Sunday, November 27, 2022
முகப்புபோலி ஜனநாயகம்சட்டமன்றம்உங்கள் ஓட்டு திருவாளர் நாய் வேட்பாளருக்கே!

உங்கள் ஓட்டு திருவாளர் நாய் வேட்பாளருக்கே!

-

மக்கள் கலை இலக்கியக் கழகம்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி

விவசாயிகள் விடுதலை முன்னணி

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி

பெண்கள் விடுதலை முன்னணி

பெறுநர்: ஆசிரியர், வலைப்பூக்கள், தமிழ்நாடு

பொருள்: துவாக்குடி ஆய்வாளரின் ஜனநாயக உரிமை மறுப்பை கண்டித்து திருவாளர் நாய்க்கு ஓட்டுக் கேட்டு பிரச்சாரம் – கைது – தொடர்பாக

அய்யா, அம்மா,

நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு “எங்களுக்கு ஓட்டுப்போடுங்கள்” என்று எல்லா கட்சிகளும் வாக்கு சேகரிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், துவாக்குடி காவல்நிலைய சரகத்தில் “யாருக்கும் வாக்களிக்க வேண்டாம்” என்று பேச எமது அமைப்புகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மாற்றுக் கருத்தை முன்வைக்க மக்களுக்குள்ள உரிமைதான் ஜனநாயகம். ஆனால், ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்காக நடத்தப்படும் தேர்தல் பிரச்சாரத்திலேயே இந்த உரிமை மறுப்பு துவங்கிவிடுகிறது. இதைத்தான் போலி ஜனநாயகம் என்கிறோம். இது மட்டுமல்ல,

* தேர்ந்தெடுக்கப்பட் மக்கள் பிரதிநிதி மக்களிடம் வாக்குறுதி அளித்ததற்கு எதிராக, மக்கள் விரோதமாக செயல்படும்போது தட்டிக்கேட்கவோ, தண்டிக்கவோ, திருப்பி அழைக்கவோ வாக்களித்த மக்களுக்கு உரிமையில்லை.

* தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிக்கு சட்டம் இயற்ற மட்டுமே அதிகாரம்; அதை அமல்படுத்தும் அதிகாரமோ அதிகாரவர்க்கத்திடம். ஆனால் இந்த அதிகார வர்க்கம் மக்களை மதிக்காமல் அடாவடியாக செயல்படும்போது அவர்களைத் தட்டிக் கேட்கவோ தண்டிக்கவோ மக்களால் முடியாது. ஏனெனில் இவர்கள் மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை; இவர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமை மக்களுக்கில்லை.

* உண்மையில் மக்கள் பிரதிநிதிகளும், அதிகார வர்க்கத்தினரும் மக்களுக்காக ஆட்சி செய்வதில்லை. அவர்கள் அமெரிக்காவுக்கும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கும்தான் சேவை செய்கிறார்கள் என்பதுதான் எமது கருத்து. விக்கிலீக்ஸ் மூலம் கசிந்த செய்திகளும் இதையே உறுதி செய்துள்ளன.

இவற்றை முன்வைத்து, தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி தவறு செய்யும் போது திருப்பியழைக்கும் உரிமை; தேர்ந்தெடுத்த பிரதிநிதிக்கே சட்டம் இயற்றவும் அதை அமல்படுத்தவும் உரிமை; அனைத்து அதிகாரிகளும் கூட தேர்ந்தெடுக்கப்படவும் திருப்பியழைக்கப்படவுமானவர்களாக ஆக்கப்படுதல் என்ற உண்மையான மக்களாட்சிக் கோட்பாடு கொண்ட புதிய ஜனநாயக முறை வேண்டும். இதை ஒரு மக்கள் புரட்சியின் மூலமே அடைய முடியும் என்று விளக்கிப் பிரச்சாரம் செய்ய அனுமதி கோரியிருந்தோம். திருச்சி மாநகரத்தில் அனுமதி தரும்போது இங்கு மட்டும் அனுமதி தர மறுத்தது இந்த காவல் ஆய்வாளரின் தனிப்பட்ட வெறுப்புணர்ச்சியன்றி வேறென்ன?

