆஃப் தி மேட்ச்’ அத்வானி!
படுகொலை வேகத்தில் பிணம் குவிப்பதில்
இலங்கையில் “மேன் ஆஃப் தி மேட்ச்’ ராசபக்சே!
கொலைகாரர்கள் ஒன்றாய் கண்டுகளிக்க
கொலைகார ஆட்டம் தயார்…

தண்ணீர் பாட்டிலிலும் இரசாயன குண்டு பீதி
இரசாயன குண்டு வீசியவனுக்கு பாதுகாப்பு, வெகுமதி
எது நடந்தாலென்ன ஆட்டத்தை நோட்டம் பார்த்து
அடுத்த நாள் அலுவலகத்தில் பேசிக் கொள்வதே
இரசிகனுக்கு நிம்மதி..

இதோ இந்த நேரத்தில்….
சுற்றி வளைக்கப்பட்ட முட்கம்பிகளுக்குள்
ஈழத்தமிழரின் உணர்வுகள் மிதித்து
அடித்து விளையாடும் சிங்கள இனவெறி…

இதோ இந்த நேரத்தில்…
சொந்த நிலத்தை தாங்கிப் பிடிக்க எத்தனிக்கும்
ஒரிசா-சத்தீஸ்கர் பழங்குடி மக்களின்
உயிரை குறிவைத்து வீசப்படும் இந்தியக் குண்டுகள்…

இதோ இந்த நேரத்தில்…
இந்தியா – பாகிஸ்தான் எல்லைக் கோட்டிற்குள்
பந்தாடப்படும் ஒரு காசுமீர் பெண்ணின் பிணம்…

விளையாட்டிற்கு இடையூறாக
குறுக்கே விழும் பிணங்களைத் தாண்டி
ரசிக்கக் கிளம்பி விட்ட நண்பனே,
மைதானத்திற்கு வெளியே எது நடந்தாலும்
தானுண்டு, வேலையுண்டு
மைதானத்திற்குள் நடப்பதைப் பார்ப்பதற்கு மட்டும்
எனக்கு ஒருநாள் விடுப்பு உண்டு என்பவனே,

இது கொலை வெறியன்றி வேறென்ன?

கட்டாயம் உன் கிரிக்கெட் வெறி
மன்மோகன்சிங்குக்குத் தேவை…
டெண்டுல்கர் பக்கம் உன் கவனத்தைத் திருப்பி விட்டு
அமெரிக்கா பக்கம் இந்திய வளங்களை  வீசியெறியும் அவர் திறமை
ஹர்பஜன் சிங்குக்கே கைவராதது…

“ஹௌ ஈஸ் தட்” என்று அலறும்
விளையாட்டு வீரனின் குதிப்பில்
“ஜெய் ஸ்ரீராம்” என்ற வெறியைப் பார்த்து
அத்வானியும் கிரிக்கெட்டை ரசிக்கலாம்,
விளாசப்படும் ஒவ்வொரு பந்திலும்
குஜராத்தில் வெட்டியெறியப்பட்ட
இசுலாமியர்களின் தலைகளாய்
அத்வானியின் கண்களுக்கு களிப்பு தரலாம்.

ராசபக்சே ரசிப்பதற்கும் நியாயமுண்டு…
இந்திய ராணுவத்தால் பயிற்சியளிக்கப்பட்டு
எந்த இடம் பார்த்து குண்டு வீச வேண்டுமென்று களம் அமைத்து
இந்தியா வழிநடத்திய ஆட்ட நுணுக்கங்கள்
இறுதிப் போட்டியின் ஆடுகளமாய்
ராசபக்சே கொலைகாரனுக்கு ரசிப்பு தரலாம்..

சொந்த நாட்டின் பாடுகளம் அனைத்தும்
அந்நியன் கைக்கு பறிபோவதைப் பற்றி  அக்கறையில்லை.
கிரிக்கெட்டின் ஆடுகளத்தில் மட்டும்
இந்தியா ஜெயிக்கிறதா என்பதுதான் உன் கவலை.

இந்த ரசனையை விட பயங்கரமானது வேறு உண்டா?

_____________________________________________________

– துரை.சண்முகம்.
_____________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

  1. கிரிக்கெட் பயங்கரவாதம் !…

    கொலை செய்தே ரன் குவிப்பதில் இந்தியாவில் மேன் ஆஃப் தி மேட்ச்’ அத்வானி! படுகொலை வேகத்தில் பிணம் குவிப்பதில் இலங்கையில் மேன் ஆஃப் தி மேட்ச்’ ராசபக்சே! கொலைகாரர்கள் ஒன்றாய் கண்டுகளிக்க கொலைகார ஆட்டம் தயார்……

  2. ///இந்த ரசனையை விட பயங்கரமானது வேறு உண்டா?///

    நிறைய இருக்கே. அண்ணன் ஸ்டாலின், சேர்மேன் மாவோ போன்ற கருணாமூர்த்திகள் நடத்திய மகத்தான ஜீவகாருண்ய செயல்களை பட்டியல் இட்டால் தெரியுமே.