இத்தகைய சூழலில், இதைக் கண்டிக்கும் முகமாகவும் எமது கருத்தை மக்களிடம் முன்வைத்து ஆதரவு திரட்டும் முகமாகவும் எமது இன்றைய பிரச்சாரம் திட்டமிடப்பட்டது. தேர்தலில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மக்களுக்கான ஆட்சியாக இருக்கப் போவதில்லை. தனியார்மயம்-தாராளமயம்-உலகமயம் என்ற பெயரில் நாட்டையும் வளங்களையும் பன்னாட்டு, உள்நாட்டு கார்ப்பரேட் முதலாளிகளுக்கு விற்பதையே நோக்கமாகக் கொண்ட ஆட்சியாகத்தான் இருக்கப் போகிறது, ஊழல் ஆட்சியாகத்தான் இருக்கப் போகிறது. இதை மறைக்க டாஸ்மாக் மூலம் மக்களிடம் பறித்த பணத்தில் மக்களுக்கு இலவசங்களை வழங்கி ஏய்க்கின்றனர் இந்த ஓட்டுக்கட்சிகள்… என்ற கருத்துக்களை முன்னிறுத்தி, “உலக வங்கியின் உத்தரவுக்கு நாய் ஆடினால் என்ன, நரி ஆடினால் என்ன? இதற்கு தேர்தல் ஒரு கேடா?” என்ற தலைப்பில் நாய் வேட்பாளர் பைரவனுக்கு ஓட்டுகேட்டு எமது தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினோம்.

உங்கள் ஓட்டு திருவாளர் நாய் வேட்பாளருக்கே!

உங்கள் ஓட்டு திருவாளர் நாய் வேட்பாளருக்கே!

உங்கள் ஓட்டு திருவாளர் நாய் வேட்பாளருக்கே!

காலை 11 மணிக்கு துவாக்குடி அண்ணா வளைவு பகுதியில் இந்த பிரச்சார இயக்கத்துக்கு தோழர் சங்கர் தலைமை தாங்க, ம.க.இ.க தோழர் ஜீவா துவக்கி வைத்து உரையாற்றினார்.

பட்டாசு வெடித்து தாரை, தப்பட்டை முழங்க திரளாகக் கூடிசெய்த இந்த பிரச்சாரத்திற்கு பகுதி வாழ் உழைக்கும் மக்களிடையே ஆரவாரத்துடன் கூடிய பெருத்த வரவேற்பு கிடைத்தது. பிரச்சாரத்தையும் மக்களின் பேராதரவையும் கண்ட காவல்துறை ஜனநாயக விரோதமாக பெண்கள் குழந்தைகள் உட்பட 40க்கும் மேற்பட்ட தோழர்களை கைது செய்துள்ளது. இச்செயலை வன்மையாக கண்டிப்பதுடன் கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனே விடுதலை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். நன்றி

இப்படிக்கு

தோழர் து.ராஜா

மாவட்ட செயலாளர், ம.க.இ.க.

__________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

தேர்தல் 2011

விக்கி லீக்ஸ்

 1. உங்கள் ஓட்டு திருவாளர் நாய் வேட்பாளருக்கே !…

  உலக வங்கியின் உத்தரவுக்கு நாய் ஆடினால் என்ன, நரி ஆடினால் என்ன? இதற்கு தேர்தல் ஒரு கேடா? என்ற தலைப்பில் நாய்க்கு ஓட்டுகேட்டு எமது தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினோம்….

 2. வாக்காளர்களே கவனியுங்கள்: 1 ஓட்டுக்கு ரூ.200 வாங்கினால் ஒரு நாளுக்கு 11 பைசாதான் லாபம்; திருச்சியில் விநியோகிக்கப்படும் நோட்டீசால் பரபரப்பு

  http://www.viyapu.com/news/?p=33369

 3. 49 O வுக்கு போட சொன்ன போது கண்டு கொள்ளாதவர்கள்…

  1980களில் இருந்து வி.பி.சிங் காலத்தில் நடந்த ஒரு தேர்தலை தவிர மற்ற அனைத்தையும் காஷ்மீர் மக்கள் புறகணித்த போது… ராணுவம் போலி வாக்களித்து ஜனநாயக கடமையை செய்தது போல்… இந்த கூலிக்கு மாரடிக்கும் இந்திய போதை போலிஸும் செய்து கொள்ளலாமே…

  ஏன் மக்களின் குரல் வலையை நெறிக்க வேண்டும் என தெரியவில்லை… இவர்களுக்கு ஹிந்திய போதை தலைகேறி விட்டது…

 4. உங்கள் ஓட்டு திருவாளர் நாய் வேட்பாளருக்கே!

  அப்ப எங்க தொகுதியில நீங்க நிக்குரீங்கலா வீணாப்போன வினவு அன்னே…

  • ஓட்டுப்பொறுகளை நாயின்னு சொன்னா நீங்க ஏன் சார் குறைக்கிறீங்க ?