    • சரியா சொல்லாம விட்டுவிட்டேன்.

      சரியான விடை : அதாவது மேற்சொன்ன அண்ணன்களின் திருவிளையாடல்களை இன்றும் ரசிக்கும் வினவு ரசிக பெரு மக்களின் ரசனை. அதை விட ‘பயங்கரம்’ வேறு என்ன இருக்கும். ஹிட்டரின் செயல்களை யாரும் இப்படி ‘ரசிப்பதில்லை’. ஆனால் ஹிட்லர்டுக்கு இணையான வரலாற்று நாயகர்கள் தான் இந்த ‘அண்ணன்கள்’ !!

      • ஹிட்லருக்கு இணையான தம்பிகள் ட்ரூமன் முதல் ஒபாமா வரையிலும் நீண்ட பட்டியல் உண்டு. வித்தியாசம் ஒன்றுதான் தம்பிகள் கமுக்கமாக குசு விடுபவர்கள். மாட்டிக்கொண்டாலும் விடுவிக்க உன்னைப்போன்ற கைக்கூலிகளைப் பெற்றிருப்பதும் இவர்களுடைய சிறப்பு.

      • மு.கைகூலியின்
        தொடர்ச்சியான விஜயகாந்த் பாணி பின்னூட்டங்கள்
        எப்படியே நமக்கு ஒரு இணையதள விஜயகாந்த் கிடைத்துவிட்டார்
        😛

    • இது எந்த வகையான விமர்சனம் என்று புரியவில்லை மு.கைகூலி, கவிதையின் வரிகள் உமக்கு புரியவில்லையா? இந்தியாவில் நிலவும் சூழலையும், கிராஸ்பெல்ட் விளையாட்டன கிரிக்கெட்டையும் ஒருங்கே அம்பலபடுத்தும் கவிதை மிக அருமை, குறை சொல்லவே குரைக்கும் உம்மை போன்றவர்களின் இலக்கே உழைக்கும் மக்களின் விடுதலைக்கான கம்யூனிசத்தை இழிவு படுத்துவது அதற்காக பேசுபவர்களின் மீது சேறடிப்பதும் தானே, வயிற்றெரிச்சலிலும் சுயசொரிதலுக்காகவும் எழுதும் இது போன்ற மறுமொழிகள் உம் மூளையில் நிறைந்து பின் மனநல பாதிப்பகிவிட போகிறது மு.கைகூல…

      • விடுதலை,

        கவிதை எல்லாம் புரிந்தது. அதன் கடைசி வரிக்கு தான் பதில் சொல்லி பின்னூட்டம் இட்டிருந்தேன். அதை உம்மால் தான் ‘புரிந்து’ கொள்ள முடியாமல் உளருகிறீர். மற்றபடி வாச்கர்கள் முடிவு செய்து கொள்ளட்டும் யார் விஜயகாந் என்று. ஓகே. நீரே முழங்க வேண்டாமே.

        கம்யூனிசம் என்ற பெயரில் நடந்த பயங்கரங்களை பற்றி சொன்னால், உடனே அது கம்யூனிசத்தை ‘இழிவு’ படுத்தும் நோக்கம் என்று பேசுவது ஒரு வகை மதவாதம் தான். இந்துத்வா கும்பல், இஸ்லாமிய மதவெறியர்கள் எல்லோரும் இதே லாஜிக் தான் பேசுவாக. நடந்த வரலாற்று உண்மைகளை மறுக்கும் உம்மை போன்ற அப்பாவி கம்யூனிஸ்டுகள், உண்மை தெரிந்தால் வாயடைத்து போய்விடுவீர்கள். அப்படி மூளைச்சலவை செய்யப்பட்டிருக்கிறீர்கள். நாங்கள் எடுத்துக்காட்டுவதெல்லாம் பொய்கள், மிகைபடுத்தப்பட்ட செய்திகள், அமெரிக்க ஊடக பொய் பிரச்சாரங்கள் என்று உங்களை நன்றாக் brain wash செய்திருக்கின்றனர். ஆனால் மார்க்சியதை முன்மொழியும் பல கோடி இதர கம்யூனிஸ்டுகள் மற்றும் இயக்கங்கள் இப்படி பேசுவதில்லை. அவர்கள் எல்லோரும் மடையர்கள், நீங்கள் சொல்வது மட்டும் தான் சரியானது என்பதும் ஒரு வகை மதவாதம் தான். சரி, எதை வேண்டுமானாலும் நம்புக. அது உமது பிரச்சனை. அறிவுலகம் எதை உண்மை என்று ஏற்றுக்கொள்கிறது என்பது வேறு விசியம்..

  3. கிரிக்கெட் வெறி எனும் புனித நீரில்
    குளிப்பாட்டி,
    சினிமா மோக வாசனைத் திரவியங்கள்
    பல தூவி,
    நாட்டுப் பற்றெனும் குங்கும விபூதியை
    நெற்றியிலிட்டு,
    இந்தியக் குடிமகன் எனும் மாலையை
    கழுத்தில் போட்டு…
    இதோ.. இன்று, இப்பொழுது
    நீ தேவியின் முன்னால்.

    இத்தனையும் எனக்கே எனக்கா
    என்று இறுமார்ந்திருக்கும் நீ.
    இன்றைய சுக போகங்களால்
    உன் தலை கிறுகிறுக்கிறது.
    கால்கள் நடனமாடுகிறது.
    ஒன்று பத்தாய்த் தெரிகிறது.
    உன் தலையசைப்புக்காக
    சுற்றி நிற்கும் பூசாரிகள்
    வாஞ்சையுடன்
    தலைகோதி விடுகிறார்கள்.

    எண்ணற்ற கரங்களால்
    எல்லாவற்றையும் பறித்து
    வாயில் போட்டுக் கொண்டு,
    கோர முகத்து கோரைப்பற்களில்
    ரத்தம் சொட்டச் சொட்ட
    கண்ணுக்குத் தெரியும் காட்டேறி,
    அந்த அமெரிக்க தேவி
    உன்னையே வெறித்தபடி
    பார்த்துக் கொண்டேயிருக்கிறாள்.

    கொடுவாளேந்தி
    குடுமி வைத்த பூசாரியும்
    கோட்டு சூட்டுப் போட்ட
    மௌனப் பூசாரியும்
    சூடத்தட்டில் காசு விழவிழ
    சாமியாடிக் கொண்டேயிருக்கிறார்கள்.
    சுற்றி நிற்பவர்களுக்கு
    அருள்வாக்கை அள்ளி வீசுகிறார்கள்.
    நாடு சுபிட்சமாகுமென்கிறார்கள்.
    பணம் பீய்ச்சியடிக்குமென்கிறார்கள்.
    உழைக்காமலேயே உட்கார்ந்து
    உண்ணலாமென்கிறார்கள்.
    அமெரிக்க தேவியின் அருள்
    என்றென்றுமுண்டு என்கிறார்கள்.
    அதற்காக
    ரத்தச் சாராயம் கேட்கிறார்கள்.
    அதற்காக
    நரபலி கேட்கிறார்கள்;

    நல்ல நாள் குறிக்கப்பட்டுவிட்டது.
    நீ தலையாட்ட வேண்டியதுதான் பாக்கி.

    • oh … U dont know abt manmohan’s background. He worked for WorldBank. He was inforced into indian politics by america only.

      varalaaru mukkiyam amaichare ..

      varalaaru padiyungkal …

  4. தண்ணீர் பாட்டிலிலும் இரசாயன குண்டு பீதி
    இரசாயன குண்டு வீசியவனுக்கு பாதுகாப்பு, வெகுமதி
    எது நடந்தாலென்ன ஆட்டத்தை நோட்டம் பார்த்து
    அடுத்த நாள் அலுவலகத்தில் பேசிக் கொள்வதே
    இரசிகனுக்கு நிம்மதி…

    மனிதநேயமற்ற மி………..ள்….!

  5. இன்றைய தினத்தந்தி யில் தயாரிப்பாளர் ஆர்.பி.‌சவுத்ரியின் மகன் ரமேஷ் நடிக்கும் “பிள்ளையார் கோயில் கடைசி தெரு” என்ற திரைப்படத்தின் விளம்பர வாசகம்

    “ராவணனுக்கு சங்கு! ராமன்தான் கிங்கு!”

    அந்தப்படத்தின் இயக்குனருக்கு கூடவா அறிவில்லை? நீ கிரிக்கெட்ல ஜெயிச்சா ஜெயிச்சுக்க! தோத்தா தோத்துக்க! சச்சினை காட்டி உங்க பன்னாட்டு குளிர்பானங்களை விற்பதுக்கும், நமீதாவை காட்டி உங்க பணப்பெட்டியை நிரப்பிக்கொள்வதற்கும் உன் கதைப்படியே ராமனை விட பல மடங்கு நல்லவனும் வீரனுமாகிய தமிழ் அரசன் இராவணனை எதுக்குடா இழுக்குறீங்க? தமிழன் சுரனை கெட்டவன் கண்டுக மாட்டான் என்ற நினைப்பா? இன்றைக்கு உடலில் தேசிக்கொடிய வரைந்துகிட்டு நிக்குற, டிவி ல சரக்கு விளம்பரத்துல கூட தேசிக்கொடி பறக்குது உன் தேசப்பற்றேல்லாம் சுதந்திர தினத்தன்று எங்கேடா போகுது தியாகிகளை எல்லாம் விட்டுவிட்டு நடிகைகளை எல்லாம் பேட்டி எடுத்து போடுரானே டிவி ல ஏன்? அன்றைக்கு ஏன் தேசியக்கொடி யை உன் தலையில வெட்டிகல? உடம்புல பூசிக்கல?