    • பன்றி
     பன்றியை குளிப்பாட்டு
     மீண்டும்மீண்டும் குளிப்பாட்டு
     பன்றித் தொழுவத்தில் வை
     மீண்டும் பன்றிதான்
     மீண்டும்மீண்டும் பன்றிதான்
     மாறாத ஒன்றில் சண்டமாருதம் செய்
     மாற்றம் கோருபவனை
     முச்சந்தியில் வய்.

 5. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் அவசியம் தேவை என்ற முடிவுடன், ஓட்டளிக்க தயாராகிவிட்டனர் மக்கள். காரணம், 2006ல் கருணாநிதி பதவியேற்றது முதல், அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயர்ந்துவிட்டது.மின்வெட்டும் அடிக்கடி ஏற்படுவதால், விவசாயிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்னர். இவற்றை கட்டுப்படுத்த முடியாத கருணாநிதி அரசுக்கு பாடம் கற்பிக்க மக்கள் தயாராகிவிட்டனர்.அதுமட்டுமின்றி, அரசு போக்குவரத்து பணிக்கு, இரண்டு லட்சமும், சத்துணவு ஊழியர் பணிக்கு, ஒரு லட்சமும், ஆயாக்கள் பணிக்கு, 50 ஆயிரம் பெறப்பட்டு, பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள் எதையும், லஞ்சமின்றி பெற முடிவதில்லை.தி.மு.க., அரசு, இலவச கலர், “டிவி’ கொடுத்ததாக, பெருமை பேசி வருகிறது. அந்த, “டிவி’ மூலம் தான், மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. ஸ்பெக்ட்ரம் ஊழல் முதல், தி.மு.க.,வின் அனைத்து ஊழல்களும் தெரிந்து தான், ஆட்சி மாற்றம் கட்டாயம் வேண்டும் என்ற முடிவுக்கு மக்கள் வந்துள்ளனர். புதியதாக அமைய உள்ள ஆட்சி, தி.மு.க., குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் அரசு அதிகாரிகள், கடந்த ஐந்து ஆண்டுகளாக, சட்டத்திற்கு புறம்பாக சேர்த்துள்ள சொத்துக்களை கணக்கெடுத்து, பறிமுதல் செய்ய வேண்டும் என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

  • இதையெல்லாம் கடந்த காலங்களில் ஜெயவும் செய்திருக்கிறார். அத்னால் ஆட்சியை மாற்றி யாரிடம் கொடுக்க போகிறீர்கள்.

   மதிபிற்குறிய ஆட்சி மாற்றம் தேவை,

   நீங்க‌ள் இனி ஐந்து வ‌ருட‌த்திற்கு ஒரு முறை வ‌ந்துக்கொண்டே தான் இருப்பீற்க‌ள், ஒரு வேளை இந்த‌ முறை ஆதிமுக‌ ஜெயித்தால் இதே ப‌ல்ல‌வியுட‌ன் ஆட்சி மாற்றம் தேவை என்று அடுத்த‌ முறையும் வ‌ருவீர்க‌ள்..

   • நாகரிகத்தை விளக்கி வேற சொல்வாங்களா. எது நாகரீகம், எது நாகரீகமின்மைன்னு தெரியாத அறிவிலியா நீங்க.

    • பாவி ஏதோ நகரீகம் குறைவாக எழுதபட்டது அப்படின்னுன் சொல்றாரே. பதிவில் அப்படி என்ன நாகரீக குறைவு உள்ளது என்று விளக்கினால் சரி

  • கருணாநிதி, ஜெ, விஜயகாந்த், வரிசையில், பைரவரையும் சேர்த்து, பைரவரை கேவலப்படுத்திய ம.க.இ.க வினரை நாகரீகம் தெரியாதவர் லிஸ்டில் சேர்த்துவிட்டேன்.

   • உங்கள் பைரவரை பல இடங்களில் சுருக்குக் கம்பி போட்டு பிடித்து விசம் வைத்துக் கொள்ளும் கார்பரேசனை எதிர்த்து அன்னா ஹாசரே போன்று நீங்களும் உண்ணாவிரதம் இருங்களேன் ராம்காமேஷ்வரன் அவர்களே ….

  • நாகரீகத்தின் உச்சிக்கொம்பே …

   ஜனநாயகத்தின் அச்சாணியே !! ..

   நாய்க்கு வாக்கு கேட்டால் இவர்கள் நாகரீகமற்றவர்களா ?..

   அப்படியெனில் உன்னை நாயாக மதித்து எச்சில் எலும்பை வீசும் அரசியல் கட்சிப் பன்றிகளிடம் மட்டும் என்ன நாகரீகத்தைக் கண்டு விட்டதாக இப்படி வாலாட்டுகிறீர்கள் ?..