    //சொந்த நாட்டின் பாடுகளம் அனைத்தும்
    அந்நியன் கைக்கு பறிபோவதைப் பற்றி அக்கறையில்லை.
    கிரிக்கெட்டின் ஆடுகளத்தில் மட்டும்
    இந்தியா ஜெயிக்கிறதா என்பதுதான் உன் கவலை//

    அருமையான கவிதை கவிஞர் துரை.சண்முகத்திற்கு நன்றி!
    கொலைகாரன் ராஜபக்சே வின் இந்திய வருகையை எதிர்ப்போம்!

  6. அருமை ..வினவுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள் :-)உணர்வால் தமிழால் நாம் ஒன்று 🙂

  7. The moral justification of capitalism does not lie in the altruist claim that it represents the best way to achieve “the common good.” It is true that capitalism does—if that catch-phrase has any meaning—but this is merely a secondary consequence. The moral justification of capitalism lies in the fact that it is the only system consonant with man’s rational nature, that it protects man’s survival qua man, and that its ruling principle is: justice.

    Capitalism is a social system based on the recognition of individual rights, including property rights, in which all property is privately owned.

    The recognition of individual rights entails the banishment of physical force from human relationships: basically, rights can be violated only by means of force. In a capitalist society, no man or group may initiate the use of physical force against others. The only function of the government, in such a society, is the task of protecting man’s rights, i.e., the task of protecting him from physical force; the government acts as the agent of man’s right of self-defense, and may use force only in retaliation and only against those who initiate its use; thus the government is the means of placing the retaliatory use of force under objective control.

    • I could not suppress my laughter after reading the justification of capitalism by a capitalist defender. Robert Frost’s famous poem ‘Mending Wall’ comes to my mind. Frost writes his neighbour can’t think beyond what his father had said. He is a savage whose views are harnessed and lives in a fool’s paradise. Capitalism.org is also a kind of person like that. He thinks capitalism is the best system and there is no replacement for that failing to see the various societal changes. Capitalism at its core has been dead long ago. The capitalist governments have no regard for their parliament. In India important decisions are taken out of the parliament. Slowly capitalist governments are creeping towards fascism. Capitalism.org is simply reading out some passages of capitalist principles. When anybody reads the Indian Constitution they get a sensation that India must be an ideal society in respecting human rights. But what is the reality. People in power treat the constitution of India as toilet paper. Former Election Commissioner JM Lingdo said 90 percent of the politicians of India do not know what is democracy. Should the people of India wait and languish till these people learn the essence of capitalist justice. Let Capitalism.org understand- people haven’t been mute spectators always in history.

      • //The capitalist governments have no regard for their parliament.///

        very wrong sukadev. pls go thru that site capitalism.org or google about Libertarianism for full details. We are for full implementation of UN declaration of human rights, of which right to property is but a part :

        http://www.un.org/en/documents/udhr/index.shtml
        The Universal Declaration of Human Rights – 1948

        We are against any form of violence in human relationships. and we are for representative democracy and decentralisation of power. Pls do not confuse Indian conditions with our objectives. they are very different. (you argue in the same line about pure communism and what happened in USSR, etc, don’t u ? same logic here).

  8. இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுக்காக, இலங்கையுடன் இனி கிரிக்கெட் விளையாட மாட்டோம் என இந்தியா அறிவிக்காதது ஏன்? என்று அதிரடியாகக் குரல் கொடுத்துள்ளார் பால் தாக்கரே.
    தமிழகத்துக்கு வெளியே வேறு எந்த அரசியல்வாதியுமே தமிழீழத்தில் கொல்லப்பட்ட அப்பாவித் தமிழர்களுக்காக குறைந்தபட்சம் நீலிக் கண்ணீர் கூட வடிக்கவில்லை. ஆனால், உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி நடக்கும் இந்த முக்கிய தருணத்தில், அதிரடியாகத் தமிழர்களுக்குக் குரல் கொடுத்துள்ளார் சிவசேனா நிறுவனர் பால் தாக்கரே. அவர் மீது பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும், விடுதலைப் புலிகளுக்கு பகிரங்கமாக ஆதரவளித்தது, தொடர்ந்து தமிழர்களுக்கு சாதகமான நிலைப்பாட்டை அவர் எடுத்து வருவது போன்றவற்றில் துணிச்சலான அரசியல் தலைவராக தன்னை காட்டி வருகிறார்.
    இன்று அவர் தனது சாம்னா பத்திரிகையில் எழுதியுள்ள தலையங்கக் கட்டுரையில், “உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரை இறுதி மும்பையில் நடக்காததற்காக அன்னை ஜெகதாம்பாளுக்கு நன்றி செலுத்துவோம். இந்தப் போட்டியைக் காண பாகிஸ்தான் பிரதமரை அழைத்தது முட்டாள்தனம். இதனால் ஒன்றும் நடந்து விடாது, வெற்று விளம்பரம் கிடைத்ததைத் தவிர. பாகிஸ்தானின் குணம் அப்படி.
    சரி, அரை இறுதியைக் காண இந்திய பிரதமர் அழைத்ததால் கிலானி இந்தியா வந்தார். இப்போது இலங்கை அதிபர் இந்தியா வருவது எதற்கு? ராஜபக்சே அழைக்கப்பட்டதாகத் தெரியவில்லையே? இவருக்கு இந்தியா அழைப்பு அனுப்பியதா அல்லது அழைக்காமலேயே அவர் வருகிறாரா?
    இலங்கையில் கொல்லப்பட்ட தமிழர்கள், அதற்காக வேதனைப்படும் தமிழ் சகோதரர்களுக்காக ஏன் இலங்கையுடன் இனி கிரிக்கெட் விளையாட மாட்டோம் என இந்திய அரசு அறிவிக்கக் கூடாது? இலங்கையில் உள்ள தமிழர்கள் இந்திய வம்சாவளியினர்தானே… கிரிக்கெட்டைப் பயன்படுத்தி பாகிஸ்தானுடனான பிரச்சினையைத் தீர்க்க முடியும் என நம்பும் மன்மோகன் சிங், தமிழர் பிரச்சினையையும் இதே கிரிக்கெட்டைப் பயன்படுத்தி தீர்த்து வைக்க ஏன் முனையவில்லை. இலங்கையுடன் கிரிக்கெட் விளையாடமாட்டோம் என அறிவிக்கலாமே… பாகிஸ்தானுக்கு ஒரு அணுகுமுறை, இலங்கைக்கு ஒரு அணுகுமுறையா?”, என்று கேட்டுள்ளார் பால் தாக்கரே.

    • பால தாக்க்ரே ஒரு ஃபாசிச அயோக்கியன். சட்டப்படி தண்டிக்கப்பட்டு சிறையில் அடைத்திருக்க வேண்டும். ஆனால் செய்ய யாராலும் இயலவில்லை. மத வெறியன். ஊழல் அராஜக குண்டர்களின் தலைவர். எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாத படுபாதகன்.

      முஸ்லிம்களுக்கு எதிர்காக, பிற மாநிலத்தவர்க்ளுக்கு எதிராக, மாராட்டிய தேசிய வாத்தை (இங்கு தமிழ்,சிங்கள் தேசியவாதங்களை விட கொடூரமாக) தூண்டி, நெருப்பு மூட்டி, அதில் குளிர் காய்கிறவர். பொய்யான் : கலாச்சார காவலர்கள் என்று பொய் வேசம் போடும் அயோக்கியனின் குடும்பம், பல ஆபாச இந்தி திரைபடங்களுக்கு ஃபைனான்ஸ் செய்கிறது. எல்லாம் வேசம். தூக்கில் இடப்பட்டிருக்க் வேண்டிய பாவிப்பயல் இவன். இவனை போய் துணைக்கழைக்கும் மடத்தனம் பொல் எதுவும் இல்லை. ஒரு காலத்தில் அங்கிருந்து, தமிழர்களையும் அடித்து விரட்டியவன் என்பதை தெரிந்து பேசுக. இவன போட்டு தள்ளனா, பெரிய அளவில் முஸ்லீம்களுக்கு எதிராக வன்முறை வெடிக்கும் என்ற ஒரே காரணத்தினால் தான் தாவுத் கும்பல் மற்றும் ஜிகாதிகள் இவனை இன்னும் விட்டு வைத்திருக்கின்றனர். இவனுக்கெல்லாம் நல்ல சாவே வராது. இந்தியாவில் மிக மிக மிக மிக வெறுக்கத்தக பாவி என்றால் அது இவன் தான்.

      இலங்கையோடு கிரிக்கெட் விளையாடினால் என்ன பெரிய விசியம். வர்த்தக, தொழில் உறவு தொடர்கிறது. சுற்றுலா செல்கிறார்கள். படப்பிடிப்பு நடக்கிறது. எல்லா வகையான உறவுகளும் தொடர்கின்றன. டிப்ளமேட்டிக் தொடர்புகள், ராணுவ தொடர்புகள், etc, etc. என்ன பெரிய கிரிக்கெட். மற்றதெல்லாம் கண்னுக்கு தெரியலையா ?

      • “இலங்கையோடு கிரிக்கெட் விளையாடினால் என்ன பெரிய விசியம். வர்த்தக, தொழில் உறவு தொடர்கிறது. சுற்றுலா செல்கிறார்கள். படப்பிடிப்பு நடக்கிறது. எல்லா வகையான உறவுகளும் தொடர்கின்றன. டிப்ளமேட்டிக் தொடர்புகள், ராணுவ தொடர்புகள், etc, etc. என்ன பெரிய கிரிக்கெட். மற்றதெல்லாம் கண்னுக்கு தெரியலையா ?”