   பார்த்து.. ஓவராக வாலாட்டினால் உங்கள் ஜன’நாய’க அரசின் கார்பரேசன் வேன் வரும்.

 6. ஓட்டுப் போடுவது ஜனநாயக்க கடமை! – இது
  தனியார்மயம் தாராளமயத்தின் செழுமை
  உழைக்கும் மக்களுக்கோ பட்டினிதான் நிரந்தர உடைமை
  ஓ மை காட் (gatt)

 7. அமெரிக்காவுக்கு அடுத்ததாக உலகத்திலேயே மிகப் பெரிய ஜனநாயக நாடு இந்தியாதானாம். காந்தியின் அகிம்சைக் கோட்பாடுதான் மிகச்சிறந்த கோட்பாடாம்.

  இத்தகைய பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யயயயயயயயய ஜனநாயக நாட்டில் அகிம்சை வழியில் தேர்தல் குறித்த தங்களது கருத்தைச் சொன்னவர்கள் கைது.

  அகிம்சையும் ஜனநாயகமும் இப்போது திருச்சி துவாக்குடி காவல் நிலைய கொட்டடிக்குள்.

  ‘ஜனநாயகவாதிகளும்’ ‘காந்தியவாதிகளும்’தான் இதற்கு பதில் கூற வேண்டும்!

 8. ஜனநாயகத்தை காக்கும் துாண்கள் எல்லாம் மேல்வலின்னு ஒரு குவார்ட்டர் அடிச்சு மப்புல இருப்பதினால பதில் சொல்லமுடியலிங்கோ.

 9. அட சண்டாளப்பயல்களா! ஒரு ஓட்ட,11 பைசாவுக்கு வாங்குறீங்களடா! ஞாயமா இது? உலகத்திலே பெரிய அநியாயம் இதுதாண்டா! திரு.வேட்பாளர் வைரவன்
  அவர்களே. தப்பிதவறி எங்காவது சண்டாளர்களை சந்திக்க
  நேர்ந்தால் விட்டுவைக்காதீர்கள்

  • வணக்கம் தோழர்,
   தயவு செய்து சண்டாளன் என்று மீண்டும் கூறாதீர்கள். நீங்கள் எதார்த்தமாக கூறுகிறீர்கள் ஆனால் சிலர் இதை வைத்துக்கொண்டு உங்களை சாதி வெறியனாக்கி விடுவார்கள். எனவே தான் இதை கூறுகிறேன்.

  • sandaalan is a word which is given to those opposed manu dharma. Whoever overcame the caste barrier is punished and killed there itself. If they want to survive they have to escape to jungle. They are the sandaalaas. So we should not call that name which upholds manu dharma.

 10. //தமிழகத்தில் ஆட்சி மாற்றம் அவசியம் தேவை என்ற முடிவுடன், ஓட்டளிக்க தயாராகிவிட்டனர் மக்கள். காரணம், 2006ல் கருணாநிதி பதவியேற்றது முதல், அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயர்ந்துவிட்டது.மின்வெட்டும் அடிக்கடி ஏற்படுவதால், விவசாயிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்னர். இவற்றை கட்டுப்படுத்த முடியாத கருணாநிதி அரசுக்கு பாடம் கற்பிக்க மக்கள் தயாராகிவிட்டனர்.அதுமட்டுமின்றி, அரசு போக்குவரத்து பணிக்கு, இரண்டு லட்சமும், சத்துணவு ஊழியர் பணிக்கு, ஒரு லட்சமும், ஆயாக்கள் பணிக்கு, 50 ஆயிரம் பெறப்பட்டு, பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள் எதையும், லஞ்சமின்றி பெற முடிவதில்லை.தி.மு.க., அரசு, இலவச கலர், “டிவி’ கொடுத்ததாக, பெருமை பேசி வருகிறது. அந்த, “டிவி’ மூலம் தான், மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. ஸ்பெக்ட்ரம் ஊழல் முதல், தி.மு.க.,வின் அனைத்து ஊழல்களும் தெரிந்து தான், ஆட்சி மாற்றம் கட்டாயம் வேண்டும் என்ற முடிவுக்கு மக்கள் வந்துள்ளனர். புதியதாக அமைய உள்ள ஆட்சி, தி.மு.க., குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் அரசு அதிகாரிகள், கடந்த ஐந்து ஆண்டுகளாக, சட்டத்திற்கு புறம்பாக சேர்த்துள்ள சொத்துக்களை கணக்கெடுத்து, பறிமுதல் செய்ய வேண்டும் என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.//