        இவரின் முந்தைய பின்னூட்டத்தில் கூட அவளவாக தெரிய வில்லை , இந்த கடை சி பாரவை படித்த பிறகாவது புரிகிறதா ? இவர் குறை கண்டு பிடித்தே
        பேர் வாங்க நினைக்கும் ஒரு மன நலம் பிழன்ற மனிதர் என்று ? ஏன் முதலாளிதுவ கைகூலி அவர்களே , இலங்கை இல் கொடூரமாக கொல்ல பட்டவர்களில் , உங்கள் தாயோ, தந்தையோ , இல்லை சகோதர சகோதரியோ இருந்திருந்தால் இப்படி தான் சொல்லுவிற்கலா?
        இரண்டு முக்கியமான விஷயம் .
        1) ஆயிரம் பல தாக்ரே கல் வந்தாலும் , அத்வானி கல் வந்தாலும் , ஏன் உங்கள் கூற்று படியே ஸ்டாலின் என யார் வந்தாலும் , பாதுகாப்பு வளையம் என்று மக்களை வர வளைத்து கொன்ற , பெண்களின் கர்ப்ப பையை கிழித்து சிசுகளை கொன்ற ராஜா பக்சே விற்கு ஈடு இணை ஆகா முடியாது .
        2 ) இத்தனை கொடூரங்கள் நிகழ்த்திய பிறகும் , நிகழ்த்தியவர்களுக்கு ஆதரவாக பேசும், செயல் படும் ஈன, அற்ப, ஏன் கேடு கேட்ட ஜென்மங்களை
        தமிழ் இனத்தில் மட்டும் தான் காண முடியும் . ( மற்ற நாடுகளை விட இலங்கை உடன் இந்த உறவுகளை பேணுவதால் அப்படி என்ன பெரிய மாற்றம் இந்திய அரசியல் , பொருளாதரத்தில் உருவாகி விட போகிறது ? , உங்கள் நலனுக்காக நீங்கள் என்ன வேண்டுமானலும் செய்து கொள்விர்கள ?)

  9. இந்த மேட்சில் இந்தியா வெற்றிபெற்றுவிட்டால்(வெற்றிபெற்றுவிட்டால்…என்ன, இந்தியாதானே வெற்றிபெறும்! அதுதானே ஏற்பாடு?) அது எந்த நேரமாயிருந்தாலும் இந்தியா பூராவும் கொளுத்தப்போகிறார்கள் பாருங்கள் பட்டாசுகளை…மாசு கட்டுப்பாடு,ஒலிக்கட்டுப்பாடு, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எல்லாமே மக்கி மண்ணாகப்போகும். ஒரு மிகப்பெரிய பொக்கிஷத்தை, அல்லது பணத்தை, அல்லது ஏடிஎம் கார்டைக்கூட இவ்வளவு பத்திரமாக வைத்திருப்பானா தெரியாது. கிரிக்கெட்டில் ஜெயித்தவுடன் கொளுத்துவதற்கென்று பட்டாசுகளைப் போற்றிப் பாதுகாத்துவைக்கிறான் பாருங்கள் நம் இளைஞன் இவனுடைய செய்கையை நினைத்தால்தான் புல்லரிக்கிறது…துரை.சண்முகத்திற்குப் பாராட்டுக்கள்.

  10. வேதனை என்ன தெரியுமா? தனிமனித மனதோடு இருக்க வேண்டிய விளையாட்டை நாட்டுப் பற்றோடு பிணைத்து ஒரு வித வெறியை அல்லது போதையை ஏற்றிவிட்டிருக்கிறார்கள் விளப்பரக் கொள்ளையர்கள். விளையாட்டில் நாட்டுப் பற்று என்கிற போதை எப்போது இறங்குகிறதோ அப்போதுதான் இந்த சர்ச்சைகள் முடிவுக்கு வரும். அதுவரை நாட்டுப் பற்று போதையில் ஆட்பட்டவர்களின் தள்ளாட்டங்களை இரசிப்பதைத்தவிர வேறு வழியில்லை. ஆனால் ஏதோ ஒரு நாள் பளார் என கன்னத்தில் அறைவிழும் போது போதை தெளியும். அப்போது உணர்வார்கள்… அடடா…நாம் இதுவரை போதையில் இருந்தோமா என்று?

  11. 20 வருடங்களுக்கு முன்பாக எழுத்தாளா் சுஜாதா எழுதிய தூண்டில் கதைகள் வரிசையில் கிரிக்கெட் வீரர் ஒருவரை, அதை வைத்து சூதாடும் தரகர் ஒருவர் சந்தித்து நீ இன்று சதம் அடிக்காமல் அவுட் ஆகிவிட வேண்டும், அதற்கு குறிப்பிட்ட லட்சங்கள் பெற்றுக் கொள் என பேரம் பேச, அந்த வீரர் முடியவே முடியாது என மறுத்து தேசபக்தியாக இருப்பார்
    ———
    அடுத்தநாள் விளையாட்டின் போது சதம் அடிக்காமல் LBW அவுட் ஆகிவிடுவார்
    ———
    மறுநாள் மீண்டும் அந்த தரகர் குறிப்பிட்ட வீரரை சந்தித்து நீ முடியாது என்றதால், “அம்பையரை கரெக்ட்” செய்ய வேண்டியதாயிற்று என்று கூறுவதாக கதை முடியும்
    ———
    ஐபிஎல் லலித் மோடி, ஐசிசி சரத்பவார் என ஊழல் செய்திகள் ஒருபுறம். ஒவ்வொரு நடவடிக்கையும் விளம்பரதாரர்களாலும், பன்னாட்டு வியாபாரிகளாலும் முடிவு செய்யப்பட்டு (பிக்சிங்) நடக்கிற நாடக “மேட்ச்” கள் மறுபுறம்.
    ———–
    ஆனால் இவற்றை முகத்தில் தேசியக் கொடியை வரைந்து கொண்டு, கையில் கோக் மற்றும் குர்குரேயுடன், கொலைகார ராஜபட்சேயுடன் அமர்ந்து ரசிக்கும் நடுத்தர வர்க்கம்

    • //ஆனால் இவற்றை முகத்தில் தேசியக் கொடியை வரைந்து கொண்டு, கையில் கோக் மற்றும் குர்குரேயுடன், கொலைகார ராஜபட்சேயுடன் அமர்ந்து ரசிக்கும் நடுத்தர வர்க்கம்//

      அது அவர்களின் அடிப்படை உரிமை அய்யா. கம்யூனிச சர்வாதிகாரம் மூலம் இதையெல்லாம் தடை செய்ய வேண்டுமா என்ன ? ஏற்றுக்கொள்ள முடியாது. எதை ’ரசிப்பது’ என்பதை மக்கள்தான் தீர்மானிப்பர். கமிஸார்கள் அல்ல.

      இந்த வெற்றி ஒரு தன்நம்பிக்கையை அனைவருக்கும் அளிக்கும். இந்தியாவின் எதிர்காலத்தை பற்றி நம்பிக்கை பிறக்க வகை செய்கிறது. 25 ஆண்டுகளுக்கு முன்பு வேலை தேடிய போது இருந்த நம்பிக்கையை விட இன்று மிக அதிகம் பிரகாசம் தெரிகிறது. இந்த வெற்றி பாஸிட்டிவ் ஆகவே வேலை செய்யும்.

      • //இந்த வெற்றி ஒரு தன்நம்பிக்கையை அனைவருக்கும் அளிக்கும். இந்தியாவின் எதிர்காலத்தை பற்றி நம்பிக்கை பிறக்க வகை செய்கிறது.//
        ஹய்யோ! இந்த கொசுத்தொல்ல தாங்கமுடியலப்பா

  12. கப்பு வேற ஜெயிச்சுட்டானுங்க. இனி அல்லக்கைகளின் ஆசனவாயிலிருந்து சத்தம் வந்து கொண்டே இருக்கும்.

    • இந்தியா வென்றாலும் இலங்கை வென்றாலும் இன்று உங்கள் ஆசனவாய்கள் மூடியே இருந்திருக்கும்- நல்லது தான் நாட்டில் நாற்றம் குறைச்சலாக இருக்கும்.

    • ஏன், உங்க ஆசன வாயிலிருந்து மட்டும் தான் தொடர்ந்து சத்தம் வந்து கொண்டிருக்க வேண்டுமா என்ன ? இதுவரை இங்கு அந்த சத்தம் மட்டும் தான் கேட்டுகொண்டிருந்ததே !!!!
      :))))))

    • வர்ற சத்தத்த நல்லா கேளு …..உங்க கேள்விக்கு எல்லாம் அதுதான் பதில்

    • பல அல்லக்கைகள் தங்கள் *#% $@^த் திறக்கும் உரிமையை வலியுறுத்தத் தொடங்கி விட்டன.

  13. YES WE HAVE WON.INDIA HAS WON.VINAVU AND CO CAN WEEP TILL THE NEXT WORLD CUP.KEEP ON WEEPING KEEP ON WEEPING YOU TRAITORS WHO WANTED PAKISTAN TO WIN.WRITE THOUSAND SUCH POEMS WHO CARES.DOGS BARK CARAVAN MOVES.

    • ஆமா இந்தியாவுல தனக்கு சாதகமா பிச்சு செட் பண்ணி ஜெயிக்கிறது பெரிய விஷயமா?தோனி ஒரு டொம்ம!

    • அருமை யாக சொனிர்கள் ஊரன் அவர்களே , ஆனாலும் என்ன தான் செருப்பால் அடித்தாலும் நம் தமிழ் இனத்திற்கு உறைக்குமா என்ன?