  என்ன ஒரு தொலை நோக்கான மக்கள் நலம் சார்ந்த பார்வை. கருணாநிதி ஆட்சியில் நடந்த இவை எல்லாம் உண்மைதான். அதனால் நீங்கள் ஜெயலலிதாவிற்கு ஓட்டு போடா போகிறீர்களாக்கும். நண்பரே, ஜெயலலிதா ஆட்சியில் நடந்தவை மறந்து விட்டதா?
  1 . விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் ரத்து.
  இன்று மின்சாரம் பற்றாக்குறைக்கு இரண்டு அரசுகளுமே தான் காரணம் தேவைக்கு ஏற்ப மின்சார உற்பத்தியை அதிகப்படுத்தாதது தான் காரணம். மாறி மாறி இந்த இருவரும் தான் ஆட்சியில் இருந்தார்கள்.
  2 . போக்குவரத்து ஊழியர்களின் சலுகைகளை குறைத்து அவர்களின் குரவலையை நெரித்தது ஜெயலலிதாதான். அது மட்டுமா சாலை பணியாளர்களை போலீஸ் குண்டர்களை வைத்து மிருகத்தனமாக தாக்கியது.
  3 . அரசுக்கு சொந்தமான டான்சி நிலங்களையே விலைக்கு வாங்கி ஊழல் செய்து உலக சாதனை படைத்தவர் ஜெயலலிதா.
  4 . சட்டக்கல்லூரி மாணவர்களை விடுதியில் சென்று தாக்கியது, அதை கண்டித்து போராடிய மாணவர்கள் மீது தடியடி. உச்ச கட்டமாக மதுரை அருகே மேலூரில் அரசு கலைக்கல்லூரிக்குள் புகுந்த போலீஸ் கும்பல் அங்கு இருந்த பார்வை அற்ற மாணவரை மிருகத்தனமாக தாக்கியது. இன்னும் ராணி மேரி கல்லூரி விவகாரம் அரசு கல்லூரிகளை பல்கலைக்கலகங்களோடு இணைப்பது இப்படி மாணவர்களுக்கு எதிராக அடுக்கி கொண்டே போகலாம்.
  நான் ஜெயலலிதா ஆட்சிக்கு வர வேண்டும் என்று பேசவில்லை. இருவரும் தவிர்த்து வேறு யாராவது வந்தால் நல்லா இருக்கும் என்று சொன்னேன் என்று சப்பை கட்டு கட்ட கூடாது.
  இன்றைய நிலையில் தமிழகத்தில் இருவரைத்தவிர வேறு யாரும் ஆட்சிக்கு வர போவது இல்லை என்பதை நீங்கள் அறிவீர்கள்.
  உங்கள் பகுதியில் போட்டியிடும் நல்லவரை பார்த்து வாக்களியுங்கள் என்று சொல்ல முடியாது. எவனுக்கு வாக்களித்தாலும் ஆட்சியில் அமரப்போவது இருவரில் ஒருவர்தான்.
  கடைசியாக,
  // நாகரிகமா எழுத தெரியாதவனும் நாய் தான்.//
  மக்கள் ஆட்சி என்ற பெயரில் பாராளமன்ற மற்றும் சட்டமன்ற சாக்கடைக்குள் இந்த பன்றிகள் செய்யும் அநாகரீகத்தை விட வினவு தோழர்கள் ஒன்றும் அநாகரீகமாக செய்ததாக எனக்கு தெரியவில்லை.

 11. ஒரு தமிழ் தினசரியில் “இலவசங்களைப் பெற்ற தமிழ் மக்கள் நன்றி உடையவர்களாக இருக்கவேண்டும்” என செய்தி வந்திருந்தது.தங்களுக்கு வாக்குஅளிக்கவேண்டும் என்று கோரியிருந்தார்கள்.

  அதற்காக நன்றியுள்ள நாயையே வேட்பாளாராக மாற்றி வாக்கு கேட்டு வலம் வந்த ம.க.இ.க தோழர்களை கைது செய்துள்ள காவல்துறை “ஜனநாயகத்தை”போற்றி பாதுகாத்துள்ளது.வாழ்க ”ஜனநாயகம்”.

 12. உங்கள் ஓட்டு திருவாளர் நாய் வேட்பாளருக்கே!

  சரியான பதிவு, அனைத்து தோழர்களுக்கும் வீரவணக்கம், இது போன்ற கடமைகளை மக்களிடம் கொண்டு சென்று உண்மையான ஜனநாயகம் படைக்க பாடுபடுவோம்.

Leave a Reply to kaali.krishna பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க