  14. நாட்டில் உள்ள பெரும்பான்மையான மக்கள் கிர்க்டெட் விளையாட்டை விரும்புகிறார்கள். ரசிக்கிறார்கள். சாதி, மத, இன, மொழி, வரக் வேறுபாடுகளை மறந்து, ஏழை பணக்காரன் என்ற வித்தியாசங்களையும் சில மணி நேரங்களாவது மறந்து, ஒன்றுபட்டு உணர்கிறார்கள்.
    தம் கவலைகளையும், துன்பங்களையும் தற்காலிகமாக மறக்க உதவுகிறது. நாம் எல்லோரும் சக மனிதர்கள் என்ற நல்லெண்ணத்தையும் தோற்றுவிக்கறது. அது எத்தனை ’மேலோட்டமாக’ இருந்தாலும், ஒரு பாஸிட்டிவ்வான விசியம் தான். இதில் என்ன தவறு ?
    உங்களுக்கு வேண்டுமானால் இவை தேவையில்லை என்று படலாம். ஆனால் பல கோடி மக்கள் அப்படி கருதவில்லை.

    எல்லோரும் கொஞ்சம் நேரமாவது ஒற்றுமையா, சந்தோசமா இருந்தா புடிக்காத உங்களுக்கு ? மேலும் இக்கட்டுரை மிகை படுத்துவதை போல தேசிய வெறி, தோற்ற அணிகளை இகழவெதல்லாம் இப்ப நடப்பதில்லை. மிக குறைந்துவிட்டது தான்.

    • …”தம் கவலைகளையும், துன்பங்களையும் தற்காலிகமாக மறக்க உதவுகிறது….”
      தண்ணி அடிப்பவனும் இதைத்தானே சொல்கிறான். கவலைகளும் துன்பங்களும் தொடரவே சாராயக்கடைகளை திறக்கிறான்… கிரிக்கெட் போட்டிகளையும் நடத்துகிறான். கவலைகளையும், துன்பங்களையும் மறக்க நான் குடிப்பேன், அதைக் கேட்க நீ யார்? எனக் கேட்டால் யார்தான் உங்களைக் காப்பாற்ற முடியும்.?

  15. ஒண்ட இருந்த குடிசைகள் எரிக்கப்பட்டன
    இல்லை இல்லையில்லை
    எரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன
    இதோ இன்னொரு
    பெருமையைப்பார்த்தீர்களா
    இங்கேயும் ஏழு சதங்கள்

    இதுவும் இந்திய தேசியத்திற்கு
    தானே அர்ப்பணம்

    இங்கும்
    மட்டைகள் விளாசப்படுகின்றன
    ஓடுகின்றன பந்துகள்
    அவைகள் இடைஞ்சலாய்
    இருக்கின்றனவாம்

    அடிவாங்கிய பந்துகளால்
    அமைதியாயிருக்க முடியவில்லை
    அடிமையாய் இருக்க முடியவில்லை
    திருப்பி அடிக்க தீர்மானித்துவிட்டன
    உடைந்து போன பந்துகள்
    கைதட்டியே பழக்கப்பட்ட கைகளே
    இப்போது சொல்லுங்கள்
    யாருக்கு கைதட்டப்போகிறீர்கள்?

  16. கிரிக்கெட்- பார்த்தது காங்கிரஸ் காரன் இங்கே அத்வானி எங்கே வந்தார்

  17. இலங்கை தமிழர்களை கொன்று குவித்த கொலைகாரன் ராசபக்சே
    அதற்க்கு தேவையான பொருள் உதவி, ஆயுத உதவி செய்தது ஈன இந்திய அரசு, இதே இலங்கை அரசு இந்திகாரனுங்கள கொன்று குவித்திருந்தால் சும்மா இருந்திருக்குமா இந்திய அரசு
    மண் மன்மோகன், காட்டேரி சோனியா இவர்களுக்கு கிரிக்கெட் பார்க்க நேரம் இருக்கு ஆனா தமிழக மீனவர்கள் படுகொலைக்கு பதில் அடி கொடுக்கவோ இல்ல கண்டனம் தெரிவிக்கவோ நேரம் இல்லை, மட தமிழர்கள் இருக்கும் வரை இது தொடரும், தமிழன் இந்தியாவை ஒரு தலையாக காதலிக்கிறான் ஆனால் இந்தியாவோ தமிழனையும் தமிழ் மொழியையும் முற்றிலுமாக புறக்கணிக்கிறது இதை என்று உணர்கிறானோ அன்றுதான் தமிழனின் வாழ்வு வளமாக அமையும்.
    இலங்கை தமிழ் மக்களின் எதிரி
    இந்தியா தமிழ் மக்களின் துரோகி

  18. குஜராத்நரபலி மன்னன் மோடிக்கு மேன் ஆஃப் தி தொடர் கொடுக்கலாம்

Leave a Reply to kalagam பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க